உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26701 topics in this forum
-
கர்நாடக மாநிலம் துமகூரு மாவட்டம் பாவகடா தாலுகாவை சேர்ந்தவர் ரகுராம் (23). சிக்கநாயக்கனஹள்ளியை சேர்ந்தவர் ரம்யா (20). காதலர்களான இருவரும் ஒரே நிறுவனத்தில் வேலை பார்த்து வருகின்றனர். இவர்கள் கடந்த வாரம் விடுமுறை நாளில் சித்ரபெட்டா வனப்பகுதிக்கு சென்று தனிமையில் இருந்துள்ளனர். இதை அந்த வழியாக வந்த வாலிபர் ஒருவர் பார்த்தார். அவர் தன்னை வனத்துறை அதிகாரி என்று கூறி அவர்களை நிர்வாணபடுத்தியுள்ளார். பின் அந்தப் பெண்ணை பலாத்காரம் செய்ய முயன்றுள்ளார். அந்தப் பெண் சினிமா பாணியில் காலால் அவரது மர்ம உறுப்பில் எட்டி உதைத்தார். இதில் காயமடைந்த அவர், இருவரையும் பழிவாங்கும் நோக்கில், அவர்களது ஆடைகள் மற்றும் செல்போனை எடுத்து கொண்டு அங்கிருந்து தப்பியோடிவிட்டார…
-
- 2 replies
- 696 views
-
-
தாலிபான் முன்னாள் தலைவர் முல்லா ஒமரின் மகனுக்கு புதிய தளபதி பதவி ஆஃப்கன் தாலிபான் அமைப்பின் முன்னாள் தலைவர் முல்லா ஒமரின் மூத்த மகன் மொஹ்மத் யாகூப்புக்கு அந்த அமைப்பில் புதிய உயர் பதவி வழங்கப்பட்டுள்ளதாக அங்கிருந்துவரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த ஆண்டு முல்லா ஒமாரின் மரணம் அறிவிக்கப்பட்டதை அடுத்து ஒமார் குடும்பத்தாருக்கும், புதிய தாலிபான் தலைவர் முல்லா அக்தர் மன்சூருக்கும் இடையில்அதிகாரத்துக்கான சண்டை நிலவி வந்தது ஆப்கானிஸ்தானின் கிட்டத்தட்ட பாதி பிராந்தியங்களின் இராணுவ நடவடிக்கைகளின் புதிய தளபதியாக யாகூப் நியமிக்கப்பட்டுள்ளார். தாலிபானின் உயர்மட்ட அரசியல் குழுவான் ரெஹ்பாரி ஷுராவும், முல்லா ஒமரின் சகோதரரும்தான் இவரை இந்த பதவிக்கு நியம…
-
- 0 replies
- 538 views
-
-
இன்றைய நிகழ்ச்சியில் பணக்கார ஊழல்வாதிகளின் ரகசியங்கள்-- கசிந்துள்ள பதினொரு மில்லியன் ஆவணங்கள் முன்னாள் மற்றும் இந்நாள் உலகத் தலைவர்களின் ரகசிய வெளிநாட்டு நிதிக்கணக்குகளை தொடர்புபடுத்துவது குறித்த விவரங்கள்; மூடப்படும் ஐரோப்பாவின் கதவுகள்- கடும் விமர்சனங்களுக்கு நடுவே சர்ச்சைக்குரிய ஐரோப்பிய ஒன்றிய திட்டத்தின் கீழ் நூற்றுக்கும் அதிகமான குடியேறிகள் கிரேக்கத்திலிருநது துருக்கிக்கு அனுப்பப்பட்டிருப்பது குறித்த செய்திகள்; இந்தோனேஷியாவின் சுமாத்ரான் புலிகளை பராமரிக்கும் வித்தியாசமான பெண் விலங்கு மருத்துவரின் கதை ஆகியவற்றைக் காணலாம்.
