உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26693 topics in this forum
-
டெல்லி: கிரிமினல் எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்களின் பதவி பறிப்பை தடுக்கும் அவசர சட்டத்தை எதிர்க்குமாறு ராகுலுக்கு ஆலோசனை சொன்னதே சோனியா தான். இதன் மூலம் பிரதமரை ராகுல் அவமதித்துவிட்டார் என பா.ஜ. மூத்த தலைவர் அத்வானி குற்றம் சாட்டியுள்ளார். குற்ற வழக்குகளில் இரண்டாண்டு தண்டனை பெற்ற எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்களின் பதவியை பறிக்கலாம் என கடந்த ஜூலை மாதம் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இதனை முடக்கும் வகையில் அவசர சட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. இதனை காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் எதிர்த்து பேட்டியளித்தார். அவசர சட்டத்தை நான்சென்ஸ் என்றும் அதை கிழித்து எறியவேண்டும் என்று கடும் சொற்களை பயன்படுத்தினார். ராகுல்காந்தியின் இந்த கருத்துக்கு பல்வேறு தரப்பினரும் எத…
-
- 0 replies
- 355 views
-
-
சென்னை: தமிழகத்தில் லோக்சபா தேர்தலுக்கான கூட்டணி இறுதியாகும் வரை தமிழகத்தில் நடைபெறும் எந்த பாஜக கூட்டத்திலும், மாநாட்டிலும் தலை காட்ட வேண்டாம் என்று சுப்பிரமணியம் சாமிக்கு பாஜக மேலிடம் தடை விதித்துள்ளதாம். இந்த உத்தரவின் காரணமாகவே திருச்சியில் நடந்த நரேந்திர மோடி கூட்டத்துக்குக் கூட சாமியைக் கூப்பிடவில்லையாம். இதனால் கோபித்துக் கொண்டு வெளிநாட்டுக்குப் போய் விட்டாராம் சுப்பிரமணியம் சாமி. பாஜகவில் சாமி ஜனதாக் கட்சிக்காரரான சாமி, சமீபத்தில்தான் பாஜக கூட்டணியில் இணைந்தார். இணைந்தது முதலே அவருக்கு சோதனை அதிகமாகவே இருக்கிறதாம். வாஸ்து ஓ.கே.. ஆனால் வாய் சரியில்லையே...! சுப்பிரமணியம் சாமி கட்சிக்கு வந்ததெல்லாம் சரிதான்... ஆனால் அவரது வாய் சரியில்லையே என்று தமிழக பா…
-
- 0 replies
- 817 views
-
-
இத்தாலியத் தீவான லேம்பெதுசாவிற்கு அருகே தஞ்சம் கோரி வந்தவர்கள் பயணித்த படகொன்று கவிழ்ந்ததில் குறைந்தது 94 பேர் இறந்திருக்கிறார்கள் என்று அதிகாரிகள் கூறினர். வட ஆப்ரிக்காவிலிருந்து வந்த இந்த படகு இந்த தீவின் கடற்கரையிலிருந்து சுமார் ஒரு கிலோ மீட்டர் தொலைவில் இருந்த போது தீப்பிடித்து பின்னர் கவிழ்ந்தது. கடலில் தத்தளித்துக் கொண்டிருந்த 163 பேர் காப்பாற்றப்பட்டதாகவும், இன்னும் பலர் கடலில் இருக்கிறார்கள் என்றும் இத்தாலியக் கடலோரக் காவற்படை கூறியது. இந்தப் படகில் சுமார் 500 பேர் வந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது. இந்தப் படகில் கர்ப்பிணித் தாய்மார்களும், குழந்தைகளும் இருந்தனர் என்று கூறப்படுகிறது. இது ஒரு பெரும் துயர சம்பவம் என்று இத்தாலியப் பிரதமர் வர்ணித்தார்.…
