உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26693 topics in this forum
-
ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலத்தில் காங்கிரஸ் பிரமுகர்கள் மீது அடுத்தடுத்து பலாத்கார புகார்கள் எழுந்து பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. தற்போது காங்கிரஸ் எம்.எல்.ஏ. உதய்வால் அஞ்சானா பாலியல் பலாத்கார புகாரில் சிக்கியுள்ளார். ராஜஸ்தானில் முதல்வர் அசோக் கெலாட் தலைமையிலான காங்கிரஸ் அரசில் அமைச்சராக இருந்த பாபுலால் நாகர் மீது பலாத்கார புகார் எழுந்தது. அவர் மீதான புகாரை போலீஸ் பதிவு செய்ய மறுத்தது. இதைத் தொடர்ந்து பாதிக்கப்பட்ட பெண் நீதிமன்றப் படிகளேறினார். இதனால் நீதிமன்ற உத்தரவுப்படி பாபுலால் நாகர் மீது போலீஸ் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தியது. இதைத் தொடர்ந்து பாபுலால் நாகர் தமது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார். இந்த நிலையில் ராஜஸ்தான் காங்கிரஸ் எம்.எல்ஏ. உதய்வால் அஞ்ச…
-
- 0 replies
- 348 views
-
-
ஏமன் நாட்டில் அரசுக்கு எதிராக அல்கொய்தா அமைப்பு தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றனர். ராணுவ கட்டுப்பாட்டில் உள்ள சில பகுதிகளையும் அவர்கள் கைப்பற்றியுள்ளனர். அதேசமயம் ஏமனுக்கு உதவி செய்து வரும் அமெரிக்கா ஆளில்லா விமான தாக்குதல் மூலம் அல்கொய்தா அமைப்பினை அழித்து வருகிறது. இந்நிலையில் தெற்கு ஏமனில் உள்ள ராணுவ முகாம்களை குறிவைத்து அல்கொய்தா தாக்குதல் நடத்தினர். அல்-நஷாமாவில் உள்ள முகாமில் இரண்டு கார் குண்டுகள் வெடித்ததில் 48 வீரர்கள் உடல் சிதறி இறந்தனர். மேபாவில் உள்ள முகாமில் இன்று அதிகாலையில் துப்பாக்கியுடன் புகுந்தவர்கள் சரமாரியாக சுட்டதில் 8 வீரர்கள் கொல்லப்பட்டனர். அரேபிய தீபகற்பத்தை சேர்ந்த அல்கொய்தா அமைப்பினர் இந்த தாக்குதலை நடத்தியிருக்கலாம் என அதிகாரிகள் தெரிவித…
-
- 0 replies
- 439 views
-
-
அரபிக்கடலில் மீன் பிடிப்பதற்காக இந்திய மீனவர்கள் படகுகளில் சென்றனர். அப்போது பாகிஸ்தான் கடற்படையினர் இந்திய மீனவர்களின் 9 படகுகளை சுற்றி வளைத்தனர். தங்கள் நாட்டு எல்லைக்குள் நுழைந்ததாக கூறி 58 மீனவர்களை கைது செய்தனர். 9 படகுகளையும் கைப்பற்றி கொண்டு சென்றனர். இந்த தகவலை பாகிஸ்தான் பாதுகாப்புப்படை கமாண்டர் முகமது பரூக் தெரிவித்தார். ஏற்கனவே பாகிஸ்தான் ஜெயில்களில் இந்தியாவை சேர்ந்த 450�க்கும் மேற்பட்ட மீனவர்கள் அடைத்து வைக்கப்பட்டிருந்தனர். இவர்களில் 337 பேர் சமீபத்தில் விடுதலை ஆகி இந்தியா திரும்பினார்கள். கராச்சி ஜெயிலில் இன்னும் ஒரு சிறுவன் உள்பட 97 பேர் கைதிகளாக இருக்கிறார்கள். http://www.seithy.com/breifNews.php?newsID=93362&category=WorldNew…
-
- 2 replies
- 350 views
-
-
