உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26682 topics in this forum
-
டெல்லி: டெல்லியில் பாஜகவின் தலைமையகத்தில் நடைபெற்ற அக்கட்சியின் நாடாளுமன்ற குழுக் கூட்டத்தை மூத்த தலைவரான எல்.கே. அத்வானி புறக்கணித்துள்ளார். பாரதிய ஜனதாவின் பிரதமர் வேட்பாளராக நரேந்திர மோடியை அக்கட்சி அறிவிக்க இருக்கிறது. தற்போது நடைபெறும் நாடாளுமன்றக் குழுக் கூட்டத்தில் இதற்கான இறுதி முடிவு எடுக்கப்படுகிறது. பாஜகவில் மோடியை பிரதமர் வேட்பாளராக அறிவிக்க அத்வானி மிகக் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து வருகிறார். கடந்த சில நாட்களாக அத்வானியை சமாதானப்படுத்த பாஜகவின் தாய் அமைப்பான ஆர்.எஸ்.எஸ். இயக்கம் தீவிரம் காட்டியது. இதற்காக பாஜக முன்னாள் தலைவர் நிதின் கத்காரியை தூதராக நியமித்து பேச்சுவார்த்தையும் நடத்தியது. ஆனால் எந்த ஒரு பயனும் இல்லை. மோடியை பிரதமர் வேட்பாளராக்க தொடர்ந்த…
-
- 0 replies
- 305 views
-
-
புதுக்கோட்டை: இலங்கையில் தமிழர்கள் மிகவும் துயரப்படவில்லை.. நன்றாகவே வாழ்கின்றனர் என்று மத்திய இணை அமைச்சர் சுதர்சன நாச்சியப்பன் தெரிவித்துள்ளார். புதுக்கோட்டை அருகே மிரட்டுநிலையில் செய்தியாளர்களிடம் பேசிய சுதர்சன நாச்சியப்பன், கச்சத்தீவில் இந்தியா - இலங்கை இணைந்து தொழில் மையம் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது. கச்சத்தீவை இந்தியா கேட்டு பெறும் பட்சத்தில் இந்தியாவின் அனுபவத்தில் உள்ள இலங்கையின் ஆழ்கடல் பகுதியை நாம் இழக்க நேரிடும். இலங்கையில் தமிழர்கள் நன்றாகவே வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். அவர்களை வாழவைக்க பாரதப் பிரதமர் மன்மோகன் சிங் இலங்கை சென்று வர விரும்புகிறார். இலங்கையில் தமிழர்கள் துயரப்படவில்லை. நன்றாகவே வாழ்கிறார்கள். அதே போல தமிழக மீனவர்கள் மீது கடந்த 4 ஆண்டுகளாக இலங்…
-
- 7 replies
- 811 views
-
-
நோர்வேயில் 77 பேரைக் கொலை செய்த Anders Behring Breivik என்ற நபர் அந்நாட்டு பல்கலைக்கழகத்தில் அரசியல் விஞ்ஞானம் பயின்று வருகிறார். 2011ஆம் ஆண்டு குறித்த நபர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 77 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். ஒஸ்லோ பல்கலைக்கழகம் அவருக்கு அனுமதி வழங்கியுள்ளது. Anders Behring Breivik ற்கு நோர்வே நீதிமன்றம் இருபத்து ஓராண்டு கால சிறைத்தண்டனை விதித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. Anders Behring Breivik தற்போது சிறைத்தண்டனை அனுபவித்து வருகின்றார். சிறையில் இருந்து கொண்டே Anders Behring Breivik அரசியல் பயில உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. நேரடியாக பல்கலைக்கழக விரிவுரையாளர்களை தொடர்பு கொள்ள வாய்ப்பு அளிக்கப்பட மாட்டாது எனவும், ஒப்படைகளின் மூலமாக அரசியல் விஞ்ஞான பட்டப்பட…
