Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. நேட்டோ படைகளின் ஆபத்தை எதிர்கொள்ள 20 இராணுவப் பிரிவுகளை ஆரம்பிக்க ரஷ்யா திட்டம்! நேட்டோவின் வளர்ந்து வரும் அச்சுறுத்தல் காரணமாக, ரஷ்யா தனது நாட்டின் மேற்கு பகுதியில் புதிதாக 20 இராணுவப் பிரிவுகளைத் தொடங்கவுள்ளது. உயர் இராணுவ அதிகாரிகளுடன் நேற்று (திங்கட்கிழமை) நடைபெற்ற கூட்டத்தின்போது பாதுகாப்புத் துறை அமைச்சர் செர்கேய் ஷொய்கு இந்த அறிவிப்பை வெளியிட்டார். இதன்போது அவர் மேலும் கூறுகையில், ‘ரஷ்ய எல்லைகள் அருகே அமெரிக்காவின் போர் விமானங்கள் பறப்பதும், நேட்டோவின் போர்க் கப்பல்கள் நிறுத்தப்படுவதும் அதிகரித்துள்ளது. நேட்டோ கூட்டணி படைகள் அடிக்கடி போர் பயிற்சியிலும் ஈடுபட்டு வருகின்றன. இந்த நடவடிக்கைகள் சர்வதேச பாதுகாப்பு நடைமுறையை தகர்க்கின்றன. மேலும், பொருத்…

  2. இங்கிலாந்தின் புதிய பிரதமராக நியமிக்கப்படவுள்ளவரின் பெயரில் உள்ள ஆபாச நடிகைக்கு வாழ்த்துக்கள் குவிந்த செய்தி வெளியாகியிருக்கிறது. இங்கிலாந்து நாடு ஐரோப்பிய யூனியனில் இருந்து விலக வேண்டும் என்று அந்நாட்டு பெரும்பாலான மக்கள், பொதுவாக்கெடுப்பில் வாக்களித்ததால், அங்கு பிரதமராக இருந்த கேமரூன் பதவி விலக நேர்ந்தது. அதனைத் தொடர்ந்து அடுத்த பிரதமரை தேர்வு செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது. இங்கிலாந்தில் ஆளுங்கட்சியான கன்சர்வேடிவ் கட்சியின் தலைவராக தேர்வு செய்யப்படுபவர், தாமாகவே பிரதமராகவும் நியமிக்கப்படுவார். இந்த இரட்டை பதவிக்கான போட்டியில் இங்கிலாந்து எரிசக்தி மந்திரி ஆண்டிரியா லீட்சம், உள்துறை மந்திரி தெரசா மே ஆகிய இரண்டு பேர் இருந்தன…

  3. இன்றைய நிகழ்ச்சியில்… - சிரியா போரில் பாதிக்கப்பட்ட பல லட்சக்கணக்கான மக்களுக்கு உதவுவதற்கான கொடையாளிகளின் மாநாடு லண்டனில் நடக்கிறது. - சிரியா மற்றும் இராக்கிலிருந்து தப்பித்த ஐ எஸ் தளபதிகள் தம் நாட்டுக்கு வந்திருப்பதாகக் கூறுகின்றனர் லிபியாவின் உளவுத்துறை உயரதிகாரிகள். - நவுரு தீவுகளுக்கு அனுப்பப்படும் ஆபத்தை எதிர்நோக்கும் தஞ்சம்கோரிகளுக்கு அடைக்கலம் வழங்கப்போவதாக ஆஸ்திரேலிய திருச்சபைகள் கூறியுள்ளன.

  4. உக்ரைன் போரினால் உயிரிழக்கும் டொல்பின்கள் உக்ரைன் போரினால் டொல்பின்கள் உயிரிழப்பதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். உக்ரைன் மீது ரஷ்யா போரைத் தொடங்கி மூன்று மாதங்களைத் தொட்டுள்ள வேளையில் உக்ரைன் நாட்டின் வளங்கள் அதிகளவில் அழிக்கப்பட்டுள்ளன. இரு நாடுகளிலும் ஆயிரக்கணக்கான இறப்புகள், அழிக்கப்பட்ட வீடுகள், மாசுபட்ட மண் போன்ற பல பிரச்சினைகளை மக்கள் எதிர்கொண்டு வரும் நிலையில் விலங்குகள், குறிப்பாக டொல்ஃபின்களின் உயிருக்கு இந்தப் போர் ஆபத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆம். கருங்கடலின் கரையோரங்களில் அதிக எண்ணிக்கையிலான திமிங்கிலங்கள், டொல்பின்கள் மற்றும் போர்போயிஸ்கள் தென்படுவதோடு கடந்த 3 மாதங்களில் கருங்கடலையொட்டிய துருக்கி கடற்கரைகளில் கிட்டத்தட்ட 100 டொல்பின்கள் இறந்த நிலையில் க…

