உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26726 topics in this forum
-
பாக்.துறைமுகம் சீனா வசம் - இந்தியாவுக்கு செக் வைக்க புதிய திட்டமா? February 19, 2013 12:07 pm இதுநாள் வரை சிங்கப்பூர் வசம் இருந்த, பாகிஸ்தான் கவ்தார் துறைமுகத்தை சீனா தனது பொறுப்பில் எடுத்துள்ளது. இங்கு தனது கடற்படைத் தளத்தை அமைக்கவும் சீனா திட்டமிட்டுள்ளது. இதனால் இந்தியா கடும் எரிச்சலும், அதிர்ச்சியும் அடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்தியாவைச் சுற்றி வளைக்கும் சீனாவின் பூமாலைத் திட்டத்தின் கீழ்தான் இந்த துறைமுகத்தை சீனா கையில் எடுத்திருப்பதாக கூறப்படுகிறது. இந்தியாவைச் சுற்றிலும் சீனா தனது நிலைகளைப் பலப்படுத்தி வருகிறது. இதுகுறித்து பாகிஸ்தான் ஜனாதிபதி ஆசிப் அலி சர்தாரி கூறுகையில்... முறைப்படி கவ்தார் துறைமுகம் சீனாவிடம் ஒப்பந்த அடிப்படையில் வழங்கப்…
-
- 0 replies
- 428 views
-
-
FILE தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்த வலியுறுத்தி நடைபயணம் மேற்கொண்டுள்ள ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோவை முதல்வர் ஜெயலலிதா திடீரென சந்தித்து பேசியது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அடுத்தாண்டு நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தல் கூட்டணிக்கான அச்சாரமாக இந்த சந்திப்பு நடந்திருக்கலாம் என்று அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர். ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ மீது முதல்வர் ஜெயலலிதாவுக்கு அலாதி பிரியம். விடுதலைப்புலிகளை ஆதரித்து பேசிய ஒரே காரணத்திற்காக வைகோ பொடா சட்டத்தில் சிறையில் அடைத்தார் ஜெயலலிதா. ஜாமீனில் வெளியே வர மறுத்த வைகோ, சுமார் ஒன்றர…
-
- 12 replies
- 955 views
-
-
முன்னாள் பனிச்சறுக்கு விளையாட்டு பயிற்சியாளரருமான ஒருவரை பாலியல் குற்றத்திற்காக டொரண்டோ காவல்துறையினர் கைது செய்துள்ளனர். Kevin Michael Hicks, என்ற பெயருடைய 53 வயதான முன்னாள்பனிச்சறுக்கு விளையாட்டு பயிற்சியாளர் மீது பாலியல் புகாரை மாணவர் ஒருவர் டொரண்டோ காவல்துறையினரிடம் அளித்துள்ளதால் அவர் கைது செய்யப்பட்டார். ஏற்கனவே இவர் மீது ஒரு மாணவி பாலியல் புகார் கொடுத்துள்ள நிலையில் இன்று இரண்டாவதாக ஒரு மாணவரும் பாலியல் புகார் கொடுத்துள்ளதால் கைது செய்யப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர். கைது செய்யப்பட்ட Kevin Michael Hicks, மீது மூன்று பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இவர் 1980ஆம் ஆண்டுமுதல் ஒண்டோரியோவில் உள்ள Woodbine Winter Skating Club, Westo…
-
- 0 replies
- 382 views
-
-