-
- 0 replies
- 606 views
-
-
மருத்துவ பரிசோதனைக்காக, அமெரிக்கா சென்றுள்ள, காங்கிரஸ் தலைவர் சோனியா, இந்த வார இறுதியில் நாடு திரும்புவார் என, காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.காங்கிரஸ் தலைவர் சோனியா, 2011ம் ஆண்டில், அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள, "ஸ்லோன் கேட்டரிங்' மருத்துவமனையில், சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு அறுவைச் சிகிச்சை மேற்கொள் ளப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. இருந்தாலும், என்ன மாதிரியான பிரச்னைக்கு, அவருக்கு அறுவைச் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது என்பது பற்றி தெரிவிக்கப்படவில்லை. ஸ்லோன் கேட்டரிங் மருத்துவமனை, புற்றுநோய் சிகிச்சைக்கு பெயர் பெற்றது என்பதால், புற்றுநோய் தொடர்பான சிகிச்சை, சோனியாவுக்கு அளிக்கப்பட்டுஇருக்கலாம் என, நம்பப்பட்டது. சமீபத்தில் முடிவட…
-
- 3 replies
- 578 views
-
-
பிரிட்டிஷ் இளவரசர் வில்லியம் , பிரிட்டிஷ் படைகளில் ஏழாண்டுகள் பணியாற்றிய பின்னர், ராணுவப் பணியிலிருந்து ஓய்வு பெறவிருக்கிறார். அவர் பிரிட்டிஷ் விமானப்படையின் தேடுதல் மற்றும் மீட்புப் பணி விமானியாக தனது கடைசி பணி நாளை செவ்வாய்க்கிழமை முடித்தார். பிரிட்டிஷ் அரச பரம்பரையில், முடிசூடத் தயாராக இருப்பவர்கள் வரிசையில் இரண்டாவதாக இருக்கும் இவர், இந்த மாற்றம் நிகழும் ஆண்டு என்று வர்ணிக்கப்படும் ஆண்டில், பொதுச்சேவை செய்ய பல வாய்ப்புகளைப் பரிசீலித்துக்கொண்டிருந்தார் என்று கென்சிங்டன் அரண்மனை அதிகாரிகள் தெரிவித்தனர். இளவரசர் வில்லியம் தனது அதிகாரபூர்வ நிகழ்ச்சிகளை அதிகப்படுத்தமாட்டார், ஆனால் அவரது சேவை தொடர்பான பணிகளை, குறிப்பாக சுற்றுச்சூழல் பாதுகாப்பில், விஸ்தரிப்பார் எ…
-
- 3 replies
- 382 views
-
-
பாகிஸ்தானில் ஒருவர் தனது ஒன்றரை வயது பெண் குழந்தையை நீரில் மூழ்கடித்துக் கொன்றிருக்கிறார். அவருக்கு ஆண்குழந்தைதான் வேண்டும் என்பதற்காகத்தான் அவர் இந்தக் கொலையைச் செய்ததாக அவரது குடும்பத்தினர் கூறுகிறார்கள். அந்தக் கொலைக்காக தான் இப்போது வருந்துவதாக அவர் கூறுகிறார். பெண் குழந்தை என்ற காரணத்துக்காக அவர்களை கொல்லுகின்ற, தெற்காசியாவில் பெரிதாக காணப்படுகின்ற இந்தப் பிரச்சினையை, இந்த நிகழ்வு கோடிட்டுக் காட்டுகின்றது. http://www.bbc.co.uk/tamil/multimedia/2013/09/130912_pakisinfant.shtml
-
- 0 replies
- 428 views
-
-
