Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. மறைந்த பிரதமர் இந்திராகாந்தியின் பேரன் வருண்காந்தி. இவர் மறைந்த சஞ்சய்காந்தி-மேனகாகாந்தியின் ஒரே மகன். பாரதீய ஜனதா கட்சியின் இளம் எம்.பி.யான வருண்காந்தி உத்தரபிரதேச மாநிலத்தில் இருந்து பாராளுமன்றத்துக்கு தேர்ந்து எடுக்கப்பட்டவர். பாரதீய ஜனதாவில் தேசிய செயலாளராக பொறுப்பு வகிக்கிறார். 30 வயதாகும் வருண்காந்திக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது. மணமகள் யாமினிராய் சவுத்திரி. கொல்கத்தாவைச் சேர்ந்தவர். வருண்-யாமினி திருமணம் வருகிற மார்ச் மாதம் 6-ந்தேதி உத்தரபிரதேச மாநிலம் காசியில் (வாரணாசி) உள்ள காசி காமகோடீஸ்வரர் கோவிலில் நடக்கிறது. காஞ்சி சங்கராச்சாரியார் தலைமையில் இந்து முறைப்படி திருமண சடங்குகள் நடைபெறுகிறது. திருமண விழாவை எளிமையாக நடத்த மேனகாகாந்தி விரும்புவதா…

  2. அகில இந்திய காங்கிரஸ் பொதுச்செயலாளர் ராகுல்காந்தி கடந்த வாரம் திடீரென கேரள மாநிலம் கோழிக்கோடு விமான நிலையத்தில் வந்து இறங்கினார். பிறகு அவர் ஒரு காரில் ஏறி சென்று விட்டார். அவர் எங்கு சென்றார் என்பது மர்மமாக இருந்தது.கடந்த ஒரு வாரமாக ராகுல்காந்தி பற்றி எந்த தகவல்களும் வெளியிடப் படவில்லை. தனிப்பட்ட பயணத்தில் அவர் உள்ளதாக மட்டும் தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில் கடந்த 16-ந்தேதி முதல் 20-ந்தேதி வரை 5 நாட்கள் அவர் தன் நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா கொண்டாட்டத்தில் ஈடுபட்டது தெரிய வந்துள்ளது. கர்நாடக மாநிலம் குடகு மாவட்டத்தில் உள்ள மலை பிரதேசங்களில் அவர் அரசியல் தொல்லை, பத்திரிகையாளர்கள் பரபரப்பு எதுவும் இல்லாமல் சுற்றி வந்தார்.நெவர்லேண்ட் ரிசார்ட் என்ற ஓட்டலில் தங்…

  3. பார்வதிப்பிள்ளை மரணத்திற்கு தமிழகத்தில் உள்ள பெரும் தலைவர்களான மு.கருணாநிதி, செல்வி. ஜெயலலிதா, கேப்டன் பிரபாகரன் மன்னிக்க கேப்டன் விஜயகாந்த் ஆகிய மூவரும் வாயே திறந்ததாக தெரியவில்லை. பட்டுக்கோட்டையில் தமிழீழமே தமிழருக்கு தீர்வென பிரகடனப்படுத்தியவன் நானே என்று நமது கலைஞர் அடிக்கடி மார்தட்டுவார்… இந்திய இராணுவத்தை அனுப்பி ஈழம் அமைக்கிறேன் என்று தேர்தலுக்காக வீரமுழக்கமிட்டார் நமது அன்னை பராசக்தி ஜெயலலிதா.. ஈழத் தமிழனுக்காக கேப்டன் வந்துவிட்டார் என்று முழங்கினார்கள் அவருடைய கட்சித் தொண்டர்கள். இந்த மூன்று பேரும் பார்வதி அம்மா மரணித்தபோது அவருக்கு மரியாதைக்காகவேனும் ஓர் அஞ்சலி செலுத்தவி;லை.. இந்தத் தலைவர்களுடைய பணத்தில் வரும் தொலைக்காட்சிகளின் மட்டைகளை …

