Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. சுவிட்ஸர்லாந்து முஸ்லிம் தலைவர் மீதான வழக்கு ஆரம்பம் சுவிட்ஸர்லாந்தின் முக்கிய முஸ்லிம் தலைவர் மீதான வழக்கு நடவடிக்கைகளை சுவிஸ் அதிகாரிகள் ஆரம்பித்துள்ளனர் சுவிட்ஸர்லாந்து இஸ்லாமிய மத்திய கவுன்சிலின் முன்னணி உறுப்பினர் ஒருவருக்கு எதிராக பயங்கரவாதத்தில் ஈடுப்பட்டதான குற்றச்சாட்டுகள் தொடர்பிலான வழக்கு நடவடிக்கைகளை சுவிஸ் அதிகாரிகள் தொடங்கியுள்ளனர். அல்கைதா மற்றும் இஸ்லாமிய அரசு போன்ற தீவிரவாத குழுக்களை தடைச்செய்யும் சுவிஸ் சட்டத்தை இந்த ஜெர்மனிய பிரஜை மீறியதாக சந்தேக்கிக்கப்படுகிறது. சிரியாவின் சண்டை பிரதேசங்களுக்கு தான் மேற்கொண்ட பயணத்தின் காணொளிகளை தனது பிரச்சாரத்திற்கு இவர் பயன்படுத்தியதாக கூறப்படுகிறது. ஒரு பயங்கரவாத தாக்குதலுக்கான ஏற்பாடு…

  2. வளர்ந்து வரும் நிதிச்சந்தைகளின் அடிப்படையில் விரைவில் அமெரிக்கா, ஜப்பான், பிரான்ஸ் நாடுகளை போல சர்வதேச நிதியத்தின் டாப்-10 உறுப்பினர்களில் ஒன்றாக இந்தியா இடம் பிடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதன்படி, டாப்-10 பட்டியலில் 4 முக்கிய வளர்ந்து வரும் பொருளாதார நாடாக பிரேசில், சீனா, இந்தியா மற்றும் ரஷியா நாடுகளும், அதுதவிர அமெரிக்கா, ஜப்பான் ஆகிய நாடுகளும், பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, இங்கிலாந்து என பெரிய ஐரோப்பிய நாடுகளும் இடம் பெறுகின்றன. http://www.dailythanthi.com/News/World/2015/12/19002742/India-to-join-US-Japan-as-top-largest-10-members-of.vpf

  3. நேஷனல் ஹெரால்டு வழக்கு உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து மத்திய அரசை தாக்கிப் பேசி வரும் காங்கிரஸ் கட்சி, சுப்ரமணிய சுவாமி, பிரதமர் மோடியின் முகமூடி என்று கருத்துத் தெரிவித்துள்ளது.நேஷனல் ஹெரால்டு வழக்கு விசாரணைக்கு காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா, துணைத் தலைவர் ராகுல் நீதிமன்றத்தில் ஆஜராக உள்ள நிலையில், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் குலாம் நபி ஆசாத், மல்லிகார்ஜுன கார்கே, ஆனந்த் ஷர்மா உள்ளிட்டோர் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பேசிய அவர்கள், மத்திய அரசு பழிவாங்கும் அரசியலை நடத்துகிறது. நேஷனல் ஹெரால்டு வழக்கைத் தொடர்ந்த சுப்ரமணியன் சுவாமி, மோடியின் முகமூடியாகச் செயல்படுகிறார் என்று கூறியிருந்தனர். மோடியின் இதுபோன்ற நடவடிக்கைகளால் காங்க…

