உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26686 topics in this forum
-
டெல்லியில் ஆட்சி அமைத்துள்ள ஆம் ஆத்மி கட்சியின் முதல்–மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் சனிக்கிழமை தோறும் தலைமைச்செயலகத்துக்கு வெளியே பொதுமக்களை நேரில் சந்தித்து குறை கேட்கப்படும் என்று அறிவித்து இருந்தார். அனைத்து மந்திரிகளும் கலந்து கொள்ளும் இந்த ‘மக்கள் மன்ற’த்தில் மக்கள் தங்கள் குறைகளை தெரிவிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆம் ஆத்மி கட்சி அரசு சார்பில் நடத்தப்பட்ட முதல் மக்கள் குறை கேட்கும் நிகழ்ச்சியில் 50 ஆயிரம் பேர் திரண்டதால் குழப்பம் ஏற்பட்டது. இதனால் நிகழ்ச்சியை பாதியில் முடித்துக்கொண்டு, முதல்–மந்திரி கெஜ்ரிவால் வெளியேறினார். அவரை போலீசார் பாதுகாப்பாக அழைத்துச் சென்றனர். இந்நிலையில், முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால், மக்கள் குறைகேட்பு மன்றத்தை தற்போது நா…
-
- 0 replies
- 303 views
-
-
இராக்கின் தலைநகர் பாக்தாதின் மையப்பகுதியில் ஒரு கார் குண்டு வெடித்ததில் குறைந்தபட்சம் 9 பேராவதுகொல்லப்பட்டதாக பொலிஸார் தெரிவித்திருக்கிறார்கள். மேலும் 16 பேர் அதில் காயமடைந்திருக்கிறார்கள். இதேபகுதியில் கடந்த வாரம் இராணுவத்துக்கு சேர்க்கப்பட்டவர்கள் மத்தியில் ஒரு தற்கொலைக் குண்டுதாரி குண்டை வெடிக்கச் செய்ததில் 23 பேர் கொல்லப்பட்டிருந்தார்கள். கடந்த வருடத்தில் இராக்கில் அரசியல் பதற்றமும், வன்செயல்களும் கடுமையாக அதிகரித்துள்ளன. கடந்த ஆண்டில் சுமார் 9000 பேர் அங்கு வன்செயல்களில் கொல்லப்பட்டதாக ஐநா கூறியுள்ளது. கடந்த 5 வருடங்களில் இதுதான் மிகவும் அதிகமான தொகையாகும். http://www.bbc.co.uk/tamil/global/2014/01/140112_iraqblast.shtml
-
- 1 reply
- 423 views
-
-
பாராளுமன்றத்துக்கு வரும் ஏப்ரல், மே மாதங்களில் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் ஊழல் எதிர்ப்பு கோஷம் மிக முக்கிய பங்கு வகிக்கும் என்று எதிர் பார்க்கப்படுகிறது. ஊழலை ஒழிப்போம் என்று கூறி டெல்லியில் ஆட்சிக்கு வந்திருக்கும் அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆம்ஆத்மி கட்சி, அதே கோஷத்தை முன் வைத்து பாராளுமன்ற தேர்தலையும் சந்திக்க திட்டமிட்டுள்ளது. அந்த கட்சி ஊழல் குற்றச் சாட்டுகளில் சிக்காத, நல்ல இமேஜ் உள்ளவர்களை நாடெங்கும் சுமார் 300 தொகுதிகளில் நிறுத்த ஆலோசித்து வருகிறது. இது காங்கிரஸ், பாரதீய ஜனதா கட்சிகளின் வெற்றியை கணிசமாக பாதிக்கக் கூடும் என்று கூறப்படுகிறது. இதனால் காங்கிரஸ், பா.ஜ.க. இரு கட்சிகளும் தங்களது தேர்தல் வியூகத்தை மாற்ற வேண்டிய நிர்ப்பந்தத்துக்கு தள்ளப்பட்டுள்ளன.…
