உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26681 topics in this forum
-
இந்திய கடற்படை நீர் மூழ்கிக் கப்பலில் பெரும் வெடி விபத்து: 18 வீரர்களைக் காணவில்லை!! மும்பை: நேற்று நள்ளிரவு தெற்கு மும்பை கடல் பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த இந்திய கடற்படைக்கு சொந்தமான கப்பலில் திடீர் என பெரும் வெடி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் காணாமல் போன 18 வீரர்களைத் தேடும் பணி நடை பெற்று வருகிறது. தெற்கு மும்பை கடற்படை தளத்தில் நிறுத்தப்பட்டிருந்தது இந்திய கடற்படைக்கு சொந்தமான ஐ.என்.எஸ். சிந்து ராக்சாக் நீர் மூழ்கி கப்பல். நேற்று நள்ளிரவு திடீரென இக்கப்பலில் தீவிபத்து ஏற்பட்டது. உடனடியாக அருகில் இருந்த மற்றொரு கப்பல் பாதுகாப்பான இடத்திற்கு கொண்டு செல்லப்பட்டதால் அதன் சேதாரம் தவிர்க்கப்பட்டது. விபத்து பற்றிய தகவல் அறிந்ததும் 16 தீயணைப்பு வாகனங்க…
-
- 27 replies
- 1.9k views
-
-
இந்தியாவின் பீஹார் மாநிலத்தில் உள்ள புத்தகாயா பகுதியின் அமைந்துள்ள மகாபோதி விகாரை பிரதேசத்தில் நடந்த தொடர் குண்டு வெடிப்புச் சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக இந்திய பொலிஸார் தெரிவித்தனர். இந்த சம்பவம் தொடர்பாக இந்திய மத்திய புலனாய்வு விசாரணைப் பிரிவினர் விசாரணைகளை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்துடன் தொடர்புடையவர் எனக் கூறப்படும் இந்து பூசகரான அருப் பிரக்மாச்சாரி என்பவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். சம்பவத்தின் பின்னர், இந்த நபர் பொலிஸாரிடம் சிக்காது தலைமறைவாக இருந்து வந்துள்ளார். கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர் புத்தகாயா பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டு விசாரைணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். மேற்படி சம்பவம் தொடர்பில் இந்திய பொ…
-
- 0 replies
- 299 views
-
-
இந்தோனேசியாவில் எரிமலை வெடித்ததில் கடற்கரையில் நடந்து சென்று கொண்டிருந்த சிறுவர்கள் உள்பட 6 பேர் கருகி பலியாகினர். அந்த பகுதியில் இருந்து 3000 பேர் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர். இந்தோனேசியாவின் கிழக்கு பகுதியில் அமைந்துள்ளது நூசா டெங்காரா மாகாணம். இங்கு பலாவூ தீவின் மைய பகுதியில் ரொகடென்டா எரிமலை உள்ளது. கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் முதலே இந்த எரிமலை குமுறிக் கொண்டிருந்தது. இந்நிலையில் நேற்று முன்தினம் எதிர்பாராதவிதமாக அதன் நெருப்பு குழம்புகள் வெடித்து சிதறின. எரிமலையில் இருந்து நெருப்பு கற்கள் சிதறியதில் அருகில் இருந்த கடற்கரை கிராமமான ரோகிரோலேவில் தீ விபத்து ஏற்பட்டது. இதில் கடற்கரை பகுதியில் இருந்த 2 குழந்தைகள் உள்பட 6 பேர் நெருப்பு கற்கள் பட்டதில் சம்பவ இடத்திலேயே உ…