ஆப்கன் தேசியக் கால்பந்துக் குழு தெற்காசிய கால்பந்து சம்மேளன சாம்பியன்ஷிப் போட்டிகளில் வெற்றி பெற்றதை அடுத்து, அக்குழுவை வரவேற்க தலைநகர் காபூலில் ஆயிரக்கணக்கான ஆப்கானிய கால்பந்து ரசிகர்கள் குழுமியிருந்தனர். வெற்றி பெற்ற ஆப்கானிய கால்பந்துக்குழுவை காபூலில் வரவேற்கத் திரண்டிருந்த ஆப்கன் ரசிகர்கள் கூட்டம் ஒரு சர்வதேச விளையாட்டுப்போட்டியில் ஆப்கானிஸ்தான் வெல்வது இதுவே முதல் முறை. ஆப்கானியக் கால்பந்துக் குழுவினர் தேசிய கால்பந்து விளையாட்டரங்கில் தாங்கள் வென்ற கோப்பையைக் காட்டியபோது, ஆப்கானிய ரசிகர்கள், கொடிகளை அசைத்தும், உற்சாகக் குரலெழுப்பியும் விசிலடித்தும் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். ஆப்கானியக் குழு, ஆறு முறை சாம்பியன் பட்டம் பெற்ற இந்தியாவை 2-0 என்ற கோல் கணக…
-
- 0 replies
- 269 views
-
-
டெல்லி: பாஜக மூத்த தலைவர் அத்வானியின் சகாப்தம் முடிந்துவிட்டதாக பாஜக தலைவரும் முன்னாள் பீகார் துணை முதல்வருமான சுஷில் குமார் மோடி தெரிவித்துள்ளார். குஜராத் முதல்வர் நரேந்திர மோடியை பிரதமர் வேட்பாளராக அறிவிக்க பாஜக மூத்த தலைவர் எல்.கே. அத்வானி எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இந்நிலையில் இது குறித்து பாஜக தலைவரும், முன்னாள் பீகார் துணை முதல்வருமான சுஷில் குமார் மோடி ட்விட்டரில் கூறியிருப்பதாவது, மக்களின் மனநிலையை உணர தவறிவிட்டார் அத்வானிஜி. அடல்ஜியை பிரதமர் வேட்பாளராக அத்வானிஜி தான் அறிவித்தார். அதே போன்று தற்போது மோடியின் பெயரையும் அறிவிக்கலாமே. அரசியலில் மட்டும் தான் கடைசி வரை மக்கள் பதவிக்கு முயற்சி செய்கிறார்கள். அமைச்சர் பதவி ஒரு இறந்த அரசியல்வாதியை உயிர்ப்பிக்குமா? என…
-
- 0 replies
- 386 views
-
-
இலங்கையில் நடைபெறவுள்ள பொதுநலவாய நாடுகள் தலைவர்கள் மாநாட்டை புறக்கணிக்க முடியாது பிரித்தானிய அரசாங்கம் அறிவித்துள்ளது.அமர்வுகளில் பங்கேற்பதே சரியானது என பிரித்தானிய வெளிவிவகார மற்றும் பொதுநலவாய நாடுகள் அமைச்சர் ஹூகோ சர்வி தெரிவித்துள்ளார்.2011ம் ஆண்டில் பொதுநலவாய நாடுகள் தலைவர்கள் அமர்வினை இலங்கையில் நடாத்த கோரிக்கை விடுக்கப்பட்ட போதிலும், அந்தக் கோரிக்கை நிராகரிக்கப்பட்டதாகத் தெரிவித்துள்ளார். அதன் பின்னர் 2013ம் ஆண்டில் இலங்கையில் அமர்வுகளை நடாத்துவது என தீர்மானிக்கப்பட்டது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். பிரித்தானிய பாராளுமன்றில் இலங்கை குறித்த குறிப்பிடப்படும் தகவல்கள் கொழும்பு அரசாங்கத்திற்கு தெளிவுபடுத்தப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார். மனித உரிமை, நல்லிணக்கம் …
-
- 0 replies
- 458 views
-
-
