Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. அமெரிக்காவுக்குள் அத்துமீறி நுழைந்த 6 பேர் ; வாகன விபத்தில் காயம் அமெரிக்காவுக்குள் அத்துமீறி நுழைந்த 6 பேர், பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்கையில் ஏற்பட்ட வாகன விபத்தில் காயமடைந்தனர். இதுகுறித்து தகவல்கள் தெரிவிப்பதாவது: டெக்ஸாஸ் மாகாணம், கிங்ஸ்வில் நகரில் அமெரிக்கக் கடற்படைக்குச் சொந்தமான விமான நிலையத்தின் நுழைவுத் தடுப்பை உடைத்துக்கொண்டு கடந்த சனிக்கிழமை நுழைந்த வாகனமொன்று, இறுதியாக இருந்த தடுப்புச் சுவரில் மோதி விபத்துக்குள்ளானது. இதில், அந்த வாகனத்தில் பயணித்த 15 பேரில் 6 பேர் காயமடைந்தனர். அந்த 15 பேரும் அமெரிக்காவுக்குள் அத்துமீறி நுழைந்ததாகவும், எல்லைக் காவல் பொலிஸார் அவர்களது வாகனத்தைப் பின்தொடர்ந்து வந்தபோது இந்த…

  2. உலகின் மிகப் பெரிய விமானம் அவுஸ்திரேலியாவில் தரையிறங்கியது உலகின் மிகப் பெரிய விமானமான யுக்ரைனின் “ஏ.என்- 225” (Antonov 225 Mriya ) விமானம் அவுஸ்திரேலியாவின் மேற்குப் பிராந்திய நகரான பேர்த்தில் நேற்று தரையிறங்கியது. இவ் விமானத்தை பார்ப்பதற்கு பல்லாயிரக் கணக்கானோர் திரண்டமையால் பேர்த் விமான நிலையத்துக்கு அருகே பெரும் வாகன நெரிசல் ஏற்பட்டமை குறிப்பிடத்தக்கது. 1988 ஆம் ஆண்டு சோவியத் ஒன்றியத்தினால் விண் ஓடத்தை ஏற்றிச்செல்வதற் காக தயாரிக்கப்பட்ட இவ் விமானம் 84 மீற்றர் (275 அடி, 7 அங்குலம்) நீளமானது. இவ் விமானத்தின், இறக்கைகளின் இரு முனைகளுக்கு இடையி…

    • 4 replies
    • 969 views
  3. இன்றைய நிகழ்ச்சியில்.. - அகதிகளை துரத்திவிடுவது பலன் தராது என்கிறது ஐநா அகதிகள் அமைப்பு. பெண் குடியேறிகள் நிலவரம் குறித்தும் கவலை. - பத்து ஆண்டுகள் கொடூரத்துக்கு வழி செய்த சீன கலாச்சார புரட்சியின் ஐம்பதாவது ஆண்டு நிறைவு. ஆனால், சீன ஊடகங்கள் பெருத்த மௌனம். - ருவண்டாவின் கொரில்லாக்களுக்கு பெரும் மவுசு. வடபகுதி மலைக் கொரில்லாக்களை பார்க்க வருவோரின் எண்ணிக்கை அதிகரிக்கிறது.

  4. அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் வேட்பாளர் ட்ரம்ப் – புடின் முத்தம்: சர்ச்சையைக் கிளப்பிய லிதுவேனிய ஓவியம்! Sanjith May 16, 2016 Canada ஐரோப்பிய நாடான லிதுவேனியாவின் தலைநகர் வில்னியசில் ‘சுமோக்கிங் பிக்’ என்ற ஹொட்டலில், ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினை, அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் வேட்பாளர் டொனால்டு டிரம்ப் உதட்டுடன் உதடு முத்தமிடுவது போன்று சுவர் ஓவியம் வரையப்பட்டுள்ளது. இது 6 அடி உயரத்தில் மிகவும் பிரமாண்டமாக உள்ளது. இந்த ஓவியம் உலக நாடுகளில் வாழும் மக்களின் கவனத்தை ஈர்த்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.இதுகுறித்து ‘சுமோக்கிங் பிக்’ ஹொட்டல் உரிமையாளர் டொமினிகல் சிகாஸ்கஸ் கூறும்போது, இந்த 2 ஓவியங்களும் எதிர்பாராமல் உருவானது. புடினும், டிரம்ப்பும் சந்தித்ததால் நடைபெறு…

