உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26640 topics in this forum
-
மரண அடி வாங்கிய காங்கிரஸ் கழுதைத் தேய்ந்து கட்டெறும்பு ஆனது என ஒரு சொலவடை உண்டு.. காங்கிரஸ் கட்சி விஷயத்தில் அது நடந்திருக்கிறது. ஏதோ உத்தர பிரதேசத்தில் தனித்து நின்று சில தொகுதிகள் வென்றதும்..இனி நாம் தான் என்ற இறுமாப்பும்..பேச்சில் ஆணவமும் கொண்டு திகழ்ந்தது காங்கிரஸ். அவர்களுக்கு சரியான பாடம் கற்பித்துவிட்டது பீகார்.. பீகார் மக்களே..காங்கிரஸிற்கு சரியான பாடம் புகட்டிய உங்கள் அனைவருக்கும் நன்றி. கடந்த சில நாட்களாக தமிழகத்தில் அதன் ஆட்டம் அதிகமாய் இருந்தது.திராவிடக் கட்சிகளும் அதன் துணையிருந்தால் தான் ஆட்சி அமைக்க முடியும் என்னும் எண்ணத்தில் உள்ளன.அந்த எண்ணம் எவ்வளவு தவறானது என பீகார் முடிவுகள் தெரிவிக்கின்றன. அங்கும் மூன்று அணிகள்.. …
-
- 4 replies
- 822 views
-
-
நான் எந்த ஒரு நடிகருக்கும் விரோதி கிடையாது. ஆனால் யாராவது தமிழர்களைப் பழித்தால் அவர்களது குரல்வளையைக் கடிப்பேன் என்று ஆவேசமாக கூறியுள்ளார் பெப்சி தலைவர் வி.சி.குகநாதன். இலங்கைக்கு யாரும் போக வேண்டாம் என்று பல்வேறு தமிழ் அமைப்புகள், அரசியல் கட்சிகள், உலகத் தமிழர்கள் கோரிக்கை விடுத்து வந்தபோதிலும் அதை மதிக்காமல் நடிகை ஆசின் இலங்கைக்குப் போனார். போனதோடு நில்லாமல் ராஜபக்சே மனைவியோடும் பல இடங்களுக்கு சுற்றுலா போல சென்று வந்தார். இதுதொடர்பாக நடிகர் சங்கம் கடுமையாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தியும் இதுவரை ஆசின் மீது உருப்படியாக எதுவும் எடுத்ததாக தெரியவில்லை. இந்த நிலையில் தமிழ் நடிகர்களை மறைமுகமாக கேலி செய்வது போல பேசிய நடிகர் ஆர்…
-
- 1 reply
- 629 views
-
-
மும்பை, நவ.26- மும்பை தாக்குதல் சம்பவம் தொடர்பாக பாகிஸ்தான தனது வாக்குறுதிகளை இன்னும் நிறைவேற்றவில்லை என்று உள்துறை அமைச்சர் ப. சிதம்பரம் கூறியுள்ளார். மும்பையில் இன்று செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியின்போது அவர் இவ்வாறு தெரிவித்தார். நமது அண்டை நாடுகளை முழுமையாக நம்பிவிடுகிறோம். ஆனால், மும்பை தாக்குதல் சம்பவத்தில் குற்றவாளிகளை சட்டத்தின் முன் நிறுத்துவது தொடர்பான உறுதிமொழியை பாகிஸ்தான் நிறைவேற்றவில்லை. இதில் இருந்து நாம் பாடம் கற்றுக்கொண்டுள்ளோம். மும்பை தாக்குதலில் தொடர்புடைய தீவிரவாதிகளின் குரல் பதிவை கூட ஆய்வுக்காக இன்னும் பாகிஸ்தான் தரவில்லை. கொடூரமான மும்பை தாக்குதலின் இரண்டாம் ஆண்டு நினைவுநாள் கடைபிடிக்கப்படுகின்ற இந்த நேரத்தில், பாகிஸ்தான் …
-
- 1 reply
- 495 views
-
-