  5. ரியோ டி ஜெனீரோவில் பதற்றம் ஒலிம்பிக் போட்டிகளை பார்வையிட பத்திரிகையாளர்களை ஏற்றிச் சென்ற பஸ் மீது மர்ம நபர்கள் தாக்குதல் நடத்திய சம்பவத்தினால் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ரியோ டி ஜெனீரோ நகரில் இன்று டியோடோரோ பகுதியில் இருந்து ஒலிம்பிக் பூங்காவை நோக்கி சென்ற பத்திரிகையாளர்கள் பஸ் மீது சில நபர்கள் தாக்குதல் நடத்தினர். குறித்த தாக்குதலில் பஸ்ஸின் ஜன்னல்கள் உடைந்து நொறுங்கியுள்ளது.இந்த தாக்குதலில் 12 பத்திரிகையாளர்கள் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. தீவிரவாத அச்சுறுத்தல் காரணமாக ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறும் ரியோ டி ஜெனீரோ நகரில் பாதுகாப்பு படைகளை சேர்ந்த சுமார் 85 ஆயிரம் பேர் காவல் பண…

  6. ஆஸ்திரேலிய நாடாளுமன்றம் கலைப்பு, ஜூலை 2 தேர்தல் ஆஸ்திரேலிய நாடாளுமன்றம் கலைக்கப்பட்டுள்ளது. இதையடுத்து அங்கு எதிர்வரும் ஜுலை மாதம் இரண்டாம் தேதி பொதுத் தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கடும் பொருளாதார நெருக்கடி நிலவும் சூழலில், பொதுத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது இதற்கான அறிவிப்பை பிரதமர் மால்கம் டர்ண்புல் வெளியிட்டார். எட்டுமாதங்கள் மட்டுமே பிரதமராக இருந்த அவர் மீண்டும் தேர்தலில் போட்டியிடுகிறார். உட்கட்சி முரண்பாடு மற்றும் சதி காரணமாக, இவருக்கு முன்னர் பிரதமராக இருந்த டோனி அபாட் பதவி விலகும் நிலை ஏற்பட்டது. ஆஸ்திரேலியாவின் முக்கிய ஏற்றுமதியான இரும்பு மற்றும் நிலக்கரியில் ஏற்பட்ட விலைச்சரிவின் காரணமாக, நாட…

  7. பிரான்ஸ், ஜேர்மன், இங்கிலாந்துடன் ஈரான் அணுசக்தி பேச்சுவார்த்தை! ஈரானின் அணுசக்தித் திட்டம் தொடர்பான பதட்டங்கள் அதிகரித்து வரும் நிலையில், இந்த வாரம் பிரான்ஸ், ஜேர்மனி மற்றும் இங்கிலாந்துடன் அணுசக்தி பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாக தெஹ்ரான் (24) தெரிவித்துள்ளது. எதிர்வரும் வெள்ளிக்கிழமை (29) நடக்கவிருக்கும் இந்த பேச்சுவார்த்தையானது ஈரானின் வெளிவிவகார அமைச்சினால் ஞாயிற்றுக்கிழமை (24) அறிவிக்கப்பட்டது. பாலஸ்தீனம், லெபனான் பிரச்சினைகள், அணுசக்தி விவகாரம் உட்பட பல பிராந்திய மற்றும் சர்வதேச பிரச்சினைகள் தொடர்பில் இதன்போது கவனம் செலுத்தப்படும் என ஈரானிய வெளிவிவகார அமைச்சக செய்தித் தொடர்பாளர் எஸ்மாயில் பாகேய் (Esmaeil Baghaei) கூறினார். இங்கிலாந்து அதிகாரிகள் இ…