கணினி துறையில் மேற்கொள்ளப்படுகின்ற தொடர்ச்சியான உயர் மட்ட சைபர் தாக்குதல்களின் பின்னணியில் ஒரு குறித்த சீன இராணுவப் பிரிவு இருப்பதாக தாம் நம்புவதாக அமெரிக்காவை தளமாகக் கொண்ட கணினி பாதுகாப்பு நிறுவனம் ஒன்று கூறியுள்ளது. இந்தத் தாக்குதல்களுக்கான மூல ஆதாரமாக ஷங்கையில் உள்ள ஒரு டவர் புளொக் மையம் இருப்பதை தாம் கண்டுபிடித்துள்ளதாக கூறியுள்ள மண்டியண்ட் என்னும் அந்த நிறுவனம், இவற்றுக்கு அதிகபட்ச காரணமாக 61398 எனும் இராணுவப் பிரிவு இருக்கலாம் என்று அடையாளம் கண்டுள்ளதாகவும் கூறியுள்ளது. அந்தப் பிரிவு பெரும்பாலும் அமெரிக்காவில் உள்ள பரந்துபட்ட தொழில்துறையில், நூற்றுக்கணக்கான டெராபைட்ஸ் தரவுகளை திருடியுள்ளதாக அந்த அமைப்பு கூறியுள்ளது. அடிப்படையற்ற குற்றச்சாட்டு என்று இதனை சீன …
-
- 3 replies
- 624 views
-
-
பதவி விலகும் போப் ஆண்டவருக்கு மாதம் ரூ.1.75 லட்சம் பென்சன்? தற்போது 16-ம் பெனடிக்ட் போப் ஆண்டவராக பதவி வகித்து வருகிறார். அவர் வருகிற 28-ந்தேதியுடன் போப் ஆண்டவர் பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். அவரை தொடர்ந்து மார்ச் மாத இறுதிக்குள் புதிய போப் ஆண்டவர் தேர்ந்தெடுக்கப்பட உள்ளார். அதற்கான பணிகள் தற்போதே தொடங்கி விட்டன. இந்த நிலையில், பதவி விலகும் போப் ஆண்டவர் 16-ம் பெனடிக்ட்டுக்கு ஓய்வூதியம் (பென்சன்) வழங்க வாடிகன் நிர்வாகம் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. அவருக்கு மாதம் ரூ.1.75 லட்சம் பென்சன் தொகையாக வழங்கப்படலாம் என்ற தகவல்கள் வெளியாகி உள்ளன. ஆனால் இதை வாடிகன் நிர்வாகம் உறுதி செய்யவில்லை. இது குறித்து வாடிகன் அலுவலகத்தின் செய்தி தொடர்பாளர் பாதிரியின் பெட…
-
- 3 replies
- 673 views
-
-
ஊனம் ஒரு தடையல்லஸ இரு கைகளும் இன்றி கால்களால் விமானம் ஓட்டும் அமெரிக்க பெண் Posted by: Mayura Akilan Updated: Tuesday, February 19, 2013, 9:50 [iST] அரிசோனா: உடல் உறுப்புகள் நன்றாக இருப்பவர்களே சாதிக்க பல்வேறு தடைகளை சந்திக்கும் நிலையில் இரண்டு கைகளும் இன்றி பல்வேறு சாதனைகளை புரிந்துள்ளார் அமெரிக்காவைச் சேர்ந்த இளம்பெண். அரிசோனா மாவட்டத்தில் 1983ம் ஆண்டு பிறந்த பெண், ஜெசிகா காக்ஸ். பிறவியிலேயே இரு தோள் பட்டைகளுக்கு வெளியே கைகள் இல்லாத நிலையில் பிறந்த இவர், வாழ்வில் சாதனைகள் படைப்பதற்கு ஊனம் ஒரு தடையல்ல என்பதை பல வகைகளில் நிரூபித்துள்ளார். சிறுமியாக இருந்தபோது பல் துலக்குவது, தலை சீவுவது உள்ளிட்ட சுய பராமரிப்பு வேலைகளை இரு கால்களின் உதவியுடன் செய்து பழகிய ஜெசிகா காக்ஸ், …
-
- 0 replies
- 456 views
-
-