தமிழ் சினிமாவில் தமிழ் பேசும் உள்ளூர் நடிகைகளை விட அண்டை மாநிலமான மலையாள தேசத்து நடிகைகளின் ஆதிக்கம் எப்போதுமே உண்டு. லலிதா, பத்மினி, ராகினி, சுகுமாரி, கே.ஆர்.விஜயா, என 60 களில் தொடங்கிய ஆதிக்கம் எண்பதுகளில் அம்பிகா, ராதா, ஊர்வசி, கல்பனா நீடித்தது மீரா ஜாஸ்மின், அசின், காவ்யா மாதவன், காவேரி, என பல நடிகைகள் மலையாள தேசத்தில் இருந்து வந்து தமிழ்நாட்டில் சூப்பர்ஹிட் நடிகையாக வலம் வந்துள்ளனர். இன்றைக்கும் நயன்தாரா, நஸ்ரியா நசீம், லட்சுமி மேனன் என பல மலையாள நடிகைகள் தமிழ் சினிமாவை கைப்பற்றியுள்ளனர். குடும்பப்பாங்கான கிராமத்து வேடத்தில் அசத்திய லட்சுமி மேனன் கையில் அரைடஜன் படங்கள் உள்ளன. இளம் நடிகர்களின் முதல் சாய்ஸ் லட்சுமிமேனன். நேரம் படம் மூலம் தமிழ் சினிமாவில் நுழைந்…
-
- 6 replies
- 4.4k views
-
-
சிகாகோ: பறக்கும் விமானத்தில் அமெரிக்கப் பெண்ணிடம் பாலியல் சில்மிஷத்தில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டப்பட்ட இந்திய எஞ்ஜினியருக்கு 9 மாதம் சிறை தண்டனை விதித்து அமெரிக்க நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. ஆந்திராவைச் சேர்ந்த சாப்ட்வேர் நிறுவன ஊழியர் சீனிவாச எர்ரமில்லி, வயது 46..இவர் கடந்த 2011ம் ஆண்டு ஜூன்மாதம் 14ம் தேதி சிகாகோ செல்லும் செளத்வெஸ்ட் விமானத்தில் பயணித்தார். அவரது பக்கத்து வீட்டில் பாதிக்கப்பட்ட பெண் இருந்துள்ளார். அப்பெண்ணின் கணவரும் உடன் பயணித்துள்ளார். அந்தப் பெண்ணுக்கு அப்போது 63 வயதாகும். தங்களது 34வது திருமண நாளைக் கொண்டாடுவதற்காக கணவருடன் அவர் லாஸ் வேகாஸ் பயணித்துள்ளார். பயணத்தின்போது தனது ஷார்ட்ஸுக்குள் 3 முறை கையை விட்டார் சீனிவாசா என்பது அப்பெண்ணின் புகார…
-
- 4 replies
- 721 views
-
-
ஆசிய நாடுகளின் ஐரோப்பிய வணிகத்திற்கு இதுநாள் வரை இணைப்பு வழிகளாக சூயஸ் கால்வாய் மற்றும் மலாகா நீரிணைப்பு வழிகளே பயன்பட்டு வந்தன. இவற்றில் மலாகா வழியானது பாதுகாப்பற்றதாகவும், நெரிசல் மிகுந்ததாகவும் மாறி வருகின்றது. மேலும், இந்த வழிகள் சுற்றுப் பாதையாக இருப்பதால் கால விரயமும் ஏற்படுவதாக ஆசிய நாடுகள் கருதி வந்தன. புவி வெப்பமடைவதின் காரணமாக சமீப காலங்களில் ஆர்க்டிக் பெருங்கடலின் பனி உறைந்திருக்கும் சில பகுதிகள் ஜூலை மாதம் முதல் நவம்பர் வரை இளகிக் காணப்படுகின்றன. அப்போது, ரஷ்யாவின் பனி உடைப்பு தொழில்நுட்ப உதவியுடன் இந்தப் பகுதிகள் கப்பல் போக்குவரத்திற்கு ஏற்றதாக மாற்றப்படுகின்றன. இந்த முயற்சி, ஆசிய நாடுகளின் மேற்கத்திய நாடுகளுடனான போக்குவரத்திற்கு உகந்ததாகக் கரு…
-
- 0 replies
- 499 views
-
-
கராச்சி: பாகிஸ்தானின் உள்ள கராச்சி, உலகின், "அதிபயங்கர நகரம்' என்ற பெயரை பெற்றுள்ளது. உலகின் பல்வேறு நாடுகளின் முக்கிய நகரங்களில், மக்கள் பாதுகாப்பாக வாழ்வதற்கான சூழ்நிலை குறித்து, தனியார் பத்திரிகை நிறுவனம், ஆய்வு நடத்தியது. இந்த ஆய்வில் பாகிஸ்தானின் வர்த்தக நகரமான கராச்சி மக்களின் உயிருக்கு ஆபத்தான, "அதிபயங்கர நகரம்' என, தெரிவிக்கப்பட்டுள்ளது. இது பற்றி ஆய்வறிக்கையில் பல்வேறு அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியாகியுள்ளன. பாகிஸ்தானில் நிலவும் வறுமை மற்றும் வேலையில்லா திண்டாட்டத்தால், வேலைவாய்ப்பை தேடி நாட்டின் பல பகுதிகளிலிருந்தும், மக்கள் கராச்சிக்கு வருகின்றனர். 2000 முதல், 2010ம் ஆண்டு வரை, கராச்சி நகரின் மக்கள் தொகை, 80 சதவீதம் அதிகரித்துள்ளது. இதனால் வர்த்தகநகரமான கரா…
