Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. உலகப் பார்வை: 'சிரியாவுக்கு வடகொரியா ரசாயன ஆயுதம் வழங்குகிறது' இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க கடந்த சில மணி நேரங்களில் நடந்துள்ள உலக நிகழ்வுகளை #உலகப்_பார்வை பகுதியில் தொகுத்தளிக்கிறோம். 'சிரியாவுக்கு வடகொரியா ரசாயன ஆயுதம் வழங்குகிறது' படத்தின் காப்புரிமைAFP Image captionசிரியாவில் சிகிச்சை எடுக்கும் ரசாயன ஆயுத தாக்குதலுக்கு உள்ளானவர் ரசாயன ஆயுதங்கள…

  2. வாஷிங்டன்: வட கொரியா தயாரித்துள்ள கண்டம் விட்டுக் கண்டம் பாயும் ஏவுகணை செயல்படும் நிலையில் இருப்பதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. மேவும் இந்த ஏவுகணையில் பொருத்தும் அளவுக்கு சிறிய அளவிலான அணுகுண்டையும் வட கொரியா தயாரித்துள்ளதாகவும் அது சந்தேகப்படுகிறது. இதுகுறித்த சந்தேகம் ஏற்கனவே அமெரிக்காவுக்கு இருந்து வந்தது. தற்போது இதை கிட்டத்தட்ட அமெரிக்க நிபுணர்கள் உறுதி செய்துள்ளனர். இதுகுறித்து அமெரிக்க விமானப்படை அதிகாரி அட்மிரல் வில்லியம் கோர்ட்னி கூறுகையில் வட கொரியா தனது கேஎன் 08 கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையில் அணு ஆயுதத்தைப் பொருத்தி, அமெரிக்க மண்ணைத் தாக்கும் பலத்துடன் இருப்பதாக நாங்கள் அனுமானிக்கிறோம். இது செயல்படும் நிலையில் இருப்பதாகவும் நாங்கள் அறிகிறோம் என்ற…

    • 0 replies
    • 289 views
  3. பா.ஜனதா தேசிய செயற்குழு கூட்டம் டெல்லியில் 17–ந்தேதி முதல் 19–ந்தேதி வரை நடக்கிறது. இந்த கூட்டத்தை வெற்றிகரமாக நடத்துவது குறித்து பாராளுமன்ற குழு நேற்று கூடி விவாதித்தது. கூட்டத்துக்கு பிறகு பா.ஜனதா பொதுச் செயலாளர் அனந்தகுமார் நிருபர்களிடம் கூறியதாவது:– பாராளுமன்ற தேர்தலில் பா.ஜனதாவை ஆட்சியில் அமர்த்தியே தீருவது என்ற உறுதியுடன் தேசிய செயற்குழு கூட்டத்தை நடத்துகிறோம். இந்த கூட்டத்தில் நாடு முழுவதும் 10 ஆயிரம் அலுவலக பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட இருக்கிறார்கள். தேர்தலை எதிர்கொள்வது, மோடியே பிரதமர் என்ற கோஷத்தை கடை கோடி கிராமங்கள் வரை கொண்டு செல்வது, அனைவரையும் வாக்களிக்க செய்வது போன்ற பணிகளில் கட்சியினருக்கு இவர்கள் உறுதுணையாக இருப்பார்கள். செயற்குழு கூட்டத்தில் லஞ்ச…

  4. 28 MAR, 2025 | 11:20 AM அமெரிக்காவுடனான ஆழமான உறவுகளின் யுகம்முடிவிற்கு வந்துவிட்டது என கனடா பிரதமர் மார்க் கார்னி தெரிவித்துள்ளார். கனடாவுடனான உறவுகளை டிரம்ப் முழுமையாக மாற்றிவிட்டார் என தெரிவித்துள்ள கனடா பிரதமர் எதிர்காலத்தில் எவ்வாறான வர்த்தக உடன்பாடுகள் ஏற்பட்டாலும் இருநாடுகளிற்கும் இடையிலான உறவுகளில் மாற்றம் ஏற்படாது என அவர் தெரிவித்துள்ளார். நமது பொருளாதாரங்களின் ஆழமான ஓருங்கிணைப்பு, இறுக்கமான பாதுகாப்பு மற்றும் இராணுவ ஒத்துழைப்பை அடிப்படையாகொண்ட இரு நாடுகளிற்கும் இடையிலான உறவு பழைய உறவு முடிந்துவிட்டது என கனடா பிரதமர் தெரிவித்துள்ளார். டிரம்பின் கார் வரிகள் நியாயப்படுத்த முடியாதவை என தெரிவித்துள்ள அவர் அவை இரண்டு நாடுகளிற்கும் இடையில் ஏற்கனவே உள்ள உறவுகளை மீறும் …

