Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. ஆப்பிரிக்கா மற்றும் அரபு நாடுகளில் இருந்து ஏராளமான அகதிகள் படகில் மத்திய தரைக்கடலை தாண்டி சென்று ஐரோப்பிய நாடுகளில் குடியேறி வருகிறார்கள்.இவ்வாறு நைஜீரியா மற்றும் சிசிலி நாடுகளை சேர்ந்தவர்கள் ஒரு படகில் மத்திய தரைக்கடலில் இத்தாலியை நோக்கி சென்று கொண்டு இருந்தனர்.லிபியா அருகே சென்ற போது சர்வதேச மருத்துவ கண்காணிப்பு குழுவினர் அங்கு வந்தனர். அவர்கள் அந்த படகை மடக்கி சோதனையிட்டனர். அந்த படகின் கீழ் தளத்தில் 21 பெண்கள், ஒரு ஆண் ஆகியோர் பிணங்கள் அடுக்கி வைக்கப்பட்டு இருந்தன.இந்த படகில் 50 குழந்தைகள் உள்பட 209 பேர் பயணம் செய்தனர். அவர்கள் அனைவரையும் மருத்துவ குழுவினர் மீட்டனர். 22 பேரும் எப்படி இறந்தார்கள் என்பது தெரியவில்லை. படகில் இருந்த டீசலில் …

  2. வங்கதேச ஜமாதுல் முஜாஹிதீன் (ஜே.எம்.பி.) பயங்கரவாத அமைப்பின் முக்கியத் தலைவர் உள்ளிட்ட நான்கு பயங்கரவாதிகளை அந்த நாட்டு சிறப்பு அதிரடிப் படையினர் வியாழக்கிழமை கைது செய்தனர்.இதுகுறித்து சிறப்பு அதிரடிப் படையின் செய்தித் தொடர்பாளர் முஃப்தி முகமது கான் கூறியதாவது: காஸிபூர் மாவட்டம், டோங்கி நகரிலுள்ள ஒரு வீட்டில் பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக எங்களுக்கு ரகசியத் தகவல் கிடைத்தது.அதன் அடிப்படையில் அந்த வீட்டில் வியாழக்கிழமை காலை அதிரடி சோதனை நடத்தி 4 பயங்கரவாதிகளைக் கைது செய்தோம். அவர்களில் ஒருவர், ஜே.எம்.பி. பயங்கரவாத அமைப்பின் தென் மண்டலத் தலைவர் முகமதுல் ஹஸன் தன்வீர் ஆவார். மற்ற மூவரும் ஆஷிகுல் அக்பர் அபேஷ், நஜ்முஸ் ஷகீப், ரஹமதுல்லா ஷுவோ என்று …

  3. 2016-ம் ஆண்டு உலக அழகன் பட்டத்துக்கான போட்டி பிரிட்டனில் நடந்தது. இதில் பல்வேறு நாடுகளை சேர்ந்த மாடலிங் துறையை சேர்ந்தவர்கள், நடிகர்கள் கலந்து கொண்டனர். இதில் ஐதராபாத்தை சேர்ந்த ரோகித் கன்டேவாலும் பங்கேற்றார். பல சுற்றுக்கள் முடிவில் 46 பேர் இறுதி போட்டிக்கு தகுதி பெற்றனர். இதில் ரோகித் கன்டேவாலும் அடங்குவார்.இறுதிப்போட்டியில் ஒவ்வொருவரும் தங்களது திறமைகளை காட்டினர். இதன் முடிவில் இந்தியாவின் ரோகித் கன்டேலால் உலக அழகன் பட்டத்தை கைப்பற்றினார்.உலக அழகன் பட்டத்தை வெல்லும் முதல் இந்தியர் ரோகித் ஆவார். மேலும் முதல் ஆசியாவை சேர்ந்தவர் என்ற சிறப்பையும் பெற்றார். ரோகித்தின் உடல்வாகு, முடி அலங்காரம் ஆகியவை அவருக்கு வெற்றி வாய்ப்புகளை அதிகப்படுத்தியது…

