Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. ஒபாமா வருகையை முன்னிட்டு, டெல்லியில் 7 அடுக்கு பாதுகாப்பு வளைய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. டெல்லியில் உள்ள சுமார் 80 ஆயிரம் போலீசார் பல்வேறு குழுக்களாக பிரிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இவர்களுடன் சேர்ந்து பணியாற்ற 10 ஆயிரம் துணை நிலை ராணுவ வீரர்கள் டெல்லியில் குவிக்கப்பட்டுள்ளனர். டெல்லி அருகில் உள்ள மாநிலங்களைச் சேர்ந்த 10 ஆயிரம் போலீசாரும் தயார் நிலையில் உள்ளனர். ஆக ஒரு லட்சம் பேர் பாதுகாப்பு பணியில் முடுக்கிவிடப்பட்டுள்ளனர். என்றாலும் அமெரிக்க அதிகாரிகள் ஒபாமா பாதுகாப்புக்காக 1600 வீரர்களை அமெரிக்காவில் இருந்து டெல்லிக்கு அழைத்து வந்துள்ளது. இந்த 1600 வீரர்களும் ஒரு கொசுவை கூட ஒபாமா அருகில் நெருங்க முடியாதபடி பாதுகாப்பு முன் ஏற்பாடுகளை செய்துள்ளனர்…

  2. பிரிட்டிஷ் அரசியல்வாதி ஒருவரின் டுவிட்டர் பதிவு சவுதி மன்னர் அப்துல்லாவின் மரணத்தைத் தொடர்ந்து பிரிட்டனில் அரச கட்டடங்களில் கொடிகள் அரைக்கம்பத்தில் பறக்கவிடப்பட்ட நிகழ்வு பொதுமக்கள் மத்தியில் கடுமையான விமர்சனங்களை தோற்றுவித்துள்ளது. வெளிநாட்டு மன்னர் ஒருவர் உயிரிழந்தால் கொடிகளை அரைக்கம்பத்தில் பறக்கவிடுவது பிரிட்டனின் வழக்கம். எனினும், சவுதி மன்னரின் மரணத்துக்கு கொடிகளை அரைக்கம்பத்தில் பறக்கவிட்டமையை சில அரசியல்வாதிகளும் மனித உரிமை செயற்பாட்டாளர்களும் பத்திரிகைகளும் எதிர்த்துள்ளன. சவுதியில் பெண்களுக்கு எதிரான பாரபட்சமான போக்கும் கருத்துச் சுதந்திரத்துக்கு உள்ள மட்டுப்பாடுகளும் மதச் சுதந்திரத்துக்கு உள்ள கட்டுப்பாடுகளும் நிலவுகின்ற சூழ்நிலையில் அந்நாட்டு மன்னருக்கு…

  3. கடன் அட்டைகள் மோசடியில் ஒரு புதிய திருப்பம் கனடாவில் வெளிப்பட்டுள்ளதாக கூட்டாட்சி அரசாங்கத்தின் நிறுவனமான கனடிய மோசடி எதிர்ப்பு மையத்தின் கருத்துப்பிரகாரம் தெரியவந்துள்ளதாக கூறப்படுகின்றது. ஒருவரின் தனிப்பட்ட தகவல்களை திருட முற்படும் இப்புதிய சூழ்ச்சி அதிகாலையில் தூக்கத்தில் இருக்கும் போது மக்களை இலக்கு வைக்கப்படுகின்றதோடு அவர்களை பாதிப்பிற்கும் உள்ளாக்கு கின்றது. இதற்கான தொலைபேசி அழைப்பு அதிகாலை 5-மணிக்கும் 7-மணிக்கும் இடைப்பட்ட நேரத்தில் ஆரம்பிக்கப் படுகின்றது என மோசடி எதிர்ப்பு மையத்தை சேர்ந்த டானியல் வில்லியம்ஸ் தெரிவித்துள்ளார். அழைப்பவர் தான் பாதிக்கப்பட்டவரின் வங்கியில் இருந்து அழைப்பதாகவும் இவரின் கடன் அட்டை முந்தய மாலை அங்கீகாரம் இல்லாமல் உபயோகிக்கப்பட்டுள்ளதெனவு…