-
- 0 replies
- 334 views
-
-
அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான 'ஆம் ஆத்மி' ஆட்சி பற்றி பா.ஜனதா மூத்த தலைவரும், டெல்லி மேல்-சபை எதிர்க்கட்சி தலைவருமான அருண் ஜெட்லி ஒரு கட்டுரை எழுதி உள்ளார். 'ஆட்சிமுறை-ஒரு முக்கியமான வேலை' என்ற அந்த கட்டுரையில் அருண் ஜெட்லி எழுதி இருப்பதாவது:- காங்கிரசின் வெளி ஆதரவுடன் 'ஆம் ஆத்மி' டெல்லியில் அமைத்துள்ள அரசு, வாக்காளர்கள் தங்கள் மீது வைத்துள்ள நம்பிக்கையை காப்பாற்ற வரலாற்று சிறப்புமிக்க வாய்ப்பை பெற்றுள்ளது. டெல்லிக்கு நிறைய சவால்கள் உள்ளன. எந்த அதிகாரமும் இல்லாத டெல்லி, குளோபல் நகர் ஆக விரும்பும் டெல்லி என்பதுதான் 2 மிகப்பெரிய சவால்கள். அவற்றை 'ஆம் ஆத்மி' அரசு பூர்த்தி செய்ய வேண்டும். வாக்காளர்கள், தங்கள் விருப்ப கட்சியை மாற்றுவதில் பொல்லாதவர்கள். தாங்கள் ஓட்டுப்…
-
- 0 replies
- 354 views
-
-
உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள அமேதி தொகுதி காங்கிரஸ் கட்சியின் பாரம்பரியமான தொகுதியாக உள்ளது. இந்திராகாந்தி, ராஜீவ் காந்தி, சோனியாவை தொடர்ந்து அந்த தொகுதியில் ராகுல்காந்தியும் வெற்றி பெற்றார். வரும் பாராளுமன்ற தேர்தலில் ராகுல்காந்தி மீண்டும் அமேதி தொகுதியில் போட்டியிட முடிவு செய்துள்ளார். அந்த தொகுதியின் பிரசார பொறுப்பை பிரியங்கா ஏற்றுள்ளார். இந்த நிலையில் அமேதி தொகுதியில் ஆம் ஆத்மி சார்பில் குமார் விஸ்வாஸ் என்பவர் போட்டியிடுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அமேதி தொகுதியில் ராகுலை தோற்கடித்து காட்டுவேன் என்று சபதமிட்டப்படி இவர் தேர்தல் களத்தில் குதித்துள்ளார். நேற்று குமார் விஸ்வாஸ் அமேதி தொகுதிக்கு சென்று பிரசாரத்தில் ஈடுபட்டார். சுமார் 100 கார்கள் பின் தொடர சென்ற அ…
-
- 0 replies
- 306 views
-
-
ஊழலுக்கு எதிரான பிரச்சாரத்தை முன்வைத்து டெல்லி அரசை பிடித்துள்ளது கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சி. இதையடுத்து நாடாளுமன்ற தேர்தலிலும் 100 தொகுதிகளை கைப்பற்ற அது திட்டமிட்டுள்ளது. இந்நிலையில் உத்தரப்பிரதேச மாநிலம் அமேதி தொகுதியில் ராகுல் காந்தியின் போட்டி வேட்பாளராக குமார் விஷ்வாசை களமிறக்குவதாக ஆம் ஆத்மி அறிவித்துள்ளது. இதையொட்டி அங்கு நேற்று நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய குமார் விஷ்வாஸ் ராகுல் காந்தியின் குடும்பத்தை கடுமையாகத் தாக்கி பேசினார். செய்தியாளர்களை சந்தித்த குமார் விஷ்வாஸ், ராகுல்காந்தி குறித்து கூறியதாவது:- நாட்டில் குடும்ப அரசியல் ஊழலை வளர்த்துவிட்டு இருக்கிறது. அமேதி தொகுதியின் மேம்பாட்டிற்காக ஆயிரக்கணக்கான கோடிகள் செலவிடப்பட்டுள்ளது என்று ராகுல் கா…
