உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26688 topics in this forum
-
கனடாவின் மாநிலங்களுக்கு இடையிலான இண்ட்டர் ஸ்டேட் 84 நெடுஞ்சாலையில் வந்து கொண்டிருந்த பேருந்து சாலையின் ஓரத்தில் இருந்த சரிவிற்குள் வழுக்கிச் சென்று கவிழ்ந்தது. வான்கூவருக்குப் போன சுற்றுலாப் பேருந்து சாலையோரத்தின் சரிவில் கவிழ்ந்ததால் ஒன்பது பேர் உயிரிழந்தனர். இருபது பேர் படுகாயமுற்றனர். சாலைகளில் பனிபடர்ந்து இருந்ததால் சக்கரங்கள் வழுக்கிவிட்டன. ஓட்டுநர் உயிர் பிழைத்தாலும் காயங்கள் மோசமாக இருப்பதால் விபத்து பற்றி அவரால் எதையும் விளக்க இயலவில்லை. லாஸ் வேகாஸின் நேவாடாவுக்குப் போய் விட்டுத் திரும்பிக் கொண்டிருந்த பேருந்து பகல் 10.30 அளவில் விபத்துக்குள்ளான போது அதில் 40 பேர் இருந்தனர். இவர்களில் காயம்பட்ட 18 பேர் கெண்டில்ட்டனில் உள்ள தூய அந்தோனியார் மருத்துவமனையில் சேர்…
-
- 0 replies
- 306 views
-
-
காவிரி நடுவர் மன்றத்தின், இறுதித்தீர்ப்பு விவகாரத்தில், விதண்டாவாதத்திற்கு என்ன பதில் சொல்வது என, முதல்வர் ஜெயலலிதாவிற்கு, தி.மு.க., தலைவர் கருணாநிதி பதில் தெரிவித்துள்ளார். அவரது அறிக்கை: தி.மு.க., எம்.பி., க்கள், பிரதமரைச் சந்தித்து, காவிரி நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பினை உடனடியாக வெளியிட வேண்டும் என, உண்மையிலேயே வலியுறுத்தினார்களா அல்லது கேட்பது போல, ஒரு கபட நாடகமாடி, முட்டுக்கட்டை போட்டனரா என்பது, புரியாத புதிராக இருக்கிறது என, முதல்வர் ஜெயலலிதா சாடியிருக்கிறார்.இது தி.மு.க., எம்.பி.,க்கள் மாத்திரமல்ல, பிரதமர் அலுவலகத்திற்கே களங்கத்தை ஏற்படுத்துவது போல உள்ளது. காவிரி நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பை, மத்திய அரசிதழில் வெளியிட வேண்டும் என, பிரதமரிடம் தி.மு.க.…
-
- 0 replies
- 601 views
-
-
இந்தியாவில் வடக்கு எல்லையான இமயமலை பகுதியில், கடும் நிலநடுக்கம் ஏற்பட அதிக வாய்ப்பு இருப்பதாக, விஞ்ஞானிகள் எதிர்வு கூறியுள்ளனர்.இது, ரிக்டர் அளவில், 8.0 முதல் 8.5 வரை பதிவாகும் என்றும் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து கூறிய சிங்கப்பூரை சேர்ந்த, நன்யாங் தொழில் நுட்ப பல்கலை கழக விஞ்ஞானிகள் சிலர் பவுல் டாப்பொன்னியர் என்பவர் தலைமையில், இமயமலை பகுதியில் ஆய்வு நடத்தினர். இவர்களுடன், நேபாளம் மற்றும் பிரான்ஸ் நாடுகளை சேர்ந்த விஞ்ஞானிகளும் பங்கேற்றனர். இது தொடர்பில் இந்திய செய்திச்சேவை வெளியிட்டுள்ள செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, இமயமலை பகுதியில், 1897 மற்றும் 1905, 1934, 1950ஆம் ஆண்டுகளில், பூகம்பம் ஏற்பட்டுள்ளது. அப்போது, ரிச்டர் அளவில், 7.8 முதல், 8.9 வரை பதிவா…
-
- 1 reply
- 544 views
-
-