  5. ஐரோப்பிய ஒன்றிய எல்லையற்ற மண்டலத்தில் ருமேனியா- பல்கேரியாவை ஏற்க மறுப்பு! ஐரோப்பிய ஒன்றிய எல்லையற்ற மண்டலத்தில் ருமேனியா- பல்கேரியா ஆகிய நாடுகள் இணைய விடுக்கப்பட்ட அழைப்பு நிராகரிக்கப்பட்டுள்ளது. ஆனால், ஐரோப்பிய ஒன்றிய உள்துறை அமைச்சர்கள், குரோஷியாவை 26-நாடுகள், எல்லையற்ற ஷெங்கன் மண்டலத்தில் ஏற்றுக்கொள்வதற்கு வாக்களித்துள்ளனர். ஜேர்மனியின் வெளிவிவகார அமைச்சர், இது ஐரோப்பாவிற்கு ஒரு மோசமான நாள் என்று கூறினார். 420 மில்லியன் மக்களை உள்ளடக்கிய மண்டலத்தில் இணைவதற்கு தேவையான அளவுகோல்களை பூர்த்தி செய்வதாக ஐரோப்பிய ஆணையம் மூன்று நாடுகளையும் ஆதரித்தது. ‘நானும் ஏமாற்றமடைந்துள்ளேன்’ என்று ஐரோப்பிய ஒன்றிய உள்துறை ஆணையர் யில்வா ஜோஹன்சன…

  6. ஆஸ்திரேலியாவின் மிகப்பெரிய செல்வந்தர்களில் ஒருவரான க்ளைவ் பால்மர், நாட்டின் பிரதமராகும் கனவோடு அரசியல் கட்சியொன்றைத் தொடங்குவதாக அறிவித்துள்ளார். மூழ்கிய டைட்டானிக் கப்பலை போன்ற ஒரு கப்பலை மீண்டும் உருவாக்கவுள்ளதாக அறிவித்த க்ளைவ் பால்மர், சுரங்கத் தொழிற்துறையைச் சேர்ந்த பெரும் பணமுதலை. அவர் அண்மைக் கால செய்திகளில் பெருமளவில் பேசப்பட்டு வந்திருக்கிறார். எதிர்வரும் செப்டம்பரில் நடக்கவுள்ள நாடாளுமன்ற பொதுத் தேர்தல்களில் எல்லாத் தொகுதிகளிலும் தனது கட்சி போட்டியிடும் என்றும் அவர் அறிவித்துள்ளார். 1945-இல் கலைக்கப்பட்ட ஐக்கிய ஆஸ்திரேலிய கட்சிக்கு மீள உயிர்க்கொடுக்கவுள்ளதாக அவர் கூறியுள்ளார். நாட்டு மக்கள் இரண்டு பிரதான கட்சிகளுக்குமாக பிரிந்துவிட்டதால் இந்தக் கட்சி க…

  7. இரண்டு வகையான கொரோனா வைரஸ்கள் உலகினை அச்சுறுத்துகின்றன – அதிர்ச்சி தகவலினை வெளியிட்ட விஞ்ஞானிகள்! இரண்டு வகையான கொரோனா வைரஸ்கள் உலகை அச்சுறுத்தி வருவதாக சீன விஞ்ஞானிகள் அறிவித்துள்ளனர். சீன விஞ்ஞானிகளினால் நேற்று(புதன்கிழமை) வெளியிடப்பட்டுள்ள ஆய்வு அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. மூர்க்கமான எல்வகை புதிய வைரசே 70 வீதமான ஸ்டிரெய்ன்களிற்கு காரணம் என தெரிவித்துள்ளனர். மற்றைய எஸ் வகை வைரஸ் 30 வீதமான ஸ்டிரெய்ன்களிற்கு காரணம் எனவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர். முதலாவது வகை வைரஸ் வுகானில் ஆரம்ப நாட்களில் காணப்பட்டது என, தெரிவித்துள்ள விஞ்ஞானிகள் ஜனவரிக்கு பின்னர் இது பரவும் வேகம் குறைவடைந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். இரண்டாவது வகையா…