Hillary Clinton will begin giving paid speeches this year, Politico's Mike Allen reportedMonday. Clinton, who retired as U.S. secretary of state earlier this month, is joining the Harry Walker Agency and is expected to earn fees in the six-figure range. However, Politicoreports that she will likely speak for no fee on behalf of causes she supports, and will donate some of her earnings to charity. The agency confirmed the news on its website Monday morning. "We are proud to share the exciting news that Former Secretary of State Hillary Rodham Clinton has joined the Harry Walker Agency exclusively for her speaking engagements," reads the announcement. Former President B…
-
- 6 replies
- 599 views
-
-
கியூபா நாட்டில், இரண்டு மாதங்களாக, புற்று நோய்க்காக சிகிச்சை பெற்ற, வெனிசுலா அதிபர், ஹக்கோ சாவெஸ், இன்று தாயகம் திரும்பினார்.தென் அமெரிக்க நாடான, வெனிசுலா நாட்டின் அதிபராக, ஹக்கோ சாவெஸ், 1998ம் ஆண்டு முதல், பதவி வகித்து வருகிறார். அக்டோபரில் நடந்த தேர்தலில், இவர், நான்காவது முறையாக, அதிபராக தேர்வு செய்யப்பட்டார்.குடல் புற்றுநோயால் அவதிப்பட்டு வந்த சாவெசுக்கு, கடந்த ஆண்டு, அறுவை சிகிச்சை நடந்தது. ஆனால், தற்போது அவருக்கு இடுப்பு பகுதியில், புற்றுநோய் பரவியதால், கியூபா சென்று சிகிச்சை பெற்றார். நான்காவது முறையாக, தேர்தலில் வெற்றி பெற்ற சாவெஸ், இந்த முறை, இன்னும் பதவி ஏற்காமல் உள்ளார். குறிப்பிட்ட காலத்தில், அவர் பதவி ஏற்காவிட்டால், மறு தேர்தல் நடத்தப்பட வேண்டும். இதை தவி…
-
- 1 reply
- 447 views
-
-
ரஸ்யாவின் யூரல் மலைத்தொடரில் அமைந்துள்ள செல்யாபின்ஸ்க் பகுதி வான்பரப்பில் அண்மையில் விண்கல் வெடித்துச் சிதறியதில் சுமார் 1000 பேர் வரை காயமடைந்துள்ளனர். இதன்போது பொதுச் சொத்துக்களுக்கும் சேதமேற்பட்டது.இந்நிலையில் சிதறிய விற்கற்களை தேடி பலர் அப்பகுதிக்கு படையெடுத்து வருவதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. விண்கற்களுக்கு நல்ல கேள்வி நிலவுவதால் அதனை விற்றுப் பணமாக்கும் நோக்குடனேயே பலர் தேடலில் குதித்துள்ளனர். பலர் ஏற்கனவே தாம் சேகரித்த விண்கற்களை விற்பனை செய்யத்தொடங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதேவேளை விண்கற்களைத் தேடிவருபவர்களை ரஸ்ய அதிகாரிகள் தடுத்து வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. மொஸ்கோ பல்கலைக்கழகத்தினால் இவை ஆய்வுக்குட…
-
- 1 reply
- 686 views
-
-