பாப் இசை பாடகர் மைக்கேல் ஜாக்சனின் சகோதரி ஜேனட் ஜாக்சன் (வயது 46). இவருக்கும் கத்தார் நாட்டு கோடீசுவரர் விஸ்சாம் (வயது 37) என்பவருக்கும் விரைவில் திருமணம் நடைபெற இருக்கிறது. கடந்த 2009ம் ஆண்டில் இருந்து இவர்கள் இருவரும் தங்கள் காதலை வளர்த்து வந்த நிலையில், 2011ம் ஆண்டின் இறுதியில் இது உறுதிப்படுத்தப்பட்டது. இவர்களது திருமணம் கத்தாரில் நடைபெறும் என்றும் அதில் ஜேனட்டின் நண்பர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் கலந்து கொள்வார்கள் என்றும் கூறப்படுகிறது. மேலும், அவர்களுக்காக தனியார் விமானங்கள் ஏற்பாடு செய்யப்படும். விருந்தினர்களை உபசரிக்க சிறந்த சமையல் நிபுணரை வரவழைக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. ஜேனட்டிற்கு இதற்கு முன்பு இரு முறை திருமணம் நடைபெற்றுள்ளது. கட…
-
- 5 replies
- 577 views
-
-
இணையதள தொழில்நுட்ப வசதி காரணமாக, இன்றைய இளைய தலைமுறையினரின் மூளை, மழுங்கடிக்கப்படுகிறது. எந்த ஒரு விஷயத்தையும், அறிந்து கொள்வதற்கு, அவர்களின் கைகள், "கூகுளை' தான், நாடுகின்றன. இதனால், இன்றைய தலைமுறையினர், சிந்திக்கும் ஆற்றல் அற்றவர்களாக மாறி வருகின்றனர்,' என, பிரபல பிரிட்டிஷ் ஆராய்ச்சியாளர், இணையதளங்களுக்கு அடிமையாகிப் போனவர்களின், செவிட்டில் அறைவது போல், கூறியுள்ளார். பிரபல பிரிட்டிஷ் ஆராய்ச்சியாளர், டிரேவர் பெய்லீஸ். பேட்டரி, மின்சாரம் இல்லாமல், கைகளால் சுற்றி ரேடியோவை இயக்கும் தொழில்நுட்பத்தை கண்டுபிடித்தவர். "டெய்லி மெயில்' என்ற ஆங்கில பத்திரிகைக்கு, அவர் அளித்துள்ள பேட்டி: இன்றைய இளைய தலைமுறையினரின் போக்கு, எனக்கு மிகவும் கவலை அளிக்கிறது. எ…
-
- 2 replies
- 510 views
-
-
நான் அரசியலுக்கு வந்தால் எனது பாதை தனியாக இருக்கும் என்று நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்தார். சென்னை யில் சனிக்கிழமை நடைபெற்ற "ப. சிதம்பரம் - ஒரு பார்வை' என்ற நூல் வெளியீட்டு விழாவில் அவர் பேசியது: 1995-ஆம் ஆண்டு முதல் முதல் ப. சிதம்பரம் எனது நெருங்கிய நண்பர். அந்தக் காலகட்டத்தில் தனி அறையில் மூப்பனார், கருணாநிதி, சிதம்பரம், சோ ராமசாமி ஆகியோருடன் உரையாடிய சம்பவங்கள் நினைவுக்கு வருகின்றன. இப்போது நினைக்கும்போது அது உண்மைதானா, நடந்ததா என்று சந்தேகம் வருகிறது. அதன் அருமை அப்போது எனக்குத் தெரியவில்லை. தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி உருவானபோது குறுகிய காலத்தில் அதற்கு அனுமதி பெற்றுத் தந்தவ…
-
- 5 replies
- 840 views
-
-
இந்தியா=பாகிஸ்தான் இடையே நடந்த முதலாவது ஒருநாள் போட்டி இன்று சென்னையில் பரபரப்பாக நடந்தது. இதில் பாகிஸ்தான் 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. முதலில் பேட் செய்த இந்திய அணி, 50 ஓவர்களில் 227 ரன்கள் எடுத்த, இந்திய அணியால், பாகிஸ்தான் விக்கெட்டுக்களை வீழ்த்த முடியாத காரணத்தால் வெற்றியை இழந்தது. தோனி 113 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இரண்டாவதாக பேட் செய்த பாகிஸ்தான் அணி நிதானமாக விளையாடி 4 விக்கெட் இழப்பிற்கு 228 ரன்கள் எடுத்து, தனது முதல் வெற்றியை பதிவு செய்தது. நசீர் ஷாம்ஷெட் அபார விளையாடி 101 ரன்கள் எடுத்து பாகிஸ்தான் வெற்றிக்கு வித்திட்டார். இந்தியா-பாகிஸ்தான் போட்டியின் படங்கள் பார்க்க....
