Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. பட மூலாதாரம்,GETTY IMAGES 2 மணி நேரங்களுக்கு முன்னர் அமெரிக்காவின் வடகிழக்கு பகுதியில் உள்ள கொசுக்களில் ‘EEE’ எனப்படும் அரிய, ஆனால் மிகவும் ஆபத்தான வைரஸ் கண்டறியப்பட்டிருக்கிறது. இந்த வைரஸ் உயிருக்கே ஆபத்து விளைவிக்கக் கூடும். ‘ஈஸ்டர்ன் ஈக்வைன் என்செபாலிடிஸ் அல்லது ‘ட்ரிபிள் ஈ’ (Eastern Equine Encephalitis - EEE) என்று அழைக்கப்படும் இந்த வைரஸ், அந்தத் தொற்றால் பாதிக்கப்பட்டிருக்கும் கொசுக்கள் கடிப்பதால் பரவுகிறது. இந்த வைரஸ் அங்கு கண்டறியப்பட்டவுடன், மசாசூசெட்ஸ் மாகாணத்தில் உள்ள சமூகங்கள் அதிக ஆபத்தில் இருப்பதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனால், அப்பகுதியில் இருக்கும் மக்கள் எச்சரிக்கையாக இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளனர். …

  2. Published By: RAJEEBAN 01 SEP, 2024 | 01:16 PM ஹமாஸ் அமைப்பினால் பணயக்கைதிகளாக பிடிக்கப்பட்ட ஆறுபேரின் உடல்களை மீட்டுள்ளதாக இஸ்ரேலிய இராணுவம் தெரிவித்துள்ளது. இந்த உடல்களில் அமெரிக்க பிரஜையொருவரின் உடலும் காணப்படுவதாக இஸ்ரேலிய இராணுவம் தெரிவித்துள்ளது. தாங்கள் அவர்கள் இருந்த பகுதிக்கு செல்வதற்கு சற்று முன்னதாக அவர்கள் கொல்லப்பட்டிருக்கலாம் என இஸ்ரேல் தெரிவித்துள்ளது.. மீட்கப்பட்ட உடல்களில் கலிபோர்னியாவை சேர்ந்த ஹேர்ஸ் கோல்ட்பார்க் கொலின் என்பவரின் உடலும் மீட்கப்பட்டுள்ளதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது. இவர் கடந்த வருடம் ஒக்டோபர் மாதம் ஏழாம் திகதி நெவா இசைநிகழ்ச்சியிலிருந்து துப்பாக்கி முனையில் கடத்தி ச…

  3. 01 SEP, 2024 | 10:13 AM பிதோராகர்: உத்தராகண்ட் ஓம் பர்வத மலைப் பகுதியில் முதல் முறையாக பனிக்கட்டிகள் கடந்த வாரம் முற்றிலும் மாயமானது பலருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. உத்தராகண்ட் மாநிலத்தில் வியாஸ் பள்ளத்தாக்கு பகுதியில் சுமார் 14,000 அடி உயரத்தில் அமைந்துள்ளது ஓம் பர்வத மலை. இதன் வடிவமைப்பு இந்தி எழுத்து ஓம் போல இருப்பதால் இது ஓம் பர்வத மலை என அழைக்கப்படுகிறது. இந்த மலை எப்போதும் பனி படர்ந்து காணப்படுவதால், இது பிரபல சுற்றுலாத் தளமாக விளங்கியது. இந்நிலையில் இந்த ஓம் பர்வதமலை கடந்த வாரம் பனிக்கட்டிகள் முற்றிலும் மாயமாகி வெறும் பாறைகளாக காட்சியளித்தன. இதுபோல் ஓம் பர்வத மலை பனி இல்லாமல் இருந்தது இதுவே முதல் முறை. இது இப்பகு…