-
- 1 reply
- 441 views
-
-
லண்டன்: இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் உரையாற்ற குஜராத் முதலமைச்சர் நரேந்திர மோடிக்கு அந்நாட்டின் 2 கட்சி எம்.பி.க்கள் அழைப்பு விடுத்துள்ளனர். இங்கிலாந்தில் ஆளும் கட்சியான கன்சர்வேட்டிவ் கட்சியும், எதிர்க்கட்சியான தொழிலாளர் கட்சியும், நரேந்திர மோடிக்கு தனித்தனியே அழைப்பு விடுத்துள்ளன. தொழிலாளர் கட்சியைச் சேர்ந்த எம்.பி. பாரி கார்டினர், இதுதொடர்பாக மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார். இங்கிலாந்து நாடாளுமன்றத்தின் காமன்ஸ் அவையில் நவீன இந்தியாவின் எதிர்காலம் என்ற தலைப்பில் உரை நிகழ்த்துமாறு மோடியை அவர் கேட்டுக் கொண்டுள்ளார். இதேபோல், ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் சைலேஷ் வாராவும், காமன்ஸ் அவையில் உரை நிகழ்த்த நரேந்திர மோடிக்கு அழைப்புக் கடிதம் அனுப்…
-
- 4 replies
- 436 views
-
-
விளையாட்டுத்துறையில் ஊக்க மருந்துப் பரிசோதனையில் கடந்த இரண்டு ஆண்டுகளில் 200க்கும் மேற்பட்ட இந்திய விளையட்டு வீரர்கள் தோல்வியடைந்துள்ளனர் என்று விளையாட்டுத்துறை அமைச்சர் ஜிதேந்திர சிங் நாடாளுமன்றத்தின் தெரிவித்துள்ளார். இது பல மட்டங்களில் கவலையையும், கலக்கத்தையும் ஏற்படுத்தியுள்ளது. ஊக்க மருந்து பரிசோதனையில் சிக்கிய இந்திய தொடரோட்ட வீரர்கள். அதிலும் குறிப்பாக பளுதூக்கும் வீரர்களே கடந்த இரண்டு ஆண்டுகளில் ஊக்க மருந்து பரிசோதனையில் தோல்வியடைந்துள்ளனர் என்று அமைச்சர் கூறினாலும், 2009 ஆம் ஆண்டு முதல் இந்த எண்ணிக்கை குறைந்து வருகிறது என்று, இந்திய பளுதூக்கும் சம்மேளனம் கூறுகிறது. சிறிய அளவில் பயன்படுத்தினாலும், கண்டுபிடிக்க வழிமுறைகள் உள்ளன. பளுதூக்கும் வீரர்கள் பெரு…
-
- 0 replies
- 362 views
-
-
விக்கிலீக்ஸ் இணையதளத்திற்கு அமெரிக்காவின் ரகசிய தகவல்களை அளித்த பிராட்லி மேன்னிங்கிற்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்க வேண்டும் என பரிந்துரைத்து அவரது ஆதரவாளர்கள் 1 லட்சத்து 3 ஆயிரம் பேர் கையொப்பமிட்டுள்ளனர். ஜூலியன் அசாஞ்சேவால் தொடங்கப்பட்ட விக்கிலீக்ஸ் இணையதளத்திற்கு அமெரிக்காவின் ரகசிய ராணுவ அறிக்கைகள்,இதர நாடுகளில் உள்ள அமெரிக்க தூதர்கள் அனுப்பிய ரகசிய கடிதங்களை அளித்தவர் பிராட்லி மேன்னிங்(25).இந்த குற்றச்சாட்டுக்கு அவர் மீது தொடுக்கப்பட்ட வழக்கில் 90 ஆண்டு சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில், பிராட்லி மேன்னிங்கிற்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்க வேண்டும் என அவரது ஆதரவாளர்கள் பரிந்துரை செய்த கையெழுத்து பிரதிகள் நார்வேயில் உள்ள நோபல் பரிசு அறக்…
-
- 0 replies
- 335 views
-