-
- 3 replies
- 439 views
-
-
பிரிட்டனின் வல்லாதிக்கத்தை நினைவுறுத்தும் ஒரு அங்கீகரிக்கப்பட்ட அமைப்பே காமன்வெல்த் எனப்படும் பொதுநலவாய நாடுகளின் கூட்டமைப்பு ஆகும். இதில் பிரிட்டனால் அடிமைப்படுத்தப்பட்ட நாடுகளை பிரிட்டன் தனது தலைமையின் கீழ் ஒரு கூட்டமைப்பாக்கி வைத்துள்ளது. அதில் தனது முடிக்குரியவர்களை கெளரவிக்கும் நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில் 54 நாடுகளைக் கொண்ட இந்த வெட்டி அமைப்பில் இருந்து கம்பியா என்ற மேற்கு ஆபிரிக்க தேசம் தானாக விலகிக் கொள்ள முடிவு செய்துவிட்டது. அது இந்த அமைப்பில் கடந்த 48 ஆண்டுகளாக இருந்து வருகிறது. இந்த வெட்டி அமைப்பின் அரசுத் தலைவர்கள் மாநாட்டை நடத்த இனப்படுகொலை நாடான சிறீலங்காவை பிரிட்டன் அவுஸ்திரேலியா போன்ற நாடுகள் தெரிவு செய்து வைத்துள்ளன. இந்த ம…
-
- 8 replies
- 1.3k views
-
-
செப்டம்பர் 20, 2013 அன்று, இங்கிலாந்தைச் சேர்ந்த நீதிமன்றம் ஒன்று போலியான வெடிகுண்டு கண்டறியும் கருவியை பல்வேறு நாடுகளின் பாதுகாப்புத் துறைகளுக்கு விறபனை செய்த குளோபல் டெக்னிக்கல் எனும் தனியார் நிறுவனத்தின் அதிபர் கேரி போல்டனுக்கு 7 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை விதித்துள்ளது. இந்த போலியான கருவிகளை பாதுகாப்புத் துறையின் எச்சரிக்கையையும் மீறி, இங்கிலாந்து அரசின் மூன்று முக்கிய துறைகளே ஊக்குவித்துள்ளன என்பது தான் இந்த மோசடியின் உச்சம். கேரி போல்டன் – டுபாக்கூர் குண்டு கண்டறியும் கருவி உலகின் பல்வேறு நாடுகளும் பயத்தின் காரணமாக பல்வேறு போர்க் கருவிகள், ஆயுதங்கள், பாதுகாப்பு கருவிகளை வாங்கிக் குவிக்கின்றன. முதலாளித்துவ நாடுகளில் உள்ள முதலாளிகள் இந்த சந்தையை அரசுகளின் உத…
-
- 0 replies
- 813 views
-
-
அமெரிக்காவில் ஏற்பட்டுள்ள அரசியல் சண்டையை அடுத்து, அமெரிக்க அரசுத் துறை அலுவலகங்கள் பல மூடப்பட்டுள்ள நிலையில், அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா இந்தப் பிரச்சினையை சமாளிப்பதற்காக, அடுத்த வராம் மேற்கொள்ளவிருந்த தனது மலேசிய மற்றும் பிலிப்பைன்ஸ் விஜயத்தை ரத்து செய்திருக்கிறார். இந்த விஜயத்தின் தொடர்ச்சியாக இந்தோனேசியா மற்றும் புருனெய் ஆகிய நாடுகளுக்கும் செல்லவிருந்த ஒபாமா,அந்தப் பயணங்களையும் மேற்கொள்ளவேண்டுமா என்பது குறித்து இன்னும் பரிசீலித்துக் கொண்டிருக்கிறார் என்று அவருக்காகப் பேசவல்ல ஒரு அதிகாரி கூறினார். 17 ஆண்டு கால கட்டத்தில் அமெரிக்க அரசு அலுவலகங்கள் மூடப்படும் இந்த முதல் சம்பவம், அமெரிக்க நாடாளுமன்றத்தின் இரு அவைகளும், வரவு செலவுத் திட்டம் குறித்து ஒரு உடன்பாட்டு…