உலகின் தோற்கடிக்க முடியாத மன்னர்களில் ஒருவராக திகழ்ந்தவர் மாவீரன் அலெக்ஸாண்டர். இவர் கி.மு. 323 இல் தனது 32 ஆவது வயதில் காலமானார். இக் காலப்பகுதியில் எகிப்து, பேர்ஷியா, ஆசியாவையும் கைப்பற்றியிருந்தான். கி.மு.323-ல் ஜூன் 10 அல்லது 11 ஆம் திகதி பாபிலோனில். இருப்பினும் இவரது மரண திகதி மற்றும் மரணத்திற்கான காரணம் தொடர்பில் பல விவாதங்கள் இன்றும் இடம்பெற்ற வண்ணமே உள்ளன. இந்நிலையில் பேரரசன் அலெக்ஸாண்டரின் கல்லறையை கண்டுபிடித்துள்ளதாக ஆராய்ச்சிகள் தெரிவித்துள்ளனர். கிறீஸ் நாட்டின் எதேன்ஸ் நகரிலிருந்து வடக்கே 370 மைல் தொலைவில் இக் கல்லறை அமைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஆரம்பத்தில் அலெக்ஸாண்டரின் கல்லறை எகிப்திலேயே உள்ளதாக ஆரம்பத்தில் தெரிவிக்கப்பட்டு வந்தது. இந்நி…
-
- 0 replies
- 495 views
-
-
அல்கொய்தா தீவிரவாத இயக்கத்துடன் இணைந்து இந்தியா மீது தாக்குதல் நடத்த இந்தியா முஜாகிதீன் இயக்க தலைவர் யாசின் பட்கல் திட்டமிட்டது அம்பலமாகியுள்ளது. புனே ஜெர்மன் பேக்கரி குண்டுவெடிப்பு உள்ளிட்ட பல்வேறு குண்டுவெடிப்பு வழக்குகளில் தேடப்பட்டு வந்த யாசின் பட்கல் மற்றும் அவனது கூட்டாளி அசதுல்லா அக்தர் ஆகிய இருவரும் இந்திய நேபாள எல்லையில் தேசிய புலனாய்வு அமைப்பால் கைது செய்யப்பட்டனர். இவர்களிடம் நடத்தப்பட்ட வந்த விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. தற்போது அல்கொய்தா இயக்கத்தை வழிநடத்த வரும் ஜவாகிரியுடன் யாசின் பட்கல் தொடர்பில் இருந்தது வந்தது தெரியவந்துள்ளது. இந்தியாவில் தொடர்ந்து தாக்குதல் நடத்தி அமைதியை குலைக்க அல்கொய்தாவின் உதவியை யாசின் பட்கல் நாடியதை…
-
- 0 replies
- 255 views
-
-
வரும் நாடாளுமன்ற தேர்தல் கூட்டணிக்காக "சோ" அறிவித்த மெகா திட்டத்திற்கு ஜெயலலிதா இன்னும் பாஸிட்டாவ்வான பதில் கொடுக்காத நிலையில் ரஜினிகாந்த் தனது அடுத்தகட்ட நடவடிக்கையை ஆரம்பித்துவிட்டதாக அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதுகுறித்து மோடியிடம் டெலிபோனில் பேச்சு நடத்திய ரஜினிகாந்த், அவருடைய பாஸிட்டிவ்வான பதிலை கேட்டு பெரும் திருப்தியில் இருக்கின்றாராம். விஜயகாந்த் போல தனிக்கட்சி ஆரம்பித்தால் பணமும் பெருமளவில் செலவாகும், அதே நேரத்தில் அரசியல்வாதிகள் தனிமனித அறிக்கை தாக்குதல் நடத்தினால் பெரும் சங்கடத்தில் தவிக்க வேண்டும் என எண்ணிதான் இவ்வளவு நாளாக அரசியல் பக்கம் எட்டிப்பார்க்காமல் இருந்தார் ரஜினி. ஆனால் தற்போது ஒரு பாதுகாப்பான தேசிய கட்சியில் இணைவதால், பணப்பிர…
-
- 16 replies
- 2.2k views
-
-
