உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
27057 topics in this forum
-
அல்-கொய்தா தலைவர் பின்லேடன், கடந்த 2011-ம் ஆண்டு பாகிஸ்தானில் பதுங்கி இருந்தபோது, அமெரிக்க சிறப்பு அதிரடிப் படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டார். அப்போது, அந்த இடத்தில், 113 முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டு அமெரிக்காவுக்கு கொண்டு செல்லப்பட்டன. அராபிய மொழியில் இருந்த அந்த ஆவணங்கள், ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கப்பட்டன.அவற்றில் முக்கியமான சில ஆவணங்களை அமெரிக்க உளவு அமைப்புகள் தற்போது வெளியிட்டுள்ளன. அவற்றில், கையால் எழுதப்பட்ட ஒரு கடிதமும் அடங்கும். அது, 1990-களில் பின்லேடனால் எழுதப்பட்டதாக கருதப்படுகிறது. அதை பின்லேடனின் கடைசி உயிலாக அமெரிக்க உளவு அமைப்புகள் வர்ணிக்கின்றன.ஏனென்றால், சூடான் நாட்டில் தான் விட்டுச்சென்ற 29 மில்லியன் டாலரை (சுமார் ரூ.200 கோடி), தனது இறப்புக்கு பிறக…
-
- 0 replies
- 228 views
-
-
ஜிஹாதியத்திற்கு உயில் எழுதி வைத்த ஒஸாமா பின் லேடன்: தமிழில் குளோபல் தமிழ்ச் செய்தியாளர் அல் கய்தா தீவிரவாத இயக்கத்தின் தலைவரான ஒஸாமா பின் லேடன், ஜியாதிய போராட்டத்திற்காக தனது சொத்துக்களை உயிலாக எழுதி வைத்திருந்தார் என தெரிவிக்கப்படுகிறது. பின் லேடனின் 29 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான சொத்துக்கள் இவ்வாறு உயிலாக எழுதி வைக்கப்பட்டுள்ளது. இந்த தகவல்களை அமெரிக்க ஊடகமொன்று வெளியிட்டுள்ளது. அல்லாவின் பெயரினால் தமது சொத்துக்களை ஜிஹாத் போராட்டத்திற்கு பயன்படுத்துமாறு பின் லேடன், தனது உயிலில் குடும்ப உறுப்பினர்களிடம் கோரியுள்ளார். எவ்வாறெனினும் இந்த சொத்துக்கள் ரொக்கமா அல்லது வேறும் வகையிலான சொத்துக்களா என்பது பற்றிய விபரங்கள் வெளியாகவில்லை. …
-
- 0 replies
- 340 views
-
-
அமெரிக்க ஜனாதிபதி பராக் ஓபாமாவுக்கு அமெரிக்க மக்கள் உதவவேண்டும் - அல்ஹைய்தா தலைவர் ஓசாமாபின்லேடன்: அமெரிக்க ஜனாதிபதி பராக் ஓபாமா, பாரிய பேரழிவையேற்படுத்தி வரும் காலநிலை மாற்றத்திற்கு எதிராக மேற்கொண்டுள்ள போராட்டத்திற்கு அமெரிக்க மக்கள் உதவவேண்டும் அதன் மூலம் மனித குலத்தை காப்பாற்ற முன்வரவேண்டும் என அல்ஹைய்தா தலைவர் ஓசாமாபின்லேடன் எழுதிய கடிதத்தை அமெரிக்க ஒபாமா நிர்வாகம் பகிரங்கப்படுத்தியுள்ளது. ஓசாமா பின் லாடன் பாக்கிஸ்தானிலுள்ள தனது மறைவிடத்தில் வைத்து மே2 2011 ம் திகதி சுட்டுக் கொல்லப்பட்ட வேளை அங்கு கைப்பற்றப்பட்ட ஆவணங்களில் இறுதி தொகுதியை ஓபாமா நிர்வாகம் வெளியிட்டுள்ளது. இதில் கையெழுத்திடப்படாத ,திகதி…
-
- 0 replies
- 232 views
-
-