-
- 0 replies
- 372 views
-
-
மதுரை மாவட்டம் மேலூர் அருகேயுள்ள எட்டிமங்கலத்தை சேர்ந்த வக்கீல் பி.ஸ்டாலின் ஐகோர்ட் கிளையில் பொதுநல மனுத்தாக்கல் செய்திருந்தார். அதில், இலங்கை அரசுக்கு 2 போர்க்கப்பல்களை வழங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இலங்கைக்கு போர்க்கப்பல்கள் வழங்குவதை கைவிடக்கோரி மத்திய, மாநில அரசுகளுக்கு மனு அனுப்பினேன். மனு மீது நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே, இலங்கைக்கு போர்க்கப்பல்கள் வழங்க தடை விதிக்க வேண்டும் எனத் தெரிவித்திருந்தார்.இந்த மனு நீதிபதிகள் ஜெயச்சந்திரன், வேணுகோபால் ஆகியோர் முன் நேற்று விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் வக்கீல் பீட்டர் ரமேஷ்குமார் ஆஜராகி வாதிடுகையில், தமிழக மீனவர்கள் தொடர்ந்து தாக்கப்பட்டு சிறைபிடிக்கப்படுகின்றனர். இலங்கையில் தமிழர்கள் கொல்லப்பட…
-
- 0 replies
- 298 views
-
-
அமெரிக்காவில் அரசு நிறுவனங்களை மூட தற்காலிகமாக மூட அதிரடி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஊதியம் இல்லாமல் 6 மாதங்களுக்கு விடுமுறையில் செல்லுமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவில் கடந்த 17 வருடங்களில் அரசு நிறுவனங்களை மூடுவது இதுவே முதல் முறை. அரசின் நடவடிக்கையில் மருத்துவம் உள்ளிட்ட அத்தியாவசியப் பணிகளுக்கு விலக்கு அளிக்கப்ப ட்டுள்ளது. பட்ஜெட்டில் சுகாதார நடவடிக்கைகளூக்கு பிரதிநிதிகள் சபை ஒப்புதல் தரவில்லை. நிதி நிலை யை கருத்தில் கொண்டு வெள்ளை மாளிகை இந்த நடவடிக்கை எடுத்துள்ளது. வெள்ளை மாளிகையின் இந்த நடவடிக்கையால் 7.83 லட்சம் பேர் வேலை இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. http://www.nakkheeran.in/Users/frmNews.aspx?N=108498 அமெரிக்க அரசு முடங்கி…
-
- 6 replies
- 770 views
-
-
மகாத்மா காந்தி பிறந்த தினம் (அக்.2-1869) மகாத்மா காந்தியின் இயற்பெயர் மோகன்தாசு கரம்சந்த் காந்தி. இவர் 1869-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 2-ந்தேதி பிறந்தார். இந்திய விடுதலைப் போராட்டத்தை வெற்றிகரமாக தலைமையேற்று நடத்தியதன் காரணமாக இவர் விடுதலை பெற்ற இந்தியாவின் தந்தை என்று அழைக்கப்படுகிறார். சத்தியாக்கிரகம் என்றழைக்கப்பட்ட இவரது அறவழிப் போராட்டம் இந்திய நாட்டு விடுதலைக்கு வழி வகுத்ததுடன் மற்ற சில நாட்டு விடுதலை இயக்கங்களுக்கும் ஒரு வழிகாட்டியாக அமைந்தது. மோகன்தாஸ் காந்தி 1869-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 2-ந்தேதி இந்திய நாட்டின் குஜராத் மாநிலத்திலுள்ள போர்பந்தர் எனும் ஊரில் பிறந்தார். இவரது தாய் மொழி குஜராத்தி. தந்தையார் பெயர் கரம்சந்த் காந்திஇ தாயார் புத்லிபாய். காந்தி தனது 13-ம் …