-
- 0 replies
- 323 views
-
-
ராகுல் காந்தியின் தொகுதியான அமேதி தொகுதியில் எதிர்த்து போட்டியிடும் குமார் விஷ்வாஸ் இன்று (12.01/2014) நடத்திய கூட்டத்தில் கலந்து கொண்ட மக்கள். (twitter)
-
- 4 replies
- 547 views
-
-
ஈரான் அணு ஆயுதங்களை குவித்து வருவதாக கூறி இஸ்ரேல் மற்றும் அமெரிக்க உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் குற்றம் சாட்டி வந்தன. இதையடுத்து ஈரானுக்கு வழங்கப்பட்டு வந்த அமெரிக்க நிதியானது முடக்கப்பட்டது. மேலும் ஈரான் மீது பொருளாதரத் தடையையும் அமெரிக்கா கொண்டு வந்தது. இந்நிலையில், ஈரானின் அணுசக்தி திட்டம் தொடர்பாக கடந்த நவம்பர் மாதம் ஜெனிவாவில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் அமெரிக்கா, ரஷியா உள்ளிட்ட 6 நாடுகளுக்கும், ஈரானுக்கு இடையே உடன்பாடு ஏற்பட்டது. அதில் ஈரானின் ஆக்கப்பூர்வ குடியுரிமை திட்டங்களுக்காக மட்டும் 5 சதவிகித அணுசக்தியை உற்பத்தி செய்துகொள்ளவும், அதற்கு மாற்றாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ள அமெரிக்க நிதியை தொடர்ந்து வழங்கவேண்டும் என்றும் கூறப்பட்டது. இந்த வரலாற்று மு…
-
- 3 replies
- 391 views
-
-
அமெரிக்காவில் நியூயார்க்கில் உள்ள இந்திய தூதரகத்தில், துணை அதிகாரியாக பணியாற்றி வந்தவர் தேவயானி கோபர்கடே (39) போலியான தகவல்கள் மூலம் விசா மோசடி செய்ததாக சமீபத்தில் கைது செய்யப்பட்டார். பின்னர் ரூ.1 கோடியே 50 லட்சம் ஜாமீனில் அவர் விடப்பட்டார். இதற்கு இந்திய தரப்பில் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில் மேலும் அவரை அவமானபடுத்தும் விதமாக அதிகாரி தேவயானி அவர், நியூயார்க்கில் உள்ள சிறையில் அடைக்கப்பட்டார். அவர் பொதுவான சிறையில் அடைக்கபட்டார் இதில் போதைமருந்து குற்றவாளிகள் மற்றும் பாலியல் தொழிலாளர்கள் வைக்கபடும் சிறையாகும். துணைத்தூதர் அந்தஸ்தில் இருக்கும் ஒருவர் இவ்வாறு நடத்தப்படுவது இந்திய அரசுக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதற்கிடையே, அமெரிக்…
-
- 172 replies
- 12.9k views
-
-