    • 0 replies
    • 743 views
  4. இந்தியாவின் முன்னாள் மத்திய அமைச்சர் டி.ஆர்.பாலு உள்ளிட்ட படகு உரிமையாளர்கள் வற்புறுத்தியதாலேயே தாங்கள் எல்லை தாண்டியதாக தமிழக மீனவர்கள் கூறியதாக இந்திய ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. மாதகல் பகுதி அருள்தந்தை ஒருவரை மேற்கோள் காட்டி இச் செய்தியை குறிப்பிட்ட இந்திய ஊடகம் வெளியிட்டுள்ளது. இலங்கைக் கடல் எல்லைக்குள் ஊடுருவி, வலையைச் சேதப்படுத்தும் வகையிலான மீன்பிடிப்பு முறைகளை மேற்கொள்ளுமாறு தங்களை படகு உரிமையாளர்கள் கட்டாயப்படுத்தியதாகவும், படகுகளில் பெரும்பாலானவை முன்னாள் மத்திய அமைச்சர் டி.ஆர்.பாலுவுக்குச் சொந்தமானவை என்றும் சிறைபிடிக்கப்பட்ட மீனவர்கள் குறிப்பிட்ட அருள்தந்தையிடம் தெரிவித்ததாக இச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இச் செய்தியில் மேலும் தெரிவிக்…

    • 0 replies
    • 618 views
  5. சென்னை, பிப்.21,2011 இரட்டை ஆயுள் தண்டனை பெற்று சிறையில் அடைக்கப்பட்ட சாமியார் பிரேமானந்தா சென்னை தனியார் மருத்துவமனையில் காலமானார். பாலியல் வல்லுறவு, கொலை வழக்கில் இரட்டை ஆயுள் தண்டனை பெற்று கடலூர் சிறையில் அடைக்கப்பட்டார் புதுக்​கோட்டை சாமியார் பிரேமானந்தா. பல்வேறு நோய்களால் பாதிக்கப்பட்டு, உயி​ருக்கு ஆபத்தான நிலையில் கடலூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு போதுமான வசதிகள் இல்லாததால் முழுமையான சிகிச்சை பெற முடியாமல் தவித்தார். தனது சொந்த செலவில் சிகிச்சை பெற்றுக்கொள்ள அனுமதிக்கும்படி சிறைத் துறை அதிகாரிகளுக்கும், உள்துறை செய​லாளருக்கும் மனு கொடுத்தும் அவருக்கு உரிய பதில் கிடைக்கவில்லை. இதைத் தொடர்ந்து, சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத…

  6. வடகொரியா வரவேற்கிறது http://www.youtube.com/watch?v=FJ6E3cShcVU&feature=player_embedded

  7. சோனியா குடும்பத்திற்கு சுவிஸ் வங்கியில் கணக்கு உள்ளது: ராம் ஜேத்மலானி திங்கள், 21 பிப்ரவரி 2011( 14:53 IST )சோனியா, ராகுல் ஆகியோரின் பெயரில் சுவிஸ் வங்கிகளில் கருப்புப் பணம் போட்டி வைக்கப்பட்டுள்ளது என்று பிரபல வழக்குரைஞரும், பாரதிய ஜனதா கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினருமான ராம் ஜேத்மலானி கூறியுள்ளார். நாடாளுமன்றத்தின் நிதி நிலை அறிக்கை தொடரின் முதல் நாளான இன்று, நாடாளுமன்றத்திற்கு வெளியே செய்தியாளர்களிடம் பேசிய ஜேத்மலானி, “சுவிஸ் வங்கிகளில் காந்தி குடும்பத்தார் பணம் போட்டு வைத்துள்ளார்கள் என்றே கருதுகிறேன்” என்று கூறியுள்ளார். “இவர்கள் பணம் போட்டு வைத்துள்ளார்கள் என்பதை சுவிஸ் பத்திரிக்கைகள் எழுதியுள்ளன. கெண்ட் புத்தகம் அந்தத் தகவல்களை வெளியிட்டுள்ளது. சுவ…

  8. சென்னை, பிப்.18: 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் தொடர்பாக கலைஞர் தொலைக்காட்சி அலுவலகங்களில் மத்திய புலனாய்வு அமைப்பினர்(சிபிஐ) இன்று அதிரடி சோதனை நடத்தியதாக பிடிஐ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. நேற்று நள்ளிரவில் இருந்து இன்று அதிகாலை வரை இந்த சோதனை நடைபெற்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 2ஜி ஊழலில் தங்களுக்கு எந்தத் தொடர்பும் இல்லை என்று கலைஞர் தொலைக்காட்சி நிர்வாகம் கூறிவந்த நிலையில் அத்தொலைக்காட்சி அலுவலகங்களில் இந்த திடீர் சோதனை நடைபெற்றுள்ளது. கலைஞர் தொலைக்காட்சியின் குறிப்பிட்ட நிதிப் பரிவர்த்தனைகள் ஸ்பெக்ட்ரம் ஊழலில் தொடர்புடையதாக இருக்கலாம் என்ற அடிப்படையில் இந்த சோதனை நடத்தப்பட்டதாக அதிகார வட்டாரங்கள் தெரிவித்தன. ஸ்பெக்ட்ரம் ஊழலில் குற்றம்சாட்டப்பட்ட ஷ…