-
எகிப்தில் பதவியிலிருந்து விலக்கப்பட்ட அதிபர் மொஹமத் மோர்ஸியின் ஆதரவாளர்களால் அமைக்கப்பட்டுள்ள போராட்ட முகாம்களை அகற்றும் நடவடிக்கைகளில் பாதுகாப்பு படையினர் ஈடுபட்டுள்ளனர். இந்த நடவடிக்கையின் காரணமாக பலர் உயிரிழந்திருக்கலாம் என்றும் செய்திகள் கூறுகின்றன. அங்குள்ள ராபா அல் அடாவியா பள்ளிவாசலுக்கு வெளியே இருக்கும் ஒரு போராட்ட முகாமுக்கு அருகிலிருக்கும் பிபிசியின் செய்தியாளர் ஒருவர் அங்கு துப்பாக்கிச் சூடுகள் நடத்தப்பட்டு கண்ணீர் புகை குண்டுகளும் வீசப்படுவதாக கூறுகிறார். அங்கு வீதிகளில் டயர்கள் எரிக்கப்படுகின்றன, வான் வெளியில் ஹெலிக்காப்டர்கள் வட்டமிட்ட வண்ணம் உள்ளன. போரட்டம் நடைபெற்ற மற்றொரு இடமான அல் நஹ்டா சதுக்கத்தில் இருந்தவர்கள் ஏற்கெனவே அகற்றப்பட்டுள்ளனர். இஸ்லாமிய …
-
- 0 replies
- 501 views
-
-
சென்னை: லண்டனில் நடக்கும் சர்வதேச பட விழாவில் பாலா இயக்கிய பரதேசி படம் எட்டு பிரிவுகளில் விருதுகளுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. ‘சேது' துவங்கி ‘பரதேசி' வரை ஆறு படங்களை இயக்கியுள்ள பாலா, ‘நான் கடவுள்' படத்துக்காக சிறந்த இயக்குனருக்கான தேசிய விருதையும், மற்ற படங்களுக்காக நான்கு தேசிய விருதுகளையும், ஆறு சர்வதேச தமிழ்த் திரைப்பட விருதுகளையும், பல மாநில விருதுகளையும் பெற்றுள்ளார். பி.எச். டேனியல் எழுதிய ‘ரெட் டீ' என்ற ஆங்கில நாவலை மொழிபெயர்த்து தமிழில் வெளிவந்த ‘எரியும் பனிக்காடு' என்ற நாவலை அடிப்படையாக கொண்டு ‘பரதேசி' படத்தை பாலா உருவாக்கினார். கடந்த மார்ச் மாதம் உலகெங்கிலும் வெளியான பரதேசியின் சிறப்பைப் பார்த்து பிரமித்த இந்திப்பட இயக்குனர் அனுராக் காஷ்யப் வடஇந்தியா முழ…
-
- 0 replies
- 431 views
-
-
மணிலா: தமிழக மழையை உள்வாங்கிக் கொள்கிறது தென்சீனக் கடல் புயல் என்று வானிலை ஆய்வு மைய இயக்குநர் ரமணன் கூறியிருந்தார். அவர் சொன்ன புயல் தற்போது தென் சீனாவையும் பிலிப்பைன்ஸையும் பதம் பார்த்து வருகிறது. தென் சீனக் கடலில் மையம் கொண்டுள்ள புயலால் இதுவரை இல்லாத அளவு மழை தென் சீனப் பகுதியிலும் பிலிப்பைன்ஸிலும் பதிவாகி இருக்கிறதாம். கொட்டும் கனமழையால் ஹாங்காங் மற்றும் பிலிப்பைன்ஸில் மரங்கள் வேரோடு சாய்ந்து வீழ்ந்துள்ளன. கடல் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. விமானப் போக்குவரத்து முற்றாக நிறுத்தப்பட்டுள்ளன. ஹாங்காங் பங்குச் சந்தை வர்த்தகம் மூடப்பட்டுள்ளது. சுமார் ஒரு லட்சம் பேர் பாதுகாப்பான இடங்களுக்கு இடம்பெயர வைக்கப்பட்டுள்ளனர். அண்மையில்தான் பிலிப்பைன்ஸை பெரும் புயல் …
-
- 0 replies
- 309 views
-
-
