உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26703 topics in this forum
-
பாரிஸ் தாக்குதல் சந்தேகநபர் சலாஅப்தெஸ்லாம் காணப்படும் CCTV வீடியோ பிரான்ஸ் அதிகாரிகளின் கையில் பாரிஸ் தாக்குதல் சந்தேகநபர் சலாஅப்தெஸ்லாம் காணப்படும் CCTV வீடியோ பிரான்ஸ் அதிகாரிகளின் கையில்: தலைமறைவாக உள்ள பாரிஸ் தாக்குதல் சந்தேகநபர் சலாஅப்தெஸ்லாம் காணப்படும் சிசிடிவி கமரா வீடியோ பிரான்ஸ் அதிகாரிகளின் கையில் சிக்கியுள்ளது. பாரிஸ் தாக்குதல் இடம்பெற்ற மறுநாள் பெட்ரோல்நிரப்பும் நிலையமொன்றில் குறிப்பிட்ட சந்தேகநபர் தனது வாகனத்திற்கு எரிபொருள் நிரப்புவது அங்கு காணப்பட்ட சிசிடிவி கமராவில் பதிவாகியுள்ளது.அந்த வீடியோவில் அப்தெஸ்லாம் பதட்டமில்லாதவராக காணப்படுகின்றார். தாக்குதல்களை மேற்கொண்ட தீவிரவாதிகளிற்கான விநியோகங்களை மேற்கொண்டவர் இவர் என ப…
-
- 0 replies
- 428 views
-
-
கொலோன் குற்றச் சம்பவங்கள்: புகார்கள் 500 ஐ தாண்டியுள்ளன தாக்குதல்களை காவல்துறை கையாளும் விதம் குறித்து விமர்சனங்கள் உள்ளன ஜெர்மனியில் புத்தாண்டுக் கொண்டாட்டங்களின் போது இடம்பெற்றதாகக் கூறப்படும் அசம்பாவிதங்கள் தொடர்பில் பதிவாகியுள்ள புகார்களின் எண்ணிக்கை 516 ஆக உயர்வடைந்துள்ளதாக ஜெர்மன் காவல்துறை தெரிவித்துள்ளது. இவற்றில் 40 வீதமானவை பாலியல் ரீதியான தாக்குதல்கள் தொடர்பானவை. இதனிடையே, நேற்று ஞாயிற்றுக்கிழமை மேற்கு ஜெர்மனியில் பாகிஸ்தானியர்கள் 6 பேரும் சிரிய நாட்டவர் ஒருவரும் தாக்கப்பட்டுள்ளனர். தாக்கப்பட்டவர்களில் இரண்டு பேருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. இன்னொரு சம்பவத்தில் 5 பேர் கொண்ட குழு ஒன்று சிரிய நாட்டவர் ஒருவரை தாக்கியு…
-
- 2 replies
- 402 views
-
-
ஜேர்மனியில் பாலியல் தாக்குதல்களுக்கு எதிராக சுவிஸ் பெண் கலைஞரின் நிர்வாண ஆர்ப்பாட்டம் ஜேர்மனியின் கொலோன் நகரில் இடம்பெற்ற பாலியல் ரீதியான தாக்குதலுக்கு எதிராக சுவிட்ஸர்லாந்தைச் சேர்ந்த பெண்ணொருவர் நிர்வாணமாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளார். கொலோன் நகரின் புத்தாண்டுப் பிறப்பு கொண்டாட்டங்களின்போது பெண்கள் இருவர் பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கப்பட்டதுடன் மேலும் சிலர் பாலியல் ரீதியான தாக்குதல்களுக்கு உள்ளாகினர். ஜேர்மனிக்கு அகதிகளாக வந்த அரபுக்கள் மற்றும் வட ஆபிரிக்க நாட்டவர்களால் இத்தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டதாக குற்றம் சுமத…