    • 7 replies
    • 1.8k views
  9. ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தர உறுப்பினராக இந்தியா இடம்பெற ஆதரவு தெரிவித்து அமெரிக்க பிரதிநிதிகள் சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்தியா சர்வதேச சக்தியாக எழுச்சி பெற்று வருவதாகவும், ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா நிரந்தர உறுப்பினராக இடம்பெறுவது மிகவும் பொருத்தமானதே என்றும் இந்தியாவுக்கு ஆதரவான இத்தீர்மானத்தை ஜனநாயக கட்சி எம்.பி. அல்சீ ஹேஸ்டிங்ஸ் கொண்டுவந்த அந்த தீர்மானத்தில் கூறப்பட்டுள்ளது. உலகின் பலமான ஜனநாயக நாடாகவும், பொருளாதார ரீதியாக அமெரி்க்காவுக்கு முக்கிய நட்பு நாடாகவும் இந்தியா திகழ்கிறது என்றும் அதில் பாராட்டு தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்க பிரதிநிதிகள் சபையில் நிறைவேறப்பட்ட இத்தீர்மானம் தற்போது அயலுறவு விவகாரத்துக்கான குழு…

  10. புது தில்லி, பிப்.16: சீன ராணுவம் நவீனமயமாக்கப்படுவது சிறிது கவலையளிப்பதாக பாதுகாப்பு அமைச்சர் ஏ.கே. அந்தோனி கூறினார். இதனால் இந்தியாவும் தனது ஒருங்கிணைந்த படை பலத்தை மறு ஆய்வு செய்து, எத்தகைய சவாலையும் சந்திக்கும் அளவுக்கு கண்காணிப்போடு செயல்பட வேண்டிய நிலை உருவாகியுள்ளதாக அவர் குறிப்பிட்டார். தில்லியில் புதன்கிழமை நடைபெற்ற ஆசிய பிராந்திய பாதுகாப்பு தொடர்பான மாநாட்டில் அந்தோனி பேசியது: ராணுவத்தை நவீனமயமாக்குவதோடு, ராணுவத்துக்கான செலவையும் சீனா அதிகரித்துள்ளது மிகவும் வேதனையளிக்கிறது. இதனால் நமது படையை நவீனப்படுத்த வேண்டியது அவசியமாகிறது. படை பலத்தை வலிமைப்படுத்துவதோடு ராணுவ கட்டமைப்பு வசதிகளையும் மேம்படுத்த வேண்டியுள்ளது. எல்லைப் பகுதியில் படையை வலிமைப்பட…

  11. இலங்கையைச் சேர்ந்த 40வயதுடைய ராஜஸ்ரீ, 1991-ம் ஆண்டு சென்னையில் தங்கி இருந்தார். அப்போது போலி பாஸ்போர்ட்டு வழக்கில் சி.பி.ஐ. போலீசாரால் கைது செய்யப்பட்டார். ஜாமீனில் இருந்த இவர், வழக்கு விசாரணைக்கு கோர்ட்டில் ஆஜர் ஆகாமல் தலைமறைவாகி விட்டார். இந்த நிலையில் சென்னை விமான நிலையத்தில் அவரை விமானநிலைய அதிகாரிகள் பிடித்து அவர் சி.பி.ஐ. போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டார். சி.பி.ஐ. போலீசார், அவரை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி, நீதிமன்ற காவலில் சிறையில் அடைத்தனர். ராஜஸ்ரீ கனடா நாட்டு பாஸ்போர்ட் வைத்திருந்தார். அதையும் சி.பி.ஐ. அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். thanks to .... http://www.thedipaar.com/news/news.php?id=24497

