உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26688 topics in this forum
-
ஐ.எஸ். போராளி, குழு தனது குழுவில் இணைந்து கொண்டுள்ள வெளிநாட்டு போராளிகளின் பிள்ளைகளுக்கான முதல் இரு ஆங்கிலப் பாடசாலைகளை தனது பிராந்திய தலைநகரில் திறந்து வைத்துள்ளதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன. ஐ.எஸ். போராளி குழுவில் இணைந்து கொள்ளும் முகமாக 3 பிரித்தானிய மாணவிகள் சிரியாவுக்கு பயணத்தை மேற்கொண்டுள்ளமை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையிலேயே இந்த தகவல் வெளியாகியுள்ளது. போராளிகளால் சிரிய ரக்கா நகரில் ஆண்களுக்கும் பெண்களுக்கும் தனித்தனியாக பாடசாலைகள் திறந்து வைக்கப்பட்டுள்ளதாக கூறப் படுகிறது. http://www.virakesari.lk/articles/2015/02/25/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A8%E0%AE%BE%E0%A…
-
- 0 replies
- 187 views
-
-
அமைதிப்படைகளில் ஆளில்லா விமானங்களை அதிகளவில் பயன்படுத்த வேண்டும் எனவும், தொழில்நுட்பத்தை மேம்படுத்த வேண்டும் எனவும் ஐநா சிறப்பு குழு பரிந்துரை செய்துள்ளது.ஐக்கிய நாடுகள் சபை சார்பில் செயல்பட்டு வரும் அமைதிப்படை, உலகின் பல்வேறு பகுதிகளில் நடக்கும் வன்முறை, தீவிரவாத செயல்களை ஒடுக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறது. பல்வேறு நாடுகளை சேர்ந்த வீரர்கள் அடங்கிய இந்த அமைதிப்படையை மேம்படுத்த ஐநா திட்டமிட்டது. இதுகுறித்து ஆய்வு செய்ய சிறப்பு குழு ஒன்று அமைக்கப்பட்டது. இக்குழுவினர் ஆய்வு செய்து 119 பரிந்துரைகளை அளித்துள்ளனர். முக்கியமாக ஆளில்லா விமானங்களின் பயன்பாட்டை அதிகரிக்க வேண்டும்; இந்த விமானங்கள் மூலம் கண்காணிப்பு பணி மேற்கொள்வதால் உயிரிழப்புகள் தடுக்கப்படும் என சி…
-
- 1 reply
- 226 views
-
-
ஆஸி,யில் அகதியாக வந்து அரசியலில் குதித்துள்ள ஈழத்தமிழர் நியூ சவூத் வேல்ஸ் மாநில தேர்தலில் அவுஸ்திரேலியத் தமிழர் ஒருவர் போட்டியிடுகிறார். இலங்கையில் இருந்து அவுஸ்திரேலியாவில் குடியேறிய சுஜன் செல்வன் பசுமைக் கட்சியின் வேட்பாளராக் களமிறங்குகிறார். மேற்கு அவுஸ்திரேலிய பிராந்தியத்தில் தமிழர்கள் செறிந்து வாழும் Prospect தொகுதியில் தாம் போட்டியிடுவதாக திரு.செல்வன் அறிவித்துள்ளார். இந்த வேட்பாளர், 15 வருடங்களுக்கு முன்னர் அவுஸ்திரேலியாவை அடைந்து, தற்போது Wentworthville பிரதேசத்தில் சிறிய அளவிலான வர்த்தக முயற்சியின் உரிமையாளராக செயற்படுகிறார். தாம் பசுமைக் கட்சியைத் தெரிவு செய்வதற்குரிய காரணங்களை விபரித்த திரு.செல்வன், இலங்கைத் தமிழர்களின் பிரச்சனை உள்ளடங்கலாக மனித உரிமை ம…
-
- 6 replies