பிரிட்டன் பிரதமர், டேவிட் கேமரூன், மூன்று நாள் பயணமாக, இன்று இந்தியா வருகிறார். இன்று அவர், மும்பையில் பல நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார்.வல்லரசு நாடுகளில் ஒன்றான பிரிட்டனின் பிரதமர் டேவிட் கேமரூன், 2010, மே மாதம் இந்தியா வந்தார். இரண்டாவது முறையாக, இன்று அவர் மீண்டும் வருகிறார். லண்டனில் இருந்து, நேரடியாக மும்பை வரும் அவர், மாலை வரை, மும்பையில் இருப்பார்.இரவில், டில்லி சென்றடையும் அவர், முன்னதாக, மும்பை தொழில் அதிபர்களை சந்திக்கிறார். செயின்ட் சேவியர்ஸ் பள்ளிக்கு செல்லும் அவர், அங்குள்ள போலீஸ் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து வணங்குகிறார். நாளையும், நாளை மறுநாளும் அவர் டில்லியில் தங்கியிருந்து, பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் அமைச்சர்களை சந்தித்து பேசுகிறார்.இத…
-
- 1 reply
- 476 views
-
-
பெங்களூர் நகரில், ஆட்டோ ஓட்டி, பிழைப்பு நடத்திய பெண், வழக்கறிஞராகி, சாதனை படைத்துள்ளார்.வெங்கடலட்சுமி, 40, பெங்களூரு நகர வீதிகளில், ஆட்டோ ஓட்டும் பெண்களில் ஒருவர். பட்டப்படிப்பு முடித்திருந்த இவர், வழக்கறிஞராக வேண்டும் என, சிறு வயதிலிருந்தே விரும்பினார்.எனினும், பட்டப்படிப்பு முடித்ததும், திருமணம், குழந்தை, வாழ்க்கையை ஓட்ட, ஆட்டோ ஓட்ட வேண்டிய நிர்பந்தம் போன்ற கட்டாயங்களால், நேரடியாக அவரால், வழக்கறிஞர் ஆக, தேவையான படிப்பை படிக்க முடியவில்லை. கடந்த, 13 ஆண்டுகளாக, ஆட்டோ ஓட்டி வரும் வெங்கடலட்சுமி, தினமும் காலை, 8:00 மணிக்கு, தன் பணிகளை துவக்கி விடுவார். 8:30 மணிக்கு, மகளை, பள்ளியில் கொண்டு விடும் இந்த பெண், 10 கி.மீ., தூரத்தில், பசவேஸ்வர் நகரில் உள்ள, பாபு ஜெகஜீவன் ராம் ச…
-
- 1 reply
- 1.2k views
-
-
‘‘வினோதினியின் முன் நாம் எப்படி நம் முகத்தைக் காட்டப் போகிறோம்?’’ வினோதினி பற்றி நாம் முன்பு எழுதிய கட்டுரையின் இறுதிவரியாக இதை எழுதியிருந்தோம். இப்போது அந்த இறுதி வரிகளையே முதல் வரிகள் ஆக்கவேண்டிய வேதனையான கட்டாயத்தை காலம் நமக்கு இட்டிருக்கிறது. மூன்று மாதங்களாக உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த வினோதினி பிப்ரவரி 12-ம் தேதி காதலர் தினத்துக்கு இரு நாட்கள் முன்பு தன் மூச்சை நிறுத்திக்கொண்டிருக்கிறாள்... மன்னிக்கவும் கொல்லப்பட்டிருக்கிறாள். அழகான முகத்தை உடைய அந்த சகோதரி ஒருவனை காதலிக்க மறுத்ததன் காரணமாக, முகத்தில் திராவகம் வீசப்பட்டாள். வேதனையும் வலியுமாக இத்தனை நாட்கள் மருத்துவமனையில் திணறிக் கொண்டிருந்த அவளை மரணம் அந்த வலியில் இருந்து விடுதலை செய்திருக்கிறது. …
-
- 0 replies
- 1.1k views
-
-