  12. ஒரு பக்கம் எதிரே பலமான கூட்டணி.இன்னொரு புறம் தன் கூட்டணியை உறுதிப்படுத்திக் கொண்டு எதிரியுடன் மோத வேண்டிய சூழ்நிலை. அதற்கு முன் யாருக்கு எவ்வளவு விட்டுக் கொடுப்பது என்பதில் இழுபறி.. குழப்பம்! இக்கட்டான கட்டத்தில் இந்தப் பொதுத்தேர்தலைச் சந்திக்கவுள்ளது அ.தி.மு.க.! உள்ளுக்குள் நெருக்கடிகள் ஆயிரம் இருந்தாலும், மிகப்பெரிய தொண்டர் பலம் இந்தக் கட்சியின் அழுத்தமான அஸ்திவாரம்.கடந்த 2006-ம் ஆண்டு சட்டசபைத் தேர்தலில் அந்தக் கட்சி 61சீட்டுக்களே பெற்றிருந்தாலும், அதன் வாக்கு சதவிகிதம் 32.52 என்கிறது ஒரு புள்ளிவிவரம்! இது தி.மு.க. வாக்கு வங்கி சதவிகிதத்தைவிட சற்று அதிகம்! கடந்த தேர்தலில் தி.மு.க. கூட்டணியிலிருந்த இரண்டு கம்யூனிஸ்டுகளும் இந்தத் தேர்தலில் அ.தி.மு.க. பக்கம் வந்துவிட…

  13. கடன்பட்டார் நெஞ்சம்போல கலங்கினான் இலங்கை வேந்தன்’ என்பது பல காலத்துக்கு முன்பே கம்பன் சொன்ன உதாரணம். அப்படி ஒரு கலக்கம் தமிழக அரசுக்கு ஏனோ இன்னமும் வரவே இல்லை. 'கடன் அன்பை முறிக்கும்’ என்பதும் பழங்காலத்து மொழி. தமிழ் நாட்டையே இந்தக் கடன், தலைகீழாகக் கவிழ்க்கக் காத்திருக்கிறது. 10 ஆயிரம் கைமாற்றாக வாங்கியவர்கள், திருப்பிச் செலுத்த முடியவில்லை என்றால் பதறிப் போவதும்... வாங்கிய வீட்டுக் கடனை ஒரு மாதம் ஒழுங்காக அடைக்க முடியாமல் போனால், வங்கிக்காரர்களைப் பார்த்துப் பதுங்க ஆரம்பிப்பதும், மத்திய தர வர்க்கத்தின் அன்றாட வழக்கம். கிராமப்புறங்களில், கூட்டுறவுக் கடனை வசூலிப்பதற்காக அதிகாரிகள் வரும்போது, வயல் காடுகளை நோக்கி ஓடிப் போய் விவசாயிகள் பதுங்கிக்கொள்வார்கள். அவர்களைப் பி…

  14. 10-வது உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் டாக்காவில் இன்று துவக்க விழாவுடன் கோலாகலமாக தொடங்குகிறது. கடந்த பிப்ரவரி 12ம் தேதி முதல் நடைபெற்று வந்த பயிற்சி ஆட்டங்கள் வெள்ளிக்கிழமை (18-ம் தேதி) இங்கிலாந்து அணி, பாகிஸ்தான் இடையிலான ஆட்டத்துடன் நிறைவு பெறுகிறது. உலகக் கிரிக்கெட் ரசிகர்களின் இந்திரபுரியான இந்தியாவின் முதன்மையுடன், வங்கசதேசம், இலங்கை கூட்டாக நடத்தும் இந்தத் திருவிழா, வரும் சனிக்கிழமை முதல் களைகட்ட தொடங்கும். நாடே விழாக்கோலம்..! தொடக்க நாளான இன்று வங்கதேசமே கலைகட்டியுள்ளது. அந்நாடு சுதந்திரம் அடைந்த பிறகு நடத்தும் மிகப்பெரிய பிரம்மாண்ட கிரிக்கெட் போட்டி இது என்பதால் அங்கு நாடே திருவிழா பூண்டுள்ளது. கடந்த உலகக் கோப்பையில் இந்திய அணியை வீழ்த்…