-
- 5 replies
- 780 views
-
-
பிரபல பிரித்தானிய பாடகர் டேவிட் போவி காலமானார் [ Monday,11 January 2016, 13:46:15 ] பிரித்தானியாவின் புகழ்பெற்ற பாடகரான டேவிட் போவி புற்றுநோய் காரணமாக தனது 69ஆவது வயதில் இயற்கை எய்தியுள்ளார். அறுபதுகளின் பிற்பகுதியிலும் எழுபதுகளின் ஆரம்பத்திலும் இசையில் உலக அளவில் கோலோச்சியிருந்தார். தமது தந்தை உயிரிழந்துள்ளதை அவரது மகனும் திரைப்பட இயக்குநருமான டங்கன் ஜோன்ஸ் உறுதிப்படுத்தியுள்ளார். கடந்த 18 மாதங்களாக புற்றுநோய் காரணமாக பாதிக்கப்பட்டிருந்த நிலையில், குடும்பத்தினர் சூழ்ந்திருக்க அமைதியாக போவீயின் உயிர் பிரிந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது. 'ஸ்பேஸ் ஆடிட்டி', 'ஸ்டார்மேன்' போன்ற பாரிய வெற்றி பெற்ற பாடல்கள் டேவிட் போவிக்கு உலக…
-
- 0 replies
- 409 views
-
-
ஈராக் வணிக வளாகத்தில் தீவிரவாதிகள் தாக்குதல்: 10 பேர் பலி! பாக்தாத்: ஈராக்கில் உள்ள வணிக வளாகம் ஒன்றில் தீவிரவாதிகள் நடத்திய துப்பாக்கி சூட்டில் 10 பேர் பலியாகியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. ஈராக் தலைநகர், பாக்தாத்தில் ஜவஹாரா வணிக வளாகம் இயங்கி வருகிறது. இந்த வணிக வளாகத்திற்குள் நேற்று (11-ம் தேதி) திடீரென நுழைந்த தீவிரவாதிகள் துப்பாக்கி சூடு நடத்தியுள்ளனர். இதில் 10 பேர் பலியாகியுள்ளதாகவும், 22-க்கும் மேற்பட்டவர்கள் படுகாயம் அடைந்துள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. மேலும், 75-க்கும் மேற்பட்டவர்களை தீவிரவாதிகள் பிணையக் கைதிகளாக பிடித்து வைத்திருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்த தாக்குதலுக்கு இதுவரை எந்த தீவிரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. என…
-
- 0 replies
- 361 views
-
-
இன்றைய நிகழ்ச்சியில்… முற்றுகையிடப்பட்ட சிரியாவின் மதாயாவுக்கு சென்றுள்ளது அவசர உணவு உதவி! பட்டினியால் வாடும் மக்களின் அவலத்தைப் போக்க ஐநா நடவடிக்கை! வான வீதியில், படை விமான ஊர்வலம்! வடகொரியாவின் ஹைட்ரஜன் குண்டு பரிசோதனைக்கு பதிலடியாக அமெரிக்கா உதவியுடன் தென்கொரியா காட்டும் புஜபலம்! கீழ்த்தட்டு மக்களின் கலை வெளிப்பாடா? கலாச்சார சீரழிவா? அரபு உலகை ஆட்டம்போடவைக்கும் பேட்டை ரேப்- மஹ்ரகன்ஸ்!
