உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26696 topics in this forum
-
சென்னை: வரும் நூற்றாண்டை இந்தியாவினுடையதாக மாற்ற வேண்டும் என்று குஜராத் முதல்வரும் பாரதிய ஜனதா கட்சியின் பிரதமர் வேட்பாளருமான நரேந்திர மோடி அழைப்பு விடுத்துள்ளார். சென்னையில் மூத்த பத்திரிகையாளர் அருண்ஷோரியின் நூல் வெளியீட்டு விழாவில் வணக்கம் என்று தமிழில் கூறிவிட்டு நரேந்திர மோடி பேசியதாவது: ஆங்கிலேயரிடம் இருந்து விடுதலை பெற மட்டுமே சுதந்திரப் போராட்டம் அல்ல.. சர்வதேச அளவிலான காலனி ஆதிக்கத்துக்கு எதிரான இயக்கத்தின் ஒருபகுதியாகவுமே சுதந்திரப் போராட்டம் இருந்தது. அதனடிப்படையிலேயே வெளியுறவுக் கொள்கை உருவெடுத்தது. ஆசிய, கிழக்காசிய நாடுகளுக்கும் நமக்கும் இடையே புத்தர்தான் பொது இணைப்பாக இருக்கிறார். இந்த இணைப்பை நாம் பலப்படுத்த வேண்டும். 60 ஆண்டுகாலமாக அண்டை நாடுகளின் நல்லுறவை…
-
- 0 replies
- 410 views
-
-
உத்தரப்பிரதேச மாநிலத்தில்,பாழடைந்த அரண்மனைக்குக் கீழே பல ஆயிரக்கணக்கான கிலோ எடையுள்ள தங்கப் புதையல் இருப்பதாக , கனவு கண்டதாக சாமியார் ஒருவர் சொன்னதை அடுத்து, அந்த இடத்தைத் தோண்டிப் பார்க்கும் பணியை இந்திய தொல்லியல் கழகம் தொடங்கியிருக்கிறது. புதையல் வேட்டை கனவை நம்பி ஷோபன் சர்க்கார் என்ற இந்த சாமியார் தான் கண்ட கனவில் 19வது நூற்றாண்டு அரசரான, ராவ் ராம் பக்ஸ் சிங்குக்குச் சொந்தமானது என்றும், இந்த புதையல் உத்தரப்பிரதேச மாநிலத்தின் தௌண்டியா கேரா என்ற கிராமத்தில் இருப்பதாகவும் கூறினார். இந்தக் கனவை அந்த சாமியார் ஒரு அமைச்சரிடம் சொல்ல அவர் அதிகாரிகளை விட்டு இந்த இடத்தை ஆய்வு செய்து, தோண்டும் வேலைகளைத் தொடங்க உத்தரவிட்டார். கனவை நம்பி புதையலைத் தேடும் அரசாங்கத்தின் இந்த நட…
-
- 0 replies
- 397 views
-
-
இன்று முழுக்க பல இடங்களில் (95 இடங்களில்) நெருப்பு பற்றி எரிகிறது. நூற்றுக் கணக்கான வீடுகள் எரிந்துள்ளன. இன்று மதியம் தொடக்கம் சிட்னி வானம் புகையால் கறுத்துப் போய் இருந்தது.