மாவோயிஸ்டுகள் திரவ ரசாயன ஆயுதங்கள் மூலம் பாதுகாப்பு படையினர் மீது தாக்குதல் நடத்த திட்டமிட்டிருப்பதாக ஜார்க்கண்ட் போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர். ஆந்திரா, கர்நாடகா, மகாராஷ்டிரா, ஒடிஷா, ஜார்க்கண்ட், சத்தீஸ்கர், மேற்குவங்கம், பீகார், அசாம் என பல மாநிலங்களில் மாவோயிஸ்டுகள் கை ஓங்கி இருக்கிறது. மத்திய அரசுக்கு எதிராக பழங்குடி இன மக்கள் ஆதரவுடன் தாக்குதல் நடத்தி வருகின்றனர் மாவோயிஸ்டுகள். இம்மாநிலங்களின் மலைகளும் வனப்பகுதியும் பழங்குடி மக்களும்தான் மாவோயிஸ்டுகளுக்கு பக்க பலமாக இருந்து வருகின்றன. மாவோயிஸ்டுகள் நவீன ஆயுதங்களை வெளிநாடுகளில் இருந்து பெற்றிருப்பது பலமுறை வெளிச்சத்துக்கு வந்தது . தற்போது அவர்களிடம் ரசாயன ஆயுதங்கள் இருப்பதாக ஜார்க்கண்ட் மாநில போலீஸ் செய்தித் …
-
- 2 replies
- 522 views
-
-
திருச்சி விமான நிலையத்திலிருந்து, கோலாலம்பூருக்கு புறப்பட்ட ஏர் - ஏசியா விமானத்தின், வலது பக்க இன்ஜின் மீது, பறவை மோதியதால் பரபரப்பு ஏற்பட்டது. திருச்சி விமான நிலையத்தில் இருந்து, நேற்று மாலை, 4:30 மணிக்கு, ஏர் - ஏசியா விமானம், மலேசியா தலைநகர் கோலாலம்பூருக்கு 124 பயணிகளுடன் புறப்பட்ட சில நிமிடங்களிலேயே, விமானத்தின் வலது பக்க இன்ஜின் மீது, பறவை ஒன்று மோதியது. அதிர்ச்சியடைந்த விமானி, விமானத்தை தரையிறக்க முடிவு செய்து, விமான நிலைய கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொண்டு, தகவல் தெரிவித்தார். கட்டுப்பாட்டு அறையிலிருந்து தரையிறக்க, "சிக்னல்' கிடைக்க தாமதமானதால், நடு வானிலேயே விமானம் வட்டமிட்டது. ஒரு மணி நேரம் வானில் வட்டமிட்ட விமானம், 5:30 மணிக்கு தரையிறக்கப்பட்டு, வி…
-
- 3 replies
- 448 views
-
-
நைஜீரியாவில் ராணுவத்தினருக்கும், தீவிரவாதிகளுக்கும் இடையே உண்டான மோதலில் 150 தீவிரவாதிகளும், 16 ராணுவ வீரர்களும் கொல்லப்பட்டதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப் பட்டுள்ளது. மேலும் 9 ராணுவ வீரர்களைக் காணவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவில் அரசுக்கு எதிராக பல்வேறு தீவிரவாத அமைப்புகள் செயல்பட்டு வருகின்றன. இதில் ஒரு பிரிவான போக்கோஹராம் என்ற தீவிரவாத அமைப்பு காபியா காட்டு பகுதியில் முகாம் அமைத்து தங்கி இருந்தனர். கடந்த வாரம் அந்த இடத்தை ராணுவத்தினர் சுற்றி வளைத்தனர். அதனைத் தொடர்ந்து ராணுவத்தினருக்கும், தீவிரவாதிகளுக்கும் இடையே கடும் துப்பாக்கி சண்டை நடந்தது. இதில் 150 தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டதாகவும், ராணுவ வீரர்கள் 16 வீரர்கள் கொல்லப்பட்டதாகவும் …
-
- 0 replies
- 436 views
-
-