-
- 0 replies
- 1.5k views
-
-
நவம்பரில், தனிக் கட்சி துவக்கும் திட்டத்தோடு, ஆதரவாளர்களுடன், இரகசிய ஆலோசனையை தீவிரப்படுத்தி உள்ளார், மத்திய அமைச்சர் வாசன். மேலிடத்தில் ராகுலுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, சமீப காலமாக, வாசன், மத்திய அரசின் நிலைப்பாட்டை கடுமையாக விமர்சித்து வருகிறார். தமிழக மீனவர்கள் மீது, இலங்கை ராணுவம் நடத்தும் தாக்குதல் குறித்து, கடும் கண்டனம் தெரிவித்த வாசன், "இனியும் தாக்குதல் தொடருமானால், இரு நாடுகளுக்கும் இடையிலான உறவு பாதிக்கப்படும்' என, காட்டமாக கூறினார். இலங்கைக்கு போர்க்கப்பல்கள் வழங்கக் கூடாது; இலங்கையில் நடக்கும் காமன்வெல்த் மாநாட்டில், பிரதமர் மன்மோகன் சிங் கலந்து கொள்ளக் கூடாது' என, காங்கிரசில் இருந்து கொண்டே, மத்திய அரசின் நிலைப்பாட்டுக்கு எதிராக பேச…
-
- 3 replies
- 1.3k views
-
-
ஒரு சின்ன நாடு தைரியமாக எடுக்கும் நடவடிக்கைகளை கூட இந்தியா எடுக்க தவறுவது வெட்ககேடு ஒரு சின்ன நாடு தைரியமாக எடுக்கும் நடவடிக்கைகளை கூட இந்தியா எடுக்க தவறுவது வெட்ககேடு இந்தியர்கள் தங்களுக்குள்ளே பெருமை பேசி கொள்வதும் தாம்தான் மிக உலகில் மிக புத்திசாலிகள் என்றும் மிக தைரியசாலிகள் என்றும், இந்தியா வல்லரசு நாடாகும் தூரம் அதிகம் இல்லை என்று பெருமை பேசிக் கொள்வதில் மட்டும் சளைத்தவர்கள் இல்லை அடே தைரியசாலிகளே புத்திசாலிகளே தமிழ கடற்கறையோராம் தமிழக மீனவர்கள் சுடப்பட்டு இறப்பதும் இலங்கை அரசாங்கத்தால் கைது செய்யப்பபடுவதும் அன்றாட நிகழ்ழ்சிகளில் ஒன்றாகிவிட்டது இதை தட்டிக் கேட்க முதுகெலும்பு இல்லாதவர்கள் தானே நீங்கள். கேட்டால் நாங்கள் ஜனநாயகப்படி நடவடிக்கைகளை…
-
- 1 reply
- 634 views
-
-
இலங்கை இப்போது வன்முறை இல்லாத தேசமாக உருவாகியுள்ளது என மத்திய தொழில் மற்றும் வர்த்தக துறை இணை அமைச்சர் சுதர்சன நாச்சியப்பன் கூறினார். சென்னையில் இந்துஸ்தான் வர்த்தக சபையின் 67ஆவது ஆண்டு விழாவில் பங்கேற்று அவர் பேசியதாவது: இந்தியா தனது பக்கத்து நாடுகள் மீது பெரும் அக்கறை கொண்டுள்ளது. இந்தியாவை விட சிறிய நாடுகளிடம் நட்புறவையும், வர்த்தகத்தையும் மேற்கொள்ள தொடர்ந்து ஆர்வம் காட்டி வருகிறது. இப்போது இலங்கை வன்முறை இல்லாத தேசமாக உருவாகியுள்ளது. மேலும் அங்கு வடக்கு மாகாண தேர்தல் நடைபெற்று ஜனநாயகரீதியிலான ஆட்சி அமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் இலங்கை அரசு தனது ஜனநாயக நிலைப்பாட்டை உலகுக்கு தெரிவித்துள்ளது. மத்திய அரசின் சேது சமுத்திரத் திட்டம், வர்த்தக நோக்கில் செயல்பட…
-
- 2 replies
- 453 views
-
-