- 579 views
-
-
பொதுமக்கள் முதலீடே இல்லாமல், முழுக்க முழுக்க ஒரே குடும்பத்துக்குச் சொந்தமான உலகின் மிகப் பெரிய நிறுவனம் எது தெரியுமா? ஸ்வீடன் நாட்டில் இருக்கும் ஃபர்னிச்சர் கம்பெனி ஐக்கியா! ஸ்வீடனில் அஹூனியார்ட் (Agunnaryd) எனும் நகரம். இதன் அருகே எல்ம்டார்ட் (Elmtaryd) என்னும் சிறிய பண்ணை இருக்கிறது. இங்கே ஒரு நடுத்தரக் குடும்பத்தில் இங்வார் காம்ப்ராத் (Ingvar Kamprad) பிறந்தார். அவர் பின்புலத்தில் பல சோகங்கள் உண்டு. பலனில்லா உழைப்பு இங்வாரின் தாத்தா ஜெர்மனியிலிருந்து பிழைப்பு தேடி ஸ்வீடனுக்குக் குடியேறினார். ஒரு பண்ணையில் வேலை பார்த்தார். அஹூனியார்ட் இருந்த பகுதி நிலம் அத்தனை வளமையானதல்ல. நிலத்தை ஆழமாகத் தோண்டவேண்டும், உரம் போடவேண்டும், நீர் பாய்ச்சவேண்டும், களை எடுக்கவேண்டும், ப…
-
- 3 replies
- 629 views
-
-
உத்தரகாண்ட்டில் ராகுல்... "டென்ட்"டில் தங்கி ஓய்வெடுக்கிறார்.. நைனிடால்: தாய்லாந்து போவதற்காக ராகுல் காந்தி டிக்கெட் எடுத்ததாக கூறப்பட்ட நிலையில் தற்போது அவர் அங்கு போகவில்லை. மாறாக இந்தியாவில்தான் ஓய்வெடுத்து வருகிறார். அதுவும் உத்தரகாண்ட் மாநிலத்தில்தான் அவர் தங்கியிருக்கிறார் என்பது தெரிய வந்துள்ளது. கட்சிப் பணிகளிலிருந்து எனக்கு விடுப்பு தேவை என்று காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியிடம் விண்ணப்பித்து அதற்கு அவரும் அனுமதி வழங்கியது பெரும் சர்ச்சையாக சில கட்சிகளால் கிளப்பப்பட்டு வருகிறது. ராகுல் காந்தியின் சீரியஸ்னஸ் என்ன என்று பாஜக கேள்வி எழுப்பியுள்ளது. ராகுல் காந்தியின் ஓய்வு சர்ச்சையாகியுள்ள நிலையில் அவர் தனது ஓய்வைத் தொடங்கியுள்ளார். முதலில் அவர் பாங்காங் ச…
-
- 0 replies
- 295 views
-
-
கடந்த ஆண்டு 239 பயணிகளுடன் மாயமான மலேசிய விமானம் பனிப்பிரதேசமான அண்டார்டிகாவுக்கு கடத்தப்பட்டதாக பரபரப்பு தகவல் வெளியாகி உள்ளது. மாயமான விமானம் மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் இருந்து சீனத் தலைநகர் பீஜிங்கிற்கு 239 பயணிகளுடன் கடந்த ஆண்டு மார்ச் மாதம் 8–ந்தேதி மலேசியன் ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமான எம்.எச்.370 போயிங் ரக விமானம் புறப்பட்டுச் சென்றது. அதில் 5 இந்திய பயணிகளும் இருந்தனர். அந்த விமானம் புறப்பட்டுச் சென்ற சிறிது நேரத்தில் தரைக்கட்டுப்பாட்டு நிலையத்துடன் கொண்டிருந்த தொடர்பை இழந்தது. பின்னர் அந்த விமானம் என்னவானது, அதில் இருந்த பயணிகள் என்ன ஆனார்கள்? என்பது கிட்டத்தட்ட ஓராண்டாகி விட்ட நிலையிலும் உறுதியாக தெரியவரவில்லை. ஓயாத சர்ச்சை மாயமான விமானம் விபத்து…
