உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26679 topics in this forum
-
இரண்டாம் உலகப்போரின் போது, ஜப்பான் தலைநகர் ஹிரோஷிமா மீது 1945 ஆக.6ம் தேதி அமெரிக்கா அணுகுண்டு வீசி தாக்கியது. இதில் ஆயிரக்கணக்கான மக்கள் பலியாகினர்.இதன் தாக்கம் இன்றும் தொடர்கிறது. பலியான மக்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாகவும், உலகில் அமைதி நிலவ வேண்டியும், ஆண்டுதோறும் ஆக.6ம் தேதி, ஹிரோஷிமா நினைவு தினம் கடைபிடிக்கப்படுகிறது.இரண்டாம் உலகப்போரின் இறுதிக்கட்டத்தின் போது, ஜப்பான் நாட்டின் ஹிரோஷிமா மற்றும் நாகசாகி ஆகிய நகரங்கள் மீது அமெரிக்கா அணுகுண்டு வீசியது. இதுவே உலகின் முதலும், கடைசியுமான அணுகுண்டு தாக்குதல். உலக வரலாற்றில் அமெரிக்கா, முதன் முதலாக அணுகுண்டு தாக்குதலை தொடங்கியது. �லிட்டில்பாய்' எனும் 60 கிலோ எடையுள்ள அணுகுண்டை சுமந்து வந்த "பி-29 ரக எனோலாகெ…
-
- 5 replies
- 495 views
-
-
4 லட்சம் பிரித்தானியத் தமிழர்கள் வாக்குகளை இழக்கவிருக்கும் கான்சர்வேட்டிவ் கட்சி ! இலங்கையில் நடைபெறவுள்ள காமன்வெலத் மாநாட்டிற்கு பிரித்தானிய பிரதமர் டேவிட் கமரூன் செல்லக்கூடாது, என்று தமிழர்கள் தொடர்ச்சியாக வேண்டுகோள் விடுத்து வருகிறார்கள். பிரித்தானியாவில் இயங்கிவரும் தமிழ் சொலிடாரிட்டி குழுவினர் மற்றும் பிரித்தானிய தமிழர் பேரவையினர் இதுதொடர்பாக பிரித்தானிய அரசுக்கு தொடர்ந்தும் அழுத்தங்களைக் கொடுத்து வருகிறார்கள். சுமார் 4 லட்சம் தமிழர்கள் வாழும் பிரித்தானியாவில், அவர்கள் உணர்வுகளைப் புரிந்துகொள்ளுமாறு பல வேண்டுகோள்கள் விடுக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் பிரித்தானிய வெளியுறவு அமைச்சுக்கு தமிழ் சொலிடாரிட்டி குழுவினர் இதுதொடர்பாக கடிதம் ஒன்றையும் எழுதியுள்ளார்கள். பி…
-
- 0 replies
- 432 views
-
-
டெல்லி: ஜம்மு காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் ராணுவத்தினர் நடத்திய தாக்குதலில் 5 இந்திய ராணுவ வீரர்கள் பலியான சம்பவம் நாடாளுமன்றத்தில் கடும் அமளியை ஏற்படுத்தியது. அமளிக்கிடையே லோக்சபாவில் பேசிய பாதுகாப்பு அமைச்சர் ஆண்டனி, எல்லையில் பாகிஸ்தானின் எத்தகைய ஒரு தாக்குதலையும் எதிர்கொள்ள ராணுவம் முழு அளவில் தயாராக இருக்கிறது என்றார். நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் நேற்று தொடங்கியது. ஆனால் தெலுங்கானாவுக்கு எதிர்ப்பது, புதிய மாநிலங்கள் உருவாக்க வேண்டும் என்று போன்ற முழக்கங்களால் அவை நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டன. இன்று காலையும் நாடாளுமன்ற இரு சபைகளும் கூடின. அப்போது மாநில பிரிவினை முழக்கங்களுடன் எல்லையில் 5 ராணுவ வீரர்கள் பலியான சம்பவம் தொடர்பாக அரசு விளக்கம் அளிக்கக் கோரியும் முழக…
