உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26693 topics in this forum
-
ரஷ்யாவில் இன்று காலை 9.20 மணிக்கு வானத்தில் இருந்து திடீரென ஒரு விண் எரிகல் விழுந்ததால், ஏறத்தாழ 1000 பேர் வரை காயம் அடைந்துள்ளனர். இதில் 82 பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில் அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர். தற்போது இந்த எரிகல் விழுந்த இடத்தை ரஷ்ய விண்வெளி உயரதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர். அது, Chebarkul என்ற இடத்திற்கு அருகிலுள்ள ஒரு ஏரியில் விழுந்துள்ளது. எரிகல் விழுந்த இடத்தில் ஒரு மிகப்பெரிய பள்ளம் ஏற்பட்டுள்ளது. பனிக்கட்டிகளால் மூடப்பட்டிருக்கும் அந்த ஏரி, எரிகல் விழுந்த இடத்தில் மட்டும் பனிக்கட்டிகள் உருகி தண்ணீராக காட்சியளிக்கின்றது. ரஷ்ய விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் இதுகுறித்து தீவிரமாக ஆலோசித்து வருகின்றனர். இதுபோல்…
-
- 1 reply
- 644 views
-
-
இந்திய வி.வி.ஐ.பி.க்கள் பயணிப்பதற்காக 12 ஹெலிகாப்டர்களை வாங்கஇத்தாலி நிறுவனத்துடன் மத்திய அரசு 2010ம் ஆண்டு மேற்கொண்ட ஒப்பந்தத்தை ரத்து செய்யும் நடவடிக்கைகளில் மத்திய பாதுகாப்புத்துறை களமிறங்கியுள்ளது. இந்த ஒப்பந்தம் பெற, ரூ. 400 கோடி அளவில் இந்திய அதிகாரிகளுக்கு லஞ்சம் வழங்கப்பட்டதாக வந்த தகவலையடுத்து, இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. http://tamil.yahoo.com/ஹ-ல-க-ப்டர்-ஒப்பந்-ம்-ர-்-121200295.html
-
- 2 replies
- 408 views
-
-
காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் ராகுல் காந்தி ஒரு கிளார்க் வேலைக்கு கூட லாயக்கில்லாதவர்.. அவரெல்லாம் ஒரு பிரதமர் வேட்பாளரா என்று மூத்த பாஜக தலைவர் ராம்ஜெத்மலானி மிகக் கடுமையாக விமர்சித்துள்ளார். பெங்களூரில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய ராம்ஜெத்மலானி, காங்கிரஸ் கட்சியினர் ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளர் என்கின்றனர்.. அதற்கு அவருக்கு தகுதி இருக்கிறதா என்ன? அவர் கிளார்க் வேலைக்குக் கூட தகுதியில்லாதவர் என்று கடுமையாகத் தாக்கியிருக்கிறார். மேலும் மத்திய அரசின் பொருளாதாரக் கொள்கைகளை மிகக் கடுமையாக விமர்சித்த ஜெத்மலானி, சுவிஸ் வங்கியில் பணத்தைப் பதுக்கியவர்கள் பட்டியலை குறிப்பிட்ட நாடுகள் கொடுத்த போதும் மத்திய அரசு ஏன் வெளியிடாமல் இருக்கிறது என்றும் கேள்வி எழுப்பினா…
-
- 0 replies
- 691 views
-
-
வணிகத்தில் லஞ்சம் கொடுப்பது குற்றமில்லை: இத்தாலி முன்னாள் பிரதமர் வணிக நடவடிக்கைகளின்போது லஞ்சம் கொடுப்பது உலக அளவில் அவசியமான ஒன்றாக மாறிவிட்டது. அது குற்றமில்லை என்று இத்தாலி முன்னாள் பிரதமர் சில்வியோ பெர்லஸ்கோனி தெரிவித்துள்ளார். முக்கிய பிரமுகர்களுக்கு ரூ. 3,600 கோடி மதிப்பில் 12 நவீன ஹெலிகாப்டர்களை வாங்குவதற்கான ஒப்பந்தத்தைப் பெற இந்தியாவில் உள்ளவர்களுக்கு இத்தாலி நிறுவனமான ஃபின்மெக்கனிகா ரூ. 360 கோடி லஞ்சம் வழங்கியதாக புகார் எழுந்தது. இது தொடர்பாக இத்தாலி நிறுவன அதிகாரி கியூசெப் ஒர்சி கைது செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில் கியூசெப் ஒர்சிக்கு ஆதரவாக இத்தாலி முன்னாள் பிரதமர் குரல் கொடுத்துள்ளார்.இது தொடர்பாக தொலைக்காட்சி ஒன்றுக்கு சில்வியோ பெர்லஸ்கோனி கூறியதாவது லஞ்…