  4. ஆந்திர மாநிலம் ஹைதராபாத்தில் உள்ள பவானி நகர் என்ற இடத்தில் கொத்தடிமைகளாக இருந்து அபாயகரமான பணிகளை மேற்கொண்டு வந்த 200 சிறார்களை காவல்துறையினர் மீட்டுள்ளனர். ஐதராபாத்தில் முக்கியக் குற்றவாளிகளைத் தேடும் பணியில் காவல்துறையினர் ஈடுபட்டிருந்த போது, ஒரே கட்டடத்தில் 200க்கும் மேற்பட்ட சிறார்கள் அடைத்து வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவர்களிடம் விசாரணை நடத்தியதில் அவர்கள் அனைவரும் பீகார் மற்றும் உத்தரப்பிரதேச மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் என்பதும், கொத்தடிமைகளாக இருந்து வளையல் தயாரிப்பு, தோல் பதனிடுதல் போன்ற மிக அபாயகரமான பணிகளில் ஈடுபட்டு வந்ததும் தெரிய வந்தது. இதையடுத்து 10 பேரை கைது செய்துள்ளனர். மீட்கப்பட்ட சிறார்களில் வெறும் 5 முதல் 6 வயது கொண்டவர்கள…

  5. அதி நவீன சிறப்பு வசதிகளுடன் கூடிய பீஸ்ட் என அழைக்கப்படும் அமெரிக்க அதிபர் ஒபாமாவின் பிரத்யேக வாகனம் டெல்லி வந்தடைந்துள்ளது. குடியரசு தின விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ளும் தலைவர்கள் ஜனாதிபதியுடன் ஒரே காரில் வருவதான் வழக்கமான நடைமுறையாக உள்ளது. ஆனால் இந்த நடைமுறையை தகர்த்தெறிந்துவிட்டு ஒபாமா தனது பீஸ்ட் காரில் வந்திறங்குவாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது. ஒருவேளை அமெரிக்க அதிபர் ஒபாமா பாரம்பரியாமாக கடைபிடித்து வரும் நெறிமுறைகளை தகர்க்காமல் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியுடன் ஒரே காரில் ராஜபாதையில் வருகை தந்தால், அதிக பாதுகாப்பு அம்சங்களை கொண்ட தங்களது சொந்த காரில் பயணிக்காத ஒரே அமெரிக்க அதிபர் என்ற பெருமையை ஒபாமா பெறுவார் என்பது குறிப்பிடத்தக்கது. லின்கான்…

    • 2 replies
    • 882 views
  6. இங்கிலாந்து அரசின் கட்டுப்பாட்டில் வேல்ஸ், ஸ்காட்லாந்து மற்றும் வடக்கு அயர்லாந்து பகுதிகள் இருந்து வருகின்றன. இங்கிலாந்திலிருந்து ஸ்காட்லாந்தை பிரிக்க பொது வாக்கெடுப்பு நடைபெற்றது. இது நூலிழையில் தோல்வி அடைந்தது. இந்நிலையில் ஸ்காட்லாந்துக்கு கூடுதல் அதிகாரங்களை பகிர்ந்து அளிக்கும் பணிகள் துவங்கியுள்ளன என்று இங்கிலாந்து பிரதமர் டேவிட் கேமரூன் அறிவித்துள்ளார். இங்கிலாந்து அரசின் ஐக்கிய கூட்டமைப்பில் ஸ்காட்லாந்து, வடக்கு அயர்லாந்து மற்றும் சவுத் வேல்ஸ் பகுதிகள் இருந்து வருகின்றன. இவை அனைத்தும் தனித்தனி அமைப்புகளாக இருப்பினும், இங்கிலாந்து அரசின் கட்டுப்பாட்டில் உள்ளன. இந்நிலையில், ஸ்காட்லாந்தில் கடந்த சில மாதங்களுக்கு முன் தங்கள் நாட்டுக்கு சுயமாக முடிவெடுப்ப…