-
- 1 reply
- 248 views
-
-
பாகிஸ்தானில் தீவிரவாதிகள் நடத்திய இருவேறு தாக்குதலில் 16 பேர் கொல்லப்பட்டுள்ளனர். பலுசிஸ்தான் பகுதியைச் சேர்ந்த பிரிவினைவாத கிளர்ச்சிக்காரர்கள் பிபிசியிடம் தகவல் தருகையில், கிழக்கிலுள்ள பஞ்சாப் மாநிலத்துக்கு சென்றுகொண்டிருந்த பஸ் ஒன்றிலிருந்து 26 பயணிகளைக் கடத்திக் கொண்டுபோய் அதில் பாதி பேரை சுட்டுக் கொன்றதாகத் தெரிவித்துள்ளனர். கொல்லப்பட்டவர்களின் சடலங்கள் பலுச் மாகாண தலைநகரான கெட்டாவுக்கு எழுபது கிலோமீட்டர் தொலைவில் பள்ளம் ஒன்றிலிருந்து கண்டெடுக்கப்பட்டுள்ளது.இராணுவத்துடனோ பாதுகாப்பு துறையுனோ தொடர்பு இருப்பவர்களாக தாம் கருதியவர்களை பிரிவினைவாதிகள் சுட்டுக் கொன்றுள்ளனர். பல காலமாகவே பிரிவினைவாத வன்முறைகளை பலுசிஸ்தான் அனுபவித்துவருகிறது. இரண்டாவது தாக்குதல் நாட்ட…
-
- 1 reply
- 379 views
-
-
டெல்லி: ஹிமாச்சல் பிரதேசம், அருணாச்சல் பிரதேசம் ஆகிய மாநிலங்களை உரிமை கோரி தாக்குதல் நடத்த சீனா தயாராகி வருகிறது என்று சமாஜ்வாடி கட்சித் தலைவர் முலாயம்சிங் யாதவ் தெரிவித்துள்ளார். லோக்சபாவில் ஜம்மு காஷ்மீரில் பாகிஸ்தான் தாக்குதல் நடத்தியதில் 5 இந்திய ராணுவ வீரர்கள் பலியானது தொடர்பாக பேசிய முலாயம்சிங், எல்லைகளில் சீனாவின் ஊடுருவல்கள் மற்றும் பாகிஸ்தான் தாக்குதல்களில் இந்திய வீரர்கள் பலியாகும் சம்பவங்களைத் தடுக்க என்ன நடவடிக்கை மேற்கொண்டிருக்கிறது? என்பதை நாடாளுமன்றத்தில் மத்திய அரசு விவரிக்க வேண்டும். சீனாவையும் பாகிஸ்தானையும் நாம் நம்பக் கூடாது. எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டை தாண்டி தொடர்ந்து சீனா இந்திய பகுதிக்குள் ஊடுருவி வருகிறது. இந்திய ராணுவ வீரர்களை பாகிஸ்தான் த…
-
- 1 reply
- 520 views
-
-
பொதுநலவாய நாடுகளின் கொழும்பு மாநாட்டில் பங்கேற்கக்கூடாது என்ற தமது கோரிக்கைக்கு இந்திய மத்திய அரசாங்கம் உரிய பதிலை வழங்கவேண்டும். இல்லையேல் மத்திய அரசாங்கத்துடன் உறவுகளை வைத்துக்கொள்ளப்போவதில்லை என்று திராவிட முன்னேற்றக்கழகம் எச்சரித்துள்ளது. திராவிட முன்னேற்றக்கழகத்தின் பேச்சாளர் டிகேஎஸ் இளங்கோவன் இதனை தெரிவித்துள்ளார் ஏற்கனவே நட்பு நாடு என்ற வகையில் இலங்கையை கருதக்கூடாது என்று அண்ணா திராவிட முன்னேற்றக்கழகம் சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றியபோதும் மத்திய அரசாங்கம் அதனை நிராகரித்தது இந்தநிலையிலேயே திராவிட முன்னேற்றக்கழகம் தமது கோரிக்கையை மத்திய அரசாங்கத்தின் முன்னால் வைத்துள்ளது என்று தெ இக்கோனோமிக் டைம்ஸ் தெரிவித்துள்ளது. http://www.sankathi24.com/news/32110/64//d,fu…
-
- 2 replies
- 274 views
-
-