  4. நீஸ் தாக்குதல்: லாரி ஓட்டுநரை பிடிக்க ஸ்கூட்டரில் பாய்ந்தவர் தப்பியது எப்படி? கடந்த வாரம் நீஸ் தாக்குதலின் போது, பொதுமக்களை கொன்று குவித்த லாரியை துரத்தியபடி ஸ்கூட்டரில் சென்ற பிரஞ்சுக்காரர் பத்திரிகைக்கு பேட்டி ஒன்றை வழங்கி உள்ளார். லாரிக்கு அடியில் சிக்கி கொல்லப்பட்ட 84 பேரில் அவரும் இருப்பார் என்ற ஊகங்களை அகற்றும் விதத்தில் அவருடைய பேட்டி வெளியாகியுள்ளது. ஃபிராங்க் என்ற பெயர் கொண்ட அந்த நபர், லாரியை பிடிப்பதற்காக தப்பியோட முயன்ற கூட்டத்திற்கு நடுவே தன் வாகனத்தை செலுத்தியதாக நீஸ்-மத்தன் என்ற செய்தித்தாளிடம் கூறியுள்ளார். லாரி ஓட்டுநர் அறைக்கு கீழே இருந்த படியில் ஏறிய ஃபிராங்கை, லாரி ஓட்டுநர் துப்பாக்கியால் குறிவைத்து சுட்ட போதும், ஓட்டு…

  5. இன்றைய நிகழ்ச்சியில் * தெற்கு சூடானில் உள்நாட்டு போர் திரும்பிவிட்டதன் அறிகுறியா இது. ஜுபாவில் இருந்து பிபிசியின் சிறப்பு தகவல். * பழமைவாத யூதர் ஒருவரால் கத்தியால் தாக்கப்பட்ட ஒரு வருடத்தின் பின்னர் ஒருபாலுறவுக்காரர்கள் மீண்டும் ஜெரூசலத்தில் ஊர்வலம். * நல்ல எதிர்காலத்துக்காக இசைக்கும் சிறுமிகள். காபூல் தெருக்களில் தமது இசை வல்லமையை வளர்க்க முயல்கிறார்கள்.

  6. துருக்கியில் கடந்த வெள்ளிக்கிழமை நடந்த தோல்வியுற்ற இராணுவத்தின் ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சிக்குப் பின்னர், நாட்டில் மூன்று மாதங்களுக்கு அந்நாட்டு அதிபர் ரிசெப் தயிப் எர்துவான் அவசர நிலையை பிரகடனப்படுத்தியுள்ளார். துருக்கி அங்காராவில் அதிபரின் மாளிகையில் பேசும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். மேலும் ஆட்சி கவிழ்ப்பு நடவடிகையில் ஈடுபட்ட சுமார் 10000 பேரின் காவலை நீடிக்கவே இந்த அவசர நிலையை பிரகடனப்படுத்தியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த தாக்குதல் சம்பவத்தின் பின்னர் 600க்கும் மேற்பட்ட பாடசாலைகள் மூடப்பட்டிருக்கின்றன, 1000க்கும் அதிகமான அரசு ஊழியர்களும் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இச்செயல் ஒருபோதும் நாட்டின் ஜனநாயகத்திற்கோ …

    • 0 replies
    • 311 views
  7. அமெரிக்கா: கறுப்பர்களின் புதைகுழி தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ கட்டமைக்கப்பட்ட மாயைகள் உடையும் போது ஏற்படும் அதிர்வுகள் பல்வகைப்படும். அவை வௌவேறு வகைகளில் மாறுவதோடு வசதிக்கேற்பப் பொருள்கொள்ளப்படுகின்றன. கறுப்பு அழகிய நிறம்ƒ அதை ஓர் அடையாளமாக, வெறுக்கத்தக்கதாக மாற்றிய பெருமை வெள்ளை நிறவெறியைச் சாரும். அதன் வழியிலேயே 'வெள்ளையானவன் பொய் சொல்ல மாட்டான்' போன்ற பொதுப்புத்தி மனநிலைகள் கட்டமைகின்றன. ஆனால் உலகெங்கும் நிறத்தின் பெயரால் சொல்லொணாக் கொடுமைகள் அரங்கேறுகின்றன. அவை ஜனநாயகத்தின் பெயரால் நியாயப்படுத்தவும் படுகின்றன. இவ்வாண்டு முழுவதும் அமெரிக்காவில் கறுப்பினத்தவர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட நிகழ்வுகள் தொடராக நடைபெற்றுள்ளன. இம்மாதம் இடம்பெற்றவை…

