உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
27052 topics in this forum
-
டொனால்டு டிரம்ப் விமர்சனத்துக்கு ஹில்லாரி பதிலடி தன் மீதான டொனால்டு டிரம்பின் விமர்சனத்துக்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஹில்லாரி கிளின்டன் அளித்துள்ள பதிலில், பெரும்பான்மை மக்களை டிரம்ப் புறக்கணித்துள்ளதாக குற்றம் சாட்டினார். டிரம்ப் உரை நிகழ்த்திக்கொண்டிருக்கும் போது, அவர் கூறிய குற்றச்சாட்டுக்களுக்கு ட்விட்டர் தளத்தில் பதிலடிகளை அனுப்பியவாறு இருந்தார் ஹில்லாரி. அவர் தனது எதிர் அணி தலைவர் பல திட்டங்களை முன்வைக்கிறார் என்றும் அவை பெண்கள், ஆப்பிரிக்க-அமெரிக்கர்கள், இஸ்லாமியர்கள், இலத்தீன் அமெரிக்க மக்கள் மற்றும் குடியேறிகள் போன்றவர்களை கணக்கில் எடுத்துக்கொள்ளவில்லை என்றார். மெக்சிகோவுடனான அமெரிக்காவின் தென் எல்லையைச் சுற்றி சுவர் கட்டுவது என்ற …
-
- 0 replies
- 315 views
-
-
மத்திய தரைக்கடலில் 3,200 குடியேறிகள் மீட்பு மத்திய தரைக் கடலில் நடத்தப்பட்ட 25 மீட்பு நடவடிக்கைகளில், 3,200 குடியேறிகள் மீட்கப்பட்டுள்ளனர். மீட்பு நடவடிக்கைகளின்போது ஒருவர் உயிரிழந்து காணப்பட்டதாகவும் இத்தாலியக் கரையோரப் பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்தாண்டு, இத்தாலிக்குச் சென்ற குடியேறிகளின் எண்ணிக்கை, 80,000யும் கடந்துவிட்டதாக, ஐ.நா.வின் அகதிகள் அமைப்பு கூறியுள்ளது. அவர்களில் பெரும்பாலானோர் ஆபிரிக்கர்கள். ஐரோப்பாவைக் கடல் வழி சென்றுசேரும் முயற்சியில், 2014 ஆம் ஆண்டு முதல், இதுவரை, 10,000த்துக்கும் மேற்பட்ட குடியேறிகள் உயிரிழந்துள…
-
- 0 replies
- 271 views
-
-
மனிதாபிமான பேரழிவை சந்தித்து வரும் அலெப்போ நகரம்: ஐ.நா. எச்சரிக்கை போருக்கு தயார் நிலையில் உள்ள சிரியாவின் அலெப்போ நகரில் சுமார் இரண்டரை லட்சம் மக்கள் மனிதாபிமான பேரழிவை சந்தித்து வருவதாக ஐக்கிய நாடுகள் சபை எச்சரிக்கை விடுத்துள்ளது. போராளிகள் வசமிருந்த அலெப்போ நகரின் கிழக்குப் பகுதிக்கு செல்ல மற்றும் வெளியேற இருந்த ஒரே முக்கிய நெடுஞ்சாலையை அரசு படையினர் சமீபத்தில் துண்டித்தனர். பெரும் நிவாரண முயற்சிகள் தற்போது தேவை என ஐ.நாவின் மூத்த அதிகாரி ஜான் எகிலாந்து தெரிவித்துள்ளார். ஒவ்வொரு வாரமும், 48 மணி நேர போர் இடை நிறுத்தத்திற்கு அவர் அழைப்பு விடுத்துள்ளார். அந்நேரத்தில் நகருக்குள் உதவிகள் சென்றுவர முடியும். குண்டுவீ…
-
- 0 replies
- 419 views
-
-