  4. உக்ரைன் விமானப்படைத் தளபதி பதவியிலிருந்து நீக்கம். உக்ரைனின் விலையுயர்ந்த புதிய எப் – 16 போர் விமானம் ஒன்று அழிக்கப்பட்டது தொடர்பான விவாதத்திற்கு மத்தியில் உக்ரைன் விமானப்படை தளபதியை ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி பதவியில் இருந்து நீக்கம் செய்துள்ளார். லெப்டினன்ட் ஜெனரல் மைகோலா ஓலேஷ்சுக்கை பணிநீக்கம் செய்ததற்கான காரணத்தை ஜெலென்ஸ்கி குறிப்பிடவில்லை, ஆனால், அனைத்து வீரர்களையும் கவனித்துக் கொள்ளும் பொறுப்பு தனக்கு இருப்பதாக தெரிவித்துள்ளார். இதேவேளை, உக்ரைனின் விமானப்படையின் இடைக்கால தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் அனடோலி கிரிவோனோஷ்கோ நியமிக்கப்பட்டுள்ளார் என இராணுவத்தின் பொது ஊழியர்கள் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.c…

  5. பட மூலாதாரம்,EPA AND NISHANTH படக்குறிப்பு, கோலாலம்பூரில் நடக்கும் மீட்புப் பணியும்(இடது), 26 அடி பள்ளத்திற்குள் விழுந்த இந்திய பெண்ணும் (வலது) கட்டுரை தகவல் எழுதியவர், கெல்லி என்ஜி பதவி, பிபிசி நியூஸ் 31 ஆகஸ்ட் 2024, 08:54 GMT புதுப்பிக்கப்பட்டது 28 நிமிடங்களுக்கு முன்னர் மலேசியா தலைநகரம் கோலாலம்பூரில் நடைபாதையில் திடீரென ஏற்பட்ட குழிக்குள் (sinkhole) விழுந்து காணாமல் போன இந்திய பெண்ணைத் தேடும் பணியில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. எட்டாவது நாளாகத் தொடரும் தேடுதல் பணியில், இதற்கு மேல் முக்குளிக்கும் வீரர்கள்(divers) உள்ளே செல்வது "மிகவும் ஆபத்து" என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்தியாவ…

  6. பொது இடங்களில் பெண்கள் பேசக்கூடாது; தலிபான்கள் கட்டுப்பாடு ஆப்கானிஸ்தானில் பொது இடங்களில் பெண்கள் பேசக்கூடாது மற்றும் முகத்தையும் உடலையும் காட்டக்கூடாது என்று தலிபான்கள் கட்டுப்பாட்டை விதித்துள்ளனர். புதிய சட்டங்கள் ஆப்கானிஸ்தான் பெண்கள் மற்றும் சிறுமிகளை குறிப்பாக கடுமையாக பாதித்தது, பெண்கள் தங்கள் முகத்தையும் உடலையும் மட்டுமல்ல, தங்கள் குரலையும் வீட்டிற்கு வெளியே மறைக்க வேண்டும். இந்த சட்டத்தை ஐக்கிய நாடுகள் சபையும் உரிமைக் குழுக்களும் சமீபத்திய விதிகளை கடுமையாக விமர்சித்துள்ளன. அமெரிக்கப் படைகளை வெளியேற்றி ஆகஸ்ட் 2021 இல் அதிகாரத்தைக் கைப்பற்றியதில் இருந்து , தலிபான்கள் பெண்களின் உரிமைகள் விஷயத்தில் கடந்த இரண்டு தசாப்தங்களில் அடைந்த முன்னேற்றத்தைப் ப…

  7. காசா (Gaza) பகுதியின் பல்வேறு பகுதிகளில் 3 நாட்கள் போரை இடைநிறுத்தம் செய்ய இஸ்ரேலும் (Israel) ஹமாஸும் (Hamas) ஒப்புக்கொண்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. காசாவிலுள்ள குழந்தைகளுக்கான போலியோ (Polio) சொட்டு மருந்து வழங்குவதற்காகவே குறித்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. காசா பகுதியில் இஸ்ரேல் மேற்கொண்டு வரும் மிலேச்சத்தனமான தாக்குதல்களில் இதுவரை 40,000இற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். போர் நிறுத்தம் இதனிடையே, இந்த போரை முடிவுக்கு கொண்டு வர அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் முயற்சிகள் தொடர்ந்தும் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற போதிலும் இதற்கான ஒப்பந்தங்கள் இன்னும் கையெழுத்தாகாமல் நீடித்துக் கொண்டு இருக்கின்றன. காசாவிலுள…