  4. நேஷனல் ஹெரால்டு வழக்கு: சோனியா, ராகுலுக்கு நீதிமன்றம் ஜாமீன்! புதுடெல்லி: நேஷனல் ஹெரால்டு வழக்கில் டெல்லி பாட்டியாலா நீதிமன்றத்தில் சோனியா காந்தி மற்றும் அவரது மகன் ராகுல் காந்தி ஆகியோர் சற்று முன் ஆஜராகினர். இருவருக்கும் நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. பா.ஜ.க. மூத்த தலைவர்களில் ஒருவரான சுப்பிரமணியன் சுவாமி டெல்லி நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அதில், ''நேஷனல் ஹெரால்டு நிறுவனத்துக்கு ரூ.90 கோடி கடன் இருந்தது. இந்த தொகையை காங்கிரஸ் கட்சியின் பணத்தில் இருந்து வட்டியின்றி கொடுத்து, விதிமுறைகளை மீறி காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மற்றும் துணைத் தலைவர் ராகுல்காந்தி ஆகியோர் அடைத்தனர். அதற்கு பதிலாக நேஷனல் ஹெரால்டு நிறுவனத்துக்கு சொந்தம…

  5. விமான பயணத்தில் தூங்கிய சீக்கியரை பின்லேடனாக சித்தரித்து வீடியோ வெளியீடு சமூக வலைத்தளத்தில் வெளியான வீடியோவில் பின்லேடனாக சித்தரிக்கப்பட்ட சீக்கியர். விமான பயணத்தின்போது தூங்கிய சீக்கியரை வீடியோ படம் எடுத்து அவரை ஒசாமா பின்லேடனாக சித்தரித்து சமூக வலைத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. கலிபோர்னியாவைச் சேர்ந்த இந்திய வம்சாவளி சீக்கியர் ஒருவர் அண்மையில் நியூயார்க்கில் இருந்து கலிபோர்னியாவுக்கு விமா னத்தில் சென்றார். அப்போது அவர் அசதி காரணமாக தூங்கினார். அவருக்கு அருகில் இருந்த அமெரிக்க இளைஞர் ஒருவர், தூங்கிய சீக்கியரை வீடியோ படம் எடுத்து அதை சமூக வலைத் தளத்தில் வெளியிட்டுள்ளார். நீங்கள் (அமெரிக்கர்கள்) பாது …

  6. ரகசியமாக அணுசக்தி நகரம் கட்டும் இந்தியா: செய்தி வெளியிட்ட அமெரிக்கா இந்தியா உயர்மட்ட ரகசிய அணுசக்தி நகரத்தை கட்டுகிறது என்று அமெரிக்காவின் வெளியுறவுக் கொள்கை ஜெர்னல் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. கர்நாடக மாநிலம், மைசூர் அருகேயுள்ள சல்லாகெரே என்ற இடத்தில் இந்த அணு ஆயுத நகரம் கட்டப்பட்டு வருவதாகவும், வரும் 2017-ம் ஆண்டுக்குள் இந்த நகரத்தின் கட்டுமானப்பணிகள் முடிந்துவிடும் என்றும் அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நகரம் தெற்காசியாவில் மிகப் பெரிய ராணுவ கேந்திரமாகவும், அணு ஆயுதங்கள் தேக்கி வைக்கப்படும் இடமாகவும், அணு ஆயுத ஆராய்ச்சி கூடங்களும் கொண்டிருப்பதோடு, அணு ஆயுதங்களை தாங்கி செல்லும் ஏ…

  7. இன்றைய நிகழ்ச்சியில்… - சிரியாவுக்கான ஒரு போர் யுக்தி மற்றும் அரசியல் மாற்றத் திட்டம் ஆகியவை குறித்து அமெரிக்கா, ரஷ்யா மற்றும் பிராந்திய நாடுகள் உடன்பாடு காண முயற்சி. - சர்ச்சைக்குரிய கருத்துகளை திரும்பத் திரும்பச் சொன்னாலும் குடியரசுக் கட்சியின் டோனல்ட் டிரம்ப்புக்கு ஆதரவு அதிகரித்தே வaருகிறது. அவரை ஆதரிப்பவர்கள் யார் என்று ஆராய்ந்தது பிபிசி. - ஒல்லி மட்டுமே அழகல்ல, அழகுக்கு பல அளவுகளும் வடிவங்களும் உண்டு என்பதை வலியுறுத்தும் மாடல் அழகி.