-
- 0 replies
- 517 views
-
-
ஆயுதங்களுடன் பிடிபட்ட அமெரிக்க கப்பல்: இந்தியர்கள் உள்பட 35 பேருக்கு 5 ஆண்டு சிறை! ஆயுதங்களுடன் அமெரிக்க கப்பல் பிடிபட்ட வழக்கில், 35 பேருக்கு தலா 5 ஆண்டு சிறைத் தண்டனை விதித்து தூத்துக்குடி நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. கடந்த 2013-ம் ஆண்டு அக்டோபர் 10ம் தேதி, தூத்துக்குடி அருகே இந்திய கடல் பகுதிக்குள், ஆயுதங்களுடன் அத்துமீறி நுழைந்ததாக அமெரிக்க தனியார் நிறுவனத்துக்கு சொந்தமான ‘‘சீமேன் கார்டு ஓகியோ’’ என்ற கப்பல் பிடிபட்டது. இந்த கப்பலில் இருந்த 10 மாலுமிகள் உள்பட 35 பேரை, கியூ பிரிவு காவல்துறையினர் கைது செய்தனர். அவர்களில் இந்தியாவை சேர்ந்த 12 பேர், உக்ரைனை சேர்ந்த 3 பேர், எஸ்டோனியாவை சேர்ந்த 14 பேர், இங்கிலாந்தை சேர்ந்த 6 பேர் ஆவர். மேலும்…
-
- 0 replies
- 697 views
-
-
இந்தியா-பாகிஸ்தான் வெளியுறவு செயலாளர்கள் பேச்சுவார்த்தை ரத்து! புதுடெல்லி: பாகிஸ்தானுடன் வரும் 15ம் தேதி நடைபெறுவதாக இருந்த வெளியுறவு செயலாளர்கள் அளவிலான பேச்சுவார்த்தை ரத்து செய்யப்படுவதாக இந்தியா அறிவித்துள்ளது. இது தொடர்பாக, டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், ''பாகிஸ்தானுடன் வரும் 15ம் தேதி நடைபெறுவதாக இருந்த வெளியுறவு செயலாளர்கள் அளவிலான பேச்சுவார்த்தை ரத்து செய்யப்பட்டு உள்ளது. மேலும், பதன்கோட் தாக்குதல் சம்பவத்தில் பாகிஸ்தான் நடவடிக்கை எடுக்கும் வரை அந்த நாட்டுடன் பேச்சுவார்த்தை கிடையாது. பதன்கோட் சம்பவத்தில், பாகிஸ்தானின் நடவடிக்கை திருப்தி அளித்தால் மட்டுமே மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தப்படும்" என்று அவர்…
-
- 0 replies
- 403 views
-
-
சவுதி அரேபியாவிற்கு பாதுகாப்பு வழங்க பாகிஸ்தான் தீர்மானம் [ Monday,11 January 2016, 05:19:54 ] சவுதி அரேபியாவுக்கு ஆபத்து ஏற்பட்டால், தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என பாகிஸ்தான் உறுதியளித்துள்ளது. சவுதி அரேபியாவின் பாதுகாப்பு அமைச்சரும், துணைப் பட்டத்து இளவரசருமான முகமது பின் சல்மான் (Mohammed bin Salman) பாகிஸ்தானிற்கு விஜயம் மேற்கொண்டுள்ளார். இவர் பாகிஸ்தான் இராணுவ தளபதி ஜெனரல் ரகீல் ஷரீவ்வை (Raheel Sharif ) நேற்று ஞாயிற்றுக்கிழமை சந்தித்து கலந்துரையாடினார். இதன்போது சவுதி அரேபியாவுக்கும் ஈரானுக்கும் இடையில் நிலவும் சர்ச்சை குறித்து பாகிஸ்தான் அக்கறை தெரிவித்ததுடன் சர்ச்சைக்குத் தீர்வுகாண, இ…
-
- 0 replies
- 523 views
-
-
