Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. சிரியாவில் அரசுப்படைகள் இரசாயனக் குண்டுகளை வீசி ஆயிரத்துக்கும் அதிகமான பொதுமக்களைக் கொன்றுள்ள நிலையில், அமெரிக்காவின் ஏவுகணை தாங்கி போர்க்கப்பல் ஒன்று மத்தியத்தரைக்கடல் விரைகிறது. ஏற்கனவே அப்பிராந்தியத்தில் மூன்று அமெரிக்காவின் போர்க்கப்பல்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த கப்பல் மூலம் அதன் எண்ணிக்கை நான்காக உயர்கிறது. இருந்தும் சிரியாவிற்கு எதிராக எந்த தாக்குதலையும் தொடுக்க ஆயுத்தமாக இருக்கும்படி எங்களுக்கு உத்தரவும் வரவில்லை என்று அங்குள்ள அமெரிக்க கப்பற்படை அதிகாரி ஒருவர் தெரிவித்தார். சிரியாவில் பொதுமக்களுக்கு எதிராக ரசாயண ஆயுதங்கள் பயன்படுத்தப்படுவதாக குற்றம்சாட்டி வரும் அமெரிக்கா சிரியாவிற்கு எதிராக தாக்குதல் நடத்த தீர்மானித்துக் …

  2. பிரிட்டிஷ் பிரதமர் டேவிட் கேமரன் பிரிட்டிஷ் நாடாளுமன்றத்தில் சிரியா குறித்த காரசாரமான விவாதம் ஆரம்பித்துள்ளது. சிரியாவில் இராணுவ தலையீட்டுக்கான அடிப்படைகளுக்கு பிரிட்டிஷ் அரசாங்கம் நாடாளுமன்றத்தின் ஆதரவைக் கோருகிறது. ஐநா பாதுகாப்புக் கவுன்சிலில் தன்னால் தாக்கல் செய்யப்படும் தீர்மானமானது சிரியா விடயத்தில் ஒரு பக்கசார்பு நிலைப்பாட்டை எடுப்பதோ அல்லது சிரியாவில் ஆட்சிமாற்றத்துக்காக அங்கு ஆக்கிரமிப்பதோ அல்ல என்று ஐக்கிய ராஜ்ஜியத்தின் பிரதமர் டேவிட் கமெரன் கூறினார். அது அங்கு நடந்த பெரும் எடுப்பிலான இரசாயன தாக்குதல் குறித்தது என்றும், போர்க்குற்றம் ஒன்றுக்கான பிரிட்டனின் பதில் நடவடிக்கை குறித்தது என்றும் அவர் கூறினார். டமாஸ்கஸில் கடந்த வாரம் ஒரு இரசாயன ஆயுதத் தாக்குதல் …

  3. டெல்லி: சிரியா மீது அமெரிக்கா ராணுவ நடவடிக்கையை மேற்கொண்டால் இந்திய பொருளாதாரம் மிகப் பெரும் வீழ்ச்சியை எதிர்கொள்ள நேரிடும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது. மத்திய தரைக்கடல் நாடான சிரியாவில் அதிபர் பஷார் அல் ஆசாத்துக்கு எதிராக உள்நாட்டு கிளர்ச்சி ஏற்பட்டுள்ளது. இந்த கிளர்ச்சியாளர்களை ஒடுக்க ரசாயன குண்டுகளை சிரியா அரசு பயன்படுத்தி ஆயிரக்கணக்கானோரை கொன்றது என்று புகார் சொல்கிறது அமெரிக்கா. இந்த புகார் தொடர்பாக ஐக்கிய நாடுகள் சபையின் குழுவினர் சிரியாவுக்கு சென்று ஆய்வு நடத்தி வருகின்றனர்.தற்போது ஐ.நா. குழு ஆய்வு நடத்தி வந்தாலும் சிரியா மீது ராணுவ நடவடிக்கை மேற்கொள்வது தொடர்பாக அமெரிக்கா தீவிரம் காட்டி வருகிறது. இது குறித்து நட்பு நாடுகளுடன் அமெரிக்கா ஆலோசனை நடத்தி வருகிறது. ஆன…