  7. கனடா- நபர் ஒருவர் அண்மையில் ஒட்டாவா ஹொட்டேல் ஒன்றில் இருந்து கலிவக்ஸ்சிலுள்ள தனது வீட்டில் இரசாயனப் பொருட்கள் வைத்திருப்பதாக பயமுறுத்தியதும் பின்னர் 42-வயதுடைய குறிப்பிட்ட நபர் கைது செய்யப்பட்டதும் பரபரப்பாக பேசப்பட்டது. வெள்ளிக்கிழமை பல்வேறு வகைப்பட்ட கொள்கலன்களில் அடைக்கப்பட்ட இரசாயனப் பொருட்கள் இவரது குடில் மற்றும் கொட்டகைக்குள் தரையில் இருந்து உட்கூரை வரை அடுக்கப்பட்டிருந்ததை புலன்விசாரனையாளர்கள் கண்டு பிடித்துள்ளனர். இவற்றில் சில ஸ்திரமற்றவையாக காணப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தரையில் மட்டுமின்றி குளிரூட்டிகளின் உள்ளேயும் மற்றய தனிப்பட்ட உபகரணங்கள் சிலவற்றின் உள்ளேயும் இருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. பெரும்பாலானவை ஸ்திரமற்றவையாகையால் தாங்கள் தீவிர எச்ச…

  8. சமீபத்தில் இந்தியாவில் பாரியளவில் வீழ்ச்சியடைந்து வரும் பெண் குழந்தைகளின் எண்ணிக்கை ஆனது தேசிய அளவிலான ஒரு அவசர பிரச்சினையாக உருவெடுத்துள்ளது என ஐ.நா சபை அறிவித்திருந்த நிலையில், பிரதமர் நரேந்திர மோடியும் இப்பிரச்சினைக்குக் காரணமான இந்திய மக்களின் மனப்பாங்கைக் கண்டித்துள்ளதுடன் இதற்கெதிரான பிரச்சாரத்தையும் ஆரம்பித்துள்ளார். இது தொடர்பாக இன்று ஹரியானாவில் மோடி உரையாற்றிய போது, ‘எமது அண்டை வீடுகளில் அதிகளவில் பெண் குழந்தைகள் தமது தாயின் கருப்பையிலேயே கொல்லப் பட்டு வருகின்றனர் என்பது உண்மை என்ற போதும் எம்மால் அதன் வலியை உணர முடிவதில்லை என்பதால் நாம் அலட்சியமாகவே இருந்து விடுகின்றோம். உண்மையில், எம்மில் எவருக்கும் எமது புதல்வியரை எந்த விதத்திலும் கொல்லும் உரிம…

  9. இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பில் வரும் மதவாரி கணக்கெடுப்புகள் அதிகாரப்பூர்வமாக வெளி வருவதற்கு முன்பே, எக்கச்சக்க கதைகள் பேசப்படும். அவை உண்மையான முடிவுகள் வெளிவரும் பொழுதுதான் எத்தனை அபத்தமானது என்றே நமக்கு புலப்பட்டு இருக்கிறது. எடுத்துக்காட்டாக இந்தியாவின் இந்து - முஸ்லீம்களின் எண்ணிக்கையை எடுத்துக்கொள்வோம். 1991 மக்கள் தொகை கணக்கெடுப்பு 10.67 கோடி இஸ்லாமியர்கள், 69.01 கோடி இந்துக்கள் இருப்பதாக சொன்னது. பத்து வருடங்கள் கழித்து இந்த எண்ணிக்கை முறையே 13.82 கோடி, 82.76 கோடி என்று உயர்ந்துள்ளது. இதை வேறு வகையில் சொல்வது என்றால் வருடத்துக்கு 2.62% என்கிற அளவில் இஸ்லாமியர்களின் எண்ணிக்கை 29.5% அதிகரித்து உள்ளது. இந்துக்களின் எண்ணிக்கை வருடத்துக்கு 1.83% என்கிற அளவில்…