  5. நோர்வேயில் ( Rygge airport ) இருந்து இங்கிலாந்து மான்செஸ்டர் நகரை நோக்கிப் புறப்பட்ட ரயன் எயார் விமானத்தில்.. குண்டு அதுஇது என்று பேசி கூச்சல் போட்டு சண்டையிட்ட இருவரால்.. விமானப் பயணம் ரத்துச் செய்யப்பட்டு பயணிகள் அனைவரும்.. பாதுகாப்பின் நிமித்தம்..விமானத்தில் இருந்து அப்புறப்படத்தப்பட்டதாக நோர்வே காவல் துறையினர் அறிவித்துள்ளனர். இச்சம்பவம் தொடர்பில் சந்தேகத்துக்கிடமாக நடந்து கொண்ட பயணிகள் இருவர் கைதாகி உள்ளனர். அதில் ஒருவர் சிறீலங்கா பிரஜை என்றும் மற்றவர் பிரித்தானியப் பிரஜை என்றும் பிபிசி செய்தி கூறுகிறது. News reports quoting a police official say one of the arrested men was British and the other was from Sri Lanka. http://www.bbc.co.uk/news/world-euro…

  6. இங்கிலாந்து கால்பந்து மைதானத்தில் வெடிகுண்டு கண்டுபிடிப்பு;விபத்து தவிர்ப்பு மான்செஸ்டர் : இங்கிலாந்து மான்செஸ்டர் மாகாணத்தில் உள்ள ஓல்ட் டிராப்போர்ட் மைதானத்தில் இன்று மென்'ஸ் யூனைட்டட் , போர்ன்மவுத் அணிகளுக்கு இடையே கால்பந்து போட்டி நடக்க இருந்தது. இப்போட்டிக்கு முன் நடந்த சோதனையி்ன் போது மைதானத்தில் மர்மான முறையில் இருந்த பார்சல் கண்டு பிடிக்கப்பட்டது. இதில் சந்தேகப்பட்டு சோதனை நடத்திய வெடிகுண்டு நிபுணர்கள் இந்த பையில் வெடிகுண்டு இருந்ததை உறுதி செய்தனர். இதையடுத்து போட்டிக்கு தடை விதிக்கபபட்டது. மேலும் மைதானத்தில் கூடியிருந்த பொதுமக்களும் வெளியேற்றப்பட்டனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட…

  7. இத்தாலிய வீதிகளில் சீன பொலிஸார் ரோந்து 2016-05-15 09:29:57 இத்தாலியில் சீன பொலிஸார் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டு ள்ளனர். இது ஏதேனும் திரைப்படப் படப்பிடிப்புக்கான நடவடிக்கை அல்ல. உண்மையாகவே இத்தாலியின் ரோம் மற்றும் மிலான் நகர வீதிகளில் தற்போது சீன பொலிஸார் நால்வர் பணியாற்றுகின்றனர். இத்தாலிக்கு வரும் சீன சுற்றுலாப் பயணிகள் பாதுகாப்பாக உணர்வத ற்காக பரீட்சார்த்த நடவடிக்கையாக இத் திட்டம் அமுல்படுத்தப் பட்டுள்ளது என இத்தாலிய உள்துறை அமைச்சு கடந்த திங்கட்கிழமை அறிவித்துள்ளது. சீன மக்கள் தமது நாட்டு பொலிஸாரை இலகுவாக இனங்காண் பதற்காக சீனாவில் தாம் அணியும் சீருடைகளையே …

  8. அரசியலில் பாலியல் துன்புறுத்தலுக்கு எதிராக பிரெஞ்சு பெண் அமைச்சர்கள் போர்க்கொடி பிரெஞ்சு அரசியலில் பெண்களுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல்கள் நீடிப்பதாக முன்னாள் பெண் அமைச்சர்கள் கூட்டாக குற்றச்சாட்டு பிரெஞ்சு அரசியலில் பெண்கள் மீதான பாலியல் துன்புறுத்தல்களை இனியும் தாங்கள் மவுனமாக சகித்துக்கொள்ள மாட்டோம் என்று பிரான்ஸின் முன்னாள் அமைச்சர்கள் பதினேழுபேர் கூட்டு பிரகடனம் ஒன்றை வெளியிட்டுள்ளனர். பல்வேறு கட்சிகளைச் சார்ந்த இந்த பதினேழு முன்னாள் அமைச்சர்களும் பெண்கள். ஆண்களின் ஏகபோக கோட்டையாக இருந்துவந்த அரசியலில் தாங்கள் அனைவரும் பாலியல்ரீதியிலான ஒதுக்கல், புறக்கணிப்புகள், சீண்டல்கள் உள்ளிட்ட பல்வேறுவகையான பாலியல் துன்புறுத்தல…