-
- 0 replies
- 343 views
-
-
சவுதி அரேபியாவில் இந்திய பணியாட்களுடன் அமர்ந்து சாப்பிட்ட மோடி ! சுற்றுப் பயணத்திற்கு வேறு ஒரு ஒரு பெயர் வைக்க வேண்டும் என்கிற நிலை வந்தால் அதற்கு "மோடி" என்ற வார்த்தை பொருத்தமாக இருக்கும். மோடியின் அயல் நாட்டு சுற்றுப் பயணத்தை எதிர்கட்சிகள் பலவாறு விமர்சனம் செய்கின்றனர் " நாட்டின் தொழில் வளர்ச்சிக்காகவும், இரு நாடுகளின் உறவு மேம்படவும் அயராது பயணம் செய்து கொண்டே இருக்கிறார்" என்றும், "அட. அவரு சும்மா ஊரு ஊரா ஜாலியா சுத்துறாருப்பா" என்றும் மோடியின் வெளிநாடு பயணம் குறித்து இருவேறு கருத்துக்கள் பேசப்படுகின்றன. ஆனால், நம் பிரதமர் அதையெல்லாம் காதில் வாங்கிக் கொள்பவராக இல்லை. வீடு விட்டால் ஏர்போர்ட் ....ஏர்போர்ட் விட்டால் வீடு என்று சுழன்று கொண்டே இருக்கிறார். …
-
- 0 replies
- 599 views
-
-
முஸ்லிம் பெண்ணை புகைப்படமெடுத்த செயற்பாட்டாளர் பெல்ஜியத்தின் பிரஸல்ஸ் நகரில் இஸ்லாத்துக்கு எதிராக நடத்தப்பட்ட ஊர்வலமொன்றின் போது அந்நாட்டு வலதுசாரி செயற்பாட்டாளர் ஒருவர், முஸ்லிம் பெண்ணொருவரை சனிக்கிழமை காரால் மோதிச் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேற்படி சம்பவம் தொடர்பான அதிர்ச்சியூட்டும் காணொளிக் காட்சிகள் இணையத்தளங்களில் வெளியிடப்பட்டுள்ளன. பிரஸல்ஸ் நகரிலுள்ள விமான நிலையம் மற்றும் புகையிரத நிலையம் என்பவற்றின் மீது கடந்த மார்ச் மாதம் 22 ஆம் திகதி ஐ.எஸ். தீவிரவாதிகளால் நடத்தப்பட்ட தாக்குதல்களையடுத்து அந்நாட்டில் முஸ்லிம்களுக்கு எதிரான எண்ணப் போக்குகள்…
-
- 0 replies
- 609 views
-
-
பிரித்தானியாவில் அகதிகளுக்கு எதிரான பேரணியின் போது வன்முறையில் ஈடுபட முயன்றவர்களை பொலிசார் கைது செய்தனர். பிரித்தானியாவுக்கு அதிகளவு வரும் அகதிகளை கட்டுப்படுத்த முடியாமல் அந்நாடு தவித்து வருகிறது. அகதிகள் வருகையை கட்டுப்படுத்த வேண்டுமென்றால் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா விலக வேண்டும் என்று பலரும் கோரிக்கை வைத்து வருகின்றனர். இந்நிலையில் பிரித்தானியாவின் கெண்டில் அமைந்துள்ள கடற்கரை நகரமான டோவரில் அகதிகளுக்கு எதிராகவும் ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு எதிராகவும் நியோ நாசிக் ஆதரவு வலதுசாரிகள் பேரணி மேற்கொண்டனர். அதேவேளையில் அவர்களுக்கு எதிர்ப்பு தெரிவித்தும் அகதிகளுக்கு ஆதரவாகவும் கெண்ட் இனவெறி எதிர்ப்பு அமைப்பினர் பேரணி நடத்தி…
-
- 0 replies
- 534 views
-