  8. பட மூலாதாரம்,PLANET LABS படக்குறிப்பு, ரஷ்யா மீது தாக்குதல் நடத்தும் யுக்ரேன் பல்வேறு ஆயுதங்களை பயன்படுத்தி வருகிறவருகிறது கட்டுரை தகவல் எழுதியவர், ஜானதன் பீல் & தாமஸ் ஸ்பென்சர் பதவி, பிபிசி பாதுகாப்புச் செய்தியாளர் & பிபிசி வெரிஃபை 30 ஆகஸ்ட் 2024, 02:23 GMT புதுப்பிக்கப்பட்டது 3 மணி நேரங்களுக்கு முன்னர் மேற்கத்தியத் தொழில்நுட்பமும் நிதியும் ரஷ்யாவிற்குள் நூற்றுக்கணக்கான தொலைதூரத் தாக்குதல்களை நடத்த யுக்ரேனுக்கு உதவி வருகின்றன. மோதல்கள் தீவிரமடையும் என்ற அச்சத்தால், மேற்கத்திய நாடுகளால் வழங்கப்பட்ட வெடிமருந்துகளைப் பயன்படுத்த யுக்ரேனுக்கு நேட்டோ நட்பு நாடுகள் இன்னும் அனுமதி வ…

  9. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, 2050ம் ஆண்டில் 10-ல் ஒரு நபருக்கு இது போன்ற கேட்கும் திறனில் பாதிப்பு ஏற்படலாம் என்று எச்சரித்துள்ளது உலக சுகாதார நிறுவனம் 2 மணி நேரங்களுக்கு முன்னர் உலக சுகாதார நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்று, 2050-ஆம் ஆண்டுக்குள் உலக மக்கள் தொகையில் 250 கோடி நபர்கள் ஏதோ ஒரு வகையில் கேட்கும் திறனில் பாதிப்பைச் சந்திப்பார்கள் என்று குறிப்பிட்டுள்ளது. 2050-ஆம் ஆண்டில் 10-இல் ஒரு நபருக்கு கேட்கும் திறனில் பாதிப்பு ஏற்படலாம் என்று எச்சரித்துள்ளது உலக சுகாதார நிறுவனம். தற்போதைய சூழலில் உலக மக்கள் தொகையில் 5% நபர்களுக்கு, அதாவது 43 கோடி மக்கள் கேட்கும் திறனில் பிரச்னைகளைச் சந்தித்து வருகின்றனர். இதில் 3.4…

  10. பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், டெஸ்ஸா வோங் மற்றும் ஜோயல் குயின்டோ பதவி, பிபிசி நியூஸ், சிங்கப்பூரில் இருந்து 3 மணி நேரங்களுக்கு முன்னர் சீனாவுக்கும், பிலிப்பைன்ஸுக்கும் இடையே ஏற்கெனவே கடல் எல்லை தொடர்பான பிரச்னை நிலவி வருகிறது. இந்த நிலையில் இரு நாடுகளும் தென்சீனக் கடலில் மற்றொரு இடம் தொடர்பாக மோதிக் கொண்டுள்ளன. சீனா, பிலிப்பைன்ஸ் ஆகிய இரு நாடுகளுமே கடலில் உள்ள பல்வேறு தீவுகள் மற்றும் பகுதிகளுக்கு உரிமை கோருகின்றன. கடந்த சில ஆண்டுகளாக இந்த மோதல் அதிகரித்து வருகிறது. இரு நாட்டு கப்பல்களும் மோதிக்கொள்ளுதல், கைகலப்புகள் மற்றும் போர் மிரட்டல் குற்றச்சாட்டுகளும் அதிகரித்து வருகின்றன. …

  11. பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், க.சுபகுணம் பதவி, பிபிசி தமிழ் 29 ஆகஸ்ட் 2024, 03:09 GMT புதுப்பிக்கப்பட்டது 54 நிமிடங்களுக்கு முன்னர் எறும்புகளின் வாழ்வியல், அவற்றின் சமூகக் கட்டமைப்பு மனிதர்களுக்கு நிகரானவை என்பதை ஆய்வாளர்கள் பல தருணங்களில் உறுதி செய்துள்ளனர். அவைதம் சகோதரிகளுடன் கொண்டிருக்கும் உறவு, பாசப் பிணைப்பு ஆகியவை பல தருணங்களில் விஞ்ஞானிகளை வியப்பில் ஆழ்த்தியுள்ளது. அப்படிப்பட்ட ஒரு கண்டுபிடிப்பு சமீபத்தில் கிடைத்துள்ளது. ஈரப்பதம் மிக்க கட்டைகளில் கூடமைத்து வாழும் கட்டெறும்பு வகையைச் சேர்ந்த எறும்பு வகை ஒன்றில், ஃப்ளோரிடாவை சேர்ந்த விஞ்ஞானிகள் ஓர் அதிசயமான பழக்கத…