  8. தாய்லாந்தின் மன்னரை, ஒரு தனிப்பட்ட உரையாடலில் அவதூறாகப் பேசினார் என்ற குற்றச்சாட்டில் சுமார் ஒரு வருட காலம் சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த ஒருவரை நீதிமன்றம் ஒருவழியாக விடுதலை செய்திருக்கிறது. அரச குடும்பத்துக்கெதிரான அவதூறு-- தாய்லாந்து தேவையற்ற தீவிரம் ? இந்த குறிப்பிட்ட நபர் இவ்வாறு தனிப்பட்ட உரையாடல் ஒன்றில் அரசரைத் தவறாகப் பேசினார் என்று அவரது சகோதரர் புகார் செய்தாராம். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, இந்த இரு சகோதரர்களுக்கிடையேயும் நீண்ட காலமாக பெரிய சச்சரவுகள் இருந்திருக்கின்றன, எனவே இந்த சாட்சியம் நம்பத்தகுந்ததாக இருக்காது என்று கூறினார். இதற்கு முன்பு, அவரை ஜாமீனில் விடுதலை செய்ய சமர்ப்பிக்கப்பட்ட பல மனுக்கள் நிராகரிக்கப்பட்டன. அரச குடும்பத்தினரை அவதூறு …

  9. ஓரிரு வரிகளில் உலகச் செய்திகள் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க கடந்த சில மணி நேரங்களில் நடந்துள்ள முக்கிய உலக நிகழ்வுகளை ஓரிரு வரிகளில் தொகுத்தளிக்கிறோம். டிரம்ப்-ரஷ்யா: அதிகாரத்தை தவறாக பயன்படுத்துவதாக ஃஎப்பிஐ மீது குற்றச்சாட்டு படத்தின் காப்புரிமைGETTY IMAGES டொனால்ட் டிரம்பின் அதிபர் தேர்தல் பரப்புரை விசாரணைகளில் அமெரிக்க பெடரல் புலனாய்வு அமைப்பு (ஃஎ…

  10. இன்றைய (17/04/2017) பிபிசி தமிழ் தொலைக்காட்சி செய்தியறிக்கையில், * தன் அதிகாரத்தை அதிகரிப்பதற்கான பொதுமக்கள் கருத்தறியும் வாக்கெடுப்பில் துருக்கி அதிபர் எர்துவான் வெற்றி; ஆனால் வாக்கெடுப்பு முடிவை ரத்து செய்யும்படி பிரதான எதிர்கட்சி கோரிக்கை. * காங்கோ ஜனநாயக குடியரசில் மனிதப்புதைகுழிகள் இருப்பதற்கான ஆதாரங்களை நேரில் கண்டது பிபிசி; இராணுவமும் ஆயுதக்குழுக்களும் ஆட்கொலைகளில் ஈடுபடுவதாக குற்றச்சாட்டு. * நியூசிலாந்திலுள்ள காட்பரீஸ் சாக்லேட் தொழிற்சாலையை மூடுவதற்கு உள்ளூரில் கடும் எதிர்ப்பு; உலகின் முன்னணி இனிப்பு உற்பத்தி நிறுவனம் உள்ளூர் மக்களிடம் கசப்பை உருவாக்குவது ஏன்?

  11. இங்கிலாந்தில் வரும் 19ந்தேதி முதல் அனைத்து கொரோனா கட்டுப்பாடுகளுக்கும் தளர்வு; பிரதமர் அறிவிப்பு இங்கிலாந்து நாட்டில் வருகிற 19ந்தேதி முதல் அனைத்து கொரோனா கட்டுப்பாடுகளும் தளர்த்தப்படும் என பிரதமர் போரிஸ் ஜான்சன் அறிவித்துள்ளார். பதிவு: ஜூலை 13, 2021 09:44 AM லண்டன், இங்கிலாந்து நாட்டில் டெல்டா வகை கொரோனாவால் 2வது அலையில் அதிகளவில் பாதிப்புகள் ஏற்பட்டன. சமீப நாட்களாக ஒரு நாளில் 30 ஆயிரம் என்ற எண்ணிக்கையில் பாதிப்புகள் பதிவு செய்யப்பட்டன. இதனால் அந்நாட்டின் பல பகுதிகளில் பல்வேறு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டன. கடந்த சில மாதங்களாக ஊரடங்கு அமலில் இருந்த நிலையில், கொரோனா தொற்று பரவல் குறைந்ததை கருத்தில் கொண்டு ஜூன் 21ந்தேதி முதல் கட்டுப்பாடு…