  15. புதுதில்லி, பிப்.17: முன்னாள் தொலைத்தொடர்பு அமைச்சர் ஆ.ராசாவை 14 நாட்கள் நீதிமன்றக் காவலில் வைக்க சிபிஐ சிறப்பு நீதிமன்றம் இன்று உத்தரவிட்டது. இதையடுத்து அவர் தில்லி திகார் சிறைக்கு அனுப்பப்பட்டார். 2ஜி ஊழலில் கைது செய்யப்பட்ட பின் ராசா சிறையில் அடைக்கப்படுவது இதுவே முதன்முறை. இதுவரை அவர் தில்லியில் உள்ள மத்திய புலனாய்வுத் துறை தலைமை அலுவலகத்தின் லாக் அப்பில் அடைக்கப்பட்டிருந்தார். 2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட ஆ.ராசா, அவரது உதவியாளர் சந்தோலியா, தொலைத் தொடர்புத்துறை முன்னாள் செயலாளர் பெகுரா ஆகியோரை சிபிஐ அதிகாரிகள் கடந்த 2-ம் தேதி கைது செய்தனர். 8-ம் தேதிவரை 3 பேரையும் சிபிஐ காவலில் விசாரிக்க நீதிமன்றம் அனுமதி வழங்கியது. இதன் பிறகு ராசாவுக்கு…

  16. ஆப்பிரிக்க நாடான சோமாலியா மற்றும் எத்திபோப்பியாவை சேர்ந்த 129 அகதிகள் தென் ஆப்பிரிக்காவில் குடியேறுவதற்காக கப்பலில் சென்றனர். மொசம்பிக் அருகே அந்த கப்பல் சென்ற போது கப்பலில் விரிசல் ஏற்பட்டு உடைந்தது. கப்பலுக்குள் தண்ணீர் புகுந்து கடலில் மூழ்கியது. கப்பலில் இருந்த அனைவரும் கடலில் மூழ்கினார்கள். இதை பார்த்த மீனவர்கள் அவர்களை காப்பாற்றும் முயற்சியில் ஈடுபட்ட னர். 60-க்கும் மேற்பட்டோரை அவர்கள் காப்பாற்றினார்கள். ஆனால் 50 பேர் கப்பலில் மூழ்கி இறந்து விட்டனர். அவர்களை மீட்கும் பணி நடந்து வருகிறது. மீட்கப்பட்ட மொசம்பிக் நாட்டில் உள்ள பாதுகாப்பு மையத்தில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர். http://www.thedipaar.com/news/news.php?id=24489

  17. 50 தொகுதிகள், மனைவிக்கு துணை முதலமைச்சர் பதவி: விஜயகாந்த் பேரம் செ‌ன்னை, புதன், 16 பிப்ரவரி 2011( 16:22 IST ) தமிழகத்தில் தற்போது அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. கூட்டணி குறித்து ஒவ்வொரு கட்சிகளும் முடிவு செய்துவிட்ட நிலையில் தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் மட்டும் இன்னும் யாருடன் கூட்டணி என்பது குறித்து சஸ்பென்ஸாக வைத்துள்ளார். இந்த சஸ்பென்ஸ் குறித்து அ.இ.அ.தி.மு.க வட்டாரங்களில் விசாரித்தபோது கிடைத்த தகவல்கள், அடேங்கப்பா ரகமாக இருக்கிறது. வரும் சட்டப்பேரவை தேர்தலில் அ.இ.அ.தி.மு.க. கட்சியுடன் கூட்டணி வைத்து கொள்வதற்காக தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் முடிவு எடுத்துவிட்டார் என்றாலும், தே.மு.தி.க.வுக்கு 50 இடம், துணை முதலமைச்சர் பதவி - அதுவும் அவரது மனைவி பிரேமல…

    • 0 replies
    • 1.1k views
  18. கூட்டணிக் கட்சித் தலைவர்களே ஜெயலலிதாவைச் சந்திக்க காத்துக் கிடக்கும்போது, எஸ்.ஏ. சந்திரசேகருக்கு மட்டும் போயஸ்கார்டன் கதவுகள் திறந்திருக்கின்றன. தி.மு.க.வை விமர்சிப்பதில் விஜயகாந்துக்கு அடுத்த இடம் எஸ்.ஏ.சி.க்குத்தான். வரும் தேர்தலில் அ.தி.மு.க.வுக்கு ஆதரவாக விஜய் பிரசாரம் செய்யப் போகிறார் என்பதுதான் இளைஞர்களிடையே இப்போது ஹாட் டாபிக். ‘சட்டப்படி குற்றம்’ படத்தின் இறுதிக்கட்ட வேலைகளில் பிஸியாக இருந்த எஸ்.ஏ.சி.யைச் சந்தித்தோம். ‘காவலன்’ படத்தில் ஆளுங்கட்சியினர் செய்த இடையூறுதான் உங்களை தி.மு.க.விற்கு எதிராகப் பேச வைத்துள்ளதா? “அதுவும் ஒரு காரணம். ‘நாட்டுக்காக உழைக்கிறோம்’ என்று சொல்கிறவர்களே இங்கு மக்களைச் சுரண்டுகிறார்கள். ஊழல்களில் மெகா ஊழலாக போபர்ஸ் ஊழலைச் ச…