  8. கொலம்பிய ஜனாதிபதி நோபள் பரிசு பணத்தை நன்கொடையாக வழங்கினார் கொலம்பிய ஜனாதிபதி Juan Manuel தமக்கு கிடைக்கப் பெற்ற நோபல் சமாதான விருது பரிசுப் பணத்தை கடந்த 52 ஆண்டுகளாக அந்நாட்டில் இடம்பெற்று வந்த சிவில் யுத்தத்தில் பாதிக்கப்பட்டோர் நலன் திட்டத்திற்காக வழங்கியுள்ளார். கடந்த மாதம் பார்க் தீவிரவாதிகளுடன் சமாதான உடன்படிக்கை செய்து கொண்டமைக்காக, கொலம்பிய ஜனாதிபதிக்கு இந்த விருது வழங்கப்பட்டுள்ளது. எவ்வாறெனினும், இந்த சமாதான உடன்படிக்கை தொடர்பில் நடத்தப்பட்ட சர்வஜன வாக்கெடுப்பில் மக்கள் சமாதான உடன்படிக்கைக்கு எதிராக வாக்களித்திருந்தனர். இந்த சிவில் யுத்தத்தில் 2லட்சத்து 60,000 பேர் கொல்லப்பட்டிருந்த…

  9. வருங்கால அறிவியல்: உலகத்தின் சாலைகள் அனைத்தும் நிலத்தடிக்கு மாற்றப்பட்டால் எப்படியிருக்கும்? லாரா பேடிஸன் பிபிசிக்காக 41 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,ZHUANG WANG/GETTY சாலைகள் நகரங்களை மாசுபடுத்துகின்றன. பொது இடங்களையும் ஆங்காங்கே துண்டுகளாக இருக்கும் வாழ்விடங்களையும் விழுங்கிவிடுகின்றன. அத்தகைய சாலைகளை நிலத்தடி சுரங்கச் சாலைகளாக மாற்ற முடியுமா? அது இந்தப் பிரச்னையைத் தீர்க்க உதவுமா? 1863-ஆம் ஆண்டில், தெருக்களில் இருக்கும் போக்குவரத்தைக் குறைக்கும் முயற்சியில், உலகின் முதல் சுரங்கப் பாதையான மெட்ரோபோலிட்டன் ரயில்பாதையை லண்டன் திறந்தது. அதற்கு இருபது ஆண்டுகளுக…

  10. ஹிண்ட்ராப் அமைப்பின் தலைவர் பி வேதமூர்த்தி பராமரிப்பு அரசாங்கப் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் தலைமைத்துவத்தை அங்கீகரிக்க முடிவு செய்தது தொடர்பில் தங்கள் அதிருப்தியைத் தெரிவிப்பதற்காக கூலிமில் முன்னாள் ஹிண்ட்ராப் ஆதரவாளர்கள் குழு ஒன்று அவருடைய கொடும்பாவிக்கு எரியூட்டினர். “வேதமூர்த்தி ‘தமது சொந்த நலனுக்காக இந்தியர்களுடைய சுயமரியாதையையும் கௌரவத்தையும் அம்னோவிடம் அடகு வைத்து விட்டதாக அந்தக் குழுவின் பேச்சாளரான எம் அசோகன் கூறினார். பிஎன், அம்னோ வழி நடத்தும் அரசாங்கம் ஆகியவை மீதான தங்களது மகிழ்ச்சியின்மையையும் வெறுப்பையும் காட்டுவதற்காக 2007ம் ஆண்டும் 2008ம் ஆண்டும் ஆயிரக்கணக்கான இந்தியர்கள் சாலைகளில் ஆர்ப்பாட்டம் செய்ததாக அவர் சொன்னார். “ஆனால் அந்த வரலாற்று நிகழ்வுக…

    • 0 replies
    • 306 views
  11. பிரேசில் நாட்டில் வாட்ஸ் ஆப் செயலிக்கு விதிக்கப்பட்ட திடீர் தடையால் 10 கோடிக்கும் அதிகமானோர் தகவல் பரிமாற முடியாமல் அவதிக்குள்ளாகினர். வாட்ஸ் ஆப் பாதுகாப்பு அம்சங்களுக்கு எதிராக செயல்படுவதாகவும், இதனால் சமூக விரோத செயல்கள் நடைபெற வாய்ப்புள்ளதாகவும், இதனால் இந்தியாவில் வாட்ஸ் ஆப் செயலுக்கு தடை விதிக்க வேண்டும் என்று சமீபத்தில் வழக்கு தொடரப்பட்டது. ஆனால் இந்தியாவில் வாட்ஸ் ஆப் செயலியை தடை செய்ய முடியாது என்று நீதிமன்றம் உத்தரவிட்டது.இந்த நிலையில் பிரேசில் நாட்டில் நடந்த ஒரு குற்றச் செயலுக்காக குறிப்பிட்ட தகவல்களை வழங்குமாறு பிரேசில் பொலிசார் வாட்ஸ் ஆப் நிறுவனத்தை கேட்டுக் கொண்டனர். ஆனால் தகவல்களை தர அந்நிறுவனம் மறுத்துவிட்டது. இது குறித்து ரியோ டீ ஜெனீரோ நீதி…