தனி தெலங்கானாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்று நடந்த பந்தின்போது ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மீது போலீசார் துப்பாக்கி சூடு நடத்தினார்கள்.தனி தெலங்கானா மாநிலம் அறிவிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்று கடலோர ஆந்திரா மற்றும் ராயலசீமா பகுதிகளில் உள்ள 13 மாவட்டங்களில் பந்த் நடத்தப்பட்டது. ஆந்திர ஒருங்கிணைப்பு கூட்டுக்குழு, மாணவர்கள், அரசு ஊழியர்கள் தர்ணா, ஆர்ப்பாட்டம், மறியல் உள்ளிட்ட போராட்டங்களில் ஈடுபட்டனர். இதனால் சில இடங்களில் கலவரங்கள் மூண்டது. அனந்தபூர் மாவட்டத்தில் ஒருங்கிணைப்பு கூட்டுக்குழுவினர் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நேற்று காலை கைது செய்யப்பட்டனர். இதனை கண்டித்து அனந்தபூரில் மாணவர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். காங்கிரஸ், பாரதிய ஜனதா கட்சி…
-
- 9 replies
- 735 views
-
-
ஆப்கானிஸ்தானிலிருந்து வெளிநாட்டுப்படைகள் அடுத்த ஆண்டு விலகும்போது, தாங்கள் அதிகாரத்தை ஏகபோகமாகக் கைப்பற்ற முயலமாட்டோம் என்று ஆப்கன் தாலிபானின் தலைவர் முல்லா முகமது ஒமார் கூறியிருக்கிறார். முஸ்லீம் பண்டிகையான ஈத் பெருநாளுக்கு முன்னதாக விடுத்த அறிக்கை ஒன்றில், இஸ்லாமியக் கொள்கைகளின் அடிப்படையில் அமைந்த ஒரு அனைத்து தரப்புகளையும் உள்ளடக்கும் அரசு ஒன்றை உருவாக்குவதற்கு ஆப்கானிய மக்களுடன் ஒரு புரிந்துணர்வை தாலிபான்கள் எட்ட முயல்வார்கள் என்றார் ஒமார். அடுத்த ஆண்டு நடக்கவிருக்கும் தேர்தல்களைப் பற்றி தனது வெறுப்பை மீண்டும் வெளிப்படுத்திய ஒமார், இது ஒரு காலத்தை வீணடிக்கும் செயல் என்றார். முல்லா ஒமார், 2001ம் ஆண்டிலிருந்து தலைமறைவாக இருக்கிறார். அவரைப் பிடித்துத் தருபவர்களுக்கு…
-
- 0 replies
- 345 views
-
-
காஷ்மீரின் லடாக் பகுதியில் இந்திய ராணுவத்தினரின் ரோந்துப் பணியை சீன ராணுவம் தடுத்து வருகிறது. இதனால் அப்பகுதியில் புதிய பிரச்னை உருவாகி பதற்றம் ஏற்பட்டுள்ளது. இந்திய, சீன எல்லையில் வடக்கு லடாக் பகுதியில் எல்லை கட்டுப்பாட்டு கோடு அருகே உள்ள வர்த்தக முக்கியத்துவம் வாய்ந்த 2 சோதனைச் சாவடிகள் இடையே இந்திய ராணுவத்தினர் திரங்காஎன்ற பெயரில் ரோந்துப் பணியை மேற்கொண்டு வருகின்றனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு இந்த ரோந்துப் பணியில் இந்திய வீரர்கள் ஈடுபட்டனர். ஆனால், சீனா அந்த வழியில் ஒரு கண்காணிப்பு கோபுரத்தை அமைத்துள்ளது. இந்திய ராணுவத்தினர் ரோந்து வரும்போது அவர்களை சீன ராணுவத்தினர் இடைமறித்து, அது தங்களுடைய பகுதி என்று கூறி திருப்பி அனுப்பி விடுகின்றனர். கடந்த ஏப்ர…
-
- 6 replies
- 469 views
-
-