-
- 0 replies
- 342 views
-
-
டெல்லி: இத்தாலியில் இருந்து 12 ஹெலிகாப்டர்கள் வாங்கியதில் ரூ. 470 கோடி வரை லஞ்சம் கைமாறியுள்ளதாக குற்றச்சாட்டு கிளம்பியுள்ள நிலையில் இந்தியாவில் இந்த லஞ்சம் யாருக்குத் தரப்பட்டது என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்தியாவில் முக்கிய பிரமுகர்கள் பயணத்துக்காக 12 ஹெலிகாப்டர்களை இத்தாலியிடமிருந்து விமானப் படை வாங்கியது. இந்த ஆர்டரை பெற லஞ்சம் கொடுத்ததாக இத்தாலிய பாதுகாப்பு தளவாட உற்பத்தி நிறுவனமான பின்மெக்கானிகாவின் (Finmeccanica) தலைவர் கிஸ்பி ஓர்சி, இதன் துணை நிறுவனமான அகஸ்டா வெஸ்ட்லேண்டின் (Agusta Westland) தலைவர் பர்னோ ஸ்பங்னோலினி ஆகியோரை அந் நாட்டு அரசு இன்று கைது செய்துள்ளது. இந்த நிறுவனத்தில் இத்தாலிய அரசுக்கும் 30 சதவீத பங்குகள் உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்தியாவைச் சேர்ந்…
-
- 10 replies
- 940 views
-
-
American Airlines மற்றும் US Airways ஆகிய இரண்டு விமான சேவை நிறுவனங்களும் ஒன்றாக இணைந்து, உலகின் மிகப் பெரும் விமான சேவை, 11 Billions USD, நிறுவனத்தை உருவாக்கவுள்ளன. இரண்டு நிறுவனங்களினது நிர்வாக சபைகளும் நேற்றுச் சந்தித்து இந்த நடவடிக்கைக்கு அங்கிகாரம் வழங்கியதாக செய்திகள் வெளியாகிய நிலையில், இன்று காலையில் அது குறித்து உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டது. லாபகரமாக செயற்பட்ட American Airlines நிறுவனம் சில ஆண்டுகளுககு முன்பு வங்குறோத்து நிலையை அடைந்தமை குறிப்பிடத்தக்கது. http://thamilfm.com/thamilfm/NewClients/NewsDetail.aspx?ID=13676
-
- 0 replies
- 490 views
-
-
ஈரானும் போட்டோஷொப் விளையாட்டுகளும்! ஈரான் அண்மையில் Qaher-313 என்ற போர் விமானத்தை அறிமுகப்படுத்தியது. இவ்விமானம் 'ஸ்டெல்த்' அதாவது ராடார்களுக்கு அகப்படாமல் பயணிக்ககூடிய தொழிநுட்பத்தை உபயோகப்படுத்தி உருவாக்கப்பட்டதென ஈரான் தெரிவித்திருந்தது. இது முழுமையாக தனது சொந்த நாட்டு தயாரிப்பு என ஈரான் அறிவித்திருந்தது. மேலும் அமெரிக்காவின் F-35, F-22 போர் விமானங்களின் வசதிகளையும் Qaher-313 கொண்டுள்ளதாக ஈரான் குறிப்பிட்டிருந்தது. இதன் படங்களும் கடந்த சில தினங்களுக்கு முன்னர் ஊடகங்களில் வெளியாகியிருந்தது. இதன் படங்கள் பல சர்ச்சைகளை ஏற்படுத்தியிருந்தது. இதன் உண்மைத்தன்மை தொடர்பில் சர்வதேச ஊடகங்கள் கேள்வி எழுப்பியிருந்தன. விமானம் மிகவும் சிறியதாக உள்ளமை, பிளாஸ்ரிக்கினால் உர…
-
- 3 replies
- 611 views
-
-
