Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. மத்திய கிழக்கு நாடுகளுக்கு சென்றபோது மாயமான கேரள இளைஞர்கள் 20 பேர் ஐஎஸ்ஸில் இணைந்தது உறுதியானது: மாநில உளவுத் துறை அறிக்கை ஐஎஸ் இயக்கத்துக்கு எதிரான போராட்டம். | கோப்புப் படம் கேரளாவில் இருந்து மாயமான 20 இளைஞர்களும் ஐஎஸ் தீவிரவாத அமைப்பில் இணைந்துவிட்டதாக உளவுத் துறை உறுதி செய்துள்ளது. அதேசமயம் அம்மாநிலத்தை சேர்ந்த மேலும் பல இளைஞர்கள் ஐஎஸ்ஸில் இணைந்திருக்க கூடும் என்ற தகவலும் வெளியாகி இருப்பதால் அச்சம் எழுந்துள்ளது. கேரளாவின் காசர்கோடு, பாலக்காடு மாவட்டங்களில் இருந்து மத்திய கிழக்கு நாடுகளுக்கு சென்ற ஒரு தம்பதி உட்பட 20 இளைஞர்கள் திடீரென மாயமாகினர். ஒரு மாதத்துக்கும் மேலாக அவர்களது நிலை என்னவானது என்பது குறித்து தகவ…

  2. ஈகுவடோரில் சற்றுமுன்னர் இரு பயங்கர நிலநடுக்கங்கள் : பதற்றத்தில் மக்கள் தென் அமெரிக்க நாடான ஈகுவடோரில் சற்றுமுன்னர் பாரிய இரு நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. அடுத்தடுத்து ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தால் அங்குள்ள மக்கள் பதற்றமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஈகுவடோரின் வடமேற்கு பகுதிகளான குயினிண்ட் மற்றும் முயிஸின் ஆகிய பகுதிகளிலேயே 5.9 மற்றும் 6.2 ரிச்டர் அளவில் இந்த நில நடுக்கங்கள் ஏற்பட்டுள்ளன. நிலநடுக்கத்தால் ஏற்பட்டுள்ள சேதம் குறித்து எந்த தகவலும் இதுவரை வெளியாகவில்லை. நிலநடுக்கத்தை தொடர்ந்து சில இடங்களில் மின்சார விநியோகம் தடைப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கடந்த ஏப்ரல் மாதம் 16 ஆம் திகதி ஈ…

  3. ஹூஸ்டன், அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள சிறைச்சாலை ஒன்றில் விலங்கிடப்பட்ட கைதிகள் சிறையினை உடைத்து கொண்டு வெளியே வந்து மாரடைப்பினால் உயிருக்கு போராடிய சிறை காவலர் ஒருவரை காப்பாற்றியுள்ளனர். போர்ட் வொர்த் நகரில் உள்ள மாவட்ட நீதிமன்ற கட்டிடத்தில் இயங்கி வரும் அந்த சிறையில் 8 கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த சிறைக்கு ஒரே ஒரு காவலர் பணியில் இருந்து வந்துள்ளார். அவர் இன்று நாற்காலி ஒன்றில் அமர்ந்திருந்தபடி கைதிகளிடம் நகைச்சுவை செய்து கொண்டும் பேசி கொண்டும் இருந்துள்ளார். இந்நிலையில் அவர் நெஞ்சு வலியினால் திடீரென சரிந்து விழுந்துள்ளார். கைதிகள் கூச்சலிட்டு உதவிக்கு அழைத்துள்ளனர். ஆனால் அங்கு ஒருவரும் இல்லை. அதேவேளையில், கைதிகளில் ஒருவர் சிறையின…