-
- 0 replies
- 557 views
-
-
கினிய படகு விபத்தில் 22 பேர் பலி: 69 பேர் மாயம் கினியாவ் பிசாவ் நாட்டின் தலைநகர் பிசாவிலிருந்து அட்லாண்டிக் கடலில் உள்ள போலோமா தீவு நோக்கி படகு ஒன்று புறப்பட்டு சென்றது. மிக அதிகமாக 97 நபர்களை ஏற்றிச்சென்ற அந்த படகு, அட்லாண்டிக் கடலில் திடீரென கவிழ்ந்தது. அப்போது அந்த படகிலிருந்த அனைவரும் கடலில் மூழ்கினர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மீட்புப் படையினர் 6 பேரை உயிருடன் மீட்டனர். இறந்த 22 பேரின் சடலங்கள் மட்டுமே வெளியே எடுக்கப்பட்டது. மீதமுள்ள 69 பேரை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி
-
- 0 replies
- 499 views
-
-
அனைத்து நாடாளுமன்றத் தொகுதிகளிலும் அ.தி.மு.க. ஆலோசனைக் கூட்டங்களை நடத்தி முடித்துவிட்டது. தி.மு.க-வினரோ திறந்தவெளி அரங்கில் மாநாடுபோல் ஆலோசனைக் கூட்டங்களை நடத்திவருகிறார்கள். பா.ம.க. சாதிச் சங்கங்களை எல்லாம் ஒன்றிணைத்துவருகிறது. இதற்காகவே கிறிஸ்துமஸ் விழாவை தே.மு.தி.க. நடத்துகிறது. இப்படி அனைத்துக் கட்சிகளும் நாடாளுமன்றத் தேர்தல் ஜூரத்தில் இருக்க... அதைஅடுத்து வரப்போகும் சட்டமன்றத் தேர்தலைக் குறிவைக்கிறதாம் நாம் தமிழர் கட்சி. இதற்காக பம்பரமாய் தமிழகம் முழுவதும் சுழல்கிறார் சீமான். 'இனத்துக்காக உழைத்திட்ட தந்தை பெரியாருக்கும், ஈழத்துக்காக உழைத்திட்ட டாக்டர் எம்.ஜி.ஆருக்கும் வீர வணக்கப் பொதுக் கூட்டம்’ என்ற பெயரில் கடந்த 24-ம் தேதி நாகை மாவட்டம் திருக்கடையூரில் பிரமாண்…
-
- 5 replies
- 1.4k views
-
-
"தனியார் பள்ளிகளில், மாணவிகளுக்கு, குட்டைப் பாவாடையை, சீருடையாக வைத்துள்ளனர். பாலியல் துன்புறுத்தல்களுக்கு, வழி வகுக்கும் இதுபோன்ற உடைகளுக்கு, தடை விதிக்க வேண்டும்' என, ராஜஸ்தான் பா.ஜ., - எம்.எல்.ஏ., பன்வாரி லால் சிங் வலியுறுத்தியுள்ளார். ராஜஸ்தான், அல்வார் சட்டசபை தொகுதி எம்.எல்.ஏ., வான, பா.