-
மொரீஷியஸ் கடற்பகுதியில் காணாமல் போன மலேசிய விமானத்தின் பாகம்? இந்தியப் பெருங்கடலில் இருக்கும் மொரீஷியஸ் தீவின் கடற்பகுதியில் கண்கெடுக்கப்பட்ட உலோகப் பகுதி ஒன்றை ஆஸ்திரேலிய அதிகாரிகள் பரிசோதிக்கவுள்ளனர். எம் எச் 370 விமானத்தை தேடும் பணி தொடருகிறது அந்த உலகோகப் பகுதி இரண்டு ஆடுகளுக்கு முன்னர் காணாமல் போன மலேசிய விமானம் எம் எச் 370ன் ஒரு பகுதியா என்பதை அதிகாரிகள் ஆராய்வார்கள். இதேவேளை கிழக்கு ஆப்ரிக்க கடற்பகுதியில் கிடைக்கப்பெற்ற இரண்டு விமானத் துண்டுகள் காணாமல் போன அந்த விமானத்துடையதே என்பதை தாங்கள் கிட்டத்தட்ட உறுதியாக நம்புவதாக கடந்த மாதம் விசாரணையாளர்கள் தெரிவித்திருந்தனர். காணமால் போன அந்த விமானத்தை இந்தியப் பெருங்கடலின…
-
- 0 replies
- 450 views
-
-
தாக்கியவரை மன்னித்தார் பார்வையற்ற 103 வயது மூதாட்டி தள்ளாத வயதில் இருந்த தன்னைத் தாக்கி பொருட்களைப் பறித்துக் கொண்டவர்களை அமெரிக்காவில் வாழும் 103 வயது மூதாட்டி ஒருவர் மன்னித்துள்ளார். நியூ யார்க் நகரில் முதியோர்கள் மீது தாக்குதல் அதிகரித்து வருவது குறித்து கவலைகள் நியூ யார்க் நகரில் வாழ்ந்து வரும் கண்பார்வை இல்லாத லூயிஸ் சிக்னோர் அம்மையார் கடைக்குச் சென்று பொருட்களை வாங்கிவந்தபோது அவரது வீட்டுவாசலில் தாக்கப்பட்டார். அவரைத் தாக்கியவர்கள் அவரைக் காயப்படுத்தியதுடன், அவரிடம் இருந்த பொருட்களையும் களவாடிச் சென்றனர். எனினும் இச்சம்பவத்துக்கு பிறகும் தனது வாழ்க்கை முன்னரைப் போலவே இயல்பாகக் கொண்டுச் செல்லவுள்ளதாக லூயிஸ் சிக்னோர் அம்மையார் கூற…
-
- 0 replies
- 322 views
-
-
அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசுக் கட்சி வேட்பாளராக போட்டியிட ஆதரவு திரட்டிவரும் பிரபல தொழிலதிபரான டொனால்ட் டிரம்ப், அமெரிக்காவின் தற்போதைய அதிபர் பராக் ஒபாமாவின் வெளியுறவுக் கொள்கையை தாறுமாறாக விமர்சித்து வருகிறார்.ஜப்பானும், கொரியாவும் தங்களது அணு ஆயுத உற்பத்தியை பெருக்கிக் கொள்வது தொடர்பாக ஆலோசனை செய்ய வேண்டும் என சமீபத்தில் குறிப்பிட்ட டிரம்ப், சர்வதேச அணு ஆயுத எதிர்ப்பாளர்கள் மத்தியில் அதிருப்தியை தேடிக் கொண்டார்.தற்போது, வடக்கு பசிபிக் பகுதியில் உள்ள 28 நாடுகளை சேர்ந்த அமைப்பான ‘நேட்டோ’ மீது சீறிப்பாய்ந்துள்ள டிரம்ப், இந்த அமைப்பே ’வீண்’ என்று குறிப்பிட்டுள்ளார். விஸ்கான்சின் மாநிலத்தில் ஆதரவு திரட்டிய அவர், முன்னர் செய்த குறைபாடுகளுக்கு அவர்கள் (நேட்டோ அமைப்பில் …
-