  4. அல் கொய்தா தீவிரவாத இயக்க தலைவன் ஒசாமா பின்லேடனை கொன்றதற்காக அமெரிக்காவை பழிவாங்கியே தீருவேன் என அவரது மகன் சபதமேற்கும் வீடியோ காட்சி வெளியாகியுள்ளதாக தெரியவந்துள்ளது. துபாய்: அல்கொய்தா தீவிரவாத இயக்கத்தின் தலைவனான ஒசாமா பின்லேடன் 2011-ம் ஆண்டு மே மாதம் பாகிஸ்தானில் உள்ள அபோடாபாத் என்ற நகரில் சுட்டுக்கொல்லப்பட்டான். இந்த ரகசிய தாக்குதலை அமெரிக்காவைச் சேர்ந்த 'நேவி சீல்' என்கிற சிறப்புப்படை மேற்கொண்டது. அங்கிருந்து வெளியேற்றப்பட்ட ஒசாமாவின் பிரேதத்தை கடலில் புதைத்து விட்டதாக அமெரிக்க அரசு அறிவித்தது. இந்நிலையில், தனது தந்தையை கொன்றதற்காக அமெரிக்காவையும் அமெரிக்கர்களையும் பழிக்…

  5. தெற்கு சூடானில் ராணுவத்தினருக்கும் முன்னாள் கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில் 150-க்கும் மேற்பட்டோர் பலியாகினர்.நேற்று முன் தினம் தெற்கு சூடானின் 5-ஆவது சுதந்திர தினக் கொண்டாட்டத்தை யொட்டி, அந்நாட்டின் துணை அதிபர் ரீக் மாஷரும் (முன்னாள் கிளர்ச்சியாளர்), அதிபர் சல்வா கிர்ரும் சந்தித்தனர். அப்போது, அவர்களுடைய பாதுகாவலர்களுக்கு இடையே திடீரென்று துப்பாக்கிச் சண்டை மூண்டது. அதைத் தொடர்ந்து, முன்னாள் கிளர்ச்சியாளர்களும், தெற்கு சூடான் ராணுவத்தினரும் துப்பாக்கிச் சண்டையில் ஈடுபட்டனர். இதில், 150-க்கும் மேற்பட்டோர் பலியானார்கள். http://www.seithy.com/breifNews.php?newsID=161255&category=WorldNews&lan…

  6. காஷ்மீரில் சுட்டுக்கொல்லப்பட்ட பயங்கரவாதி வானியின் இறுதிச்சடங்கில் காஷ்மீர் முழுவதும் இருந்து 2 லட்சம் பேர் பங்கேற்றுள்ளதாக காஷ்மீர் செய்தி நிறுவனம் ஒன்று தெரிவித்துள்ளது. இந்த அளவுக்கு பயங்கரவாத செயலுக்கு காஷ்மீரில் ஆதரவு பெருகி இருப்பது மத்திய மாநில அரசுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஹிஸ்புல் முஜாகிதீன் பயங்கரவாத அமைப்பின் கமாண்டராக இருந்து வந்தவன் புர்கான் முஷாபர் வாணி ( வயது 22 ) . தெற்கு காஷ்மீர் புல்வாமா மாவட்டத்தில் டிரால் பகுதியை சேர்ந்த இவனுக்கு பல மாவட்டங்களிலும் ஆதரவு இருந்துள்ளது. தலைமையாசிரியரின் மகனான இவனுக்கு கடந்த 5 ஆண்டு காலமாக மக்கள் மத்தியில் செல்வாக்கு வளர்ந்துள்ளது. இணையதளம் மூலம் பயங்கரவாத வீடியோ வெளியிடுவது, பயங்க…

