உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26727 topics in this forum
-
இஸ்லாமாபாத்: ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் எல்லைக்கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில் கூடுதல் ராணுவத்தினரை பாகிஸ்தான் குவித்து வருவதால் பதற்றம் அதிகரித்துள்ளது. ஏற்கெனவே தமது நாட்டு ராணுவ வீரர்களின் விடுமுறையை பாகிஸ்தான் ரத்து செய்துள்ளது. ஜம்மு காஷ்மீரில் இந்திய எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில் கடந்த ஒருவார காலமாக பாகிஸ்தான் அட்டூழியம் செய்து வருகிறது. ஜனவரி 6-ந் தேதி இந்திய நிலைகளை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தியது பாகிஸ்தான். இதற்கு இந்திய தரப்பில் பதிலடி கொடுக்கப்பட்டது. இதில் அந்நாட்டைச் சேர்ந்த ஒரு ராணுவ வீரர் உயிரிழந்தார். இதைத் தொடர்ந்து கடந்த 8-ந் தேதியன்று பூஞ்ச் பகுதிக்குள் அத்துமீறி நுழைந்து இரண்டு இந்திய வீரர்களை சுட்டுக் கொன்றதுடன் அவர்களது தல…
-
- 1 reply
- 392 views
-
-
இங்கிலாந்து நாட்டை சேர்ந்த தம்பதியான ரால்ப் தாரான்ட்–பில்லிஸ் ஆகியோர் 100 ஆண்டுகளை தாண்டி வாழ்ந்த தம்பதி என்ற பெருமை பெற்றவர்கள். இவர்களில் பில்லிஸ் தனது 102–வது வயதில் மறைந்தார். ஆனால் கணவரான ரால்பி 109 வயது 185 நாட்கள் வரை ஆரோக்கியம் குன்றாமல் வாழ்ந்து சமீபத்தில் மரணத்தை தழுவினார். இவர்கள் 2 உலகப்போரையும், 24 பிரதமர்களையும் கண்டவர்கள். தனது 100 ஆண்டுகள் வாழ்க்கை ரகசியம் என்ன? என்பது பற்றி ரால்பி உயிரோடு இருந்த போது தனது பேரக்குழந்தைகளிடம் கூறியிருக்கிறார். ‘எந்த காரியத்தையும் முனைப்போடும், அறிவுத்திறனுடனும் செய்ய வேண்டும். நல்லது, கெட்டது இரண்டையும் அனுபவி. 70 வயது வரை புகைபிடித்தேன். சாகும் வரையில் மது குடிப்பதை நிறுத்தவில்லை. ஆகவே வாழ்க்கையை பற்றி அதிக கவலைப்பட கூ…
-
- 0 replies
- 373 views
-
-
பாகிஸ்தானின் தென் மேற்கு நகரமான குவெட்டாவில் இடம்பெற்ற இரட்டை குண்டு வெடிப்பில் குறைந்தது 56 பேர் கொல்லப்பட்டுள்ளதாக அந்நாட்டு காவல்துறையினர் கூறுகிறார்கள். பலியானவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும் என பாகிஸ்தானின் உள்துறைச் செயலர் அக்பர் துரானி கூறுகிறார். அந்நகரில் ஜனசந்தடி நிறைந்த ஒரு ஸ்னூக்கர் விளையாட்டு விடுதியில் முதலில் ஒரு குண்டுத் தாக்குதல் நடைபெற்றுள்ளது. அது நடந்து வந்த ஒரு தற்கொலை குண்டுதாரியால் நடத்தப்பட்டிருக்கலாம் என்று காவல்துறையினர் நம்புவதாக ஹமீத் ஷகீல் எனும் அதிகாரி ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார். இத்தாக்குதலில் நூற்றுக்கும் அதிகமானவர்கள் காயமடைந்துள்ளதாக கூறும் காவல்துறையினர், அதில் தமது பல அதிகாரிகளும் அடங்குவர் எனத் தெரிவித்துள்ளனர். முதல் தா…