பீஜிங்: சீனாவின் வடமேற்கு பகுதியில் உள்ள மாகாணங்களில் இன்று காலை மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் 5.1-ஆக பதிவாகியுள்ளது. அங்குள்ள கன்சூ மற்றும் கிங்காய் மாகாணங்களில் உள்ளூர் நேரப்படி அதிகாலை 5:37 மணிக்கு ஏற்பட்ட நிலநடுக்கம் சுமார் 12 நொடிகள் நீடித்துள்ளது. இதனால் வீடுகள் குலுங்கின. பீதியடைந்த மக்கள் வீடுகளை விட்டு வெளியேறினர். நிலநடுக்கத்தையடுத்து கன்சூ மற்றும் கிங்காய் ஆகிய பகுதியில் உள்ள மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டனர். மீட்புப் படையினர் மற்றும் பாதுகாப்புப் படையினர் நிலநடுக்கம் ஏற்பட்ட பகுதிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்புகள் மற்றும் உயிரிழப்புகள் பற்றிய தகவல்கள் இன்னும் வெளியிடப்படவில்லை. http://tamil.…
-
- 0 replies
- 442 views
-
-
டெல்லி: இந்தியன் முஜாஹிதீன் தீவிரவாத அமைப்பு அல் கொய்தாவுடன் கைகோர்க்க திட்டமிட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. இந்தியன் முஜாஹிதீன் அமைப்பு பயங்கர தீவிரவாத அமைப்பான அல் கொய்தாவுடன் கைகோர்த்து செயல்பட திட்டமிட்டுள்ளது. அல் கொய்தா தலைவர் ஜவாஹிரி ஜிகாத் பற்றி சில குறிப்புகளை அளித்த சில நாட்களில் இந்தியன் முஜாஹிதீன் இப்படி திட்டமிட்டுள்ளது. இரு தீவிரவாத அமைப்புகளுக்கும் இடையே விரைவில் ஒப்பந்தம் கையெழுத்தாகவிருக்கிறதாம். இந்தியன் முஜாஹிதீன் அல் கொய்தா இந்தியாவில் செயல்பட உதவி செய்யுமா அல்லது அந்த அமைப்போடு தன்னை இணைத்துக் கொள்ளுமா என்பது விரைவில் தெரிய வருமாம். இந்தியன் முஜாஹிதீனின் இந்த திட்டம் பாகிஸ்தானின் உளவு நிறுவனமான ஐஎஸ்ஐ-ஐ எரிச்சல் அடைய வைத்துள்ளதாம். இந்தியன் முஜாஹ…
-
- 0 replies
- 592 views
-
-
டெல்லி: தமது பதவிக் காலத்தில் ராணுவத்துக்கான ரகசிய நிதி மூலம் சிறப்பு உளவுப் பிரிவு அமைத்து ஜம்மு காஷ்மீர் மாநில அரசை கவிழ்க்க முயற்சித்தது உள்ளிட்ட புகார்களில் சிக்கியிருக்கிறார் ராணுவத்தின் முன்னாள் தலைமை தளபதி வி.கே.சிங். இது தொடர்பாக மத்திய அரசு சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடக் கூடும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. வி.கே.சிங் தமது பதவிக் காலத்தில் ரகசிய நிதியை முறைகேடாக பயன்படுத்தியது குறித்து ராணுவத்தின் ரகசிய விசாரணைக்கு மத்திய அரசு உத்தரவிட்டிருந்தது. இந்த விசாரணை முடிவடைந்து அதன் விவரங்களை உள்ளடக்கிய அறிக்கை தற்போது பிரதமர் அலுவலகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அதில், நாட்டின் ராணுவ தலைமை தளபதியாக பதவி வகித்த போது 2010ஆம் ஆண்டு வி.கே.சிங் சிறப்பு உளவுப் பிரிவை ஒன்…
-
- 0 replies
- 314 views
-
-
அதி நவீன அக்னி- 5 ஏவுகணை வெற்றிகரமாக சோதித்து பார்க்கப்பட்டதை தொடர்ந்து, 10 ஆயிரம் கி.மீ., தூரம் சென்று தாக்குதல் நடத்தும் திறன் கொண்ட ஏவுகணைகள் தயாரிக்க, இந்தியா தயாராக உள்ளது' என, ராணுவ ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி கழக தலைவர், அவினாஷ் சந்தர் தெரிவித்தார். டில்லியில் இன்று, ராணுவ ஆராய்ச்சி வளர்ச்சி கழகம் சார்பில் கருத்தரங்கம் நடக்கிறது. இதையொட்டி, நேற்று நிருபர்களுக்கு, கழகத்தின் தலைவர் அவினாஷ் சந்தர் பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது: எதிரி இலக்குகளை தாக்கி அழிக்கும் ஏவுகணைகள் தயாரிப்பில் இந்தியா முன்னணி நாடுகளில் ஒன்றாக விளங்குகிறது. அதிக தூரம் தாக்கும் திறன் கொண்ட ஏவுகணைகள் தயாரிப்பு வரிசையில், 10 ஆயிரம் கி.மீ தூரம் சென்று தாக்குதல் நடத்தும் திறன் …