பிரபலங்களின் ட்விட்டர் பக்கங்கள் அரசியல்: கலைஞர் கருணாநிதி : https://twitter.com/kalaignar89 செய்தி ஆசிரியர்கள்: என் ராம் (ஹிந்து) - https://twitter.com/nramind நடிகர்கள்: சிலம்பரசன் : https://twitter.com/iam_STR மாதவன் : https://twitter.com/ActorMadhavan சரத்குமார் : https://twitter.com/realsarathkumar பார்த்தீபன் : https://twitter.com/rparthiepan அரவிந்த்சாமி : https://twitter.com/thearvindswami அதர்வா முரளி : https://twitter.com/Atharvaamurali ஜெயம் ரவி : https://twitter.com/actor_jayamravi ஜீவா : https://twitter.com/Actorjiiva தனுஷ் : https://twitter.com/dhanushkraja நடிகைகள்: ஹன்சிகா : https://twitter.com/ihansika நமீதா : https://…
-
- 0 replies
- 508 views
-
-
நட்புறவை புதுப்பிக்க புதிதாக பேச்சுவார்த்தை தொடங்குவோம்: இந்தியாவிற்கு ஷெரீப் அழைப்பு இஸ்லாமாபாத், ஆக. 13- இந்திய எல்லைக்குள் அதிகாலை அத்துமீறி நுழைந்த பாகிஸ்தான் ராணுவத்தினர் சமீபத்தில் 5 வீரர்களை சுட்டுக்கொன்றனர். அதோடு மட்டுமில்லாமல் தொடர்ந்து எல்லையில் தாக்குதல் நடத்தியும் வருகின்றனர். இதனால், எல்லையில் ஒரு வாரத்திற்கு மேலாக பதட்டம் நிலவி வருகிறது. போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி செயல்படுவதாக இரு நாடுகளும் பரஸ்பரம் குற்றம் சாட்டி வருகின்றன. இரு நாடுகளும் சுதந்திரத் தினத்தை கொண்டாடவுள்ள நிலையில், பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப், இந்திய பாகிஸ்தான் நட்புறவை மீண்டும் புதிதாக தொடங்குவதற்கு அழைப்பு விடுத்துள்ளார். இதுகுறித்த அவரது அறிக்கையை செய்தி நிறுவனம்…
-
- 0 replies
- 348 views
-
-
இம்பால்: இந்தியா- மியான்மர் எல்லையில் முறையான அளவீடு மேற்கொள்ளப்படாமல் எல்லை வேலி அமைக்கப்படும் பணிகள் நடைபெறுவதால் மோரே தமிழர் கோயில் உட்பட 40 இந்திய கிராமங்கள் மணிப்பூருக்குள் போகும் அபாயம் எழுந்துள்ளதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக மணிப்பூர் ஐக்கிய கமிட்டியினர் கூறுகையில், மியான்மருடனான எல்லை பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டும். அப்படி தீர்வு காணாமல் எல்லை வேலி அமைப்பதால் 40க்கும் மேற்பட்ட கிராமங்கள் மியான்மருக்குள் போகக் கூடிய அபாயம் இருக்கிறது. இதனால் அவர்களது எதிர்காலம் கேள்விக்குறியாகிவிடும். இதனால் எல்லை வேலி அமைக்கும் பணியை உடனே நிறுத்தி இருநாட்டு அதிகாரிகளும் இணைந்து கூட்டு சர்வே மேற்கொள்ளப்பட வேண்டும் என்றார். இதனிடையே மோரேவில் அமைக்கப்பட்டு வரும் எல்லை வேலியை க…
-
- 0 replies
- 402 views
-
-