-
- 7 replies
- 540 views
-
-
http://www.cnn.com/video/?hpt=hp_c3#/video/us/2013/01/10/tsr-pkg-moos-lion-dog.cnn http://www.cbsnews.com/8301-201_162-57563295/lion-dog-gives-virginia-residents-a-scare/#ooid=c0Y2g5ODqBTLyEp0YVt_qDXYq0P8heSi
-
- 1 reply
- 609 views
-
-
உலக அளவில் உற்பத்தியாகும் உணவுப் பொருட்களில், பாதியளவுக்கு விரயமாகிறது என்று பிரிட்டனைத் தலைமையகமாகக் கொண்டுள்ள ஒரு பொறியியல் அமைப்பு கூறியுள்ளது. வறிய நாடுகளில் உணவுப் பொருட்களின் உற்பத்திகள் திறம்பட இல்லாததும், செல்வந்த நாடுகளில் இருக்கும் நுகர்வோர்கள் அதீதமான அளவில் பொருட்கள் நேர்த்தியாக இருக்க வேண்டும் என்று நினைப்பதுமே இதற்கு முக்கிய காரணங்கள் என்று பிரிட்டனிலுள்ள இன்ஸ்டிட்யூஷன் ஆஃப் மெக்கானிக்கல் இஞ்ஜினியர்ஸ் எனும் அமைப்பு தனது ஆய்வறிக்கையில் தெரிவித்துள்ளது. இப்படியாக உணவு தானியங்கள் விரயமாவதை மேம்பட்ட தொழில்நுட்பத்தின் மூலம் சரிசெய்ய இயலும் எனவும் அந்த அமைப்பு கூறியுள்ளது. உலகளவில் படிப்படியாக விவசாய நிலங்களும் நீராதரங்களும் குறைந்து வரும் நிலையில் உணவு …
-
- 0 replies
- 385 views
-
-
By J.Stephan 2013-01-10 22:34:26 சர்வதேச நாடுகளினதும் ஜெனீவா சர்வதேச மனித உரிமைகள் பேரவையினதும் கவனத்தை ஈர்த்துள்ளதான நோர்வேயின் சிறுவர் காப்பக விவகாரம் அங்கு வதிகின்ற வெளிநாட்டுப் பெற்றோரை வெகுவாகப் பாதித்துள்ளது. தமது பிள்ளை பலவந்தமாக தம்மிடத்திலிருந்து பிரிக்கப்பட்டிருப்பதாகவும் தம்மை மனதளவில் பாதிப்படையச் செய்யும் மறைமுக சதியில் நோர்வே அரசாங்கம் செயற்பட்டு வருவதாகவும் அந்த பெற்றோர் குமுறுகின்றனர். இது இவ்வாறிருக்க இன்னும் சில தினங்களில் நோர்வே சிறுவர் காப்பகங்கள், நோர்வே அரசாங்கம் ஆசிய தரப்புக்கள் எதிர்பாராத சில விடயங்களுக்கு முகம் கொடுக்க வேண்டிய நிலை ஏற்படப் போவதாக பாதிக்கப்பட்ட பெற்றோர் தெரிவிக்கின்றனர். எனினும் எத்தகைய அதிர்ச்சிகளை …
-
- 0 replies
- 488 views
-
-
Jan 10 2013 08:27:16 ஆப்பிரிக்க நாடான மாலியில் இஸ்லாமிய தீவிரவாதிகளை ஒடுக்குவதற்காக கனடிய ராணுவம் அனுப்பப்பட மாட்டது என்று கனடிய பிரதமர் ஸ்டீபன் ஹார்ப்பர் தெரிவித்திருக்கிறார். ஆப்பிரிக்காவில் வளர்ந்து வரும் நாடுகளில் ஒன்றான மாலியில் தீவிரவாத இயக்கமான அல்குவைதாவுடன் தொடர்புக் கொண்ட இஸ்லாமிய தீவிரவாதிகள் நாட்டின் அமைதியைக் குலைத்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் மாலியின் வடப் பகுதியை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறார்கள். இதனால் அங்கு தீவிரவாதம் பரவும் அபாயம் உண்டாகியுள்ளது. கடந்த மாதம் கூடிய ஐநா பாதுகாப்பு சபையின் கூட்டத்தில் ஆப்பிரிக்கர் தலைமையில் ஒரு கூட்டு ராணுவத்தை அமைத்து தீவிரவாதிகளை ஒடுக்குவதென்று முடிவு செய்தது. இதற்கு மேற்கத்திய நாடுகள் ஆதரவு அளிக்க…