-
- 0 replies
- 1.1k views
-
-
வாஷிங்டன்: வட கொரியா தனது யாங்பியான் அணு உலையை மீண்டும் செயல்படுத்த ஆரம்பித்துள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. இதுதொடர்பான செயற்கைக் கோள் புகைப்பட ஆதாரத்தையும் அமெரிக்கா வெளியிட்டுள்ளது. இந்த அணு உலையில், அணு ஆயுதங்களில் பயன்படுத்தப்படும் புளுட்டோனியத்தை தயாரிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. ஜான்ப்ஸ் ஹாப்கின்ஸ் நவீன சர்வதேச ஆய்வு கழகம் இது குறித்து கூறுகையில், ஆகஸ்ட் 31ம் தேதி எடுக்கப்பட்ட செயற்கைக்கோள் படத்தில், அந்த அணு உலையிலிருந்து வெண்ணிறப் புகை வருவது தெரிய வந்தது. எனவே இதன்மூலம் அந்த அணு உலை மீண்டும் இயங்குவதாக கருத முடியும். அல்லது செயல்பாட்டுக்குத் தயாராகி விட்டதாக கருதலாம் என்று கூறப்பட்டுள்ளது. இந்த அணு உலையில், 6 கிலோ எடை கொண்ட புளுட்டோனியத்தை ஒரு வருடத…
-
- 0 replies
- 1k views
-
-
டெல்லி: நரேந்திர மோடியை பிரதமர் வேட்பாளராக அறிவிப்பதற்கான முயற்சிகளை தீவிரப்படுத்தியுள்ளார் கட்சித் தலைவர் ராஜ்நாத் சிங். அத்வானியின் எதிர்ப்பில் எந்த மாற்றமும் இல்லாத நிலையில் நாளையே மோடி பெயரை அறிவிக்க அவர் தீர்மானித்துள்ளாக லேட்டஸ்ட் தகவல் தெரிவிக்கிறது. அத்வானியை இந்த விஷயத்தில் அவரால் சமாதானப்படுத்த முடியாமல் போன நிலையில் தற்போது சுஷ்மா சுவராஜ், முரளி மனோகர் ஜோஷி ஆகியோரைச் சந்தித்துப் பேசியுள்ளார். அனைத்துத் தலைவர்களையும் சந்தித்து ஒருமித்த கருத்தை விரைவாக எட்டும் முயற்சியில் அவர் ஈடுபட்டிருப்பதாக கூறப்படுகிறது. இதனால் மோடி விவகாரம் டெல்லியில் சூடு பிடிக்க ஆரம்பித்துள்ளது. அனைவருடனும் பேசி வருவதாகவும், விரைவில் முடிவு தெரிவிக்கப்படும் என்றும் ராஜ்நாத் சிங் கூறியு…
-
- 0 replies
- 354 views
-
-
சென்னை: கடந்த ஒரு மாத காலமாக இந்திய பொருளாதாரம் மிகவும் மோசமான நிலையில் இருந்தது, ஆனால் சென்ற வார துவக்கத்தின் முதல் இந்த நிலை மாறி வந்தது குறிப்பிடதக்கது. இதன் காரணம் என்வென்று பார்த்தால், பல விதமான பதில்கள் நமக்கு கிடைத்தது. சிலர், ரிசர்வ் வங்கியின் புதிய கவர்னரான ரகுராம் ராஐன் வரவால் முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கை அதிகரித்து அதித அளவில் முதலீடு செய்தனர் எனவும், மறுபக்கம் ஆர்.பி.ஐயின் சில நடவடிக்கையின் முலம் இந்தியாவிற்கு அதிகமான டாலர் முதலீடு கிடைத்தது தான், இந்த பொருளாதார முன்னேற்றத்திற்கு காரணம் என்று கூறுகின்றனர். இதன் விளைவாக, அதள பாதளத்திற்கு சென்ற ரூபாயின் மதிப்பு தற்போது மீண்டு வந்துள்ளது. கடந்த மாதத்தில் அமெரிக்க டாலருக்கு எதிரான ரூபாயின் மதிப்பு ரூ.68.98 என்ற ந…