-
- 11 replies
- 965 views
-
-
லண்டன்: உலகில் 30 மில்லியன் மக்கள் கொத்தடிமைகளாக உள்ளார்களாம். அதில் பாதி பேர் இந்தியாவில் தான் உள்ளனர் என்று கணக்கெடுப்பு மூலம் தெரிய வந்துள்ளது. வாக் ப்ரீ பவுன்டேஷன் 162 நாடுகளில் கொத்தடிமைகளாக உள்ள மக்கள் குறித்த கணக்கெடுப்பை நடத்தியது. இதில் உலகம் முழுவதும் 29.8 மில்லியன் மக்கள் கொத்தடிமைகளாக இருப்பது தெரிய வந்துள்ளது. எந்தெந்த நாடுகளில் கொத்தடிமைத்தனம் அதிகம் என்று பார்ப்போம். உலக அளவில் 29.8 மில்லியன் பேர் கொத்தடிமைகளாக இருந்தாலும் அதில் பாதி பேர் இந்தியாவில் தான் உள்ளார்களாம். அதாவது இந்தியாவில் 14 மில்லியன் பேர் கொத்தடிமைகளாக உள்ளார்களாம். சீனாவில் 3 மில்லியன் பேர் கொத்தடிமைகளாக உள்ளார்களாம்.உலக கொத்தடிமைகளில் 76 சதவீதம் பேர் இந்தியா, சீனா, பாகிஸ்தான், நைஜீரியா,…
-
- 1 reply
- 512 views
-
-
டெல்லி: 2014 லோக்சபா தேர்தலுக்குப் பின்னர் மத்தியில் அடுத்த ஆட்சியை அமைக்கும் நடவடிக்கைகளில் பிராந்திய கட்சிகள்தான் முக்கியப் பங்கு வகிக்கும் என்று ஒரு சர்வே கூறுகிறது. மேலும் தற்போதைய நிலையில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணியை விட பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியே முன்னணியில் உள்ளதாகவும் இந்த சர்வேத தெரிவிக்கிறது. அதை விட முக்கியப் பங்கு வகிக்கப் போகும் பிராந்தியக் கட்சிகள் தற்போது ஐக்கிய முற்போக்குக் கூட்டணியிலோ அல்லது தேசிய ஜனநாயகக் கூட்டணியிலோ இல்லாத கட்சிகள் என்றும் இந்த சர்வே குண்டைத் தூக்கிப் போடுகிறது. இந்தியா டிவி- டைம்ஸ் நவ் மற்றும் சி வோட்டர் ஆகியவை இணைந்து நடத்திய சர்வேயில்தான் இந்தத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆகஸ்ட் 16 முதல் அக்டோபர…
-
- 0 replies
- 437 views
-
-
வாஷிங்டன்(யு.எஸ்) பதினாறு நாட்களாக அமெரிக்க அரசை நிலை குலைய வைத்த முடக்கம் முடிவுக்கு வந்தது. அரசு செலவினங்களுக்கான ஒப்புதல் மசோதா இரு சபையிலும் நிறைவேற்றப்பட்டது. ஜனவரி 15ம் தேதி வரைக்கான அரசு செலவுகளுக்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. கடன் உச்ச வரம்பும் பிப்ரவரி 7 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. ஜனநாயகக் கட்சி மெஜாரிட்டியாக உள்ள செனட் சபையில் ஆளுங்கட்சி தலைவர் ஹாரி ரீட், எதிர்க்கட்சியான குடியரசுக் கட்சியின் தலைவர் மிட்ச் மெக்கனலுடன் பேச்சு வார்த்தை நடத்தி சமரச முறையில் தீர்மானம் இயற்றினார். செனட் சபையில் 81 :18 என்ற வாக்குகள் வித்தியாசத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு காங்கிரஸ் சபைக்கு அனுப்பப்பட்டது. முன்னதாக தீர்மானத்தின் மீது பேசிய ஜனநாயகக் கட்சி செனட்டர் சக் சூமர், எதிர்க் …
-
- 1 reply
- 408 views
-
-
"அரசின் அசுர பலத்தை எதிர்க்க முடியவில்லை!" சுப.உதயகுமாரனின் அபயக் குரல்! எங்கள் மீது மிகப் பெரிய வன்முறை வெறியாட்டத்தை நடத்துவதற்காக காவல் துறையும், தமிழக அரசும், அணுமின் நிர்வாகமும், தாதுமணல் கொள்ளையர்களும் கூட்டு சேர்ந்துள்ளனர். நாங்கள் அடித்து நொறுக்கப்பட்டால், அதற்கு இவர்கள்தான் பொறுப்பு; தமிழக மக்கள்தான் சாட்சி. இதை ஆனந்த விகடன் மூலமாக விடுக்கும் அபயக்குரலாக எடுத்துக்கொள்ளுங்கள்!'