-
- 0 replies
- 312 views
-
-
கனடாவில் கடந்த 2011ஆம் ஆண்டில் குடிபோதையில் டிரைவிங் செய்த குற்றத்திற்காக 90,000 நபர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இது 2010ஆம் ஆண்டின் எண்ணிக்கையைவிட 3000 கூடுதலாகும் என கனடாவின் ஒரு புள்ளிவிபரம் கூறுவதாக காவல்துறை இன்று அறிவித்துள்ளது. ஒவ்வொரு 100,000 மக்களுக்கு 262 பேர் குடிபோதையில் டிரைவிங் செய்த குற்றச்சாட்டுகளுக்கு ஆளாகியுள்ளனர் என்றும் இது கடந்த 2010ஆம் ஆண்டைவிட இரண்டு சதவிகிதம் அதிகம் எனவும் ஏஜென்ஸி செய்தி தெரிவிக்கின்றது. கடந்த ஐந்து ஆண்டுகளில் இந்த சதவிகிதம் தொடர்ந்து நான்காவது ஆண்டாக உயர்ந்து கொண்டே இருப்பது கவலையளிக்கக்கூடியதாக உள்ளது என கனடிய காவல்துறை தெரிவித்துள்ளது. குடிபோதையில் டிரைவிங் செய்ததால் ஏற்பட்ட விபத்துகளில் 121 விபத்துகளில் உயிரிழப்ப…
-
- 0 replies
- 417 views
-
-
கனடாவில் போர்ட்டர் ஏர்லைன்ஸ் ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, இன்று அதிகாலை 12.01 முதல் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். ஊழியர்களின் வேலைநிறுத்தத்தால், விமானப்பணிகள் எதுவும் பாதிக்கப்படவில்லை என்றும், சிறப்பாக மாற்று ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதால், பயணிகளுக்கு எவ்வித சிரமமும் இருக்காது என்றும் அறிவித்துள்ளது. போர்ட்டர் ஏர்லைன்ஸின் 22 ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, நிர்வாகத்திற்கு எதிராக வேலைநிறுத்தத்தில் ஈடுபடுவதென Canadian Office and Professional Employees Union மூலம் இன்று அதிகாலை 12.01க்கு அறிவித்தனர். யூனியனிற்கும், நிர்வாகத்திற்கு நடந்த பேச்சுவார்த்தையில் திடீரென முட்டுக்கட்டை ஏற்பட்டதால், இந்த வேலைநிறுத்தம் அறிவிக்கப்பட்டது என்றும் ஊழியர்கள…
-
- 0 replies
- 405 views
-
-
திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தை சேர்ந்த கடலை வியாபாரியான தொழிலதிபர் ராமலிங்கத்திடம் கைப்பற்றப்பட்ட ரூ.28 ஆயிரம் மதிப்புள்ள வெளிநாட்டுப் பத்திரங்கள் போலியானவை என வருமான வரித்துறை கண்டுபிடித்துள்ளது. ஆனால், ராமலிங்கமோ, அனைத்து பத்திரங்களும் ஒரிஜினல் என்றும் வருமான வரித்துறை தன்னை சிக்க வைக்க சூழ்ச்சி செய்வதாகவும் குற்றம்சாற்றியுள்ளார். திருப்பூர் மாவட்டம், தாராபுரத்தைச் சேர்ந்த ராமலிங்கத்தின் வீட்டில் கடந்த 31ஆம் தேதி சோதனை நடத்திய வருமான வரித்துறையினர், 28ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான அமெரிக்க நிதிப் பரிமாற்ற பத்திரங்களை கைப்பற்றினர். இது தொடர்பான விசாரணையின்போது, பிரேசில் நாட்டைச் சேர்ந்த ஒருவரிடம் பத்திரங்களை வாங்…