இந்தோனேசியா தீவுகள் நிறைந்த நாடாகும். பூகம்ப பகுதிக்குள் வரும் இந்தோனேசியாவில் மொத்தம் 129 உறுமிக்கொண்டிருக்கும் எரிமலைகள் உள்ளன. அதில் சுமந்திரா தீவின் வடக்கு பகுதியில் 2457 மீட்டர் நீளமுடைய மவுண்ட் சினாபங் எரிமலையும் ஒன்று. இந்த எரிமலை கடந்த செப்டம்பர் மாதம் முதல் கடுமையாக உறுமிக்கொண்டிருக்கிறது. இந்நிலையில், நேற்று அந்த எரிமலை பலத்த சத்தத்துடன் 24 முறை வெடித்து சிதறியது. இதையடுத்து எரிமலை வாயிலிருந்து நெருப்பு குழம்புகள் கக்கத்தொடங்கியுள்ளன. எரிமலை சாம்பல்களும் மேல் நோக்கி பீச்சி அடிக்கப்பட்டன. இந்த சாம்பலானது 4 ஆயிரம் மீட்டர் தூரம் வரை ஆகாயத்தில் தூண்கள் போல நின்று காட்சியளித்தன. மேலும் தொடர்ந்து எரிமலைக்குழம்புகளை கக்கும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து 7…
-
- 9 replies
- 819 views
-
-
உலகில் தற்போது உயிருடன் இருப்போரில் மைக்ரசொஃப்ட் நிறுவனரும் பெரும் கொடையாளியுமான பில் கேட்ஸ் தான் அனேகமானோரால் விரும்பப்படும் மனிதர் என்று சர்வதேச ஆய்வொன்று கூறுகிறது. இரண்டாவது நபராக அமெரிக்க அதிபர் ஒபாமாவும் மூன்றாவது இடத்தில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடீனும் உள்ளனர். அவர்களுக்கு அடுத்த இடத்தை தான் பாப்பரசர் பிரான்சிஸ் பிடித்திருக்கிறார். அமெரிக்காவிலோ ஒபாமாவை விட இரண்டு மடங்கு ஆதரவுபெற்று, பாப்பரசர் பிரான்சிஸ் தான் முதலிடம் பெற்றார். சீனாவில் அதிபர் க்ஷி ஜின்பிங்-ஐவிட இரண்டு மடங்கு விருப்பு வாக்கு பில் கேட்ஸுக்கு கிடைத்திருக்கிறது. டைம்ஸ் செய்திப் பத்திரிகைக்காக ஆய்வு நிறுவனமொன்றினால் 13 நாடுகளில் சுமார் 14 ஆயிரம் பேரிடம் இந்த ஆய்வு நடத்தப்பட்டுள்ளது. …
-
- 4 replies
- 924 views
-
-
கோவாவில் நரேந்திரமோடியின் vijay shankalp rally இல் இன்று (12.01.2014) கலந்துகொண்ட மக்கள். (twitter)
-
- 0 replies
- 367 views
-
-
இந்திய, அமெரிக்க கடற்படைகளின் கூட்டு பயிற்சி ஆண்டுதோறும் அரபிக்கடலில் நடைபெற்று வருகிறது. கடந்த 2007&ம் ஆண்டு ஜப்பான் மற்றும் ஆஸ்திரேலியா நாடுகளும் இந்த பயிற்சியில் கலந்து கொண்டன. ஆனால் இதற்கு சீனா எதிர்ப்பு தெரிவித்தது. இதைத்தொடர்ந்து இந்த பயிற்சி இந்தியா, அமெரிக்கா இடையிலான இருநாட்டு பயிற்சியாக மாற்றப்பட்டது. இந்தநிலையில், இந்தியா வந்துள்ள ஜப்பான் பாதுகாப்பு மந்திரி இட்சுனோரி ஒனோடெரா, டெல்லியில் இந்திய ராணுவ மந்திரி ஏ.கே.அந்தோணியை சந்தித்து பேசினார். அப்போது, இந்த பயிற்சியில் ஜப்பானும் இணைய விரும்புவது குறித்து பேசியதாக ஜப்பான் மந்திரி பின்னர் தெரிவித்தார்.இது குறித்து மேலும் அவர் கூறுகையில், இந்த கடல் பயிற்சியானது, தங்கள் கடல் எல்லையை பாதுகாப்பதற்காக நட்பு நாடுகள…
-
- 0 replies
- 435 views
-
-