குற்றச் செயலில் ஈடுபடும் குடியேறிகளுக்கு இடமில்லை:ஜெர்மனி அறிவிப்பு ஜெர்மனியில் குடியேறும் நோக்கில் வருபவர்கள் குற்றச்செயல்களில் ஈடுபட்டால், நாட்டை விட்டு வெளியேற்றப்படுவார்கள் என, ஜெர்மனியின் ஆட்சித் தலைவி ஏங்கலா மெர்க்கல் அம்மையார் தெரிவித்துள்ளார். குற்றச் செயலில் ஈடுபடும் குடியேறிகள் நாட்டை விட்டு வெளியேற்றப்படுவர். அந்த நடைமுறையை இலகுவாக மேற்கொள்வதற்கான செயல்திட்டங்களையும் அவர் முன்வைத்துள்ளார். கொலோன் நகரில் இடம்பெற்ற புத்தாண்டு தினத்தை ஒட்டிய நள்ளிரவு கொண்டாட்டங்களின் போது இடம்பெற்ற களவு மற்றும் பாலியல் தாக்குதல்களில் குடியேறிகளும் இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டதை அடுத்து, அவரது கிறிஸ்தவ ஜனநாயகக் கட்சி முன்வைத்த கோரிக்கைகளுக்கு பதி…
-
- 6 replies
- 580 views
-
-
தென்கொரியாவுக்கு மேலாக அமெரிக்கப் போர் விமானம் பறந்துள்ளது வடகொரியா கடந்தவாரம் நடத்தியிருந்த அணு குண்டு பரிசோதனைக்கு பதிலடியாகவே அமெரிக்கா தனது வான் தாக்குதல் வல்லமையை வெளிப்படுத்தியுள்ளது அமெரிக்க போர் விமானம் ஒன்று தென்கொரியாவுக்கு மேலாக மிகவும் தாழ்வாக பறந்துள்ளதாக அமெரிக்க இராணுவம் தெரிவித்துள்ளது. அமெரிக்காவின் குவாம் விமானப்படைத் தளத்திலிருந்து புறப்பட்ட, அணு ஆயுதங்களை கொண்டுசெல்லக்கூடிய இந்த B-52 ரக போர் விமானத்துக்கு பாதுகாப்பாக அமெரிக்க மற்றும் தென்கொரிய போர் விமானங்களும் உடன் பறந்துள்ளன. வடகொரியா கடந்தவாரம் நடத்தியிருந்த அணு குண்டு பரிசோதனைக்கு பதிலடியாகவே அமெரிக்கா தனது வான் தாக்குதல் வல்லமையை வெளிப்படுத்தியுள்ளது. ஹைட்ரஜன் குண்டு ஒன்…
-
- 3 replies
- 927 views
-
-
பாகிஸ்தானை சேர்ந்தவர் சையத் வாக்கர் அஷ்ரப். இவர் லாகூரை சேர்ந்த ஒரு நிறுவனத்தில் தலைமை செயல் அதிகாரி. இவர் பாகிஸ்தான் ராணுவ பயன்பாட்டுக்காக 10 ஆளில்லா விமானங்கள் வாங்குவதற்கு அமெரிக்காவில் அரிசோனா மாகாணத்தில் உள்ள அதிநவீன ஆளில்லா விமானங்களை தயாரிக்கிற ஒரு நிறுவனத்துக்கு, சட்ட விரோதமாக ஆர்டர் வழங்கி உள்ளார். இவற்றின் விலை 3 லட்சத்து 40 ஆயிரம் டாலர்கள் (சுமார் ரூ.2¼ கோடி). மேலும், அவர் பாகிஸ்தானில் இருந்து 2012-2014 இடையே அரிசோனா ஆளில்லா விமான உற்பத்தி கம்பெனிக்கு 62 ஆயிரம் டாலருக்கு அதிகமான பணத்தை (சுமார் ரூ. 41½ லட்சம்) மாற்றி உள்ளார். விமானங்களை ரகசியமாக வாங்கி, பாகிஸ்தானுக்கு கடத்திச் செல்லவும் அவர் திட்டமிட்டிருக்கிறார். இந்த நிலையில் அவர…
-
- 0 replies
- 471 views
-
-