-
- 0 replies
- 4.2k views
-
-
சென்னை: தர்மபுரி கலவரத்தால் பாதிக்கப்பட்டோருக்கு ரூ. 7.32 கோடி இடைக்கால நிவாரணமாக வழங்க வேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உததரவிட்டுள்ளது. கடந்த நவம்பர் 7 ஆம் தேதி, தர்மபுரி மாவட்டத்தில் நத்தம் காலனி, நாயக்கன்கொட்டாய் பகுதிகளில் ஒரு குறிப்பிட்ட சமூகத்தினரின் வீடுகள் எரிக்கப்பட்டன. தர்மபுரி மாவட்டத்தில் இரு வேறு சமூகத்தை சேர்ந்த இருவர் காதல் திருமணம் செய்துக்கொண்ட நிலையில், அம்மாவட்டத்திலுள்ள நத்தம் காலனி, நாயக்கன்கொட்டாய் பகுதிகளில் ஒரு குறிப்பிட்ட சமூகத்தினரின் வீடுகள் கடந்த நவம்பர் 7 ஆம் தேதியன்று தீ வைத்துக்கொளுத்தப்பட்டன. இந்நிலையில் இந்த சம்பவத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் அளிக்க கோரி செங்கொடி என்ற வழக்கறிஞர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வ…
-
- 0 replies
- 598 views
-
-
பதற்றத்தைத் தணிக்க பேச்சுவார்த்தை: இந்தியா - பாக்.கிற்கு ஐ.நா. ஆலோசனை ஐ.நா.:இந்திய வீரர்கள் 2 பேர் படுகொலை செய்யப்ப்பட்டதை தொடர்ந்து இந்தியா-பாகிஸ்தான் இடையே ஏற்பட்டுள்ள பதற்றத்தை தணிக்க இரு நாடுகளும் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என ஐ.நா. அறிவுறுத்தி உள்ளது. ஜம்மு - காஷ்மீரில் இந்திய எல்லைக்குள் பாகிஸ்தான் படையினர் அத்துமீறி வந்து 2 இந்திய வீரர்களை படுகொலை செய்ததைத் தொடர்ந்து இந்தியா பாகிஸ்தான் இடையே பதற்றம் அதிகரித்துள்ளது. ஆனால் கடந்த 6 ஆம் தேதி எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டைத் தாண்டி இந்திய ராணுவத்தினர் வந்ததாகவும், எல்லைச் சாவடியை சோதனை செய்ததாகவும் இந்தியா மீது பாகிஸ்தான் பழிசுமத்தியது.இதை இந்தியா மறுத்தது. இந்நிலையில் இதுபற்றி ஐக்கிய நாடுகள் சபையின்…
-
- 2 replies
- 326 views
-
-
பாகிஸ்தான் ராணுவம் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் இரண்டு இந்திய வீரர்கள் உயிரிழந்த நிலையில், இந்த இரு அண்டை நாடுகளும் அமைதி மற்றும் நிலைத்தன்மையைப் பராமரிக்க இணைந்து பணியாற்றும் என்று அமெரிக்கா நம்பிக்கை தெரிவித்துள்ளது.இது குறித்து அமெரிக்க ராணுவத் தலைமையகமான பெண்டகனின் ஊடகச் செயலாளர் ஜார்ஜ் லிட்டில், செய்தியாளர்களிடம் கூறியது: இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் நீண்ட காலமாக பதற்றம் நிலவி வருவது அமெரிக்கப் பாதுகாப்புத் துறை அமைச்சர் லியோன் பனேட்டாவுக்குத் தெரியும். இந்தப் பிராந்தியத்தில் அமைதி மற்றும் நிலைத்தன்மையைப் பராமரிக்க இரு நாடுகளும் பாடுபடும் என்று நம்புகிறோம். இதை இந்த நாடுகளில் பயணம் மேற்கொண்டபோது லியோன் பனேட்டா உறுதிப்படுத்தியுள்ளார். …