'ஒன்றரை லட்சம் சிரியா குழந்தைகள் துருக்கியில் பிறந்துள்ளன'! ஜெனீவா: ஒன்றரை லட்சம் சிரியா குழந்தைகள் துருக்கியில் பிறந்துள்ளன என்று துருக்கியின் துணைப் பிரதமர் லுப்தி எல்வன் கூறியுள்ளார். இது தொடர்பாக, ஜெனீவா ஐ.நா. மனித உரிமைகள் கவுன்சிலின் தொடக்க கூட்டத்தில் துருக்கி துணை பிரதமர் எல்வன் கூறுகையில், "கடந்த 5 ஆண்டுக்கும் மேலாக சிரியாவில் நடைபெற்று வரும் உள்நாட்டு போர் காரணமாக, மனிதாபிமானத்தின் பெரும் பகுதியை துருக்கி தன்னால் முடிந்த அளவுக்கு ஏற்றுள்ளது. துருக்கியில் பிறந்த சிரியா குழந்தைகள் எண்ணிக்கை கிட்டத்தட்ட 1 லட்சத்து 52 ஆயிரமாக உள்ளது. எந்த அண்டைநாடுகளிலும் இல்லாத வகையில், 2.7 லட்சத்துக்கும் அதிகமான சிரிய அகதிகள் எங்கள் நாட்டில் உள்ளனர்” என்று த…
-
- 1 reply
- 475 views
-
-
சுவிட்சர்லாந்தில், சிறிய குற்றச் செயல்களில் ஈடுபடும் வெளிநாட்டவர்களை நாடுகடத்த வேண்டுமா என்பதை தீர்மானிக்கும், மக்கள் கருத்தறியும் வாக்கெடுப்பு ஒன்று, இன்று நடைபெற்று முடிந்துள்ளது. இந்தத் திட்டம், அந்நாட்டின் வலதுசாரிக் கட்சியான சுவிஸ் மக்கள் கட்சியால் முன்வைக்கப்பட்டது. சுவிட்சர்லாந்தில் குடியேறுபவர்களின் தொகை அதிகரிப்பதுடன், அதை ஒட்டி சமுகப் பிரச்சினைகளும் கூடிவருவதாக தெரிவித்த சுவிஸ் மக்கள் கட்சி, இதனால் சுவிஸ் மக்கள் எதிர்கொள்ளும் அசௌகரியங்களும் அதிகரிப்பதாக தெரிவித்துள்ளது. பத்து ஆண்டுகளில் இரண்டு சிறிய குற்றங்களைப் புரிந்த எந்தவொரு வெளிநாட்டவரும், மேன்முறையீடு செய்யும் உரிமை எதுவும் இல்லாமல், நாட்டை விட்டு வெளியேற்றப்படுவர் என வாக்க…
-
- 4 replies
- 657 views
-
-
அகதிகள் மீது பிரான்ஸ் பொலிஸார் தாக்குதல் பிரான்ஸ் நாட்டில் கலே பிரதேசத்தில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டிருந்த அகதிகளின் குடியிருப்புக்களை அகற்றச்சென்ற பொலிஸாருக்கும் அகதிகளுக்கும் இடையில் முறுகல் ஏற்பட்டதால் பதற்ற நிலை உருவாகியுள்ளது. சட்டவிரோதமாக அமைக்கப்பட்டிருந்த கூடாரங்களை அகதி மக்களின் எதிர்ப்பையும் மீறி பொலிஸ் அகற்ற முற்பட்ட வேளையில் இந்த குழப்பநிலை ஏற்பட்டது. இதன்போது, அகதிகள் பொலிஸார் மீது கற்பிரயோகத்தை மேற்கொண்டதிற்கு எதிராக அவர்கள் மீது கண்ணீர் புகை மற்றும் தண்ணீர் தாரை பிரியோகித்தனர். மேலும் 23 அகதிகளை பொலிஸார் கைது செய்துள்ளனர். http://www.virakesari.lk/article/3…
-
- 1 reply
- 774 views
-
-
இன்றைய நிகழ்ச்சியில்… - பிரான்ஸின் கலே துறைமுகநகரில் குடியேறிகள் மற்றும் அவர்களுக்கு ஆதரவான செயற்பாட்டாளர்களுடன் கடந்த இரவு நடந்த மோதலை தொடர்ந்து அதிகாரிகள் , குடியேறிகளின் ‘’ஜங்கிள்’’ முகாமை தொடர்ந்து அழிக்கின்றனர். - ஸீகா வைரஸால் பக்கவாதம் மற்றும் மரணத்துக்கு வழி செய்யும் ஒரு மூளைக்கோளாறு வரலாம் என்பதற்கு புதிய ஆதாராங்கள் கிடைத்துள்ளன. - பிளாஸ்டிக் குப்பைக் கழிவை குறைக்க இந்தோனேசியா, பிளாஸ்டிக் பைகளுக்கு காசு அறவிடுகிறது. ஆனால், அது பலந்தருமா என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.