  10. சவுதி மன்னர் தனது 90வது வயதில் இறந்து விட்டார்.இவர் சுவாசத்தொற்று காரணமாக வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டு அங்கு மரணமானதாக செய்திகள் தெரிவிக்கின்றன. மேலதிக செய்திகள் விரைவில்.................... Saudi Arabia's King Abdullah bin Abdul Aziz Al Saud has died, aged in his 90s. http://bbc.in/1xFRLHL http://www.bbc.com/news/world-middle-east-10214554

  11. யு.எஸ். தலைநகரை தாக்க திட்டமிட்டதாக சின்சினாட்டி பகுதியை சேர்ந்த மனிதன் ஒருவர் மீது புதன்கிழமை குற்றம் சுமத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. யு.எஸ். வழக்கறிஞர்கள் 20-வயதுடைய கிறிஸ்ரோபர் லீ கோர்நெல் என்பவர் 2014-ஆகஸ்ட் முதல் ஜனவரி மாதம் வரை தாக்குதல் ஒன்றை நடாத்த சதிசெய்ததாக குற்றம் சாட்டியுள்ளனர். இச்சதி மூலம் யு.எஸ். அதிகாரிகள் மற்றும் ஊழியர்களை கொல்லப்படுவதுடன் இரண்டு அரை-தானியங்கி துப்பாக்கிகள் மற்றும் 600-வெடி பொருட்கள் சுற்றுக்கள் வைத்திருந்தமை போன்ற குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளன எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது - See more at: http://www.canadamirror.com/canada/37060.html#sthash.G7iEnN37.dpuf

  12. அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா– மிசிலி தம்பதியருக்கு சசா, மலியா என்று 2 மகள்கள் உள்ளனர். சசாவுக்கு 16 வயதாகிறது. மலியாவுக்கு 13 வயதாகிறது. சசா, மலியா இருவரும் வாஷிங்டனில் உள்ள பள்ளியில் படித்து வருகிறார்கள். அவர்கள் இருவரும் ஒபாமா வெளிநாடுகளுக்கு செல்லும் போது உடன் செல்வதுண்டு. வருகிற 25–ந்தேதி ஒபாமா இந்தியா வரும் போது, சசா, மலியா இருவரும் உடன் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவர்கள் படிக்கும் பள்ளியில் அவர்களுக்கு லீவு கிடக்கவில்லை. பள்ளிக்கு விடுமுறை விடப்படும் நாட்களில் வெளிநாடு செல்லுங்கள். இப்போது வகுப்புகளை தவிர்க்காதீர்கள் என்று சசா, மலியா, இருவரிடமும் பள்ளி நிர்வாகம் கேட்டு கொண்டது. இதை அவர்கள் ஏற்றுக்கொண்டனர். எனவே ஒபாமா இந்தியா வரும் போது அவருடன் அ…

  13. காண்டாமிருகங்களை பாதுகாக்க தென்னாப்ரிக்கா புதிய நடவடிக்கை காண்டாமிருகங்கள் வேட்டையாடப்படுவதை தடுக்கவும் அவற்றை மேம்பட்ட வகையில் பாதுகாக்கவும், நூறு காண்டாமிருகங்களை அண்டைநாடுகளுக்கு அனுப்புவதாகத் தென்னாப்ரிக்கா தெரிவித்துள்ளது. கொம்புகளுக்காக பெருமளவில் காண்டாமிருகங்கள் கொல்லப்படுகின்றன.உலகிலுள்ள காண்டாமிருகங்களில் 80 சதவீதம் தென்னாப்ரிக்காவில் உள்ள நிலையில், நாட்டில் எஞ்சியுள்ள மிருகங்கள் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளன என்று சுற்றுச்சூழல் அமைச்சர் எட்னா மொலேவா அம்மையார் தெரிகூறுகிறார். கடந்த ஆண்டு மட்டும் தென் ஆப்ரிக்காவில் 1200க்கும் அதிகமான காண்டாமிருகங்கள் சட்டவிரோதமாக வேட்டையாடப்பட்டுள்ளன என்று அரசாங்கம் சமீபத்தில் தெரிவித்திருந்தது. தென்னாப்ரிக்காவில…