  7. ரஷ்ய ராணுவ ஹெலிகாப்டரை சுட்டு வீழ்த்தியது ஐஎஸ்ஐஎஸ்( வீடியோ ) சிரியாவில் ராணுவ ஹெலிகாப்டரை ஐ.எஸ். அமைப்பினர் சுட்டு வீழ்த்தியதில் ரஷிய விமானிகள் 2 பேர் பலியாகினர். அந்த வீடியோ காட்சியை ஐஎஸ்ஐஎஸ் அமைப்பு வெளியிட்டுள்ளது. சிரியாவில் ஐ.எஸ்.அமைப்புத் தீவிரவாதிகள் மீது வான் வழித் தாக்குதல் தொடர்ச்சியாக நடத்தப்பட்டு வருகிறது. அமெரிக்க, ரஷியா உள்ளிட்ட நாடுகள், ஐஎஸ் இயக்கத்தின் இடங்களை அடையாளம் கண்டு தாக்குதல் நடத்தி வருகின்றன. சிரியாவின் பழமை வாய்ந்த நகரான பல்மைரா ஐ.எஸ். பயங்கரவாதிகளிடம் இருந்து மீட்கப்பட்டுள்ளது. எனினும் அந்த நகரின் ஒரு பகுதி ஐஎஸ்ஐஎஸ் இயக்கத்தின் கட்டப்பாட்டில்தான் இருக்கிறது. அந்தப் பகுதியில் தாக்குதல் நடத்துவ…

  8. அமெரிக்காவில் கறுப்பின ஆண்கள் மீதான துப்பாக்கிச்சூடு: பல நகரங்களில் தொடரும் போராட்டம் அமெரிக்காவில் கறுப்பின ஆண்கள் மீது போலிஸார் நடத்திய துப்பாக்கிச்சூட்டை எதிர்த்து பல நகரங்களிலும் போராட்டங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. டல்லஸ் நகரில் நிகழ்ந்த கொடிய துப்பாக்கிச்சூட்டில் ஐந்து போலிசார் கொல்லப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து நாட்டு மக்கள் ஒன்றிணைய வேண்டும் என்று பொதுமக்களுக்கு அதிபர் ஒபாமா கோரிக்கை விடுத்தார். ஆனால், அதனையும் மீறி அமெரிக்காவில் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்று வருகின்றன. பெரும்பாலான ஆர்ப்பாட்டாங்கள் அமைதியாகவே நடைபெற்றன. அதில், கலந்து கொண்டவர்கள், ''கறுப்பினத்தவர்களின் உயிர்களும் முக்கியம்'' மற்றும் ''கைகளை உயர்த்து, சுட்டுவிடாதே'' போன்…

  9. இவ்வாண்டு டிசம்பர் 31 ஆம் திகதியில் ஒரு விநாடி கூட்டப்படுகிறது inShare இந்த ஆண்டு மற்ற ஆண்டுகளை விட விநாடி நீளம் அதிகமாக இருக்கும். நிலையான நேரத்தை கணக்கிடும் வகையில் கூடுதலாக ஒரு விநாடியை சேர்க்க சர்வதேச நேரத்தைக் கணக்கிட்டு வரும் அமெரிக்கக் கடற்படை வானாய்வு அமைப்பு முடிவு செய்துள்ளது. பூமி தன்னைத்தானே சுற்றிக்கொண்டு சூரியனையும் சுற்றி வருகிறது. பூமி தன்னைத்தானே ஒரு முறை சுற்றிவர 24 மணி நேரம் ஆகிறது. அதனை ஒருநாள் என்கிறோம். ஒரு நாள் என கணக்கிடப்படும் 24 மணிநேரம், நிமிடம், விநாடி என பகுக்கப்படுகிறது. பூமி…

  10.  அவுஸ்திரேலியத் தேர்தல்: தோல்வியை ஏற்றுக் கொண்டார் எதிர்க்கட்சித் தலைவர் அவுஸ்திரேலியாவில் இடம்பெற்ற மத்திய தேர்தலில், தனது கட்சி தோல்வியடைந்துள்ளதாக ஏற்பதாக, எதிர்க்கட்சித் தலைவர் பில் ஷோர்ட்டின் ஏற்றுக் கொண்டார். இம்மாதம் 2ஆம் திகதி இடம்பெற்ற வாக்கெடுப்பில், எதிர்க்கட்சிக்கும் பிரதமர் தலைமையிலான ஆளுங்கட்சிக்குமிடையில் கடுமையான போட்டிய நிலவிய நிலையில், தற்போது ஆளுங்கட்சி, முன்னிலை பெற்றுள்ளது. இந்நிலையிலேயே தனது தோல்வியை ஏற்றுக் கொள்வதாகத் தெரிவித்த அவர், பிரதமர் மல்கொம் டேர்ண்புல்லுக்கு, சற்று முன்னர் அழைப்பெடுத்து, அவரைப் பாராட்டியதாகவும் தெரிவித்தார். - See more at: http://www.tami…