  8. போலிஸ் காவலில் கறுப்பின நபர் பலி: பிரான்ஸில் தொடரும் மோதல்கள் பிரஞ்சு நகரமான பூமென்ட்-சர்-ஒய்ஸியில், போலிஸ் காவலில் இருந்த இளம் கறுப்பின நபர் ஒருவர் பலியான சம்பவத்தை தொடர்ந்து இரண்டாவது இரவாக அங்கு மோதல்கள் நடந்து வருகின்றன. அதிகாரிகள் மீது பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டன. மேலும், நகர மண்டபத்தை எரிக்கும் முயற்சிகளும் நடந்தன. இதில், எட்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். வட பாரிஸில் உள்ள நகர் ஒன்றில், அடாமா ட்ரேயோரி என்பவர் போலிசாரால் தடுப்பு காவலில் வைக்கப்பட்ட பிறகு, அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதாக போலிஸ் கூறுகிறது. ஆனால், அவர் ஆரோக்கியமாக இருந்ததாகவும், போலிசாரால் தாக்கப்பட்டார் என்றும் அவரது நண்பர்கள் கூறியுள்ளனர். வியாழனன்று உ…

  9. உலகின் மிகப் பெரிய தகவல் திருட்டு இணையதளமான கிக்ஆஸ் டாரண்ட்ஸ் முடக்கம் உலகின் மிகப் பெரிய தகவல் திருட்டு இணையதளமான கிக் ஆஸ் டாரண்ட்ஸ் (Kickass Torrents) முடக்கப்பட்டுள்ளது. இந்த இணையதளத்தின் உரிமையாளர் உக்ரைன் நாட்டைச் சேர்ந்த ஆர்டம் வாலின் என்பவரை போலாந்தில் கைது செய்யப்பட்டுள்ளார். 28 மொழிகளில் இயங்ககூடியது கிக்ஆஸ் டாரண்ட்ஸ் இணையதளம். சமீபத்தில் வெளியான கேப்டன் அமெரிக்கா-சிவில் வார், பைண்டிங் டோரி உட்பட அனைத்து புதிய படங்கள், இசை ஆல்பங்கள் என அனைத்தும் இந்த இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. வெளியான அன்றே இந்த படங்கள் இந்த இணையதளத்தில் கிடைக்கும் அளவிற்கு செயல்பட்டு வந்துள்ளது. இந்த இணையதளத்தின் மதிப்பு 5.4 கோடி டாலராகும். இண…

  10. பெய்ஜிங், சீனா ராணுவம் அவ்வப்போது ஊடுருவி வருவதால் இந்திய-சீன எல்லையில் 100 போர் பீரங்கிகளை பாதுகாப்பு முன்னெச்சரிக்கையாக இந்திய ராணுவம் நிலை நிறுத்தியுள்ளது. இதற்கு சீன ஊடகங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இதுகுறித்து சீனாவின் அரசு ஊடகமான 'குளோபல் டைம்ஸ்' வெளியிட்டுள்ள கட்டுரையில் குறிப்பிட்டுள்ளவை பின்வருமாறு:- இந்தியாவில் சீன நிறுவனங்கள் அதிக அளவில் முதலீடு செய்ய விரும்புகிறது. இப்படிப்பட்ட சூழ்நிலையில், இந்திய ராணுவம் 100 போர் பீரங்கிகளை நிலை நிறுத்தியிருப்பது மக்களிடையே பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. எல்லையில் பீரங்கிகளை நிறுத்திவிட்டு சீனாவின் முதலீடுகளை அதிகரிக்க இந்தியா விரும்புவது நகைப்புக்குரியதாக உள்ளது. பீரங்கிகளை நிறுத்தியிருப்பதன் எதிரொலியாக இந்…