  12. 29 AUG, 2024 | 11:33 AM இஸ்ரேலிய படையினரின் துப்பாக்கி பிரயோகத்தினால் தனது வாகனம் சேதமடைந்ததை தொடர்ந்து காசாவிற்கான மனிதாபிமான நடவடிக்கைகளை இடைநிறுத்தியுள்ளதாக உலக உணவு திட்டம் தெரிவித்துள்ளது. இவ்வாறான தாக்குதலில் தனது வாகனம் சிக்கியது இதுவே முதல்தடவை என உலக உணவு திட்டம் தெரிவித்துள்ளது. பாதுகாப்பு அனுமதி வழங்கப்பட்ட போதிலும் சோதனை சாவடிக்கு அருகில் தனது வாகனம் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக உலக உணவு திட்டம் தெரிவித்துள்ளது. இது ஏற்றுக்கொள்ள முடியாதது என தெரிவித்துள்ள உலக உணவு திட்டத்தின் தலைவர் சின்டி மக்கெய்ன் காசாவில் தனது அமைப்பின் பணியாளர்களின் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தியுள்ள தொடர்ச்சியான…

  13. பட மூலாதாரம்,BBC படக்குறிப்பு, சீமேநே எனும் ஒரு நாடோடி பழங்குடி சமூகத்தைச் சேர்ந்தவர் மார்டினா கட்டுரை தகவல் எழுதியவர், அலெகான்ட்ரோ மிலன் வலென்சியா பதவி, பிபிசி நியூஸ் முண்டோ 27 ஆகஸ்ட் 2024 பொலிவியக் காட்டில் மார்டினா காஞ்சி நேட் நடந்து செல்லும்போது, சிவப்பு வண்ணத்துப்பூச்சிகள் அவரைச் சுற்றி பறக்கின்றன. அவரின் வேகத்திற்கு ஈடுகொடுக்க முடியாமல் எங்கள் குழு அவரை மெதுவாக நடக்க கோரிக்கை வைத்தது. அவருடைய அடையாள அட்டை அவருக்கு 84 வயது என்று சொல்கிறது. ஆனால் 10 நிமிடங்களுக்குள், மூன்று யூக்கா (Yucca) மரங்களின் வேர்களில் இருந்து கிழங்குகளைப் பிரித்தெடுக்க அவற்றை தோண்டி எடுக்கிறார். தனது கத்தியால் இரண்டே வெட…

  14. ரஷ்யா – உக்ரைன் போர் மீண்டும் தீவிரமடைந்துள்ளது. உக்ரைனின் மின் கட்டமைப்புகளை குறிவைத்து ரஷ்ய ராணுவம் நேற்று மிகப்பெரிய தாக்குதல் நடத்தியது. இதனால், உக்ரைனின் பெரும்பாலான பகுதிகள் இருளில் மூழ்கியுள்ளன. ரஷ்யா – உக்ரைன் இடையே கடந்த 2022 பெப்ரவரி முதல் போர் நடந்து வருகிறது. கடந்த 6-ம் திகதி ரஷ்யாவின் குர்ஸ்க் பகுதியில் 1,263 சதுர கி.மீ. பரப்பளவை உக்ரைன் ராணுவம் கைப்பற்றியது. அப்போதுமுதல் இரு நாடுகள் இடையே போர் மீண்டும் தீவிரமடைந்துள்ளது. இந்த சூழலில், ரஷ்யாவின் சரடோவ் நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு மீது நேற்று அதிகாலை திடீர் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. சரடோவ் நகரில் 38 மாடிகள் கொண்ட ‘வோல்கா ஸ்கை’ என்ற அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. இதன் 28-வது மாடியில…