-
- 0 replies
- 522 views
-
-
அமெரிக்காவில் நிதி நெருக்கடியைத் தீர்க்க ஆளுங்கட்சியும் எதிர்க்கட்சியும் உடன்பாடு கண்டுள்ளதாக அந்நாட்டு நாடாளுமன்ற மேலவையின் மூத்த எம்.பி.க்கள் தெரிவித்துள்ளனர். அமெரிக்காவில் நிலவி வரும் நெருக்கடியைச் சமாளிக்க எதிர்க்கட்சியான குடியரசுக் கட்சி மற்றும் ஆளும் ஜனநாயகக் கட்சி எம்.பி.க்களிடையே புதன்கிழமை முக்கிய விவாதம் நடைபெற்றது. அப்போது, அரசியல்ரீதியிலான கருத்து வேறுபாடுகளை மறந்து சமரசத்தீர்வு எட்டப்பட்டது. இதைத் தொடர்ந்து, இந்த விவகாரத்தில் உடன்பாடு ஏற்பட்டுள்ளதாக செனட் எனப்படும் மேலவையின் பெரும்பான்மைத் தலைவர் ஹாரி ரீட், செய்தியாளர்களிடம் தெரிவித்தார். இப்போது எட்டப்பட்டுள்ள சமரசத் திட்டத்தின் மூலம் நமது பொருளாதாரத்துக்கு ஸ்திரத்தன்மை ஏற்படும்'' என்றும் அவர…
-
- 0 replies
- 336 views
-
-
லாவோஸ் நாட்டில் உள்ள லாவோ விமான நிறுவனத்துக்கு சொந்தமான விமானம் ஒன்று தலைநகர் வியன்டியானேவில் இருந்து நாட்டின் தென்பகுதியில் உள்ள ஒரு நகருக்கு பயணிகளுடன் புறப்பட்டது. அந்த விமானம் லாவோசில் உள்ள மேகாங் என்ற ஆறு அருகே சென்ற போது, திடீரென நடுஆற்றுக்குள் விழுந்து நொறுங்கியது. இதுபற்றிய தகவல் கிடைத்ததும் மீட்பு குழுவினர் அந்த பகுதிக்கு விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர். விமான விபத்தில் 44 பேர் பலியானதாக தாய்லாந்து நாட்டு டெலிவிஷன் அறிவித்து உள்ளது. இறந்த பயணிகளில் 17 பேர் லாவோஸ் நாட்டை சேர்ந்தவர்கள் என்றும், ஏழு பேர் ஆஸ்திரேலியா நாட்டை சேர்ந்தவர்கள் மற்றும் மூன்று பேர் கொரியாவை சேர்ந்தவர்கள் என்றும் தெரியவந்துள்ளது. மேலும் இந்த விபத்தில் வியட்நாம், …
-
- 0 replies
- 492 views
-
-
நோயாளிகளின் முக்கிய குறிப்புகள் அடங்கிய லேப்டாப்பை தொலைத்த சைக்காலஜி மருத்துவர் ஒருவர் வாஷிங்டனில் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். அவர் விபச்சாரி ஒருவருடன் உல்லாசமாக இருந்துவிட்டு, தூங்கிவிட்டார். அந்த நேரத்தில் அவருடன் இருந்த விபச்சாரி அந்த லேப்டாப்பை திருடிச்சென்றுவிட்டதாக விசாரணையில் தெரிய வந்துள்ளது. வாஷிங்டனில் உள்ள Dr Sunil Kakar, என்ற சைக்காலஜி அரசு மருத்துவர், தனது வீட்டில் 652 நோயாளிகளின் மருத்துவக்குறிப்புகள் அடங்கிய லேப்டாப்பை வைத்திருந்தார். சம்பவம் நடந்த அன்று, உல்லாசமாக இருப்பதற்காக போன் செய்து விபச்சாரி ஒருவரை வரவழைத்து அவருடன் உல்லாசமாக இருந்துவிட்டு, தூங்கிவிட்டார். பின்னர் காலையில் எழுந்துபார்த்தபோது தனது லேப்டாப் திருட்டு போனதை அறிந்தார். ஆனால் …
-