அணு குண்டுகளை ஏந்திச் சென்று தாக்கக்கூடிய அக்னி-1 ஏவுகணை வெற்றிகரமாக சோதித்துப் பார்க்கப்பட்டது. ஒரிசா மாநிலம் பாலசூரில் உள்ள வீலர் தீவிலிருந்து அக்னி-1 ஏவுகணை, வியாழக்கிழமை வெற்றிகரமாக ஏவப்பட்டது. அக்னி-1 ஏவுகணை தரையிலிருந்து 700 கி.மீ. தொலைவு வரை சென்று தாக்கும் திறன் கொண்டது. இந்த சோதனை எவ்வித இடையூறின்றி, வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டது என்று ஒருங்கிணைந்த சோதனைப் பிரிவு (ஐடிஆர்) இயக்குநர் எஸ்.பி. தாஸ் தெரிவித்தார். இந்த ஏவுகணை முற்றிலும் உள்நாட்டிலேயே, இந்திய தொழில்நுட்பத்தில் தயாரிக்கப்பட்டது. திட எரிபொருள் மூலம் இயங்கும் இந்த ஏவுகணை வியாழக்கிழமை காலை 10.10 மணி அளவில் ஏவி சோதித்துப் பார்க்கப்பட்டது. சோதனையின்போது அனைத்து நிகழ்வுகளும் கன கச்சிதமாக இருந்த…
-
- 0 replies
- 498 views
-
-
வரும் 2012-ம் ஆண்டு அதிபர் தேர்தலில் குடியரசுக் கட்சித் தலைவர் சாரா பாலின் போட்டியிடுவார் என்று ஊகிக்கப்படுகிறது. அந்தத் தேர்தலில் பராக் ஒபாமா மீண்டும் போட்டியிட்டால் அவரைத் தோற்கடிப்பேன் என்று அவர் சவால் விட்டுள்ளார். பாலின் கடந்த 2008-ம் ஆண்டு நடந்த அதிபர் தேர்தலில் குடியரசுக் கட்சியின் துணை அதிபர் பதவிக்கான வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். இருப்பினும் குடியரசுக் கட்சி தேர்தலில் தோல்வியடைந்தது. இந்தநிலையில், 2012ல் நடைபெறும் அதிபர் தேர்தலில் போட்டியிடுவது பற்றி இன்னும் சிந்தித்துக் கொண்டிருப்பதாகவும், அது பற்றி தனது குடும்பத்தாருடன் கலந்தாலோசித்து வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இவர் அலாஸ்கா மாகாண ஆளுநராக இருந்தவர். பின்னர் ராஜினாமா செய்து விட்டார். அவரிட…
-
- 4 replies
- 690 views
-
-
கிரேமெளத்: நியூசிலாந்தில் உள்ள நிலக்கரிச் சுரங்கத்திற்குள் சிக்கிக் கொண்ட 29 பேரும் பரிதாபமாக உயிரிழந்தனர். கிரேமெளத் பகுதியில் உள்ள பைக் ரிவர் நிலக்கரிச் சுரங்கத்திற்குள் இந்த 29 பேரும் சிக்கியிருந்தனர். கடந்த ஐந்து நாட்களாக இவர்கள் உள்ளேயே தவித்து வந்தனர். வெடிவிபத்து ஏற்பட்டதில் சுரங்கம் மூடிக் கொள்ளவே இவர்கள் அனைவரும் உள்ளே மாட்ட நேரிட்டது. இந்தநிலையில் இன்று பிற்பகல் இன்னொரு வெடிவிபத்து ஏற்பட்டது. இதனால் சுரங்கம் முற்றிலுமாக மூடி விட்டது. இதையடுத்து உள்ளே சிக்கியிருந்த 29 பேரும் உயிரிழந்திருக்கலாம் என்று போலீஸ் கண்காணிப்பாளர் கேரி நோல்ஸ் கூறியுள்ளார். முதலில் நடந்த வெடிவிபத்தைத் தொடர்ந்து மிகவும் அபாயகரமான மீத்தேன் வாயு சுரங்கத்திற்குள் பரவியிருந்தது.…
-
- 0 replies
- 418 views
-
-
பிரிட்டனின் Portsmouth நகரத்தில் சுற்றுவளைப்புத் தேடுதல், இலங்கையர் உட்பட எண்மர் கைது! நவ 24, 2010 Font size: Decrease font Enlarge font பிரித்தானியாவின் Portsmouth நகரத்தில் அந்நாட்டு பொலிஸார் தலைமையில் கடந்த திங்கட்கிழமை இரவு மேற்கொள்ளப்பட்ட திடீர் சுற்று வளைப்புத் தேடுதல் நடவடிக்கை ஒன்றின்போது இலங்கையர் ஒருவர் உட்பட சட்டவிரோத தொழிலாளர்கள் எட்டுப் பேர் கைது செய்யப்பட்டுள்ளார்கள். ஏனைய 07 பேரும் இந்தியர்கள் ஆவர். New Kwiki Marts கடைத் தொகுதிகள், மதுபான விற்பனை நிலையங்கள், தனியார் வீடுகள் ஆகியன உட்பட நகரம் முழுவதும் இத்தேடுதல் முடுக்கி விடப்பட்டது. கைது செய்யப்பட்ட 08 பேரும் சட்டவிரோதமான முறையில் நாட்டில் தங்கி இருந்து வேலை பார்த்திருக்கின்றனர் என்றும் வி…