- 0 replies
- 599 views
-
-
துருக்கியில் இடம்பெற்ற குண்டுத் தாக்குதல்களில் ஆறு பேர் கொல்லப்பட்டுள்ளனர். துருக்கியின் தென் கிழக்கு மாகாணத்தில் இந்த குண்டு வெடிப்புச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. தாக்குதல் சம்பவத்தில் ஐந்து துருக்கிப் படையினரும் ஒரு காவல்துறை உத்தியோகத்தரும் கொல்லப்பட்டுள்ளனர். துருக்கியின் கிளர்ச்சிக் குழுவான பீ.கே.கே. என்ற அமைப்பு இந்த குண்டுத் தாக்குதல்களை நடத்தியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இரண்டு தினங்களுக்கு முன்னர் நடத்தப்பட்ட குண்டுத் தாக்குதல்களில் ஏழு காவல்துறையினர் கொல்லப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. http://globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/130713/language/ta-IN/article.aspx
-
- 0 replies
- 343 views
-
-
பல்மைரா நகரில் மனிதப் புதைகுழி கண்டுபிடிப்பு சிரியாவின் பல்மைரா நகரில் பெரிய புதைகுழி ஒன்றை தாம் கண்டுபித்துள்ளதாகவும் அதில் கிட்டத்தட்ட 40 சடலங்கள் உள்ளதாகவும் சிரியாவின் அரச படையினர் தெரிவித்துள்ளனர். சிரியப் படையினர் பல்மைரா நகரை மீள கைப்பற்றியுள்ளனர் பல்மைரா நகரம் இஸ்லாமிய அரசு என்றுத் தம்மைக் கூறிக்கொள்ளும் தீவிரவாதிகளிடமிருந்து இந்த வாரத்தின் முற்பகுதியில் அரசப் படைகளால் மீட்கப்பட்டது. இந்தப் புதைகுழியில் இருந்த சில சடலங்களின் தலை துண்டிக்கப்பட்ட நிலையில் உள்ளதுடன் பெண்கள் மற்றும் பிள்ளைகளின் உடல் எச்சங்களும் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பல்மைரா நகரின் பண்டைய நினைவுச் சின்னங்களை ஐ.எஸ் அழித்துள்ளது கிட்டத்தட்ட ஒராண்ட…
-
- 0 replies
- 557 views
-
-
பிரான்ஸ் நாட்டின் தலைநகரான பாரீஸ் நகரில், மும்பை தாக்குதல் பாணியில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 13–ந் தேதி இரவு விளையாட்டு மைதானம், இசை அரங்கம், உணவு விடுதி என பல இடங்களில் தீவிரவாதிகள் குண்டுகளை வெடித்தும், துப்பாக்கியால் சுட்டும் அதிபயங்கர தாக்குதல்களை நடத்தினர். உலகையே அதிர்ச்சியில் ஆழ்த்திய இந்த கொடூர தாக்குதல்களில் 130 பேர் கொன்று குவிக்கப்பட்டனர். 400 பேர் காயம் அடைந்தனர். 221 பேர் மருத்துவமனைகளில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களில் 57 பேர் தீவிர சிகிச்சை பிரிவில் உள்ளனர். தாக்குதல் நடத்திய 8 தீவிரவாதிகளும் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலில் தொடர்புடைய சாலாஹ் அப்தேசலாம் ( வயது 26) பெல்ஜியத்தில் பதுங்கி இருந்த போது கைது செய்யப்பட்டு பெல்ஜியம் சிற…