- 0 replies
- 417 views
-
-
$ டெல்லி: நிலக்கரி சுரங்க ஒதுக்கீட்டு முறைகேட்டில் சிபிஐ குற்றவாளிகளை கண்டுபிடிக்குமானால் அதில் பிரதமரே முதல் குற்றவாளியாக இருப்பார் என்று நிலக்கரித் துறை முன்னாள் செயலர் பிரகாஷ் சந்திர பரக் தெரிவித்துள்ளார். நிலக்கரி ஊழல் விவகாரத்தில் சிபிஐ 14வது எப்.ஐ.ஆர். பதிவு செய்தது. அதில் ஆதித்ய பிர்லா குழுமத்தின் தலைவர் குமார் மங்களம் பிர்லா, முன்னாள் நிலக்கரி துறை செயலர் பிரகாஷ் சந்திர பரக் ஆகியோரது பெயர்கள் இடம்பெற்றிருந்தன. இது தொடர்பாக கருத்து தெரிவித்த பிரகாஷ் சந்திர பரக், நிலக்கரி சுரங்க ஒதுக்கீட்டு முறைகேடு விசாரணை இறுதி கட்டத்தை அடைந்தால் அதில் நிலக்கரி சுரங்கங்களுக்கு ஒப்புதல் அளித்த பிரதமர் மன்மோகன்சிங்கே முதல் குற்றவாளியாக இருப்பார் என்றார். http://tamil.oneindia.in/n…
-
- 0 replies
- 586 views
-
-
அகமதாபாத்: பக்ரீத் திருநாளையொட்டி முஸ்லீம்களுக்கு குஜராத் முதல்வர் நரேந்திர மோடி, டிவிட்டர் மூலம் வாழ்த்து தெரிவித்திருந்தார். இதுதொடர்பாக அவர் விடுத்திருந்த டிவிட்டர் செய்தியில், இந்த திருநாள், நமது சமூகத்தில் சகோதரத்துவத்தையும், ஒற்றுமையையும் பலப்படுத்த உதவட்டும் என்று கூறியிருந்தார் மோடி. பக்ரீத் பண்டிகை இன்று உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டது குறிப்பிடத்தக்கது. http://tamil.oneindia.in/news/india/narendra-modi-tweets-eid-greetings-185462.html
-
- 0 replies
- 385 views
-
-
ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீர் எல்லையில் கடந்த 48 மணி நேரத்தில் 4 முறை யுத்த நிறுத்த ஒப்பந்தத்தை மீறி இந்திய நிலைகள் மீது பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல்களை நடத்தியுள்ளது. பாகிஸ்தான் ராணுவத்தினர் ஜம்மு காஷ்மீர் எல்லையில் ஹமிர்புர் பகுதியில் நேற்று நடத்திய தாக்குதலில் இந்திய வீரர் ஒருவர் உயிரிழந்தார். இந்நிலையில் இன்று காலை மீண்டும் சிறிய ரக ஆயுதங்கள் மூலமாக பாகிஸ்தான் ராணுவத்தினர் இந்திய நிலைகள் மீது தாக்குதல் நடத்தினர். இதைத் தொடர்ந்து இந்திய ராணுவத்தினரும் பதிலடி கொடுத்தனர். பின்னர் கிருஷ்ணா காடி, பிம்பெர் காலி செக்டாரில் இந்திய நிலைகளை நோக்கி பாகிஸ்தான் ராணுவத்தினர் தாக்குதல் நடத்தினர். கடந்த 48 மணி நேரத்தில் 4 முறை இந்திய நிலைகள் மீது பாகிஸ்தான் ராணுவத்தினர் தாக்குதல் நடத்தியு…
-
- 0 replies
- 400 views
-
-