-
- 0 replies
- 531 views
-
-
ஈராக்கிய இராணுவத்தை 2001ல் அமெரிக்கா கலைத்தபோது அதன் உயரதிகாரிகளாக இருந்த பலரே இன்று ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாதக் குழுவின் வழிநடத்துனர்களாக, தலைமைகளாக இருக்கின்றார்கள். இது அமெரிக்காவே எதிர்ப்பார்க்காத ஒரு விடயம் இன்று எங்களின் வீட்டுத் தொலைக்காட்சிகளில் கணனித் திரைகளில் காணும் மனிதர்களை கழுத்தறுத்துக் கொலை செய்யும் காட்சிகளும், உயிரோடு எரியூட்டிக் கொல்லும் காட்சிகளும் இந்த ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாதக் குழுவினைப் பற்றிய ஒரு கேள்வியை உலகம் எங்கும் எழுப்பியுள்ளது. இவ்வாறு கடந்த சனிக்கிழமை லங்காசிறி வானொலியில் இடம்பெற்ற நிஜத்தின் தேடல் நிகழ்ச்சியில் கனடாவிலிருக்கும் ஆய்வாளர் சுரேஸ் தர்மா தெரிவித்தார். நியூயோர்க் ரைம்ஸ் பத்திரிகை அண்மையில், அமெரிக்காவின் இந்த இஸ்லாமிய அமைப்பிற…
-
- 0 replies
- 267 views
-
-
கனடா- ஒன்ராறியோவின் மிகவும் செல்வாக்கு மிக்கவர்களில் ஒருவரும் நீண்ட காலம் மேயராக பணிபுரிந்தவருமான ஹேசல் மக்கெலியன் ரொறொன்ரோ பல்கலைக் கழகத்தில் பணி ஒன்றை ஏற்றுள்ளார். 94-வயதுடைய இவர் 36-வருடங்கள் மிசிசாகா மேயராக பதவி வகித்து கடந்த நவம்பர் மாதம் இளைப்பாறினார். கல்லூரியின் மூலோபாய வளர்ச்சி தொடர்பான விடயங்களில் பல்கலைக்கழகத்தின் மிசிசாகா பிரிவு அதிபரின் விசேட ஆலொசகராக பணி ஏற்றுள்ளார். இவரது நியமனம் இந்த மாத முற்பகுதியில் ஆரம்பித்து ஒரு வருடங்களிற்கு நீடிக்கும் என பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது. இவர் புதிய பாடநெறிகளை உருவாக்க உதவுவதோடு பல்கலைக்கழகத்தின் மேலாண்மை மற்றும் கண்டுபிடிப்புக்கள் நிறுவனத்தோடு சேர்ந்து நகர்ப்புற கண்டுபிடிப்பு மற்றும் மேம்பாட்டில் முதுகலை பட்டம் உருவாக…
-
- 0 replies
- 198 views
-
-
கனடா- ஆர்க்டிக் வளிப்பகுதி நகரத்தின் மீது தொடரந்து வட்டமிடுவதால் இன்றய திகதியில் ரொறொன்ரோ 43-வயதான வெப்பநிலை சாதனையை முறியடித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிகாலை 5-மணியளவில் பியர்சன் சர்வதேச விமான நிலையத்தில் வெப்பநிலை பூச்சியத்திற்கு கீழ் 20.1ஆக காணப்பட்டது. இது முந்தய சாதனையான 1972-பிப்ரவர் 23-ந்திகதியின் சாதனையான 19.4 ஊ ஆக காணப்பட்ட சாதனையை முறியடித்து விட்டது. நிலைமையில் வெகுவிரைவில் முன்னேற்றம் காணப்பட போவதில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்றய வெப்பநிலை பூச்சியத்திற்கு கீழ் 16 C யை விட்டு உயரமாட்டாதெனவும் ஆனால் காற்றியக்க குளிர் பூச்சியத்திற்கு கீழ் 33-ஐ அண்மித்து உணரப்படுமென கனடா சுற்று சூழல் திணைக்களம் தெரிவித்துள்ளது. குடியிருப்பாளர்கள் ஏற்ற ஆடைகளை…