சிவாஜி கணேசன் பிறந்த தினம் (அக்.1 1927) சின்னையா மன்றாயர்- ராஜாமணி அம்மாள் ஆகியோருக்கு மகனாக விழுப்புரத்தில் 1927-ம் ஆண்டு அக்டோபர் 1-ந்தேதி பிறந்தார். சின்னையாப் பிள்ளை கணேசன் என்பது இவரது இயற்பெயர். 'சிவாஜி' கணேசன்இ திரையுலகுக்கு வரும் முன்னர் மேடை நாடகங்களில் நடித்து வந்தார். சிவாஜி கண்ட இந்து ராஜ்யம் என்ற நாடகத்தில் பேரரசர் சிவாஜியாக நடித்த கணேசனின் நடிப்புத்திறனை மெச்சிய தந்தை பெரியார்இ அவரை 'சிவாஜி' கணேசன் என்று அழைத்தார். அன்றிலிருந்து அந்த பெயரே நிலைத்தது. 'சிவாஜி' கணேசன் 300-க்கும் மேற்பட்ட தமிழ் திரைப்படங்களில் நடித்துள்ளார். ஒன்பது தெலுங்குத் திரைப்படங்கள்இ இரண்டு ஹிந்தித் திரைப்படங்கள் மற்றும் ஒரு மலையாளத் திரைப்படத்திலும் நடித்துள்ளார். நல்ல குரல்வளம்இ …
-
- 0 replies
- 666 views
-
-
இந்தியாவின் ஒரே விமானந்தாங்கி போர்க் கப்பலான ஐஎன்எஸ் விராத்தில் தீ விபத்து ஏற்பட்டது தெரியவந்துள்ளது. மும்பை கடல் பகுதியில் ஐஎன்எஸ் விராத் போர்க் கப்பல் கடந்த வாரம் நிறுத்தப்பட்டிருந்தது. அப்போது அதில் உள்ள அதிகாரிகளின் உணவு விடுதியின் அருகில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. அங்கு இருந்த குளிர்சாதன வசதி இயந்திரத்தில் இந்த தீ விபத்து ஏற்பட்டது கண்டறியப்பட்டுள்ளது. எனினும், இச்சம்பவத்தில் யாருக்கும் எந்த ஆபத்தும் ஏற்படவில்லை என்றும், உடனடியாக தீ அணைக்கப் பட்டது என்றும் கடற்படை தலைமை அலுவகம் தெரிவித்துள்ளது. அண்மையில் மும்பைக் கடற்படைத் தளத்தில் இந்திய நீர்மூழ்கி ஒன்று தீவிபத்தினால் வெடித்துச் சிதறி அதில் இருந்த 18 மாலுமிகளும் மரணமானது குறிப்பிடத்தக்கது. …
-
- 2 replies
- 323 views
-
-
லண்டன்: ரஷ்ய விமான நிலையத்தில் கேட்பாரற்று கடந்த 6 ஆண்டுகளாகக் கிடக்கும் சுமார் 1.69 லட்சம் கோடி ரூபாய் ஈராக்கின் முன்னாள் அதிபர் சதாம் உசேனுக்கு சொந்தமானதா? என்ற சந்தேகத்தை இங்கிலாந்து பத்திரிகை ஒன்று கிளப்பியுள்ளது. இங்கிலாந்தின் பிரபல பத்திரிகையான 'மிரர்' சமீபத்தில் வெளியிட்டுள்ள செய்தி ஒன்றில், கடந்த 2007ம் ஆண்டு, ஜெர்மனியில் உள்ள பிராங்பர்ட் விமான நிலையத்தில் இருந்து பார்சின் மோட்லாக் என்ற மாபியா அசாமி ஒருவன் ரஷ்யாவில் உள்ள ஷெரமெட்யெவோ விமான நிலையத்திற்கு அனுப்பியது தான் இந்தப்பணம். பணத்தை அனுப்பிய ஆசாமியும் பணம் சரியான இடத்தில் சென்று சேர்ந்து விட்டதா என விசாரிக்கவில்லை, பணத்தை உரிமை கொண்டாடி பெற்றுக் கொள்ளவும் யாரும் வரவில்லை என விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்த…
-
- 0 replies
- 485 views
-
-