அடுத்த மாதம் 5-ந்தேதி பிரேசில் நாட்டில் ஒலிம்பிக் தொடர் நடைபெற இருக்கிறது. இதில் தாக்குதல் நடத்த திட்டமிட்டிருந்த கும்பலை போலீசார் கைது செய்துள்ளனர். சயோ பவுலோ: அடுத்த மாதம் 5-ந்தேதி பிரேசில் நாட்டில் ஒலிம்பிக் தொடர் நடைபெற இருக்கிறது. இதில் தாக்குதல் நடத்த திட்டமிட்டிருந்த கும்பலை போலீசார் கைது செய்துள்ளனர். உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் ஐ.எஸ். தீவிரவாதிகளின் ஆதரவாளர்கள் என்று அடிப்படையில் பிரேசில் நாட்டில் ஒரு குழு உருவாகியுள்ளது. இந்த குழு எப்படி ஆயுதம் வாங்குவது என்று ஆலோசனை நடத்தியுள்ளது. இந்த விவரம் போலீசாருக்கு தெரியவர துரித நடவடி…
-
- 0 replies
- 329 views
-
-
பிரேசில் நாட்டில் வாட்ஸ் ஆப் செயலிக்கு விதிக்கப்பட்ட திடீர் தடையால் 10 கோடிக்கும் அதிகமானோர் தகவல் பரிமாற முடியாமல் அவதிக்குள்ளாகினர். வாட்ஸ் ஆப் பாதுகாப்பு அம்சங்களுக்கு எதிராக செயல்படுவதாகவும், இதனால் சமூக விரோத செயல்கள் நடைபெற வாய்ப்புள்ளதாகவும், இதனால் இந்தியாவில் வாட்ஸ் ஆப் செயலுக்கு தடை விதிக்க வேண்டும் என்று சமீபத்தில் வழக்கு தொடரப்பட்டது. ஆனால் இந்தியாவில் வாட்ஸ் ஆப் செயலியை தடை செய்ய முடியாது என்று நீதிமன்றம் உத்தரவிட்டது.இந்த நிலையில் பிரேசில் நாட்டில் நடந்த ஒரு குற்றச் செயலுக்காக குறிப்பிட்ட தகவல்களை வழங்குமாறு பிரேசில் பொலிசார் வாட்ஸ் ஆப் நிறுவனத்தை கேட்டுக் கொண்டனர். ஆனால் தகவல்களை தர அந்நிறுவனம் மறுத்துவிட்டது. இது குறித்து ரியோ டீ ஜெனீரோ நீதி…
-
- 0 replies
- 307 views
-
-
ஆப்பிரிக்கா மற்றும் அரபு நாடுகளில் இருந்து ஏராளமான அகதிகள் படகில் மத்திய தரைக்கடலை தாண்டி சென்று ஐரோப்பிய நாடுகளில் குடியேறி வருகிறார்கள்.இவ்வாறு நைஜீரியா மற்றும் சிசிலி நாடுகளை சேர்ந்தவர்கள் ஒரு படகில் மத்திய தரைக்கடலில் இத்தாலியை நோக்கி சென்று கொண்டு இருந்தனர்.லிபியா அருகே சென்ற போது சர்வதேச மருத்துவ கண்காணிப்பு குழுவினர் அங்கு வந்தனர். அவர்கள் அந்த படகை மடக்கி சோதனையிட்டனர். அந்த படகின் கீழ் தளத்தில் 21 பெண்கள், ஒரு ஆண் ஆகியோர் பிணங்கள் அடுக்கி வைக்கப்பட்டு இருந்தன.இந்த படகில் 50 குழந்தைகள் உள்பட 209 பேர் பயணம் செய்தனர். அவர்கள் அனைவரையும் மருத்துவ குழுவினர் மீட்டனர். 22 பேரும் எப்படி இறந்தார்கள் என்பது தெரியவில்லை. படகில் இருந்த டீசலில் …
-
- 0 replies
- 429 views
-
-