திபெத் அருகே உலகிலேயே மிகவும் உயரமான விமான நிலையத்தை சீனா அமைத்து வருகிறது. இமயமலைப் பிரதேசத்தில் உள்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டத்தின் ஒரு பகுதியாக டாவ்செங் யாடிங் என்ற இந்த விமான நிலையத்தை சீனா கட்டி வருகிறது. சிச்சுவான் மாகாணத்தில் உள்ள கார்ஜி திபெத் தன்னாட்சி பகுதியின் அதிகார எல்லையில் 4411 மீட்டர் உயர விமான நிலையத்தின் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருவதாக சீன அரசின் அதிகாரபூர்வ செய்தி நிறுவனமான ஜிங்குவா தெரிவித்துள்ளது. இது திபெத் தன்னாட்சி பிராந்தியத்தில் காம்டோ என்ற இடத்தில் அமைந்துள்ள பாங்டா விமான நிலையத்தை விட உயரமானதாகும். அந்த விமான நிலையம் கடல் மட்டத்தில் இருந்து 4 334 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது. திபெத் பிராந்தியத்தில் இதுவரை கோங்க்கார் லாஸ பாங்டா ஸிக…
-
- 1 reply
- 508 views
-
-
ஆஸ்திரேலியாவில் பொதுத் தேர்தலுக்கான தேதிகளை பிரதமர் கெவின் ரட் அறிவித்துள்ளார். செப்டம்பர் ஏழாம் தேதி தேர்தல் நடக்கவுள்ளது. ஆனால் பிரச்சாரம் ஏற்கனவே தொடங்கிவிட்டதை இங்கு பலரும் உணர்ந்திருக்கின்றனர்.பிரதமருடைய இன்றைய அறிவிப்பின் மூலம் ஆஸ்திரேலியாவில் தேர்தல் பிரச்சாரங்கள் உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்படுகின்றன என்று கூறலாம். நாட்டை ஆண்டுவரும் கெவின் ரட்டையும் அவரது தொழிற்கட்சியையும் எதிர்த்து எதிரணியில் உள்ள டோனி அப்பாடும் அவரது கன்சர்வேடிவ் கூட்டணியும் மோதுவதாக தேர்தல் அமைந்துள்ளது. ஆஸ்திரேலிய அரசியலில் கடந்த சில மாதங்களில் கணிசமான மாற்றங்கள் நடந்துள்ளன. சில மாதங்கள் முன்பு, இந்த தேர்தலில் ஆளும் தொழிற்கட்சி பெருந்தோல்வியைச் சந்திக்கும் என்ற நிலை இருந்துவந்தது. ஆனா…
-
- 0 replies
- 443 views
-
-
பாஜக எம்.பி. சத்ருகன் சின்ஹாவை தங்கள் கட்சியில் வந்து சேருமாறு ஐக்கிய ஜனதாதளம் அழைப்பு விடுத்துள்ளது. பாஜக எம்.பி.யான சத்ருகன் சின்ஹா தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து வெளியேறிய ஐக்கிய ஜனதாதள தலைவரும், பீகார் முதல்வருமான நிதிஷ் குமாரை புகழ்ந்து பேசினார். இதையடுத்து சத்ருகன் சின்ஹா மீது ஒழுங்குமுறை நடவடிக்கை எடுக்கப்படும் என்று பாஜக தெரிவித்தது. மேலும் அவர் கட்சியை விட்டு வெளியேறினாலும் தாங்கள் தடுக்கப் போவதில்லை என்றும் தெரிவித்தது. இந்நிலையில் ஐக்கிய ஜனதாதளத்தின் கதவுகள் சத்ருகன் சின்ஹாவுக்காக எப்பொழுதும் திறந்திருக்கும் என்று நிதிஷ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் சஞ்சய் சிங் தெரிவித்துள்ளார். சத்ருகன் ஐக்கிய ஜனதாதளத்தில் எப்பொழுது வேண்டுமானாலும் சேரலாம். அவ்வாறு வந்தால் அ…
-
- 0 replies
- 324 views
-
-