  11. காஷ்மீர் பிரச்னைக்கு தீர்வு காண மத்திய அரசு முன் உள்ள சிறந்த வழி காஷ்மீர் இந்தியாவுடன் இணையும்போது தந்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவது அல்லது பெரிய அளவிலான சுயாட்சி வழங்குவது என காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவருமான ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.இது குறித்து மேலும் அவர் கூறுகையில் “நம்முடைய செயல்முறை தவறாக உள்ளது. நாம் தந்த வாக்குறுதியை நாம் புறக்கணித்துவிட்டோம். காஷ்மீர் மக்கள் நம்மீது கொண்ட நம்பிக்கையை உடைத்துவிட்டோம். அதனால் மிகவும் பெரிய விலையை தந்திருக்கிறோம். நான் சொல்வது தவறாக இருக்கலாம். நான் சொல்வது சரியாக கூட இருக்கலாம். இங்கே கவனிக்க வேண்டியது என்னவென்றால், இந்தியாவுடன் காஷ்மீர் இணையும்போது தந்த வாக்குறுதிகள் முழுக்க நிறைவேற்றப்படும் …

  12. இரண்டு ஆண்டுகளாக தவறான இடத்தில் விமானத்தை தேடிக்கொண்டிருக்கிறோம்: எம்.எச்.370 தேடுதல் குழு விரக்தி படம்: ஏ.பி. மார்ச் 2014-ல் 239 பயணிகளுடன் மலேசிய ஏர்லைன்ஸ் விமானம் மாயமானதன் மர்மம் இன்னும் விடுபடவில்லை. தற்போது தவறான இடத்தில் 2 ஆண்டுகளாக தேடி வருவதாக எம்.எச்.370 விமான தேடுதல் குழு தெரிவித்துள்ளது. அதாவது கடைசி கணங்களில் அது கடலுக்குள் சீறிப்பாய்ந்தது என்று கூற முடியவில்லை, எரிபொருள் தீர்ந்தாலும் திறமையான விமானியால் இன்னும் தூரம் (120 மைல்கள்) ஓட்டிச் செல்ல முடியும், அவ்வாறு சென்றிருக்க வாய்ப்பிருக்கிறது என்று தேடுதல் குழு இப்போது கூறுகிறது. கிட்டத்தட்ட கிரீஸ் நாட்டைப் போன்ற ஒரு பரப்பளவை அல்லது 1,20,000 சதுர கிலோமீட்டர்கள் …

  13. துருக்கியில் அவசரகாலநிலைமை அறிவிப்பு துருக்கியில் அவசரகால நிலைமை அறிவிக்கப்பட்டுள்ளது. இராணுவ சதிப் புரட்சியைத் தொடர்ந்து துருக்கியின் ஜனாதிபதி Recep Tayyip Erdogan அந்நாட்டு அவசரகால நிலையை அறிவித்துள்ளார். எதிர்வரும் மூன்று மாதங்களுக்கு நாட்டில் அவசரகால நிலைமை அமுலில் இருக்கும் என ஜனாதிபதி அறிவித்துள்ளார். இராணுவ சதிப்புரட்சியில் இணைந்துகொண்ட 10000 பேர் வரையில் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். இவர்களின் தடுப்புக் காவல் காலம் நீடிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. 600 பாடசாலைகள் மூடப்பட்டுள்ளதுடன், ஆயிரக் கணக்கான அரசாங்க உத்தியோகத்தர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். அவ…

  14. சென்னை: காஷ்மீர் மக்கள் அமைதியாக வாழும் வகையிலான சூழலை மத்திய அரசு ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக காஷ்மீர் நிலப்பரப்பில் நிகழ்ந்து வருகிற மனித மாண்புகளுக்கு எதிரான கொலைகள், வன்புணர்ச்சி நிகழ்வுகள், பெண்கள், குழந்தைகள் மீதான வன்முறைகள், தீவிரவாத ஒழிப்பு என்ற பெயரில் அப்பாவிகள் மீது தினந்தோறும் நிகழ்த்தப்படும் மனித உரிமை மீறல்கள் போன்ற சம்பவங்கள் நாம் நாகரீகம் பெற்ற சமூகத்தில்தான் வாழ்கிறோமா என்கின்ற கேள்வியை எழுப்பி வருகிறது. அதுவும் சமீபகாலமாக ஊடகங்களில் வெளிவருகிற காஷ்மீர் நிலத்தில் நடக்கின்ற வன்முறை சம்பவங்கள் …