வங்கதேச ஜமாதுல் முஜாஹிதீன் (ஜே.எம்.பி.) பயங்கரவாத அமைப்பின் முக்கியத் தலைவர் உள்ளிட்ட நான்கு பயங்கரவாதிகளை அந்த நாட்டு சிறப்பு அதிரடிப் படையினர் வியாழக்கிழமை கைது செய்தனர்.இதுகுறித்து சிறப்பு அதிரடிப் படையின் செய்தித் தொடர்பாளர் முஃப்தி முகமது கான் கூறியதாவது: காஸிபூர் மாவட்டம், டோங்கி நகரிலுள்ள ஒரு வீட்டில் பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக எங்களுக்கு ரகசியத் தகவல் கிடைத்தது.அதன் அடிப்படையில் அந்த வீட்டில் வியாழக்கிழமை காலை அதிரடி சோதனை நடத்தி 4 பயங்கரவாதிகளைக் கைது செய்தோம். அவர்களில் ஒருவர், ஜே.எம்.பி. பயங்கரவாத அமைப்பின் தென் மண்டலத் தலைவர் முகமதுல் ஹஸன் தன்வீர் ஆவார். மற்ற மூவரும் ஆஷிகுல் அக்பர் அபேஷ், நஜ்முஸ் ஷகீப், ரஹமதுல்லா ஷுவோ என்று …
-
- 0 replies
- 280 views
-
-
2016-ம் ஆண்டு உலக அழகன் பட்டத்துக்கான போட்டி பிரிட்டனில் நடந்தது. இதில் பல்வேறு நாடுகளை சேர்ந்த மாடலிங் துறையை சேர்ந்தவர்கள், நடிகர்கள் கலந்து கொண்டனர். இதில் ஐதராபாத்தை சேர்ந்த ரோகித் கன்டேவாலும் பங்கேற்றார். பல சுற்றுக்கள் முடிவில் 46 பேர் இறுதி போட்டிக்கு தகுதி பெற்றனர். இதில் ரோகித் கன்டேவாலும் அடங்குவார்.இறுதிப்போட்டியில் ஒவ்வொருவரும் தங்களது திறமைகளை காட்டினர். இதன் முடிவில் இந்தியாவின் ரோகித் கன்டேலால் உலக அழகன் பட்டத்தை கைப்பற்றினார்.உலக அழகன் பட்டத்தை வெல்லும் முதல் இந்தியர் ரோகித் ஆவார். மேலும் முதல் ஆசியாவை சேர்ந்தவர் என்ற சிறப்பையும் பெற்றார். ரோகித்தின் உடல்வாகு, முடி அலங்காரம் ஆகியவை அவருக்கு வெற்றி வாய்ப்புகளை அதிகப்படுத்தியது…
-
- 0 replies
- 1.2k views
-
-
நீஸ் தாக்குதல்: லாரி ஓட்டுநரை பிடிக்க ஸ்கூட்டரில் பாய்ந்தவர் தப்பியது எப்படி? கடந்த வாரம் நீஸ் தாக்குதலின் போது, பொதுமக்களை கொன்று குவித்த லாரியை துரத்தியபடி ஸ்கூட்டரில் சென்ற பிரஞ்சுக்காரர் பத்திரிகைக்கு பேட்டி ஒன்றை வழங்கி உள்ளார். லாரிக்கு அடியில் சிக்கி கொல்லப்பட்ட 84 பேரில் அவரும் இருப்பார் என்ற ஊகங்களை அகற்றும் விதத்தில் அவருடைய பேட்டி வெளியாகியுள்ளது. ஃபிராங்க் என்ற பெயர் கொண்ட அந்த நபர், லாரியை பிடிப்பதற்காக தப்பியோட முயன்ற கூட்டத்திற்கு நடுவே தன் வாகனத்தை செலுத்தியதாக நீஸ்-மத்தன் என்ற செய்தித்தாளிடம் கூறியுள்ளார். லாரி ஓட்டுநர் அறைக்கு கீழே இருந்த படியில் ஏறிய ஃபிராங்கை, லாரி ஓட்டுநர் துப்பாக்கியால் குறிவைத்து சுட்ட போதும், ஓட்டு…
-
- 0 replies
- 257 views
-
-
இன்றைய நிகழ்ச்சியில் * தெற்கு சூடானில் உள்நாட்டு போர் திரும்பிவிட்டதன் அறிகுறியா இது. ஜுபாவில் இருந்து பிபிசியின் சிறப்பு தகவல். * பழமைவாத யூதர் ஒருவரால் கத்தியால் தாக்கப்பட்ட ஒரு வருடத்தின் பின்னர் ஒருபாலுறவுக்காரர்கள் மீண்டும் ஜெரூசலத்தில் ஊர்வலம். * நல்ல எதிர்காலத்துக்காக இசைக்கும் சிறுமிகள். காபூல் தெருக்களில் தமது இசை வல்லமையை வளர்க்க முயல்கிறார்கள்.