-
- 0 replies
- 431 views
-
-
மாவீரன் முத்துக்குமார் சிலை திறப்புக்கு தடை நீங்கியது! நவ 23, 2010 மாவீரன் முத்துக்குமாருக்கு சிலை அமைப்பதற்கு விதிக்கப்பட்டிருந்த தடையை நீக்கி மதுரை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஈழத்தமிழர்களுக்காக இன்னுயிர் நீத்த ஈகி முத்துக்குமாருக்கு தஞ்சை செங்கிப்பட்டியில் சிலை ஒன்றை நிறுவ, கடந்த சூலை மாதம் தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி விழா நடத்தியது. மாவீரன் முத்துக்குமாரின் சிலையை இளந்தமிழர் இயக்கம் வடிவமைத்து வழங்கியது. இந்நிகழ்வின் போது, பொதுக்கூட்டம் நடத்த அனுமதி வழங்கிய காவல்துறை, மாவீரன் முத்துக்குமாருக்கு சிலை வைக்க அனுமதியளிக்கவில்லை. இதையடுத்து சிலையை நிறுவ த.தே.பொ.க. சார்பில் மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் வழக்குத் தொடுக்கப்பட்டது. இந்நிலையில், …
-
- 3 replies
- 515 views
-
-
அமெரிக்காவின் ஆதரவுடன் மட்டுமே ஐ.நா.பாதுகாப்புப் பேரவையின் நிரந்தர உறுப்பினராக இந்தியா ஆக முடியாது என்றும், அதற்கு சீனா, இரஷ்ய ஆதரவும் தேவை என்றும் ஐ.நா.விற்கான பாகிஸ்தானின் தூதர் அப்துல்லா ஹாரூன் கூறியுள்ளார். பாகிஸ்தான் ஹைதராபாத் நகரில் செய்தியாளர்களிடம் பேசிய அப்துல்லா ஹாரூன், “சீனா, இரஷ்ய ஆதரவு பெற்று நிரந்தர உறுப்பினராக ஆனாலும், வீட்டோ அதிகாரமற்ற இந்தியாவால் பாகிஸ்தானிற்கு எந்த அச்சுறுத்தலும் இருக்காது” என்று கூறியுள்ளார். பாகிஸ்தானை பயங்கரவாதத்திற்கு எதிரான போரில் தங்களது நண்பன் என்று நாளும் கூறிக்கொள்ளும் அமெரிக்கா, ஐ.நா.பாது.பே.யின் நிரந்தர உறுப்பினராக ஆதரவு அளிக்கும் என்ற செய்தி பாகிஸ்தானில் எதிர்ப்பை உருவாக்கியுள்ளது. ஐ.நா.வின் நிரந்தர உறுப்பினர்…
-
- 2 replies
- 722 views
-
-
. விஜயகாந்துக்கு அமெரிக்க இறையியல் பல்கலை டாக்டர் பட்டம். சென்னை: சமூக சேவை செய்ததற்காக தேமுதிக தலைவர் விஜயகாந்துக்கு இன்டர்நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் சர்ச் மேனேஜ்மென்ட் (ஐ.ஐ.சி.எம்.) என்ற இறையியல் பல்கலைக்கழகம் டாக்டர் பட்டம் வழங்குகிறது. அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் பிளைமெளத் நகரிலிருந்து இந்த பல்கலைக்கழகம் இயங்குகிறது. சென்னை சேத்துப்பட்டில் தனியார் பள்ளி மைதானத்தில் வரும் 3ம் தேதி விஜய்காந்துக்கு இந்த பட்டம் வழங்கப்படும். இதற்கான அழைப்பிதழ் அச்சடிப்பு, நிகழ்ச்சி ஏற்பாடுகளை தே.மு.தி.க. நிர்வாகிகள் செய்து வருகின்றனர். நன்றி தற்ஸ் தமிழ். .