போபால்: மத்தியப் பிரதேச மாநில சிறையில் இருந்து சிமி இயக்கத் தீவிரவாதிகள் 7 பேர் தப்பிவிட்டனர். மத்தியப் பிரதேச மாநிலத்தில் உள்ள கந்துவா சிறைச்சாலையில் சிமி இயக்கத் தீவிரவாதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். இதில் 7 தீவிரவாதிகள் இன்று அதிகாலையில் சிறைக் கழிவறையின் சுவற்றை உடைத்துக் கொண்டு தப்பித்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. சிறையில் இருந்து தப்பித்து செல்ல முயன்ற தீவிரவாதிகளை சிறைக்காவலர்கள் தடுத்துள்ளனர். அப்போது தீவிரவாதிகளுக்கும், சிறைக் காவலர்களுக்கும் இடையே ஏற்பட்ட மோதலில், 2 சிறைக் காவலர்கள் பலத்த காயம் அடைந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில், தப்பி ஓடியவர்களில் ஒரு தீவிரவாதியை கைது செய்துள்ள மத்திய பிரதேச போலீசார், மற்ற 6 தீவிரவாதிகளையும் தீவிரமாக தேடி வருகின்றனர். http://…
-
- 0 replies
- 267 views
-
-
டெல்லி: டெல்லி முதல்வர் ஷீலா தீட்சித்தை விமர்சிக்கும் நரேந்திர மோடி அவரை எதிர்த்து சட்டசபை தேர்தலில் போட்டியிட தயாரா என்று அம்மாநில அமைச்சர் ராஜ்குமார் செளகான் கேள்வி எழுப்பியுள்ளார். டெல்லி முதல்வர் ஷீலா தீட்சித் அரசின் செயல்பாடுகளை குஜராத் முதல்வரும் பாஜகவின் பிரதமர் வேட்பாளருமான நரேந்திர மோடி அண்மையில் மிகக் கடுமையாக விமர்சித்திருந்தார். இதற்கு ஷீலா தீட்சித்தும் பதிலடி கொடுத்திருந்தார். இந்நிலையில் ஷீலா தீட்சித் அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள ராஜ்குமார் செளகான், நரேந்திர மோடி மக்களை பிரிக்கக் கூடிய சக்தி. அவருக்கு துணிச்சல் இருந்தால் ஷீலா தீட்சித்தை எதிர்த்து டெல்லி சட்டசபை தேர்தலில் போட்டியிடட்டும். மோடியின் அரசியல் இந்த சமூகத்தை பிளவுபடுத்தக் கூடியது. ஆகையால் மோடியின் ம…
-
- 0 replies
- 331 views
-
-
டெல்லி: பி.எஸ்.என்.எல். தொலைபேசி இணைப்புகளை சட்டவிரோதமாக முறைகேடாக பயன்படுத்தியது தொடர்பாக சன் டிவி மற்றும் பி.எஸ்.என்.எல்.க்கு எதிராக சிபிஐ முதல் தகவல் அறிக்கையை (எப்.ஐ.ஆர்) பதிவு செய்துள்ளது. வழக்கு என்ன? 2004-2007-ஆம் ஆண்டு வரை மத்திய தொலைத்தொடர்பு அமைச்சராக தயாநிதி மாறன் இருந்தார். அப்போது அவரது சென்னை போட் கிளப் சாலையில் உள்ள வீட்டில் சட்டவிரோதமாக 323 தொலைபேசி இணைப்புகளை பி.எஸ்.என்.எல். பொது மேலாளர் பெயரில் இணைப்பகம் போல செயல்பட்டு வந்தது. இந்த இணைப்புகளை தயாநிதி மாறனின் சகோதரருக்குச் சொந்தமான சன் டிவி அலுவலகத்துடன் பூமிக்கு அடியில் ஆப்டிக் ஃபைபர் கேபிள்கள் மூலம் சட்டவிரோதமாக இணைத்து சகோதரர் நிறுவனத்தின் வர்த்தகத் தேவைக்கு பயன்படுத்தினார் என்பது புகார். இது தொடர்பாக…
-
- 0 replies
- 366 views
-
-