-
- 0 replies
- 293 views
-
-
லொசான் மாநகரசபைத் தேர்தலில் நமசிவாயம் அமோக வெற்றி! [Tuesday 2016-03-01 07:00] சுவிட்சர்லாந்து லொசான் மாநகரசபைக்குகு நேற்று நடைபெற்ற தேர்தலில் சோசலிச ஜனநாயகக் கட்சியின் சார்பில் போட்டியிட்ட ஈழத் தமிழரான தம்பிப்பிள்ளை நமசிவாயம் அமோக வெற்றியைப் பெற்றுள்ளார். 9,833 வாக்குகளைப் பெற்று தனது அணி சார்பில் போட்டியிட்ட 100 பேரில் இவர் நான்காவது இடத்தைப் பெற்றமை குறிப்பிடத்தக்கது. அது கடந்த முறை இவர் பெற்ற வாக்குகளை விட 4,020 அதிகமாகும். இவரது அணியில் முதலாவது இடத்திற்குத் தெரிவானவர் 10,001 வாக்குகளைப் பெற்றிருந்த நிலையில் இன்னமும் 169 வாக்குகளை இவர் மேலதிகமாகப் பெற்றிருந்தால் இவர் கட்சிப் பட்டியலில் முதலாவது இடத்தைப் …
-
- 0 replies
- 569 views
-
-
பிரிட்டனில் நாடாளுமன்ற உறுப்பினரே எதிர்கொண்டதாகக் கூறும் இனவெறி சம்பவம் பிரிட்டனின் நாடாளுமன்ற மக்களவையில் தான் அடிக்கடி இனவெறி சம்பவங்களை எதிர்கொள்வதாக, கறுப்பின நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் தெரிவித்துள்ளார். "பிரிட்டிஷ் மக்களவையில் இனவெறி" - நாடாளுமன்ற உறுப்பினர் குற்றச்சாட்டு டான் பட்லர் என்ற அந்த பெண் எம்.பி, ஜமைக்காவிலிருந்து பிரிட்டனுக்குக் குடியேறிய பெற்றோர்களுக்குப் பிறந்தவர். முதலில் அவர் நாடாளுமன்றத்துக்கு 2005ம் ஆண்டு தேர்ந்தெடுக்கப்பட்டார். கடந்த ஆண்டு தேர்தலில் மீண்டும் அவர் வெற்றி பெற்றார். தனக்கு நேர்ந்த ஒரு சம்பவத்தில் , நாடாளுமன்ற உறுப்பினர்களுக்காகப் பிரத்யேகமாக ஒதுக்கப்பட்ட மின் தூக்கியைப் ( லிஃப்ட்) பயன்படுத்தும்போது …
-
- 0 replies
- 525 views
-
-
இன்றைய நிகழ்ச்சியில்… - போர் நிறுத்தம் தந்த தற்காலிக அமைதியால் எதிர்பார்ப்புகள் அதிகரிக்க, மோதலில் அகப்பட்டவர்களுக்கு நிவாரண உதவிகளை விரிவுபடுத்த ஐநா முயல்கிறது. - ஐரோப்பிய எல்லைகள் ஒவ்வொன்றாக மூடப்பட கிரேக்கத்தில் அகப்பட்டு, திண்டாடும் அகதிகளின் எண்ணிக்கை அதிகரிக்கிறது. - பாகிஸ்தானின் ஒரு மாகாண ஆளுநரை கொலை செய்த ஒரு முன்னாள் மெய்க்காப்பாளருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.