தெலுங்கானா தனி மாநிலத்தை உருவாக்கியதால் ஆந்திராவில் இன்னும் 20 ஆண்டுகளுக்கு காங்கிரஸ் கட்சியால் எழவே முடியாது என்று அம்மாநில முதல்வர் கிரண்குமார் ரெட்டி கவலை தெரிவித்துள்ளார். தெலுங்கானா தனி மாநிலத்தை உருவாக்க காங்கிரஸ் முடிவு செய்துள்ளதை எதிர்த்து எஞ்சிய ஆந்திர பிரதேச எம்.பி, எம்.எல்.ஏக்கள் பலரும் ராஜினாமா செய்து வருகின்றனர். இதனால் காங்கிரஸின் எதிர்காலமே அங்கு கேள்விக்குறியாகி உள்ளது. இந்நிலையில் ஆந்திர முதல்வர் கிரண்குமார் ரெட்டி இது பற்றி கூறுகையில், காங்கிரஸ் மேலிடத்தின் முடிவு மிகவும் துயரமானது என்பதை மாநில பொறுப்பாளர் திக்விஜய்சிங்கிடம் தெரிவித்துவிட்டேன். இது காங்கிரஸ் கட்சிக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. என்னைப் பொறுத்தவரை நான் காங்கிரஸில் பிறந்தவன்.. …
-
- 12 replies
- 880 views
-
-
திருச்சி காவிரி ஆற்றை மையமாகக் கொண்டு தமிழகத்தை இரண்டாகப் பிரித்து சென்னையை தலைமையிடமாகக் கொண்டு வட தமிழகம் என்றும்,மதுரையைத் தலைநகராகக் கொண்டு தென் தமிழகம் என்றும் தமிழ்நாட்டைப் பிரிக்கலாம் என்று காங்கிரஸ் கட்சியின் மூத்ததலைவர்களில் ஒருவரான அன்பரசு கூறியுள்ளார். இதே போலத்தான் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸும், மூமுக தலைவர் டாக்டர் சேதுராமனும் கூறி வருகின்றனர். தெலுங்கானா பிறப்பதைத் தொடர்ந்து தமிழகத்தைப் பிரிக்க வேண்டும் என்ற கோரிக்கையும் மீண்டும் சூடு பிடிக்க ஆரம்பித்துள்ளது. ஆனால் இதுகுறித்து இதுவரை முக்கியக் கட்சிகளான அதிமுக, திமுக, காங்கிரஸ், மதிமுக, தேமுதிக போன்றவை கருத்து தெரிவித்ததில்லை. இந்த நிலையில் காங்கிரஸின் மூத்த தலைவர்களில் ஒருவரான அன்பரசு தமிழகத்தைப் பிரிக்க …
-
- 7 replies
- 677 views
-
-
சிரியா இரசாயன ஆயுதத் தாக்குதலை மேற்கொண்டது என்ற குற்றச்சாட்டுக்கு இலக்கான இடங்களில் ஐநா ஆய்வும் விசாரணையும் நடத்த சிரியா அனுமதி அளித்துள்ளது. ஆனால் ஐநா மூவர் குழு பரிந்துரைக்கு அமைய கூட ஒரு குழுவை அனுப்பி சிறீலங்காவில் அதன் அரச படைகளால் நிகழ்த்தப்பட்ட மனித இனப்படுகொலைகளை (தமிழினப் படுகொலை), மனித உரிமை மீறல்களை விசாரிக்க..ஐநா இன்னும் பெரிதாக முயற்சிக்கவும் இல்லை. சிறீலங்காவும் அனுமதிப்பதாக இல்லை. சிரியாவில் மேற்குலக ஆதரவுக் கிளர்ச்சியாளர்கள் மீது பதியப்பட்டுள்ள மனித உரிமை மீறல்குற்றச்சாட்டுக்கள் போல்.. புலிகள் மீதும் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. ஆனாலும் ஐநா சிரியா விவகாரத்தில் சிரிய அரசு மேற்கொண்ட மனித உரிமை மீறல்களுக்கே அதிகம் முக்கியம் கொடுத்து கையாண…
-
- 3 replies
- 670 views
-
-