ஜ.,வைச் சேர்ந்த, பன்வாரி லால் சிங், அம்மாநில தலைமைச் செயலருக்கு எழுதியுள்ள கடிதம்: பெரும்பாலான, தனியார் பள்ளிகளில், மாணவியருக்கான சீருடைகள், சற்றும் பொருத்தமற்றதாக உள்ளன. "மாணவியர், குட்டைப் பாவாடை அணிந்து வர வேண்டும்' என, வற்புறுத்துகின்றனர். அத்துடன், குட்டைப் பாவாடையை சீருடையாகவும், பல்வேறு பள்ளிகளும், அங்கீகரித்துள்ளன. இதற்கு தடை விதிக்க வேண்டும்.மாணவியர், குட்டைப் பாவாடை அணிந்து…
-
- 0 replies
- 1.1k views
-
-
அமெரிக்காவில் நியூயார்க்கில் ரெயில் முன் தள்ளி இந்தியரை கொன்ற மர்ம பெண்ணை போலீசார் தேடுகிறார்கள். அந்த கொலைகார பெண், பிளாட்பாரத்தில் நின்றுகொண்டு புத்தகம் படித்ததும், இரயில்வே தண்டவாளத்தில் நடந்து சென்ற காட்சியும் இரயில்வே காமிராவில் பதிவு செய்யப்பட்ட வீடியோவை வைத்து போலீஸார் தீவிரமாக விசாரணை செய்து வருகின்றனர். இந்தியர் பிணம் அமெரிக்காவில் நியூயார்க் நகரில் சுரங்கப்பாதையில் ரெயில்கள் இயக்கப்படுகின்றன. அங்குள்ள குயின்ஸ் ரெயில் நிலையத்தில் ஒரு ஆண் ரெயிலில் அடிபட்டு இறந்தார். அவர் யார்? எப்படி செத்தார்? என்பது மர்மமாக இருந்தது. இதனை அடுத்து நியூயார்க் நகர போலீசார் சென்று உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர். இறந்து கிடந்த நபரிடம் இருந்த செல்போன் மற்றும் மருந்த…
-
- 0 replies
- 593 views
-
-
அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற மேலைநாடுகளில் கோர்ட்டுகளில் அவ்வப்போது வினோத வழக்குகள் வரும். இதுபோல அமெரிக்காவில் ஒஹியோ பகுதியில் சின்சினாதி என்ற இடத்திலுள்ள பல்கலைக்கழகத்தில் படிக்கும் மாணவி ஆப்ரே(21) என்பவர் தனது பெற்றோருக்கு எதிராக வழக்கு தொடர்ந்தார். அதில் நான் கல்லூரிக்கு செல்லும் போது பெற்றோர் பின் தொடர்ந்து வருகிறார்கள். கம்ப்யூட்டர், செல்போனில் கண்காணிப்பு சாப்ட்வேரை பொருத்தி உளவு பார்க்கிறார்கள் என குற்றம்சாட்டியுள்ளார். இந்த வழக்கை நீதிபதி விசாரணைக்கு எடுத்துக் கொண்டு, மாணவியை விட்டு 500 அடி தள்ளியே இருக்க வேண்டும், தொடர்பு வைப்பதை நிறுத்த வேண்டும் என பெற்றோருக்கு உத்தரவிட்டார். பெற்றோர் மீது வழக்கு தொடுத்த கல்லூரி மாணவியின் படம் பார்க்க....