-
- 0 replies
- 328 views
-
-
சென்னை: வடக்கு தமிழகத்தில் அடுத்த 48 மணி நேரத்தில் பரவலாக பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஆந்திரக் கடலோரம், வடக்கு தமிழகம் ஆகிய பகுதிகளில் தென் மேற்குப் பருவ மழை தீவிரமடைந்திருப்பதாகவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது. வரும் 48 மணி நேரத்தில் வடக்கு தமிழகம் புதுச்சேரியில், பரவலாக பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளாகவும் வானிலை மையத் தகவல் தெரிவித்துள்ளது. சென்னையில் இன்று காலை லேசாக வெயில்அடித்த நிலையில் மாலையில் மீண்டும் மழை பெய்யத் தொடங்கியது. சென்னை நகரிலும், புறநகர்ப் பகுதிகளிலும் நேற்றும் இரவு முழுவதும் மழை பெய்து நகரையே வெள்ளக்காடாக்கி விட்டது. 2 நாட்களாக சென்னை நகரையும், புறநகர்ப் பகுதிகளையும், பிற வட மாவட்டங்களையும் நல்ல மழை குளிர்வித்து…
-
- 0 replies
- 388 views
-
-
மும்பை: செக் மோசடி வழக்கில் பாலிவுட் நடிகை பிரீத்தி ஜிந்தாவுக்கு எதிராக ஜாமீனில் வெளியே வர முடியாத பிடிவாரண்ட்டை மும்பை நீதிமன்றம் பிறப்பித்துள்ளது. பாலிவுட் நடிகை பிரீத்தி ஜிந்தாவின் படங்களுக்கு வசனம் எழுதிய அப்பாஸ் டயர்வாலாவுக்கு அவர் ரூ.18.9 லட்சத்திற்கான செக்கை வழங்கியுள்ளார். ஆனால் அந்த செக்கை வங்கியில் அளித்த போது அது பணம் இல்லாமல் திரும்பி வந்துவிட்டது. இதையடுத்து பிரீத்தி மீது செக் மோசடி வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு விசாரணை மும்பை அந்தேரி நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்த வழக்கு விசாரணை தொடர்பாக பிரீத்தி நேற்று நீதிமன்றத்தில் ஆஜராக அவருக்கு சம்மன் அனுப்பப்பட்டிருந்தது. ஆனால் அவர் ஆஜராகவில்லை. இதனால் அவருக்கு ரூ.5,000 அபராதம் விதிக்கப்பட்டதுடன் அவ…
-
- 0 replies
- 422 views
-
-
பெங்களூர்: வில்லாக்கள், அபார்ட்மென்ட்கள், ரோ வீடுகள் என கிட்டத்தட்ட 1.82லட்சம் வீடுகளை கட்டி வைத்தும், அதில் கிட்டத்தட்ட 60,000 வீடுகளை விற்க முடியாமல் தவித்து வருகிறார்களாம் பெங்களூர் ரியல் எஸ்டேட் அதிபர்கள். இவற்றில் 80 சதவீதம் அபார்ட்மென்ட்கள் ஆகும். பத்து சதவீதம் பிளாட்டுகள் ஆகும். பெங்களூரில் தற்போதைய நிலையில் கிட்டத்தட்ட 700க்கும் மேற்பட்ட குடியிருப்புத் திட்டங்கள் ஜரூராக மேற்கொள்ளப்பட்டு வருகிறதாம். ஆனால் கட்டியவற்றை வாங்கத்தான் ஆளில்லை என்கிறார்கள். 2012ம் ஆண்டு ஜனவரி முதல் ஜூன் வரையிலான காலகட்டத்தில் மாதத்திற்கு 3774 வீடுகள் வரை பெங்களூரில் விற்று வந்ததாம். ஆனால் தற்போது அதில் சரிவு ஏற்பட்டுள்ளது. தற்போது தேக்கமடைந்துள்ள வீடுகளை முழுமையாக விற்க இன்னும் 16 மாத…