  8. டில்லி மாணவி கொலை வழக்கின் 'சிறுபராய- குற்றவாளி' விடுதலையாகிறார் சம்பவம் நடந்தபோது 18 வயதுக்கு உட்பட்டவராக இருந்த காரணத்தினால், குற்றவாளிக்கு அளிக்கப்பட்ட மூன்றாண்டு சிறைக்காலம் நிறைவடைகிறது இந்தியத் தலைநகர் டில்லியில் 2012-ம் ஆண்டில் மாணவி ஒருவர் பலரால் பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கப்பட்டு கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பான வழக்கில் குற்றவாளிகளாக தீர்ப்பளிக்கப்பட்டவர்களில் ஒருவர் விடுதலை செய்யப்படுவதை தடுக்க முடியாது என்று டில்லி நீதிமன்றம் தெரிவித்துள்ளது. குற்றம் நடந்தபோது 18 வயதுக்கு உட்பட்டவராக இருந்தவரே ஞாயிறன்று விடுதலை செய்யப்படுகின்றார். இந்தியாவில் சிறுபராய குற்றவாளிகளுக்கு அளிக்கப்படக்கூடிய அதிகபட்ச தண்டனையான மூன்றாண்டு சிறைத் தண்டனைய…

  9. உலகை உலுப்பிய இரண்டு புகைப்படங்கள்! உங்களின் மனதைக் குழப்பியது எது? Peter December 16, 2015 Canada இரண்டு சிறுவர்கள் இரண்டு வேறான சந்தர்ப்பங்களில் எடுத்த இருவேறான மரணம் மனதை உலுக்கும் புகைப்படங்கள் இவை. முதலாவது 1945ல் அமெரிக்காவின் அமெரிக்காவின் அணுகுண்டுத் தாக்குதலில் ஜப்பானே உருக்குலைந்து போன நேரத்தில் ஜப்பானில் எங்கோ ஒரு பகுதியில் தாய் தந்தையரெல்லாம் இறந்த நிலையில், தனது இறந்த தம்பியாரைப் புதைக்கக் கொண்டுபோன சிறுவன் தம்பியாரின் உடலைச் சுமந்தபடி அமைதி வணக்கத்திற்காக கம்பீரமாக தனது நாட்டை நேசிக்கின்றவனாக, போர் வெறியர்களிற்கு எதிரான பற்றாளனாக அமைதி மரியாதை செலுத்துகின்றான். அடுத்த படம் அமெரி;க்கா ஈராக்கியப் போரில் ஈடுபட்டு ஐயாயிரத்திற்கும் மேற்பட்ட போர் வ…

  10. சீனாவில் காற்றை பாட்டிலில் அடைத்து விற்கும் கனடா நாட்டு நிறுவனம் காற்று மாசு அபாய எச்சரிக்கையை விளக்கும் விழிப்புணர்வு பேரணியில் கலந்துகொண்ட இளம் பெண். | படம்: ராய்ட்டர்ஸ். சீனாவில் காற்று மாசடைந்து வரும் சூழலில் கனடா நாட்டு நிறுவனம் ஒன்று தூய்மையான மலைக் காற்றை பாட்டிலில் அடைத்து விற்பனை செய்கின்றது. டிசம்பர் தொடக்கத்தில் சீன தலைநகர் பெய்ஜிங்குக்கு காற்று மாசு காரணமாக அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது. இதனால் தலைநகரில் பள்ளிகள் மூடப்பட்டன. கட்டுமானப் பணிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன. மக்கள் அனைவரும் வீட்டுக்குள்ளேயே முடங்கியுள்ளனர். உலக மக்கள் தொகையில் முதலிடத்தில் உள்ள சீனாவில், தொழில் துறை வளர்ந்து வருக…