    • 0 replies
    • 1.3k views
  19. ராசா கைதோடு ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் இருந்து தி.மு.க.வின் பெயர் விடுபட்டு விடும் என்றுதான் தி.மு.க.வினர் நினைத்திருந்தனர். ஆனால் ராசா கைதுக்குப் பிறகு, க ருணாநிதி குடும்பத்தினர் பெயர் ஒவ்வொன்றாக வெளிவரத் தொடங்க, கதிகலங்கிப் போயுள்ளனர். ஸ்பெக்ட்ரம் ஊழலில் ஆ.ராசாவை சி.பி.ஐ. கடந்த வாரம் கைது செய்தது. அவரிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வரும் நிலையில், ஸ்பெக்ட்ரம் ஊழலில் கிடைத்த பணம் கலைஞர் தொலைக்காட்சிக்குக் கொடுக்கப்பட்டிருக்கிறது என பாட்டியாலா நீதிமன்றத்தில் சி.பி.ஐ. தெரிவித்தது. ஆனாலும் தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணி தொடர்வதால் காங்கிரஸ் தன்னைக் காப்பாற்றும் என தி.மு.க. நம்புகிறது. அதே நேரத்தில், தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணி சார்பில் இரு தரப்பிலும் தொகுதிப் பங்கீடு …

  20. ஜெர்மனியை சேர்ந்த மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம்,ரூ.1.10கோடி விலை கொண்ட ஜி-55ஏஎம்ஜி மாடல் எஸ்யூவீ காரை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. மெர்சிடிஸ் பென்சின் சொகுசு கார்கள் இந்திய வாடிக்கையாளர்களை பெரிதும் கவர்ந்துள்ளது. மெர்சிடிஸ் கார்களுக்கு இந்திய சந்தையில் நாளுக்கு நாள் வரவேற்பு அதிகரித்து வருகிறது. வாடிக்கையாளர்களின் விருப்பத்தை பூர்த்தி செய்யும் வகையில் ஐரோப்பிய சந்தையில் கலக்கிய பல மாடல்களை மெர்சிடிஸ் நிறுவனம் இந்தியாவில் அறிமுகம் செய்து வருகிறது. மெர்சிடிஸ் நிறுவனம் ஏற்கனவே சி-கிளால்,இ-கிளாஸ்,எஸ்-கிளாஸ்,எம்-கிளாஸ் சொகுசு கார்களை இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தியுள்ளது.இந்த வரிசையில் தனது ஜி-55ஏஎம்ஜி மாடல் எஸ்யூவீ காரை தற்போது இந்தியாவில் அறிமுகம் செய்துள்ள…

  21. இந்தியாவின் தாஜ்மகால், சீனாவின் பெருஞ்சுவர் உள்ளிட்ட 7 உலக அதிசயங்கள் சமீபத்தில் அறிவிக்கப்பட்டன. இந்த நிலையில் தற்போது 8-வது உலக அதிசயமாக நியூசிலாந்தில் உள்ள ரொடோ மாகானா ஏரிக்குள் மூழ்கி கிடக்கும் மொட்டை மாடி கட்டிடங்கள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளன. இவை 60 மீட்டர் ஆழத்தில் இருப்பது தெரிய வந்துள்ளது. இவை 19-ம் நூற்றாண்டை சேர்ந்தவை. எரிமலைகளின் சீற்றத்தால் கடந்த 125 ஆண்டுகளுக்கு முன்பு ஏரிக்குள் மூழ்கியிருக்கலாம் என கிவி மற்றும் அமெரிக்கா விஞ்ஞானிகள் கருதுகின்றனர். தண்ணீருக்குள் மூழ்கி கிடக்கும் மொட்டை மாடிகள், இளஞ்சிவப்பு மற்றும் வெள்ளை நிறத்தில் ராட்சத திருமண “கேக்” வடிவத்தில் உள்ளது. அது கடந்த 1886-ம் ஆண்டு ஏரிக்குள் மூழ்கியிருக்கலாம் என கூறப்படுகிறது. …