  4. டெல்லி: நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு தொடர்பான கோப்புகள் மாயமானது தொடர்பாக காவல்துறை மூலம் முதல் தகவல் அறிக்கை ஏன் பதிவு செய்யப்படவில்லை என்று மத்திய அரசிடம் உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. நிலக்கரி சுரங்க ஒதுக்கீட்டு ஊழல் வழக்கு விசாரணை உச்சநீதிமன்றத்தின் நேரடி கண்காணிப்பின் கீழ் சிபிஐயால் விசாரிக்கப்பட்டு வருகிறது. இந்த வழக்கில் சிபிஐ கோரும் ஆவணங்களை மத்திய அரசு தாக்கல் செய்ய உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. ஆனால் சிபிஐ கோரிய ஆவணங்கள் பலவும் காணாமல் போய்விட்டது என்று கைவிரித்தது மத்திய அரசு. இந்த விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது . மத்திய அரசு ஆவணங்களைக் காணவில்லை என்று கூறியதையும் உச்சநீதிமன்றத்தில் சிபிஐ தெரிவித்தது. இதைத் தொடர்ந்து மத்திய அரசு ஒரு சிறு …

  5. டெல்லி: நாடு இப்போது பொருளாதார நெருக்கடியை சந்தித்துள்ளதை தாம் மறுக்கவில்லை என்றும் இது குறித்து நாளை நாடாளுமன்றத்தில் விளக்கம் அளிக்கிறேன் என்றும் பிரதமர் மன்மோகன்சிங் கூறியுள்ளார். நாடாளுமன்றத்தில் இன்று பொருளாதார நிலை மற்றும் இந்திய ரூபாயின் மதிப்பு சரிவடைவது குறித்து பிரதமர் விளக்கம் அளிக்க வேண்டும் என்று பாஜக எம்.பி. அருண் ஜேட்லி கோரிக்கை வைத்தார். இதைத் தொடர்ந்து ரூபாயின் மதிப்பு சரிவடைவது குறித்து விளக்கம் அளிக்க அவகாசம் தேவை என்றும் பொருளாதார நிலை குறித்து நாளை சபையில் விளக்கம் அளிப்பதாகவும் பிரதமர் கூறினார். மேலும், இந்தியா கடுமையான பொருளாதார நெருக்கடியை சந்தித்துள்ளதை தாம் மறுக்கவில்லை. உள்நாட்டு விவகாரங்களும், சர்வதேச சூழ்நிலைகளும் இந்திய ரூபாயின் மதிப்பு சரிவத…

  6. பெங்களூர்: தமிழக முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கில் ஆஜராகி வந்த அரசு வழக்கறிஞரான பவானிசிங் திடீரென விலக்கிக் கொள்ளப்பட்டதை எதிர்த்து அவர் உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடர முடிவு செய்துள்ளார். 1991-96ஆம் ஆண்டு முதல் தமிழக முதல்வராக ஜெயலலிதா பதவி வகித்த போது வருமானத்துக்கு அதிகமாக சொத்துக் குவித்தார் என்பது வழக்கு. இந்த வழக்கில் சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர். பல முட்டுக்கட்டைகளைத் தாண்டி பெங்களூர் நீதிமன்றத்தில் இந்த வழக்கின் இறுதி விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் திமுக இந்த வழக்கில் தம்மையும் இணைத்துக் கொள்ள அனுமதி கோரியது. பெங்களூர் நீதிமன்றமும் இதற்கு அனுமதி அளித்தது. இதைத் தொடர்ந்து அரசு வழக்கறிஞர் பவானிசிங்கை பதவியில…