  9. இந்து கோயிலில் லண்டன் முஸ்லிம் மேயர் வழிபாடு சுவாமி நாராயண் கோயிலில் வழிபாடு நடத்திய லண்டன் மேயர் சாதிக் கான். பிரிட்டன் தலைநகரான லண்டனின் புதிய மேயராக சமீபத்தில் பொறுப்பேற்றுக்கொண்ட முஸ்லிம் மேயர் சாதிக் கான், புகழ்பெற்ற சுவாமி நாராயண் கோயிலுக்குச் சென்று வழிபாடு செய்தார். இதுதொடர்பான படங்கள் சமூக இணையதளங்களில் வேகமாக பரவி வருகிறது. லண்டனின் நாஸ்டென் பகுதியில் உள்ள புகழ்பெற்ற இந்தக் கோயிலுக் குச் சென்ற கான், அங்கு நடைபெற்ற சில சடங்குகளிலும் பங்கேற்றார். அங்குள்ள பொதுமக்களுடன் உரை யாடுவது மற்றும் கோயில் பூஜாரி ஒருவர் இவரது கையில் கயிறு கட்டுவது போன்ற புகைப்படங்கள் சமூக வலைதளங் களில் பகிரப்பட்டு வருகின்றன. இது…

  10. ரஷ்ய விளையாட்டுத்துறை ஊக்க மருந்து மோசடி: அமைச்சர் மன்னிப்பு கோரினார் மன்னிப்பு கோரியுள்ள ரஷ்ய விளையாட்டுத்துறை அமைச்சர் விட்டாலி முக்டோ ரஷ்யாவில் விளையாட்டுத்துறையில் இடம்பெற்ற ஊக்க மருந்து மோசடிகளுக்காக அந்த துறைக்கு பொறுப்பான அமைச்சர் மன்னிப்பு கோரியுள்ளார். ஊக்க மருந்து பயன்பாடு மோசடி காரணமாக, இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் பிரேசிலின் ரியோ டி ஜெனீரோவில் நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டிகளில் பங்குபெற தடைவிதிக்கப்படலாம் எனக் கருதப்படுகிறது. பிரிட்டனிலிருந்து வெளியாகும் சண்டே டைம்ஸ் பத்திரிகையில் எழுதியுள்ள விட்டாலி முக்டோ, மிக மோசமான தவறுகள் நடைபெற்றுள்ளன என்றும் இந்த மோசடிகள் ரஷ்யாவுக்கு அவமானத்தை ஏற்படுத்தியுள்ளது எனக் கூறியுள்ளார். ஆனால் இதில் ரஷ்…

  11. ஐஎஸ் அமைப்பில் சேர முயன்றதாக 5 ஆஸ்திரேலியர் மீது தீவிரவாத வழக்கு ஐஎஸ் அமைப்பில் சேர முயன்றவர்கள் பயணித்த படகு என்று காவல்துறை வெளியிட்டுள்ள படம் இஸ்லாமிய அரசு என்று தன்னை அழைத்துக்கொள்ளும் அமைப்பில் சேரமுயன்றதற்காக ஐந்து ஆஸ்திரேலிய ஆண்கள் மீது பயங்கரவாத குற்றங்கள் சுமத்தப்பட்டுள்ளதாக ஆஸ்திரேலிய காவல்துறை அறிவித்துள்ளது. ஆஸ்திரேலியாவிலிருந்து சிறு மீன்பிடி படகு மூலம் இந்தோனேஷியா சென்று அங்கிருந்து சிரியாவில் இருக்கும் இஸ்லாமிய தீவிரவாதக் குழுவில் சேர இவர்கள் முயன்றதாக காவல்துறை குற்றம் சுமத்தியுள்ளது. இந்த ஐவரும் சென்ற வாரம் செவ்வாய்க்கிழமையன்று கைது செய்யப்பட்டனர். மெல்போர்னிலிருந்து ஏழுமீட்டர் நீளமுள்ள இந்த படகைச் செலுத்தியபடி சுமர…