-
- 3 replies
- 651 views
-
-
அயல்நாட்டுக் கொள்கைகள் பற்றி அறியாத டிரம்ப் அதிபர் ஆகலாமா? - ஒபாமா கேள்வி அமெரிக்க குடியரசுக் கட்சியின் அதிபர் வேட்பாளர் டோனல்டு டிரம்பின் அயல்நாட்டுக் கொள்கைகள் குறித்த நம்பகங்களை அதிபர் ஒபாமா கடுமையாகக் கேள்விக்குட்படுத்தியுள்ளார். வாஷிங்டனில் வெள்ளிக்கிழமை நிறைவடைந்த அணுப்பாதுகாப்பு மாநாட்டுக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அதிபர் ஒபாமா, “அறிக்கைகளாக விட்டுக் கொண்டிருக்கும் அந்த நபருக்கு (டிரம்ப்) அயல்நாட்டுக் கொள்கை அல்லது அணுக்கொள்கை, அல்லது கொரியா, அல்லது உலகத்தைப் பற்றியே கூட எதுவும் தெரியாது என்று கூறுகின்றனர். நான் ஏற்கெனவே கூறியது போல் அமெரிக்க தேர்தல்களை உலக நாடுகள் ஆர்வத்துடன் பின் தொடர்ந்து வருகின்றன, நாம் என்ன செ…
-
- 0 replies
- 406 views
-
-
பிபிசி தமிழ்த் தொலைக்காட்சி செய்திகள் துவங்கி இன்றோடு ஓராண்டு நிறைவு செய்கிறோம். உங்கள் தொடர்ச்சியான ஆதரவுக்கு நன்றி. இன்றைய நிகழ்ச்சியில் மீட்கப்பட்ட பல்மைரா நகரில் மிஞ்சியிருப்பது என்ன? இரண்டாயிரம் ஆண்டு பழமையான பல்மைரா நகருக்குச் சென்ற பிபிசி செய்தியாளர் குழு தரும் பிரத்யேக நேரடித் தகவல்கள்; ஒரு பக்கம் உலகத் தலைவர்கள் ஒன்றுகூடி அணு ஆயுத பாதுகாப்பு குறித்து விவாதித்துக்கொண்டிருக்க, இன்னொரு ஏவுகணையை கடலுக்குள் ஏவியது வடகொரியா; அடுத்து என்ன என்பதை ஆராய்கிறது பிபிசி; சூரியக் குளியலுக்கும் சொகுசான கடற்கரைக்கும் பேர் போன மொரீஷியஸ் தீவு பயணிகளை வரவேற்க புதியதொரு வசதியை உருவாக்கி வருகிறது. மருத்துவ சுற்றுலாவை வளர்க்கிறது மொரீஷியஸ் அரசு. எதிர்பார்த்த பலன் கிடைக்குமா…
-
- 0 replies
- 395 views
-
-
பரிஸில் பாரிய வெடிப்பு பிரான்ஸின் தலைநகர் பரிஸில் சற்று முன்னர் பாரிய வெடிப்பு சம்பவம் இடம்பெற்றுள்ளது. எராளமாக எரிவாயு கசிவு காரணமாக இந்த வெடிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் அதன் காரணமாக பரிஸ் நகரம் புகைமண்டலத்தால் சூழ்ந்துள்ளதாகவும் வெளிநாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன. அந்நாட்டு நேரப்படி பிற்பகல் 12.30 மணியளவில் இந்த வெடிப்பு இடம்பெற்றுள்ளதாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த வெடிப்பு சம்பவத்தில் 5 பேர் காயமடைந்துள்ளமை உறுதிசெய்யப்பட்டுள்ளதுடன் மேலும் பலர் காயமடைந்திருக்கலாம் என அஞ்சப்படுகின்றது. பரிஸ் நகரத்துக்கு செல்லும் எரிவாயு குழாயில் ஏற்பட்ட கசிவே இந்த வெடிப்புக்கு ஆரம்ப காரணம் …