உலக நாடுகளுக்கெல்லாம் அச்சுறுத்தலாக திகழ்ந்து வருகிற ஐ.எஸ். தீவிரவாதிகள் ஈராக்கிலும், சிரியாவிலும் முக்கிய நகரங்களை கைப்பற்றி ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். இப்போது அந்த இயக்கத்தினர் பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தானிலும் வேரூன்றி வருகின்றனர். பாகிஸ்தானைப் பொறுத்தமட்டில் தங்கள் மண்ணில் ஐ.எஸ். தீவிரவாதிகள் இல்லை என்று கூறி வந்தாலும், கடந்த ஆகஸ்டு மாதம் அந்த இயக்கத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு எதிராக அந்த நாடு ரகசிய நடவடிக்கைகளை முடுக்கி விட்டுள்ளது. ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்தின் இஸ்லாமாபாத் நகர தலைவர் அமீர் மன்சூர், துணைத்தலைவர் அப்துல்லா மன்சூரி, சிந்து மாகாண தலைவர் உமர் கதியோ உள்ளிட்ட 40 பேர் சமீபத்தில் அங்கு கைது செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியாகின.…
-
- 0 replies
- 424 views
-
-
2012 ஆம் ஆண்டு நள்ளிரவில் டெல்லியை நோக்கி ராணுவம் நகர்ந்தது உண்மையா? மன்மோகன் ஆட்சியின் போது இந்தியாவில் புரட்சி மூலம் ஆட்சியை கைப்பற்ற முன்னாள் ராணுவ தளபதி வி.கே.சிங் முயற்சித்தது உண்மை தான் என முன்னாள் மத்திய அமைச்சர் மணிஷ் திவாரி தெரிவித்துள்ள கருத்தால் சர்ச்சை வெடித்துள்ளது. கடந்த 2012ம் ஆண்டு ஜனவரி மாதம் 16ம் தேதி நள்ளிரவு ஹரியானா, உத்தரப் பிரதேச மாநில முகாம்களில் டெல்லியை நோக்கி ராணுவத்தின் 3 படைபிரிவுகள் நகர்ந்ததாக சொல்லப்பட்டது. இது குறித்து அதே ஆண்டு ஏப்ரல் மாதத்தில் பிரபல ஆங்கில பத்திரிகை ஒன்று செய்தி வெளியிட்தால், பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இந்தியா போன்ற ஜனநாயக நாட்டில் ராணுவ புரட்சியா? என்று பெரும் கேள்வியும் எழுந்தது. இந்த விவ…
-
- 0 replies
- 577 views
-
-
சிரியாவில் அல்-கொய்தா சிறை மீது ரஷ்யா வான்வழி தாக்குதல்... 57 பேர் பலி! பெய்ரூட்: சிரியாவில் உள்ள அல்-கொய்தா சிறை மீது ரஷ்யா நடத்திய வான்வழி தாக்குதலில் பொதுமக்கள், தீவிரவாதிகள் உள்ளிட்ட 57 பேர் பலியாகி உள்ளனர் என்று மனித உரிமைகள் கண்காணிப்பகம் தெரிவித்து உள்ளது. சிரியாவில் கடந்த 2011-ம் ஆண்டு அரசுக்கு எதிரான போராட்டம் முற்றியபோது முதல் மோதல் வெடித்தது, இதனையடுத்து போர் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த போரில் இதுவரை பலர் உயிரிழந்து உள்ளனர். கடந்த செப்டம்பர் 30-ம் தேதியில் இருந்து ரஷ்யா, சிரியாவில் உள்ள ஐ.எஸ். தீவிரவாதிகள் மற்றும் பிற தீவிரவாத இயக்கங்கள் மீது வான்வழி தாக்குதல் நடத்தி வருகிறது. சிரியாவில் அல்-நுஸ்ரா மற்றும் ஐ.எஸ். இரண்ட…
-
- 0 replies
- 550 views
-
-
நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் உயிரிழந்ததை நேரில் கண்ட சாட்சியங்களை வெளியிட்ட பிரிட்டன் இணையதளம்! [Sunday 2016-01-10 09:00] தைவானில் விபத்துக்குள்ளான விமானத்தில் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் உயிரிழந்ததை நேரில் கண்ட சாட்சியங்களை பிரிட்டன் இணையதளம் இன்று வெளியிட்டுள்ளது. சுதந்திர போராட்ட வீரர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ், 1945-ம் ஆண்டு ஆகஸ்டு 18-ந்தேதி தைவானில் நடந்த விமான விபத்தில் சிக்கினார். அதில் அவர் இறந்து விட்டதாக கூறப்பட்ட போதிலும், அதை ஒருதரப்பினர் மறுத்து வருகிறார்கள். அதனால், நேதாஜி பற்றிய மர்மம் இன்னும் நீடித்து வருகிறது. இதுபற்றிய ரகசிய ஆவணங்கள் இன்னும் முழுமையாக வெளியிடப்படவில்லை. இந்நிலையில், விமான விபத்தை சந்தித்த நாளில் (18-8-1945) நேதாஜியின் பயண…
-
- 0 replies
- 597 views
-
-
முறையான அனுமதி பெறாததால் சீனாவின் சிற்பி மா சேதுங்கின் சிலையை இடித்து தள்ளியது சீன அரசு. சீனாவின் சிற்பி என அழைக்கப்படும் மா சேதுங் 1893-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 26-ம் தேதி சீனாவில் ஹுனன் மாநிலத்தில் ஒரு சிறிய குக்கிராமத்தில் பிறந்த விவசாயக் குடிமகன் ஆவார். பள்ளிப்படிப்பை முடித்து பீகிங் பல்கலைக் கழகத்தில், நூலக உதவியாளராக பணியில் சேர்ந்தார். அப்போது மன்னராட்சிக்கு எதிராக சன்யாட் சென் தலைமையில் போராட்டங்கள் நடைபெற்று வந்தன. மேலும், கம்யூனிஸக் கொள்கைகளும் வேகமாகப் பரவின. அதன்பால் ஈர்க்கப்பட்ட மா சேதுங் பல்வேறு போராட்டங்களிலும் பங்கெடுத்தார். 1935-ம் ஆண்டுக்குப் பிறகு, பொதுவுடைமைக் கட்சியின் தலைவர் பொறுப்பை ஏற்றார் மா சேதுங். பல நூற்றாண்டு கால அன்னிய ஆக்கிரமிப்புக்கு பின்னர்…
-
- 1 reply
- 416 views
-
-
சவுதி- இரான் பதற்றம்: வளைகுடா நாடுகள் ரியாத்தில் கூடுகின்றன இரானுடன் உறவை முறித்துக் கொள்ளும்படி உறுப்புநாடுகளை சவுதி கோரலாம் சவுதி அரேபியாவுக்கும் இரானுக்கும் இடையே தீவிரமடைந்துள்ள பதற்றமான சூழல் தொடர்பில் பேச்சு நடத்துவதற்காக வளைகுடா கூட்டுறவு பேரவையைச் சேர்ந்த 6 நாடுகளும் சவுதி தலைநகர் ரியாத்தில் கூடுகின்றன. ஒரு வாரத்துக்கு முன்னர் முன்னணி ஷியா மதகுரு ஒருவருக்கு சவுதி மரண தண்டனை நிறைவேற்றியதைத் தொடர்ந்தே, சுன்னி ஆதிக்க நாடான சவுதிக்கும் அதன் பகைநாடான ஷியா ஆதிக்கம் கொண்ட இரானுக்கும் இடையிலான உறவுகள் மோசமடைந்துள்ளன. இரானுடன் இராஜதந்திர உறவுகளை முறித்துக்கொண்ட சவுதியின் நடவடிக்கையை வளைகுடா ஒத்துழைப்பு பேரவையின் இன்னொரு உறுப்பு நாடு மட்டுமே பின்பற்…
-
- 0 replies
- 508 views
-
-
ஐதராபாத், ஐதராபாத் ஐஐடியில் முதலிடம் பெற்ற ஷிவா கரன் (25) என்ற மாணவர் அமெரிக்காவின் வடக்கு கலிபோர்னியாவில் உள்ள பல்கலைக்கழகம் ஒன்றில், முதுகலை படிப்பு பயின்று வந்தார். இந்த நிலையில், தனது அறையில் துக்கிலிட்டு ஷிவா கரண் தற்கொலை செய்துகொண்டதாக உறவினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. முதல் செம்ஸ்டர் தேர்வில் தான் பெற்ற கிரேடால் மிகவும் மன அழுத்தத்தில் ஷிவா கரண் இருந்ததாக கூறப்படுகிறது. ஷிவ கிரண் அறையில் அவரை தவிர்த்து மேற்கொண்டு 2 சீன மாணவர்கள் தங்கியிருந்ததுள்ளனர். ஷிவா கரண் அறையில் தற்கொலை குறிப்பு எதுவும் கிடைக்க வில்லை. இருப்பினும், இரண்டாவது செமஸ்டர் தேர்வுக்கு தான் …