பெங்களூர்: தமிழக முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கில் திமுக தரப்பில் திடீரென மனுத்தாக்கல் செய்யப்பட்டு தங்களையும் வாதாட அனுமதிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 1991-96ஆம் ஆண்டு தமிழக முதல்வராக இருந்த போது வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்தார் ஜெயலலிதா என்பது வழக்கு. இந்த வழக்கில் சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோரும் சேர்க்கப்பட்டுள்ளனர். தற்போது பெங்களூர் சிறப்பு நீதிமன்றத்தில் இந்த வழக்கு நடைபெற்று வருகிறது. இந்த வழக்கு பல முட்டுக்கட்டைகளைத் தாண்டி இறுதிக் கட்டத்தைத் தாண்டியுள்ளது. இந்த நிலையில் திமுக பொதுச்செயலாளர் க. அன்பழகன் சார்பாக திமுக எம்.பி. டி.எம். செல்வகணபதி ஒரு மனுவை பெங்களூர் நீதிமன்றத்தில் இன்று தாக்கல் செய்தார். அதில் இந்த வ…
-
- 0 replies
- 255 views
-
-
தமிழ்நாட்டின் போடிநாயக்கனூர் பகுதியில் இருக்கும் வங்கிக் கிளை ஒன்று அந்தக் கிளை மூலம் கல்விக்கடன் பெற்று, கடனைத் திரும்பத்தராத மாணவர்கள் மற்றும் அவர்களது பெற்றோர்களின் பெயர்கள் மற்றும் புகைப்படங்களை வெளியிட்டு அவர்களை அவமானப்படுத்தியதாக , மாணவர்கள் அப்பகுதியில் ஆர்ப்பாட்டம் நட்த்தியதாக செய்திகள் வந்தன. இந்த நடவடிக்கை “முற்றிலும் தவறான ஒன்று, மனித நேயமற்ற ஒரு செயல்” என்று கூறும் கல்வியாளர் எஸ்.எஸ்.ராஜகோபாலன் வறுமை காரணமாக மாணவர்கள் மேல் படிப்பு படிக்க முடியாமல் போவதற்கு அரசின் கொள்கைகளே காரணம் என்ற வகையில் , அவர்களுக்கு கடன் வழங்குவது சரியல்ல, மாறாக அவர்களுக்கு உதவித்தொகை வழங்கவேண்டும் என்றார். வங்கி மூலம் கடன் வழங்குவது என்ற முடிவெடுத்தாலும், அதற்கு உத்தரவாதம் தரும் பொ…
-
- 0 replies
- 343 views
-
-
டெல்லி: இந்திய விமானப் படைக்கு இத்தாலியின் அகஸ்டாவெஸ்ட்லாண்ட் நிறுவனத்திடம் இருந்து சொகுசு ஹெலிகாப்டர்களை கொள்முதல் செய்யதில் எந்த ஒரு விதியையுமே பின்பற்றவில்லை என்று அதிரடியாக மத்திய கணக்கு தணிக்கை துறை குற்றம்சாட்டியுள்ளது. இத்தாலியின் அகஸ்டாவெஸ்ட்லாண்ட் நிறுவனத்திடமிருந்து ஹெலிகாப்டர்கள் கொள்முதல் செய்யப்பட்டது தொடர்பான கணக்காய்வு அறிக்கை இன்று நாடாளுனன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. அதில், பாதுகாப்பு தளவாடங்களைக் கொள்முதல் செய்வதற்கென வகுக்கப்பட்ட விதிகள் இந்த கொள்முதலில் பின்பற்றப்படவில்லை. 2006ஆம் ஆண்டு பாதுகாப்பு தளவடா கொள்முதல் விதி, 2006ஆம் ஆண்டு செப்டம்பரில் கொண்டுவரப்பட்ட கொள்முதலுக்கு முந்தைய பரிசீலனை வேண்டுகோள் என அனைத்துமே இந்த கொள்முதலில் மீறப்பட்டுள்ளன என…
-
- 2 replies
- 324 views
-
-
இம்பால்: மணிப்பூரில் மாநிலப் பிரிவினை கோரி நாகா இன மக்கள் முழு அடைப்புப் போராட்டம் நடத்தி வருவதால் அம்மாநிலத்தின் பெரும்பகுதி முடங்கிப் போயுள்ளது. மணிப்பூரில் வாழும் நாகா இனத்தவர் பகுதிகளை நாகாலாந்துடன் சேர்க்க வேண்டும் என்பது ஐக்கிய நாகா கவுன்சிலின் கோரிக்கை. இதற்காக கடந்த ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு முதல் 48 மணி நேர முழு