22 பேர் பலியான வழக்கில் தூக்கு தண்டனை கைதிகள் 4 பேரும் வீரப்பனை பார்த்தது கூட இல்லை ஈரோடு : கடந்த 1993ம் ஆண்டு ஏப்ரலில் கர்நாடகா போலீஸ் வேனை வெடிகுண்டால் சிதறடித்து 22 பேர் பலியான சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட பிலேந்திரன், மீசை மாதையன், ஞானபிரகாசம், சைமன் ஆகியோருக்கு தூக்கு தண்டனை விதித்து சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு கூறியுள்ளது. இந்நிலையில், தமிழக , கர்நாடக அதிரடிப்படையால் பாதிக்கப்பட்ட எல்லையோர கிராமங்களை சேர்ந்த நூற்றுக்கணக்கான மக்கள் பங்கேற்ற மாநாடு நேற்று ஈரோட்டில் நடந்தது. இதில் செய்தியாளர்களிடம் 4 பேரின் குடும்பத்தினர் கண்ணீர் பேட்டி அளித்தனர். அதன் விவரம் வருமாறு: தூக்கு கைதி மீசை மாதையன் மகள் அம்மாசி (30): கர்நாடகா அதிரடிப்படை போலீசார் சந்தேகத்தி…
-
- 1 reply
- 554 views
-
-
பெல்காம்: நான்கு வீரப்பன் கூட்டாளிகளும் தற்போது பெல்காம் சிறையில் தனிமைச் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். அங்கு அவர்களுக்கு விருப்பமான உணவுகள் வழங்கப்பட்டு வருகின்றன. அவர்களை அசோக் என்பவர் தூக்கில் போட தயாராக இருக்கிறார் என்று தகவல்கள் கூறுகின்றன. நான்கு பேரையும் காப்பாற்ற குடும்பத்தினர் கடுமையாக போராடி வரும் நிலையில் மறுபக்கம் நாளையே அவர்களைத் தூக்கிலிடத் தேவையான ஏற்பாடுகள் முடுக்கி விடப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. நான்கு பேரின் கருணை மனுக்களும் நிராகரிக்கப்பட்டதைத் தொடர்நது தற்போது அவர்களை பெல்காம் சிறையின் தனிமைச் சிறையில் அடைத்துள்ளனராம். Read more at: http://tamil.oneindia.in/news/2013/02/17/india-veerappan-associates-be-hanged-hangman-ashok-1699…
-
- 0 replies
- 548 views
-
-
ஈரானில் உள்ள கடைகளில், புத்தர் சிலை விற்பனைக்கு, தடை விதிக்கப்பட்டுள்ளது. ஈரானில், பார்பி பொம்மை, உள்ளிட்ட மேற்கத்திய பாணி சிலைகள், பல ஆண்டுகளாக தடைசெய்யப்பட்டுள்ளன.தற்போது, அந்நாட்டில், புத்தர் சிலை விற்பனைக்கும் தடைவிதிக்கப்பட்டுள்ளது. புத்த மதம் பரவுவதை தடுக்கும் நடவடிக்கையாக, அந்நாட்டின் கடைகளில் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த, புத்தர் சிலைகள், அகற்றப்படுகின்றன.புத்தர் சிலைகள் விற்கப்படுவது, கலாச்சார அத்துமீறல் என, அந்நாட்டு கலாச்சார பாதுகாப்புத் துறை அதிகாரி தெரிவித்தார். http://tamil.yahoo.com/%E0%AE%AA-%E0%AF%8D-%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A-%E0%AE%B2-%E0%AE%95%E0%AE%B3-%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%88%E0%AE%B0-165500541.html Iran confiscates Budd…
-
- 5 replies
- 698 views
-
-