-
- 0 replies
- 478 views
-
-
கற்பை காப்பாற்ற தனக்கு தானே தீவைத்து கொண்ட சிறுமி! ஜெர்மனி: ஐ.எஸ் தீவிரவாதிகளிடம் இருந்து தனது கற்பை காப்பாற்றிக்கொள்ள, சிறுமி ஒருவர் தனக்கு தானே தீ வைத்து கொண்ட அதிர்ச்சி சம்பவம் தற்போது வெளியாகி உள்ளது. உலகமுழுவதும் பெரும் அச்சுறுத்தலாக விளங்கும் ஐ.எஸ். தீவிரவாதிகள், ஈராக் மற்றும் சிரியாவின் சில பகுதிகளை கைபற்றி இஸ்லாமிய அரசாக அறிவித்து உள்ளனர். ஈராக்கின் வடக்கு பகுதியில் வசித்து வரும் யாஷ்டி இனத்தை சேர்ந்த பல ஆண்களை கொன்று அவர்களின் மனைவி மற்றும் பெண்களை தங்களின் பாலியல் அடிமைகளாகவும் பயன்படுத்தி வருகின்றனர். அதன் பின் சில காலம் கழித்து அந்த பெண்களை வேறு ஒருவருக்கு விற்று விடுகின்றனர். ஆயிரத்திற்கும் மேற்பட்ட சிறுமிகள் முதல் பெண்கள் தற்போது அவர்களி…
-
- 0 replies
- 515 views
-
-
`பெருங்கோடீஸ்வரர்கள் வாழும் முதல் ஐந்து நகரங்கள்' உலகில், பெரும் எண்ணிக்கையிலான கோடீஸ்வரர்கள் அதிகம் வாழும் நகரம் என்ற பெருமையை, முதல் தடவையாக, சீனத் தலைநகர் பீஜிங்கில் பெற்றுள்ளது. பீஜிங்கில் உள்ள பெருங்கோடீஸ்வரர்களின் எண்ணிக்கை 100 என ஆய்வு முடிவு ஒன்று கூறுகிறது. கடந்த ஆண்டு முதலிடத்தில் இருந்த நியூயார்க் நகரை பின்னுக்கு தள்ளி, பீஜிங் பட்டியலில் முதலிடத்தை பிடித்துள்ளது. இடண்டாம் இடத்தில் உள்ள நியூயார்க் நகரில், அந்த எண்ணிக்கை 95 ஆக உள்ளது. மூன்றாவது இடத்தில், மாஸ்கோ நகரமும், அதற்கு அடுத்ததாக ஹாங்காங், மற்றும் ஷாங்காய் நகரங்கள் ஆகியன உள்ளன. உலகில் பெருங்கோடீஸ்வரர்கள் எங்கெல்லாம் வாழ்கிறார்கள் என்ற இந்த ஆண்…
-
- 0 replies
- 693 views
-
-
மகராஷ்டிரம் மாநிலம் தாணே அருகே சொத்துத் தகராறில் இளைஞர் ஒருவர் தனது குடும்பத்தைச் சேர்ந்த 14 பேரை கொலை செய்துவிட்டு, தானும் தற்கொலை செய்து கொண்டார். மகராஷ்டிரம் மாநிலம் தாணே அருகே சொத்துத் தகராறில் இளைஞர் ஒருவர் தனது குடும்பத்தைச் சேர்ந்த 14 பேரை கொலை செய்துவிட்டு, தானும் தற்கொலை செய்து கொண்டார். தாணே மாநகர காவல் எல்கைக்குள்பட்டது கசார்வடாவலி பகுதியைச் சேர்ந்தவர் ஹசினில் வரேக்கர் (35). இவர் சொத்துத் தகராறு காரணமாக தனது குடும்பத்தைச் சேர்ந்த 7 குழந்தைகள், 6 பெண்கள் உள்ளிட்ட 14 பேரை சரமாரியாக நேற்று இரவு குத்திக் கொலை செய்தார். பின்னர் அவரும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவலறிந்த போலீஸார் கொலை நடந்த வீட்டுக்குச் சென்று பிர…