அடைப்புப் போராட்டத்துக்கு அவர்கள் அழைப்பு விடுத்திருந்தனர். இதனால் சேனாபதி, உக்ருல், சண்டல், டமங்லாங் மாவட்டங்கள் ஸ்தம்பித்து போயுள்ளன. வணிக வளாகங்கள், சந்தைகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. போக்குவரத்தும் கடுமையாக பாதிக்கப்பட்டது. சாலைகள் வெறிச்சோடிக் காணப்பட்டன. இதனிடையே குக்கி இன மக்கள் குக்கிலாந்து தனி மாநிலம் கோரி இன்று இரவு முதல் 48 மணிநேர முழு…
-
- 2 replies
- 365 views
-
-
நியூயார்க்: தமிழ் வழியில் படித்து தமிழில் முதல் மதிப்பெண் எடுக்கும் மாணவர்களுக்கு ரூ. 60,000 ரொக்கப் பரிசு வழங்க உள்ளதாக அமெரிக்க தமிழ் கல்விக் கழகம் அறிவித்துள்ளது. இது குறித்து அமெரிக்க தமிழ் கல்விக் கழகத்தின் தலைவர் அரசு செல்லையா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, அமெரிக்காவில் உள்ள தமிழர்கள் இரண்டாம் மொழிப் பாடமாக தமிழ் பாடத்தைத் தேர்வு செய்து படிக்க வேண்டும். இதற்காக கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு அமெரிக்கத் தமிழ் கல்விக் கழகம் தொடங்கப்பட்டது. அமெரிக்காவில் தற்போது 47 தமிழ்ப் பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. இதில் 35 ஆயிரம் மாணவர்கள் படித்து வருகின்றனர். ஆனால், தமிழகத்தில் தமிழ் வழியில் படிக்காமல் அனைவரும் ஆங்கில வழிக் கல்வியில் படிக்கின்றனர். மேலும், தம…
-
- 2 replies
- 403 views
-
-
வைகோ பொதுநலவாய நாடுகளிலிருந்து இலங்கையை நீக்க முயற்சிக்கும் போது ராஜபக்ஷவுக்கு மகுடம் சூட்ட இந்தியா துணை நிற்கிறது பொதுநலவாய நாடுகளிலிருந்து இலங்கையை நீக்க வேண்டும் என்று நாம் குரல் கொடுக்கும் வேளையில், ராஜபக்ஷவுக்கு மகுடம் சூட்ட இந்தியா துணை நிற்கிறது என்று வைகோ குற்றம் சுமத்தியுள்ளார். திருச்செங்கோட்டில் நேற்று திங்கள்கிழமை மதிமுக தேர்தல் நிதியளிப்புக் கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு அவர் பேசும் போதே மதிமுக பொதுச் செயலர் வைகோ இதனை தெரிவித்துள்ளார். லட்சியத்திற்கு குரல் கொடுத்துவிட்டு தண்டனை என்று வரும்போது மாற்றிப் பேசுவது கிடையாது. இலங்கையில் நிகழ்த்தப்பட்ட இனப் படுகொலைக்கு இந்தியா துணை போனது. ரேடார் மற்றும் ஆயுதங்களை இலங்கைக்கு அளித்து, ராணுவ அதிகாரிக…
-
- 1 reply
- 355 views
-
-
டெல்லி: காங்கிரஸ் கட்சி ஆளும் மாநிலங்கள் அனைத்திலுமே நில மோசடியில் சோனியாவின் மருமகன் ராபர்ட் வதேரா கைவரிசை காட்டியிருக்கிறார் என்று பாஜக மூத்த தலைவர் யஷ்வந்த் சின்ஹா சாடியுள்ளார். இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள யஷ்வந்த் சின்ஹா, சோனியா மருமகன் வதேராவின் நில மோசடி தொடர்பாக சிறப்புப் புலனாய்வுக் குழு விசாரணை நடத்த வேண்டும். ராபர்ட் வதேராவை பாதுகாக்க அரசு முயற்சிக்கிறது. அவர் ஹரியானாவில் மட்டும் நில மோசடியில் ஈடுபடவில்லை. காங்கிரஸ் கட்சி ஆளுகின்ற அனைத்து மாநிலங்களிலுமே தமது கைவரிசையை காட்டியிருக்கிறார். இது பற்றி நாடாளுமன்றத்தில் சிறப்பு விவாதம் நடத்தப்பட வேண்டும். நாடாளுமன்றத்தில் ராபர்ட் வதேராவின் பெயரை உச்சரித்தாலே போதும்.. அனைத்து காங்கிரஸ் எம்.பிக்களும் எழுந்து ந…