  12. ஜேர்மனில் முதல் முறையாக இஸ்லாமியப் பெண் சபாநாயகராக தெரிவு ஜேர்மன் நாட்டின் மாகாண பாராளுமன்ற வரலாற்றில் முதன் முதலாக இஸ்லாமியப் பெண் ஒருவர் சபாநாயகராக தெரிவு செய்யப்பட்டுள்ளார். இஸ்லாமியரான முத்ரீம் ஆர்ஸ் என்ற 50 வயதுடைய பெண்ணே, படீன் - வுட்டம்பேர்க் (baden württemberg) மாகாண பாராளுமன்றத்தின் சபாநாயகராக தெரிவு செய்யப்பட்டுள்ளார். இதன் மூலம், ஜேர்மன் மாகாணங்களில் உள்ள பாராளுமன்ற வரலாற்றில் ஒரு இஸ்லாமியர் சபாநாயகராக தெரிவாகியுள்ளது இதுவே முதல் தடவையாகும். முத்ரீம் ஆர்ஸ் பொருளாதாரத்தில் பட்டம் பெற்றவர். இவரது பெற்றோர் துருக்கி நாட்டிலிருந்து ஜேர்மனியிலுள்ள ஸ்டட்கர்ட் (stuttgart) நகருக்கு குடிபெயர்ந்துள்ளத…

  13. வங்கதேசத்தில் பலத்த மழை: மின்னல் பாய்ந்து 42 பேர் பலி வங்கதேசத்தில் டாக்கா உள்ளிட்ட 14 மாவட்டங்களில் ‘நார்வெஸ்டர்’ புயலுடன் கூடிய மழை பெய்ததில், மின்னல் பாய்ந்து பெண்கள், குழந் தைகள் உட்பட 42 பேர் பலியாகினர். அதிகபட்சமாக வடமேற்கு பாப்னா வில் 8 பேரும், சிரஜ்கஞ்ச் மற்றும் ராஜ்ஷாகி மாவட்டங்களில் தலா 5 பேரும் மின்னல் பாய்ந்து இறந்தனர். கிஷோர்கஞ்ச் மற்றும் பிரம்மன்பாரியா மாவட்டங்களல் தலா 4 பேர் மின்னலுக்கு பலியாகினர். டாக்காவில் மழையில் நனைந்த படி கால்பந்து விளையாடிக் கொண்டி ருந்த 2 பொறியியல் மாணவர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் பல்வேறு இடங்களில் 7 பேர் பலியான தாக, அதிகாரிகள் தெரிவித்தனர். கடுமையான வெயிலு…

  14. உகண்டா ஜனாதிபதி பதவியேற்பில் மஹிந்த முன்னாள் ஜனாதிபதியும் குருணாகல் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான மஹிந்த ராஜபக்ஷ உகண்டா ஜனாதிபதியின் பதவியேற்பு விழாவில் கலந்து கொள்ள கடந்த செவ்வாய்க்கிழமை உகண்டா சென்றிருந்தார். இந்நிலையில் நேற்று இடம்பெற்ற பதவியேற்ப்பு நிகழ்வில் அந்நாட்டு சமூக வலையத்தளங்களுக்கு தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. http://www.virakesari.lk/article/6339

  15. பாக்.கில் சொகுசு வாழ்க்கை வாழும் தாவூத்: ஆதாரத்துடன் வீடியோ வெளியீடு! புதுடெல்லி: நிழலுலக தாதா தாவூத் இப்ராகிம், பாகிஸ்தானில் சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வருவதாக ஆதாரத்துடன் செய்தி வெளியாகியுள்ளது. டெல்லியை தலைமையிடமாகக் கொண்ட பிரபல தனியார் தொலைக்காட்சி நிறுவனம் ஒன்று, தாவூத் இப்ராகிம் குறித்து ரகசிய புலனாய்வு மேற்கொண்டது. இதில், தாவூத் இருக்கும் இடம் உள்ளிட்ட பல்வேறு தகவல்களை அவை சேகரித்துள்ளது. இது தொடர்பான வீடியோவை அந்த தொலைக்காட்சி நிறுவனம் தற்போது வெளியிட்டுள்ளது. அதில், நிழலுலக தாதா தாவூத் இப்ராகிம், பாகிஸ்தானின் கராச்சி நகரில், D 13, Block 4, Clifton என்ற முகவரியில் வாழ்ந்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அவரது வீட்டைச் சுற்றி…