-
- 0 replies
- 599 views
-
-
விண்வெளித் துறையில் சாதனை படைக்க சீனா மும்முரம்: ஒரே ஆண்டில் 20 திட்டங்கள் விண்வெளித் துறையில் இந்த ஆண்டு புதிய சாதனை படைக்கும் நோக்கில், 20 விண்வெளித் திட்டங் களை நிறைவேற்ற சீனா முடி வெடுத்துள்ளது. இது குறித்து சீன விண்வெளி அறிவியல் மற்றும் தொழில்நுட்ப கார்ப்பரேஷன் கூறியிருப்பதாவது: இந்த ஆண்டு தியான்காங் 2 விண்வெளி ஆய்வகம் மற்றும் ஷென்ஸோ 11 விண்வெளி ஓடத்தை விண்ணில் செலுத்த திட்டமிட் டுள்ளோம். மொத்தமாக இந்த ஆண்டு 20 விண்வெளித் திட்டங்கள் நிறைவேற்றப்படும். மேலும் பெலா ரஸ் நாட்டின் தொலைதொடர்பு செயற்கைகோளையும் விண்ணில் ஏவ திட்டமிடப்பட்டுள்ளது. இவ் வாறு அதில் கூறப்பட்டுள்ளது. ஏற்கெனவே தியான்காங் 1 என்ற விண்வெளி ஆய்வகத்தை விண்ணில்…
-
- 0 replies
- 314 views
-
-
இந்தியா உடனான பேச்சு நடைமுறைகளை தடம்புரள அனுமதிக்க மாட்டோம்: பாகிஸ்தான் பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் கவாஜா முகம்மது ஆசிப் | கோப்புப் படம்: ராய்ட்டர்ஸ் இந்தியா உடனான பேச்சுவார்த்தை நடைமுறைகளை எந்தவொரு பயங்கரவாத அமைப்பும் தடம்புரளச் செய்ய அனுமதிக்க மாட்டோம் என்று பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் கவாஜா முகம்மது ஆசிப் தெரிவித்தார். இதுகுறித்து அவர் செய்தி சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் கூறும்போது, "பயங்கரவாத செயல்களில் தொடர்புடைய நபர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்தியா – பாகிஸ்தான் இடையிலான பேச்சுவார்த்தை நடைமுறைகளை எந்தவொரு பயங்கரவாத அமைப்பும் தடம்புரளச் செய்ய அனுமதிக்க மாட்டோம். பயங்கர…
-
- 0 replies
- 367 views
-
-
சீனாவின் மிகப் பிரபலமான ஆடையலங்கார நிறுவனம் ´மீட்டர்ஸ்போன்வே´யின் தோற்றுநரான பெரும்பணக்காரர் ஸூ செங்ஜியன் காணாமல்போயுள்ளார். சுயமாக முன்னேறியவரான தொழிலதிபர் ஸூவின் சொத்து மதிப்பு சுமார் நானூறு கோடி டாலர்கள் ஆகும். ஸுவைத் தொடர்புகொள்ள முடியாது இருப்பதால் தமது பங்குகளில் வர்த்தகம் செய்வதை நிறுத்திவைத்துள்ளதாக மீட்டர்ஸ்போன்வே அறிக்கை வெளியிட்டுள்ளது. சீனாவில் போன மாதம் இன்னொரு பெரும் தொழிலதிபர் பல நாட்களுக்கு எங்கு போனார் என்று தெரியாமல் இருந்தது. ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பில் அதிகாரிகள் அவரை விசாரணைக்காக கைதுசெய்துள்ளனர் என்று பின்னர் தெரியவந்தது. http://tamil.adaderana.lk/news.php?nid=75889