-
- 0 replies
- 482 views
-
-
அமெரிக்கா, ரஷ்யா முயற்சியால் போர் நிறுத்தம்: சிரியாவில் குண்டு சத்தம் ஓய்ந்தது குர்து போராட்டக் குழுக்கள் அடங்கிய சிரியா ஜனநாயக படை ஹசாகா பகுதியில் செயல்படுகிறது. அந்த படையைச் சேர்ந்த பெண் வீரர்கள் நேற்று துப்பாக்கிகளை மறந்து டேப்லெட்டில் பொழுதை போக்கினர். | படம்: ராய்ட்டர்ஸ் அமெரிக்கா, ரஷ்யாவின் முயற்சி யால் சிரியாவில் நேற்றுமுதல் போர் நிறுத்தம் அமலுக்கு வந்துள்ளது. அங்கு தற்காலிகமாக குண்டு சத்தம் ஓய்ந்திருப்பதாக சர்வதேச கண்காணிப்பாளர்கள் தெரிவித்துள்ளனர். சிரியாவில் ஷியா, சன்னி முஸ்லிம்களுக்கு இடையே பகைமை நீடிக்கிறது. அந்த நாட்டு சர்வாதிகார அதிபர் ஆசாத், ஷியா முஸ்லிம் பிரிவைச் சேர்ந்தவர். அவருக்கு எதிராக சன்னி பிரிவைச் சேர்ந்த ப…
-
- 1 reply
- 426 views
-
-
நியூயார்க் நகரைக் கலங்கடித்த முதியவர்-சிறுமி திருமணம்(வீடியோ) நியூயார்க்: குழந்தைத் திருமணத்தைத் தடுக்கவும் அது குறித்த விழிப்புணர்வை மக்கள் மத்தியில் கொண்டுவரவும் நியூயார்க் நகரில் 65 வயது முதியவருக்கும் 12 வயது சிறுமிக்கும் நடத்தப்பட்ட நாடகத் திருமண வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகியிருக்கிறது. பெண்கள் மற்றும் பெண் குழந்தைகள் மீதான வன்முறைகள்,பாலியல் முறைகேடுகள் உலக நாடுகளில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ள சூழலில் அது தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்படுவது அவசியமாகியுள்ளது. எனவே மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் கோபை பெர்சன் என்பவர் உருவாக்கியுள்ளார். அதன் மையமாக, 65 வயது முதியவரும் 12 வயதே ஆன சிறுமியும் திருமண உட…
-
- 2 replies
- 523 views
-
-
கிராமத்தில் உள்ள அனைத்து ஆண்களுக்கும் தூக்குத் தண்டனை ஈரான் நாட்டில் அமைந்துள்ள சிஸ்டான் கிராமத்தில் உள்ள ஆண்கள் அனைவரும் போதை பொருள் கடத்தியதாக தூக்கு தண்டனை விதிக்கபட்டு உள்ளது. இந்த சம்பவத்திற்கு சமூக ஆர்வலர்கள் மற்றும் மனித உரிமைகள் குழுவுனர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். வளர்ச்சி திட்டங்கள் எதையுமே முன்னெடுக்காத அரசால் பொதுமக்களின் வாழ்வாதார பிரச்சினைகளை சீர்செய்ய முடியவில்லை் இதனால் வாழ்வாதாரம் தேடிய மக்கள் அதிக வருவாய் ஈட்டும் நோக்கில் போதை மருந்து கடத்தலில் ஈடுபடுகின்றனர் என சமூக ஆர்வலர்கள் தெரிவித்து உள்ளனர். மரண தண்டனை வழங்குவதால் போதை மருந்து கடத்தல் ஒருபோதும் குறைந்துவிடவில்லை. ஆனாலும் அரசு இதுபோன்ற குற்றங்களுக்…