  12. 107 ஆண்டுகளுக்கு பின்னர் கண்டுபிடிக்கப்பட்ட கப்பல் நீரில் மூழ்கி காணாமல்போன 'எண்டூரன்ஸ்' என்ற கப்பலின் சிதைவுகள் 107 ஆண்டுகளுக்கு பின்னர் ஆய்வாளர்களினால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 1915 பெப்ரவரியில் ஆண்டு தென்னாபிரிக்காவின் நகரில் இருந்து புறப்பட்ட இந்த மரக்கப்பல் வெடல் கடலில் மூழ்கியதிலிருந்து, கண்டுபிடிக்கப்படவில்லை. இந்நிலையில் தென்முனைப் பெருங்கடலின் ஒரு பகுதியான வெடல் கடலின் 9,868 அடி (3,008 மீட்டர்) ஆழத்தில் கப்பல் இவ்வாரம் கண்டுபிடிக்கப்பட்டதாக போக்லாந்து கடல்சார் பாரம்பரிய அறக்கட்டளை தெரிவித்துள்ளது. https://www.virakesari.lk/article/123849

  13. உக்ரைனுக்கு... போர் விமானங்களை அனுப்ப போலந்து திட்டம் – அமெரிக்கா மறுப்பு ! ஜேர்மனியில் உள்ள அமெரிக்க விமானப்படை தளம் ஊடக உக்ரைனுக்கு சோவியத் தயாரிப்பான Mig-29 போர் விமானங்கள் அனைத்தையும் அனுப்பும் போலந்தின் யோசனையை அமெரிக்கா நிராகரித்துள்ளது. உக்ரைன் மீது ரஷ்யாவுடன் போட்டியிடும் வான்வெளியில் பறப்பது முழு நேட்டோ கூட்டணிக்கும் கடுமையான கவலையை ஏற்படுத்தும் என கூறி பென்டகன் அதனை மறுத்துள்ளது. ரஷ்யாவின் படையெடுப்பை எதிர்த்துப் போராடுவதற்கு இராணுவ ஜெட் விமானங்களை வழங்குமாறு மேற்கத்திய நட்பு நாடுகளுக்கு போலந்து அழைப்பு விடுத்தது. உக்ரேனிய விமானிகள் உண்மையில் போலந்திற்குள் எல்லையைத் தாண்டி அவர்களை மீண்டும் உக்ரைனுக்குள் பறக்கவிட முடியும் என அரசியல் …

  14. பெண்களிடம் மன்னிப்பு கேட்ட ஆஃப்கானிஸ்தான் அதிபர் ஆஃப்கானிஸ்தானில் பாரம்பரிய முறைப்படி, பெண்கள் தலையில் அணிந்துவரும் துணி குறித்து பேசிய கருத்திற்காக, ஆஃப்கானிஸ்தான் அதிபர் அஷ்ரஃப் கனி மன்னிப்பு கேட்டுள்ளார். அரசு அதிகாரிகளுக்கு, இஸ்லாமிய அரசு என தங்களை அழைத்துக்கொள்ளும் குழுவுடன் தொடர்புள்ளது என்று கூறப்பட்ட கருத்திற்கு பதிலளித்த அதிபர், இவ்வாறு கூறுபவர்கள் ஆதாரங்களை காண்பிக்க வேண்டும் அல்லது பெண்களின் தலையில் அணியும் துணியைதான் அணிய வேண்டும் என கூறினார். இந்த கருத்து பாலின ரீதியிலானது என சர்ச்சையை கிளப்பியது. இந்த கருத்தால் வருத்தமடைந்த பெண்களிடம் மன்னிப்பு கேட்ட அதிபர், தனது வார்த்தைகள் தவறாக எடுத்துக்கொள்ளப்பட்டுள்ள…