நரேந்திர மோடிக்கு தக்க சவாலாகவும், காங்கிரஸ் கட்சிக்கு ஒரு மாற்றாகவும் பிப்ரவரியில் வலுவான ஒரு கூட்டணி அமையும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலர் பிரகாஷ் கராத் தெரிவித்துள்ளார். கேரள மாநிலம் எர்ணாகுளம் பத்திரிகையாளர் மன்றத்தில் நடந்த விழா ஒன்றின் போது பேசிய பிரகாஷ் கராத் தெரிவித்துள்ளார். மேலும், "பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடியை எதிர்கொள்ளும் கட்சியாக தேர்தலில் காங்கிரஸ் கூட்டணியால் சோபிக்க முடியாது. மோடியை சமாளிக்க காங்கிரஸ் அல்லாத மதச்சார்பற்ற சக்தியால் மட்டுமே முடியும். அத்தகைய கூட்டணி அடுத்த மாதத்திற்குள் அமையும். இது தொடர்பாக பல்வேறு கட்சிகளுடனும் தொடர்ந்து பேசிக் கொண்டிருக்கிறோம்" என்றார். டெல்லி தேர்தலில் அமோக வெற்றி பெற்ற ஆம் ஆத்மி கட…
-
- 1 reply
- 439 views
-
-
ராகுல் காந்தி தலைமையில் பாராளுமன்ற தேர்தலை சந்திப்போம் என்று மத்திய மந்திரி மணீஷ் திவாரி கூறினார். அகிய இந்திய காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி பெங்களூரில் நேற்று நடத்திய கலந்துரையாடல் கூட்டத்தில் விவாதிக்கப்பட்ட அம்சங்கள் குறித்து மத்திய மந்திரி மணீஷ் திவாரி நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:– மக்களின் பிரச்சினை பாராளுமன்ற தேர்தல் அறிக்கை தயாரிப்பது தொடர்பாக இளம் சாதனையாளர்கள், இளைஞர்களிடம் கருத்து கேட்பு கூட்டத்தை பெங்களூரில் எங்கள் இளம் தலைவர் ராகுல் காந்தி நடத்தினார். இளைஞர்கள் தங்கள் கருத்துகளை, விருப்பங்களை தெரிவித்து உள்ளனர். அவை கவனத்தில் எடுத்துக் கொள்ளப்படும். மக்கள் பிரச்சினைகளை நேரில் சென்று அறிந்து கொள்ள வேண்டும், அதன் அடிப்படையில…
-
- 0 replies
- 333 views
-
-
லஞ்சம் கேட்கும் அரசு ஊழியர்களை பற்றி புகார் கொடுப்பதற்காக, டெல்லி முதல்–மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால், கடந்த புதன்கிழமை, ‘ஹெல்ப்லைன்’ எனப்படும் தொலைபேசி புகார் சேவையை தொடங்கி வைத்தார். அதற்கு அபரிமிதமான வரவேற்பு காணப்படுகிறது. 23 ஆயிரத்து 500 பேர் அச்சேவையை பயன்படுத்தி புகார் கொடுத்தனர். இந்நிலையில், ‘ஹெல்ப்லைன்’ தொடங்கிய மூன்றே நாட்களில், நேற்று 2 போலீசார் கைது செய்யப்பட்டனர். அவர்கள் பெயர் ஈஸ்வர் சிங், சந்தீப் குமார். இருவரும் ஜனகபுரி போலீஸ் நிலையத்தில் பணியாற்றி வருகிறார்கள். அவர்கள் தன்னிடம் மாமூல் கேட்டு தொல்லை கொடுப்பதாக, இனிப்பகம் நடத்தி வரும் ஒருவர் தொலைபேசி புகார் சேவையில் புகார் கொடுத்தார். அதன்பிறகு, 2 போலீசாரும் மாமூல் கேட்பதை அவர்களுக்கு தெரியாமல் ஒலிப்பதிவு …
-
- 0 replies
- 388 views
-
-
காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி மற்றும் ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளர் கெஜ்ரிவாலால் நரேந்திர மோடிக்கு எந்த ஒரு சவாலும் இல்லை என்று சத்தீஷ்கார் மாநில முதல் மந்திரி ராமன் சிங் கூறியுள்ளார். பாரதீய ஜனதா தனி பெரும்பான்மை பெற்று ஆட்சி அமைக்கும் நரேந்திர மோடி பிரதமர் ஆவார் என்று ராமன் சிங் கூறியுள்ளார். மேலும், கடந்த பாராளுமன்றத் தேர்தலில் சத்தீஷ்காரில் பாரதீய ஜனதா 11 தொகுதிகளில் 10 தொகுதிகளில் வெற்றி பெற்றது. ஆனால் இந்த பாராளுமன்றத் தேர்தலில் பாரதீய ஜனதா 11 தொகுதியிலும் வெற்றி பெறும். மோடியின் வெற்றி உறுதியாகிவிட்டது என்று கூறியுள்ளார். http://www.dailythanthi.com/2014-01-12-Rahul-Kejriwal-no-challenge-for-Modi-Raman-Singh-on-PM-post
-
- 0 replies
- 384 views
-
-
கோவாவில் நடைபெறும் பாரதீய ஜனதா கட்சியின் பொதுக்கூட்டத்தில் அக்கட்சியின் பிரதமர் வேட்பாளர் கலந்து கொண்டு பேசிவருகிறார். நரேந்திர மோடி, காங்கிரஸ் கட்சி ஊழல் விவகாரத்தில் வெட்கம் இல்லாமல் உள்ளது. மத்தியில் பாரதீய ஜனதா ஆட்சி அமைத்தால் நிர்வாகம் வெளிப்படையாக நடைபெறும் என்று கூறியுள்ளார். மேலும் கனிம வளங்களின் ஒதுக்கீடு வெளிப்படையாக நடைபெறும் என்று மோடி கூறியுள்ளார். பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டடோர்களிடம் ரூ. 5 கட்டணம் வசூலிக்கப்பட்டது. இந்த பணம் கோவாவில் கட்டிட விபத்தில் பலியானோர்களுக்கு வழங்கப்படும் என்று மோடி கூறியுள்ளார். http://www.dailythanthi.com/2014-01-12-Congress-is-shameless-about-corruption-says-Modi-in-Goa
-
- 0 replies
- 334 views
-
-
கோவா மாநிலம் பனாஜியில் பாரதீய ஜனதா கூட்டத்தில் அக்கட்சியின் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி கலந்து கொண்டு பேசி வருகிறார். நரேந்திர மோடி காங்கிரஸ் இல்லாத நாட்டை உருவாக்குவதே பாரதீய ஜனதா கட்சியின் இலக்கு என்று கூறியுள்ளார். மேலும், மக்களும் அதனை செய்ய முனைப்புடன் உள்ளனர் என்று கூறியுள்ளார். மேலும், இன்பத்திலும் துன்பத்திலும் நாட்டு மக்களுடன் இருப்பது பாரதீய ஜனதா கட்சியே. பாரதீய ஜனதா தலைவர்கள் அனைவரும் சாதாரண குடும்பத்தில் இருந்து வந்தவர்களே. பரிக்காரை முதல் மந்தியாக ஆக்கிய கோவா மக்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். பாரதீய ஜனதாவில் மட்டுமே தங்களை போன்ற சாதாரணமக்களுக்கும் முன்னுரிமை அளிக்கப்படுகிறது. டீ விற்ற என்னை பிரதமர் வேட்பாளர் ஆக்கியது பாரதீய ஜனதாவே என்று நரே…
-
- 0 replies
- 310 views
-
-