தங்கள் நாட்டின் சுதந்திரமான நீதித்துறை நடவடிக்கைகளில் இந்தியா தலையிடுவதாக மாலத்தீவுகள் குற்றம்சாட்டியுள்ளது. மாலத்தீவு முன்னாள் அதிபர் நஷீத் கைது நடவடிக்கைகளில் இருந்து தப்புவதற்காக இந்திய தூதரகத்தில் தஞ்சமடைந்துள்ளார். இதுகுறித்து கருத்து தெரிவித்த இந்தியா, வரும் செப்டம்பர் மாதம் நடக்கவுள்ள மாலத்தீவு அதிபர் தேர்தலில் போட்டியிடவுள்ள முக்கிய கட்சியின் வேட்பாளரை, சுதந்திரமாக தேர்தலில் போட்டியிட அனுமதிக்க வேண்டும் என தெரிவித்திருந்தது. இதற்கு பதிலளித்துள்ள மாலத்தீவுகள், இந்தியா, தங்கள் நாட்டின் ஜனநாயக முறையை குறைத்து மதிப்பிடுவதாகவும், தங்கள் நாட்டின் சுதந்திரமான நீதித்துறை நடவடிக்கைகளில் இந்தியா தலையிடுவதாகவும் குற்றம்சாட்டியுள்ளது. http://tamil.yahoo.com/இந்…
-
- 1 reply
- 769 views
-
-
கால சக்கரம் http://anbanavargal.blogspot.ca/p/blog-page.html
-
- 19 replies
- 8k views
-
-
பாப்பரசர் 16ம் ஆசிர்வாதப்பரை ரோமிலிருந்து வெளியேற்ற சதி?: பதவிக்கான பனிப்போர் ஆரம்பம்! பாப்பரசர் 16ம் ஆசிர்வாதப்பரை ரோமிலிருந்து வெளியேற்றும் நடவடிக்கைகள் மறைமுகமாக முன்னெடுக்கப்பட்டு வருவதாக தகவல்கள் கசிந்துள்ளன. உடல் நிலையைக் கருத்தில் கொண்டு இம்மாதம் 28 ஆம் திகதி பதவிவிலகுவதாக 85 வயதான பாப்பரசர் 16ம் ஆசிர்வாதப்பர் இரு தினங்களுக்கு முன்னர் அறிவித்தார். இதன் பின்னர் அவர் வத்திக்கானிலேயே தங்கியிருப்பார் என்ற தகவலும் நேற்று வெளியாகியது. எனினும் அவரை அங்கிருந்து வெளியேற்றுவதற்கான மறைமுக நடவடிக்கைகள் இடம்பெற்றுவருவதாக கத்தோலிக உயர் பீடத்திலிருந்து தகவல்கள் கசிந்துள்ளன. பதவிவிலகிய பாப்பரசர் ஒருவர் அங்கே தங்கியிருந்தால் புதிதாக அப்பதவிக்கு தெரிவுசெய்யப்படும் ஒருவ…
-
- 0 replies
- 494 views
-
-
இந்தியா மீதான மறைமுகத் தாக்குதலை பாகிஸ்தான் தொடர்ந்து மேற்கொள்ளும். அதற்காக தனது அணு ஆயுத பலத்தை அதிகரித்துக் கொள்வதுடன், பயங்கரவாத இயக்கத்தினருக்கும் அந்நாடு ஆதரவு அளிக்கும் என்று அமெரிக்க நாடாளுமன்றத் துணை குழுவிடம் பாதுகாப்பு நிபுணர் ஒருவர் தெரிவித்தார். பாதுகாப்புத் துறை சார்ந்த அமெரிக்க நாடாளுமன்ற துணைக் குழுவில், குடியரசுக் கட்சி உறுப்பினர் ரிச் நியூஜென்ட் உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனர். இக்குழுவின் உறுப்பினர்கள் கேட்ட கேள்விகளுக்கு பாதுகாப்புத் துறை நிபுணர்கள் தங்களின் கருத்துகளைத் தெரிவித்தனர். இந்தியா - பாகிஸ்தான் உறவு குறித்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் கேட்டபோது, தேசிய பாதுகாப்பு பல்கலைக்கழக முதுநிலை ஆய்வாளர் ஃபிராங்க் ஹாஃப்மேன் கூறியதாவது:÷""இந்தியாவின் ப…
-
- 1 reply
- 489 views
-
-
காதலர் தினமான இன்று, பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுக்கக்கோரும் தினமாக கடைப்பிடிக்கப்படுகிறது. இதையொட்டி 200 நாடுகளில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. உலகமெங்கிலும் உள்ள பெண்ணுரிமை அமைப்புகள், பெண்களுக்கு ஆதரவான அமைப்புகள் விழிப்புணர்வு பேரணி மற்றும் நிகழ்ச்சிகளை இன்று நடத்துகின்றன. இதையொட்டி, ஒன் பில்லியன் ரைசிங் (ONE BILLION RISING) என்ற பெயரில் பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுக்கக்கோரி சிறப்பு பாடலும் வெளியிடப்பட்டுள்ளது.