  7. ஐநா கண்காணிப்பாளர்கள் டமாஸ்கஸின் புறநகர் பகுதியில் கடந்த வாரம் நடந்த இரசாயன தாக்குதலுக்கு சிரியாவின் அரசாங்கமே பொறுப்பு என்று குற்றஞ்சாட்டியும், அங்கு மக்களை பாதுகாக்க உரிய நடவடிக்கை தேவை என்று கோரியும் பிரிட்டன், ஐநா பாதுகாப்புச் சபையில் ஒரு தீர்மானத்தை கொண்டுவருகிறது. இதற்கு பதிலளித்துள்ள சிரியாவின் கூட்டாளியான ரஷ்யா, ஐநாவின் எந்தவொரு தீர்மானத்தையும் கொண்டுவருவதற்கு முன்னதாக, சிரியாவில் உள்ள ஐநா இரசாயன ஆயுத பரிசோதகர்கள் அவர்களது பணியை முடித்தாக வேண்டும் என்று கூறியுள்ளது. பாதுகாப்பு குறித்த கரிசனைகளால் தமது நடவடிக்கைகள் தாமதமடைந்ததை அடுத்து முன்னதாக டமாஸ்கஸில் பரிசோதகர்கள், தமது பணியை மீண்டும் ஆரம்பித்துள்ளனர். அவர்கள் தமது புலனாய்வை முடிப்பதற்கு 4 நாட்களாவது ஆக…

    • 3 replies
    • 657 views
  8. பேஸ் புக் எனப்படும் முகநூல் பயன்பாட்டாளர்கள் குறித்த தகவல்களை தரும்படி கோரும் உலக நாடுகளின் பட்டியலில் இந்தியா இரண்டாவது இடத்தில் இருப்பதாக முகநூல் நிறுவனம் தெரிவித்திருக்கிறது. முகநூல் நிறுவனம் தனது செயற்பாடுகள் தொடர்பான வெளிப்படைத்தன்மை அறிக்கையில் இதை தெரிவித்திருக்கிறது. முகநூல் நிறுவனத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ள தகவல்களின் அடிப்படையில் உலக அளவில் அதிகபட்சமாக முகநூலர்களின் தகவல்களைக் கோரும் நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா, கேனடா ஆகிய இருநாடுகளும் இணைந்து முதல் இடத்தில் இருக்கின்றன. அடுத்த இரண்டாவது இடத்தில் இந்தியா இருப்பதாக முகநூல் நிறுவனம் தெரிவித்திருக்கிறது. 2013 ஆம் ஆண்டின் முதல் ஆறுமாத காலத்தில் மட்டும் இந்தியா 3245 வேண்டுகோள்களை முகநூல் நிறுவனத்த…

  9. ஒரு ஆண்டு நீடித்த விசாரணைகளுக்குப் பிறகு படகு மூலம் ஆட் கடத்தல் செய்யும் 5 ஆண்களை ஆஸ்திரேலிய போலீசார் கைது செய்துள்ளனர். அகதிகளை ஆஸ்திரேலியாவுக்கு ஏற்றி வந்த 132 படகுப் பயணங்களை இவர்கள் ஏற்பாடு செய்தவர்கள் அல்லது அது தொடர்பில் முக்கிய பங்காற்றியவர்கள் என்று ஆஸ்திரேலிய போலீசார் தெரிவிக்கின்றனர். கைது செய்யப்பட்டவர்களில் மூவர் ஆப்கானியர்கள். ஒருவர் இரானியர். ஐந்தாவது நபர் பாகிஸ்தானியர். இவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளனர். படகுகள் மூலம் ஆஸ்திரேலியாவுக்கு வந்து அகதித் தஞ்சம் கோருபவர்களின் எண்ணிக்கை சமீப காலங்களில் வெகுவாக உயர்ந்தது. இதையடுத்து அகதிப் படகுகளுக்கு எதிராக கடும் நடவடிக்கைகளை அறிவித்த ஆஸ்திரேலிய அரசு, படகுகளில் வருபவர்கள் நாட்டினுள் அனுமதிக்கப்பட ம…