ஜெனீவா: கருப்புப் பணத்தை போட்டு வைத்திருப்பது யார் என்ற விவரத்தை இதுவரை வெளியிட மறுத்து வந்த சுவிட்சர்லாந்து நாட்டு வங்கிகள் தற்போது அந்த ரகசியத்தை வெளியிடத் தயாராகி விட்டன. இது இந்தியாவுக்கு பெரும் சாதகமாக அமையும் என்று கருதப்படுகிறது. காரணம், இந்தியாவைச் சேர்ந்த பெரும் பெரும் பணக்கார திமிங்கலங்கள்தான் ஸ்விஸ் வங்கிகளில் பெருமளவில் கருப்புப் பணத்தைப் பதுக்கி வைத்துள்ளனர் என்பதால் ஸ்விஸ் வங்கிகளின் இந்த முடிவு இந்தியாவில் உள்ள கருப்புப் பண முதலைகளுக்குப் பெரும் பீதியை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஸ்விஸ் தேசிய வங்கி வெளியிட்ட சமீபத்திய கணக்குப்படி, இந்தியர்கள் அங்குள்ள வங்கிகளில் குவித்துள்ள கருப்புப் பணம் மட்டும் ரூ. 9000 கோடியாகும். இது 2012ம் ஆண்டு கணக…
-
- 0 replies
- 543 views
-
-
ஜப்பானின் கிழக்குக் கரையோரப் பகுதியை சக்திவாய்ந்த விஃபா சூறாவளி தாக்கியதில் குறைந்தது 17 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இன்னும் 50 பேரைக் காணவில்லை. ஜப்பானின் இஸு ஒஷிமா தீவு கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது டோக்யோவுக்கு தெற்கே உள்ள இஸு ஒஷிமா தீவு கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. மண்சரிவுகளும் வெள்ளப் பெருக்கும் அங்கு ஏற்பட்டுள்ளன. முன்னர் சுனாமியால் பாதிக்கப்பட்டு சேதமடைந்த ஃபுக்குஷிமா அணுஉலையை பாதுகாக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருந்த நிலையிலும், இந்த சூறாவளியால் அதற்கு பாதிப்பு ஏற்படவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.பல வீடுகளின்மேல் மண்மேடுகள் சரிந்துவிழுந்து மூடியுள்ளன. டோக்யோவில் விமானங்கள் ரத்துசெய்யப்பட்டுள்ளன. ரயில் சேவைகளும் தடைப்பட்டுள்ளன. கடந்த 10 ஆண்டுகளில் டோக…
-
- 0 replies
- 292 views
-
-
”சீரழிந்த அரசியல் சூழலில் ராகுல் காந்தி எந்த வகையிலும் வேறுபட்டவராகவோ, நம்பிக்கை அளிப்பவராகவோ இல்லை” தோழர் கி.வெங்கட்ராமன் ‘ஆனந்த விகடன்’ வார இதழில் பேட்டி! ”சீரழிந்த அரசியல் சூழலில் ராகுல் காந்தி எந்த வகையிலும் வேறுபட்டவராகவோ, நம்பிக்கை அளிப்பவராகவோ இல்லை” என தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சிப் பொதுச் செயலாளர் தோழர் கி.வெங்கட்ராமன், ‘ஆனந்த விகடன்’ வார இதழில் வெளியான பேட்டியில் தெரிவித்துள்ளார்.. அதன் முழு விவரம்: ராகுல் காந்தியை புதிய நம்பிக்கை நட்சத்திரமாகக் கருதமுடியுமா?, 10 ஆண்டுகால காங்கிரஸ் கூட்டணி அரசின் மீதான மக்களின் அதிருப்திகளை அவரால் எதிர்கொள்ள முடியுமா? பதில் சொல்கிறார், தமிழ்த் தேச பொதுவுடைமைக் கட்சியின் பொதுச் செயலாளர் கி.வெங்கட்ராமன். ”ராகுல்… நச்ச…
-
- 0 replies