-
- 2 replies
- 498 views
-
-
பாகிஸ்தானில் காதலர் தின ஒளிபரப்புகளுக்கு எதிர்ப்பு பாகிஸ்தானின் ஒலி-ஒளிபரப்பு ஆணையம் , நாட்டின் வானொலி மற்றும் தொலைக்காட்சி நிலையங்களை, காதலர் தினக் கொண்ட்டங்களைப் பற்றி செய்தி வெளியிடுவதை மட்டுப்படுத்திக்கொள்ளுமாறு கூறியிருக்கிறது. காதலர் தினக் கொண்ட்டங்கள் குறித்த செய்திகள், மத உணர்வுகளைப் புண்படுத்துவதையும், நாட்டின் இளைஞர்களைக் கெடுப்பதையும் தவிர்க்கவே அது இவ்வாறு கோரியிருப்பதாகக் கூறுகிறது. காதலர் தினம் கொண்டாடப்படுவது நாட்டின் மத விழுமியங்களுக்கு எதிரானது என்று சமூகத்தின் பெரும்பாலான தரப்புகளிலிருந்து வந்த புகார்களை அடுத்தே தான் இந்த நடவடிக்கையை எடுப்பதாக ஆணையம் கூறியது. ஆனால் காதலர் தினம் பாகிஸ்தானில் பிரபலமடைந்துவருவதாகவும், நாட்டின் தலைநகர் இஸ்லாமாபாத…
-
- 0 replies
- 375 views
-
-
சிதம்பரம்: அண்ணாமலைப் பல்கலைக் கழக ஊழியர்கள் 4 பேர் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றதால் அப்பல்கலைக்கழக வளாகத்தில் பரபரப்பு காணப்படுகிறது. கடந்த சில தினங்களுக்கு முன்னர் முருகதாஸ், பிரபு, மீனாட்சி சுந்தரம் மற்றும் கார்த்திக் ஆகிய 4 பேரும், சோதனையின்போது பணியில் இல்லாததால் பனியிடை நீக்கம் செய்யப்பட்டனர். இந்நிலையில் அவர்கள் 4 பேரும் இன்று திடீரென் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்ற நிலையில், மயங்கி விழுந்த அவர்கள் அண்ணாமலை பல்கலைக் கழக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். http://news.vikatan.com/?nid=12425#cmt241
-
- 0 replies
- 1.7k views
-
-
சென்னை: சென்னையை சேர்ந்த கப்பல் கேப்டன் வில்லியம்ஸ் உள்பட 18 பேர் சோமாலிய கடற்கொள்ளையர்களால் கடத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. கடந்த 12 ஆம் தேதியன்று இவர்கள் நைஜீரிய நாட்டு துறைமுகத்திலிருந்து, 120 கி.மீ. தொலைவில் நிறுத்தப்பட்ட கப்பலுக்கு , சிறிய கப்பல் மூலம் சென்ற நிலையில், 2 தினங்கள் ஆகியும் கப்பலில் சென்று சேராததால், நடுக்கடலில் கொள்ளையர்கள் இவர்களை கடத்திச் சென்றிருக்கலாம் என தெரியவந்துள்ளது. அவர்களது கதி என்னவானது என தெரியாத நிலையில், காணாமல்போன 18 பேர்களையும் அட்லாந்திக் பெருங்கடல் பகுதியில் நைஜீரிய கடற்படையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். இதனிடையே கடத்தப்பட்ட கப்பல் கேப்டன் வில்லியம்ஸின் மனைவி கிளாடிஸ், சென்னை நங்கநல்லூரில் வசிக்கிறார்.கணவர் கப்பல் …
-
- 0 replies
- 505 views
-
-