ஆம் ஆத்மி கட்சியின் வித்தை நாட்டின் வேறு எந்த பகுதியிலும் செயல்படாது என்று பாரதீய ஜனதா கட்சியின் தலைவர் கோபிநாத் முண்டே தெரிவித்துள்ளார். வருகிற பாராளுமன்றத் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி டெல்லி சட்டமன்றத் தேர்தலில் பெற்ற ஆதரவை பெறாது என்று அவர் கூறியுள்ளார். தானேவில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட முண்டே செய்தியாளர்களிடம் பேசிய போது “ஆம் ஆத்மி கட்சி டெல்லியில் பெற்ற வெற்றி மற்றும் மக்களின் ஆதரவை நாட்டில் வேறு எந்த பகுதியிலும் பெற முடியாது” என்று கூறியுள்ளார். “டெல்லியில் ஆம் ஆத்மி கட்சி ஒன்றும் அதிக இடங்களில் வெற்றி பெறவில்லை. பாரதீய ஜனதா கட்சியே அதிக இடங்களில் வெற்றி பெற்றது. ஆம் ஆத்மி காங்கிரஸ் கூட்டணியுடன் ஆட்சிக்கு வந்துள்ளது”. பாரதீய ஜனதா கட்சி நாட்டின் மற்ற க…
-
- 0 replies
- 299 views
-
-
உத்தரப்பிரதேச மாநிலம் அமேதி தொகுதியின் எம்.பி.யாக காங்கிரஸ் கட்சியின் துணைத்தலைவர் ராகுல் காந்தி இருந்துவருகிறார். இந்நிலையில் ராகுல் காந்தியின் போட்டி வேட்பாளராக களமிறங்கவுள்ள ஆம் ஆத்மி கட்சியின் தலைவரான குமார் விஷ்வாஸ், இன்று அமேதி தொகுதி பொதுக்கூட்டத்தில் பேசினார். அப்போது இளவரசன் ராகுல் காந்தி குடிசைக்குள் சென்று சாப்பிடுகிறார். ஆனால், குடிசைவாசிகளுக்காக இதுவரை அவர் ஒரு குரலும் கொடுக்கவில்லை என்று குற்றம் சாட்டினார். இதற்கு பதிலளித்து பேசிய மத்திய அமைச்சர் ராஜீவ் சுக்லா கூறியதாவது:- அமேதி தொகுதி மக்களுக்கு காந்தி குடும்பத்தினர் நிறைய செய்து இருக்கின்றனர். அத்தொகுதி மக்களின் ஆசிர்வாதம் என்றென்றும் காந்தி குடும்பத்திற்கு உண்டு. ஆகையால் அவர்களை இங்கு எம்.பி.யாக தேர்வ…
-
- 0 replies
- 319 views
-
-
சமையல் கியாஸ் சிலிண்டர்கள் தற்போது ஒரு குடும்பத்துக்கு, ஆண்டு ஒன்றுக்கு மானிய விலையில் 9 சிலிண்டர்களே வழங்கப்பட்டு வருகிறது. இது நடுத்தர குடும்பத்து மக்களை மிகவும் பாதிப்பதாக உள்ளது. மானியம் இல்லாத சிலிண்டர்களை பெற ஒவ்வொரு தடவையும் ரூ.1,500–க்கு மேல் செலவிட வேண்டியதுள்ளது. மானிய விலை சிலிண்டர்கள் எண்ணிக்கையை ஆண்டுக்கு 12 ஆக உயர்த்தினால் மக்கள் பாதிப்பு குறையும் என்று கூறப்பட்டது. ஆனால் கடந்த 3–ந்தேதி நிருபர்களுக்கு பேட்டியளித்த பிரதமர் மன்மோகன்சிங் அதுபற்றி ஆலோசிக்கவில்லை என்றார். இதற்கிடையே மக்களை கவர வேண்டுமானால் சிலிண்டர்கள் எண்ணிக்கையை 12 ஆக உயர்த்துவதை தவிர வேறு வழியில்லை என்ற நிலை மத்திய அரசுக்கு ஏற்பட்டுள்ளது. எனவே இதை எப்படி செயல் படுத்துவது என்று மத்திய பெட…
-
- 1 reply
- 840 views
-
-