  11. அமெரிக்காவில் வெடிகுண்டு 'ஜோக்' கூறிய சீக்கிய சிறுவன் கைது இடது: சிறுவன் அர்மான்சிங் சராய். தனது பையில் வெடிகுண்டு இருப்பதாக நண்பரிடம் விளையாட்டாக கூறிய அமெரிக்க சிறுவனை போலீஸார் கைது செய்தனர். அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள அர்லிங்டன் நிகோலஷ் பள்ளியில் படித்து வரும் சீக்கிய சிறுவன் அர்மான்சிங் சராய்(12). சில தினங்களுக்கு முன்னர் வகுப்பரையில் மாணவர்கள் பேசிக் கொண்டிருந்தபோது அனைவரும் விளையாட்டாக வெடிகுண்டி பற்றி பேசினர். அப்போது விளையாட்டாக 'என் பையில் வெடிகுண்டு. அதைகொண்டு இந்தப் பள்ளியை தகர்க்கப் போகிறேன்' என்று சிறுவன் அர்மான்சிங் கூற இதனை அப்படியே தனது ஃபேஸ்புக் நிலைப்பதிவில் வெளியிட்டார் இவரது சகோதரர் கினீ ஹயி…

  12. உலக அளவில் அகதிகள், புலம்பெயர்ந்தோர் எண்ணிக்கை 6 கோடியைத் தாண்டியது: ஐநா கிரேக்க தீவான லெஸ்போஸுக்கு வரும் அகதிகள். | படம்: ஏ.பி. உள்நாட்டு போர், தீவிரவாதம் உள்ளிட்ட காரணங்களினால் தங்கள் நாடுகளிலிருந்து புலம் பெயர்ந்தோர் மற்றும் அகதிகளாக்கப்பட்டோர் எண்ணிக்கை 6 கோடியைத் தாண்டியுள்ளதாக ஐநா தகவலொன்று தெரிவிக்கிறது. ஐநா அகதிகள் ஆணைய அறிக்கை இதனை தெரிவித்துள்ளது, இதில் 2.2 கோடிக்கும் அதிகமானோர் போர்கள் மற்றும் அடக்குமுறை காரணமாக அகதிகளாக்கப்பட்டவர்கள். இதில் சுமார் 20 லட்சத்துக்கும் அதிகமானோர் ஜெர்மனி, ரஷ்யா, அமெரிக்காவிடம் புகலிடம் கோரி விண்ணப்பித்து நிலுவையில் உள்ளது. “முதல் முறையாக வலுக்கட்டாய உலக அகதிகள் மற்றும் புலம்பெயர…

  13. டிரம்ப்பின் அறிவுக்கூர்மை மகத்தானது: புடின் புகழாரம் அமெரிக்க அதிபர் வேட்பாளர் டோனல்ட் டிரம்ப். | படம்: ராய்ட்டர்ஸ். அமெரிக்க அதிபர் பதவி வேட்பாளர் டொனால்டு டிரம்ப்பின் அறிவுக்கூர்மை தம்மை வியக்க வைப்பதாக ரஷ்ய அதிபர் புடின் கூறியுள்ளார். அதோடு அவரது ரஷ்ய ஆதரவு கொள்கையையும் மறைமுகமாக பாராட்டும் வகையில் அவர் பேசியுள்ளார். மாஸ்கோவில் நடந்த வருடாந்திர பத்திரிகையாளர் சந்திப்பில் ரஷ்ய அதிபர் விளாடிமர் புடின் பேசினார். சுமார் 2 மணி நேரம் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் வரவிருக்கும் அமெரிக்க அதிபர் தேர்தல் குறித்து அவர் பேசினார். அப்போது அதிபர் வேட்பாளர் டிரம்ப் குறித்து கேட்டபோது, "அதிபர் வேட்பாளர் டிரம்ப் அறிவுக்கூர்மை கொண்ட…