  15. சூடானில் கனமழை – 30 பேர் பலி. சூடானில் பெய்து வரும் பலத்த மழையினால் நீர்த்தேக்கத்தின் அணைக்கட்டு உடைந்துள்ளதையடுத்து ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் 20 கிராமங்கள் பாதிக்கபட்டுள்ளதுடன் 30 பேர் உயிரிழந்துள்ளர். இந்த சம்பவத்தில் மேலும் பலர் உயிரிழந்திருக்கலாம் என ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது. குறித்த பகுதி அடையாளம் காண முடியாத அளவிற்கு அழிந்துள்ளதோடு மின்சாரம் மற்றும் தண்ணீர் குழாய்கள் சேதமடைந்துள்ளன. 150 முதல் 200 பேர் வரை காணமல் போயுள்ளதுடன் ஏறக்குறைய 50,000 பேரின் வீடுகள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. https://athavannews.com/2024/1397201

  16. அமெரிக்க தேர்தல் வரலாற்றில் கமலா ஹாரிஸ் சாதனை! அமெரிக்க அதிபர் தேர்தல் எதிர்வரும் நவம்பர் மாதம் 5 ஆம் திகதி நடைபெறுகிறது. இந்த தேர்தலில் ஜனநாயக கட்சி சார்பில் அதிபர் பதவிக்கு கமலா ஹாரிஸ் போட்டியிடுவதுடன், குடியரசு கட்சி வேட்பாளராக டிரம்ப் போட்டியிடுகிறார். இந்த தேர்தலில் போட்டியிடுவதன் மூலம் அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும் முதலாவது கறுப்பின மற்றும் ஆசிய அமெரிக்க பெண் என்ற வரலாற்று சாதனையை கமலா ஹாரிஸ் படைத்துள்ளார். இந்த நிலையில் அமெரிக்க அதிபர் தேர்தலுக்கு இன்னும் 2 மாதங்களே உள்ள நிலையில் கமலா ஹாரிஸ் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதுடன், கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக அவர் பிரசாரம் செய்து ஆதரவு திரட்டி வருகிறார். இந்த நிலையில் கமலா ஹாரிஸ் பி…

  17. அமெரிக்காவில் உள்ள தலைவர்கள் தூங்கிக் கொண்டு இருப்பதால் மூன்றாம் உலகப்போர் மூள வாய்ப்பு உள்ளது என அமெரிக்க ஜனாதிபதி வேட்பாளர் டொனால்ட் டிரம்ப் எச்சரித்துள்ளார். இஸ்ரேலுக்கும், ஹிஸ்புல்லாவுக்கும் இடையே சண்டை தீவிரமடைந்துள்ள நிலையில், இது குறித்து அமெரிக்க ஜனாதிபதி வேட்பாளர் டொனால்ட் டிரம்ப் தனது எக்ஸ் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளதாவது; அமெரிக்காவுக்காக மத்திய கிழக்கு நாடுகளில் பேச்சுவார்த்தை நடத்துவது யார்? எல்லா இடங்களிலும் குண்டுகள் வீசப்படுகின்றன. ஜனநாயக கட்சியினரால் வெளியேற்றப்பட்ட ஜோ பைடன் கலிபோர்னியாவில் உள்ள கடற்கரையில் தூங்குகிறார். கமலா ஹாரிஸ், துணை ஜனாதிபதி வேட்பாளருடன் வாகனப் பேரணி நடத்தி பிரசாரம் மேற்கொண்டு வருகிறார். இச்சூழல் மூன்றாம் உலகப்போரை நோக்கி …

  18. பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், வில் வெர்னோன் பதவி, பிபிசி செய்திகள் 3 மணி நேரங்களுக்கு முன்னர் பிரபலமான குறுஞ்செய்தி செயலியான டெலிகிராமின் தலைமை செயல் அதிகாரி பாவெல் துரோவ், பிரான்சில் கைது செய்யப்பட்டு தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளார். இது குறித்து கருத்து தெரிவித்துள்ள டெலிகிராம் நிறுவனம், அவரிடம் மறைத்து வைக்க எதுவும் இல்லை என்று கூறியுள்ளது. டெலிகிராம் செயலி மீதான விதிமுறை மீறல் குற்றச்சாட்டு தொடர்பாக வடக்கு பாரிஸ் விமான நிலையத்தில் துரோவ் கைது செய்யப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். டெலிகிராம் செயலி குற்றச் செயல்களுக்காக பயன்படுத்தப்படுவதை கட்டுப்படுத்தவில்லை என்…