-
- 1 reply
- 262 views
-
-
வாஷிங்டன்: இந்தியாவில் அடுத்த ஆண்டு நடைபெறும் லோக்சபா தேர்தலில் யார் வெற்றி பெற்றாலும் அவர்களுடன் இணைந்து செயல்படுவோம் என்று அமெரிக்க அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இது பற்றி அந்நாட்டு அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் மரியே ஹர்ப் கூறுகையில், இந்திய தேர்தலில் எந்த ஒரு பக்கமும் நாம் நிற்கப் போவதில்லை. இவர்தான் வெற்றி பெற வேண்டும் என்றும் கருதவும் இல்லை. தேர்தலில் யார் வெற்றி பெற்றாலும் அவர்களுடன் நாங்கள் இணைந்து செயல்படுவோம் என்றார். http://tamil.oneindia.in/news/2013/08/13/world-will-work-with-winner-next-years-indian-elections-us-181137.html
-
- 3 replies
- 690 views
-
-
திருவனந்தபுரம்: சூரிய மின்சக்தி ஊழல் விவகாரத்தில் கேரள முதல்வர் உம்மன் சாண்டி ராஜினாமா செய்யக் கோரி திருவனந்தபுரத்தில் இடதுசாரி கட்சிகளைச் சேர்ந்த பல்லாயிரக்கணக்கானோர் ஒன்று திரண்டு தலைமைச் செயலக முற்றுகைப் போராட்டத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். சோலார் ஊழல் விவகாரத்தில் கேரள முதல்வர் உம்மன் சாண்டி பதவி விலக முடியாது என்று மறுத்து வருகிறார். அவர் பதவி விலக வேண்டும் என்று எதிர்க்கட்சியான இடது ஜனநாயக முன்னணி வலியுறுத்தி வருகிறது. இக்கோரிக்கையை வலியுறுத்தி இன்று தலைமைச் செயலக முற்றுகைப் போராட்டம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து இன்று காலை முதலே இடதுசாரிக் கட்சிகளின் தொண்டர்கள் பல்லாயிரக்கணக்கானோர் கேரள தலைமை செயலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் …
-
- 3 replies
- 444 views
-
-
லண்டன்: வரும் நவம்பரில் தனது 65வது பிறந்தநாளைக் கொண்டாட இருக்கும் இங்கிலாந்து இளவரசர் சார்லஸூக்கு பல கோடி ரூபாய் செலவு செய்து பக்கிங்ஹாம் அரண்மனையில் விருந்தளிக்க இருப்பதாகத் தெரிவித்துள்ளனர் லண்டனில் வசித்து வரும் இந்திய கோடீஸ்வரத் தம்பதிகள். லண்டனில் வசித்து வரும் இந்தியரான சைரஸ் வண்ட்ரேவலா, பங்கு பரிமாற்ற தொழிலதிபர். இவரது மனைவியான பிரியா இந்தியாவின் பிரபல நியல் எஸ்டேட் நிறுவனமான ஹிர்கோ குழுமத்தின் தலைவர். இந்த தம்பதிகளில் இங்கிலாந்து அரச குடும்பத்திற்கு மிக நெருக்கமானவர்கள். அறக்கட்டளைகள் மூலம் பல சமூக சேவைகளிலும் இவர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், வரும் நவம்பர் 14ம் தேதி தனது 65வது பிறந்தநாளைக் கொண்டாட இருக்கும் இங்கிலாந்து இளவரசர் சார்லஸ்க்கு பிரமாண…