-
- 11 replies
- 759 views
-
-
ஏனைய செய்தி முஸ்லிம்கள் என்றாலே பயம் தான்...சாலையில் வலம் வந்த நபருக்கு நேர்ந்த கொடுமை (வீடியோ இணைப்பு) இத்தாலியில் முஸ்லிம் மதத்தை சேர்ந்த நபர் ஒருவர் சாலையில் நடந்து சென்றபோது அவரை மக்கள் ஏசிய வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. இத்தாலியின் மிலன்(Millan) நகரில் எகிப்து நாட்டை சேர்ந்த ஹம்டி மஹிசென்(Hamdy Mahisen) என்ற முஸ்லிம் மாணவன் தனது கையில் தங்களது மதத்தின் புனித நூலான குரானை வைத்தபடி, அந்நகரின் சாலைகளில் சுமார் 5 மணிநேரம் நடந்துள்ளார். இந்த 5 மணிநேரத்தில் இவரை பார்த்த மக்கள் அனைவரும் இதயத்தை நோகடிக்கும் வகையில் பேசியுள்ளனர். இவரை கடந்து சென்ற பெண் ஒருவர், இவன் ஐ.எஸ் தீவிரவாதி என கூறியுள்ளார், வேறொரு…
-
- 6 replies
- 745 views
-
-
5 வயதுடைய சிறுவர்கள் உள்ளடங்கலான சிறார்கள் இராணுவ பயிற்சி முகாமொன்றில் பயிற்சி பெறுவதை வெளிப்படுத்தும் புதிய வீடியோ காட்சியொன்றை ஐ.எஸ். தீவிரவாதிகள் வெளியிட்டுள்ளனர். சிரிய ரக்கா நகரிலுள்ள அல் -பாரூக் சிங்கக் குட்டிகளுக்கான நிறுவனம் என பெயர் சூட்டப்பட்ட தீவிரவாத பயிற்சி முகாமிலேயே மேற்படி சிறுவர்களுக்கு பயிற்சி வழங்கப்பட்டுள்ளது. இந்த 9 நிமிட வீடியோ காட்சியில் சின்னஞ்சிறார்கள் தீவிரவாத குழுவைச் சேர்ந்த ஆசிரியர் ஒருவரின் கட்டளைகளுக்கு அடி பணிந்து பயிற்சிகளில் ஈடுபடுகின்றனர். அந்த வீடியோ காட்சியின் பின்னணியில் அரேபிய இசை ஒலிக்கிறது.சிறுவர்கள் நீரைப் பயன்படுத்தி மத ரீதியான சுத்திகரிப்பை மேற்…
-
- 0 replies
- 487 views
-
-
ஆஸ்திரேலியாவின் தடுப்பு முகாம்களில் பாலியல் பலாத்காரங்கள் நடைபெற்றுள்ளன என்று எழுந்துள்ள குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் தாங்கள் விசாரித்து வருவதாக அந்நாட்டின் குடிவரவுத்துறை தெரிவித்துள்ளது. தடுப்பு முகாம்களில் உள்ளவர்கள் குறித்து அதிகரிக்கும் கவலைகள் அவ்வகையில் சிறார்கள் மீதான பலாத்காரங்கள் உட்பட நாற்பது சம்பவங்கள் குறித்த விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன. இந்த மாதம் வெளியான சுயதீனமான அறிக்கையொன்றிலேயே, தடுப்பு முகாம்களில் சிறார்கள் உட்பட பலர் பாலியல் பலாத்காரங்களுக்கு உள்ளாகியிருப்பது குறித்த பல செய்திகள் வெளியாயின. பசஃபிக் தீவு நாடான நவ்ரூவிலுள்ள ஆஸ்திரேலிய அகதிக் கோரிக்கைகளை ஆய்வு செய்யும் முகாம் ஒன்றில், தான் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாக 16 வயது பெண் ஒ…
-
- 0 replies