  12. ஆப்கானிஸ்தானில் நேட்டோ படை மீது தற்கொலைத் தாக்குதல் ஆப்கானிஸ்தானில் நேட்டோ படை களைக் குறிவைத்து தலிபான்கள் தற்கொலைத் தாக்குதல் நிகழ்த்தினர். வெடிப்பொருள் நிரப்பிய காரை மோதச் செய்து இத்தாக்குதல் நிகழ்த்தப்பட்டது. காபூல் நகரின் ஜாய்சிர் பகுதியில் நடந்த இத்தாக்குதலில் ஒரு குழந்தை உட்பட மூன்று பொதுமக்கள் காயமடைந்தனர். ஆப்கானிஸ்தான் உள்துறை அமைச்சகம் இத்தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்துள்ளது. கடந்த செப்டம்பர் 28-ம் தேதி, குண்டுஸ் நகரை தீவிரவாதிகள் கைப்பற்றியுள்ளனர். கடந்த 14 ஆண்டுகளில் தலிபான் தீவிரவாதி களுக்குக் கிடைத்த மிகப்பெரு வெற்றியாக இது கருதப்படுகிறது. குண்டுஸ் நகர் மீது வான்வழித் தாக்குதல் நிகழ்த்தப்பட்டதற்கு பழிவாங்கும் விதமாக கார்வெடி குண்டுத் தாக்குதலை மேற் …

  13. பிலிப்பைன்ஸ் நாட்டைச் சேர்ந்த ஒருவருக்கு சவுதி அரேபியாவில் விதிக்கப்பட்ட மரண தண்டனை நிறைவேற்றப்படுவதைத் தடுக்க, ஒரு மில்லியன் டாலர்கள் தொகையை பொதுமக்கள் நன்கொடை மூலம் திரட்ட பிலிப்பைன்ஸ் அரசு மக்களிடம் கோரிக்கை வைத்திருக்கிறது. பிலிப்பைன்ஸ் நாட்டைச் சேர்ந்த தொழிலாளியான ஜோசெலிடொ ஸப்பனட்டா, சவுதி அரேபியாவில் அவர் தங்கியிருந்த வீட்டின் உரிமையாளரைக் கொன்றதற்காக மரண தண்டனை விதிக்கப்பட்டார். ஆனால் சவுதி அரேபியாவின் சட்டப்படி, கொலை செய்யப்பட்டவரின் குடும்பத்துக்கு அவர்கள் கேட்கும் தொகையை தந்துவிட்டால், குற்றம்சாட்டப்பட்டவர் விடுதலை செய்யப்படுவார். இது வரை சுமார் 130,000 டாலர்கள் திரட்டப்பட்டுவிட்டது. சௌதி அரேபிய அரசு இந்தத் தொகையை தருவதற்கான கால அவகாசத்தை நவம்பர் மாதம் வரை…

  14. சமாஜ்வாதி கட்சியை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினரும், கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவருமான ராம்கோபால் யாதவ் அக்கட்சியிலிருந்து மீண்டும் நீக்கப்பட்டுள்ளார். ராம்கோபால் யாதவை கட்சியில் இருந்து ஆறு ஆண்டுகளுக்கு நீக்கும் அறிவிப்பை வெளியிட்ட சமாஜ்வாதி கட்சியின் தேசிய தலைவர் முலாயம் சிங் யாதவ், இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடந்த சமாஜ்வாதி கட்சியின் தேசிய மாநாடு அரசியலமைப்பிற்கு விரோதமானது என்றும் தெரிவித்துள்ளார். இன்று நடந்த மாநாடு கட்சியின் கொள்கைகளுக்கு எதிரானது என்று தெரிவித்த முலாயம் சிங் யாதவ், இக்கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார். மேலும், சமாஜ்வாதி கட்சியின் தேசிய மாநாடு வரும் 5-ஆம் தேதியன்று (வியாழக்கிழமை) நடைபெற…