காவிரி நீர் விவகாரம் தொடர்பாக வரும் 18ம் தேதி கர்நாடக அனைத்துக் கட்சிப் பிரதிநிதிகள் டெல்லியில் பிரதமரை சந்தித்து முறையிட உள்ளனர்.கர்நாடக சட்டப்பேரவையில் இது தொடர்பான அறிவிப்பை முதலமைச்சர் ஜெகதீஷ் ஷெட்டர் வெளியிட்டார். Puthiyathalaimurai
-
- 0 replies
- 435 views
-
-
GO இரயிலில் பயணம் செய்த 15 வயது இளம்பெண்ணை பாலியல் தொந்தரவு கொடுத்த 27 வயது நபர் ஒருவரை டொரண்டோ காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சென்ற வாரம் 15 வயது இளம்பெண் ஒருவர், GO இரயிலில் Lakeshore East line பகுதியில் பயணம் செய்து கொண்டிருந்தபோது, அவருக்கு அருகில் வந்து அமர்ந்த 27 வயது இளைஞர் ஒருவர், தன்னுடைய மொபைல் போனில், இளம்பெண்ணை புகைப்படம் எடுத்ததாகவும், பின்னர் உடைகளை தளர்த்தி பாலியல் தொந்தரவு கொடுத்ததாகவும் கூறப்படுகிறது. இரயில் Rouge Hill station வந்தடைந்ததும், இளம்பெண், அங்குள்ள காவலர்களிடம் புகார் செய்துள்ளார். ஆனால் அதற்குள் அந்த இளைஞன் தப்பி ஓடிவிட்டதாக கூறப்படுகிறது. பின்னர் சிறிது நேரம் கழித்து, அதே நபர் மீண்டும் இளம்பெண்ணை தொடர்ந்து வந்தபோது, …
-
- 0 replies
- 622 views
-
-
டொரண்டோ நகரில் அதிகரித்து வரும் தொலைபேசி மற்றும் மொபைல்களின் எண்ணிக்கையை கருத்தில் கொண்டு, வாடிக்கையாளர்களின் வசதிக்காக புதிய ஏரியா கோட் எண்களை அறிமுகப்படுத்த டொரண்டோ தொலைபெசித்துறை முடிவு செய்துள்ளது. இந்த புதிய ஏரியா கோட் எண்கள் மார்ச் மாதம் 25ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வரும் தெரிகிறது. இந்த புதிய எண்கள் வயர்லெஸ் மொபல்களுக்கு மிகவும் அத்தியாவசமானதாக இருக்கும். டொரண்டோ நகரில் 416 மற்றும் 647 போன்ற எண்கள் பயன்படுத்துவோர் இனி 437 என்ற எண்களை சேர்க்க வேண்டும். 905 மற்றும் 289 போன்ற எண்கள் பயன்படுத்தும் Ontario, including Ajax-Pickering, Brampton, Burlington, Hamilton, Markham, Milton, Mississauga, Oakville, Oshawa, Richmond Hill, St. Catharines and …
-
- 1 reply
- 524 views
-
-
ஒண்டோரியோவை சேர்ந்த London West, என்ற தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு எனர்ஜி அமைச்சராக பணிபுரிந்து வந்த Chris Bentley திடீரென தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார். இதனால் அப்பகுதியில் பரபரப்பு காணப்படுகிறது. Kathleen Wynne புதிய பிரிமியராக கடந்த திங்கட்கிழமை பதவியேற்று கொண்டதும், தனது பதவியை The London West MPP ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார். இது கனடிய அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தனது இரண்டு பக்க நீண்ட அறிக்கையில் Chris Bentley, தனது ராஜினாமா குறித்து விளக்கம் அளித்துள்ளதாக கூறப்படுகிறது. தன்னை தேர்ந்தெடுத்த மக்களுக்காக தான் மிகவும் அர்ப்பணிப்பு உணர்வுடன் பணிபுரிந்ததாகவும், சில தவிர்க்க இயலாத காரணத்தால் ராஜினாமா செய்யக்கூடிய…