  22. திபெத் தலைவர் தலாய்லாமா. இவருடைய மருமகன் ஜிக்மி நோர்பு. அமெரிக்காவில் புளோரிடா தேசிய நெடுஞ்சாலையில் நேற்று மாலை சென்று கொண்டிருந்தபோது கார் மோதி பலியானார். நோர்பு, இண்டியான மகாணத்தில் ப்ளூமிங்டன் நகரில் வசித்து வந்தார். இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இச்செய்தி குறித்த வீடியோ பார்க்க..... http://www.thedipaar.com/news/news.php?id=24396

  23. ஏன் பேசி பேசி மற்றவர்களை தீக்குளிக்க வைக்கிறீர்கள்? சீமான், நெடுமாறன் மீது ஈ.வி.கே.எஸ். தாக்கு! தமிழக சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்படும் தொகுதிகள் குறித்து தோழமைக் கட்சிகளுடன் பேச அக்கட்சியின் தலைவர் சோனியா காந்தி ஐந்து பேர் கொண்ட குழுவை அமைத்து அறிவித்துள்ளார். இந்த குழுவில் முன்னாள் மத்திய அமைச்சர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனின் பெயர் இடம் பெறவில்லை. இதனால் ஆத்திரம் அடைந்த ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனின் ஆதரவாளர்கள் சுமார் 500க்கும் மேற்பட்டோர் வியாழன் அன்று சென்னை சத்தியமூர்த்தி பவனில் உண்ணாவிரதம் மேற்கொண்டனர். அப்போது ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனுக்கு ஆதரவாக கோஷங்களை எழுப்பினர். அப்போது ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனின் ஆதரவாளர் ஒருவர் மண்ணெண்ணெயை தன் உடலில…

  24. நியூயார்க்: ஐநா சபையில் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் தன்னுடைய உரையை வாசிக்காமல் மற்றவர்களுடைய உரையை வாசித்ததால் குழப்ப நிலை ஏற்பட்டது. அமெரிக்காவில் உள்ள ஐ.நா சபையில் ஜி4 என்றழைக்கப்படும் நாடுகளான இந்தியா, பிரேசில், ஜெர்மனி, ஜப்பான் நாடுகளின் வெளியுறவுத்துறை அமைச்சர்களின் கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொள்வதற்காக இந்தியாவின் வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா அமெரிக்கா சென்றிருந்தார். அங்கு ஐநாசபையில் பேசத்துவங்கிய எஸ்எம் கிருஷ்ணாவின் பேச்சை கவனித்த மற்ற நாட்டின் தலைவர்கள் அதிர்ச்சிக்குள்ளாயினர். காரணம் தன்னுøடைய பேச்சிற்கு பதிலாக அருகே அமர்ந்திருந்த போர்சுகல் நாட்டு அமைச்சரின் உரையை மீண்டும் படிக்க துவங்கினார்.இதனால் மற்ற நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சர்கள் அ…

  25. 1991க்குப் பிறகுதான் பிரபாகரனுடன் விரோதம் என்றால், 1987ல் அவரைக் கொல்லச் சொன்னது எதற்காக? அடிப்பவனுக்கு ஆயுதங்களை அள்ளிக் கொடுத்து விட்டு, அடிபட்ட வனுக்கு உணவுப் பொட்டலம் போடுகிற நாடு உலகத்திலேயே அமெரிக்கா மட்டும்தான் – என்று தவறாக நினைத்துக் கொண்டிருக்கும் ஒவ்வொருவரிடமும் தவறாமல் ஒரு கேள்வியைக் கேட்க வேண்டியிருக்கிறது. எந்தையும் தாயும் மகிழ்ந்தோ மகிழாமலோ குலாவியோ உலாவியோ இருந்த உங்கள் இந்தியா மட்டும் என்ன கிழிக்கிறது? அடி அடி என்று இலங்கைக்கு ஆயுதங்களை வாரிவழங்கிவிட்டு, நசுங்கி நாசமாகியிருக்கிற தமிழர்களுக்கு வீடு கட்டிக் கொடுக்கப் போவதாக சலங்கை கட்டிக்கொண்டு ஆடுகிறதே… இதற்கு என்ன அர்த்தம்? பெண்பிள்ளையைக் கற்பழித்துவிட்டு, பிறக்கிற குழந்தைக்குப் பட்ட…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.