-
- 0 replies
- 590 views
-
-
இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில், ரம்ஜான் பண்டிகை நாளன்று கள்ளச்சாராயம் குடித்து பலியானவர்களின் எண்ணிக்கை 18 எனத் தெரிய வந்துள்ளது. ரம்ஜான் பண்டிகையொட்டி பாகிஸ்தானில் சாராய விற்பனை அதிகமாக இருந்தது. கடந்த சனிக்கிழமையன்று கராச்சி நகரில் உள்ள மஹ்மூதாபாத் பகுதியில் உள்ள குறிப்பிட்ட கடையில் விற்கப்பட்ட சாராயத்தை குடித்த பலருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. விசாரணையில் கடையில் விற்கப்பட்டது கள்ளச் சாராயம் என கண்டுபிடிக்கப்பட்டது. இதனை அடுத்து உடல் நலம் பாதிக்கப்பட்ட ‘குடிமகன்கள்' பலர் கராச்சி ஜின்னா ஆஸ்பத்திரியிலும், மேலும் சிலர் தனியார் ஆஸ்பத்திரிகளிலும் அனுமதிக்கப்பட்டனர். அதில், ஜின்னா ஆஸ்பத்திரியில் 16 பேரும், இரு தனியார் ஆஸ்பத்திரிகளில் தலா ஒருவரும் என மொத்தம் 18 பேர் சிகிச்சை …
-
- 0 replies
- 352 views
-
-
டெல்லி: இந்திய விமானப் படைக்கு இத்தாலியின் அகஸ்டாவெஸ்ட்லாண்ட் நிறுவனத்திடம் இருந்து சொகுசு ஹெலிகாப்டர்களை கொள்முதல் செய்யதில் எந்த ஒரு விதியையுமே பின்பற்றவில்லை என்று அதிரடியாக மத்திய கணக்கு தணிக்கை துறை குற்றம்சாட்டியுள்ளது. இத்தாலியின் அகஸ்டாவெஸ்ட்லாண்ட் நிறுவனத்திடமிருந்து ஹெலிகாப்டர்கள் கொள்முதல் செய்யப்பட்டது தொடர்பான கணக்காய்வு அறிக்கை இன்று நாடாளுனன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. அதில், பாதுகாப்பு தளவாடங்களைக் கொள்முதல் செய்வதற்கென வகுக்கப்பட்ட விதிகள் இந்த கொள்முதலில் பின்பற்றப்படவில்லை. 2006ஆம் ஆண்டு பாதுகாப்பு தளவடா கொள்முதல் விதி, 2006ஆம் ஆண்டு செப்டம்பரில் கொண்டுவரப்பட்ட கொள்முதலுக்கு முந்தைய பரிசீலனை வேண்டுகோள் என அனைத்துமே இந்த கொள்முதலில் மீறப்பட்டுள்ளன எ…
-
- 0 replies
- 332 views
-
-
சிட்னி: ஏ.ஆர். ரஹ்மான் வரும் 24-ந் தேதி ஆஸ்திரேலியாவில் நடத்த இருந்த இசை நிகழ்ச்சி திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளது. இதை இணையம் மூலம் அறிவித்துள்ள நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள், இசை நிகழ்ச்சிக்கு டிக்கெட் வாங்கியவர்களுக்கு பணம் திருப்பி கொடுக்கப்படும் என்றும் அறிவித்துள்ளனர். இதற்காக www.ticketek.com.au/contactus என்ற இணையதளம் மூலமாகவும் பணத்தை திரும்பக் கொடுக்கக் கோரலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கிரெடிட் கார்டு மூலம் டிக்கெட் வாங்கியோர் டிக்கெட் வாங்கிய இடத்தில் பணத்தைப் பெற்றுக் கொள்ளலாம் என்றும் கூறியுள்ளனர். http://tamil.oneindia.in/movies/news/2013/08/sydney-rahmanishq-cancelled-181159.html
-
- 0 replies
- 408 views
-