-
- 0 replies
- 197 views
-
-
துருக்கியில் கடந்த வெள்ளிக்கிழமை நடந்த தோல்வியுற்ற இராணுவத்தின் ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சிக்குப் பின்னர், நாட்டில் மூன்று மாதங்களுக்கு அந்நாட்டு அதிபர் ரிசெப் தயிப் எர்துவான் அவசர நிலையை பிரகடனப்படுத்தியுள்ளார். துருக்கி அங்காராவில் அதிபரின் மாளிகையில் பேசும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். மேலும் ஆட்சி கவிழ்ப்பு நடவடிகையில் ஈடுபட்ட சுமார் 10000 பேரின் காவலை நீடிக்கவே இந்த அவசர நிலையை பிரகடனப்படுத்தியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த தாக்குதல் சம்பவத்தின் பின்னர் 600க்கும் மேற்பட்ட பாடசாலைகள் மூடப்பட்டிருக்கின்றன, 1000க்கும் அதிகமான அரசு ஊழியர்களும் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இச்செயல் ஒருபோதும் நாட்டின் ஜனநாயகத்திற்கோ …
-
- 0 replies
- 316 views
-
-
அமெரிக்கா: கறுப்பர்களின் புதைகுழி தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ கட்டமைக்கப்பட்ட மாயைகள் உடையும் போது ஏற்படும் அதிர்வுகள் பல்வகைப்படும். அவை வௌவேறு வகைகளில் மாறுவதோடு வசதிக்கேற்பப் பொருள்கொள்ளப்படுகின்றன. கறுப்பு அழகிய நிறம்ƒ அதை ஓர் அடையாளமாக, வெறுக்கத்தக்கதாக மாற்றிய பெருமை வெள்ளை நிறவெறியைச் சாரும். அதன் வழியிலேயே 'வெள்ளையானவன் பொய் சொல்ல மாட்டான்' போன்ற பொதுப்புத்தி மனநிலைகள் கட்டமைகின்றன. ஆனால் உலகெங்கும் நிறத்தின் பெயரால் சொல்லொணாக் கொடுமைகள் அரங்கேறுகின்றன. அவை ஜனநாயகத்தின் பெயரால் நியாயப்படுத்தவும் படுகின்றன. இவ்வாண்டு முழுவதும் அமெரிக்காவில் கறுப்பினத்தவர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட நிகழ்வுகள் தொடராக நடைபெற்றுள்ளன. இம்மாதம் இடம்பெற்றவை…
-
- 0 replies
- 281 views
-
-
போலிஸ் காவலில் கறுப்பின நபர் பலி: பிரான்ஸில் தொடரும் மோதல்கள் பிரஞ்சு நகரமான பூமென்ட்-சர்-ஒய்ஸியில், போலிஸ் காவலில் இருந்த இளம் கறுப்பின நபர் ஒருவர் பலியான சம்பவத்தை தொடர்ந்து இரண்டாவது இரவாக அங்கு மோதல்கள் நடந்து வருகின்றன. அதிகாரிகள் மீது பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டன. மேலும், நகர மண்டபத்தை எரிக்கும் முயற்சிகளும் நடந்தன. இதில், எட்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். வட பாரிஸில் உள்ள நகர் ஒன்றில், அடாமா ட்ரேயோரி என்பவர் போலிசாரால் தடுப்பு காவலில் வைக்கப்பட்ட பிறகு, அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதாக போலிஸ் கூறுகிறது. ஆனால், அவர் ஆரோக்கியமாக இருந்ததாகவும், போலிசாரால் தாக்கப்பட்டார் என்றும் அவரது நண்பர்கள் கூறியுள்ளனர். வியாழனன்று உ…