  14. புதுடெல்லி: கடந்த 2001-2011 ஆம் ஆண்டுகளில் இந்திய அளவில் இஸ்லாமிய மக்கள்தொகை 24 சதவீதம் உயர்ந்துள்ளதாக கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது. இந்தியாவின் மொத்த மக்கள்தொகையில் இஸ்லாமிய மக்கள்தொகையின் எண்ணிக்கை 13.4 சதவீதத்தில் இருந்து 14.2 சதவீதமாக உயர்ந்துள்ளதும் தெரியவந்துள்ளது. அண்மையில் மதவாரியாக நடத்தப்பட்ட கணக்கெடுப்பின்படி, இஸ்லாமியர்கள் அதிகம் உள்ள மாநிலமாக ஜம்மு காஷ்மீர் முதலிடத்திலும் (68.3 சதவீதம்), இரண்டாம் இடத்தை அஸ்ஸாமும் (34.2 சதவீதம்) பிடித்துள்ளன. இவற்றுக்கு அடுத்தப்படியாக மேற்கு வங்காளம் (27 சதவீதம்) உள்ளது. நாட்டில் கடந்த 1991 ஆம் ஆண்டு முதல் 2001 ஆம் ஆண்டு வரையில் நடத்தப்பட்ட கணக்கெடுப்பில் இஸ்லாமிய மக்கள்தொகை வளர்ச்சி விகிதம் 29 சதவீதமாக இருந்தது. த…

  15. ஐஸ்வால்: பிரதமர் நரேந்திர மோடி பற்றி ஃபேஸ்புக்கில் தவறான தகவலை பதிவு செய்ததாக இளைஞர் மீது வழக்குப் பதிவுசெய்து போலீசார் விசாரணை செய்து வருகிறார்கள். ஃபேஸ்புக் தளத்தில் பிரதமர் குறித்து தவறான தகவல்கள் பதிவிடப் பட்டுள்ளதாக கிடைத்த தகவலையடுத்து மிசோரம் மாநில பாஜகவினர் போலீசாரிடம் புகார் அளித்துள்ளனர். இதனடிப்படையில், தீவிர விசாரணை மேற்கொண்ட மிசோரம் மாநில போலீசார், அந்த இளைஞர் மீது எப்.ஐ.ஆர் பதிவு செய்துள்ளனர். தகவல் தொழில்நுட்ப சட்டப் பிரிவு 66(A) மற்றும் ஐபிசி பிரிவு 500ன் கீழ் பிரதமர் குறித்து தவறான தகவலை பரப்பியதாக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. குற்றம் சாட்டப்பட்டவரைக் கைது செய்ய நடவடிக்கை எடுத்துவருகிறார்கள் என்று போலீஸார் தெரிவித்தனர். பிரதமர்…

  16. கனடாவில் தாக்குதல்களை நடத்துமாறு யேமனைத் தளமாகக் கொண்டு இயங்கும் அல் கைடா அமைப்பின் பிரிவு கோரும் வீடியோ ஒன்று வெளியாகிய நிலையில், அத்தகைய தாக்குதல்களை எதிர்கொள்வதற்குத் தயாராக இருப்பதாக கனேடிய அரசு அறிவித்தது. சார்ளி எப்தோ மீது தமது அமைப்புத்தான் தாக்குதல் நடத்தியதென கடந்த வாரம் உரிமை கோரிய அந்த அமைப்பின் தலைவர் ஒருவரின் மற்றொரு ஒளிப்பதிவு நேற்று வெளியிடப்பட்டது. இஸ்லாமுக்கு எதிராக போரிடும் மேற்கு நாடுகளில் கனடாவும் ஒன்றென குறிப்பிடும் அவர், கனடாவில் தாக்குதல்களை நடத்துமாறு ஆதரவாளர்களிடம் கோரிக்கை விடுத்தார். கனடாவின் பாதுகாப்பு அமைப்புக்கள் நிலைமையை உன்னிப்பாக அவதானித்து வருவதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஸ்ரீவென் பிளேனியின் (Steven Blaney) பேச்சாளர் ஒருவர் கூறிய…