-
- 1 reply
- 675 views
-
-
London 80 Gigapixels This Photo is the largest 360° Panorama in the world as of November 2010. http://www.360cities.net/london-photo-en.html
-
- 0 replies
- 649 views
-
-
கம்போடியாவின் "தண்ணீர் திருவிழாவில்" பயங்கரம் ஒரு முக்கிய திருவிழாவான கம்போடியாவின் "தண்ணீர் திருவிழாவில்", கடைசி நாளில் இடம்பெற்ற நிகழ்வில், குழப்பம் அடைந்த மக்கள் ஒருவர் மேல் ஒருவரை நசித்தும், பாலத்தில் இருந்து தவறி விழுந்தும் பயங்கர அழிவு ஏற்பட்டுள்ளது. 300 க்கும் மேலானவர்கள் கொல்லப்பட்டுள்ளனர். http://www.guardian.co.uk/world/2010/nov/22/cambodia-stampede-phnom-penh
-
- 1 reply
- 725 views
-
-
எதிர்காலத்தில் பாரிய யுத்தம் விண்வெளியில் இடம்பெறுவதற்கான சாத்தியம் இருப்பதால் கனடா தன்னை அதற்கேற்ற விதத்தில் தயார் படுத்திக் கொள்வது அவசியம் என கனடிய பாதுகாப்பு திணைக்களம் வலியுறுத்தியுள்ளது. கனடாவின் விண்வெளி பாதுகாப்பு குறித்து அதிக அக்கறை காண்பிக்கப்படுவது அவசியம் என இராணுவ அதிகாரியான கேணல் அன்றே டூபியஸ் (Andre Dupuis) நேற்றுத் தெரிவித்தார். கனடா விண்வெளி சங்கத்தின் வருடாந்த மகாநாடு நடைபெறும் நிலையில் அவர் இவ்வாறு குறிப்பிட்டிருக்கிறார். அடுத்த மகா யுத்தம் தரையில், வானத்தில் அல்லது கடலில் நடைபெறும் என்பதிலும் பார்க்க விண்வெளியிலேயே நடக்கும் என்று எதிர்பார்க்கலாம் என அவர் குறிப்பிட்டார். விண் வெளி பாதுகாப்பு குறித்து கனடா முதன் முதலில் 12 வருடங்களுக…
-
- 3 replies
- 858 views
-
-
நில ஊழல் புகாரில் சிக்கியுள்ள எடியூரப்பாவின் முதல்வர் பதவி ஆட்டம் கண்டுள்ளது. இதைப் புரிந்து கொண்ட எடியூரப்பா, ‘அப்படி ஒரு சூழ்நிலை ஏற்பட்டால், எனக்குப் பதில் எனது ஆதரவாளருக்குத்தான் முதல்வர் பதவி தர வேண்டும்’ என்று நிபந்தனை விதித்துள்ளதாக டெல்லியில் பா.ஜ. வட்டாரங்கள் கூறின. கர்நாடக முதல்வர் எடியூரப்பா தனது குடும்பத்தினருக்கு அரசு நிலம் ஒதுக்கிய விவகாரம் பூதாகரமாக வெடித்துள்ளது. காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசுக்கு எதிராக பா.ஜ. பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகளை கூறி நாடாளுமன்றத்தை முடக்கிவரும் நிலையில் எடியூரப்பா மீதான ஊழல் புகார்கள் தர்மசங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது. அவரை பதவியில் இருந்து நீக்கினால் மட்டுமே மத்திய அரசுக்கு எதிராக தொடர்ந்து போர்…
-
- 2 replies
- 491 views
-
-
தமது பணி இலகுவானதென நகைச்சுவையாக தெரிவித்த காரணத்தினால் ஜப்பான் அமைச்சர் ராஜினாமா 22 November 10 04:22 am (BST) தமது பணி இலகுவானதென நகைச்சுவையாக தெரிவித்த காரணத்தினால் ஜப்பான் அமைச்சரொருவர் தமது பதவியை இராஜினாமா செய்ய நேரிட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. ஜப்பானின் நீதி அமைச்சர் யானாகீடா என்பவரே இவ்வாறு தமது பதவியை இழந்துள்ளார். பணி மிகவும் இலகுவானதென நகைச்சுவையாக தெரித்த காரணத்தினால் ஏற்பட்ட சர்ச்சை காரணமாக பதவியை இராஜினாமா செய்துள்ளார். நீதி அமைச்சர் பதவி விலகியதனால் முக்கிய வரவு செலவுத் திட்டத்தை நிறைவேற்றிக் கொள்வதில் ஆளும் கட்சி நெருக்கடிகளை எதிர்நோக்கலாம் என தெரிவிக்கப்படுகிறது. தமது பதவியை இராஜினாமா செய்வதாக நீதி அமைச்சர் தலைநகர் டோ…
-
- 2 replies
- 517 views
-
-
ஏற்கனவே யாராவது இதனை இங்கு இணைத்திருந்தால் மன்னித்துக்கொள்ளுங்கள்.