  10. இந்தியன் முஜாஹிதீன் அமைப்பின் தலைவரை கைது செய்துள்ளதாக இந்திய உள்துறை அமைச்சர் சுஷில் குமார் ஷிண்டே தெரிவித்துள்ளார். இந்தியாவில் சமீப காலங்களில் நடைபெற்ற பல தொடர் குண்டுவெடிப்புகளுக்கு இந்த அமைப்பு மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இதன் தலைவர் யாசின் பட்கால் இந்திய நேபாள எல்லைக்கு அருகே புதன்கிழமை இரவு கைது செய்யப்பட்டதாகவும் அவர் தற்போது பிகார் மாநிலத்தில் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளதாகவும் உள்துறை அமைச்சர் தெரிவித்தார். யாசின் பட்கால் சமீப ஆண்டுகளில் புனா, பெங்களூர், ஐதிராபாத் போன்ற ஆண்டுகளில் நடைபெற்ற குண்டு வெடிப்புகளுக்கு இந்த அமைப்பின் மீது பழி போடப்பட்டுள்ளது. இத்தாக்குதல்களில் பலர் கொல்லப்பட்டதுடன், நூற்றுக்கணக்கானோர் காயமடைந்தனர். யாசின் பட்கால் உடனிரு…

  11. பெய்ஜிங்: பிளாக் நடத்துவதாக கூறி அதன் மூலம் விபச்சாரத்தை நடத்தி வந்த சீன அமெரிக்கர் உள்பட 27 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர். அந்த நபரின் பெயர் ஸூ சார்லஸ் பி சுவான். 60 வயதாகிறது இவருக்கு. பிரபலமான நபர். இவரது பிளாக்குக்கு 1.2 கோடி பாலோயர்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இவரை பெய்ஜிங் மாவட்டம் சாயோங் என்ற இடத்தில் வைத்து போலீஸார் கைது செய்தனர். குரூப் செக்ஸ் விருந்துகளுக்கு இவர் ஏற்பாடு செய்து விபச்சாரத் தொழிலை நடத்தி வந்ததாக போலீஸார் குற்றம் சாட்டியுள்ளனர். இவருடன் சேர்த்துக் கைதானவர்களில் 18 பேர் பெண்கள் ஆவர். http://tamil.oneindia.in/news/2013/08/29/world-ace-microblogger-held-prostitution-in-china-182305.html

  12. மாஸ்கோ: இந்தியாவுக்கு மேலும் 6 மிக்-29 ரக போர் விமானங்களை ரஷ்யா வழங்க உள்ளது. இது தொடர்பாக ரஷ்யாவின் மிக் விமான தயாரிப்பு நிறுவனத்தின் இயக்குநர் செர்கெய் கரோட்ட்கோவ் கூறுகையில், 2015ம் ஆண்டுக்குள் இந்தியாவுக்கு மேலும் 29 போர் விமானங்கள் வழங்கப்படும். கடந்த ஆண்டு 4 விமானங்களை அனுப்பி வைத்திருக்கிறோம். நடப்பாண்டில் 6 போர் விமானங்களை அனுப்பி வைக்க இருக்கிறோம் என்றார். இந்தியாவுடன் மிக் நிறுனம் 29 போர் விமானங்கள் தயாரிப்புக்காக 2010ம் ஆண்டு 1.5 பில்லியன் டாலர் மதிப்பிலான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டிருந்தது. இதற்கு முன்பு 2004ஆம் ஆண்டு 16 மிக் ரக போர் விமானங்களுக்காக இந்தியாவுடன் மிக் நிறுவனம் ஒப்பந்தம் செய்திருந்தது. http://tamil.oneindia.in/news/2013/08/29/world-russia-del…

  13. கொல்கத்தா: கூர்க்காலாந்து தனி மாநில கோரிக்கை விஸ்வரூபமெடுத்ததின் பின்னணியில் சீனா இருப்பதாக உளவுத்துறை திடுக்கிடும் தகவலை வெளியிட்டிருக்கிறது. மேற்கு வங்கத்தில் இருந்து டார்ஜிலிங் மலைபிரதேசத்தை சுற்றிய பகுதிகளை தனியே பிரித்து கூர்க்காலாந்து தனி மாநிலம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை நீண்டகாலமாக இருந்துவருகிறது. அண்மையில் தெலுங்கானா தனி மாநிலம் அமைக்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்ததைத் தொடர்ந்து கூர்க்காலாந்து போராட்டம் விஸ்வரூபமெடுத்தது. ஆனால் மாநில முதல்வர் மமதா பானர்ஜியோ இந்தப் போராட்டத்தை ஏற்க முடியாது என்று கூறி ஒடுக்குவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டார். இந்த நிலையில் அண்மைக்காலமாக கூர்க்காலாந்து தனி மாநில கோரிக்கை விஸ்வரூபமெடுத்திருப்பதன் பின்னணியில் …