-
- 1 reply
- 487 views
-
-
சு.சுவாமி வாகனம் மீது முட்டை, தக்காளி, மை, குப்பை வீச்சு சுப்பிரமணியன் சுவாமி. | கோப்புப் படம்: ஆர்.வி.மூர்த்தி. பாஜக மூத்த தலைவர்களுள் ஒருவரான சுப்பிரமணியன் சுவாமி வாகனத்தின் மீது முட்டை, தக்காளி, மை மற்றும் குப்பை வீசப்பட்டது. உத்தரப்பிரதேச மாநிலம் கான்பூரில் உள்ள கல்லூரியில் சர்வதேச பயங்கரவாதம் குறித்த கருத்தரங்கில் கலந்து கொள்வதற்காக சென்றிருந்தார் சுப்பிரமணியன் சுவாமி. இன்று (சனிக்கிழமை) காலை 11 மணியளவில் சர்கியூட் ஹவுஸில் இருந்து கல்லூரிக்கு புறப்பட்டார். அப்போது அவரது பாதுகாப்பு வாகனத்தை மறித்த காங்கிரஸ் கட்சியினர் வாகனத்தின் மீது முட்டை, தக்காளி, மை மற்றும் குப்பையை வீசினர். இதனையடுத்து அங்கு குழுமியி…
-
- 1 reply
- 594 views
-
-
ஜெர்மனியில் 135,000 அகதிகள் மாயம் ஜெர்மனியில் அகதித் தஞ்சம் கோரி தம்மை பதிவு செய்தவர்களில் சுமார் 135,00 பேர் காணாமல் போயுள்ளனர் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இவ்வாறு காணாமல் போனவர்கள் இதர ஐரோப்பிய நாடுகளுக்கு சென்றிருக்கலாம் என்ற சந்தேகமும் எழுந்துள்ளது. 2015ஆம் ஆண்டு, ஜெர்மனியில் சுமார் பதினொரு இலட்சம் பேர் தங்களை அகதிகளாக பதிவு செய்துள்ள நிலையில், அவர்களில் 13 % தற்போது எங்கிருக்கிறார்கள் என்பது தெரியாதுள்ளதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். அகதிகள் விவகாரம் தொடர்பில் ஜெர்மனிய நாடாளுமன்றத்தில் கடந்த வியாழக்கிழமை நிறைவேற்றப்பட்ட பரிந்துரைகள், அவர்களை கண்டுபிடிக்க உதவலாம் என அந்நாட்டு உள்துறை அமைச்சின் பேச்சாளரை மேற்கோள்காட்டி செய…
-
- 1 reply
- 555 views
-
-
சர்ச்சைக்குரிய பொதுஜன வாக்கெடுப்பில் ஞாயிறன்று வாக்களிக்கிறது சுவிஸ் குற்றங்களை மேற்கொண்டதாக உறுதிப்படுத்தும் வெளிநாட்டுப் பிரஜைகளை, சுவிற்ஸர்லாந்திலிருந்து வெளியேற்றும் சர்ச்சைக்குரிய பொதுஜன வாக்கெடுப்பில், சுவிற்ஸர்லாந்துப் பிரஜைகள், ஞாயிற்றுக்கிழமையன்று (28) வாக்களிக்கவுள்ளனர். சுவிஸின் பெரும்பான்மைக் கட்சியான வலதுசாரிக் கொள்கைகளைக் கொண்ட சுவிஸ் மக்கள் கட்சி, சர்ச்சைக்குரிய இந்த வாக்கெடுப்புக்கான நடவடிக்கைகளை முழுமூச்சாக மேற்கொண்டிருந்தது. இந்தச் சட்டத்துக்கு ஆதரவு கிடைத்து, அது நிறைவேற்றப்படுமாயின், சிறிய குற்றங்களைக் கூட மேற்கொள்வோர், சுவிஸிலிருந்து வெளியேற்றப்படும் ஆபத்துக் காணப்படுகிறது. அத்தோடு, வெளிநாட்டுப் பிரஜை…