சிறீலங்காவின் கடற்பகுதிக்குளு செல்லும் தமிழக கடற்தொழிலாளர் படகுகளை சீனாவின் சட்லையிட் உதவியுடன் கண்காணிக்கும் நடவடிக்கையில் சிறீலங்கா ஈடுபட்டுள்ளது. சிறீலங்கா கடற்படையினரின் இந்த நடவடிக்கை குறித்து இந்திய புலனாய்வு துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றார்கள். இராமேஸ்வரம் முதல் கோடியாக்கரை வரையுள்ள கடற்பகுதியில் நான்காயிரத்திற்கும் அதிகமான விசைப்படகுகள் ஆயிரக்கணக்கான நாட்டுப்படகுகள் தொழில் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றன சிறீலங்காவிற்கும் இந்தியாவிற்கும் இடைப்பட்ட ஆழம்குறைந்த கச்சதீவு பகுதிக்கு தமிழக கடற்தொழிலாளர்கள் மீன்,றால் பிடிக்கும் ஆசையில் சென்று வருகின்றார்கள். இதனால் எல்லை தாண்டிசெல்லும் கடற்தொழிலாளர்கள் சிறீலங்கா கடற்படையினரின் தாக்குதலுக்கு இலக்காகின்றார்க…
-
- 3 replies
- 580 views
-
-
ஆந்திர மாநிலத்தில் கனிம வளமும், நீர் வளமும் அதிகமாக இருந்தும் பொருளாதார ரீதியாக பின்தங்கிய பகுதியாக இருந்த தெலுங்கானா பகுதியை, அப்பகுதி மக்களின் ஏகோபித்த கோரிக்கை ஏற்று தனி மாநிலமாக உருவாக்க காங்கிரஸ் கட்சி ஒப்புக்கொண்டிருப்பது வரவேற்கத்தக்க முடிவாகும். 1956இல் மொழி வழி இனங்களின் அடிப்படையில் மாநிலங்கள் பிரிக்கப்பட்டபோது, அந்த மாநில மக்களின் மொழி, இன அடையாளங்கள், பண்பாடு ஆகியன காப்பாற்றப்பட வேண்டும், அம்மாநிலத்திற்குட்பட்ட பகுதிகள் பொருளாதார மேம்பாடு பெற தனி மாநில அமைப்பு அவசியம் என்கிற அடிப்படையில்தான் இந்தியாவில் மொழி வழி மாநிலங்கள் உருவாக்கப்பட்டன. ஆந்திரத்தைப் பொறுத்தவரை, விசால ஆந்திரா என்ற முழக்கத்தை முன்வைத்துப் போராடிய தெலுங்கானா போராட்டமே ஆந்திரா என்கிற மாந…
-
- 17 replies
- 1.1k views
-
-
இணைய தளங்களின் போட்டி காரணமாக தமது தளத்தினை எத்தனைபேர் பார்க்கின்றார்கள் எண்ணிக்கையினை தளத்தின் முன்பாகவோ அல்லது எத்தனை பேர் ஒன்லைனில் நிற்கிறார்கள் என்றோ காட்டுவார்கள். இந்த எண்ணிக்கையினை தொழில் நுட்பரீதியாகவும், இணைய கண்காணிப்பாளர்களுக்கு பணம் கொடுத்தும் தமது வாடிக்கையாளர்களைக் கூட்டி காட்டுவார்கள் என்பது ஏற்கனவே தெரிந்த விடயம்தான். ஆனால் சமூக தளங்களில் கூட இந்த விடயம் கள்ல சந்தை வரை வந்துள்ளது. எடுத்துக் காட்டாக முக நூல் [பேஸ்புக்] இல் லைக் பண்ணுவதும் அதன் எண்ணிக்கையினை டிஸ்பிளேய் பண்ணிக் காட்டுவதும் இப்போது இணைய சந்தையில் அதிகமாக வலம் வருகின்றது. தமது கருத்தினை, செய்தியினை, விளம்பரத்தினை எத்தனை பேர் விரும்புகின்றனர் என்பதனை காட்டுவதே இதன் நோக்கம். ஆனால் இந்த லைக…
-
- 2 replies
- 1.1k views
-
-