-
- 0 replies
- 725 views
-
-
வருடம் முடிவடைய இன்னும் இரண்டே தினங்கள் இருக்கும் நிலையில் அமெரிக்க வரவு செலவு திட்டம் முடிவில்லாமல் இழுபறி நிலையில் இருக்கிறது.இந்நாட்களில் அமைதியாக இருக்கும் வெள்ளைமாளிகை 2013ம் ஆண்டு பிறக்கும் போது இருட்டுக்குள் பிறக்கப் போகிறதா என்று தெரியாமல் எல்லோரும் வெள்ளைமாளிகையை பார்த்த வண்ணம் இருக்கிறார்கள். அதிபர் ஒபாமா கடந்த தேர்தலில் தான் ஜனாதிபதியான என்ன என்ன செய்வேன் என்று சொன்னாரோ அதை எல்லாம் அமுல் படுத்த முனைகிறார்.அமெரிக்க முறைப்படி எந்த ஒரு சட்டம் என்றாலும் செனட்சபை காங்கிரஸ் சபையால் ஒப்புக் கொடுக்க வேண்டும். இப்போது செனட்சபையில் ஜனனாயக கட்சி உறுப்பினர்கள்(53-47) பெரும்பான்மையானவர்களாகவும் காங்கிரஸ் சபையில் குடியரசுக் கட்சி உறுப்பினர்கள் (234-201)பெரும்பான்மையா…
-
- 1 reply
- 674 views
-
-
CRICKET great Tony Greig died yesterday after suffering a cardiac arrest while fighting lung cancer. Thanks to telegraph
-
- 1 reply
- 532 views
-
-
வெள்ள சேத பாதிப்பிலிருந்து அணு உலையை சரிசெய்துள்ள வட கொரியா, அணு ஆயுத சோதனைக்குத் தயாராக உள்ளது என்று அமெரிக்க வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.இது தொடர்பாக அமெரிக்காவைச் சேர்ந்த அரசியல் நோக்கர்கள் கூறியிருப்பதாவது: வெள்ள சேதத்தில் பாதிக்கப்பட்ட அணு பரிசோதனை மையத்தை, வட கொரியா சீரமைத்து உள்ளது. இரண்டு வார முன்னறிவிப்புடன், அணு ஆயுத பரிசோதனை நடத்த அது தயாராக உள்ளது. செயற்கைக்கோள் மூலம் எடுக்கப்பட்ட படங்களை ஆய்வு செய்ததன் மூலம் இது உறுதி செய்யப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. வட கொரியா சமீபத்தில் நீண்ட தூர ஏவுகணையை பரிசோதித்துப் பார்த்தது. இதற்கு அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் கடும் எதிர்ப்புத் தெரிவித்தன. வடகொரியா மீது பொருளாதாரத் தடையை விதிக்கவும் அமெரிக்கா …
-
- 0 replies
- 484 views
-
-
பாலியல் பலாத்கார சம்பவத்தைத் தொடர்ந்து டெல்லியில் நடைபெற்ற போர்க்களமான காட்சிகளை அமெரிக்க ஊடகங்கள் முக்கியத்துவம் கொடுத்து வெளியிட்ட நிலையில் தற்போது அமெரிக்கா அதிகாரப்பூர்வமாக கருத்து தெரிவித்திருக்கிறது. அமெரிக்க அரசின் செய்தித் தொடர்பாளர் பேட்ரிக் வென்ட்ரில் கூறுகையில், டெல்லியில் இளம்பெண்ணுக்கு நேர்ந்த கொடூரமான சம்பவம் அதிர்ச்சியளிக்கிறது. அந்தப் பெண்ணுக்காகவும் அவர்தம் குடும்பத்தினருக்காகவும் பிரார்த்திக்கிறோம். இந்த சம்பவமானது இந்தியாவில் மட்டுமல்ல உலகெங்கும் பாலின ரீதியான வன்முறைக்கு எதிராக தொடர்ந்து போராட வேண்டும் என்பதையே வலியுறுத்துகிறது என்று கூறியுள்ளார். http://www.seithy.com/breifNews.php?newsID=72682&category=IndianNews&l…