-
- 21 replies
- 1.9k views
-
-
மறைக்கப்பட்ட இந்திய வரலாறு..! காந்தி நினைத்திருந்தால் பகத்சிங்கை காப்பாற்றியிருக்கலாம்... ஆனால்...! அன்றைக்கும் இன்றைக்கும் காங்கிரஸ் கட்சிக்கு காந்தி மட்டுமே முகமூடியாக தேவைப்பட்டார். காந்திக்கு இணையாக வேறு ஒரு தலைவரை ஏற்றுக்கொள்ளவில்லை. இதையே காந்தியும் விரும்பினார். சுதந்திரப்போராட்ட காலத்தில், தனக்கு நிகராகவோ அல்லது தன்னை விட அதிகமாகவோ வேறு ஒரு தலைவர் வளர்வதை காந்தி விரும்பமாட்டார் . அதனால் தான் பகத்சிங், நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ், டாக்டர் அம்பேத்கர் போன்ற தேசத்தலைவர்களை விலக்கியே வைத்திருந்தார். இவர்களெல்லாம் வன்முறையாளர்கள் போலவும், அகிம்சைக்கு எதிரானவர்கள் போலவும் சித்தரித்துக்கா ட்டுவார். இப்படித்தான் இந்த தேசத்தின் விடுதலையை போராட்டத்தின் மூலமாகவும்…
-
- 1 reply
- 4.7k views
-
-
இலங்கையில் நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்கக் கூடாது என்று வலியுறுத்தி, தந்தை பெரியார் திராவிடர் கழகம் சார்பில் மாநிலம் தழுவிய அளவில் வாகனப் பிரசாரம் வெள்ளிக்கிழமை துவங்குகிறது. இதுகுறித்து தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் பொதுச்செயலாளர் கு.ராமகிருஷ்ணன் வெளியிட்ட அறிக்கை: இலங்கையில் ஆயிரக் கணக்கான ஈழத் தமிழர்கள் சிங்கள ராணுவத்தால் போரில் கொல்லப்பட்டனர். இந்நிலையில், நவம்பர் 15ஆம் தேதி முதல் 17ம் தேதி வரை இலங்கையில் காமன்வெல்த் மாநாடு நடைபெறவுள்ளது. இம்மாநாடு இலங்கையில் நடைபெற்றால், ஈழத்தமிழர்கள் திட்டமிட்டுக் கொல்லப்பட்டது மற்றும் 800க்கு மேற்பட்ட தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையால் சுட்டுக் கொலை செய்யப்பட்டதற்கு உலக நாடுகள் அங்கீகாரம் அளி…
-
- 2 replies
- 272 views
-
-
டமாஸ்கஸ்: சிரியாவில் உள்ள ரசாயன ஆயுதங்களை அழிக்க சுமார் ஒரு வருட காலம் ஆகும் எனவும், மேலும் அதற்கு ரூ 6174 கோடி செலவழிக்க வேண்டி வரும் எனவும் அந்நாட்டு அதிபர் ஆசாத் தெரிவித்துள்ளார். சமீபகாலமாக சிரியா நாட்டில் அரசுக்கு எதிராக உள்நாட்டு போர் நடந்து வருகிறது. புரட்சி படையினரை ஒடுக்குவதற்காக ராணுவமும் தொடர்ந்து கடுமையான தாக்குதல்களை நடத்தி வருகிறது. கடந்த சில வாரங்களுக்கு முன்னர் பொதுமக்கள் மீது நடத்தப்பட்ட ரசாயன ஆயுத தாக்குதலில் சிக்கி ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பரிதாபமாகப் பலியானார்கள். இக்கொடூர சம்பவத்தைத் தொடர்ந்து சிரியாவுக்கு உலக நாடுகள் கடும் நெருக்கடி கொடுத்தன. சிரியாவை தாக்கப்போவதாக அமெரிக்கா அறிவித்தது. இதற்காக போர் கப்பல்களையும் சிரியா அருகே அமெரிக்கா நிறுத்த…