  14. இந்த மனு நீதிபதிகள் ஜி.எஸ்.சிங்வி, வி.கோபால கவுடா ஆகியோர் அடங்கிய பெஞ்ச் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஹரிஷ் சால்வே, இந்த விவகாரத்தில் தேசிய பாதுகாப்பு சம்பந்தப்பட்டு இருப்பதால், மூடிய அறைக்குள் வாதங்களை எடுத்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன் என்றார். இதை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், மூடிய அறைக்குள் மத்திய அரசின் வாதம் கேட்கப்படும் என்றார். இதைத் தொடர்ந்து இன்று சுமார் 2 மணி நேரம் மூடிய அறையில் வழக்கு விசாரணை நடைபெற்றது. இரண்டு சொலிசிடர் ஜெனரல், சிபிஐ மற்றும் வருமான வரித் துறை அதிகாரிகள், உள்துறை அமைச்சக அதிகாரிகள் மட்டுமே நீதிமன்றத்துக்குள் அனுமதிக்கப்பட்டனர். விசாரணை முடிவடைந்த நிலையில், அடுத்த கட்ட விசாரணை அக்டோபர்…

  15. பேஸ் புக் எனப்படும் முகநூல் பயன்பாட்டாளர்கள் குறித்த தகவல்களை தரும்படி கோரும் உலக நாடுகளின் பட்டியலில் இந்தியா இரண்டாவது இடத்தில் இருப்பதாக முகநூல் நிறுவனம் தெரிவித்திருக்கிறது. முகநூல் நிறுவனம் தனது செயற்பாடுகள் தொடர்பான வெளிப்படைத்தன்மை அறிக்கையில் இதை தெரிவித்திருக்கிறது. முகநூல் நிறுவனத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ள தகவல்களின் அடிப்படையில் உலக அளவில் அதிகபட்சமாக முகநூலர்களின் தகவல்களைக் கோரும் நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா, கனடா ஆகிய இருநாடுகளும் இணைந்து முதல் இடத்தில் இருக்கின்றன. அடுத்த இரண்டாவது இடத்தில் இந்தியா இருப்பதாக முகநூல் நிறுவனம் தெரிவித்திருக்கிறது. 2013 ஆம் ஆண்டின் முதல் ஆறுமாத காலத்தில் மட்டும் இந்தியா 3245 வேண்டுகோள்களை முகநூல் ந…

  16. சென்னை: தமிழகத்தின் முக்கிய நகரங்களில் நாசவேலையை செய்வதற்காக 40 கிலோ வெடி பொருட்களுடன் பாகிஸ்தான் தீவிரவாதிகளின் ஸ்லீப்பர் செல்கள் பதுங்கியுள்ளதாக அதிர்ச்சியூட்டும் தகவல்கள் வெளியாகியுள்ளன. மும்பையில் நடந்த தீவிரவாதிகள் தாக்குதல் சம்பவம் போல மீண்டும் ஒரு தாக்குதலுக்கு பாகிஸ்தான் தீவிரவாதிகள் திட்ட மிட்டிருப்பதாக மத்திய உளவு பிரிவினர் தொடர்ந்து எச்சரிக்கை விடுத்து வருகின்றனர். நெல்லை மேலாப்பாளையத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்பு 17½ கிலோ மட்டும் சிக்கிய நிலையில் மீதமுள்ள வெடி பொருட்கள் வேறு எங்காவது பதுக்கி வைக்கப்பட்டுள்ளதா? என்று போலீசார் தீவிரமாக தேடத் தொடங்கியுள்ளனர் . கடலோர தாக்குதல் தமிழகத்தில் மதுரை, ராமேஸ்வரம், தூத்துக்குடி, மயிலாடுதுறை போன்ற முக்கிய நகரங…