- 420 views
-
-
கனடா- எதிர்வரும் கோடைகாலத்தில் ரொறொன்ரோவில் நடைபெற உள்ள Pan Am விளையாட்டுக்கள் நடைபெறும் இடத்திற்கு அண்மையில் ஒரு நிலக்கீழ் சுரங்கபாதை கண்டு பிடிக்கப்பட்டுள்ளதாக தேசிய பாதுகாப்பு அதிகாரிகளிற்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. இந்த சுரங்கபாதை ரொறொன்ரோவின் றெக்சால் சென்ரர் மற்றும் யோர்க் பல்கலைகழகத்தின் கீல் வளாகம் ஆகிய பகுதிகளிற்கு அருகில் உள்ள காட்டு பகுதியில் தோண்டப்பட்டுள்ளது. இப்பகுதியில் தோண்டும் கருவிகள் மற்றும் ஜெனரேட்டரும் கண்டுபிடிக்கப் பட்டுள்ளது. இந்த சுரங்கபாதையானது ஒருவர் நிற்பதற்கு போதுமான அளவுடையதாக 2.5 மீற்றர்கள் உயரம், கிட்டத்தட்ட 7 மீற்றர்கள் நீளமுடையதாகவும் அமைக்கப்பட்டுள்ளது. சுரங்கபாதைக்குள் ஒரு ஜெனரேட்டர் மூலம் விளக்குகள் இயக்கப்படுவதுடன்…
-
- 0 replies
- 364 views
-
-
ரசிகர்களை ஈர்க்கும் பழைய திரைப்படங்கள்..! கலைஞர் தொலைக்காட்சியில் இருந்து புதிதாக தொடங்கப்பட்ட "முரசு டிவி"க்கும் சன் குழுமத்தின் "சன் லைஃப் தொலைக்காட்சிக்கும் இடையேயான போட்டி அதிகரித்துள்ளது. இரண்டு தொலைக்காட்சிகளிலும் பழைய திரைப்படங்கள், பாடல்கள் போன்றவைகளை தொகுப்பாளர்களின் தொந்தரவு இல்லாமல் ஒளிபரப்புவதே ரசிகர்களை அதிக அளவில் ஈர்த்துள்ளது என்று கூறப்படுகிறது. இசை சேனலோ, நகைச்சுவை சேனலோ யாராவது ஒரு தொகுப்பாளினி பேசி போரடித்துக் கொண்டிருப்பார். சில சமயம் இதுவே நிகழ்ச்சியின் சுவாரஸ்யத்திற்கு பாதிப்பை ஏற்படுத்திவிடும். ஆனால் ஜெயா டிவியின் மேக்ஸ், மூவி சேனல்களில் இதுபோன்ற நிகழ்ச்சித் தொகுப்பாளர்களின் தொந்தரவு இருக்காது. இருந்தாலும் நேயர்களிடையே இந்த தொலைக்காட்சிகளுக்க…
-
- 0 replies
- 690 views
-
-
முதன் முதல் தமிழருக்கு தனி நாடு கேட்டது முருகனே ...ஆதாரம் திருவிளையாடல் படம் அண்ணன் சீமான்
-
- 19 replies
- 1.3k views
-
-
CONNEAUT, Ohio- லேக் எரியில் சில நாட்களாக பனிக்குள் சிக்குண்டிருந்த அமெரிக்க சரக்குகப்படலை கனடிய கரையோர காவல் படையை சேர்ந்த பனிக்கட்டி உடைக்கும் கப்பல்கள் வெளியேற்றியுள்ளன. S.S. Arthur M. Anderson என்ற சரக்கு கப்பல் ஒஹையோ துறைமுகத்திற்கருகில் பனிக்குள் சிக்கிகொண்டு விட்டது. கடந்த செவ்வாய்கிழமை இச்சம்பவம் நடந்துள்ளது. கிறிவ்வொன் மற்றும் சாமுவெல் றைஸ்லி ஆகிய இரண்டு கனடிய கரையோர காவல் படை கப்பல்கள் பனிக்கூடாக ஒரு தடத்தை உருவாக்கி சரக்கு கப்பலை விடுவித்துள்ளன. சாமுவேல் றைஸ்லி, அன்டெர்சன் என்ற சரக்கு கப்பலை வழித்துணையாக டிட்றொயிட் பகுதிக்கு அழைத்துச் சென்று கொண்டிருக்கின்றது. பனியின் நிலைமையை பொறுத்து அங்கு சென்றடைய ஒன்று அல்லது அதிக நாட்கள் பிடிக்கலாம் என கருதப்படுகின்ற…