  15. பிரித்தானிய பொது தேர்தலுக்கான காலம் அறிவிப்பு பிரித்தானியாவில் அடுத்த பொதுத் தேர்தல் எதிர்வரும் ஜூலை 4ம் திகதி நடைபெற இருப்பதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக் இந்த அறிவிப்பை திடீரென வெளியிட்டுள்ளார். இதனிடையே, ஆளும் கட்சியான கன்சர்வேடிவ் கட்சியை விடவும் வெற்றி வாய்ப்பு லேபர் கட்சிக்கு இருப்பதாகவே கூறப்படுகிறது. இதுவரையான கருத்துக்கணிப்பில் லேபர் கட்சி 44 சதவிகிதத்துடனும் கன்சர்வேடிவ் கட்சி 23 சதவிகிதத்துடனும் உள்ளது. மக்கள் ஆதரவு இந்த நிலையில் விலைவாசி உயர்வு பெருமளவு சரிவை சந்தித்துள்ள நிலையிலேயே தேர்தல் அறிவிப்பு குறித்த தகவல் வெளியாகியுள்ளது. பிரித்தானியாவில் மார்ச் மாதம் 3.2 சதவிகிதமாக இர…

  16. பாகிஸ்தானின் இஸ்லாமாபாத் நகருக்கு அருகே உள்ள அப்பர்தேவா கிராமத்தை சேர்ந்த பெண் மரியா அப்பாசி (வயது 19). இவர் அங்குள்ள பள்ளி ஒன்றில் ஆசிரியையாக பணிபுரிந்து வந்தார்.அந்த பள்ளியின் தலைமை ஆசிரியரின் மகனுக்கு மரியாவை திருமணம் செய்து கொள்ள ஆசை, எனவே திருமணம் செய்து கொள்ளும் எண்ணத்தோடு மரியாவிடம் சம்மதம் கேட்டுள்ளார். ஏற்கனவே விவாகரத்தான அவருக்கு மரியாவை விட இருமடங்கு வயது அதிகம். எனவே அவரது கோரிக்கையை நிராகரித்துள்ளார். இந்த விவகாரம் தலைமை ஆசிரியருக்கு தெரியவரவே அவர் மரியாவை திருமணம் செய்து கொள்ளுமாறு நிர்பந்தித்துள்ளார். அவரும், நான்கு நபர்களும் சேர்ந்து கொண்டு மரியாவை கொடுமைப்படுத்தியதுடன், உயிருடன் பெட்ரோல் ஊற்றி எரித்துள்ளனர். படுகாயமடைந்த நில…

  17. ஆப்கானிஸ்தான் இராணுவத்திற்கு ஆதரவாக, தலிபான்கள் மீது... தொடர்ந்து விமான தாக்குதல்: அமெரிக்கா தெரிவிப்பு ஆப்கானிஸ்தான் இராணுவத்திற்கு ஆதரவாக தலிபான்கள் மீது தொடர்ந்து விமான தாக்குதல் நடத்தப்படும் என அமெரிக்க இராணுவ தலைமையகமான பென்டகன் தெரிவித்துள்ளது. இதுகுறித்து அமெரிக்க இராணுவ தலைமையகமான பென்டகனின் ஊடக செயலாளர் ஜோன் கிர்பி கூறுகையில், “ஆப்கானிஸ்தானின் பாதுகாப்பு நிலைமை மோசமாக உள்ளது. அங்கிருக்கும் எங்கள் அதிகாரிகள் மூலம் தொடர்ந்து விமான தாக்குதல் நடத்தி ஆதரவளிப்போம்” என கூறினார். எனினும், அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், ஒகஸ்ட் இறுதிக்குள் இராணுவம் முழுமையாக திரும்பப் பெறும் என அறிவித்துள்ள நிலையில், அதன்பிறகும் ஆதரவு தொடருமா என்ற கேள்விக்கு ஜோன் பதிலளிக்கவில்லை…

  18. நாளிதழ்களில் இன்று: 'மலையேற்றத்தில் தொடங்கி, அங்கேயே முடிந்த காதல் கதை' இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க முக்கிய இந்திய நாளிதழ்களில், இன்று வெளியான பிரதான செய்திகள் ஆகியவற்றில் சிலவற்றைத் தொகுத்து வழங்கியுள்ளோம். தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் - 'மலையேற்றத்தில் தொடங்கி, அங்கேயே முடிந்த காதல் கதை' குரங்கணி காட்டுத் தீயில் மரணித்த விபின் குறித்து செய்தி வெளி…