-
- 2 replies
- 1.3k views
-
-
பீகாரில் கடந்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடந்த போது ஐக்கிய ஜனதா தளம் மீண்டும் ஆட்சி அமைத்தால் மதுவிலக்கு அமல்படுத்தப்படும் என்று நிதீஷ்குமார் வாக்குறுதி கொடுத்திருந்தார்.ஐக்கிய ஜனதா தளம் கூட்டணி வெற்றி பெற்று நிதீஷ்குமார் முதல்–மந்திரி பொறுப்பை ஏற்றதும் ஏப்ரல் 1–ந்தேதி முதல் மதுவிலக்கு அமல்படுத்தப்படும் என்று அறிவித்தார். அதன்படி பீகார் மாநிலத்தில் நாளை (வெள்ளிக் கிழமை) முதல் அமல்படுத்தப்பட உள்ளது. இது தொடர்பான சட்ட திருத்தம் நேற்று பீகார் மாநில சட்டசபையில் கொண்டு வரப்பட்டது.குரல் ஓட்டெடுப்பு மூலம் அந்த சட்ட திருத்தம் நிறைவேற்றப்பட்டது. இதைத் தொடர்ந்து பீகாரில் இனி யாரும் மது விற்பனை செய்யக்கூடாது என்று அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதற்கிடையே நாளை…
-
- 1 reply
- 430 views
-
-
சிரிய அகதிகளை கட்டாயப்படுத்தி திருப்பியனுப்புகிறது துருக்கி: அம்னெஸ்டி குற்றச்சாட்டு சர்வதேச சட்டங்களை மீறும் விதமாக, ஆயிரக்கணக்கான அகதிகளை சிரியாவுக்குள் கட்டாயப்படுத்தி துருக்கி அரசு அனுப்பியதாக அம்னெஸ்டி இன்டர்நேஷனல் அமைப்பு தெரிவித்துள்ளது. சிரியா அகதிகளுக்கு துருக்கி ஒரு பாதுகாப்பான இடமல்ல என்று அம்னெஸ்டி தெரிவித்துள்ளது. ஜனவரி மாத மத்தியில் இருந்து ஒவ்வொரு நாளும் கிட்டத்தட்ட நூறு சிரிய அகதிகள் திரும்ப அனுப்பப்பட்டதாக தெற்கு துருக்கியில் இருக்கும் அந்த அமைப்பின் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். ஐரோப்பிய ஒன்றியம் சமீபத்தில் துருக்கியுடன் கையெழுத்திட்ட ஒப்பந்தத்தின்படி கிரேக்க தீவுகளுக்கு வந்திறங்கும் சிரிய அகதிகளை துருக்கி திரும்ப பெற்ற…
-
- 0 replies
- 431 views
-
-
இன்றைய நிகழ்ச்சியில்… கத்தாரின் கால்பந்து உலக்கோப்பை விளையாட்டரங்கங்களைக் கட்டும் பணியாளர்கள் சுரண்டப்படுவதாக அம்னெஸ்டி குற்றச்சாட்டு; பிஃபா அமைப்பு நடவடிக்கை எடுக்கும்படி கோரிக்கை. கிழக்கு ஐரோப்பாவுக்கு ஆயிரக்கணக்கான படைகளை அனுப்பும் அமெரிக்காவுக்கு ரஷ்யா தெரிவிக்கும் எதிர்ப்பால் மோதல் முற்றுகிறது. குழந்தை சேஷ்டைகள் தெரியும்; கொரில்லாக்குட்டியின் சேஷ்டைகள் தெரியுமா? இங்கிலாந்தில் மனித அம்மாவிடம் வளரும் கொரில்லாக் குட்டியின் கதை ஆகியவற்றைக் காணலாம்.