  15. வங்காளதேசம் முழுவதும் 261 பேர் காணாமல் போனதாக தெரிவித்துள்ள பாதுகாப்பு அமைப்பு, அவர்கள் இருக்கும் இடம் குறித்து தகவல் தெரிவிக்கும்படி பொதுமக்களை கேட்டுக்கொண்டுள்ளது. டாக்கா: வங்காளதேசம் முழுவதும் 261 பேர் காணாமல் போனதாக தெரிவித்துள்ள பாதுகாப்பு அமைப்பு, அவர்கள் இருக்கும் இடம் குறித்து தகவல் தெரிவிக்கும்படி பொதுமக்களை கேட்டுக்கொண்டுள்ளது. உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் ஐ.எஸ். தீவிரவாத அமைப்பில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்தவர்கள் உறுப்பினராக சேர்ந்துவருகின்றனர். அவ்வகையில் வங்காளதேசத்தில் காணாமல் போன பலர் ஐ.எஸ். அமைப்பில் சேர்ந்திருக்கலாம் என்றும், இவர்கள் தீவிரவாத தாக்குதல்களில் ஈ…

  16. பிரஸ்ஸல்ஸில் வெடிகுண்டு பீதி: சந்தேக நபர் கைது பிரஸ்ஸல்ஸில் போலியான தற்கொலை அங்கி அணிந்து இருந்த ஒரு நபரை போலிஸார் கைது செய்துள்ளனர்; இந்த சம்பவம் அங்கு முக்கிய பாதுகாப்பு நடவடிக்கைகளைத் தூண்டியது. வருடத்தின் மிக வெப்பமான நாளில் குளிர்காலத்தில் அணிவதைப் போல நீண்ட மேலாடையணிந்த மனிதர் ஒருவரை, அங்கியிலிருந்து ஒயர்கள் வெளித்தெரிய பாதுகாப்பு அதிகாரி ஒருவர் கண்டதாக கூறப்படுவதையடுத்து அதிகாரிகள் ஒர் சதுக்கத்தையும் அதைச் சுற்றியுள்ள தெருக்களை சுற்றி வளைத்தனர். சந்தேக நபர் துப்பாக்கி முனையில் மண்டியிட வைக்கப்பட்டு ,இரு கைகளும் தலைக்கு பின்னால் வைக்கச் செய்யப்பட்ட நிலையில் வெடிகுண்டு அகற்றும் நிபுணர்கள் அழைக்கப்பட்டனர். போலிஸார் இதனை ஒரு தவறான எச்ச…

  17. லிபியாவில் ரகசிய நடவடிக்கைகளில் பிரெஞ்சு படைப்பிரிவுகள் லிபியாவில் தங்களுடைய மூன்று படையினர் கொல்லப்பட்டுள்ளதாக பிரான்ஸ் தெரிவித்திருக்கிறது. ஆப்பிரிக்காவின் வடக்கு பகுதியில் அமைந்திருக்கும் லிபியாவில் ரகசிய நடவடிக்கைகளில் பிரெஞ்சு படைப்பிரிவுகள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதை இந்த அறிவிப்பு முதன் முதலாக அதிகாரபூர்வமான வகையில் உறுதிப்படுத்துகிறது. ஆபத்தான உளவு நடவடிக்கைகளை மேற்கொண்டபோது நிகந்த ஹெலிகாப்டர் விபத்தால், இந்த மூன்று படையினரும் கொல்லப்பட்டுள்ளதாக பிரான்ஸ் அதிபர் பிரான்சுவா ஒல்லாந்த் கூறியிருக்கிறார். நாட்டின் கிழக்கு பகுதியில் அமைந்திருக்கும் பெங்காசிக்கு வெளியே, இஸ்லாமியவாத ஆயுதக்குழுவினர் விமானம் ஒன்றை சுட்டு வீழ்த்தியபோது பிரெஞ்சு சி…

  18. இன்றைய நிகழ்ச்சியில் * துருக்கியின் எதிர்காலம் எப்படி இருக்கப்போகிறது? தோல்வியில் முடிந்த இராணுவ சதிப்புரட்சியை அடுத்து அதிபர் எர்தொவான் பாதுகாப்பு கவுன்ஸிலின் அவசர கூட்டத்தை கூட்டியுள்ளார். * பிரிட்டனில் இயங்கும் ஷரியா நீதிமன்றம் ஒன்றுக்குள் செல்ல பிபிசிக்கு ஒரு அரிய வாய்ப்பு கிடைத்தது. அங்கு பெண்கள் தம்முடைய கணவரிடம் இருந்து மணமுறிவு கோருகிறார்கள். * பிரேஸிலில் வாட்ஸப் செயலிக்கு என்ன நடந்தது? தகவல்களை தரமறுத்த அந்த தகவல் தொடர்பு செயலிக்கு ஒரு நீதிபதி தற்காலிக தடை விதித்துவிட்டார்.