-
- 0 replies
- 2.1k views
-
-
தென் ஆப்ரிக்காவில் நடக்கும் சட்டவிரோத வேட்டை காரணமாக அங்கேயிருக்கும் கழுகுகளின் எண்ணிக்கை வேகமாக குறைந்து வருவதாக வன உயிர் பாதுகாப்பாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இறையைத் தின்ன போட்டியிடும் கழுகு சட்டவிரோத வேட்டையை வன அதிகாரிகள் கண்டுபிடிக்கக் கூடாது என்ற நோக்கில், சிலர் கொல்லப்பட்ட யானைகள், காண்டாமிருகங்கள் போன்றவற்றின் உடல்களின் விஷத்தை செலுத்திவிடுகின்றனர். பொதுவாக இறந்த மிருகங்கள் இருக்கும் இடத்தின் மேல் கழுகள் மற்றும் பருந்துகள் வட்டமிடும். இதைவைத்து, குற்றம் நடந்த இடத்தை வனக்காவலர்கள் எளிதில் கண்டுபிடிப்பார்கள். இப்போது உலகில் 10 ஆயிரத்துக்கும் குறைவான கேப் கழுகுகள்தான் இருக்கின்றன. விஷம் வைக்கப்பட்ட ஒரு யானையின் உடல், 600 கழுகுகளைக் கொல்லக் கூடியது. இது …
-
- 0 replies
- 336 views
-
-
வாஷிங்டன்: ரசாயன ஆயுதங்களை சிரியா ஒப்படைத்தால் தாக்குதல் நடத்துவது கைவிடப்படும் என்று அமெரிக்க அதிபர் ஒபாமா தெரிவித்துள்ளார். இது தொடர்பாக ஒபாமா கூறுகையில், நாட்டின் தேசிய பாதுகாப்பைக் கருதிதான் சிரியா மீது ராணுவத் தாக்குதல் நடத்தத் தீர்மானித்தோம். ஆனால் ராணுவ நடவடிக்கை இல்லாமலேயே தேசிய பாதுகாப்பு உறுதி செய்யப்படுமானால் அதை முதலில் வரவேற்போம். ராணுவ நடவடிக்கை எடுப்பதற்கான ஏற்பாடுகளில் நாம் இவ்வளவு மும்முரமாக இறங்கியிருக்காவிட்டால், சர்வதேச கட்டுப்பாட்டுக்குள் சிரியாவின் ரசாயன ஆயுதங்களைக் கொண்டுவரும் பேச்சே எழுந்திருக்காது. சிரியா தமது ரசாயன ஆயுதங்களை அமெரிக்காவிடம் ஒப்படைத்துவிட்டால் அந்நாட்டின் மீது தாக்குதல் நடத்துவது கைவிடப்படும். மேலும் சிரியா மீதான தாக்குதலுக்கு ஒப்ப…
-
- 1 reply
- 340 views
-
-
சிரியா மீது அமெரிக்கா இராணுவத் தாக்குதல் நடத்தினால், அது புதிய ஒரு தீவிரவாத அலையை உருவாக்கி சர்வதேச அளவில் சட்டம் ஒழுங்குப் பிரச்சினையை பெரும் சிக்கலாக்கிவிடும் என்று ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் எச்சரித்துள்ளார். அமெரிக்க தினசரி ஒன்றில் எழுதியுள்ள கட்டுரையிலேயே இந்தக் கருத்தை அவர் வெளியிட்டுள்ளார். சிரியாவின் ரசாயன ஆயுதங்களை சர்வதேசத்தின் கட்டுப்பாட்டில் ஒப்படைப்பது குறித்த ரஷ்யாவின் பிரேரணைகளை விவாதிக்க, அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஜான் கெர்ரி, ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்கேய் லாஃபராவை ஜெனீவாவில் இன்று சந்தித்து பேசவுள்ள நிலையில், புடினின் கட்டுரை வெளியாகியுள்ளது. நியூயார்க் டைம்ஸ் பத்திரிகையில் எழுதியுள்ள கட்டுரையில், உலகெங்கும் உள்ள லட்சக் கணக்கான மக்கள் அமெரிக்கா…