-
- 0 replies
- 450 views
-
-
'குவாந்தனாமோ கைதிகள் வேறு நாடுகளுக்கு மாற்றப்படுவர்' தென்கிழக்கு கியூபாவில் உள்ள அமெரிக்க கடற்படை முகாமில் இந்த சிறை அமைந்துள்ளது குவாந்தனாமோ இராணுவ சிறையில் தடுத்துவைக்கப்பட்டுள்ளவர்களில் டஜன் கணக்கான கைதிகளை, அவர்களை ஏற்க இணங்கியுள்ள குறைந்தது இரண்டு நாடுகளுக்கு இடமாற்றம் செய்யவுள்ளதாக அமெரிக்க நாடாளுமன்றத்துக்கு அந்நாட்டு பாதுகாப்புத்துறை அறிவித்துள்ளது. குவாந்தனாமோ சிறையை மூடிவிடுவதற்கு அதிபர் ஒபாமா எடுத்துவரும் புதிய முயற்சிகளை இந்த அறிவிப்பு குறிப்பதாக பார்க்கப்படுகின்றது. அடுத்த சில நாட்களில் முதலாவது இடமாற்றம் நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. 2007-ம் ஆண்டிலிருந்து உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்ற யேமனிய பிரஜை ஒருவரும…
-
- 0 replies
- 376 views
-
-
`ஐ.எஸ் தலைவரின் பிரதிநிதி கொல்லப்பட்டார்' `ஐ.எஸ் தலைவரின் பிரதிநிதி கொல்லப்பட்டார்' சிரியாவின் வடக்குப் பகுதியில் உள்ள ரக்கா நகரில் மேற்கொள்ளப்பட்ட வான் தாக்குதல் ஒன்றில் இஸ்லாமிய அரசு குழுவின் மூத்த கமாண்டர் ஒருவர் கொல்லப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அபு அல்-ஹய்ஜா அல்-ருனுசி என்ற பெயரால் அவர் அறியப்பட்டவர் என தெரிவிக்கும் பிரித்தானியாவை தளமாக கொண்டு செயற்படும் மனித உரிமைகள் நிறுவனமாக சிரியா மனித உரிமைகள் கண்காணிப்பகம், அவர் ஐ எஸ் தலைவர் அபு பக்கர் அல்-பக்டாதியின் பிரதிநிதி என வர்ணித்துள்ளது. அமெரிக்கா தலைமையிலான கூட்டுப் படையினர் அவரை ஆளில்லா விமானம் மூலம் இலக்கு வைத்ததாக நம்பப்படுகிறது. இந்த அறிக்கை தொடர்பில் அமெரிக்க படையினர் இதுவரை எ…
-
- 0 replies
- 549 views
-
-
கத்தாரில் வெளிநாட்டுத் தொழிலாளர்கள் சுரண்டப்படுகின்றனர் - அம்னெஸ்டி 2022 இல் கால்பந்து உலகக் கோப்பை கத்தாரில் நடைபெற உள்ளது. கத்தாரில் 2022 இல் நடத்த திட்டமிடப்பட்டுள்ள கால்ப்பந்து உலகக்கோப்பை போட்டிகளை முன்னிட்டு அங்கு கட்டட வேலைகளில் தொழிலுக்கு அமர்த்தப்பட்டுள்ளவர்கள் திட்டமிட்ட வகையில் பரவலான துஷ்பிரயோகங்களுக்கு முகம் கொடுப்பதாக அம்னெஸ்டி இண்டர்நேஷனல் தெரிவித்துள்ளது. சில சமயங்களில் தொழிலாளர்கள் கட்டாயமாக வேலையில் ஈடுபடுத்தப்படுவதாகவும் குறித்த மனித உரிமைகள் குழு சாடியுள்ளது. கத்தாரில் வெளிநாட்டு தொழிலாளர்கள் தொழில் இடங்களில் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்து தமது கடுமையான கவலைகளை முன்னர் மனித உரிமைகள் குழு வெளியிட்டிருந்தாலும், உலகக்கோப்பை …
-
- 0 replies
- 373 views
-
-