அமெரிக்காவை விட இந்தியா, ஜெர்மனி, சீனா போன்ற நாடுகள் வேகமாக முன்னேறி வருகின்றன. எனவே, அமெரிக்காவில் பொருளாதாரச் சீர்திருத்தங்களை மேற்கொள்ள வேண்டியது அவசியம் என்று அந்நாட்டு அதிபர் பராக் ஒபாமா தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் அமெரிக்காவின் சட்டனூகா நகரில் மக்களிடையே ஆற்றிய உரை வருமாறு: நாம் பொருளாதாரச் சீர்திருத்தங்களையும், முதலீடுகளையும் மேற்கொள்ளா விட்டால், இந்தியா, ஜெர்மனி, சீனா உள்பட உலக நாடுகளுக்கு நாம் வெள்ளைக் கொடியை காட்ட வேண்டியிருக்கும். ஏனெனில் அவை முன்னோக்கிச் சென்று கொண்டிருக்கின்றன. அந்த நாடுகள் பின்தங்கப் போவதில்லை. இந்தியா, ஜெர்மனி, சீனா போன்ற நாடுகள் பொருளாதார ரீதியாக முன்னேறி வருகின்றன. எனவே அமெரிக்காவும் சும்மா இருக்க முடியாது. நாம் எதை…
-
- 3 replies
- 421 views
-
-
மீண்டும் வருவார் ****************** மூன்று முறை பிரதமர் பதவியை வகித்துள்ள ஒரு தலைவருக்கு நான்காண்டு சிறைத் தண்டனை விதித்துள்ளது இத்தாலி நீதிமன்றம். இதன் மூலம் அந்த நாட்டின் வரலாற்றில் புதிய அத்தியாயம் எழுதப்பட்டிருப்பதாக சிலர் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர். குற்றங்களுக்கு பெயர் பெற்ற நாடு இத்தாலி. மாஃபியா என்ற சொல் உருவானதே அங்குதான். ஆர்கனைஸ்ட் க்ரைம் என்ற பதத்துக்கு இலக்கணம் எழுதிய குற்றக் குடும்பங்கள் திளைத்த சமூகம் அது. பூ வியாபாரம் முதல் கப்பல் போக்குவரத்து, ஆயுத விற்பனை வரையில் அனைத்து தொழில்களும் மாஃபியா விதிகளுக்கு கட்டுப்பட்டு நடந்தன. ஆட்சி அரசியலும் நீதிமன்றமும்கூட விதிவிலக்கு அல்ல என்று பலர் நம்பினர். அத்தகைய தடங்கள் கொண்ட நாட்டில் வரி மோசடி செய்த முன்னா…
-
- 5 replies
- 700 views
-
-
தமிழ் இனத்தை வீழ்த்தியவன் சிலை இப்போது வீழ்த்தப்பட்டது. ஆந்திராவில் ராஜீவ் காந்தியின் சிலையை உடைத்தது மட்டுமில்லாமல் அந்த சிலையை தரதரவென்று சாலையில் இழுத்து வந்தார்கள் பாருங்கள் போராட்டக்காரர்கள், அவர்கள் இருக்கும் திசை நோக்கி தமிழர்கள் நாம் வணங்குவோம். தமிழகத்தில் காங்கிரஸ் கட்சிக்கு எதிராக மாணவர்கள் முழக்கமிட்ட போது அவர்களை துரத்தி துரத்தி அடித்த காங்கிரஸ் குண்டர்கள் இப்போது நினைவுக்கு வருகின்றனர். இந்த குண்டர்கள் இப்போது ஆந்திரா சென்று அங்குள்ள போராளிகளை அடிப்பார்களா ? நிச்சயம் மாட்டார்கள். காரணம் தமிழன் மட்டுமே இங்கு அடிவாங்குவான். திருப்பி அடிக்க மாட்டான் என்ற தைரியம் காங்கிரஸ் களவாணிகளுக்கு. இப்படியே தமிழினம் இருக்காது நாளை தமிழகத்திலும் ராஜீவ் சிலை உடைக்கப்ப…
-
- 13 replies
- 1.1k views
-
-
ஜிம்பாப்வே நாட்டில் நடைபெற்ற புதிய அதிபர் மற்றும் பார்லிமென்ட் தேர்தலில் அதிபர் முகாபேயின் ஷானு பி.எப்.கட்சி அமோக வெற்றி பெற்றுள்ளது. ஜிம்பாப்வே தேர்தலில் தற்போதைய அதிபர் ராபர்ட் முகாபே , ஜனநாயக மாற்றத்துக்காண இயக்கம் (எம்.டி.சி.) கட்சி சார்பில் பிரதமர் மோர்கன் டிஸ்வான்கிரை உள்ளிட்ட 5 பேர் போட்டியிட்டனர். நேற்று முன்தினம் வாக்குப் பதிவு முடிந்ததும் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. அதை தொடர்ந்து முடிவுகள் அறிவிக்கப்பட்டன. 210 தொகுதிகளுக்கான வாக்குகளும் எண்ணப்பட்ட நிலையில் அதிபர் முகாபேயின் ஷானு பி.