பெங்களூர்: கர்நாடகாவின் கோலார் தங்க சுரங்கத்தை ஏற்று நடத்த வாய்ப்பு கிடைத்தால் தமது நிறுவனம் அதை சிறப்பாக செயல்படுத்தும் என்று வேதாந்தா குழுமத்தின் தலைவர் அனில் அகர்வால் தெரிவித்துள்ளார். உலகின் மிக ஆழமான 2வது தங்க சுரங்கம் கோலார் தங்க வயலாகும். இந்த ஆழமான சுரங்கத்தில்தான் 121 ஆண்டுகளாக லட்சக்கணக்கான தமிழர்களின் அயராத உழைப்பால் தங்கம் வெட்டி எடுக்கப்பட்டு வந்தது. ஆனால் 2001ஆம் ஆண்டு தங்கத்தின் இருப்பு குறைவு, பிரித்தெடுக்க ஆகும் செலவு அதிகரிப்பு ஆகிய காரணங்களால் கோலார் தங்க சுரங்கம் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டது. திடீரென தங்க சுரங்கம் மூடப்பட்டதால் பணியாற்றிய பல்லாயிரம் ஊழியர்களும் சார்ந்திருந்த லட்சக்கணக்கான தமிழர்களும் வேலை வாய்ப்புகளை இழந்து பெரும் துயரத்தில் வாழ…
-
- 0 replies
- 3k views
-
-
மாட்டுத் தீவன ஊழலில் பிகார் மாநிலத்தின் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவ் குற்றவாளி என்று சிறப்பு நீதிமன்றம் தீர்பளித்துள்ளது. லாலு பிரசாத் யாதவ் இதே வழக்கில் அரசியல்வாதிகள், அதிகாரிகள் என 44 பேர் மீது குற்றங்காணப்பட்டுள்ளது. இவர்களுக்கான தண்டனை வரும் 3 ஆம் தேதி அறிவிக்கப்படும். தீர்ப்பை அடுத்து லாலு பிரசாத் யாதவ் ராஞ்சி மத்திய சிறையில் சரணடைந்தார். கடந்த 17 ஆண்டுகளாக இந்த வழக்கு நடந்து வருகிறது. கால்நடைகளுக்கான தீவனம் மற்றும் மருந்துகளை வாங்குவதில் ஊழல் நடைபெற்றதாக மத்திய புலனாய்வு நிறுவனமான சிபிஐ வழக்குத் தொடர்ந்திருந்தது. இந்த தீர்ப்பால் நீண்ட சிறை தண்டனையை எதிர்கொள்ளும் சூழலில் லாலு பிரசாத் யாதவ் உள்ளார். சமீபத்தில் வழங்கப்பட்ட உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பி…
-
- 0 replies
- 248 views
-
-
பங்களாதேஷில் இன்னொரு மூத்த எதிர்க்கட்சித் தலைவர், சலாலுதீன் காதர் சௌத்ரி, 1971ல் நாடு பாகிஸ்தானிடமிருந்து விடுதலை பெற நடத்திய போரின் போது, போர்க்குற்றங்கள் இழைத்த குற்றம் புரிந்ததாக சிறப்பு நீதிமன்றம் ஒன்று தீர்ப்பளித்திருக்கிறது. சலாலுதீன் காதர் சௌத்ரி-- மரண தண்டனையை எதிர்நோக்கும் முதல் நாடாளுமன்ற உறுப்பினர் இனப்படுகொலை, கொலை, கடத்தல் ஆகிய குற்றங்களை அவர் செய்ததாகக் கண்டறியப்பட்டு, அவருக்கு மரண தண்டனை வழங்கப்பட்டிருக்கிறது இந்த சிறப்பு நீதிமன்றத்தால் தண்டிக்கப்படும் முதல் நாடாளுமன்ற உறுப்பினரும், பிரதான எதிர்க்கட்சியான பங்களாதேஷ் தேசியவாதக் கட்சியின் மூத்த பிரமுகரும் இவர்தான். தனது கணவர் இந்தத் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்வார் என்று சௌத்ரியின் மனைவி கூறினா…
-
- 0 replies
- 206 views
-
-