-
- 2 replies
- 1.4k views
-
-
புஸ் காலத்தில் மூன்று சாத்தான்கள் என்று வர்ணிக்கப்பட்ட நாடுகளில் ஒன்று நோர்த் கொரியா. பாகிஸ்தானுக்கு பெனசீர் பூட்டோ பிரதமாராக இருந்த பொழுது அணுஆயுத தொழில்நுட்பத்தை நீண்டதூர ஏவுகணை தொழில்நுட்பத்தை கொடுத்து நோர்த் கொரியா பெற்றுக்கொண்டது. பல தடைகளுக்கு மத்தியில் தனது அணுஆயுத வல்லரசு கனவை வளர்த்து வந்தவண்ணம் உள்ளது. ஆனால் உலகின் ஒரு பட்டினி பஞ்சம் கூடிய நாடுகளில் ஒன்றாகும் நோர்த் கொரியா. தான் இரகசியமாக வடிவமைத்துள்ள ஒரு அணு ஆயுத உற்பத்திக்கான யூரேனிய தரப்படுத்தலை செய்யும் தொழில்சாலையை அமெரிக்கர் ஒருவருக்கு காட்டி மேற்கைத்திய நாடுகளை ஆச்சரியப்படுதியுள்ளது. கடந்த இரு நாட்களாக போர்த்துக்கல், லிஸ்பனில் நடந்த நேட்டோ மாநாட்டில் இது பற்றியும் விவாதிக்கப்படுள்ளது. T…
-
- 0 replies
- 763 views
-
-
ஞாயிற்றுக்கிழமை, 21, நவம்பர் 2010 (12:5 IST) ஜெர்மனி பாராளுமன்றத்தை தாக்க அல்கொய்தா திட்டம்! ஜெர்மனியில் அல் கொய்தா தீவிரவாதிகள் தாக்குதல் நடத்த இருப்பதாக ஏற்கனவே செய்திகள் வெளியாகின. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து அங்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இந்த நிலையில் அந்நாட்டு பாராளுமன்றத்தை தாக்க திட்டமிட்டுள்ளதாக புதிய தகவல் பரவியுள்ளது. இத்தகவலை ஜெர்மனியில் இருந்து வெளியாகும் ஒரு பத்திரிகையில் செய்தி வெளியாகியுள்ளது. ஜெர்மனி தலைநகர் பெர்லினில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க பாராளுமன்ற கட்டிடத்தில் புகுந்து அங்குள்ளவர்களை பிணைக் கைதிகளாக பிடிக்கவும் அவர்கள் திட்டமிட்டுள்ளனர். இச்செயலில் 6 தீவிரவாதிகள் ஈடுபட்டுள்ளனர். அவர்க…
-
- 2 replies
- 752 views
-
-
சி.என்.என். ஆல் நடத்தப்பட்ட யார் உலகின் தலைசிறந்த "ஹீரோ" 2010 இல் அனுராதா கொய்ராலா முதலாவதாக தெரிவுசெய்யப்பட்டு ஒரு இலட்சம் அமெரிக்க டாலர்களை தன் சேவையை தொடர பெற்றார். http://www.cnn.com/2010/LIVING/11/21/cnnheroes.hero.of.year/index.html?hpt=C1 இவர் இளம் பெண்கள் பாலியல் வேலைக்கு கடத்தப்படுதலை தடுக்கும் சேவையை செய்பவர். இதில் ஒரு தமிழரும் தனது சேவைக்காக நியமிக்கப்படிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. http://www.cnn.com/SPECIALS/cnn.heroes/archive10/naryanan.krishnan.html ==================== தொடர்புபட்ட செய்தி இவருக்கு வாக்களியுங்கள்: 2010 – உலகின் தலை சிறந்த ஹீரோ ஒரு தமிழன் http://www.yarl.com/forum3/index.php?showtopic=76881
-
- 0 replies