    • 0 replies
    • 306 views
  15. சீனாவில்... ஹோட்டல் கட்டடம் இடிந்து விழுந்து, 17 பேர் உயிரிழப்பு ஐந்து பேர் காயம் கிழக்கு சீன நகரமான சுஜோவில் ஹோட்டல் கட்டடம் ஒன்று இடிந்து விழுந்ததில் சுமார் பதினேழு பேர் உயிரிழந்துள்ளனர். 36 மணிநேர மீட்பு நடவடிக்கையை தொடர்ந்து மீட்புப் பணியாளர்கள் 23 பேரை இடிபாடுகளில் இருந்து மீட்டுள்ளதாகவும் அவர்களில் 6 பேர் உயிருடன் இருப்பதாகவும் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். உரிமையாளர் கட்டிடத்தின் கட்டமைப்பை மாற்றியதால் இந்த விபத்து ஏற்பட்டதாக முதற்கட்ட விசாரணையில் கண்டறியப்பட்டுள்ளது. உயிருடன் காணப்பட்ட ஆறு பேரில், ஐந்து பேர் காயமடைந்ததாகக் கூறப்படுகிறது இருப்பினும் ஆபத்தான நிலையில் அவர்கள் இல்லை என்றும் கூறப்படுகின்றது. https://athavannews.com/2021/1228574

  16. பனிமனிதன் ஓட்ஸியை கொன்றது யார்?: 5000 ஆண்டுகளுக்கு முந்தைய கொலை வழக்கை மீண்டும் விசாரிக்கும் இத்தாலி பெத்தனி பெல்பிபிசி செய்தியாளர் டச்சுக் கலைஞர்கள் அல்ஃபோன்ஸ் மற்றும் அட்ரி கென்னிஸ் ஓட்ஸியை போன்ற உருவத்தை உருவாக்கினார்கள். படத்தின் காப்புரிமைSOUTH TYROL MUSEUM OF ARCHAEOLOGY/OCHSENREITER Image captionடச்சுக் கலைஞர்கள் அல்ஃபோன்ஸ் மற்றும் அட்ரி கென்னிஸ் ஓட்ஸியை போன்ற உருவத்தை உருவாக்கினார்கள் வடக்கு இத்தாலியில் ஆல்ப்ஸ் மலைத்தொடரின் ஓட்ஸெலர் ஆல்ப்ஸ் (Oetztaler Alps) பகுதியில் தொலைதூரத்தில் அமைந்திருக்கும் உயரமான பகுதியில், பனிமனிதன் ஓட்ஸி கண்டெடுக்கப்பட்டார். 5,300 ஆண்டுகளுக்கு முந்தைய …

  17. இஸ்லாமிய குடியரசுக்கு எதிரான சதியில் ஈடுபடுவதாக எதிரி நாடுகள் மீது இரான் தலைவர் குற்றச்சாட்டு, வெளிநாட்டுக் கழிவுகள் இறக்குமதிக்கு கட்டுப்பாடு விதித்த சீனா, சுற்றுலாவாசிகளைக் கவரும் செயற்கை பனிச்சறுக்கல் உள்ளிட்ட செய்திகளை இந்த செய்தியறிக்கையில் காணலாம்.

  18. ஜேர்மனியில்... மூன்று வாரங்கள், நாடளாவிய ரீதியில் முடக்கம் அமுல் ஈஸ்டர் விடுமுறையை நிறுத்தி கொரோனா தொற்றின் மூன்றாவது அலையை தடுக்கும் விதமாக மூன்று வாரங்கள் நாடளாவிய ரீதியிலான முடக்கத்தை ஜேர்மனி அறிவித்துள்ளது. பிராந்திய தலைவர்களுடன் பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து அதிபர் அங்கலா மேர்க்கெல் குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதன்படி ஏப்ரல் முதலாம் திகதி முதல் 5 வரை கட்டுப்பாடுகள் இன்னும் கடுமையானதாக இருக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. அந்தவகையில் ஏப்ரல் முதலாம் திகதி முதல் ஈஸ்டர் பண்டிகைக்கு ஐந்து நாட்கள், ஜேர்மனியர்கள் வீட்டிலேயே தங்க வேண்டும் என்றும் வெளியிடங்களுக்கு செல்வதை தவிர்க்க வேண்டும் என்றும் அறிவிப்பு வெளியாகியுள்ளது. https://athavannew…