-
- 0 replies
- 413 views
-
-
தற்போது விஸ்வரூபம் படத்திற்காக கமல் சந்தித்துக் கொண்டிருக்கும் நெருக்கடி நிலையை திரையுலக ரசிகர்கள் அனைவரும் மிகவும் கூர்ந்து நோக்கி கொண்டிருக்கின்றனர். 92 கோடி ரூபாய் தன்னுடைய சொந்த பணத்தை செலவழித்து எடுத்த படத்தை அவருடைய விருப்பப்படி திரையிட விடாமல திரைமறைவு வேலைகள், குழிதோண்டும் வேலைகள் முதலிய நடந்து கொண்டிருக்கின்றன. இந்த நிலையில் இந்தியாவில் எந்த ஒரு நடிகர் இருந்தாலும், உண்மையிலேயே நொந்து நூலாகி போயிருப்பார். ஆனால் எதற்கும் அஞ்சாமல், யாருக்கும் பயப்பட மாட்டேன் என்று தைரியமாக கூறும் கமலின் வீரம் உண்மையிலேயே பாராட்டத்தக்கது. கமல் திரையுலகிற்கு செய்த உதவிகள் ஏராளம். ஆனாலும் இன்று அவருடன் நடித்த நடிகர்கள், நண்பர்கள் அனைவருமே வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பதுதான் வர…
-
- 1 reply
- 872 views
-
-
'சித்தூர்: 'எனக்கு எய்ட்ஸ்...விட்டுருங்கடா!'என்று கூறியதால், இளம்பெண் ஒருவர் பாலியல் பலாத்காரத்திலிருந்து தப்பினார். ஆந்திரா மாநிலம் சித்தூர் மாவட்டத்தைச் சேர்ந்த கிராமத்தைச் சேர்ந்த ராஜா ரெட்டியும், அதே ஊரைச் சேர்ந்த 25 வயது இளம்பெண்ணும் காதலித்து வந்தனர். இரண்டு நாட்களுக்கு முன்பு,பைக்கிலேயே திருப்பதி சென்று விட்டு, இரவு வேளையில், பாகராபேட்டை எனும் வனப்பகுதி வழியே வந்து கொண்டிருந்தனர்.அவர்கள் வழியில் மரத்தடியில் நின்று பேசியபோது,இரண்டு பைக்குகளில் நான்கு மர்ம ஆசாமிகள் அங்கே வந்தனர். காதல் ஜோடியைப் பார்த்ததும் பைக்கை நிறுத்தினார்கள்.ராஜாரெட்டியை சரமாரியாகத் தாக்கினார்கள்.பிறகு அந்தப் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றார்கள். இதனையடுத்து பதறி…
-
- 1 reply
- 609 views
-
-
பிரான்ஸில் உலகப் போராளி அமைப்புக்களின் முக்கிய பிரமுகர்களைப் படுகொலை செய்யும் ரகசியத் திட்டங்கள்.. இன்னும் தொடர்ந்து கொண்டிருக்கின்றன. அண்மையில் ஈழப்போராளிகளில் முக்கியமான ஒருவர் கொல்லப்பட்டது போன்று இப்போ குர்திஷ் போராட்ட அமைப்பின் மூத்த பெண் போராளிகள் மூவர் பிரான்ஸ் தலைநகரில் வைத்து சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். குர்திஷ் மக்கள் சுதந்திர தாயகம் கேட்டு நேட்டோ ஆதரவு நாடான துருக்கியில் மிக நீண்ட காலமாக ஆயுதப் போராட்டம் நடத்தி வருகின்றனர். அவர்களுக்காக ஆயுதப் போராட்டம் நடத்தி வருகின்ற முக்கிய அமைப்பே பிகேகே ஆகும்.. என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. உலக உளவு அமைப்புக்களும்.. உலக பயங்கரவாத அரசுகளும் பிகேகே போராளிகளுடன் விடுதலைப்புலிகள் அமைப்புக்குள்ள தொடர்புகள் குறித்…