-
- 1 reply
- 987 views
-
-
டெல்லியில் கடந்த 16ம் தேதி இரவு ஓடும் பேருந்தில் 6 பேர் கொண்ட கும்பலால் பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கப்பட்ட மருத்துவ படிப்பு மாணவி சிங்கப்பூர் மருத்துவமனையில் உயிரிழந்துள்ளார். இது நாடு முழுவதும் அதிர்ச்சியைப் பரப்பியுள்ளது. முதலில் சப்தர்ஜங் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவரது உடல் நிலை மிகவும் மோசமானதையடுத்து புதன்கிழமை இரவு ஏர் ஆம்புலன்ஸ் மூலம் அவர் சிங்கப்பூரில் உள்ள மவுண்ட் எலிசபெத் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். இருப்பினும் அவரது குடல் பகுதிகள் மிகவும் சேதமடைந்துவிட்டதால் அவரைக் காப்பாற்ற முடியாமல் போய்விட்டது. இதை வைத்து அரசியல் செய்யும் வேலைகளை பல கட்சிகளும் ஆரம்பித்துள்ளன. ஆனால், இ…
-
- 1 reply
- 657 views
-
-
இந்தியாவின் அத்தனை முதல்வர்களையும் ஒரு நொடியில் அசரடித்து விட்டார் ஜெயலலிதா. ஏக இந்தியாவை ஆளும் பிரதமரும் அனைத்து மாநிலங் களிலும் கோலோச்சும் முதல்வர்களும் கூடி இருக் கும் அரங்கத்தில் இருந்து, தனி மனுஷியாய் அவர் வெளியேறியபோது, 'தி ரிபெல் லேடி’ என்று சில முதல்வர்கள் முணுமுணுத்தார்களாம் ''27-ம் தேதி அதிகாலை 4 மணிக்கு எழுந்து 5 மணிக்கு வீட்டில் இருந்து கிளம்பிய ஜெயலலிதா, தனி விமானத்தில் டெல்லிக்குச் சென்றார். டெல்லி விமான நிலையத்தில் முதல்வரை, தமிழக அரசின் டெல்லிப் பிரதிநிதி நரசிம்மன், நிதிஅமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், நாடாளுமன்றக் குழுத் தலைவர் தம்பிதுரை உள்ளிட்டோர் வரவேற்றனர். பின், தமிழ்நாடு இல்லத்துக்குச் சென்ற முதல்வர், தமிழகக் காவல் துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்…
-
- 1 reply
- 1.2k views
-
-
அமெரிக்காவில் உள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் நகரத்தில் Van Nuys என்ற இடத்தில் பஸ் நிறுத்தத்தில் உள்ள சிமிண்ட் பெஞ்ச் ஒன்றில் தூங்கிக்கொண்டிருந்தார். அப்போது அந்த் சிமிண்ட் பெஞ்ச் அடியில் நெருப்பு வைத்த்தாக குற்றம் சாட்டப்பட்டு ஒரு இளைஞர் கைது செய்யப்பட்டார். Van Nuys section of Los Angeles என்ற பகுதியில் உள்ள பஸ் நிறுத்தத்தில் 67 வயது பெண் ஒருவர் இரவில் தூங்கிக் கொண்டிருந்தார். அவருக்கு எவ்வித சொந்த வீடும் இல்லாததால், தினசரி அந்த பெஞ்ச் மீது தூங்குவது வழக்கமாக இருந்திருக்கின்றது. அந்த பஸ் நிறுத்தத்திற்கு அருகில் கடை வைத்துள்ள ஒரு இருபது வயது இளைஞர் அந்த பெண்ணை பலமுறை அந்த சிமிண்ட் பெஞ்ச் மீது படுத்து தூங்கக்கூடாது என எச்சரித்துள்ளார். ஆனால் அந்த பெண், அந்த இளைஞரின் பேச்சைக் கேட்கா…