- 729 views
-
-
செல்டிக் புலியின் வீழ்ச்சி! எம். மணிகண்டன் சிங்கப்பூர், ஹாங்காங், தென்கொரியா போன்ற நாடுகளையும் தைவானையும் ஆசியப் புலிகள் என்பார்கள். 1980-களில் இந்த நாடுகளில் தொழில் பெருக்கம் விறுவிறுப்பாக இருந்தது. முடங்கிக் கிடந்த பொருளாதாரம், அசுர வேகத்தில் வளர்ச்சி கண்டது. இந்த நான்குகால் பாய்ச்சலின் வேகத்துக்காக கிடைத்ததுதான் பொருளாதாரப் புலிகள் என்கிற பட்டம். 30 ஆண்டுகளுக்கு முன்பிருந்த நிலையையும் இப்போதைய நிலையையும் ஓப்பிட்டுப் பார்த்தால், இது உண்மையான பொருளாதார வளர்ச்சி என்பதை ஒப்புக் கொள்ள முடியும். 1990-களின் மத்தியில் ஆசியப் புலிகளின் வேகம் ஐரோப்பிய நாடுகள் சிலவற்றைத் தொற்றிக் கொண்டது. அவற்றுள் ஒன்றுதான் அயர்லாந்து. பொருளாதார வளர்ச்சிக்கு அடித்தளம் அமைத்துக் கொ…
-
- 1 reply
- 748 views
-
-
தமிழக சட்டப்பேரவை பொதுத் தேர்தலிலும் ஐக்கிய முற்போக்கு கூட்டணி தொடரும் என்று மூத்த காங்கிரஸ் தலைவரும் மத்திய நிதியமைச்சருமான பிரணாப் முகர்ஜி அறிவித்தார். மத்திய அமைச்சர் அழகிரியின் மகன் துரை தயாநிதிஅனுஷா திருமணம் வியாழக்கிழமை மதுரையில் நடந்தது.மணவிழாவில் பிரணாப் பேசியதாவது;மாநிலத்திலும் மத்தியிலும் எங்கள் கூட்டணி 2004 இல் தொடங்கியது.ஆறரை ஆண்டுகள் முடிந்துவிட்டன.நாங்கள் ஒன்றாக இருப்பதால் இன்னும் நிறைய சாதனை படைப்போம்.இதில் எந்த சந்தேகமும் இல்லை. கடந்த ஆறரை ஆண்டுகளில் நாட்டில் சமூகபொருளாதார வளர்ச்சிக்கு காரணமாக உள்ள ஐக்கிய முற்போக்குக்கூட்டணி அடுத்த மூன்றரை ஆண்டுகளுக்குக்கும் தொடரும்.வரும் காலங்களில் இந்தக்கூட்டணி இன்னும் நிறையச் செய்திடமுடியும்.நாட்டின் அரசியல் ம…
-
- 0 replies
- 467 views
-
-
நேட்டோ உச்சி மாநாடு 19 மற்றும் 20ம் நாள் போர்ச்சுகல் தலைநகர் லிஸ்பனில் நடைபெறும். இந்த உச்சி மாநாட்டின் மிக முக்கிய கடமை, நேட்டோவின் புதிய நெடுநோக்கு திட்டத்தை வகுப்பது தான். நேட்டோ 28 உறுப்பு நாடுகளின் தலைவர்கள், நேட்டோவின் புதிய நெடுநோக்கு திட்டத்தை அங்கீகரித்து, புதிய வளர்ச்சி போக்கை தெளிவுப்படுத்தி, நேட்டோவின் வாழ்வு மற்றும் வளர்ச்சியின் தத்துவத்தைக் கண்டறிய வேண்டும். நேட்டோவின் புதிய நெடுநோக்கு திட்டம், நேட்டோ வளர்ச்சிக்கு வழிகாட்டும் ஆவணமாகும். நேட்டோவின் சாராம்சம், நோக்கம், கடமை ஆகியவற்றை இது முடிவு செய்யும். 1949ம் ஆண்டு நேட்டோ உருவாகிய பிறகு, 6 புதிய நெடுநோக்கு திட்டங்களை உருவாக்கியுள்ளது. இவற்றில் 2 திட்டங்கள் முக்கியமானவை. லிஸ்பன் உச்சி மாநாட்டி…
-
- 0 replies
- 897 views
-
-