-
- 0 replies
- 349 views
-
-
சென்னை: குஜராத் முதல்வரும் பாஜகவின் பிரதமர் வேட்பாளருமான நரேந்திர மோடி கலந்து கொள்ளும் திருச்சி மாநாட்டுக்காக www.modiintamilnadu.com என்ற இணையதளத்தை தொடங்கியுள்ளது தமிழக பாஜக. நரேந்திர மோடி வரும் 26-ந் தேதி திருச்சியில் நடைபெறும் இளந்தாமரை மாநாட்டில் கலந்து கொண்டு சிறப்புரையாற்றுகிறார். இந்த மாநாட்டுக்கான விரிவான ஏற்பாடுகளை தமிழக பாரதிய ஜனதா கட்சி செய்து வருகிறது. நரேந்திர மோடி கலந்து கொள்ளும் இம்மாநாட்டுக்காகவே தனியாக www.modiintamilnadu.com என்ற வெப்சைட்டையும் தொடங்கியுள்ளது தமிழக பாஜக. இந்த இணையதளத்தில் மாநாட்டில் கலந்து கொள்வோர் பதிவு செய்து கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆங்கிலம் மற்றும் தமிழில் உருவாக்கப்பட்டுள்ள இந்த இணையதளத்தில் திருச்சி மாநாட்டில் …
-
- 0 replies
- 494 views
-
-
நாட்டின் பிரதமர் பதவிக்கு குஜராத் முதல்வர் நரேந்திர மோடி மிக சரியான தேர்வு என்று உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி வி.ஆர். கிருஷ்ணய்யர் தெரிவித்துள்ளார். குஜராத் முதல்வர் நரேந்திர மோடிக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்து கிருஷ்ணய்யர் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார் . அந்த கடிதத்தில் லோக்சபா தேர்தலில் பிரதமர் வேட்பாளாராக நரேந்திர மோடியை அறிவித்ததை வரவேற்கிறேன். அவர் மிகச் சரியான தேர்வு. பிரதமர் பதவிக்கு தகுதி வாய்ந்தவர் மோடி.நாட்டின் மீதான அக்கறை, அவருடைய அணுகுமுறை போன்ற குணநலன்கள் அவருக்கு இந்த வாயப்பைப் பெற்று தந்துள்ளது. இந்தியாவுக்கு அணுமின் திட்டங்கள் தேவையில்லை. அணுசக்தி வேண்டாம், சூரியசக்தியே வேண்டும் என்பது எனது கொள்கை.என்னைப் போன்று நரேந்திர மோடியும் சூரியசக்திக்கு ஆத…
-
- 0 replies
- 563 views
-
-
சர்வதேச கால் பந்தாட்டப் போட்டிகளின் முடிவுகளை முன் நிர்ணயித்தது தொடர்பில் சிங்கப்பூர் காவல்துறையினர் பலரைக் கைது செய்துள்ளனர். சிங்கப்பூர் முறைகேடுகளில் ஈடுபட்டு வந்த சூதாட்டக் குழுவின் முக்கியத் தலைவர் என்று கருதப்படும் தன் சீட் இங் என்று அழைக்கப்படும் டன் தானும் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் இத்தாலிய காவல் துறையால் கைது செய்யப்பட்டுள்ளார். இத்தாலியில் கீழ் மட்டங்களில் நடக்கும் கால் பந்தாட்டப் போட்டிகளில் பங்கேற்கும் வீரர்களுக்கு பணம் கொடுத்து முடிவை நிர்ணயிக்கும் ஒரு வலையமைப்பை இவர் நடத்திவந்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. ஆனால் தான் மேட்ச் பிக்சிங்கில் ஈடுபடவில்லை என்று தன் சீட் கூறிவருகிறார். ஐரோப்பிய சாம்பியன் லீக் போட்டிகள் உட்பட நூற்றுக்கணக்கான போட்டிகளின் மு…