  17. இந்தியாவில் 65 தீவிரவாத குழுக்கள் இருப்பதாக மக்களவையில் தெரிவிக்கப்பட்டது. மக்களவையில் நேற்று கேள்வி நேரத்தின்போது கேள்வி ஒன்றுக்கு பதில் அளித்த உள்துறை இணை அமைச்சர் ஆர்.பி.என்.சிங் கூறியதாவது: நாட்டில் 65 தீவிரவாத குழுக்கள் செயல்படுவதாக அடையாளம் காணப்பட்டுள்ளது. இவற்றில் அதிகபட்சமாக 34 குழுக்கள் மணிப்பூர் மாநிலத்தில் உள்ளன. காஷ்மீரில் லஷ்கர்,இ,தொய்பா உட்பட 5 குழுக்கள் செயல்படுகின்றன. இந்த குழுக்கள் ஆந்திரா, கேரளா, கர்நாடகா, உ.பி,மகாராஷ்டிரா, குஜராத், ராஜஸ்தான், டெல்லி போன்ற மாநிலங்களில் தீவிரமாக செயல்படுகின்றன.இந்தியாவில் தீவிரவாத செயல்களில் ஈடுபடும் குழுக்களுக்கு வெளிநாடுகளில் இருந்து நிதியுதவியும் கிடைப்பதாக உளவுத்துறை தகவல்கள் தெரிவிக்கின்றன.இவ்வாறு ஆர்.பி.என்.சிங் கூ…

  18. ஜகர்தா: பெண்களை கவர்ச்சிப் பொருளாக வெளிப்படுத்தும் உலக அழகிப் போட்டியை இந்தோனேசியாவில் நடத்தக் கூடாது என்று இஸ்லாமிய மதக்குருக்கள் தெரிவித்துள்ளனர். இந்தோனேசியாவில், முஸ்லிம்களின் எண்ணிக்கை அதிகம். வரும் செப்டம்பர் மாதம், இங்குள்ள பாலித்தீவில், உலக அழகி போட்டி நடக்க உள்ளது. 137 பேர் இந்த போட்டியில் பங்கேற்கின்றனர். இந்த மாதம் தொடக்கத்தில் இந்தோனேசியாவின் மிகவும் செல்வாக்கு உள்ள உலமா சபையின் இஸ்லாமிய மதக்குருக்களின் உயர் மட்டம் கூட்டம் நடந்தது. அந்த கூட்டத்தில், பெண்கள் தங்களின் தோலை காட்டி நடந்து வரும் இப்போட்டியானது இஸ்லாமிய மதக்கோட்பாடுகளுக்கு எதிரானது என்பதால், இப்போட்டியை இந்தோனேசியாவில் நடத்தக்கூடாது என்று முடிவெடுக்கப்பட்டது. 137 நாடுகளைச் சேர்ந்த அழகிகள் பங்கேற்க…

    • 1 reply
    • 485 views
  19. மும்பை: அமெரிக்க டாலருக்கு இணையான இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத வகையில் 68.75ஐ தொட்டு பின்னர் சற்றே மீண்டு 67.67 என்ற நிலைக்குத் திரும்பியது. கடந்த மே மாதத்துக்குப் பின் இந்திய ரூபாயின் மதிப்பு பெரும் வீழ்ச்சியை எதிர்கொண்டு வருகிறது. ஒவ்வொரு நாளும் வீழ்ச்சி மதிப்பு தொடர்ந்து உயர்ந்து கொண்டே செல்கிறது. நேற்றைய வர்த்தகத்தில் ரூபாயின் மதிப்பு 66 ஐத் தாண்டியது. இந்த நிலையில் இன்று காலை வர்த்தகத்தின் தொடக்கத்தில் ரூபாயின் மதிப்பு 66.90-ல் தொடங்கி 67ஐத் தொட்டது. இதைத் தொடர்ந்து சிறிது நேரத்திலேயே 67.98ஐ எட்டியது. பின்னர் 68ஐயும் தாண்டி உச்சபட்சமாக 68.75ஐத் தொட்டது. இதனால் நாட்டின் பங்குச் சந்தைகள் பெரும் சரிவைக் கண்டு தலைகுப்புற கவிழ்ந்தன. இந்த நிலையில் மாலை 3 …