-
- 0 replies
- 257 views
-
-
தாய்லாந்தில் அல்லலுறும் 11000 பாகிஸ்தான் கிறிஸ்தவர்கள் பாகிஸ்தானில் அதிகரிக்கும் தீவிரவாத வன்முறைகளுக்கு பயந்து அங்கிருந்து வெளியேறும் ஆயிரக்கணக்கான கிறித்தவர்கள் தாய்லாந்த் செல்கிறார்கள். தாய்லாந்த் அகதிகளை ஏற்பதில்லை என்பதால் பெண்கள் குழந்தைகள் உட்பட பலர் தடுப்பு முகாம்களில் தடுத்து வைக்கப்படுகிறார்கள். விரோதியாக பார்க்கும் அண்டை அயலாரை விட்டு தாய்லாந்தில் தஞ்சமடைந்துள்ளவர்களின் அவலம் தாய்லாந்திலும் தொடர்கிறது. பாங்காக்குக்கு வந்திருக்கும் பாகிஸ்தானிய குடும்பங்கள் தொண்டு நிறுவனங்கள் தரும் உணவை நம்பியே வாழ்கிறார்கள். தஞ்சக்கோரிக்கையாரிக்கையாளர்களை கையாள்வதற்கான ஐநா சர்வதேச ஒப்பந்தத்தில் தாய்லாந்து கையெழுத்த…
-
- 2 replies
- 429 views
-
-
இன்றைய நிகழ்ச்சியில்… - இரானிய தேர்தலில் அதிக எண்ணிக்கையிலானோர் வாக்களித்துள்ளனர். - மத அகதிகளாக சொந்த நாட்டில் இருந்து தப்பிச் சென்ற பாகிஸ்தானின் கிறிஸ்தவர்களின் துயரம், தாய்லாந்திலும் தொடர்கிறது. - அத்துடன், அகதிகளின் இடப்பெயர்வில் தனது உரிமையாளரை இழந்த இராக்கிய பூனை, மீண்டும் அவர்களை சென்று சேர்ந்த கதை.
-
- 0 replies
- 285 views
-
-
கடந்த வாரம் சீனா தான் தென்சீனக் கடலில் அமைத்த தீவிற்கு விமான எதிர்ப்புப் பீரங்கிகளை நகர்த்தியதோடு, ராடர் கண்காணிப்புக் கருவியையும் பொருத்தியது. இந்த வாரம் அமெரிக்காவிற்கு அழைக்கப்பட்ட சீனா வெளிவிவகார அமைச்சர் இராஜதந்திர ரீதியில் மிரட்டப்பட, அமெரிக்கா இராணுவ அதிகாரிகள் இராணுவ ரீதியாக வெளிப்படையாக மிரட்டியிருக்கின்றார்கள். இந்த நிலையில் டொணால்ட் றம்ப் அமெரிக்காவின் அதிபராக வந்தால் அவர் உலக அளவில் மேற்கொள்ளப்போகும் அதிகார நடவடிக்கைகள் அமெரிக்காவை தோல்வியடைய வைக்குமென இன்றைய நிஜத்தின் தேடல் நிகழ்ச்சியில் அதன் ஆய்வாளர் திரு.சுரேஸ் தர்மா தெரிவித்தார். http://www.tamilwin.com/show-RUmuyCRaSWeq4A.html
-
- 0 replies
- 314 views
-
-