உலகத்தின் நாணயம் வழங்கும் தொகையில் அமெரிக்க நாணயத்தின் அளவு தொடர்ச்சியான வீழ்ச்சியைச் சந்தித்து வருகிறது. இன்று உலகின் நாணயச் சந்தையில் ஆறு ரில்லியன் டொலர்கள் பெறுமதியான பணத்தொகை புழக்கத்திலுள்ளது. அதன் 62 வீதத்தை இன்றும் அமெரிக்க டொலர்களே ஆக்கிரமித்துக் கொண்டுள்ளது. அமெரிக்க டொலர்களின் தொலை 3.2 ரில்லியன் ஆகும். இருந்த போதும் அமரிக்க டொலர் பதினைந்து வருட தொடர் வீழ்ச்சியைச் சந்தித்துள்ளதாக சர்வதேச நாணய நிதியம் அறிவித்துள்ளது. ஜப்பானிய யென், சீன யுவான், சுவிஸ் பிராங் ஆகிய நாணயங்கள் சந்தையை ஆக்கிரமித்து வரும் அதேவேளை வேறு நாணயங்களும் சந்தையில் அமரிக்க நாணயத்தை நிரப்பி வருவதாக ஐ.எம்.எப் தெரிவிக்கின்றது. அமெரிக்க மக்களின் பெரும்பன்மையினர் நம்பவில்லை என்றாலும் டொ…
-
- 1 reply
- 532 views
-
-
ரஷ்ய வான் பகுதியில் எரிநட்சத்திரம் வெடித்துச் சிதறியபோது வெளியான சக்தி ஹிரோஷிமா நகரில் அமெரிக்கா போட்ட அணுகுண்டு வெடித்தபோது ஏற்பட்ட சக்தியை விட அதிக சக்தி வாய்ந்தது, என்று நாசா விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.ரஷ்யாவின் யுரால் மலைத் தொடர் பகுதியில்,வான்வெளியில் எரி நட்சத்திரம் ஒன்று 2 நாட்களுக்கு முன்பு விழுந்தது. இதன் அதிர்வலைகளால் வீட்டு கண்ணாடிகள் உடைந்தும் மேற்கூரைகள் விழுந்தும் 1100 பேர் படுகாயமடைந்தனர். ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் இருந்து 1,500 கிலோ மீட்டர் தொலைவில் யுரால் பகுதியில் உள்ள ஒன்று செல்யபின்ஸ்க் என்ற இடத்தில் இந்த பெரிய எரிநட்சத்திரம் விழுந்து வெடித்துச் சிதறியது. அப்போது நிலநடுக்கத்தைப் போல மிகப் பெரிய அதிர்வுகள் ஏற்பட்டிருக்கின்றன. வானிலிருந்து…
-
- 0 replies
- 445 views
-
-
உலகிலேயே உயரமான கட்டடம் - கராச்சியில் கட்டுகிறார் பாகிஸ்தான் தொழிலதிபர்! [sunday, 2013-02-17 18:21:00] துபாயில் உலகிலேயே மிக உயரமான புர்ஜ் கலிபா என்ற கட்டிடம் உள்ளது. அதை மிஞ்சும் வகையில் பாகிஸ்தான், கராச்சியில் ஒரு கட்டிடம் கட்டப்பட உள்ளது. இதை பாகிஸ்தானின் கட்டுமான தொழில் அதிபர் மாலிக் ரியாஷ் கட்டுகிறார். இதற்காக 45 பில்லியன் டொலர் செலவிடப்படுகிறது. 16 ஆயிரம் ஏக்கரில் கட்டப்படும் இந்த கட்டிடத்தில், 1 லட்சத்து 25 ஆயிரம் வீடுகள் கட்டப்பட உள்ளன. இவை தவிர ஓட்டல்கள், வர்த்தக மையங்கள், கல்வித்துறை வளாகங்கள் உள்ளிட்ட அனைத்து வசதிகளும் இருக்கும். இக்கட்டிடம் கராச்சியில் எங்கு கட்டப்படுகிறது என்ற தகவல் வெளியாகவில்லை. அநேகமாக கராச்சி அருகே 3 முதல் 4 கி.மீட்டர் தொலைவில் அரபிக…
-
- 1 reply
- 339 views
-
-
டொரண்டோவில் Queens Quay West பகுதி அருகே Gardiner Expressway என்ற இடத்தில் அருகேயுள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் திடீரென துப்பாக்கி சூடு நடத்தப்பட்டதால், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்த அடுக்குமாடி குடியிருப்பின் 12 வது மாடியில் ஜன்னல் வழியாக திடீரென துப்பாக்கி சூடு மர்ம நபர்களால் நடத்தப்பட்டதாகவும், இந்த