  20. இலங்கை அரசை கொமன்வெல்த் அமைப்பிலிருந்து நீக்கிட இந்தியா உறுப்பு நாடு என்ற முறையில் அழுத்தம் கொடுக்க வேண்டுமென்றும், கொமன்வெல்த் மாநாட்டை இந்திய அரசு ஒட்டுமொத்தமாக புறக்கணிக்க வேண்டுமென்றும் இந்திய பிரதமருக்கு அனுப்பி வைக்க இந்தியப் பூரான்கள் இயக்கம் சார்பில் இரத்தக் கையெழுத்து இயக்கம் இன்று காலை புதுச்சேரி தலைமை தபால் நிலையத்தில் நடைபெற்றது. இந்த முகாமிற்கு இயக்கத்தின் தலைவர் பூரான். வீ. போன்ஸ் ரமேஷ் தலைமைத் தாங்கினார். செந்தமிழர் இயக்கத்தின் தலைவர் நா.மு.தமிழ்மணி, தமிழக வாழ்வுரிமைக் கட்சி அமைப்பாளர் சிறிதர் ஆகியோர்கள் முன்னிலை வகித்தார்கள். நாளை இந்த இரத்த கையெழுத்துக்கள் பிரதமருக்கு அனுப்பிவைக்கப்படும் என தெரிவிக்கப்படுகின்றது. http://www.sankathi24.com/news/32614/64…

  21. கௌதம புத்தரின் அன்ன பாத்திரம் என்று கூறப்படும் ஒரு பாத்திரத்தை ஆப்கானிஸ்தானில் இருந்து பெற்று வரவேண்டும் என்று இந்தியாவின் பிஹார் மாநிலத்தைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் ரகுவன்ஷ பிரசாத் சிங் என்பவர் இந்திய அரசாங்கத்தைக் கோரியுள்ளார். புத்தபெருமான் தான் பரிநிர்வாணம் (ஞானம்) அடைவதற்கு முன்னதாக இந்தப் பாத்திரத்தை பயன்படுத்தியதாக கூறும் அந்த நாடாளுமன்ற உறுப்பினர், புத்த மதம் செழித்திருந்த கனிஷ்கரின் காலப்பகுதியில், இந்தப் பாத்திரம் வைசாலியில் இருந்து அவரின் தலைநகரான புருஷபுத்ரா அதாவது தற்போதைய பெஷாவர் நகருக்கு போனதாகவும், அங்கிருந்து அது காந்தகாருக்கு போயிருக்கும் என்றும் கூறுகிறார். தற்போது அந்தப் பாத்திரம் காபூல் தேசிய அருங்காட்சியகத்தில் பொதுமக்களின் பார்வைக்கு வைக்க…

  22. இந்து மத கலைக்களஞ்சியம் (Encylopedia of Hinduism) என்ற புத்தகத் தொகுப்பு ஒன்று திங்களன்று அமெரிக்காவின் தெற்கு கரோலினா பல்கலைக்கழகத்தில் சர்வதேச ரீதியில் வெளியிடப்பட்டுள்ளது. 25 ஆண்டு காலமாக ஆயிரத்துக்கும் மேற்பட்ட எழுத்தாளர்கள் இந்து மதத்தின் பல்வேறு அம்சங்கள் குறித்தும் எழுதிய சுமார் ஏழாயிரம் கட்டுரைகளின் 11 நூல்கள் கொண்ட தொகுப்பாக இந்த கலைக்களஞ்சியம் அமைந்துள்ளது. 25 வருட உழைப்பின் பலன் இது கலைக்களஞ்சியத்தின் இணை ஆசிரியர்களில் ஒருவரான ரோசஸ்டெர் தொழில்நுட்ப மைய பேராசிரியர் டாக்டர் வி வி ராமன் இந்து மதத்தின் அடிப்படை நம்பிக்கைகள், சித்தாந்தங்கள், வழிபாட்டு முறைகள் போன்றவை குறித்து இந்தக் கலைக்களஞ்சியம் பேசுகிறது. தவிர இந்து மதம் சார்ந்த இந்திய சரித்…