-
- 1 reply
- 391 views
-
-
மாலத்தீவின் முன்னாள் அதிபர் முகம்மத் நசீதை கைது செய்ய அந் நாட்டு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இதையடுத்து அவர் அந் நாட்டில் உள்ள இந்தியத் தூதரகத்தில் தஞ்சமடைந்துள்ளார். அவருடன் 6 எம்.பிக்களும் இந்திய தூதரகத்தில் தஞ்சமடைந்துள்ளனர். இதையடுத்து மாலே நகரில் உள்ள இந்தியத் தூதரகத்தை அந் நாட்டு கலவரத் தடுப்பு போலீசார் சுற்றி வளைத்துள்ளனர். இதனால் அங்கு பெரும் பதற்றம் நிலவுகிறது. கடந்த ஆண்டு அந் நாட்டு தலைமை நீதிபதி அப்துல்லா முகம்மத் கைது செய்யப்பட்டார். அதிபராக இருந்த நசீத்தீன் உத்தரவால் அவர் கைதானார். இதையடுத்து நாட்டில் புரட்சி வெடித்தது. நசீத் பதவியிலிருந்து விரப்பட்டார். நீதிபதி கைது செய்யப்பட்ட வழக்கு விசாரணை நடந்து வருகிறது. இதில் கடந்த 10ம் தேதி நசீத் நீதிமன்றத்தி…
-
- 2 replies
- 462 views
-
-
டொரண்டோ நகரத்தின் 39வது வார்டு கவுன்சிலர் Mike Del Grande திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு எவ்விதமான நோய் உள்ளது என்பது குறித்து விளக்கமான தகவல் எதுவும் வெளியாகவில்லை. வேலை பளு அதிகம் உள்ள காரணத்தாலும், மன அழுத்தம் காரணத்தாலும் அவருடைய உடல் பாதிப்பு அடைந்ததாக கூறப்படுகிறது. டொரண்டோ மேயர் ராப் ஃபோர்டின் பட்ஜெட் தயாரிக்கும் பணியில் முக்கிய நபராக நியமிக்கபட்டிருக்கும் கவுன்சிலர் . Mike Del Grande என்பவர் Scarborough-Agincourt நகரத்தின் 39 வது வார்டு கவுன்சிலராக இருக்கின்றார். நேற்று மாலை திடீரென உடல்நலமின்றி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து செய்தியாளர்களிடம் கூறிய அவருடைய உறவினர் ஒருவர், கவுன்சிலர் தினசர் க…
-
- 0 replies
- 347 views
-
-
ஆஸ்திரேலியாவில் வரும் செப்டம்பர் மாதம் நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில், விக்டோரியா மாகாணத்தில் விக்கிலீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அசாஞ்சே போட்டியிடுகிறார். இது குறித்து விக்கிலீக்ஸ் ஆஸ்திரேலிய குடிமக்கள் கூட்டணி (டபிள்யூ.ஏ.சி.ஏ) கட்சி செய்தித் தொடர்பாளர் சாம் கேஸ்ட்ரோ கூறியது: விக்டோரியா மாகாண செனட் உறுப்பினர் பதவிக்கு ஜூலியன் அசாஞ்சே போட்டியிடுகிறார். 10 உறுப்பினர்களைக் கொண்ட தேசியக் குழு, இன்னும் ஒருவாரத்தில் அமைக்கப்படும். அசாஞ்சே தேர்தலில் வெற்றி பெற்று, அவர் அவைக்கு வர இயலாத நிலையில், அவருக்குப் பதில் வேறு நபரை கட்சி பரிந்துரை செய்யும் என்றார். அசாஞ்சேவின் தந்தை, ஜான் ஷிப்டன், புதிதாகத் தொடங்கப்பட்ட விக்கிலீக்ஸ் கட்சியின் தலைமைப் பொறுப்பை ஏற்பார் என அறிவிக்கப்பட்டு…