-
- 1 reply
- 458 views
-
-
முன்னாள் இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை குறித்து இதுவரை விசாரிக்கப்படாத பல்வேறு கோணங்களில் தீர ஆராய வேண்டும் எனக்கோரி ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தூக்குதண்டனை விதிக்கப்பட்டுள்ள பேரறிவாளன் வழக்கு தொடர்ந்திருக்கிறார். அம்மனுவினை விசாரணைக்கு ஏற்று சென்னை முதலாவது கூடுதல் அமர்வு நீதி மன்றம் மத்திய புலனாய்வுத்துறையின் பல்நோக்கு கண்காணிப்புக் குழுவிற்கு நோட்டீஸ் அனுப்புமாறு வியாழனன்று உத்திரவிட்டது. ராஜீவ் காந்தி கொலை தொடர்பில் பேரறிவாளன் உட்பட மூவர் தூக்கு தண்டனை எதிர்நோக்கியிருக்கின்றனர். பேரறிவாளன் இந்நிலையில் தற்போது வேலூர் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் பேரறிவாளன், நீதிபதி ஜெயின் கமிஷனின் பரிந்துரைகளைப் பரிசீலித்து மேல் நடவடிக்கை எடுக்கவென அமைக்கப்பட்ட பல்நோ…
-
- 0 replies
- 349 views
-
-
ஹரியானா மாநிலத்தில் குடும்ப எதிர்ப்பை மீறி திருமணம் செய்து கொள்ள திட்டமிட்ட இளம் ஜோடிகளை கொன்றதான குற்றச்சாட்டில் மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த சம்பவத்தில் 20 வயது பெண் ஒருவர் அடித்துக் கொல்லப்பட்டார் அவரது 23 வயது காதலனின் தலை வெட்டப்பட்டு அவரது தலை துண்டிக்கப்பட்ட உடல் அவரின் வீட்டின் முன் வீசியெறியப்பட்டிருந்தது. அந்தப் பெண்ணின் தந்தை, தாய் மற்றும் மாமா ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த ஜோடிகள் சாதி மாறி திருமணம் செய்து கொள்ள முயன்றதால் இந்த எதிர்ப்பு என்று கூறப்படுகிறது. இந்த எதிர்ப்பை அடுத்து அந்த ஜோடிகள் டில்லிக்கு தப்பியொடிவிட்டனர். ஆனால் பெண்ணின் குடும்பத்தினர் அவர்கள் பாதுகாப்பாக இருக்க அனுமதிக்கப்படுவர் என்று உறுதி மொழி தந்ததால் சொந்த ஊருக்கு…
-
- 0 replies
- 382 views
-
-
தமிழக பிஜேபியின் தலைவராகிறார் ரஜினி - மோடியை முன்னிறுத்தி ஜெயலலிதாவுடன் கூட்டணி. சோ மெகா திட்டம். தமிழக பிஜேபியின் தலைவராகிறார் ரஜினி. மோடியை முன்னிறுத்தி ஜெயலலிதாவுடன் கூட்டணி. சோ மெகா திட்டம். கடந்த இரண்டு நாட்களுக்கு முன் துக்ளக் ஆசிரியர் சோ அவர்கள் முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்தார். அப்போது அவர்களின் சந்திப்பு எதனால் நடந்தது என்பது குறித்த தகவல்கள் ஏதும் வெளியாகவில்லை. இதுகுறித்து தற்போது திடுக்கிடும் தகவல் வெளிவந்துள்ளது. சோ அவர்கள் பிஜேபியிடன் ஒரு மெகா திட்டத்தை வரும் பாராளுமன்ற தேர்தலில் ஈடுபடுத்த யோசனை கூறியுள்ளார். அதுதான் மும்மூர்த்திகள் திட்டம். ஜெயலலிதா, ரஜினி, மோடி ஆகிய மூவரும் ஒன்று சேர்வதுதான் இந்த மெகா திட்டம். தமிழக பாரதிய ஜனதாவுக்கு ரஜினியை தலைவராக்கி, …