  23. டெல்லி: ரூபாய் மதிப்பு, பொருளாதார தடுமாற்றம், பங்குச் சந்தை சரிவு போன்றவற்று முன்னாள் நிதி அமைச்சரான தற்போதைய ஜனதாதிபதி பிரணாப் முகர்ஜியே காரணம் என்று நிதி அமைச்சர் ப. சிதம்பரம் மீண்டும் குற்றம்சாட்டியுள்ளார். ரூபாய் மதிப்பு சரிவு, பொருளாதார தடுமாற்றம் போன்றவற்றுக்கு பொதுவாக சர்வதேச பொருளாதார சூழ்நிலையை காரணமாக சொல்வார் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம். ஆனால் அண்மைக்காலமாக உள்நாட்டு நடவடிக்கைகளும்கூட இந்த சிக்கல்களுக்குக் காரணம் என்று பேசி வருகிறார் ப. சிதம்பரம். ராஜ்யசபாவில் நேற்று ரூபாய் மதிப்பு சரிவு தொடர்பாக பேசிய ப.சிதம்பரம், 2009-11ஆம் ஆண்டு காலத்தில் நடப்பு கணக்கு பற்றாக்குறையை கையாண்ட விதத்தில் குறைபாடு இருப்பதாக சுட்டிக்காட்டினார். அதாவது அப்போது நிதி அமைச்சரா…

  24. கொல்கத்தா: மேற்கு வங்க கல்லூரி ஒன்றில் தேர்வு எழுதிய ஆளும் திரிணாமூல் காங்கிரஸ் கட்சி தலைவரின் மனைவியை காப்பியடிக்க விடாததால் கல்லூரி முதல்வர் உள்பட 3 ஆசிரியர்கள் தாக்கப்பட்டனர். மேற்கு வங்க மாநிலம் வடக்கு தினாஜ்புர் மாவட்டத்தில் உள்ள இதாஹரில் செயல்பட்டு வருகிறது மேக்நாத் சாஹா கல்லூரி. அந்த கல்லூரியில் அப்பகுதியைச் சேர்ந்த திரிணாமூல் காங்கிரஸ் தலைவரின் மனைவி தேர்வு எழுதினார். தேர்வு அறையில் அவர் காப்பியடித்துள்ளார். இதைப் பார்த்த ஆசிரியர் இது குறித்து கல்லூரி முதல்வர் ஸ்வப்னா முகர்ஜியிடம் தெரிவித்துள்ளார். அந்த பெண்ணின் விடைத்தாளை வாங்கிவிட்டு அனுப்புமாறு முதல்வர் தெரிவித்துள்ளார். இதையடுத்து வினாத்தாள் பறிக்கப்பட்டுள்ளது. இந்த தகவல் அறிந்ததும் 10 முதல் 12 பேர் கல்லூரிக…

  25. மும்பை: இந்திய ரூபாயின் மதிப்பு நடப்பாண்டில் மட்டும் 20% சரிவை எதிர்கொண்டு நாட்டின் பொருளாதாரத்தை பெரும் வீழ்ச்சிக்கு தள்ளிவிட்டிருக்கிறது. இந்திய ரூபாயின் மதிப்பு மெல்ல மெல்ல சரிவை எதிர்கொண்டு வந்து கடந்த சில மாதங்களாக வரலாறு காணாத வீழ்ச்சியை நாள்தோறும் எதிர்கொண்டு வருகிறது. கடந்த சில நாட்களாகவோ மணிக்கொரு வீழ்ச்சியை இந்திய ரூபாய் சந்தித்து வருகிறது. இன்று இதுவரை இல்லாத வகையில் இந்திய ரூபாயின் மதிப்பு 68ஐ தாண்டிச் சென்றுவிட்டது. விரைவில் இது 70ஐயும் கடக்கும் என்று தெரிகிறது. http://tamil.oneindia.in/news/2013/08/28/india-rupee-has-lost-over-20-this-year-182241.html

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.