-
- 0 replies
- 413 views
-
-
ஆயுதப் போராட்டம் மற்றும் போர் நடைபெறும் பகுதிகளில் ராணுவம், போலீஸ் உதவிகளை அளிப்பதோடு நின்றுவிடாமல், மனிதாபிமான மற்றும் பிற வகையான உதவிகளின் மூலம் மக்களைப் பாதுகாப்பதில் ஐ.நா. கவனம் செலுத்த வேண்டும் என்று இந்தியா வலியுறுத்தியுள்ளது. ஐ.நா. பாதுகாப்புக் கவுன்சிலில், "ஆயுதப் போராட்டங்களின் போது மக்களின் பாதுகாப்பு' என்ற தலைப்பில் பொது விவாதம் நடைபெற்றது. இதில், ஐ.நா.வுக்கான இந்தியாவின் நிரந்தரப் பிரதிநிதி ஹர்தீப் சிங் புரி பேசியதாவது: வாழ்வுரிமை என்பது அடிப்படை உரிமைகளுள் ஒன்று. துரதிருஷ்டவசமாக, ஆயுதப் போராட்டங்கள் நடைபெறும் இடங்களில் ஏற்படும் பேரழிவுகளால் மக்களின் உயிருக்கு ஆபத்து ஏற்படுகிறது. ராணுவம் மற்றும் போலீஸார் மூலம் மக்களைப் பாதுகாப்பது என்பதுடன் மட்டும் ஐ…
-
- 0 replies
- 413 views
-
-
டெல்லி: வீரப்பன் கூட்டாளிகள் நால்வரின் கருணை மனுக்களை குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி நிராகரித்துள்ளார். இதனால் அவர்கள் தூக்கிலிடப்படவுள்ளனர். பாகிஸ்தான் தீவிரவாதி அஜ்மல் கசாப், நாடாளுமன்றத் தாக்குதல் வழக்கில் தண்டனை விதிக்கப்பட்ட அப்சல் குரு ஆகியோர் சமீபத்தில் தூக்கிலிடப்பட்டனர். இந்த நிலையில் அடுத்து யார் என்ற கேள்வி விஸ்வரூபம் எடுத்து உலவி வரும் நிலையில் வீரப்பன் கூட்டாளிகள் நால்வரின் கருணை மனுக்களை குடியரசுத்தலைவர் நிராகரித்துள்ள செய்தி வந்துள்ளது. இந்த நால்வரின் பெயர்கள் ஞானப்பிரகாசம், சைமன், மீசைக்கார மாதையா, பிலவேந்திரன் ஆகியோர் ஆவர். இவர்கள் நால்வரும் கர்நாடக மாநிலம் பெல்காம் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். கடந்த 1993ம் ஆண்டு பாலார் காட்டில், வீரப்பன்…
-
- 2 replies
- 484 views
-
-
உக்ரைன் நாட்டில் உள்ள செர்னோபில், அணு நிலையத்தின் கூரை, இடிந்து விழுந்தது. சோவியூத் யூனியனில் இருந்து பிரிந்த நாடு உக்ரைன். 1986ம் ஆண்டு, இங்குள்ள செர்னோபில் அணு நிலையத்தில் விபத்து ஏற்பட்டதில், 30 பேர் பலியாயினர். மோசமான கதிர்வீச்சு ஏற்பட்டது. இதற்கிடையே, தற்போது, உக்ரைனில் கடும் பனி பொழிவு காணப்படுகிறது. இந்த அணுசக்தி நிலையத்தின் கூரையில், பனி குவியல்கள் தேங்கி கிடந்தன. இந்த பனி குவியலின் சுமை தாங்காமல், நேற்று, அணுசக்தி நிலைய கூரையின் ஒரு பகுதி இடிந்து விழுந்தது. எனினும், அணு உலை உள்ள பகுதியில் பாதிப்பு ஏதும் ஏற்படவில்லை. http://tamil.yahoo.com/ச-ர்ன-ப-ல்-அண-சக்-ந-ல-140600141.html
-
- 4 replies
- 599 views
-