  14. மும்பை ஏர் இந்தியா விமானத்தில் ஏற்பட்ட விபரீதம்! [ வியாழக்கிழமை, 17 டிசெம்பர் 2015, 06:55.57 PM GMT ] மும்பையில் ஏர் இந்தியா விமானத்தின் இயந்திரம் ஒன்றில் தொழில்நுட்ப ஊழியர் ஒருவர் இழுத்துக் கொல்லப்பட்ட சம்பவத்தை அடுத்து அந்த விமானத்தின் விமானி மற்றும் இணை விமானியை ஏர் இந்தியா நிறுவனம் பணியிடை நீக்கம் செய்திருக்கிறது. மும்பையில் ஏர் இந்தியா விமானத்தின் இயந்திரம் ஒன்றில் தொழில்நுட்ப ஊழியர் ஒருவர் இழுத்துக் கொல்லப்பட்ட சம்பவத்தை அடுத்து அந்த விமானத்தின் விமானி மற்றும் இணை விமானியை ஏர் இந்தியா நிறுவனம் பணியிடை நீக்கம் செய்திருக்கிறது. இந்த சம்பவம் தொடர்பாக இந்திய சிவில் விமானப் போக்குவரத்து ஆணையத்தின் கீழ் இயங்கும் விமான விபத்துக்கள் புலனாய்வு அலு…

  15. பலஸ்தீன ஊடகவியலாளருக்கு இடையூறு செய்த இஸ் ரேலிய படையினருக்கு சிறைத் தண்டனை பலஸ்­தீன ஊட­க­வி­ய­லா­ள­ரான யுவ­தி­யொ­ருவர் நேரடி செய்தி ஒளி­ப­ரப்­பொன்றில் பங்­கு­பற்­றி­ய­போது அவரை கிண்டல் செய்து, இடை­யூறு விளை­வித்த இஸ்­ரே­லிய இரா­ணுவச் சிப்­பாய்கள் மூவர் தண்­டிக்­கப்­பட்­டுள்­ள­தாக இஸ்ரேல் அறி­வித்­துள்­ளது. சாரா அல் அஸ்ரா எனும் இந்த ஊட­க­வி­ய­லாளர் பலஸ்­தீ­னத்தின் காஸா பிராந்­தி­யத்தில் அபுத் எனும் கிரா­மத்­தி­லி­ருந்து மேற்­கொள்­ளப்­பட்ட நேரடி செய்தி ஒளி­ப­ரப்பில் தக­வல்­களை தெரி­வித்­துக்­கொண்­டி­ருந்தார். அப்­போது அங்கு வந்த இஸ்­ரே­லிய இரா­ணுவ சிப்­பாய்கள் மூவர் சாரா அல் அஸ்­ராவை குழப்பும் வித­மாக கிண்…

  16. ஐ.எஸ். தீவிரவாதிகளை அழித்துவிடுங்கள்: ஐநாவிடம் கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்த 21-வயது யாஷிடி பெண் நியூயார்க்: ஐ.எஸ். தீவிரவாதிகளை முற்றிலுமாக அழித்துவிடுங்கள் என்று 21-வயது யாஷிடி இனப் பெண் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலுக்கு கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்துள்ளார். உலகையே மிரட்டும் ஐ.எஸ். தீவிரவாதிகளின் பிடியில் சிரியா மற்றும் ஈராக் நாடுகள் சிக்கி தவித்து வருகின்றன. ஐ.எஸ். தீவிரவாதிகள் குழந்தைகள், பெண்களை கடத்தி வந்து பாலியல் பலாத்காரம் செய்து சந்தைகளில் விற்பனை செய்தும், கொன்று குவித்தும் அட்டூழியம் செய்து வருகின்றனர். ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு எதிராக அமெரிக்கா தலைமையிலான கூட்டுப் படைகள் மும்முரமாக தாக்குதல் நடத்தி வருகின்றன. கடந்த சில மாதங்களாக ரஷ்யாவு…