-
- 91 replies
- 5.4k views
-
-
அடுத்த கொடூரம்... சீக்கியரைக் கடத்தி தலையைத் துண்டித்துக் கொன்ற பாக். தீவிரவாதிகள். இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் ராணுவத்தால், 2 இந்திய வீரர்கள் கொலை செய்யப்பட்டதும், ஒருவரின் தலை துண்டிக்கப்பட்டதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், பாகிஸ்தானின் பழங்குடியினப் பகுதியில் வசித்து வந்த ஒரு சீக்கியரைக் கடத்திச் சென்ற தீவிரவாதிகள் அவரைத் தலையைத் துண்டித்துக் கொடூரமாக கொலை செய்துள்ளனர். அவரது பெயர் மொஹீந்தர் சிங். 40 வயதான இவர் மருந்து வியாபாரி ஆவார். கைபர் பழங்குடியினப் பகுதியில்உள்ள தப்பாய் என்ற கிராமத்தில் வசித்து வந்தார். இவரை நவம்பர் 20ம் தேதி அடையாளம் தெரியாத ஒரு தீவிரவாதக் கும்பல் கடத்திச் சென்றது. பின்னர் அவரைத் தலையைத் துண்டித்துக் கொலை செய்து உடலையும், தலையை…
-
- 9 replies
- 1.1k views
-
-
நியுயேர்சியில் இருந்து புறப்பட்ட பயணிகள் படகு மன்கட்டானில் இன்னொரு படகுடன் மோதி விபத்துக்குள்ளாகியிருக்கின்றது. இச் சம்பவமானது இன்று காலை 8.30 அளவில் நடந்தேறியுள்ளது. இவ்விபத்தில் 50 பேர்வரை காயமடைந்துள்ளதாகவும் இருவரின் நிலை கவலைக்கிடமாகவிருப்பதாகவும் உறிதிப்படுத்தப்பட்ட தகவல்தெரிவிக்கின்றது. சம்பவத்தை நேரில் கண்டவர்கள் பல வகையாக விபரிக்கின்றார்கள். படகுடன் மோதியபோது பெரும் சத்தம் கேட்டதாகவும், இறங்குவதற்குத் தயாராக எழுந்து நின்றவர்கள் டெக்கிற்கு தூக்கி எறியப்பட்டார்கள் எனவும் கருத்துத் தெரிவிக்கின்றார்கள். இப்படகில் 340 ற்கு மேற்பட்ட பயணிகள் பயணித்திருக்கின்றார்கள். தீயணைக்கும் படையினர் வந்து மக்களை அப்புறப்படுத்துவதிலும், காயமடைந்த மக்களுக்கு முதலுதவி வழங்குவதிலும்…
-
- 1 reply
- 258 views
-
-
உலகம் முழுவதும் பிரபலம் ஆகிக்கொண்டிருக்கும் பிக் ஷோ நிகழ்ச்ச்க்கு எதிர்ப்பு தெரிவித்து Femen என்ற அமைப்பில் உள்ள மூன்று பெண்கள் பிரேசில் நாட்டில் திடீரென அரைநிர்வாண உடையோடு போராட்டம் நடத்தியதால், அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. பிக் ஷோ என்ற நிகழ்ச்சியில் உலகில் உள்ள பிரபலங்கள் ஒரு மிகப்பெரிய மால் கட்டிடத்தில் உள்ள கண்ணாடி அறைக்குள் இருந்து கொண்டு போட்டியிட்டுக் கொண்டு வருகின்றனர். பார்வையாளர்கள் அவர்களில் ஒருவரை வெற்றி பெற்றவர்களாக தேர்ந்தெடுப்பர். இந்த போட்டியை கண்ணாடி அறையில் அடைத்து வைத்து நடத்துவதால், பெண்களுக்கு சுதந்திரம் பாதிக்கப்படுகிறது, பெண்களின் உரிமைகள் மறுக்கப்படுகிறது என்பதை வலியுறுத்தி Femen என்ற பெண்கள் அமைப்பினர் போராடி வருகின்றனர்., இந்த அமைப…