-
- 0 replies
- 261 views
-
-
பெய்ஜிங், சீனா ராணுவம் அவ்வப்போது ஊடுருவி வருவதால் இந்திய-சீன எல்லையில் 100 போர் பீரங்கிகளை பாதுகாப்பு முன்னெச்சரிக்கையாக இந்திய ராணுவம் நிலை நிறுத்தியுள்ளது. இதற்கு சீன ஊடகங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இதுகுறித்து சீனாவின் அரசு ஊடகமான 'குளோபல் டைம்ஸ்' வெளியிட்டுள்ள கட்டுரையில் குறிப்பிட்டுள்ளவை பின்வருமாறு:- இந்தியாவில் சீன நிறுவனங்கள் அதிக அளவில் முதலீடு செய்ய விரும்புகிறது. இப்படிப்பட்ட சூழ்நிலையில், இந்திய ராணுவம் 100 போர் பீரங்கிகளை நிலை நிறுத்தியிருப்பது மக்களிடையே பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. எல்லையில் பீரங்கிகளை நிறுத்திவிட்டு சீனாவின் முதலீடுகளை அதிகரிக்க இந்தியா விரும்புவது நகைப்புக்குரியதாக உள்ளது. பீரங்கிகளை நிறுத்தியிருப்பதன் எதிரொலியாக இந்…
-
- 0 replies
- 206 views
-
-
துருக்கியில் 50 ஆயிரத்திற்கு மேலானோர் மீது கடும் நடவடிக்கை துருக்கியில் ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சி தோல்வியடைந்த பிறகு 50 ஆயிரத்திற்கு மேற்பட்டோர் பணியிலிருந்து நீக்கம் மற்றும் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர் துருக்கியில் கடந்த வாரம் நிகழ்ந்த தோல்வியடைந்த ஆட்சிக் கவிழ்ப்புக்கு பிறகு, 50 ஆயிரத்திற்கு மேலானோர் இனம் காணப்பட்டு, அவர்களின் பணிகளிலிருந்து நீக்கம் மற்றும் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். அதிபர் ரசிப் தயிப் எர்துவானுக்கு விசுவாசமாக இல்லாதோரை பணியிலிருந்து நீக்குவது ஆசிரியர்கள், பல்கலைக்கழக டீன்கள் மற்றும் ஊடகங்கள் என செவ்வாய்கிழமை விரிவானது. துருக்கி அதிபர் ரசீப் தயிப் எர்துவான் இவர்கள் அனைவரும், இந்த எழுச்சியை த…
-
- 6 replies
- 669 views
-
-
காஷ்மீர் பிரச்னைக்கு தீர்வு காண மத்திய அரசு முன் உள்ள சிறந்த வழி காஷ்மீர் இந்தியாவுடன் இணையும்போது தந்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவது அல்லது பெரிய அளவிலான சுயாட்சி வழங்குவது என காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவருமான ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.இது குறித்து மேலும் அவர் கூறுகையில் “நம்முடைய செயல்முறை தவறாக உள்ளது. நாம் தந்த வாக்குறுதியை நாம் புறக்கணித்துவிட்டோம். காஷ்மீர் மக்கள் நம்மீது கொண்ட நம்பிக்கையை உடைத்துவிட்டோம். அதனால் மிகவும் பெரிய விலையை தந்திருக்கிறோம். நான் சொல்வது தவறாக இருக்கலாம். நான் சொல்வது சரியாக கூட இருக்கலாம். இங்கே கவனிக்க வேண்டியது என்னவென்றால், இந்தியாவுடன் காஷ்மீர் இணையும்போது தந்த வாக்குறுதிகள் முழுக்க நிறைவேற்றப்படும் …