  11. தென்ஆப்ரிக்காவில் மகாத்மா காந்தி அவமதிக்கப்பட்ட ரயிலில் மோடி பயணம்! பிரதமர் நரேந்திர மோடி ஆப்ரிக்க நாடுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கிறார். மொசாம்பிக்கில் இருந்து நேற்று தென்ஆப்ரிக்கா வந்த அவருக்கு டர்பனில் பிரமாண்ட வரவேற்பு அளிக்கப்பட்டது.இதுதான் மோடியின் தென் ஆப்ரிக்க முதல் பயணம். அங்கு, மகாத்மா சிலைக்கு பிரதமர் மோடி, மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அதேபோல் தென் ஆப்ரிக்க முன்னாள் அதிபர் நெல்சன் மண்டோலாவின் சிலைக்கும் மரியாதை செலுத்தினார். இரு தலைவர்களைப் பற்றிய கண்காட்சியையும் பிரதமர் மோடி திறந்து வைத்தார். பின்னர் இரு தலைவர்களும் அடைத்து வைக்கப்பட்டிருந்த கன்ஸ்டிடியூசன் மலை பகுதியில் இருந்த சிறைச்சாலையையும் பிரதமர் மோடி சுற்றி பார…

  12. முடிவிற்கு வந்தது ரஷ்யா - துருக்கி சர்ச்சை கடந்த ஆண்டு ரஷ்யாவிற்கும் துருக்கிக்கும் இடையில் கிளம்பிய இராஜதந்திர சர்ச்சைக்கு பிறகு, ரஷ்யாவிலிருந்து முதல் சுற்றுலா பயணிகள் விமானம், துருக்கியின் சுற்றுலா தலமான ஆன்தலியா சென்றடைந்தது. ரஷ்ய அதிபர் புடின் மற்றும் துருக்கி அதிபர் ரசிப் தயிப் எர்துவான் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் சிரியா நாட்டு எல்லையில் ரஷ்ய போர் விமானத்தை துருக்கி சுட்டு வீழ்த்தியதை அடுத்து, ரஷ்யாவில் இருந்து துருக்கிக்கான சுற்றுலா நடவடிக்கைளுக்கு தடை விதிக்கப்பட்டது. துருக்கி அதிபர் ரசிப் தேய்ப் எர்துவன் மன்னிப்பு கடிதம் எழுதியுள்ளதாக மாஸ்கோ கூறியதற்கு பிறகு, கடந்த வாரம், ரஷ்ய அதிபர் புடின் அந்த தடையை நீக…

  13. 2 அமெரிக்க தூதரக அதிகாரிகளை வெளியேற்றியது ரஷ்யா ரஷியாவை சேர்ந்த இரண்டு அதிகாரிகளை அமெரிக்கா வெளியேற்றியதற்கு பதிலடியாக, கடந்த மாதம் இரண்டு அமெரிக்க தூதரக அதிகாரிகளை நாட்டை விட்டு வெளியேற்றியுள்ளது ரஷ்யா. ஆவணப்படம் மாஸ்கோவில் அமைந்துள்ள அமெரிக்க தூதரகத்தில் வெளியே வேலை செய்யும் ரஷ்ய பாதுகாப்பு காவலருடன் ஒரு மோதல் சம்பவத்தில், வெளியேற்றப்பட்ட தூதரக அதிகாரிகளில் ஒருவர் ஈடுபட்டிருந்தார் என்று துணை வெளியுறவு துறை அமைச்சர் செர்ஜி ரியப்கோவ் தெரிவித்தார். காவலரின் முகத்தில் அந்த தூதரக அதிகாரி தாக்கியதாக ரஷியா கூறியுள்ளது. ஆனால் காவலர்தான் கோபத்தைத் தூண்டி, தூதரக அதிகாரியைத் தாக்கியதாக அமெரிக்க அரசாங்கம் தெரிவித்துள்ளது. இரண்டு ரஷ்ய அதிகா…