  19. சிறுவர்களை வைத்து ஆபாச படங்களை தயாரித்த கும்பல் சிக்கியது : 29 சிறுவர்கள் இனம்காணல் தமது வலையமைப்பின் மூலம் உலகத்தின் பல நாடுகளுக்கு மில்லியன் கணக்கான சிறுவர்களின் பாலியல் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை விநியோகித்து வந்த குற்றச்சாட்டில் இலங்கையர்கள் உட்பட 7 பேரை ஸ்பானிய சிவில் பாதுகாப்பு பிரிவினர் கைது செய்துள்ளனர். குறித்த வலையமைப்பினர் சுமார் 80 சிறுவர்களை பயன்படுத்தி இவ்வாறான பாலியல் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை எடுத்துள்ளதாகவும் இதில் 29 சிறுவர்கள் இனம் காணப்பட்டுள்ளதாகவும் அந்நாட்டு சிவில் பாதுகாப்பு பிரிவினர் தெரிவித்துள்ளனர். குறித்த வலையமைப்பின் தலைவரும் கைது செய்யப்பட்டுள்ளதோடு குறித்த நபர் 13 வயதுக்கு குறைவான சிறுவர்க…

  20. முழுமையாக அணு ஆயுதங்களை கைவிடாமல், வட கொரியா மீதான பொருளாதார தடைகள் நீக்கப்படமாட்டாது என அமெரிக்கா வெளியுறவுத்துறை செயலர் மைக் பாம்பேயோ தெரிவித்துள்ளார். தென் கொரியாவில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் இவ்வாறு கூறினார். அணு திட்டங்களை கைவிட வட கொரியா ஒப்புக் கொண்டுள்ளதையும் மைக் குறிப்பிட்டார். கிம் ஜாங்-உன் அணு ஆயுதங்களை கைவிடுவதற்கான அவசரத்தை புரிந்து கொள்வார் என்று நம்புவதாக தெரிவித்த அவர், 2020ஆம் ஆண்டிற்குள் வட கொரியா மிக பெரிய அளவில் ராணுவ நடவடிக்கைகளையும், ஆயுதங்களையும் …

  21. ஜெர்மனிக்குள் வந்திருக்கும் அகதிகளால் நாடு பெரும் மாற்றத்தை சந்திக்கும் என்று அங்கெலா மெர்க்கெல் நம்பிக்கை ஜெர்மனிக்குள் குவியும் குடியேறிகளின் வருகை அடுத்துவரும் ஆண்டுகளில் நாட்டையே மாற்றிவிடும் என்று அந்நாட்டின் ஆட்சித் தலைவி அங்கேலா மெர்க்கல் தெரிவித்துள்ளார். இதற்காக அறுநூறு கோடி அமெரிக்க டாலர் மதிப்பீட்டிலான செயற்திட்டம் ஒன்றையும் அவர் அறிவித்திருக்கிறார். அகதித்தஞ்சக் கோரிக்கைகளை வேகப்படுத்துவது மற்றும் புதிய குடியேறிகளுக்கான வீடுகளைக் கட்டுவது ஆகியவையும் இந்த திட்டங்களுக்குள் அடங்கும். குடியேறிகளின் எண்ணிக்கை மலைக்க வைப்பதாக இருப்பதாகவும் இந்த நெருக்கடியை ஜெர்மனியால் மட்டும் தனியாகத் தீர்க்க முடியாது என்றும் மேர்க்கல் தெரிவித்துள்ளார். ஐரோப்பிய ஒன்றியத்தின் குடிவரவ…