-
- 0 replies
- 343 views
-
-
இரண்டு ஆண்டுகளாக தவறான இடத்தில் விமானத்தை தேடிக்கொண்டிருக்கிறோம்: எம்.எச்.370 தேடுதல் குழு விரக்தி படம்: ஏ.பி. மார்ச் 2014-ல் 239 பயணிகளுடன் மலேசிய ஏர்லைன்ஸ் விமானம் மாயமானதன் மர்மம் இன்னும் விடுபடவில்லை. தற்போது தவறான இடத்தில் 2 ஆண்டுகளாக தேடி வருவதாக எம்.எச்.370 விமான தேடுதல் குழு தெரிவித்துள்ளது. அதாவது கடைசி கணங்களில் அது கடலுக்குள் சீறிப்பாய்ந்தது என்று கூற முடியவில்லை, எரிபொருள் தீர்ந்தாலும் திறமையான விமானியால் இன்னும் தூரம் (120 மைல்கள்) ஓட்டிச் செல்ல முடியும், அவ்வாறு சென்றிருக்க வாய்ப்பிருக்கிறது என்று தேடுதல் குழு இப்போது கூறுகிறது. கிட்டத்தட்ட கிரீஸ் நாட்டைப் போன்ற ஒரு பரப்பளவை அல்லது 1,20,000 சதுர கிலோமீட்டர்கள் …
-
- 0 replies
- 241 views
-
-
துபாயில் 75 மாடி குடியிருப்பு பகுதியில் தீ விபத்து துபாயில் ஒரு 75 மாடி குடியிருப்புக் கட்டிடத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தீ விபத்து நிகழ்ந்த கட்டிடம் தீப்பிழம்புகளும் புகையும் இந்த அடுக்குமாடிக் கட்டிடத்தின் ஜன்னல்களிலிருந்து வெளிவருவதைப் பார்க்க முடிந்தது. தீயணைப்பு வீரர்கள் அந்த இடத்திற்கு வந்தபோது, எரிந்துபோன துகள்கள் தரையில் மிதந்தன. இது வரையில் உயிர்ச்சேதங்கள் குறித்த எந்த செய்திகளும் இல்லை. ஆனால் எது இந்த விபத்தை தூண்டியது என்று தெளிவாக தெரியவில்லை. ஐக்கிய அரபு எமிரேட்டுகளில் சமீபத்திய ஆண்டுகளில் உயரமான கட்டிடத்தில் தீ விபத்து ஏற்படுவது இது ஐந்தாவது முறையாகும். http://www.bbc.com/tamil/global/20…
-
- 5 replies
- 581 views
-
-
டெல்லி சர்வதேச விமான நிலையத்தில் உள்ள சுங்க இலாகாவுக்கு சொந்தமான பெட்டகத்தில் இருந்து மேலும் 59 கிலோ தங்கம் மாயமான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. புதுடெல்லி: புதுடெல்லியில் உள்ள இந்திராகாந்தி சர்வதேச விமான நிலையத்தில், பயணிகள் மூலம் கடத்தி வரப்படும் தங்கம் சுங்கத்துறை அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டு அதிக பாதுகாப்பு நிறைந்த பெட்டகத்தில் சீல் வைக்கப்பட்டு பாதுகாக்கப்பட்டு வருகிறது. இந்த அறையில் நடந்த திடீர் சோதனையில், கடந்த இரண்டு ஆண்டுகளில் 83 கிலோ தங்கக் கட்டிகள் திருடப்பட்டு, அதற்கு பதில் தங்கத்தைப் போன்று மின்னும் போலியான மஞ்சள் நிற உலோகக் கட்டிகள் வைக்கப்பட்…