  14. ஹங்கேரி தனது தென் எல்லை பகுதியை முழுமையாக சீல் வைக்க முயற்சி குடியேறிகள் , வரமுடியாதபடி, ஹங்கேரி தனது தென் எல்லைப் பகுதியை முழுமையாக சீல் வைக்க முயல்வதை ஐ.நா.வின் அகதிகள் முகமை விமர்சித்துள்ளது. ஆவணப்படம் ஹங்கேரி அரசு 10 ஆயிரம் காவல்துறை அதிகாரிகளையும், படைவீரர்களையும் செர்பிய எல்லை அருகில் நிறுத்திவைத்துள்ளதாகத் தெரிவித்துள்ளது. ஐ.நா.மனிதஉரிமைகள் ஆணையம், சட்டவிரோதமாக ஹங்கேரிக்குள் நுழைபவர்கள், வலுக்கட்டாயமாக செர்பியாவுக்குத் திருப்பியனுப்பும் நடைமுறை கவலை அளிப்பதாக உள்ளது என்று கூறியுள்ளது. செர்பியாவில் உள்ள அகதிகள் முகாம்களில் நிலவும் மோசமான நிலையை ஐ.நா விமர்சித்துள்ளது. பால்கன் வழியாக பயணம் செய்யும் குடியேற…

  15. பிரிட்டன் பிரதமருக்கான போட்டியில் தாய்மை தொடர்பான சர்ச்சை டேவிட் கேமரனுக்கு பதிலாக பிரிட்டனின் கன்செர்வ்டிவ் கட்சி தலைவர் மற்றும் பிரதமர் இடத்திற்கான போட்டியை, தாய்மைக்கான முக்கியத்துவம் தொடர்பான சர்ச்சை ஆட்கொண்டுள்ளது. தான் ஒரு தாயாக இருப்பதால், தனக்கு பிரிட்டனின் எதிர்காலத்தில் பெரிய பங்குள்ளது என்று தெரிவித்த ஆண்ட்ரியா லீட்சம், இரண்டு போட்டியாளர்களில் ஒருவர் ஆவர். இவர் இந்தப் போட்டியில் தனது சுயகருத்தை முன்னிறுத்திய குற்றச்சாட்டிற்கு ஆளாகியுள்ளார். தெரெசா மே தனக்கு குழந்தைகள் இல்லாததால், கவலைப்பட வேண்டும் என லீட்சம் கூறியதாக டைம்ஸ் பத்திரிகை கூறியுள்ளது. ஆனால் இந்த பிரச்சனை பற்றிய கருத்தை உருவாக்குவது பயங்கரமானதாக இருக்கும் என்று அவர் கூறியதாக…