-
- 0 replies
- 315 views
-
-
முன்னேப்போதும் இல்லாத அளவுக்கு அதிக அளவிலானோர் இடம்பெயர்ந்து வெளிநாடுகளில் வாழ்வதாக ஐ நா அறிக்கை தெரிவிக்கிறது. இந்த ஆண்டின் கணக்கெடுப்பின்படி 23 கோடிபேர் வெளிநாடுகளில் வாழ்கின்றனர். இது உலக மக்கள் தொகையில் முப்பதில் ஒரு பங்காகும். வெளிநாட்டில் வாழ்வோரின் எண்ணிக்கை இந்த நூற்றாண்டின் துவக்கத்தோடு ஒப்பிடுகையில் முப்பது சதவீதத்துக்கும் மேல் உயர்ந்துள்ளது. அமீரகத்தில் உள்ள வெளிநாட்டுத் தொழிலாளர்க இடம்பெயர்ந்து செல்வோரில் பெரும்பாலானோர் தெற்காசியாவைச் சேர்ந்தவர்கள். அதிகம் பேர் இடம்பெயர்ந்து வரும் கண்டமாக ஐரோப்பா இருக்கிறது. ஆசியா இரண்டாவது இடத்தில் இருக்கிறது. அதிகம் பேர் இடம்பெயர்ந்து வரும் நாடாக அமெரிக்கா இருக்கிறது. அந்நாட்டில் இருக்கும் 4 கோடியே 60 லட்சம் பேர் வெளிந…
-
- 0 replies
- 305 views
-
-
கர்ப்பம் தரித்தது போன்ற பொய்த் தோற்றத்தை ஏற்படுத்திக் கொண்டு, கோக்கைன் போதைப் பொருள் கடத்த முயன்ற கெனேடியப் பெண் கோலம்பியா விமான நிலையத்தில் கைது செய்ப்பட்டுள்ளார். போதை மருந்து தடுப்பு சோதனை நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த பெண் அதிகாரி ஒருவர் இவரது வயிற்றைத் தடவி சோதனை நடத்துகையில், கர்ப்பத்தால் வீங்கியதாக கூறப்பட்ட வயிற்றுப் பகுதி மிகவும் கடினமாகவும், ஜில்லென்றும் இருந்ததால் அவர் சந்தேகம் கொண்டார். அந்தப் பெண்ணின் இடுப்பில் கட்டப்பட்டிருந்த செயற்கை வயிற்றுக்குப் பின்னால் இரண்டு கிலோ எடையுள்ள போதைப் பொருட்கள் இருந்தன. இவருக்கு எட்டு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. http://www.bbc.co.uk/tamil/multimedia/2013/09/130912_fakepregncy.shtml
-
- 0 replies
- 315 views
-
-
சிறீலங்காவில் நடைபெறவுள்ள பொதுநலவாய தலைவர்களின் மாநாட்டில் கலந்துகொள்ளப்போவதாக அவுஸ்திரேலியாவின் புதிய பிரதமர் டொனி அபொட் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடன் இன்று இடம்பெற்ற தொலைபேசி உரையாடலின் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். இதன்போது புதிய பிரதமரை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வாழ்த்தியுள்ளார். கடைசி பொதுநலவாய தலைவர்களின் மாநாடு கடந்த 2011 ஆம் ஆண்டு அவுஸ்திரேலியாவின் பேர்த்தில் நடைபெற்றது. இந்நிலையில் இது தொடர்பில் இலங்கைக்கு உதவிசெய்யும் பொருட்டு கடைசி மாநாட்டின் ஏற்பாட்டு நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த அதிகாரிகள் ஜூன் மாதம் இங்கு வருகை தந்திருந்தமை குறிப்பிடத்தக்கது. http://www.sankathi24.com/news/33079/64//d,fullart.aspx
-
- 0 replies
- 376 views
-