-
- 0 replies
- 536 views
-
-
இளம்பெண்ணை பல வருடங்களாக பூட்டிய வீட்டில் வைத்து பாலியல் கொடுமை புரிந்த 56 வயது டொரண்டோ மனிதர் ஒருவர் இன்று காலை போலீஸாரால் கைது செய்யப்பட்டார். டொரண்டோவில் Brian Bolliger என்ற 56 வயது மனிதர் ஒருவர், 20 வயது இளம்பெண் ஒருவரை கடத்தி வந்து, பூட்டிய வீட்டுக்குள் வைத்து ஆறு வருடங்களாக தொடர்ந்து பாலியல் பலாத்காரம் செய்து வந்துள்ள அதிர்ச்சிகரமான தகவல் அறிந்து அதிரடியாக, அந்த வீட்டினுள் நுழைந்து இளம்பெண்ணை காப்பாற்றி Brian Bolligerஐயும் கைது செய்தனர். இவர் இந்த பெண்ணை கடந்த 2006 முதல் தொடர்ந்து பாலியல் பலாத்காரம் செய்துவந்ததாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. கைது செய்யப்பட்ட Brian Bolliger, இன்று வெள்ளிக்கிழமை காலை டொரண்டோ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுகிறார். இதுபோன்ற…
-
- 0 replies
- 643 views
-
-
டொரண்டோ மேயருக்கு எதிராக தொடரப்பட்ட அவதூறு வழக்கு ஒன்றை ஒண்டோரியோ நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்தது. டொரண்டோ மேயர் ராப் ஃபோர்டு மீது $6 மில்லியன் டாலர் தொகைக்கு அவதூறு வழக்கு ஒன்றை ஒரு ரெஸ்டாரண்ட் உரிமையாளர் George Foulidis ஒண்டோரியோ நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். அவர் தொடர்ந்த வழக்கிற்கு போதுமான ஆதாரம் இல்லை என கூறி ஒண்டோரியோ நீதிமன்ற நீதிபதி John Macdonald இன்று தள்ளுபடி செய்தார். ரெஸ்டாரெண்ட் உரிமையாளர் George Foulidis, அவருடைய ஓட்டலை 20 வருடங்களுக்கு குத்தகை எடுத்த வகையில் சில சட்டமீறல் நடந்திருப்பதாக டொரண்டோ மேயர் ராப் ஃபோர்டு 2010 ஆம் ஆண்டில் டொரண்டோ சன் என்ற பத்திரிகைக்கு பேட்டி அளித்ததாக கூறி, இந்த அவதூறு வழக்கை தொடர்ந்திருந்தார். ஆனால், இந்த குற்றச்…
-
- 0 replies
- 428 views
-
-
பொலிஸ் நிலையத்தில் பொலிசார்மீது துப்பாக்கிச் சூடு வெள்ளிக்கிழமை நியுயேசியில் மூன்று பொலிஸ் அதிகாரிகள் அவர்களது பணிமனையில் சுடப்பட்டுள்ளார்கள். இச்சம்பவமானது குளுசெஸ்ரர் ரவுண்ஸ்ப் என்ற பொலிஸ் நிலையத்தில் நடந்தேறியுள்ளது. இந்த துப்பாக்கி நபர் ஒரு வீட்டு வன்முறை காரணமாக பொலிஸ் நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டிருப்பதாகவும், அங்கு அவர் துப்பாக்கியை எடுத்துப் பொலிஸாரை நோக்கி சுட்டதாகவும் அங்கிருந்து வரும் தகவல் தெரிவிக்கின்றது. இன்று காலை 6:00 மணிக்கு முன்பாகவே இச்சம்பவம் நடந்தேறியுள்ளது. அந்த நபர் சுட்டதில் மூன்று பொலிஸ் அதிகாரிகள் காயமடைந்ததாகவும் அதில் ஒருவர் பெண் பொலிசாரெனவும், காயமடைந்தோர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாகவும், தெரியவருகின்றது. மேற்படி பொலிஸாரைச் ச…
-