- 444 views
-
-
தமிழகத்தில் கடந்த சனிக்கிழமை தூத்துக்குடி அருகே சிறைப் பிடிக்கப்பட்ட கப்பல் ஊழியர்கள் 35 பேர் மீது நான்கு வழக்குக்கள் பதிவு செய்யப்பட்டிருப்பதாகத் தகவல்கள் கூறுகின்றன . அக்கப்பலில் மாலுமிகள் பத்து பேரும் கடற்கொள்ளையரை எதிர்கொள்ளும் வீரர்கள் 25 பேரும் இருப்பதாகவும் கூறப்படுகிறது. தொடர்புடைய விடயங்கள் துஷ்பிரயோகம் பல்வேறு ஆயுதங்களுடன் இந்திய கடல் பகுதிக்குள் நுழைந்த சீ மேன் கார்ட் எனும் அக்கப்பல் மேற்காப்பிரிக்க நாடான சியாரா லியோனில் பதிவு செய்யப்பட்டிருக்கிறது, அமெரிக்காவில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்திற்குச் சொந்தமானதெனத் தெரியவந்திருக்கிறது. அமெரிக்காவைச் சேர்ந்த தனியார் நிறுவனத்துக்கு இந்தக் கப்பல் சொந்தமானது என்று கூறப்படுகிறது சரக்குக் கப்பல்களுக்…
-
- 1 reply
- 462 views
-
-
இந்தியாவின் மத்தியப் பிரதேச மாநிலத்தில் ஹிந்து மத விழாவொன்றில் ஏற்பட்ட நெரிசலில் கொல்லப்பட்டோர் எண்ணிக்கை 115 ஆக உயர்ந்திருக்கிறது என்று அதிகாரிகள் கூறுகின்றனர். ரத்தன்கார் நெரிசல் : இறந்தோர் எண்ணிக்கை உயர்வு இம்மாநிலத்தில் உள்ள ஒரு கோவிலுக்கு செல்லும் பாதையில் இருந்த குறுகிய பாலம் ஒன்றை ஆயிரக்கணக்கான பக்தர்கள் கடக்க முயன்றபோது பலர் நெரிசலில் சிக்கி இறந்தனர். வேறு சிலர் பாலத்துக்குக் கீழே இருக்கும் நதியில் குதித்து நெரிசலில் இருந்து தப்ப முயல்கையில், நதியில் மூழ்கி இறந்தனர். நதியில் மேலும் உடல்கள் இருக்கின்றனவா என்று மீட்புப் பணியாளர்கள் தேடிக்கொண்டிருக்கின்றனர். இந்தப் பாலம் இடியப்போகிறது என்ற வதந்திகள் பரவியதால் இந்த நெரிசல் ஏற்பட்டது என்று போலிசார் கூறினர்.…
-
- 0 replies
- 487 views
-
-
'பாய்லின்' புயல் இந்தியாவின் கிழக்கு பிரதேசத்தைத் தாக்கியதை அடுத்து ஏற்பட்ட அழிவில், இன்னும் லட்சக்கணக்கான மக்கள் தற்காலிக தங்குமிடங்களில் இருக்கின்றனர். அவர்களில் பலர் வீடிழந்தும், வாழ்வாதாரங்களை இழந்துமிருக்கின்றனர். சனிக்கிழமை ஏற்பட்ட கடும் புயல் காற்று மற்றும் கடல் கொந்தளிப்பில் 18 பேர் இறந்தனர். பெரிய நிவாரண நடவடிக்கை ஒன்று மேற்கொள்ளப்பட்டுவருகிறது. வங்கக் கடலில் வர்த்தகக் கப்பல் ஒன்று மூழ்கியதை அடுத்து அந்தக் கப்பலில் பயணித்த 28 மாலுமிகள் உயிர்காக்கும் படகுகளில் இறங்கி தப்பினர். அவர்களை இந்திய கடலோரக் காவல் படையினர் மீட்டனர். புயல் தாக்கிய ஒதிஷா மாநிலத்தில் மின்சார மற்றும் தொலை தொடர்புக் கம்பிகளை அதிகாரிகள் மீண்டும் நிலை நாட்டி வருவதாக அங்கிருக்கும் பிபிசி செ…
-
- 0 replies
- 461 views
-
-