  19. துருக்கியில் 50 ஆயிரத்திற்கு மேலானோர் மீது கடும் நடவடிக்கை துருக்கியில் ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சி தோல்வியடைந்த பிறகு 50 ஆயிரத்திற்கு மேற்பட்டோர் பணியிலிருந்து நீக்கம் மற்றும் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர் துருக்கியில் கடந்த வாரம் நிகழ்ந்த தோல்வியடைந்த ஆட்சிக் கவிழ்ப்புக்கு பிறகு, 50 ஆயிரத்திற்கு மேலானோர் இனம் காணப்பட்டு, அவர்களின் பணிகளிலிருந்து நீக்கம் மற்றும் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். அதிபர் ரசிப் தயிப் எர்துவானுக்கு விசுவாசமாக இல்லாதோரை பணியிலிருந்து நீக்குவது ஆசிரியர்கள், பல்கலைக்கழக டீன்கள் மற்றும் ஊடகங்கள் என செவ்வாய்கிழமை விரிவானது. துருக்கி அதிபர் ரசீப் தயிப் எர்துவான் இவர்கள் அனைவரும், இந்த எழுச்சியை த…

  20. துபாயில் 75 மாடி குடியிருப்பு பகுதியில் தீ விபத்து துபாயில் ஒரு 75 மாடி குடியிருப்புக் கட்டிடத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தீ விபத்து நிகழ்ந்த கட்டிடம் தீப்பிழம்புகளும் புகையும் இந்த அடுக்குமாடிக் கட்டிடத்தின் ஜன்னல்களிலிருந்து வெளிவருவதைப் பார்க்க முடிந்தது. தீயணைப்பு வீரர்கள் அந்த இடத்திற்கு வந்தபோது, எரிந்துபோன துகள்கள் தரையில் மிதந்தன. இது வரையில் உயிர்ச்சேதங்கள் குறித்த எந்த செய்திகளும் இல்லை. ஆனால் எது இந்த விபத்தை தூண்டியது என்று தெளிவாக தெரியவில்லை. ஐக்கிய அரபு எமிரேட்டுகளில் சமீபத்திய ஆண்டுகளில் உயரமான கட்டிடத்தில் தீ விபத்து ஏற்படுவது இது ஐந்தாவது முறையாகும். http://www.bbc.com/tamil/global/20…

  21. டெல்லி சர்வதேச விமான நிலையத்தில் உள்ள சுங்க இலாகாவுக்கு சொந்தமான பெட்டகத்தில் இருந்து மேலும் 59 கிலோ தங்கம் மாயமான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. புதுடெல்லி: புதுடெல்லியில் உள்ள இந்திராகாந்தி சர்வதேச விமான நிலையத்தில், பயணிகள் மூலம் கடத்தி வரப்படும் தங்கம் சுங்கத்துறை அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டு அதிக பாதுகாப்பு நிறைந்த பெட்டகத்தில் சீல் வைக்கப்பட்டு பாதுகாக்கப்பட்டு வருகிறது. இந்த அறையில் நடந்த திடீர் சோதனையில், கடந்த இரண்டு ஆண்டுகளில் 83 கிலோ தங்கக் கட்டிகள் திருடப்பட்டு, அதற்கு பதில் தங்கத்தைப் போன்று மின்னும் போலியான மஞ்சள் நிற உலோகக் கட்டிகள் வைக்கப்பட்…

  22. கடந்த நாடாளுமன்ற தேர்தல் பிரசாரத்தின் போது, மகாராஷ்டிர மாநிலம், தானே அருகே நடைபெற்ற தேர்தல் பிரசார பொதுக்கூட்டம் ஒன்றில் பேசிய அகில இந்திய காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல்காந்தி, 'மகாத்மா காந்தியின் படுகொலைக்கு, பா.ஜ.க.வின் தாய் அமைப்பான ஆர்.எஸ்.எஸ். இயக்கமே காரணம்' என்று குற்றம் சாட்டியதாகத் தெரிகிறது. ராகுலின் இந்தப் பேச்சு குறித்து அதிருப்தியடைந்த, தானே மாவட்ட ஆர்.எஸ்.எஸ். செயலாளர் ராஜேஷ் குண்டே, பிவாண்டி நீதிமன்றத்தில் ராகுல் காந்தி மீது அவதூறு வழக்குத் தொடர்ந்தார். இதனால், ராகுல் காந்தியை நேரில் ஆஜராக நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால், இந்த வழக்கு விசாரணைக்குத் தடை விதிக்கக் கோரி மும்பை உயர் நீதிமன்றத்தில் ராகுல் காந்தி மனுத் தாக்கல் செய்தார். இருப்பினும் அந்த மனு நி…