எப். கட்சி 137 இடங்களில் வெற்றி பெற்றது. இந்த தகவலை ஜிம்பாப்வே தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இதனிடையே அதிபர் தேர்தலுக்கான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. ஆனால் இம் முடிவை எதிர்க்க…
-
- 4 replies
- 599 views
-
-
மலேசியாவில் நேற்று படகு கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் அதில் பயணம் செய்த 40 பேர் காணாமல்போயுள்ளனர். இந்தோனேஷியாவில் அகதிகளாக இருந்தவர்களே அந்த படகில் பயணம் செய்தனர். விபத்துக்குள்ளான படகில் 44 பேர் பயணம் செய்ததாக கூறப்படுகிறது. சுமார் 15 மணி நேர போராட்டத்திற்கு பின் 4 பேர் மட்டும் மீனவர்களால் மீட்கப்பட்டுள்ளனர். மற்றவர்களை தேடும் பணி நடைபெற்று வருகிறது - http://www.thinakkathir.com/?p=51563#sthash.nJKm9Lfp.dpuf
-
- 0 replies
- 288 views
-
-
இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்களை விடுதலை செய்யுமாறு பாண்டிச்சேரி முதலமைச்சர் என்.ரெங்கசாமி கோரிக்கை விடுத்துள்ளார். இந்திய பிரதமர் மன் மோகன் சிங்கிடம் இந்தக் கோரிக்கையை விடுத்துள்ளார். காரைக்காலைச் சேர்ந்த மீனவர்களே இவ்வாறு கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். காரைக்காலைச் சேர்ந்த மீனவர்கள், பாண்டிச்சேரி முதலமைச்சரை சந்தித்த போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். காரைக்காலைச் சேர்ந்த 29 மீனவர்களே இவ்வாறு இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். http://globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/94807/language/ta-IN/article.aspx
-
- 0 replies
- 377 views
-
-
ஆப்கானிஸ்தானின் ஜலதாபாத் நகரில் உள்ள இந்திய தூதரகம் அருகே நடத்தப்பட்ட தற்கொலை தாக்குதலில் 8 பேர் பலியாகி உள்ளனர். 12 பேர் படுகாயமடைந்துள்ளனர். ஆப்கானிஸ்தானின் நங்ஹரார் மாகாண தலைநகரமான ஜலதாபாத்தில் இன்று காலை இந்திய தூதரகம் அருகே தற்கொலைப்படை வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் 8 பேர் பலியாகி உள்ளனர். இருப்பினும் தூதரகத்துக்கோ தூதரகத்தில் பணியாற்றிய இந்தியர்களுக்கோ எவ்வித பாதிப்பும் இல்லை என்று வெளியுறவுத் துறை அமைச்சககம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து ஜலதாபாத்தில் தீவிரவாதிகளுக்கும் பாதுகாப்பு படையினருக்கும் இடையேயான துப்பாக்கிச் சூடு நடைபெற்றதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. http://tamil.oneindia.in/news/2013/08/03/world-suicide-blast-outside-india…
-
- 0 replies
- 363 views
-