வடக்கு ஆப்பிரிக்காவில் இருந்து அளவுக்கு அதிகமான குடியேறிகளை ஏற்றிவந்த நிலையில் கப்பல் மூழ்கி நூற்றுக்கணக்கானோர் பலியான சம்பவத்தை அடுத்து, மத்திய தரைக்கடலின் தென்பகுதியில் இத்தாலி தனது கடல் ரோந்தை மும்மடங்காக்கியுள்ளது. அப்பகுதியில் விமான ரோந்தும் அதிகரிக்கப்படும். சிசிலி, மால்டா மற்றும் லிபியா ஆகியவற்றின் கடற்கரைகளுக்கு இடைப்பட்ட பகுதில், இந்த மாதம் கப்பல் மூழ்கி பல நூற்றுக்கணக்கானோர் இறந்த இடத்திலேயே இந்த ரோந்துகள் நடைபெறும். அதேவேளை லம்பெதுசா தீவுகளுக்கு 137 குடியேறிகள் இரவு பாதுகாப்பாக படகில் வந்து சேர்ந்துள்ளனர். அடுத்த மாதம் இது குறித்து நடக்கவிருக்கும் மாநாடு ஒன்றில், ஏனைய ஐரோப்பிய நாடுகளையும் உதவுமாறு கேட்கப் போவதாக இத்தாலியும் மால்டாவும் கேட்கவுள்ளன. அகதிகள…
-
- 0 replies
- 417 views
-
-
கொல்கத்தா: பாய்லின் புயலில் சிக்கி பனாமா நாட்டு சரக்குக் கப்பலொன்று மூழ்கி இருக்கலாம் என அஞ்சப்படுகின்ற வேளையில், இன்று காலை அக்கப்பலில் பயணம் செய்த ஊழியர்கள் 18 பேர் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர். நேற்று முன்தினம் பாய்லின் புயல் ஆந்திரா மற்றும் ஒடிசா அருகே கரையைக் கடந்தது. கிட்டத்தட்ட 23 பேரை பலிவாங்கிய இந்தப் புயலினால் ஏற்பட்ட சேதாரங்கள் கணக்கிடப்பட்டு வருகின்றது. இந்நிலையில், இந்தப் புயலில் சிக்கிய பனாமா நாட்டு சரக்குக் கப்பலொன்று கடலில் மூழ்கியிருக்கலாம் என கருதப்படுகிறது. கடந்த 11ம் தேதி மேற்கு வங்கத் துறைமுகமான சாகரிலிருந்து சீனாவிற்கு புறப்பட்ட எம்.வி பிங்கோ என்று பெயரிடப்பட்டிருந்த அந்தக் கப்பலில் 8,000 டன் இரும்புத்தாதுவுடன், 19 சீன நாட்டவரும், ஒரு இந்தோனேசிய நாட்…
-
- 0 replies
- 442 views
-
-
ஜெருசலேம்: காசாவிலிருந்து இஸ்ரேல் வரைத் தோண்டப்பட்டுள்ள சுமார் 2.5கி.மீ நீளமுள்ள சுரங்கப்பாதை ஒன்றினை இஸ்ரேல் ராணுவத்தினர் கண்டு பிடித்துள்ளனர். கடந்த 2006 ஆம் ஆண்டில்,இதேபோல் தோண்டப்பட்ட சுரங்கப்பாதை வழியே இஸ்ரேலிய ராணுவ வீரரான கிலா ஸ்காலிட் என்பவரைக் ஹமாஸ் ராணுவத்தினர் கடத்திச் சென்று ஐந்து வருடம் காவலில் வைத்திருந்தனர். இந்நிலையில் ஹமாஸ் பிரிவினர் ஆட்சி செய்யும் பகுதியான காசாவிலிருந்து இஸ்ரேல் வரை தோண்டப்பட்டுள்ள சுமார் 2.5 கிமீ நீளமுள்ள சுரங்கப்பாதை ஒன்றின் நுழைவு வாயிலை இஸ்ரேல்-காசா எல்லையை ஒட்டியுள்ள கிபுட்சு என்ற இடத்தில் இஸ்ரேலிய ராணுவத்தினர் கண்டுபிடித்துள்ளனர். தற்போது கண்டுபிடிக்கப் பட்டுள்ள இந்தச் சுரங்கப்பாதையானது இஸ்ரேல் ராணுவத்தினர் கண்டுபிடிக்கும் வரை…
-
- 0 replies