முஸ்லிம் யுவதிகள் 15 வயதில் பிடித்தவர்களை திருமணம் செய்து கொள்ளலாம்! - டெல்லி உயர்நீதிமன்ற தீா்ப்பு! [Tuesday 2016-03-29 20:00] பருவமடைந்திருந்தால் முஸ்லிம் பெண்கள் 15 வயதில் தங்களுக்கு பிடித்தவர்களை திருமணம் செய்து கொள்ளலாம் என்று டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 16 வயது மகளை பையன் வீட்டார் 2012 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் கடத்திச் சென்று கட்டாயத் திருமணம் செய்து வைத்ததாகவும், தங்கள் மகளை தங்களுடனேயே அனுப்பி வைக்குமாறும் கோரி பெண்ணுடைய பெற்றோர்கள் டெல்லி உயர்நீதிமன்றத்தில் ஹேபியஸ் கார்பஸ் எனும் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தனர். இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் எஸ். ரவீந்திர பட் மற்றும் எஸ்.பி.கார்க் ஆட்கொணர்வு மனுவை தள்ளுபடி செய்தனர். …
-
- 2 replies
- 861 views
-
-
துபாய், துபாய் விமான நிலையத்தை பயன்படுத்தும் பயணிகளுக்கு சேவை கட்டணம் வசூலிக்க துபாய் பட்டத்து இளவரசரும், துபாய் நிர்வாக கவுன்சில் தலைவருமான மேதகு ஷேக் ஹம்தான் பின் முகம்மது பின் ராஷித் அல் மக்தூம் அனுமதி அளித்துள்ளார். இந்த தீர்மானம் எண் 8/2016 துபாய் நிர்வாக கவுன்சில் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டது. இதன்படி துபாயில் உள்ள அனைத்து விமான நிலையங்களையும் பயன்படுத்தும் பயணிகள் ஒவ்வொருவரும் 35 திர்ஹாம் கட்டணமாக செலுத்த வேண்டும். (இந்திய மதிப்பில் ரூ.631 வரை) இந்த புதிய கட்டணம் வரும் ஜூன் 30–ந் தேதி முதல் நடைமுறைக்கு வரும். இதன் மூலம் துபாய் விமான நிலையங்களின் உள்கட்டமைப்பு பணிகள் மேலும் மேம்படுவதற்கு உதவியாக இருக்கும். வருகிற 2023–ம் ஆண்டுக்குள் 100 மில்லியன் பய…
-
- 0 replies
- 508 views
-
-
ஆன்சான் சூ கீகிக்கு பிரதமருக்கு நிகரான பதவி- மியன்மார் ஜனநாயக தேசிய லீக்கின் தலைவி அன் சான் சூ கீக்கு பிரதமருக்கு நிகரான பதவியொன்று வழங்கப்பட உள்ளது. அண்மையில் நடைபெற்ற தேர்தலில் சூ கீயின் கட்சி வெற்றியீட்டியது. எனினும், நாட்டின் அரசியல் சாசனத்திற்கு அமைவாக சூ கீயினால் ஜனாதிபதியாக பதவி வகிக்க முடியவில்லை. இதனைத் தொடர்ந்து கட்சியின் ரின் கியாவ் ஜனாதிபதியாக பதவிப் பிரமாணம் செய்து கொண்டார். தற்போது நாட்டின் பிரதமர் பதவிக்கு நிகரான ஓர் பதவியை ஆன் சான் சூ கீக்கு வழங்க புதிய அரசாங்கம் திர்மனரித்துள்ளது. இது தொடர்பிலான உத்தேச சட்ட மூலமொன்றும் வரையப்பட்டுள்ளது. நாட்டுக்கான ஆலோசகர் என்ற பெயரில் இந்தப் பதவி வழங்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிற…
-
- 0 replies
- 504 views
-
-
யுனெஸ்கோவின் பாதுகாக்கப்பட்ட வனப் பகுதி பட்டியலில் அகஸ்தியர் மலை! [Wednesday 2016-03-30 07:00] உலகெங்கிலும் அரிய வனப் பகுதிகளை பாதுகாக்கப்பட்ட வனப் பகுதி பட்டியலில் யுனெஸ்கோ இணைத்து வருகிறது. அதனடிப்படையில், தமிழகக்ததில் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள அகஸ்தியர் மலையை உலகின் பாதுகாக்கப்பட்ட வனப் பகுதி பட்டியலில் யுனெஸ்கோ இந்த மாதம் 19-ஆம் தேதி முதல் இணைத்துக் கொண்டது. இந்தப் பட்டியலில் அகஸ்தியர் மலை இணைந்ததின் மூலம் உலகளவில் மிகப்பெரிய அங்கீகாரம் கிடைத்துள்ளதாக தமிழக வனத் துறையினர் தெரிவித்தனர். கடந்த ஆண்டு யுனெஸ்கோ பட்டியலில் கனடா நாட்டின் பீவர் மலைப் பகுதியும், இந்தோனேசியாவின் பாம்பங்கன் வனப் பகுதியும் இணைந்தன.தமிழகத்தில் ஏற்கெனவே நீலகிர…
-
- 0 replies
- 1.1k views
-