  16. இன்றைய நிகழ்ச்சியில் * மத்திய தரைக்கடலில் மனிதக்கடத்தலை தடுப்பதற்கான நடவடிக்கையில் ஐரோப்பிய ஒன்றியம் தோற்றுவிட்டதாக பிரிட்டிஷ் நாடாளுமன்றக் குழு விமர்சனம்; லிபிய கரையோரம் மேலும் குடியேறிகள் மீட்பு. * பெருமளவு பங்குகளை விற்கும் சவுதி அரசின் பெட்ரோலிய நிறுவனம்; அரம்கோ நிறுவனத்துக்கு செல்ல பிபிசிக்கு அரிய வாய்ப்பு. * மருந்துக்கு தாக்குப் பிடிக்கக்கூடிய காச நோய்க்கு எதிரான போராட்டம்; நோயில் இருந்து தப்பிய கென்ய நோயாளியை சந்தித்தது பிபிசி. ஆகிய செய்திகள் இடம்பெறுகின்றன.

  17. சிரியாவில் ஹிஸ்புல்லா தளபதி கொல்லப்பட்டார் இஸ்ரேலினால் இந்த வாரம் சிரியாவில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் உயர் ஹிஸ்புல்லா தளபதியான முஸ்தபா பட்ரெட்டினே கொல்லப்பட்டதாக லெபனானிய ஷியா குழுவான ஹிஸ்புல்லா தெரிவித்துள்ளது. 1982ஆம் ஆண்டு தொடக்கம், இஸ்லாமிய தடுப்பாற்றலின் பெரும்பாலான நடவடிக்கையில் பட்ரெட்டினே பங்கேற்றதாக, அவரின் மரணத்தை அறிவிக்கும் இன்று வெள்ளிக்கிழமை (13) வெளியான அறிக்கையில் தெரிவித்துள்ள ஹிஸ்புல்லா, அவரை சிறந்த ஜிஹாதி தலைவராக வர்ணித்துள்ளது. 55 வயதான பட்ரெட்டினே, ஹிஸ்புல்லாவின் உயர் மட்ட அதிகாரி என்பதோடு, சிரிய ஜனாதிபதி பஷார் அல்-அசாட்டோடு இணைந்து மோதலில் ஈடுபடும் ஹிஸ்புல்லாவின் இராணுவ நடவடிக்கைகளுக்கு பொறுப்பான…

  18. மொரி­ஷியஸ், தென் ஆபி­ரிக்­காவில் கண்­டெ­டுக்­கப்­பட்ட இரு சிதை­வுகள் எம்.எச்.370 விமா­னத்­திற்­கு­ரி­யவை மொரி­ஷியஸ் தீவு மற்றும் தென் ஆபி­ரிக்கக் கடற்­க­ரை­களில் கண்­டெ­டுக்­கப்­பட்ட இரு விமான சிதை­வுகள் காணா­மல்­போன மலே­சிய எம்.எச். 370 விமா­னத்தின் சிதை­வுகள் என பெரும்­பாலும் நிச்­ச­ய­மா­கி­யுள்­ள­தாக மலே­சிய மற்றும் அவுஸ்­தி­ரே­லிய அதி­கா­ரிகள் நேற்று வியா­ழக்­கி­ழமை தெரி­வித்­தனர். மேற்­படி விமா­ன­மா­னது 2014 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 239 பேருடன் கோலா­ லம்பூர் நக­ரி­லி­ருந்து பீஜிங் நக­ருக்கு பய­ணித்த வேளை காணா­மல்­போ­னது. இத­னை­ய­டுத்து அந்த விமா­னத்தைக் கண்­டு­பி­டிக்கும் முக­­மாக தென் இந்து சமுத்­தி­ரத்தில் 120,000 சதுர கிலோ­மீற்றர் பரப்ப…