  17. பான் கி மூன் பதவிக்காலம் முடிகிறது, ஐ.நாவின் புதிய பொதுச் செயலாளராக பெண்...? [ வியாழக்கிழமை, 17 டிசெம்பர் 2015, 07:55.00 PM GMT ] பான் கி மூன் பதவிக்காலம் முடிவதால், ஐ.நா. சபைக்கு புதிய பொதுச்செயலாளர் தேர்வு செய்யப்படுகிறார். அந்த வாய்ப்பு ஒரு பெண்ணுக்கு கிடைக்கலாம். ஐ.நா. சபையின் பொதுச்செயலாளர் பதவி வகிப்பவர், தென் கொரியாவை சேர்ந்த பான் கி மூன். 2007–ம் ஆண்டு ஜனவரி மாதம் 23–ந் தேதியன்று அந்தப் பதவிக்கு வந்தார். 5 ஆண்டு பதவி வகித்த நிலையில் அவரது பதவிக்காலம் மேலும் 5 ஆண்டுகள் நீட்டிக்கப்பட்டது. அடுத்த ஆண்டு இறுதியில் அவரது பதவிக்காலம் முடிவுக்கு வருகிறது. அந்த வகையில் புதிய பொதுச்செயலாளரை தேர்வு செய்வதற்கான பணிகள் தொடங்கி உள்ளன. ஐ.நா. ப…

  18. 48 மணி நேரத்தில் 23 குர்து இன போராளிகள் கொன்று குவிப்பு: துருக்கியில் ராணுவம் அதிரடி Ca.Thamil Cathamil December 17, 2015 Canada துருக்கியில் குர்து இன போராளிகள் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். அங்கு தென் கிழக்கு துருக்கியில் சிலோப்பி, சிஜ்ரே பகுதிகளில் ஆதிக்கம் செலுத்தி வருகிற குர்து இன போராளிகளுக்கு எதிராக கடந்த 48 மணி நேரத்தில் துருக்கி பாதுகாப்பு படையினர் அதிரடி தாக்குதல்கள் தொடுத்தனர். இந்த தாக்குதல்களில் 23 குர்து இன போராளிகள் கொன்று குவிக்கப்பட்டுள்ளனர். இந்த தகவலை துருக்கி அரசு செய்தி நிறுவனம் ‘ஆனடோலு’ வெளியிட்டுள்ளது. - See more at: http://www.canadamirror.com/canada/54265.html#sthash.A9IfWTCX.dpuf

  19. அமெரிக்கா கடும் விளைவை சந்திக்கும்: வட கொரிய அதிபர் எச்சரிக்கை கிம் ஜோங் உன். | கோப்புப் படம். தனது நாட்டுக்கு எதிரான உத்தரவை பிறப்பித்தால் அமெரிக்கா நினைத்துப் பார்க்க முடியாத மோசமான விளைவுகளை சந்தித்திக்க நேரிடும் என்று வட கொரிய அதிபர் கிம் ஜோங் உன் கூறியுள்ளார். இது தொடர்பாக வட கொரிய ஊடகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில், "வட கொரியா மீது தேவையில்லாத தடைகளை கொண்டுவர அமெரிக்கா முயற்சிப்பது அந்நாட்டுக்கு பெரும் ஆபத்தை ஏற்படுத்தும். இதனால் அந்த நாடு நினைத்துப் பார்க்க முடியாத மோசமான விளைவுகளை சந்தித்திக்க நேரிடும்" என்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தங்களது நாட்டின் இறையாண்மையை தக்கவைத்துக்கொள்ள அணுகுண்டுகளும் ஹைட்ரஜன் குண்டுக…