வத்திக்கானை சீர்திருத்தம் செய்யும் வழிகளை ஆராய ஒரு சிறப்பு கர்தினால்கள் குழுவுடன் போப் பிரான்சிஸ் தனது முதல் கூட்டத்தை நடத்திக்கொண்டிருக்கிறார். சீர்திருத்த முயற்சிகளில் போப் பிரான்சிஸ் வத்திக்கான் ஜி-8 என்றறியப்படும் இந்த சர்வதேசக் குழு ரோமன் கத்தோலிக்கத் திருச்சபையின் மத்திய அரசௌ மாற்றி வடிவமைப்பது குறித்து ஆராயும். இதில் கத்தோலிக்கத் தலைமையான போப் என்ற பதவியைப் பீடித்துள்ள குஷ்ட நோய் என்று போப் பிரான்சிஸ் சமீபத்தில் வர்ணித்த வத்திக்கான் நீதிமன்றமும் அடங்கும். இதற்கிடையே, வத்திக்கான் வங்கி, தனது முதன் முதலான, விவரமான கணக்கு வழக்குகளைப் பிரசுரித்திருக்கிறது. 2012ம் ஆண்டில் 117 மிலியன் டாலர்கள் என்ற அளவில்,தனக்கு நான்கு மடங்கு வருமான அதிகரிப்பு இருந்ததாக அது க…
-
- 0 replies
- 229 views
-
-
இந்தியப் பெண்கள் வாடகை தாய்களாகி உலகம் பூராவும் இருந்து வருபவர்களுக்கு குழந்தை பெற்றுக் கொடுத்து நல்ல வருமானம் பார்த்து வருகிறார்கள். இதன் மூலம் இந்தியா கிட்டத்தட்ட 1 பில்லியன் அமெரிக்க டொலர்களை ஆண்டுக்கு வரமானமாக ஈட்டிக்கிறதாம். அதேவேளை இது இந்தியாவை குழந்தை பிறப்பிக்கும் தொழிற்சாலை என்று உலகிற்கு இனங்காட்டுகிறதாம். Commercial surrogacy is estimated to be worth more than $1bn a year in India. While pregnant, some surrogate mothers live in dormitories - which critics call baby factories. உலகில் கலாசாரம்.. பண்பாடு.. புராணம்.. வேதம்.. என்று கட்டிப்புரளும் ஒரு நாட்டில் தான்.. ஊழல்.. எயிட்ஸ்.. சுகாதாரமின்மை.. கலப்படம்.. தரமின்மை.. சனத்தொகைப் பெருக்கம் என்று பல…
-
- 1 reply
- 426 views
-
-
இந்தியா விடுதலை பெறுவதற்கு சில மாதங்களுக்கு முன்பாகவே 1947 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் ஊழல் தடுப்புச் சட்டம் அமலுக்கு வந்தது. உண்மையான மக்கள் பிரதிநிதிகள் ஆட்சிக்கு வரும்போது காலனீய ஆட்சிக்காலத்தில் காணப்படும் அனைத்துவித லஞ்ச லாவண்யங்களும் காணாமல் போகும் என அன்றைய காங்கிரஸ் தலைவர்கள் கூறிவந்தனர். சரியாகச் சொல்லவேண்டுமானால் அரசுத்துறைகளில் ஊழலை ஒழிக்கும் வகையில் 1941லேயே The Special Police Establishment என்ற ஓர் அமைப்பு கூட ஏற்படுத்தப்பட்டது. ஆனால் சட்டங்கள், அமைப்புக்கள் எதுவும் அரசியல் ஊழலைக் கட்டுப்படுத்தவில்லை. காந்தியின் கோரிக்கைக்கும் மதிப்பில்லை ஆனால் மக்களுடன் மக்களாக ஆட்சியாளர்கள் கலந்து பணியாற்றவேண்டுமானால் ஆடம்பர பங்களாக்கள் கூடாது, எளிய இல்லங்களிலே…
-
- 0 replies
- 405 views
-
-
தமிழ் தொலைக்காட்சி ( நேரடி ஒளிப்பரப்பு ) http://www.puthiyathalaimurai.tv/ http://www.thanthitv.com/ மேலும் ஈழம் பற்றிய செய்திகளை கனடா , ஐரோப்பா நாடுகளில் ஒளிப்பரப்பும் தொலைக்காட்சிகளை இங்கே பதிவு செய்ய கோருகிறேன் !
-
- 1 reply
- 683 views
-