  19. பட மூலாதாரம்,EPA கட்டுரை தகவல் எழுதியவர், ஜரோஸ்லாவ் லூகீவ் பதவி, பிபிசி நியூஸ் 2 மணி நேரங்களுக்கு முன்னர் இஸ்ரேலை நோக்கி ஏவுகணைகள் மற்றும் ராக்கெட்டுகளை ஏவுவதற்கான நகர்வுகளைக் கண்டறிந்த நிலையில், லெபனானில் உள்ள ஹெஸ்புலா இலக்குகள் மீது தங்கள் போர் விமானங்கள் தாக்குதல் நடத்தியதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது. “இந்த அச்சுறுத்தல்களைக் களைவதற்கான தற்காப்பு நடவடிக்கையாக, இஸ்ரேல் பாதுகாப்புப் படைகள் பயங்கரவாத இலக்குகள் மீது தாக்குதல் நடத்தியதாக” இஸ்ரேல் ராணுவத்தின் செய்தித் தொடர்பாளர் டேனியல் ஹகாரி தெரிவித்துள்ளார். இரானால் ஆதரவளிக்கப்படும் ஷியா முஸ்லிம் குழுவான ஹெஸ்புலா இயங்கும் பகுதிகளி…

  20. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, ட்யூரின் சவக்கோடியில் உள்ள தாடி வைத்த மனிதரின் உருவம் கட்டுரை தகவல் எழுதியவர், ஜெர்மி ஹோவெல் பதவி, பிபிசி செய்தியாளர் 24 ஆகஸ்ட் 2024, 13:19 GMT புதுப்பிக்கப்பட்டது 43 நிமிடங்களுக்கு முன்னர் இயேசுவின் உடலில் போர்த்தப்பட்ட துணியாக கருதப்படும் ட்யூரின் சவக்கோடி (Turin Shroud) இயேசுவின் காலகட்டத்தைச் சேர்ந்ததாக இருக்கலாம் என்று இத்தாலி ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள். அவர்களின் ஆய்வு முடிவு, முதலில் 2022 இல் வெளியிடப்பட்டது. ட்யூரின் சவக்கோடி இடைக்காலத்தில் உருவாக்கப்பட்டது என்றும் இயேசு காலத்தை சேர்ந்தது அல்ல என்றும் பரவலாக சொல்லப்படும் கருத்துகளை…

  21. 24 AUG, 2024 | 07:53 AM ஜேர்மனியின் சொலிங்ஜென் நகரில் இடம்பெற்ற கத்திக்குத்து தாக்குதலில் மூவர் கொல்லப்பட்டுள்ளதுடன் நால்வர் படுகாயமடைந்துள்ளனர். நகரில் பெருமளவானவர்கள் கலந்துகொண்ட திருவிழா நிகழ்வொன்றின் போது இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. தாக்குதலை மேற்கொண்ட நபர் இன்னமும் கைதுசெய்யப்படவில்லை என தகவல்கள் வெளியாகியுள்ளன. நபர் கண்மூடித்தனமாக ஏனையவர்கள் மீது கத்திக்குத்தினை மேற்கொண்டார் என தகவல்கள் வெளியாகியுள்ளன. https://www.virakesari.lk/article/191842

  22. அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் அரிசோனா மாகாணத்தில் போட்டியிடுவதாக அறிவித்து இருந்த சுயேட்சை ஜனாதிபதி வேட்பாளர் ராபர்ட் எஃப் கென்னடி(Robert F. Kennedy) தேர்தல் போட்டியில் இருந்து விலகிக் கொள்வதாக அறிவித்துள்ளார். இதற்காக ஆவணங்களை அவர் ஏற்கனவே தாக்கல் செய்துவிட்டதாக அரிசோணா மாகாண செயலாளர் அட்ரியன் ஃபோன்டஸ் தெரிவித்துள்ளார். 11 வேட்பாளர்கள் இந்நிலையில், நேற்றிரவு நடைபெற இருந்த தேர்தல் பரப்புரையில் நாட்டு மக்களிடையே உரையாற்ற ராபர்ட் எஃப் கென்னடி முடிவு செய்திருந்தார். ராபர்ட் எஃப் கென்னடிக்கு ஆதரவு தெரிவித்து இருந்த சூப்பர் பேக் அமைப்பு ஒன்று கூறும் போது, கென்னடி மற்றும் டொனால்ட் ட்ரம்ப் இடையே வேலைவாய்ப்பு தொடர்பாக ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தது. …