  19. இன்றைய நிகழ்ச்சியில் * ஊழலுக்கு எதிரான லண்டன் ஒன்றுகூடல்; பிரிட்டிஷ் அரசின் மாநாட்டில் குழுமும் உலகத்தலைவர்கள், நிதிமேலாளர்கள், ஊழல் எதிர்ப்பு செயற்பாட்டாளர்கள். * இராக்கின் ஃபலுஜா நகரில் பட்டினிச் சாவுகள்; முற்றுகையில் இருக்கும் நகருக்குள் சென்ற பிபிசி குழுவின் பிரத்யேகத் தகவல்கள். * வடகொரியாவில் முதலில் அணிவகுப்பு, பிறகு அரசியல் இறுதியில் பாப் இசை; பெண்கள் பாப் குழுவின் இசையுடன் முடிவுக்கு வரும் வடகொரிய அரசியல் மாநாடு ஆகிய செய்திகள் இடம்பெறுகின்றன.

  20. 'முஸ்லிம்களுக்கு தடை' வெறும் யோசனை மட்டுமே: ட்ரம்ப் பல்டி டொனால்டு ட்ரம்ப். | படம்: ஏ.பி. அமெரிக்காவுக்குள் நுழைய முஸ்லிம்களுக்கு தடை விதிப்பது என்பது வெறும் யோசனை மட்டுமே என அமெரிக்காவின் குடியரசு கட்சியின் அதிபர் வேட்பாளர் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். முன்னதாக கடந்த டிசம்பர் மாதம் பிரச்சாரம் மேற்கொண்ட டொனால்ட் ட்ரம்ப் அமெரிக்காவுக்குள் முஸ்லிம்கள் நுழைவதற்கு தடை விதிக்கப்படும் என கூறினார். இது சர்வதேச அளவில் பெரும் விமர்சனத்தை ஏற்படுத்தியது. இந்நிலையில், பாக்ஸ் ரேடியோவுக்கு ட்ரம்ப் அளித்த பேட்டியில், "முஸ்லிகள் அடிப்படைவாத பயங்கரவாதம் என்பது அதிமுக்கிய பிரச்சினை. அதை கட்டுப்படுத்துவதற்காக அமெரிக்காவுக்குள…

  21. வடகொரிய ஆளுங் கட்சி கூட்ட பூர்த்தியையொட்டி மெழுகுவர்த்திகளை ஏந்தி நடனமாடிய மக்கள் வட கொரிய ஆளுங் கட்­சியின் 4 நாள் கூட்டம் பூர்த்­தி­யா­னதைக் கொண்­டாடும் வகையில் செவ்­வாய்க்­கி­ழமை இரவு அந்­நாட்டின் தலை­ந­க­ரி­லுள்ள கிம் இல் – சங் சதுக்­கத்தில் பல்­லா­யி­ரக்­க­ணக்­கான மக்கள் மெழு­கு­வர்த்­தி­களை ஏந்தி நட­ன­மா­டினர். அந்­நாட்டின் தலைவர் கிம் யொங் – உன் கூடி­யி­ருந்த கூட்­டத்தின் முன்­பாகத் தோன்றி கையை அசைக்­கவும் மக்கள் மகிழ்ச்சி ஆர­வாரம் செய்­தனர். இதன்­போது 'கொரிய தொழி­லாளர் கட்­சியின் 7 ஆவது கூட் டம் நீடூழி வாழ்க' என பொருள்­ படும் வாச­கத்தைக் கொண்ட இராட்­சத கொடி காட்­சிப்ப­டுத்தப்பட்­டது. அத்­துடன் அந்­நாட்டில் 1980 ஆம் ஆண்­டுக்குப் பின் மு…