ஜப்பானில் மக்கள் தொகை குறைவால் கவலைகள் ஜப்பானில் மக்கள் தொகை கடந்த ஐந்து ஆண்டுகளில் சுமார் பத்து லட்சம் குறைந்துள்ளது என புதிய மக்கள்தொகை கணக்கெடுப்புகள் காட்டுகின்றன. ஜப்பானில் முதியோர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது கடந்த 1920ஆம் ஆண்டுக்கு பிறகு முதல் முறையாக மக்கள் தொகை குறைந்துள்ளது இப்போதுதான் பதிவாகியுள்ளது. எனினும் மக்கள்தொகையியல் வல்லுநர்கள் நீண்டகாலமாகவே இந்தப் போக்கு இருக்குமென எதிர்பார்த்திருந்தனர். ஜப்பானில் குறைந்துவரும் பிறப்பு வீதம் மற்றும் வெளிநாடுகளுக்கு புலம்பெயர்ந்து செல்வது ஆகியவை குறைந்ததே இதற்கு முக்கியமான காரணங்களாகப் பார்க்கப்படுகின்றன. இந்தப் பிரச்சினை மேலும் தீவிரமடையும்…
-
- 0 replies
- 351 views
-
-
அமெரிக்காவில் துப்பாக்கிச் சூடு: 4 பேர் பலி, 20 பேர் காயம் கோப்புப் படம் அமெரிக்காவின் கன்சாஸ் நகரில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 4 பேர் உயிரிழந்தனர், 20 பேர் காயமடைந்தனர். துப்பாக்கி சூடு நடத்தியவரும் சுட்டுக் கொல்லப்பட்டார். சம்பவம் குறித்து கன்சாஸ் நகர ஷெரீஃப் டி.வால்டன் கூறும்போது, "கன்சாஸில் உள்ள எக்ஸெல் இண்டஸ்ட்ரீஸ் என்ற தனியார் நிறுவனத்தில் வேலை செய்துவந்தார் செட்ரிக் ஃபோர்டு (38). இவர் தனது தொழிற்சாலையில் பணிபுரிந்தவர்கள் மீது சரமாரியாக துப்பாக்கி சூடு நடத்தினார். இச்சம்பவத்தில் 4 பேர் உயிரிழந்தனர். 20 பேர் காயமடைந்தனர். முன்னதாக, தொழிற்சாலைக்கு வரும் வழியில் நியூட்டன், ஹெஸ்டன் ஆகிய நகரங்களிலும் இரண்டு பேர…
-
- 0 replies
- 465 views
-
-
வாழத் தகுதியான நகரங்கள் : ஆஸ்திரியத் தலைநகர் வியன்னா முதலிடம்; சென்னைக்கு 150வது இடம்! உலகிலேயே வாழ தகுதியான நகரங்கள் பட்டியலில் ஆஸ்திரியத் தலைநகர் வியன்னா முதலிடத்தை பெற்றுள்ளது. சென்னைக்கு 150-வது இடம் கிடைத்துள்ளது. பிரபல மெர்சர் நிறுவனம் நடத்திய ஆய்வில் இது தெரிய வந்துள்ளது. மொத்தம் 230 நகரங்களில் இந்த ஆய்வு நடத்தப்பட்டது. இதில் 18 லட்சம் மக்கள் தொகை கொண்ட வியன்னா நகரம் முதலிடத்தை பிடித்தது. சுவிட்சர்லாந்தின் சூரிச், நியூசிலாந்தின் ஆக்லாந்து ஜெர்மனியின் மியூனிச் கனடாவின் வான்கூவர் நகரங்கள் அடுத்தடுத்த இடத்தை பிடிக்கின்றன. உலகின் மிகவும் பாப்புலரான நகரங்களான நியூயார்க், லண்டன், பாரீஸ் போன்றவை முதல் 30 இடங்களுக்குள் கூட இடம் பெறமுடியவி…
-
- 15 replies
- 1k views
-