- 436 views
-
-
'அல்லா' என்ற வார்த்தையை முஸ்லீம்கள் மட்டுமே பயன்படுத்த முடியும் என்று மலேசிய நீதிமன்றம் ஒன்று தீர்ப்பளித்திருக்கிறது. ' அல்லா' சர்ச்சை கீழ் நீதிமன்றம் ஒன்று இந்த வார்த்தையை கிறித்தவர்கள் பயன்படுத்தலாம் என்ற தீர்ப்பை இது தள்ளுபடி செய்கிறது. இந்த வார்த்தை கிறித்தவ மதத்தில் இல்லை என்று கூறிய நீதிமன்றம், முஸ்லீம்கள் அல்லாதோர் இந்த வார்த்தையை பயன்படுத்த அனுமதிப்பது சமூகத்தில் குழப்பத்தை விளைவிக்கும் என்று கூறியது. மலேசிய கிறித்தவர்கள் இந்த 'அல்லா' என்ற அரபு வார்த்தை இஸ்லாத்துக்கு முந்தையது என்றும் இதை தாங்கள் பல நூற்றாண்டுகளாகப் பயன்படுத்தி வந்திருக்கின்றனர் என்றும் , இந்தத் தீர்ப்பை எதிர்த்துத் தாங்கள் மேல் முறையீடு செய்யப்போவதாகவும் கூறியிருக்கின்றனர். பழமைவாத முஸ்ல…
-
- 0 replies
- 507 views
-
-
தூத்துக்குடி அருகே சுற்றிவளைக்கப்பட்டது அமெரிக்காவைச் சேர்ந்த தனியார் நிறுவன கப்பல் என்றும் கடல் கொள்ளையர்களிடம் இருந்து கப்பலை பாதுகாப்பதற்காகவே ஆயுதங்களை வைத்திருந்ததாகவும் தெரியவந்துள்ளது. தூத்துக்குடி கடற்பரப்பில் கடலோர காவல்படையினர் நேற்று ரோந்து சென்றனர். அப்போது சீனா மொழியிலான ‘சீ மேன் கார்டு ஓஹியோ' என்ற பெயர் பொறித்த மர்ம கப்பல் ஒன்று நடுக்கடலில் நின்று கொண்டிருந்தது. இதைத் தொடர்ந்து அந்த கப்பல் சுற்றி வளைக்கப்பட்டு தூத்துக்குடி துறைமுகம் அருகே நிறுத்தப்பட்டது. சீனா கப்பல் என்பதால் பல்வேறு துறை அதிகாரிகளும் தூத்துக்குடியில் முகாமிட்டு தீவிர விசாரணையையை நடத்தினர். கடைசியில் அமெரிக்காவின் தனியார் கடல்சார் பாதுகாப்பு நிறுவன கப்பல் அது என்றும் கடல்கொள்ளையர்களிடம் இருந…
-
- 2 replies
- 593 views
-
-
லக்னோ: உத்தரப்பிரதேசத்தில் சிதிலமடைந்த கோட்டை ஒன்றில் ஆயிரம் டன் தங்கப் புதையல் இருப்பதாக வெளியான தகவலால் தொல்லியல்துறை அங்கு ஆய்வு நடத்த முடிவு செய்துள்ளது. உத்தரப்பிரதேசத்தின் உன்னாவோ மாவட்டத்தில் கேடா என்ற கிராமத்தில் ராஜா ராவ் ராம் பாக்சிங் என்ற மன்னர் வசித்த கோட்டை இருக்கிறது. அவர் இந்திய விடுதலைப் போரில் ஆங்கிலேயர்களை எதிர்த்து போரிட்டு உயிரிழந்தவர். தற்போது அந்த மன்னரின் கோட்டை சிதிலமடைந்துள்ளது. ஆனாலும் மன்னரை மக்கள் இன்னமும் மறக்காமல் இருக்கின்றனர். இந்நிலையில் உள்ளூர் சாது ஒருவர் தமது கனவில் மன்னர் தோன்றி கோட்டையில் ஆயிரம் டன் தங்கப் புதையல் இருப்பதாக கூறினார் என்று தெரிவித்தார். ஆனால் இதை யாரும் நம்பத் தயாரில்லை. இருப்பினும் மத்திய இணை அமைச்சர் சரண் தாஸ் மகத்தி…
-
- 0 replies
- 640 views
-