  20. போர்ப்பகுதிகளில் இந்த ஆண்டு 16 மிலியன் குழந்தைகள் பிறப்பு' இந்த ஆண்டு மட்டும் போர் நடக்கும் பகுதிகளில் 16 மிலியன் குழந்தைகள் பிறந்ததாக ஐநா மன்ற சிறுவர் நிதியம், யுனிசெஃப், கூறுகிறது. இது உலகில் இந்த ஆண்டு பிறந்த குழந்தைகளில் எட்டில் ஒரு பங்காகும். இந்தக் குழந்தைகள் ஐந்து வயது அடைவதற்கு முன்னரே இறப்பதற்கான சாத்தியக்கூறு அதிகமிருப்பதாக யுனிசெஃப் எச்சரித்தது. அதைத் தாண்டி உயிருடன் இருக்கும் குழந்தைகள் அவர்களின் உணர்வு ரீதியான மேம்பாடு பாதிக்கப்படும் அளவுக்கான அழுத்தத்தை அனுபவிக்கக்கூடும் என்று அது கூறியது. குழந்தைகள் பாதுகாப்புக்கு முந்துரிமை தருமாறு சர்வதேச சமூகத்தை யுனிசெஃப் கோரியது. http://www.bbc.com/tamil/global/2015/12/151217_unwa…

  21. இன்றைய நிகழ்ச்சியில்… - ஐரோப்பியக் கரையை அகதிகளும் குடியேறிகளும் வந்தடைவது தொடரும் நிலையில், எல்லையை இறுக்குவதற்கு வழிதேடுகின்றனர் ஐரோப்பிய ஒன்றிய தலைவர்கள்! - அமெரிக்க மத்திய வங்கி தனது வட்டி விகிதத்தை அதிகரித்துள்ளது, ஆசிய மக்களின் அன்றாட வாழ்க்கையில் எப்படி எதிரொலிக்கிறது?- ஆராய்கிறது பிபிசி! - 'துரதிருஷ்டவசமாக ஏற்படும் மரபணுச் சிதைவு மாற்றம் காரணம் இல்லை'-90 சதவீத புற்றுநோய்களுக்கு ஒருவரின் பழக்க வழக்கங்களும் சுற்றுச்சூழலுமே காரணம் என்கிறது புதிய ஆய்வு!

  22. அல்கைதாவின் 'இந்திய கிளை உறுப்பினர்கள்' இருவர் கைது அல்கைதா இயக்கத்தின் இந்தியக் கிளையின் இரண்டு முக்கிய உறுப்பினர்களை கைதுசெய்துள்ளதாக டில்லி பொலிஸார் கூறுகின்றனர். இந்தக் கைதுகள் மூலம் அந்தப் பிராந்தியத்தில் அல்கைதாவின் நடவடிக்கைகளுக்கு கணிசமான பின்னடைவுகள் ஏற்படும் என்று டில்லியின் காவல்துறை கூறுகின்றது. கைதுசெய்யப்பட்டவர்களில் ஒருவர் முஹம்மட் ஆசிஃப் என்றும் அவர் இந்திய துணைக் கண்டத்தில் அல்கைதாவின் ஸ்தாபக உறுப்பினர் என்றும் அதிகாரிகள் கூறுகின்றனர். ஆப்கானிஸ்தான்- இந்திய எல்லையில் உள்ள ஆயுததாரிகளின் முகாம்களில் பயிற்சிபெற்றவர் என்றும் செய்திகள் கூறுகின்றன. அல்கைதா இயக்கத்தின் உலகளாவிய தலைவர், இந்தியாவில் ஜிஹாதிய போருக்கு அழைப்புவிடுத்த…