உத்தர பிரதேசத்தில் அமேதி மாவட்டத்தில் ஜக்தீஷ்பூர் நகரில் ஆம் ஆத்மி கட்சியின் தலைவர்களில் ஒருவரான குமார் விஸ்வாசுக்கு இளைஞர் அமைப்பினர் இன்று கறுப்பு கொடி காட்டி எதிர்ப்பு தெரிவித்தனர். இது 2வது முறையாக அவருக்கு தெரிவிக்கும் எதிர்ப்பு நடவடிக்கையாகும். லக்னோ நகரில் நேற்று நடந்த செய்தியாளர்கள் சந்திப்பின்போது, குமார் விஸ்வாஸ் மீது இளைஞர் ஒருவர் முட்டை ஒன்றை தூக்கி வீசினார். இந்நிலையில், அமேதி நகரில் ராம்லீலா மைதானத்தில் நடைபெறும் ஜன் விஸ்வாஸ் பேரணியில் கலந்து கொள்வதற்காக ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்த குமார் விஸ்வாஸ், சஞ்சய் சிங் உள்ளிட்ட மற்ற தலைவர்கள் சென்று கொண்டிருந்தனர். அப்பொழுது அவர்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இளைஞர்கள் சிலர் கறுப்பு கொடி காட்டினர். வருக…
-
- 0 replies
- 477 views
-
-
புதுடில்லி : அமெரிக்காவிலிருந்து, நம், பெண் துணை தூதர், தேவயானியை, அமெரிக்கா, திருப்பி அனுப்பி வைத்ததற்கு பதிலடியாக, அவர் அந்தஸ்தில் உள்ள, அமெரிக்க அதிகாரியை, திருப்பி அழைத்துக் கொள்ளுமாறு, அமெரிக்காவுக்கு, மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. 'விசா' முறைகேடு:இந்தியாவிற்கான அமெரிக்க துணை தூதராக, நியூயார்க்கில் பணியாற்றியவர், தேவயானி கோப்ராகடே. இவர் வீட்டு பணிப்பெண் சங்கீதாவுக்கு, ஒப்பந்த அடிப்படையில், உரிய சம்பளம் தராமல் இருந்ததாகவும், அவரை பணியமர்த்துவதற்காக தேவயானி, 'விசா' முறைகேட்டில் ஈடுபட்டதாகவும் குற்றம் சாட்டப்பட்டது. இந்த குற்றச்சாட்டு தொடர்பாக, கடந்த மாதம், 12ம் தேதி, தேவயானி, அமெரிக்க போலீசாரால், கைவிலங்கிடப்பட்ட நிலையில் கைது செய்யப்பட்டார்; சிறையில் அடைக்கப்படுவதற…
-
- 23 replies
- 1.5k views
-
-
ஆந்திராவை பிரித்து தனி தெலுங்கானா மாநிலம் அமைக்கும் மத்திய அரசின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திர அரசு ஊழியர் சங்கம், ஒருங்கிணைந்த ஆந்திரா போராட்டம் குழு சார்பில் முழு அடைப்பு போராட்டம் நடத்தப்பட உள்ளது. சீமாந்திரா பகுதியில் வருகிற 17, 18 ஆகிய 2 நாட்கள் மட்டும் இந்த முழு அடைப்பு போராட்டம் நடைபெறுகிறது. மேலும் அன்றைய தினங்களில் மத்திய – மாநில அரசு அலுவலகங்கள், பள்ளி, கல்லூரி உள்பட கல்வி நிறுவனங்கள் அனைத்தும் மூடப்படுகிறது. பேருந்துகளும் இயங்காது என அறிவிக்கப்பட்டு உள்ளது. http://www.dinamani.com/latest_news/2014/01/12/%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%BF-%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B2%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BE-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%…
-
- 0 replies
- 368 views
-