-
- 1 reply
- 325 views
-
-
லண்டனில் சூதாட்ட பிரியர் ஒருவரை இளம்பெண் ஒருவர் பணத்திற்காக தனது அழகால் மயக்கி கொலை செய்ததை பொலிசார் தற்போது கண்டுபிடித்துள்ளனர். லண்டனைச் சேர்ந்த மெஹ்மத் ஹசன் என்ற 56 வயது நபர், கடந்த மார்ச் மாதம் தனது வீட்டில் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டு கிடந்தார். இந்த வழக்கை விசாரிக்க தொடங்கிய பொலிசாருக்கு இந்த கொலை தொடர்பாக எந்தத் துப்பும் கிடைக்காமல் இருந்தது. பின்னர் பொலிஸார் நடத்திய தீவிர விசாரணையில் தற்போது பல திடுக்கிடும் தகவல்கள் தெரியவந்துள்ளன. சூதாட்ட பிரியரான மெஹ்மத் ஹசன் கடந்த பெப்ரவரியில் லியோனி கிரான்ஞர் (25) என்ற இளம்பெண்ணை சந்தித்ததோடு, இருவரும் ஒரு மாதமாக நெருங்கிப் பழகியுள்ளனர். சூதாட்டத்தில் ஹசன் சம்பாதித்த பெருந்தொகையை அபகரிக்க திட்டமிட்ட லியோனி, கடந்த …
-
- 0 replies
- 204 views
-
-
மகாராஷ்டிரா அரசின் சார்பில் அரபி கடலில் அமைக்கப்பட உள்ள வீரசிவாஜியின் மிகப் பெரிய நினைவிடத்திற்கு ரூ.1900 கோடியில் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்ய மகாராஷ்டிரா அரசு முடிவு செய்துள்ளது. குஜராத்தில் நர்மதா நதிக்கரையில் இந்தியாவின் இரும்பு மனிதர் எனப்படும் சர்தார் படேலுக்கு உலகிலேயே மிகப் பெரிய இரும்பு சிலை அமைக்கப்பட்டு வருகிறது. அதனைத் தொடர்ந்து மகாராஷ்டிராவில் முதல்வர் பட்நவிஸ் தலைமையிலான பாஜ அரசு பொறுப்பேற்றதும், மும்பையில் உள்ள அரபி கடலில் வீரசிவாஜிக்கு சிலையுடன் கூடிய மிகப் பெரிய நினைவிடம் அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இதற்காக மும்பையில் உள்ள நாரிமன் முனையில் இருந்து சுமார் 2.6 கிமீ தொலைவில் அரபி கடலில் 16 ஏக்கர் பரப்பளவில் பாறை தீவாக இது அமைக்கப்பட …
-
- 1 reply
- 324 views
-
-
அருணாச்சல் பிரதேசத்திலுள்ள இந்திய சீன எல்லையில் இந்திய ராணுவம் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான அருணாச்சலப்பிரதேசத்திற்கு சென்றதற்கான தனது எதிர்ப்பை சீனா அதிகாரப்பூர்வமான புகாராக பதிவு செய்திருக்கிறது. அருணாச்சலப் பிரதேசம் தனது கட்டுப்பாட்டில் இருக்கும் திபெத்தின் ஒரு பகுதி என்று சீனா கூறிவருகிறது. சீனாவுக்கான இந்தியத்தூதர், சீனாவின் வெளியுறவுத்துறை அமைச்சகத்துக்கு நேரில் வருமாறு உத்தரவிடப்பட்டு, சீனாவின் கண்டனம் அவரிடம் நேரில் தெரிவிக்கப்பட்டதாக, சீன ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மோடியின் அருணாச்சலப் பிரதேச வருகையானது சீனாவின் எல்லையை மதிக்காத போக்கு என்றும், பாதிக்கும் செயல் என்றும் இந்திய தூதரிடம் சீனா தெரிவித்துள்ளதாகவும் சீன ஊடகச…