    • 1 reply
    • 536 views
  16. இந்திய நிர்வாகத்துக்கு உட்பட்ட காஷ்மீரில், தீவிரவாத இயக்கத்தின் முக்கியத் தலைவன் கொல்லப்பட்டதை அடுத்து, போலிசாருக்கும் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் இடையே சனிக்கிழமை ஏற்பட்ட கடும் மோதலில், ஆர்ப்பாட்டக்காரர்கள் 6 பேர் கொல்லப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் 70 பேர் காயமடைந்தனர். காஷ்மீரின் புதிய தீவிரவாதத்தின் போஸ்டர் பாய் என்று அழைக்கப்படும், 21 வயதான புர்ஹான் வானி, ஷ்ரீநகருக்கு தெற்கே 45 மைல் தொலைவில் உள்ள அனந்த்நாக் பகுதியில் பதுங்கியிருந்தபோது, அதுகுறித்த பாதுகாப்புப் படையினருக்கு ரகசியல தகவல் கிடைத்ததது. அதைத் தொடர்ந்து நடந்த மோதலில் வெள்ளிக்கிழமை புர்ஹான் வானி கொல்லப்பட்டார். ''முழுமையான தாக்குதல் நடவடிக்கையில், புர்ஹான் வானியுடன் மேலும் இருவர் கொல்லப்ப…

  17. இரு கறுப்பின நபர்கள் மீது இந்த வாரம் போலிஸ் நடத்திய துப்பாக்கிச்சூட்டிற்கு எதிர்ப்பு தெரிவித்து அமெரிக்காவில் ஆயிரத்திற்கும் அதிகமான மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அட்லாண்டா, நியு ஒர்லியன்ஸ், நியுயார்க் மற்றும் பல நகரங்களில் அமைதிப் பேரணிகள் நடைபெற்றன. டல்லஸ் நகரில் நடந்த அமைதி பேரணி ஒன்றுக்கு போலிஸ் பாதுகாப்பு வழங்கிக் கொண்டிருந்த போது, துப்பாக்கிதாரி ஒருவர் ஐந்து போலிஸ் அதிகாரிகளை சுட்டுக் கொன்ற சம்பவத்திற்கு ஒருநாள் கழித்து இந்த அமைதி பேரணிகள் நடந்து வருகின்றன. போலிஸ் அதிகாரிகளின் மரணத்துக்கு கண்டிப்பாக துக்கம் அனுஷ்டிக்கப்பட வேண்டும் என்றாலும், கறுப்பின ஆண்களை கொல்வதற்கு முடிவுகட்டும் போராட்டங்கள் தொடர வேண்டும் என்று மனித உரிமை ஆர்வலர் ரிவரெண்ட…

    • 0 replies
    • 182 views
  18. முட்டாள்தன செல்ஃபியை தவிர்ப்பீர்: சுற்றுலா பயணிகளிடம் குரேஷியா உருக்கம் படம்:ஏபி முட்டாள்தனமான, அபாயகரமான செல்ஃபிகளை எடுக்க வேண்டாம் என சுற்றுலாப் பயணிகளுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது குரேஷியா சுற்றுலாத் துறை. கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் சுற்றுலாப் பயணிகள் அதிகம் விரும்பி செல்லும் நாடு குரேஷியா. அதுவும் குரேஷியாவின் மலைப்பகுதிகளுக்கு சுற்றுலாப் பயணிகள் அதிகமாக செல்கின்றனர். அவ்வாறு செல்பவர்கள் மலை உச்சி, குன்று போன்ற சவாலான இடங்களில் நின்றுகொண்டு ஃபோட்டோ, செல்ஃபி எடுக்கின்றனர். அவ்வாறாக புகைப்படம் எடுக்கும்போது தவறி விழுந்து இறப்பவர்கள், காயமடைவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்நிலையில், அந்நாட்டு…