- 1 reply
- 1k views
-
-
டெல்லியில் ஓடும் பஸ்சில் பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கப்பட்ட மாணவி, சிங்கப்பூரில் ரஜினிகாந்த் சிகிச்சை பெற்ற மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவரது உயிரை காப்பாற்ற டாக்டர்கள் இரவு, பகலாக போராடுகின்றனர். சிங்கப்பூரில் மாணவி டெல்லியில் கடந்த 16–ந்தேதி இரவில் ஓடும் பஸ்சில் ஒரு கும்பலால் கற்பழித்து, சிதைக்கப்பட்ட நிலையில் வெளியே மாணவி ஒருவர் வீசப்பட்ட சம்பவம், நாடு முழுவதும் பெருத்த கண்டனத்தை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு எதிராக டெல்லியில் தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. டெல்லி சப்தர்ஜங் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு, கடந்த 10 நாட்களாக உயிருக்காக போராடி வந்த மாணவி, உயர் சிகிச்சைக்காக சிங்கப்பூருக்கு நேற்று இரவில் ஆம்புலன்ஸ் விமானம் மூலம் எடுத்துச்செல்லப்பட்டா…
-
- 2 replies
- 1.1k views
-
-
உலகிலேயே அதிக தொலைவு பயணம் செய்யக்கூடிய அதிவிரைவு இரயில் ஒன்று சீனாவில் நேற்று முதல் செயபட்டது. இது 1400 மைல்கள் பயணம் செய்கிறது. இந்த அதிவிரைவு இரயில் சீனாவின் தலைநகர் பீஜிங்கில் இருந்து Guangzhou என்ற பகுதி வரை செல்கிறது. இன்று காலை இதன் முதல் பயணத்தை இரயில்வே அமைச்சர் தொடங்கி வைத்தார். இதுவரை இந்த நகரங்களுக்கிடையே உள்ள தூரத்தை சுமார் 20 மணிநேரங்களில் பயணம் செய்த சீனப் பயணிகள் இனி எட்டே மணிநேரத்தில் தங்கள் பயணத்தை முடிக்கலாம். 1400 மைல்கள் தூரத்தை வெறும் எட்டு மணிநேரங்களில் பயணம் செய்யும் இந்த இரயில் முதல் பயணத்தில் பயணம் செய்ய சீனர்கள் மிகுந்த ஆர்வம் காட்டினர். இந்த ரயில் கடக்கும் தூரமானது கிட்டத்தட்ட லண்டனில் இருந்து Gibraltar என்ற பகுதிக்கு இடையேயுள்ள …
-
- 2 replies
- 2.1k views
-
-
டில்லியில் நடந்த தேசிய வளர்ச்சி கவுன்சில் கூட்டத்தில் தமிழக முதல்வர் ஜெ., திடீர் வெளிநடப்பு செய்தார். இந்த கூட்டத்தில் தமக்கு 10 நிமிடமே பேச நேரம் தரப்பட்டது என்றும் இது போதாது என்றும் குறைபட்டு வெளிநடப்பு செய்வதாக அறிவித்தார். இதனால் பிரதமர் தலைமையில் நடந்த கூட்டத்தில் சில நிமிடம் பரபரப்பானது. மற்ற முதல்வர்களுக்கு எல்லாம் 30 முதல் 35 நிமிடம் வழங்கப்பட்டுள்ளது. 10 நிமிடத்தில் எனது பேச்சை முடித்துக்கொள்ள மணி அடிக்கப்பட்டது. இது மிகப்பெரிய அவமானம், எனக்கு மட்டுமல்ல தமிழ்நாட்டிற்கே , தமிழக மக்களுக்கே ஏற்பட்ட அவமானம். பல மாநாடுகளில் பேசியிருக்கிறேன். இது போன்று நடந்ததில்லை. குறிப்பாக 10 நிமிடத்தில் தமிழகத்தின் தேவையை எடுத்து வைக்க முடியாது, இது பயனற்றது என்றும் முதல்வர் ஜெ.…
-
- 4 replies
- 1.2k views
-