சம்பவம் அதிகாலை 4.30 மணியளவில் நடந்தது என்றும் காவல்துறையினர் செய்தியாளர்களிடம் கூறினர். இந்த துப்பாக்கி சூடு சம்பவத்தால் Highway at Spadina Avenue சாலையின் பல பகுதிகள் போலீஸாரின் விசாரணைக்காக மூடப்பட்டுள்ளதாகவும், விசாரணை முடிந்த பின்னர் திறந்துவிடப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக இதுவரை யாரும் …
-
- 0 replies
- 356 views
-
-
அமெரிக்கா மற்றும் கனடாவில் தயாரான 570,000 ஆயிரம் கார்களை திரும்ப பெறுகிறது பி.எம்.டபுள்யூ.கார் நிறுவனம். 3-சீரியஸ் செடான்ஸ், மற்றும் வேகன்ஸ் மாடல் கார் எஞ்சினில் உள்ள பேட்டரி கேபிள் இணைப்பு பிரச்சினையால் அந்நிறுவனம் அதனை மாற்றி தர 570,000 கார்களை திரும்ப பெறுகிறது. 3 சீரியஸ் செடான்ஸ் கார்களில் உள்ள ஃபியூஸ் பாக்ஸின் கேபிள் இணைப்புகள் சரியாக அமையாத காரணத்தினால், காரின் மின்சாரம் அடிக்கடி தடைபடுவதாகவும், இதனால் இன்ஜின் மற்றும் சில உதிரி பாகங்கள் பழுதடைய காரணமாக இருப்பதாலும், இவ்வகை மாடல் கார்களை திரும்ப பெற்றுக்கொள்ள பி.எம்.டபுள்யூ கார் நிறுவனம் முடிவு செய்துள்ளது. சென்ற ஆண்டு அமெரிக்காவில் மிகவும் பிரபலம் அடைந்த இந்த கார் 2012 ஆம் ஆண்டு மட்டும் சுமார் …
-
- 0 replies
- 456 views
-
-
கனடா நாட்டில் பூர்விக மக்கள் நலத்துறை மந்திரியாக ஜான் டூன்கான் என்பவர் பதவி வகித்து வந்தார். ஆனால் இவர் தனது நிர்வாகத்தை சீராக நடத்தவில்லை என்றும், பூர்விக மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்த எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என கோரி இவருக்கு எதிராக போராட்டம் நடந்தது. இதனை அடுத்து ஜான் டூன்கான் நேற்று மந்திரி பதவியை ராஜினாமா செய்தார். மந்திரிசபையில் இருந்து ராஜினாமா செய்த முதல் நபர் இவர் ஆவார். இந்த பொறுப்பை மற்றொரு மந்திரியான ஜேம்ஸ்மூர் ஏற்று கொண்டார். ராஜினாமா செய்த கனடா அமைச்சர் ஜாண்டுன்கான் புகைப்படம் பார்க்க..
-
- 0 replies
- 365 views
-
-
கனடாவின் பிரபல இணையதளத்தின் புகைப்படக்காரர் எடுத்த ஒரு புகைப்படம் International Society for News Design awards என்ற விருதை பெற்றுள்ளார். அவர் எடுத்த ஒரு அற்புதமான புகைப்படத்திற்காக வெள்ளிப்பதக்கம் கிடைத்துள்ளது. கனடாவின் பிரபல செய்தி இணையதளமான டொரண்டோ ஸ்டார் என்ற பத்திரிகையின் புகைப்படக்காரர் Rick Madonik என்பவர், நயாகரா நீர்வீழ்ச்சியை Nik Wallenda என்பவர் கயிறு மூலம் கடந்ததை புகைப்படம் எடுத்தார். அப்போதே இந்த புகைப்படம் பெரிய அளவில் பேசப்பட்டது. பிரபல டைம் பத்திரிகையின் 2012ஆம் ஆண்டின் Most Surprising Photos விருதினை தட்டிச் சென்றது. இந்த புகைப்படத்திற்கு தற்போது புதிய கெளரவம் கிடைத்துள்ளதால், அவர் மிகவும் மகிழ்ச்சியடைவதாக செய்தியாளர்களிடம் கூறினார். இந்த பு…