  23. உக்ரைனில் (Ukraine) மட்டுமன்றி பிரித்தானிய நிலைகள் மற்றும் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த இடங்கள் மீது தாக்குதல் மேற்கொள்ளும் என ரஷ்யாவின் (Russia) பாதுகாப்பு அமைச்சர் வெளிப்படையாக கடும் எச்சரிக்கையை விடுத்துள்ளார். பிரித்தானியா (UK) வழங்கியுள்ள ஆயுதங்களை உக்ரைன் பயன்படுத்தினால், ரஷ்யா கடுமையான தாக்குதலில் இறங்கும் என்று அந்நாட்டு பாதுகாப்பு அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார். இந்த நிலையில், குறித்த அறிக்கையால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளதுடன் இரு நாடுகளும் நேரடியாக மோதும் நிலை ஏற்படலாம் என்ற அச்சம் மேலோங்கியுள்ளது. பிரித்தானியா வழங்கியுள்ள ஆயுதங்கள் இதற்கான காரணம், பிரித்தானியா பல நவீன ரக ஆயுதங்களை உக்ரைனுக்கு வழங்கியுள்ள நிலையில், அமெரிக்கா வழங…

  24. காசா போர் நிறுத்த முயற்சியில் முன்னேற்றம் இன்றி அமெரிக்கா திரும்புகிறார் பிளிங்கன் -இஸ்ரேலின் தாக்குதல்களில் மேலும் பல பலஸ்தீனர்கள் பலி sachinthaAugust 22, 2024 காசாவில் போர் நிறுத்தம் ஒன்றை எட்டுவதற்கு தவறிய நிலையில் அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் அன்டனி பிளிங்கன் நேற்று (21) பிராந்திய விஜயத்தை முடித்துக்கொண்டு நாடு திரும்பியுள்ளார். பரந்த அளவிலான போர் ஒன்றை தவிர்ப்பதற்கான கடைசி வாய்ப்பாக இது உள்ளது என்றும் அவர் எச்சரித்துள்ளார். எனினும் காசாவில் இஸ்ரேல் நேற்றும் உக்கிர தாக்குதல்களை நடத்தியதோடு கடந்த 24 மணி நேரத்தில் இஸ்ரேலின் முற்றுகையில் இருக்கும் அந்தப் பகுதியில் மேலும் 50 பேர் கொல்லப்பட்டுள்ளனர். அமெரிக்காவின் மத்தியஸ்தத்தில் முன்வைக்கப்பட்டி…

  25. Published By: DIGITAL DESK 3 22 AUG, 2024 | 10:21 AM போஸ்னியா நாட்டின் மேற்கே சன்ஸ்கி மோஸ்ட் நகரில் உள்ள பாடசாலை ஒன்றில் பணியாளர் ஒருவர் புதன்கிழமை (21) துப்பாக்கி சூடு நடத்தியதில் பாடசாலை அதிபர், செயலாளர் மற்றும் ஓய்வு பெற்ற ஆங்கில ஆசிரியை உயிரிழந்தனர். துப்பாக்கி சூட்டை நடத்திய நபர் தன்னை தானே சுட்டுக் கொண்டுள்ளார். நெஞ்சில் காயம் பட்ட அவரை மீட்டு சிகிச்சைக்கு கொண்டு சென்றுள்ளனர். பாடசாலையில் கோடை விடுமுறை விடப்பட்டுள்ளது. இதனால், மாணவர்கள் யாரும் பாடசாலைக்கு வரவில்லை. எனினும், பரீட்சை எழுதுவதற்காக சில மாணவர்கள் வந்துள்ளனர். இந்த சம்பவத்தில் பாடசாலை மாணவர்கள் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என பொலிஸ் திணைக்கள ப…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.