-
- 2 replies
- 236 views
-
-
குறிப்பிட்ட சில வட அமெரிக்காவில் உள்ள பல்கடை அங்காடிகளை தாக்க இலக்கு வைத்துள்ளதாக ஒரு பயங்கரவாத குழு அறிவித்துள்ளதாக தெரியவந்துள்ளது. இவற்றில் மேற்கு எட்மன்டன் மோலும் அடங்குகின்றது. Al-Qaeda வுடன் இணைப்பு கொண்ட இந்த குழு சனிக்கிழமை வெளியிட்டுள்ள வீடியோ ஒன்றில் கனடா, யுகே, யுஎஸ் ஆகிய இடங்களில் உள்ள பேரங்காடிகளை தாக்க போவதாக தெரிவித்துள்ளது. 2013 செப்பரம்பரில் கென்யா, நைரோபியில் உள்ள ஆடம்பர பேரங்காடி ஒன்றை தாக்கிய பயங்கர வாத குழுவை சேர்ந்தவர்கள் இந்த வீடியோவை வெளியிட்டுள்ளதாக கூறப்படுகின்றது. இத்தாக்குதலின் போது 60-மக்கள் வரை கொல்லப்பட்டனர். சோமாலி பயங்கரவாத அமைப்பான al-Shabaab சனிக்கிழமை இரவு YouTube –ல் வெளியிட்டுள்ள புதிய வீடியோ ஒன்றில் மேற்கு எட்மன்டன் பேரங்காடி முக்க…
-
- 0 replies
- 276 views
-
-
உலகின் முன்னணிச் செல்வந்தர்களுக்குள் இரசிய அதிபர் விளடிமீர் புட்டீனும் ஒருவர் எனப் பலர் கருதி இருந்தனர். அவர் முன்னணிச் செல்வந்தர் அல்லர். அவர் முதல்தரச் செல்வந்தர் என அவரது முன்னாள் நெருங்கிய நண்பர் Bill Browder அம்பலப்படுத்தியுள்ளார். Forbeசஞ்சிகையின் கணிப்பின் படி உலகின் முன்னணி செல்வந்தர்களின் பட்டியல்: 1. Bill Gates Net Worth: $76 Billions Source of wealth: Microsoft 2. Carlos Slim Helu & family Net Worth: $72 Billions Source of wealth: telecom 3. Amancio Ortega Net Worth: $64 Billions Source of wealth: retail 4. Warren Buffett Net Worth: $58.2 Billions So…
-
- 0 replies
- 544 views
-
-
ஐ.எஸ் பிடியிலிருந்து தப்பி ஓடிவந்த யாஸிதி பெண்களின் மனதில் பயம் இன்றும் ஓயாத அலைகளாய் அடித்துக் கொண்டிருக்கிறது. ஈராக் மற்றும் சிரியாவின் பல்வேறு பகுதிகளை கைப்பற்றி தனி இஸ்லாமிய தேசத்தை உருவாக்கிய ஐ.எஸ் கடந்தாண்டு ஈராக்கின் சிஞ்சார்(Sinchar) மலைப்பகுதியில் வாழும் யாஸிதி என்னும் சிறுபான்மையின மக்களை பெரிதும் கொடுமைப்படுத்தியது. கடந்தாண்டில் மட்டும் சுமார் 30,000க்கும் மேற்பட்ட யாஸிதி பெண்கள் மற்றும் சிறுமிகளை கடத்தி சென்ற ஐ.எஸ் தீவிரவாதிகள், அவர்களை தங்களது முகாம்களில் வைத்து பலமுறை கற்பழித்துள்ளனர். இதனை தொடர்ந்து தங்கள் பிடியிலிருந்த ஆண்கள் மற்றும் சிறுவர்களை தலைத் துண்டித்து கொன்றதுடன், சிறுமிகளையும் பெண்களையும் விபச்சார சந்தையில் விலைபேசி விற்று பாலியல்…
-
- 3 replies
- 521 views
-
-
ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புதின் குடித்துவிட்டு தனது மனைவியை அடித்து உதைப்பது போன்று வெளியாகியுள்ள ஆவணப்படம் சர்ச்சையை கிளப்பியுள்ளது. ஜேர்மனியின் ஜிடிஎம் தொலைக்காட்சி, அடையாளம் தெரியாத மேற்கத்திய உளவுத்துறை நிறுவனம் ஒன்றின் ரகசிய தகவல்களை கொண்டு, புதிய ஆவணப்படம் ஒன்றை எடுத்து வெளியிட்டுள்ளது. அதில், ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் இதற்குமுன் தனது விவாகரத்து செய்யப்பட்ட மனைவி லுயிட்மிலாவிடம் வன்முறைத்தனமாக நடந்து கொண்டதையும், அவரது வாழ்க்கை வரலாறும் பதிவு செய்யப்பட்டிருப்பதாக டெலிகிராப் செய்தி வெளியிட்டு உள்ளது. மேலும் புடினின் வாழ்க்கையை சித்தரிக்கும் இந்த படத்தில், தேசிய பாதுகாப்பு அமைப்பான கேபிஜி-யின் அதிகாரியாக இருந்து படிப்படியாக தற்போது ஜனாதிபதி பதவிக்கு வருவது வ…
-
- 2 replies
- 472 views
-
-
உலகிலேயே உயரமான கட்டிடங்களில் ஒன்றான துபாய் டார்ச் கட்டிடத்தில் தீ விபத்து ஏற்பட்டது. துபாய் நகரத்தில் உள்ள ‘The Marina Torch’ என்ற குடியிருப்பு கட்டிடம் சுமார் 79 அடுக்கு மாடிகளை கொண்ட 336.1 மீட்டர் உயரம் கொண்ட கட்டிடமாகும். இன்று அதிகாலை நள்ளிரவு 2 மணியளவில் இந்த கட்டிடத்தின் 50-வது மாடியில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. காற்று பலமாக வீசியதால் கொளுந்துவிட்டு எரிந்த தீ அடுத்தடுத்த மாடிகளுக்கு பரவ தொடங்கியது, இதனையடுத்து நூற்றுக்கணக்கான மக்கள் அவசரமாக வெளியேற்றப்பட்டனர். தீ விபத்து குறித்து தகவலறிந்து விரைந்து வந்த தீயணைப்பு குழுவினர், அங்கிருந்த மக்களை பாதுகாப்பாக தங்க வைத்ததுடன் தீயை கட்டுப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டனர். விபத்துக்குள்ளான கட்டிடத்தின் 27-வது மாட…
-
- 0 replies
- 270 views
-
-
கனடா- ரொறொன்ரோவில் வியாழக்கிழமை அதிகாலை 4-மணியளவில் 3-வயதுடைய எலையா என்ற சிறுவன் தொடர்மாடிக்கட்டிடம் ஒன்றில் இருந்து காணாமல் போய் உள்ளான். இச்சம்பவம் நெடுஞ்சாலை 401 மற்றும் பாத்றஸ்ட் வீதியில் நடந்துள்ளது. சிறுவனை இரவு 9.30-மணியளவில் படுக்கையில் விட்டதாகவும் காலை 7.30-மணியளவில் எழுந்து பார்க்கும் போது சிறுவனை காணவில்லை எனவும் குடும்பத்தினர் தெரிவித்ததாக பொலிசாரின் கூற்று பிரகாரம் தெரியவந்துள்ளது. அதிகாரிகள் கண்காணிப்பு கமரா பதிவை பார்வை இட்டபோது அதிகாலை 4.05-மணியளவில் சிறுவன் கட்டிடத்தைவிட்டு வெளியேறியதும் 4.20-ற்கு வண்டிபாதையில் காணப்பட்டதும் பதிவாகியுள்ளது காணப்பட்டது. சிறுவன் தனது பேத்தியாருடன் தொடர்மாடிக் கட்டிடத்தில் இருந்தான் எனவும் “நல்ல குணமுள்ள பையன்” எனவும் …
-
- 22 replies
- 1.1k views
-