-
- 0 replies
- 408 views
-
-
அமெரிக்க அரசை ஏமாற்றி $15 மில்லியன் பணத்தை முறைகேடு செய்த பயங்கர குற்றவாளி ஒருவனை டொரண்டோ காவல்துறையினர் வெள்ளிக்கிழமை அதிரடியாக கைது செய்தனர். Franzie Colaco என்ற 53 வயது நபர் ஒருவர், அமெரிக்க அரசுக்கு செலுத்த வேண்டிய வரி $15 மில்லியனை கட்டாமல் ஏமாற்றி வந்ததாக குற்றம் சாட்டப்பட்டார். இவர் மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்கும் நேரத்தில், கனடாவுக்கு தப்பிவிட்டதாக தெரிகிறது. இவர் 2009 மற்றும் 2010 ஆகிய இரண்டு ஆண்டுகளில் இந்த முறைகேட்டில் ஈடுபட்டுள்ளார் என்று தெரிகிறது. அமெரிக்க அரசின் The Internal Revenue Service அளித்த புகாரின் பேரில் இவர் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க அமெரிக்க அரசு ஆணையிட்டது. ஆனால் இவர் தந்திரமாக தப்பி, கனடாவிற்கு சென்றுவிட்டார். தற்…
-
- 0 replies
- 440 views
-
-
கனடாவில் வோட்கா என நினைத்து வாஷிங் திரவத்தை குடித்து உயிரிழந்த பீர் ஸ்டோரில் வேலை பார்க்கும் ஒரு தொழிலாளியின் குடும்பத்திற்கு நஷ்ட ஈடாக $175,000 வழங்க வேண்டும் என நீதிமன்றம் அதிரடியாக உத்தரவு பிறப்பித்துள்ளது. Brewers Retail Inc.,என்ற பீர் ஸ்டோர் கனடாவின் ஒண்டோரியா மாகாணத்தில் உள்ள மிஸ்ஸிஸூகா நகரத்தை தலைமையிடமாக கொண்டு, மொத்தம் 421 கிளைகளுடன் செயல்பட்டு வருகிறது. இதில் பிராம்ப்டன் நகர கிளையில் பணிபுரியும், John Whitcombe என்பவர் வோட்கா என நினைத்து, வாஷிங் திரவத்தை குடித்து பரிதாபமாக உயிரிழந்தார். John Whitcombe மற்றும் அவருடன் பணிபுரியும் இன்னொருவரும், அன்று டெலிவரியான வாஷிங் திரவங்களில் ஒரு பாட்டில் மட்டும் வோட்கா லேபிளில் வந்துள்ளதை பார்த்து, இது உண்மையிலேய…
-
- 1 reply
- 503 views
-
-
பிரிட்டிஷ் கொலம்பியாவில் உள்ள விக்டோரியோவில் மாணவர்கள் குழுவாக தங்கியிருந்த ஒரு வீட்டில் ஏற்பட்ட தீவிபத்தில் ஒரு பெண் உள்பட இரண்டு பேர் பலியாகினர். ஒருவர் உயிருக்கு போராடிய நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். விக்டோரியோ மாகாணத்தில் உள்ள ஒரு வீட்டில் மாணவ மாணவிகள் குழுவாக ஒரு வீடு வாடகைக்கு எடுத்து தங்கி படித்து வந்தனர். அவர்கள் நேற்று வெள்ளிகிழமை இரவு நீண்ட நேரம் வரை விருந்தில் பங்குகொண்டிருந்தனர் என்றும், பின்னர் அதிகாலை 4.30 மணிக்கு திடீரென எதிர்பாராதவிதமாக தீப்பிடித்து எரிந்ததால், தீயில் சிக்கி ஒரு மாணவியும், ஒரு மாணவரும் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் ஒரு மாணவி உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். Fire C…
-
- 0 replies
- 500 views
-