-
- 3 replies
- 676 views
-
-
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் இந்தியாவின் கடற்படை தளம் அமைந்துள்ளது. இந்த கடற்படை தளத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள கப்பலில் இருந்து இன்று காலை 9.30 மணியளவில் பிரமோஸ் வகை ஏவுகணை சோதனை நடத்தப்பட்டது.290 கிலோ மீட்டர் தூரம் சென்று தாக்கும் இந்த சூப்பர் சோனிக் ஏவுகணை, எதிரி ஏவுகணைகளை ஏமாற்றி தனது நிலையை மாற்றிச்சென்று தாக்கக்கூடிய வல்லமை பெற்றதாகும். இந்த ஏவுகணை அமெரிக்க மற்றும் ரஷ்ய விண்வெளி தொழில்நுட்பத் தகவல்களை பெறக்கூடிய திறமை பெற்றதாகும். கடல் மட்டத்தில் இருந்து ஒரு மீட்டர் உயரத்தில் உள்ள சிறிய இலக்கைக்கூட மிக துல்லியமாக தாக்கி அழிக்ககூடிய வல்லமை பெற்றது. பிரமோஸ் வகை ஏவுகணை 2005-ம் ஆண்டு இந்தியக் கடற்படையில் சேர்க்கப்பட்டது. இன்று ஏவப்பட்ட இந்த ஏவுகண…
-
- 0 replies
- 470 views
-
-
கடந்த 3-ம் தேதியில் இருந்தே தி.மு.க-வில் மேகம் கருக்க ஆரம்பித்துவிட்டது. 'இந்தச் சமுதாய மேன்மைக்காக, எழுச்சிக்காக நான் என் ஆயுள் இருக்கிற வரை பாடுபடுவேன். அப்படியானால், அதற்குப் பிறகு என்ற கேள்விக்குப் பதில்தான் இங்கே அமர்ந்திருக்கிற தம்பி ஸ்டாலின் என்பதை நீங்கள் மறந்துவிடக் கூடாது.’ இதுதான் கடந்த 3-ம் தேதி அண்ணா அறி வாலயத்தில் நடந்த ஒரு கூட்டத்தில் கருணாநிதி சொன்னது. ஸ்டாலின் தன்னுடன் மேடையில் இருந்தால், அவருக்கு உற்சாகம் ஊட்டுவது மாதிரி கருணாநிதி சில டானிக் வார்த்தைகளைச் சொல்வது வழக்கம்தான். அப்படி ஒரு சம்பவம் இது என்றுதான் பலரும் அமைதியாக இருந்தனர். 'இந்த மாதிரி தலைவர் எத்தனையோ முறை சொல்லிவிட்டார். அதுமாதிரிதான் இதுவும்’ என்று முன்னாள் அமைச்சர்களுக்குள் பேச்சு எழுந்…
-
- 1 reply
- 2.4k views
-
-
தன்னுடைய ஆடம்பர திருமண செலவிற்காக முதலாளியின் 170,000 பவுண்ட் பணத்தை திருடிய இளம்பெண், கைது செய்ய்பப்பட்டு உடனடிய திருடிய பணத்தின் பத்தில் ஒரு பாகத்தை ஒப்படைக்குமாறு வற்புறுத்தப்பட்டுள்ளார். பிரிட்டனைச் சேர்ந்த Kirsty Lane என்ற பெண்மணி, இங்கிலாந்தின் மிக உயர்ந்த திருமண மண்டபமான The Great Hall at Mains என்ற இடத்தில் மிக ஆடம்பரமாக தன்னுடைய திருமணத்தை நடத்தினார். திருமண நிகழ்ச்சிக்கு வந்திருந்த விருந்தினர்களுக்கு உயர்ரக மதுவகைகள் பரிமாறப்பட்டன. நாட்டிலேயே மிகச்சிறந்த விருதுபெற்ற சமையல்காரர் செய்த உயர்ந்த வகை உணவுகள் விருந்தினர்களுக்கு பரிமாறப்பட்டன. உடைகள், நகைகள் எல்லாமே மிக உயர்ந்த விலையில் வாங்கப்பட்டன. சாதாரண ஒரு நிறுவனத்தில் வேலைபார்க்கும் சராசரி இளம்பெண்ணுக்கு இவ…