  17. டெல்லி: இந்தியாவும், இஸ்ரேலும் இணைந்து, தேடிவரும் சஜித் மிர் (அல்லது) சஜீத் மஜீத் என்ற லஷ்கர்-இ-தொய்பா தீவிரவாதியை, பத்திரமாக பாதுகாத்து வருவதில் பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐஎஸ்ஐ வெற்றிபெற்று வருகிறது. மும்பை தாக்குதல் சம்பவத்தின் முக்கிய குற்றவாளிகளில் ஒருவரான சஜீத் மிர், பாகிஸ்தானுக்குள்ளேயே பதுங்கியிருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. கடந்த 2008ம் ஆண்டு நவம்பர் மாதம் 26ம் தேதி இரவு பாகிஸ்தான் தீவிரவாதிகள் 10 பேர் மும்பைக்குள் ஊடுருவி ரயில் நிலையம், தாஜ் ஹோட்டல் உள்பட முக்கிய இடங்களில் தாக்குதல் நடத்தினார்கள். கண்ணில் பட்டவர்களையெல்லாம் துப்பாக்கியால் சுட்டனர். வெடிகுண்டுகளையும் வீசினார்கள். இதில் அப்பாவி மக்கள் 166 பேர் பலியானார்கள். http://tamil.oneindia.com/news/india/indi…

  18. சிங்கப்பூர், இந்தோனேஷிய கடல் பகுதியில் மூழ்கிய ஏர்ஏசியா விமானத்தின், ‘காக்பிட் வாய்ஸ் ரெகார்டர்’ சாதனம் மீட்கப்பட்டது. கடந்த மாதம் 28–ந்தேதி இந்தோனேஷியாவின் சுரபவா நகரில் இருந்து சிங்கப்பூருக்கு புறப்பட்டுச் சென்ற ஏர்ஏசியா நிறுவனத்துக்கு சொந்தமான பயணிகள் விமானம் ஒன்று ஜாவா கடல் பகுதியில் விழுந்தது. அதில் பயணம் செய்த 155 பயணிகளும் மற்றும் விமான ஊழியர்கள் 7 பேரும் பலியானார்கள். இந்த விபத்தில் பலியானவர்களின் உடல்களையும், விமானத்தின் சிதைந்த பாகங்களையும் இந்தோனேஷியாவின் தேடுதல், மீட்பு குழுவினர் தீவிரமாக தேடி வருகின்றனர். விமானத்தின் சிதைந்த பெரும் பகுதி மீட்கப்பட்டு விட்டது. எனினும் பலியானவர்களில் இதுவரை 48 பேருடைய உடல்கள் மட்டுமே கிடைத்து உள்ளன. கடந்த 2 நாட்களுக்கு…

  19. கனடா- நபர் ஒருவர் தனது கலிவக்ஸ் வீட்டில் குழாய் குண்டு மற்றும் இரசாயனப்பொருட்கள் வைத்திருப்பதாக ஒட்டாவாவில் உள்ள ஹொட்டேல் ஒன்றில் இருந்து விடுத்த பயமுறுத்தலை தொடர்ந்து இவரை பொலிசார் கைது செய்துள்ளதாக கூறப்படுகின்றது. சந்தேகநபர் பயமுறுத்தலை விட முன்னதாக ஒட்டாவாவில் உள்ள கீமோ ஹொட்டேலில் தங்கியிருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சந்தேக நபர் நோவ ஸ்கோசியாவிலிருந்து அபாயகரமான இரசாயனப் பொருட்கள் நிறைந்த வாகனத்துடன் ஒட்டாவா வந்ததாகவும் கைது செய்யப்பட்டபின்னர் இவர் யு.எஸ்.ஐ சேர்ந்த ஒரு முன்னாள் இராணுவ உயிரிரசாயனத்திற்குரிய ஆயத நிபுணர் என ஆர்சிஎம்பியனரால் அடையாளம் காணப்பட்டுள்ளது. செவ்வாய்கிழமை இரவு அதிகாரிகள் ஹொட்டேலை சுற்றி பெரும் எல்லையை சுற்றி வளைத்துள்ளனர். கிறிஸ…