-
- 5 replies
- 455 views
-
-
துருக்கியில் அவசரகாலநிலைமை அறிவிப்பு துருக்கியில் அவசரகால நிலைமை அறிவிக்கப்பட்டுள்ளது. இராணுவ சதிப் புரட்சியைத் தொடர்ந்து துருக்கியின் ஜனாதிபதி Recep Tayyip Erdogan அந்நாட்டு அவசரகால நிலையை அறிவித்துள்ளார். எதிர்வரும் மூன்று மாதங்களுக்கு நாட்டில் அவசரகால நிலைமை அமுலில் இருக்கும் என ஜனாதிபதி அறிவித்துள்ளார். இராணுவ சதிப்புரட்சியில் இணைந்துகொண்ட 10000 பேர் வரையில் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். இவர்களின் தடுப்புக் காவல் காலம் நீடிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. 600 பாடசாலைகள் மூடப்பட்டுள்ளதுடன், ஆயிரக் கணக்கான அரசாங்க உத்தியோகத்தர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். அவ…
-
- 0 replies
- 259 views
-
-
லிபியாவில் ரகசிய நடவடிக்கைகளில் பிரெஞ்சு படைப்பிரிவுகள் லிபியாவில் தங்களுடைய மூன்று படையினர் கொல்லப்பட்டுள்ளதாக பிரான்ஸ் தெரிவித்திருக்கிறது. ஆப்பிரிக்காவின் வடக்கு பகுதியில் அமைந்திருக்கும் லிபியாவில் ரகசிய நடவடிக்கைகளில் பிரெஞ்சு படைப்பிரிவுகள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதை இந்த அறிவிப்பு முதன் முதலாக அதிகாரபூர்வமான வகையில் உறுதிப்படுத்துகிறது. ஆபத்தான உளவு நடவடிக்கைகளை மேற்கொண்டபோது நிகந்த ஹெலிகாப்டர் விபத்தால், இந்த மூன்று படையினரும் கொல்லப்பட்டுள்ளதாக பிரான்ஸ் அதிபர் பிரான்சுவா ஒல்லாந்த் கூறியிருக்கிறார். நாட்டின் கிழக்கு பகுதியில் அமைந்திருக்கும் பெங்காசிக்கு வெளியே, இஸ்லாமியவாத ஆயுதக்குழுவினர் விமானம் ஒன்றை சுட்டு வீழ்த்தியபோது பிரெஞ்சு சி…
-
- 2 replies
- 333 views
-
-
சென்னை: காஷ்மீர் மக்கள் அமைதியாக வாழும் வகையிலான சூழலை மத்திய அரசு ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக காஷ்மீர் நிலப்பரப்பில் நிகழ்ந்து வருகிற மனித மாண்புகளுக்கு எதிரான கொலைகள், வன்புணர்ச்சி நிகழ்வுகள், பெண்கள், குழந்தைகள் மீதான வன்முறைகள், தீவிரவாத ஒழிப்பு என்ற பெயரில் அப்பாவிகள் மீது தினந்தோறும் நிகழ்த்தப்படும் மனித உரிமை மீறல்கள் போன்ற சம்பவங்கள் நாம் நாகரீகம் பெற்ற சமூகத்தில்தான் வாழ்கிறோமா என்கின்ற கேள்வியை எழுப்பி வருகிறது. அதுவும் சமீபகாலமாக ஊடகங்களில் வெளிவருகிற காஷ்மீர் நிலத்தில் நடக்கின்ற வன்முறை சம்பவங்கள் …