பிரித்தானியாவின் இளவரசர் வில்லியம், தனது நீண்டகால பெண் நண்பி கேட் மிடில்டனை (Kate Middleton), அடுத்த ஆண்டு திருமணம் செய்துகொள்வாரென பிரித்தானிய அரச குடும்பம் அறிவித்தது. அடுத்த ஆண்டு வசந்த காலத்தில், அல்லது கோடை காலத்தில் அவர்களது திருமணம் இடம்பெறுமென்றும், திருமணம் குறித்த மேலதிக தகவல்கள் பின்னர் வெளியிடப்படுமெனவும் அரச மாளிகை அறிவித்தது. எட்டு வருடங்களுக்கு முன்னர் சென் அன்றூஸ் பல்கலைக்கழகத்தில் கல்வி கற்றபோது, அவர்கள் இருவரும் டேடிங் செய்ய ஆரம்பித்தார்கள். இளவரசர் சாள்ஸ், டயானாவைத் திருமணம் செய்து அடுத்த ஆண்டுடன் முப்பது வருடங்கள் நிறைவடைகின்றன. மிடில்டன் குடும்பத்தினர், அரச குடும்பத்தினரோ, பிரபுக் குடும்பத்தினரோ அல்லவென்பது குறிப்பிடத்தக்கது. …
-
- 17 replies
- 1.7k views
-
-
காஷ்மீர் குறித்து ஈரான் தலைவர் அயாத்துல்லா கமேனி தெரிவித்த கருத்து குறித்து அந்நாட்டு தூதரை நேரில் அழைத்து இந்தியா தனது ஆட்சேபத்தை தெரிவித்துள்ளது. ஹஜ் யாத்ரீகர்களுக்கான செய்தி ஒன்றை வெளியிட்டிருந்த அயாத்துல்லா கமேனி, உலகம் முழுவதும் உள்ள முஸ்லிம்கள் ஜம்மு காஷ்மீரில் நடக்கும் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்க வேண்டும் என்று கூறியிருந்ததோடு, வட இந்தியா ஆப்கானிஸ்தான், ஈராக் மற்றும் பாகிஸ்தான் போன்று இருப்பதாகவும் கூறியிருந்தார். இந்நிலையில் கமேனியின் இந்த கருத்து குறித்து கடும் அதிருப்தியடைந்த இந்திய அயலுறவுத் துறை அமைச்சகம், டெல்லியிலுள்ள ஈரானிய தூதரக அதிகாரியை சம்மன் அனுப்பி இன்று நேரில் வரவழைத்தது. பின்னர் அவரிடம் இந்திய அயலுறவுத் துறை அமைச்சக இணைச் செயலர…
-
- 1 reply
- 715 views
-
-
விடுதலைப் புலிகள் அமைப்பு மீதான தடையை மேலும் இரண்டு ஆண்டுகளுக்கு நீட்டித்திருந்த மத்திய அரசின் அறிவிக்கையை உறுதி செய்து சிறப்புத் தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது விடுதலைப்புலிகள் இயக்கத்திற்கு எதிராக கடந்த 1991 ஆம் ஆண்டு விதிக்கப்பட்டுள்ள தடையை, இந்திய அரசு இரண்டு ஆண்டுக்கு ஒருமுறை நீட்டித்து வருகிறது. இதன்படி கடந்த மே மாதம் தடை நீட்டிக்கப்பட்டதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுக்களையடுத்து, மத்திய தீர்ப்பாயம் கருத்து கேட்பு கூட்டங்களை நடத்தியது. டெல்லி உயர்நீதிமன்றத்தால் அமைக்கப்பட்ட நீதிபதி விக்ரம் ஜித் சென் தலைமையிலான தீர்ப்பாயம் சென்னை, உதகமண்டலம், டெல்லியில் கருத்துக்கேட்பு கூட்டங்களை நடத்தியது. விடுதலைப்புலிகள் இயக்கம் அழிக்கப்பட்டு விட்டதாக அறிவிக்கப்ப…
-
- 13 replies
- 1.1k views
-