  20. காந்தி பீருக்கு பதிலடி: தமிழகத்தில் தயாராகும் ஜார்ஜ் வாஷிங்டன் செருப்பு! கோவை: வெளிநாடுகளில் பீர் பாட்டில்களில் இந்துக்கடவுள்களின் படங்களை போட்டு விற்பனை செய்தனர். இதையும் தாண்டி அமெரிக்க நிறுவனம் காந்தி பெயரில் பீர் விற்பனை செய்தது. இதற்கு பதிலடியாக, ஜார்ஜ் வாஷிங்டன் பெயரில், அவர் படத்துடன் கூடிய செருப்பு தமிழகத்தில் தயாராகி வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காந்தி பீர் டின் அமெரிக்காவை சேர்ந்த நியூ இங்கிலாந்து ப்ரூவிங் கம்பெனி என்ற மதுபான தயாரிப்பு நிறுவனம், சமீபத்தில் 'காந்தி பாட்' என்ற புதிய வகை பீர் டின் ஒன்றை அறிமுகம் செய்தது. அந்த பீர் டின்களில் நமது தேசப்பிதா மகாத்மா காந்தியின் புகைப்படத்தையும் வெளியிட்டது. இந்தியாவில் கண்டனம் அமெரிக்க நிறுவன…

    • 13 replies
    • 1.9k views
  21. மெக்ஸிகோவில் எரிமலை வெடிப்பு - காணொளி 6 மணி நேரங்களுக்கு முன்னர் மேற்கு மெக்ஸிகோவில் கொலிமா எரிமலை வெடித்து ஆயிரக்கணக்கான மீட்டர்கள் உயரத்துக்கு சாம்பல் பரவியுள்ளது. மெக்ஸிகோ நகருக்கு வடமேற்காக 700 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ''பயர் வல்கானோ'' என்று அழைக்கப்படும் இந்த எரிமலை, அந்நாட்டில் மிக அதிகமான சீற்றத்தைக் கொண்டுள்ள ஓர் எரிமலையாகும். பிபிசியின் காணொளியைக் காண இணைப்பை அழுத்தவும் http://www.bbc.co.uk/tamil/global/2015/01/150121_volcano

  22. இஸ்லாமியத் தீவிரவாதத்துக்கு எதிராக பிரான்ஸ் அரசின் புதிய நடவடிக்கைகள் 4 மணி நேரங்களுக்கு முன்னர் இஸ்லாமியத் தீவிரவாதத்துக்கு எதிராக பிரான்சின் புதிய நடவடிக்கைகள்பிரான்ஸில், உள்நாட்டிலேயே உருவான இஸ்லாமியத் தீவிரவாதத்தை எதிர்கொள்ள புதிய , பரந்துபட்ட அதிகாரங்கள் கொண்ட பயங்கரவாதத்துக்கு எதிர் நடவடிக்கைகளை, பிரெஞ்சு அரசு அறிவித்துள்ளது. இந்த நடவடிக்கையில், 2,500க்கும் மேற்பட்ட உளவு ஏஜெண்டுகள் ஆட்சேர்க்கப்படுவார்கள் என்று பிரதமர் மானுவெல் வேல்ஸ் கூறினார். பாதுகாப்புப் படைகளுக்கு மேலும் நல்லமுறையில் ஆயுதங்கள் வழங்கப்படும் என்றும், இஸ்லாமியத் தீவிரவாதிகளுடன் தொடர்பு கொண்ட சந்தேக நபர்கள் குறித்த மேலும் விவரமான தரவுகள் கொண்ட தகவல் தளம் ஒன்று உருவாக்கப்படும் என்றும் அவர் கூறின…