  22. தஞ்சக் கோரிக்கை நிராகரிக்கப்பட்டால் வெளியேற்றவேண்டும்- ஜெர்மன் மாகாண அமைச்சர் ஜெர்மனிக்கு வந்து தஞ்சம் கோரி, அக்கோரிக்கைகள் நிராகரிக்கப்பட்டால், விண்ணப்பித்த குடியேறிகள் நாட்டைவிட்டு வெளியேற்றப்படவேண்டும் என்று ஜெர்மனியின் மாகாணமான, பவேரியாவின் உள்துறை அமைச்சர், ஜோச்சிம் ஹெர்மான் கூறியிருக்கிறார். தஞ்சம் கோரிகளின் சொந்த நாடுகளில் போர் நடந்து கொண்டிருந்தால் கூட , அவர்கள் வெளியேற்றப்படவேண்டும் என்று அவர் கூறினார். தனது பவேரியா மாகாணத்தில் நடந்த பல இஸ்லாமியவாதத் தாக்குதல்களுக்குப் பின்னர் பேசிய ஹெர்மன், தேவைப்பட்டால், இதைச் செய்ய ஐரோப்பிய ஒன்றிய சட்டங்களை மாற்ற வேண்டும் என்றார். இந்த சட்டங்கள் ஒரு சில அகதிகளை நாட்டிலிருந்து வெள…

  23. 'லிங்க்டின்' மூலம் சீனா இணைய ஊடுருவல்? - ஜெர்மனி கடும் எச்சரிக்கை படத்தின் காப்புரிமைGETTY IMAGES ஜெர்மனி நாட்டு அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகள் குறித்த தகவல்களை சேகரிக்க போலி 'லிங்க்டின்' சமூகவலைத்தள கணக்குகளை சீனா பயன்படுத்தி வருவதாக ஜெர்மனியை சேர்ந்த புலனாய்வு அமைப்பு தெரிவித்துள்ளது. சுமார் 10,000 ஜெர்மனியர்களை குறிவைத்து, அவர்களை ரகசிய தகவலாளிகளாக பணியமர்த்த இந்த நெட்வர்க்கிங் தளத்தை சீனா பயன்படுத்துவதாக அந்த அமைப்பு குற்றஞ்சாட்டியுள்ளது. இதற்காக தொடங்கப்பட்டதாக கூறப்படும் போலி கணக்குகளையும் ஜெர்மனி வெளியிட்டுள்ளது. மேல்மட்ட ஜெர்மனி அரசியலை சீர்குலைக்க சீனா முயற்சிப்பது இந்த போலி கணக்குகள் மூலம் தெரிய வருவத…

  24. 'முஸ்லிம் குடியேற்றவாசிகளைத் தடுப்பதற்காக, வேலிகளில் பன்றித் தலைகளை கொழுவ வேண்டும்' - ஹங்கேரிய அரசியல்வாதியின் கூற்றுக்கு கடும் எதிர்ப்பு 2016-08-24 12:07:38 முஸ்லிம் குடி­யேற்­ற­வா­சி­களைத் தடுப்­ப­தற்­காக, எல்­லைப்­புற வேலி­களில் பன்றித் தலை­களை கொழுவி வைக்க வேண்டும் எனக் கூறிய ஹங்­கே­ரி யைச் சேர்ந்த ஐரோப்­பிய நாடா­ளு­மன்ற உறுப்­பினர் ஒருவர் பல­ராலும் கடு­மை­யாக விமர்­சிக்­கப்­பட்­டுள்ளார். ஜியோர்ஜி ஷோப்லின் எனும் இவர் ஹங்­கே­ரியின் ஆளும் பிடெஸ்ட் கட்­சி யைச் சேர்ந்­தவர். ஐரோப்­பிய நாடா­ளு­மன்ற உறுப்­பி­ன­ராக இவர் பதவி வகிக்­கிறார். ஹங்­கே­ரியின் தென் புற எல்­லை­யி­லுள்ள பாது­காப்…

  25. ஆப்கானிஸ்தானில் போருக்காக சுமார் 60 லட்சம் கோடி ரூபாய் செலவழித்த அமெரிக்கா 8 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, ஆப்கானிஸ்தானில் அமெரிக்க துருப்புகள் 20 ஆண்டுகளுக்குப் பிறகு மேற்குலகப் படைகள் ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேறியதால் தாலிபன்கள் அதிவேகமாக ஆப்கனை கைப்பற்றி வருகிறார்கள். 2021 செப்டம்பர் 11ஆம் தேதிக்கும் ஒட்டுமொத்த அமெரிக்க படையையும் ஆப்கனில் இருந்து வெளியேற்ற அமெரிக்க அதிபர் ஜோ பைடன் விரும்புகிறார். ஆப்கானிஸ்தானில் போர் தொடங்கியதில் இருந்து நேட்டோ மற்றும் அமெரிக்கா எவ்வளவு செலவழித்திருக்கின்றன என்பதைப் பார்ப்போம். ஆப்…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.