  19. பிரபல கால்பந்து வீரர்கள் படுகொலை ஐ.எஸ் அமைப்பினர் சமீபத்தில் படுகொலை செய்த 5 நபர்களில் 4 பேர் சிரியாவில் பிரபல கால்பந்து அணிக்காக விளையாடும் வீரர்கள் என தெரிய வந்துள்ளது. பொது வீதியில் வைத்து தலை துண்டிக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட அந்த நால்வரும் பிரபல கால்பந்து அணியான அல்ஷபாபில் இணைந்து விளையாடி வந்தனர். குர்து இனத்தவருக்காக வேவு பார்ப்பதாக கூறி ஐ.எஸ் அமைப்பினர் இவர்களை கடத்தி சென்றுள்ளனர். இதனிடையே கடத்தப்பட்ட கால்பந்து வீரர்களுடன் 5 பேரை படுகொலை செய்துள்ளதாக ஐ.எஸ் அமைப்பினரின் அதிகாரப்பூர்வ இணைய பக்கத்தில் படங்களை வெளியிட்டுள்ளனர். அதுமட்டுமின்றி கடந்த ஆண்டு ஆசியா கிண்ண கால்பந்து போட்டிகளை பார்த்துக்கொண்டிருந்த 13 இளைஞர்களை ஐ.எஸ் …

  20. பிரித்தானியாவின் அடுத்த பிரதமர் ஒரு பெண் பிரித்தானியாவானது 26 வருடங்களுக்குப் பின்னர் பெண் பிரதமர் ஒருவரை தெரிவு செய்வுள்ளது. அந்நாட்டு பழைமைவாத கட்சியின் தலைவரை தெரிவு செய்வதற்காக நடத்தப்பட்ட பிந்திய வாக்கெடுப்பில் இறுதி இரு வேட்பாளர்களாக பெண் வேட்பாளர்களான உள்துறைச் செயலாளர் தெரேஸா மேயும் சக்தி வள அமைச்சர் அன்ட்றியா லீட்ஸம்மும் தெரிவாகியுள்ளார். மூன்றாவது போட்டி வேட்பாளரான நீதி செயலாளர் மைக்கேல் கோவ் போட்டியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். வியாழக்கிழமை இடம்பெற்ற இந்த வாக்கெடுப்பில் தெரேஸா மே 199 வாக்குகளைப் பெருமளவு வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார். அதேசமயம் அன்ட்றியா லீட்ஸம் 84 வாக்குகளையும் மைக்கேல் க…

  21. துப்பாக்கியுடன் பெண் நுழைந்ததாக பீதி : அமெரிக்க பாராளுமன்றம் மூடப்பட்டது அமெரிக்க பாராளுமன்ற கட்டிடத்தின் அடித்தள பகுதியில் துப்பாக்கியுடன் பெண் ஒருவர் நேற்று நுழைந்தமையால் பதற்றநிலை ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்த பொலிஸார் கட்டிடத்தை சுற்றி வளைத்ததையடுத்து, பாராளுமன்ற கட்டிடமும், அதையொட்டி அமைந்துள்ள பாராளுமன்ற பார்வையாளர் மையமும் மூடப்பட்டன. வெளியில் இருந்து யாரும் உள்ளே அனுமதிக்கப்படவில்லை. எனினும் தீவிர தேடுதல் நடவடிக்கையின் பின்னரும் குறித்த பெண் சிக்கவில்லை. ஒரு மணி நேரத்துக்கு பிறகு, பொலிஸாரின் அனுமதியுடன் பாராளுமன்ற கட்டிடம் மீண்டும் திறக்கப்பட்டது. இந்த பரபரப்புக்கு இடையே சபை சிறிது நேரம் நடைபெ…

  22. பிரிட்டனின் முடிவு – யாருக்கு வெற்றி? ஒரு வழியாக யூரோப்பிய ஒன்றியத்திலிருந்து இருந்து வெளியேறும் முடிவை பிரிட்டன் எடுத்துவிட்டது. உலகப் பொருளாதார அரங்கில் பெரும் அதிர்ச்சியை இது ஏற்படுத்தினாலும், ஓரளவுக்கு இது எதிர்பார்க்கப்பட்டது என்றே சொல்லவேண்டும். இந்த ஓட்டெடுப்புக்கு முன்னால் நடந்த கருத்துக் கணிப்புகள், முடிவு இழுபறியாக இருக்கும் என்று தெரிவித்த போதிலும், ஒன்றியத்திலிருந்து வெளியேறும் முடிவுக்கான கை ஓங்கியிருந்தது என்பதையும் குறிப்பிட்டன. இருந்தாலும், ஒன்றியத்திலேயே தொடர்வது என்ற அணியை ஆதரித்த பிரிட்டன் பிரதமர் டேவிட் கேமெரனும் அவரது சகாக்களும், வெளியேறுவது நிலையற்ற தன்மையை ஏற்படுத்தும் என்ற அச்சத்தில், மக்கள் அதற்கு எதிராக ஓட்டளிப்பார்கள் என்று எதிர்பார்த்த…