-
- 0 replies
- 522 views
-
-
வங்காளதேசம் முழுவதும் 261 பேர் காணாமல் போனதாக தெரிவித்துள்ள பாதுகாப்பு அமைப்பு, அவர்கள் இருக்கும் இடம் குறித்து தகவல் தெரிவிக்கும்படி பொதுமக்களை கேட்டுக்கொண்டுள்ளது. டாக்கா: வங்காளதேசம் முழுவதும் 261 பேர் காணாமல் போனதாக தெரிவித்துள்ள பாதுகாப்பு அமைப்பு, அவர்கள் இருக்கும் இடம் குறித்து தகவல் தெரிவிக்கும்படி பொதுமக்களை கேட்டுக்கொண்டுள்ளது. உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் ஐ.எஸ். தீவிரவாத அமைப்பில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்தவர்கள் உறுப்பினராக சேர்ந்துவருகின்றனர். அவ்வகையில் வங்காளதேசத்தில் காணாமல் போன பலர் ஐ.எஸ். அமைப்பில் சேர்ந்திருக்கலாம் என்றும், இவர்கள் தீவிரவாத தாக்குதல்களில் ஈ…
-
- 0 replies
- 235 views
-
-
பிரஸ்ஸல்ஸில் வெடிகுண்டு பீதி: சந்தேக நபர் கைது பிரஸ்ஸல்ஸில் போலியான தற்கொலை அங்கி அணிந்து இருந்த ஒரு நபரை போலிஸார் கைது செய்துள்ளனர்; இந்த சம்பவம் அங்கு முக்கிய பாதுகாப்பு நடவடிக்கைகளைத் தூண்டியது. வருடத்தின் மிக வெப்பமான நாளில் குளிர்காலத்தில் அணிவதைப் போல நீண்ட மேலாடையணிந்த மனிதர் ஒருவரை, அங்கியிலிருந்து ஒயர்கள் வெளித்தெரிய பாதுகாப்பு அதிகாரி ஒருவர் கண்டதாக கூறப்படுவதையடுத்து அதிகாரிகள் ஒர் சதுக்கத்தையும் அதைச் சுற்றியுள்ள தெருக்களை சுற்றி வளைத்தனர். சந்தேக நபர் துப்பாக்கி முனையில் மண்டியிட வைக்கப்பட்டு ,இரு கைகளும் தலைக்கு பின்னால் வைக்கச் செய்யப்பட்ட நிலையில் வெடிகுண்டு அகற்றும் நிபுணர்கள் அழைக்கப்பட்டனர். போலிஸார் இதனை ஒரு தவறான எச்ச…
-
- 0 replies
- 421 views
-
-
ஜேர்மனி புகையிரதத்தில் தாக்குதல் நடத்தியவர் எச்சரிக்கை விடுக்கும் வீடியோவை ஐ.எஸ். வெளியிட்டது ஜேர்மனியில் பயணிகள் புகையிரதத்தில் கோடரியால் தாக்குதல் நடத்திய ஆப்கானிஸ்தான் அகதி எச்சரிக்கை விடுக்கும் வீடியோ காட்சியை ஐ.எஸ். தீவிரவாதிகள் வெளியிட்டுள்ளனர். ஜேர்மனியின் வெர்ஸ்பர்க் நகரில் பயணிகள் புகையிரதத்தில் பயணம் செய்த 17 வயது நிரம்பிய இளைஞன், சக பயணிகள் மீது சரமாரியாக கோடரியாலும், கத்தியாலும் தாக்குதல் நடத்திவிட்டு அவர் புகையிரதத்தில் இருந்து தப்ப முயன்ற வேளையில் பொலிஸார் சுட்டுக்கொன்றனர். இது தொடர்பாக நடத்தப்பட்ட முதல் கட்ட விசாரணையில் அவர் ஆப்கானிஸ்தானை சேர்ந்த 17 வயது அகதி என தெரிய வந்தது. இந்த தாக்குதல் தொடர்பாக பவேரியா மாகாணத்தி…
-
- 4 replies
- 473 views
-