  23. பிரான்சிலுள்ள ஓட்டல் ஒன்றில் துப்பாக்கியுடன் மர்ம நபர் நுழைந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.சமீபத்தில் நடந்த இரண்டு பெரிய தீவிரவாத தாக்குதல்களால் நிலைகுலைந்து போயுள்ள பிரான்சில், ஓட்டல் ஒன்றில் துப்பாக்கியுடன் மர்ம நபர் நுழைந்ததால் மற்றொரு தீவிரவாத நடவடிக்கையாக இருக்குமோ என அந்நாட்டு மக்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.தெற்கு பிரான்சில் உள்ள பொலினி பகுதியில் மெர்சில்லி என்ற நகர்ப்பகுதி உள்ளது.இங்கு செயல்பட்டு வரும் பார்முலா-1 என்ற ஓட்டலில் துப்பாக்கியுடன் மர்ம நபர் ஒருவன் நுழைந்ததாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.இதனை தொடர்ந்து அந்த ஒட்டலை சுற்றி நூற்றுக்கணக்கான காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர். ஒட்டலுக்குள் சென்ற மனிதன், அங்கு…

  24. துருக்கியின் எதிர்காலம் யார் கையில்? துருக்கியில் ராணுவத்தின் ஒரு பிரிவினர் நடத்திய ராணுவப் புரட்சியைப் பொதுமக்களே முறியடித்திருப்பது வரலாற்று நிகழ்வாகியிருக்கிறது. ராணுவப் புரட்சி நடப்பதற்கு எல்லா சாத்தியங்களும் கொண்ட, அரசியலமைப்பைக் கொண்ட நாடு அது. சுயாட்சி கொண்ட துருக்கி ராணுவம், இதற்கு முன்னர் ஜனநாயக அரசுகளை நான்கு முறை கவிழ்த்திருக்கிறது. துருக்கியின் ஆட்சியாளர்களுக்கும், ராணுவத்துக்கும் இடையில் எப்போதுமே பதற்றநிலை இருந்துவந்திருக்கிறது. எனினும், 2002-ல் தயீப் எர்டோகன் தலைமையிலான ‘நீதி மற்றும் வளர்ச்சி’ கட்சி ஆட்சிப் பொறுப்பேற்ற பின்னர், ராணுவப் புரட்சிகளெல்லாம் பழங்கதை என்ற நிலை உருவானது. ஆனால், கடந்த வெள்ளிக்கிழமை இரவு நடந்த ராணுவப் புரட்சி அந்த …

  25. சிரியாவில் அமெரிக்க கூட்டுப்படை வான்தாக்குதல் ; பொது மக்கள் 56 பேர் பலி சிரியாவின் அலெப்போ மாகாணத்தில் ஐ.எஸ். இயக்கத்தினர் பிடியில் உள்ள கிராமத்தில் அமெரிக்க கூட்டுப்படை வான் தாக்குதலை நடத்தியது. அப்போது போர் விமானங்கள் ஐ.எஸ். இயக்கத்தினரின் நிலைகள் மீது குண்டுகளை வீசியவேளையில் தவறுதலாக மக்கள் கூட்டம் நிறைந்த பகுதிகளில் குண்டுகளை வீசி விட்டன. இந்த தாக்குதலில் சிறுவர்கள் 11 பேர் உள்பட பொது மக்கள் 56 பேர் பலியாகினர். மக்கள் அந்த கிராமத்தை விட்டு வெளியேற முற்பட்டபோது குண்டு வீச்சில் சிக்கி உயிரிழந்து விட்டதாக மனித உரிமை கண்காணிப்பகம் தெரிவித்து உள்ளது. http://www.virakesari.lk/article/9184

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.