-
- 0 replies
- 439 views
-
-
வடகொரியாவுக்கெதிரான ஒலிபரப்புகளை தென்கொரியா மீளத் தொடங்கியது வடகொரியாவின் ஐதரசன் குண்டைச் சோதித்ததான அறிவிப்புக்கு பதில் நடவடிக்கையாக, ஒலிபெருக்கிகள் வழியாக வடகொரியாயாவுக்கெதிரான பிரசார ஒலிபரப்பை தென்கொரியா மீள ஆரம்பித்துள்ளது. இந்த நடவடிக்கை, கடந்த காலங்களில் வடகொரியாவை ஆத்திரமூட்டியது என்பது குறிப்பிடத்தக்கது. உள்ளூர் நேரப்படி இன்று பிற்பகல் வேளையிலும் ஜி.எம்.டி நேரப்படி 0300 மணிக்கும் ஒலிபெருக்கிகளுடான ஒலிபரப்பு ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இரண்டு நாட்டு எல்லையுடன் அமைந்த 11 இடங்களில் இருந்து ஒலிபெருக்கிகளிலிருந்து ஒலிபரப்பு மேற்கொள்ளப்படுவதாகவும், இதில் கொரிய பொப்பிசை, செய்தி, வானிலை அறிக்கை, வடகொரியாவுக்கு எதிரான பிரசாரம் என்பன இடம்பெற்றுள்ளதாக தெர…
-
- 0 replies
- 345 views
-
-
உலகின் மிகப் பெரிய போதைப் பொருள் கடத்தல் மன்னன் மெக்ஸிகோவில் மீண்டும் கைது. January 9, 2016 5:58 am உலகின் மிகப் பெரிய போதைப் பொருள் கடத்தல் மன்னனாக அறியப்படும் ஜோகுயின் ‘எல் சப்போ’ குஸ்மன், மெக்ஸிகோ பொலிஸாரினார் நேற்று மீண்டும் கைதுசெய்யப்பட்டுள்ளார்.அதிக பட்ச பாதுகாப்புடைய சிறையில் இருந்து கடந்த ஆறு மாதங்களுக்கு முன்னர் குஸ்மன், தப்பிச் சென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது. போதைப் பொருள் கடத்தலில் பிரபல்யம் வாய்ந்த சினாலோ கார்டெல் என்ற குழுவின் தலைவரான குஸ்மன், கடந்த 2014 ஆம் ஆண்டு முதல் தடவையாகக் கைதுசெய்யப்பட்டிருந்தார்.இவர் நேற்று காலை வட மேற்கு மெக்ஸிகோவில் உள்ள லோஸ் மோசிச் நகரத்தில் அமைந்துள்ள போதைப் பொருள் தயாரிப்பு மையத்தில் நடத்தப…
-
- 0 replies
- 392 views
-
-
எத்தியோப்பியாவில் அரசுக்கு எதிரான போராட்டத்தில் 140 பேர் படுகொலை- மனித உரிமை கண்காணிப்பகம் [Saturday 2016-01-09 08:00] ஆப்பிரிக்காவின் கொம்பில் அமைந்துள்ள கிழக்கு ஆப்பிரிக்க நாடு, எத்தியோப்பியா. ஆர்மினியாவுக்கு அடுத்து உலகின் இரண்டாவது அதிகாரப்பூர்வ கிறிஸ்தவ நாடு இதுதான். இந்த நாட்டின் தலைநகர், அடிஸ் அபாபா. விவசாய நிலங்களை கையகப்படுத்தி இந்த நகரத்தை விஸ்தரிக்க வேண்டும் என்று அந்த நாட்டு அரசு திட்டமிட்டுள்ளது. குறிப்பாக ஒரோமியா பிராந்தியத்தில் பல நகரங்களில் இருந்து விளைநிலத்தை கையகப்படுத்த அரசு விரும்புகிறது. ஆனால் இந்த ஒரோமியா பகுதி, நாட்டின் மிகப்பெரிய இனமான ஒரோமா இனத்தை சேர்ந்த மக்கள் வாழ்கிற பகுதி ஆகும். தலைநகரத்தை விஸ்தரிப்பதற்காக இந்த ஒரோமியா …
-
- 0 replies
- 409 views
-