  23. இன்றைய நிகழ்ச்சியில் * அமெரிக்காவின் டல்லஸ் நகரில் கறுப்பு இன இளைஞர்களின் கொலையை கண்டித்த அமைதி ஊர்வலத்தில் துப்பாக்கிச் சூடு. ஆயுதபாணிகளால் ஐந்து போலிஸ்காரர்கள் சுட்டுக்கொலை. * பிரசன்னத்தை பலப்படுத்துகின்றது நேட்டோ. ரஷ்யாவை கட்டுக்குள் வைக்க ஆயிரக்கணக்கான படைகளை கிழக்கு ஐரோப்பாவுக்கு அனுப்புகிறது அது. * கினியில் வாழ்வாதாரத்தை பாதிக்கும் சட்ட விரோத மீன்பிடி தொழில்.

  24. அமெரிக்காவின் ஜனாதிபதி வேட்பாளரான டொனால்ட் ட்ரம்ப் அவர்கள், சதாம் ஹூசைனை ஒரு நல்ல மனிதர் அவர்கள் பயங்கரவாதிகளிற்கு எதிராகப் போரிட்டார் என்று தெரிவித்துள்ளார். சதாம் ஹூசைனும், லிபிய அதிபர் கடாபியும் இன்று உயிருடன் இருந்தால் உலகம் நன்றாக இருந்திருக்கும் என்று குறிப்பிடும் டொனால்ட் ட்ரம்ப் இப்போதும் முஸ்லிம்களை எதிர்க்கின்றார். இஸ்லாமோபோபியா எனப்படும் முஸ்லிம்களிற்கெதிரான போக்கு அமெரிக்கா, ஐரோப்பா கடந்து கனடாவிலும் தோற்றம் பெற்றுள்ளது போன்ற விடயங்களை இன்றைய நிஜத்தின் தேடல் நிகழ்ச்சியில் அதன் ஆய்வாளர் சுரேஸ் தர்மா குறிப்பிட்டார். Go to Videos Nijaththin Thedal - Saddam Hussein is good! Muslims are terro…

  25. இராக்கியத் தலைநகர் பாக்தாதுக்கு வடக்கே உள்ள ஒரு ஷியா பிரிவினருக்கான புனித தலத்தை தற்கொலை குண்டுதாரிகளும் துப்பாக்கிதாரிகளும் தாக்கியுள்ளனர்.பலாட் என்ற நகரில் அமைந்திருக்கும், சயித் மொஹமத் பின் அலி அல்-ஹாதி என்ற நினைவிடத்தின் வாயிலுக்கருகே குண்டு ஒன்று வெடித்தது. இந்த குண்டுத் தாக்குதலுக்குப் பின், பல துப்பாக்கிதாரிகள் அந்த இடத்தில் அதிரடியாக நுழைந்து ஈத் பெருநாளைக் கொண்டாடிக்கொண்டிருந்த பலர் மீது துப்பாக்கிப் பிரயோகம் செய்தனர்.இந்தத் தாக்குதலில் 30க்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டிருப்பதாக இராக்கிய அதிகாரிகள் கூறுகின்றனர். மேலும் பலர் காயமடைந்துள்ளனர். பாக்தாதின் ஜன நெரிசல் மிக்க ஷியா வணிகப் பகுதி ஒன்றில் நடந்த மிக மோசமான குண்டுத்தாக்குதலில்…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.