  23. அமெரிக்க நாடாளுமன்றத்தில் ஒபாமா உரை: பயங்கரவாதிகளுக்கு எச்சரிக்கை 6 மணி நேரங்களுக்கு முன்னர் நாட்டு நிலைமை தொடர்பில் அமெரிக்க அதிபர் ஒபாமா ஆற்றியுள்ள வருடாந்த உரையில், நிதி நெருக்கடி முடிவுக்கு வந்துவிட்டதாக பிரகடனம் செய்ததோடு, பயங்கரவாதிகளுக்கு எதிரான தாக்குதல்கள் தொடரும் என எச்சரித்துள்ளார். காணொளியைக் காண இணைப்பை அழுத்தவும் http://www.bbc.co.uk/tamil/global/2015/01/150121_obamasouvideo

  24. புதுடெல்லி: ஆப்ஸ் ( app's) சேவைகளுக்கான விதிமுறைகளை மீறியதாக வாட்ஸ் அப் பயனாளிகள் பலருக்கு திடீரென 24 மணி நேர தடை விதிக்கப்பட்டதால் அவர்களிடையே குழப்பமும், பரபரப்பும் நிலவியது. வாட்ஸ் அப் போன்றே வாட்ஸ் அப் பிளஸ் ( WhatsApp+) என்ற அப்ளிகேஷனை ஆன்ட்ராய்ட் ரக போன் வைத்திருப்பவர்கள் சிலர் பயன்படுத்தி தங்களது நண்பர்கள் மற்றும் உறவு வட்டாரங்களுக்கு தகவல், புகைப்படம், வீடியோ உள்ளிட்டவற்றை அனுப்பி பகிர்ந்துகொண்டுள்ளனர். ஆனால் இவர்களில் பலர் வாட்ஸ் அப் பிளஸ் அப்ளிகேஷனும், வாட்ஸ் அப் அப்ளிகேஷனும் வெவ்வேறு என்ற விவரம் தெரியவில்லை. இவ்வாறு வாட்ஸ் அப் பிளஸ் அப்ளிகேஷனை பயன்படுத்தியவர்களுக்கு ஃபேஸ்புக், கூகிள் பிளஸ் மற்றும் டிவிட்டர் போன்ற வெவ்வேறு சமூக வலைத்தளங்கள் மூலம், " தேர்…

  25. கனடா- கல்கரி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து மத்திய கிழக்கு நோக்கி பயணித்த ஒருவரிடமிருந்து எல்லைப்புற அதிகாரிகள் 20-டொலர்கள் தாள்களாக 38,000டொலர்களிற்கும் மேலான தொகை பணத்தை கைப்பற்றியுள்ளனர். இம்மனிதன் தான் 9,000டொலர்களுடன் பயணம் செய்வதாக கூறியுள்ளார். அதிகாரிகள் மனிதனின் ஜாக்கெட்டிற்குள்ளும் கையில் சுமந்து செல்லும் பொதிக்குள் இருந்து 18,060 டொலர்களையும் சரிபார்க்கப்பட்ட பெட்டிக்குள்; இருந்து 20,000 டொலர்களையும் கண்டுபிடித்துள்ளனர். அனைத்தும் 20-டொலர்கள் தாள்கள். இவர் ஒரு குறைந்த வருமானம் உடையவர். இவ்வளவு தொகைப் பணம் இவரது கைக்கு எவ்வாறு கிடைத்தது என்பது எப்படியானது என அதிகாரிகள் கருதுகின்றனர். இவர் மத்திய கிழக்கில் எங்கு செல்கின்றார் என்பதை அதிகாரிகள் அடையாளம் கண்டு கொ…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.