-
- 0 replies
- 506 views
-
-
பிரிட்டனைச் சேர்ந்த மாடலிங் பெண் ஒருவரை, கொடூரமாக கற்பழித்து இரண்டு மார்பகங்களுக்கு நடுவில் கத்தியால் ஆழமாக குத்தி, கொலை முயற்சியில் ஈடுபட்டவர் மீதான வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. விசாரணையின் போது குற்றவாளியும் பாதிக்கப்பட்ட மாடலிங் பெண்ணும் நிதிமன்றத்தில் ஆஜரானார்கள். பிரிட்டனைச் சேர்ந்த 25 வயது மாடலிங் பெண், Cheryl Maddison, கடந்த 2008ஆம் ஆண்டு Moroccan Mohamed Fadel El Anssari என்ற பயங்கர ஆசாமியால் கடத்தப்பட்டு, கொடூரமாக பாலியல் வல்லுறவுக்கு ஈடுபடுத்தப்பட்டார். பாலியல் வல்லுறவுக்குப் பின், மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து பெண்ணின் இரண்டு மார்புகளுக்கு நடுவே ஆழமாக குத்தி காயப்படுத்திய்தோடு அவருடைய் உடலில் 21 இடங்களில் கத்தியால் காயப்படுத்தியுள்ளான். இதனால் ரத…
-
- 1 reply
- 838 views
-
-
அமெரிக்காவின் தெற்கு கலிபோர்னியா மாகாணத்தைச் சேர்ந்த ஒரு பெண், தன்னுடைய பாய்பிரண்ட் மீது உள்ள கோபத்தால், அவருடைய 2 வயது மகள் மீது வேகமாக மிளகாய்ப் பொடியை தூவி கொலை செய்ததாக குற்றம் சுமத்தப்பட்டு, கைது செய்யப்பட்டார். தெற்கு கலிபோர்னியாவைச் சேர்ந்த 21 வயது பெண், Amanda Sorensen, தன்னுடைய பாய்பிரண்டிடம் அடிக்கடி சண்டை போட்டுக் கொண்டே இருந்திருக்கின்றார். ஒரு கட்டத்தில் கருத்து வேறுபாடு முற்றியதால், பாய்பிரண்டை பழிவாங்குவதற்காக, அவருடைய இரண்டு வயது குழந்தை மீது மிக வேகமாக மிளகாய்ப் பொடியை தூவி இருக்கின்றார். மிளகாய்ப்பொடி வேகமாக தூவப்பட்டதால், அலறிய குழந்தை மூச்சுவிட முடியாமல் திணறி, இறந்துவிட்டது. இதுகுறித்து விசாரணையில் இறங்கிய கலிபோர்னியா காவல்துறை, Amanda Sorensen ஐ…
-
- 0 replies
- 488 views
-
-
ஈரோடு: ஈரோட்டில் பாதிரியார்கள் ஓட்டிப் பழகிய ஜீப் மோதி பத்தாம் வகுப்பு மாணவி பலியானார். ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தை அடுத்து உள்ளது மலைப்பகுதியான தாளவாடி. தமிழக கர்நாடக எல்லையில் உள்ள தாளவாடியில் கிறிஸ்தவ அமைப்பு ஒன்று டிவைன் என்னும் தனியார் மெட்ரிக் பள்ளியை நடத்தி வருகிறது. இந்த பள்ளியில் பத்தாம் வகுப்பு படிப்பவர்கள் குமிட்டாபுரத்தைச் சேர்ந்த சந்தியா(15), சுஷ்மா(15). அந்த பள்ளிக்கு அருகே செயல்பட்டு வரும் மனவளர்ச்சி குன்றிய குழந்தைகள் பாதுகாப்பு மையத்தில் பங்குத் தந்தையாக இருப்பவர்கள் பாதிரியார்கள் டேவிட், லூர்துராஜ். அவர்கள் 2 பேரும் நேற்று மாலை டிவைன் பள்ளி மைதானத்தில் ஜீப் ஓட்டிப் பழகிக் கொண்டிருந்தனர். அப்போது சிறப்பு வகுப்பு முடித்து வந்த சந்தியா மற்றும் சுஷ்மா மீத…
-
- 0 replies
- 459 views
-