  23. 6 ‘இல்லை’கள்... இதனாலேயே பாரீஸ் ஒப்பந்தம் பூமியைக் காக்கப்போவதில்லை! பயங்கரவாத தாக்குதலில் இருந்து இன்னமும் விடுபடாத அதே பாரீஸில்தான் சர்வதேசப் பருவநிலை மாற்ற உச்சி மாநாடு நடந்து முடிந்திருக்கிறது. பயங்கரவாதத்தைக் காட்டிலும் அதிமுக்கியமான இந்த உலகம் தழுவிய பிரச்னையை, 195 நாடுகள் 2 வாரங்கள் விவாதித்துத் தீர்த்து, ஓர் ஒப்பந்தத்தையும் நிறைவேற்றியிருக்கின்றன. இந்த ஒப்பந்தத்தின் நோக்கங்கள் என்னென்ன? சுற்றுச்சூழல் மாசுபடுவதற்குக் காரணமான கரியமில வாயு உள்ளிட்ட பசுங்குடில் வாயு வெளியேற்றத்தை (கிரீன்ஹவுஸ் எமிஷன்) கட்டுப்படுத்தவேண்டும். புவி வெப்பமயமாதல் தடுக்கப்படவேண்டும். தற்போதைய நிலையில், உலகின் சராசரி வெப்பநிலை 3 டிகிரி செல்ஷியஸும், அதற்கு மேலும் அதி…

  24. ஆஸ்திரேலியாவில் பயங்கர சூறாவளி:வீடுகள் சாலைகள் சேதம் சிட்னி: ஆஸ்திரேலியாவில் மணிக்கு 200 கி.மீ வேகத்துக்கும் அதிகமான வேகத்தில் சூறாவளி காற்றால் மரங்கள் வேரோடு சாய்ந்துள்ளன. பல இடங்களில் மின் இணைப்புகள் துண்டிக்கப்பட்டுள்ளதால் மக்கள் மத்தியில் பீதி நிலவுகிறது. ஆஸ்திரேலியாவில் உள்ள சிட்னியில் மணிக்கு 200 கி.மீ வேகத்துக்கும் அதிகமான அபூர்வ சுறாவளி வீசியது. அதனை தொடர்ந்து ஆலங்கட்டியுடன் கூடிய மழை பெய்தால் வீடுகள்,கார்கள் பலத்த சேதம் அடைந்துள்ளன. ஆலங்கட்டி மழை ஒவ்வொன்றும் கிரிக்கெட் பந்தின் அளவில் விழுந்ததால் மக்கள் பீதியுடன் சாலைகளில்ஓடினர். சிட்னியில் உள்ள சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கும் விமானமும் புறப்பட்டு செல்லும் விமான சேவையையும…

  25. ஸ்பெயின் நாட்டு பிரதமரின் முகத்தில் குத்திய இளைஞர் (வீடியோ) 17, டிசம்பர் 2015 (10:23 IST) ஸ்பெயின் நாட்டின் பிரதமராக கடந்த 2011 முதல், கன்சர்வேடிவ் கட்சியின் மரியானோ ரஜோய் பதவி வகித்து வருகிறார். 60 வயதாகும் அவர் மீது பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகளை, எதிர்கட்சியான சோஷியலிஸ்ட் கட்சியினர் கூறி வருகின்றனர். இந்நிலையில் வரும் ஞாயிற்றுக்கிழமை அன்று தேர்தல் நடக்க உள்ளது. இதில் தன்னை எதிர்த்து பிரதமர் வேட்பாளராக போட்டியிடும் சோஷியலிஸ்ட் கட்சியின் பெட்ரோ சான்செஸ் உடன் நேருக்கு நேர் விவாதம் நடத்தி பிரசாரத்தில் கலந்துகொள்ள ரஜோய் வந்திருந்தார். அப்போது, கூட்டத்திற்கு இடையே, இளைஞர் ஒருவர் பிரதமரின் முகத்தில் பலமாக குத்தினார். காயத்துடன் நிலைகுலைந்த பிரதமரை அங்கிருந்தவர்…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.