  22. பெண் செய்தியாளரிடம் வரம்புமீறிய பிரெஞ்ச் நிதி அமைச்சர் பென் செய்தியாளர் ஒருவரிடம் தகாத முறையில் நடந்துகொண்டதற்காக பிரான்ஸின் நிதியமைச்சர் மிஷேல் சபா(ன்)ங் மன்னிப்பு கோரியுள்ளார். பிரெஞ்ச் நிதியமைச்சர் மிஷேல் சபா(ன்)ங்-(இடது) எனினும் அவரை துன்புறுத்தியதானக் குற்றச்சாட்டை அமைச்சர் மறுத்துள்ளார். மாநாடு ஒன்றில், அந்தப் பெண் செய்தியாளரின் உள்ளடை எலாஸ்டிக்கை தான் பிடித்து இழுக்கவில்லை எனக் கூறியுள்ள சபா(ன்)ங், எனினும் அவரது உடை குறித்து பேசி அவரது பின்புறத்தை தொட்டதை ஒப்புக் கொண்டார். பிரெஞ்ச் நாடாளுமன்றத்திலுள்ள பசுமைக் கட்சியின் எட்டு பெண் உறுப்பினர்கள், துணை சபாநாயகர் டெனி போபான், தங்களை பாலியல் ரீதியாகத் தாக்கி, ஆபாசமான குறுஞ்செய்த…

  23. இன்றைய நிகழ்ச்சியில் * சீன அதிகாரிகள் மரியாதை இல்லாமல் நடப்பவர்கள்'' என்கிற பிரிட்டிஷ் அரசியின் கருத்தை ஒளிபரப்பிய போது சீனாவில் பிபிசி தொலைக்காட்சி இருட்டடிப்பு செய்யப்பட்டது! * அடையாளம் இடப்படாத நூற்றுக்கணக்கான அகதிகளின் கல்லறைகள்; ஐரோப்பாவுக்கான பயணம் அவர்களுக்கு கைகூடவில்லை என்பதன் அடையாளம் இவை! * ஆழக்கடலின் மடியில் அழகான பொக்கிஷம்; நேரடியாக படம்பிடித்து ஒளிபரப்பிய நீர்மூழ்கி ஆகிய செய்திகள் இடம்பெறுகின்றன.

  24. இராக்கில் கார் குண்டுவெடிப்பில் அறுபதுக்கும் அதிகமானவர்கள் பலி இராக்கில் கார் குண்டு வெடித்த இடம் இராக்கின் கிழக்கு பாக்தாதில் மக்கள் நடமாட்டம் மிகுந்த சந்தைப்பகுதியில் நடந்த கார் குண்டுவெடிப்பில் அறுபதுக்கும் அதிகமானவர்கள் கொல்லப்பட்டனர். பலர் காயமடைந்தனர். இராக்கில் நடந்த மிக மோசமான குண்டுத் தாக்குதல்களில் ஒன்றாக இது பார்க்கப்படுகிறது. ஷியா முஸ்லிம்கள் அதிகம் வசிக்கும் சத்ர் மாவட்டத்தில் காலை நேரத்தில் இந்த தாக்குதல் நடந்துள்ளது. இந்த தாக்குதலைத் தாமே நடத்தியதாக இஸ்லாமிய அரசு என்று தன்னை அழைத்துக்கொள்ளும் அமைப்பு உரிமை கோரியுள்ளது. ஷியாக்களை விரோதிகளாகக் கருதும் இந்த அமைப்பு அடிக்கடி அவர்கள் அதிகமாக வாழும் பகுதிகளில் குண்டுத்தாக்குதல்களை நட…

  25. இத்தாலியில் பிறந்திருந்தாலும் எனது கடைசி மூச்சு இந்திய மண்ணில் தான் இருக்கும் என காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி உருக்கமாக பேசியுள்ளார். கேரளாவில் பிரச்சாரம் றேம்கொண்ட சோனியாகாந்தி திருச்சூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசினார். அப்போது இத்தாலியில் சோனியாவுக்கு உறவினர்கள் இருப்பதாக தமிழக பிரச்சாரத்தில் பிரதமர் மோடி கேலி செய்ததை கடுமையாக விமர்சித்தார். இத்தாலியில் பிறந்ததற்காக நான் வெட்கப்படவில்லை என்று கூறிய அவர், நான் அங்கு பிறந்ததால் உறவினர்கள் இருக்க தான் செய்வார்கள் என்றார். 1968-ம் ஆண்டு இந்திராகாந்தியின் மருமகளாக இந்தியா வந்ததாக சோனியாகாந்தி கூறினார். இது போன்ற விவரங்களை வெளிப்படையாக பேசியதில்லை என்றாலும் ஆர்.எஸ்.எஸ். மற்றும் பாஜக தலைவர்கள் இத்தாலியில் தான் பிறந்ததத…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.