-
- 1 reply
- 897 views
-
-
இரான் சிறையில் இருந்து தமிழகம் திரும்பிய 16 மீனவர்கள் இன்று புதன்தமிழக முதல்வர் ஜெயலலிதாவை தலைமைச் செயலகத்தில் சந்தித்தனர். இரான் சிறையிலிருந்து விடுதலையான தமிழக மீனவர்கள். தண்டனை காலம் முடிந்தும் அபராத தொகை செலுத்த முடியாத காரணத்தால் சிறையில் வாடிய அவர்களை விடுவிக்க முதலமைச்சர் ஜெயலலிதா, பிரதமர் மன்மோகன் சிங்குக்கு கடிதம் எழுதினார்.கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் சவுதி அரேபியா கடல் பகுதியில் மீன் பிடித்த அவர்களை இரான் நாட்டு கடற்படை கைது செய்தது. அவர்களுக்கு 6 மாதச் சிறைதண்டனையும், அபராதமும் விதிக்கப்பட்டது. அதனைத்தொடர்ந்து இந்திய துாதரகம் மூலம் மேற்கொள்ளப்பட்ட முயற்சியின் மூலம் மீனவர்கள் விடுதலை செய்யப்பட்டனர். விடுதலை செய்யப்பட்டவர்கள் நேற்று மாலை சென்னை வந்தட…
-
- 0 replies
- 441 views
-
-
ஹைத்தியில் இலங்கை ராணுவ சிப்பாய் மீது பாலியல் புகார் கடைசியாக பிரசுரிக்கப்பட்டது: 18 செப்டம்பர், 2013 - 14:57 ஜிஎம்டி ஹைதியில் இருக்கும் ஐநா படைகள் (ஆவணப்படம்) ஹைத்தியில் பணிபுரிய சென்றுள்ள இலங்கை இராணுவத்தைச் சேர்ந்த சிப்பாய் ஒருவர் உள்ளூர் பெண் ஒருவரை பாலியில் வல்லுறவுக்குட்படுத்தியதாக புகார் வந்துள்ளதை ஐ நா உறுதிப்பட்டுத்தியுள்ளது. கரிபியன் தீவுக் கூட்டத்தில் உள்ள ஹைத்தியில் பணியாற்ற சென்றிருந்த இலங்கை படைச்சிப்பாய், சனிக்கிழமையன்று சாலைக் கடவையில் பணியாற்றிக் கொண்டிருந்தபோது, அந்த பகுதி வழியாக காரில் வந்திருந்த பெண்ணை நிறுத்தி சாலைக்கு அருகேயுள்ள ஆளில்லா கட்டிடத்துக்கு கொண்டு சென்று அவரை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியதாக புகார் எழுந்துள்ளது. பாதிக்கப்…
-
- 0 replies
- 587 views
-
-
மரக்காய்போ : வெனிசுலா சிறையில் கைதிகளுக்கிடையே உண்டான மோதலில் 16 கைதிகள் வெட்டிக் கொல்லப் பட்டுள்ளனர். தென் அமெரிக்க நாடான வெனிசுலாவின் மேற்கில் உள்ளது மராகாய்போ நகர். கடந்த திங்களன்று அங்குள்ள சிறையில் உள்ள இரு வேறு கும்பல்களை சேர்ந்தவர்களிடையே மோதல் உண்டானது. மோதலைத் தொடர்ந்து உண்டான கலவரத்தில் சிறைக்கைதிகள் 15 பேர் கொல்லப்பட்டனர். கொல்லப்பட்ட கைதிகள் அனைவரும் தலைகள் வெட்டப்பட்டும், உடல்களை கூறும் போட்டும் கொடூரமாக கொல்லப்பட்டுள்ளனர். இதே போன்று, வெனிசுலாவில் உள்ள மற்றொரு சிறையில் நடந்த மோதலில் ஒரு கைதி கொல்லப் பட்டார். வெனிசுலாவில் ஆண்டுதோறும் சிறையில் நடக்கும் கலவரங்களில் மட்டும் சுமார் 500 கைதிகள் கொல்லப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்கு முக்கிய காரணம் அங்க…
-
- 0 replies
- 301 views
-