  19. அமெரிக்காவில் மேலும் ஒரு இந்தியர் சுட்டுக்கொலை அமெரிக்காவில் மீண்டும் ஒரு இந்தியர் சுட்டு கொல்லப்பட்டார். அமெரிக்காவின் வாஷிங்டனில் உள்ள பெட்ரோல் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார் பஞ்சாபை சேர்ந்த விக்ரம் ஜார்யால். இவரை இரண்டு முகமூடி கொள்ளையர்கள் துப்பாக்கி முனையில் மிரட்டி பணத்தை கேட்டனர். பணத்தை தந்த பின்பும் முகமூடி கொள்ளையர்கள் அவரை சுட்டு கொன்றுவிட்டு தப்பித்து சென்றுள்ளனர். துப்பாக்கிசூட்டில் காயமடைந்த ஜார்யால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். கொலை சம்பவம் அங்கிருந்த கேமராவில் பதிவாகியுள்ளதை வைத்து கொலையாளிகளை பிடிக்கும் முயற்சியில் காவல்துறை இறங்கியுள்ளது. இதையடுத்து உயிரிழந்த ஜார்யாலின் சகோதரர், மத…

  20. ரஷியாவுக்கு எதிரான தடைக்கு ஆதரவு இல்லை: இந்தியா [Friday, 2014-03-21 12:32:57] ரஷியாவுக்கு எதிராக மேலைநாடுகள் விதித்துள்ள பொருளாதார தடைகளை ஆதரிக்க மாட்டோம் என்று இந்தியா அறிவித்துள்ளது. உக்ரைனில் தன்னாட்சி பகுதியான கிரீமியாவில் நடைபெற்ற பொது வாக்கெடுப்பு ரஷியாவுடன் அப்பகுதியை இணைப்பதற்கு 97 சதவீதம் மக்கள் ஆதரவு தெரிவித்தனர். ரஷியாவின் நடவடிக்கைக்கு அமெரிக்கா, பிரான்ஸ் உள்ளிட்ட ஐரோப்பிய ஒன்றிய நாடுகள், ஆஸ்திரேலியா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. ரஷியா மற்றும் உக்ரைன் நாடுகளை சேர்ந்த அதிகாரிக்களுக்கு எதிராக அந்நாடுகள் பொருளாதாரத் தடைகளையும் விதித்துள்ளன. ஆனால் இந்த தடைகளை ஆதரிக்க போவத்தில்லை என்று இந்தியா அறிவித்துள்ளத…

  21. இன்றைய நிகழ்ச்சியில்… - அகதிகள் நெருக்கடி ஐரோப்பாவையே ஆட்டம் காண வைத்துவிடும் என்கிறார் பிபிசிக்கு செவ்வி வழங்கிய பிரஞ்சுப் பிரதமர். - இலங்கை போர்க்குற்ற விசாரணைகளில் வெளிநாட்டு நீதிபதிகளுக்கு இடம் கிடையாது என்கிறார் இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன. - வெறுப்புணர்வுத் தாக்குதல்களை எதிர்கொள்ள கராத்தே கற்றுக்கொள்ளும் அமெரிக்காவின் முஸ்லிம் யுவதிகள்.

  22. விடை காணமுடியா புதிராகவே அதிகாரபூர்வமாக முடிவுற்றது எம்.எச்.370 விமானத் தேடல் பணி கலைஞர் சுதர்சன் பட்நாயக்கின் வேலைப்பாடு. | கோப்புப் படம். மலேசிய விமானம் எம்.எச்.370 நடுவானில் மாயமாகி 3 ஆண்டுகள் முடியப்போகும் நிலையில் பல்வேறு கணிப்புகளுடனேயே பெரிய புதிராக முடிந்து போயுள்ளது விமானத் தேடல் பணி. மார்ச் 8, 2014, உலகை உலுக்கிய இந்தத் தினத்தில்தான் 239 பயணிகளுடன் மலேசிய விமானம் எம்.எச்.370 மாயமானது. தேடுதல் குழுவினருக்கு விமானத்தின் சிறு சுவடு கூட கிடைக்கவில்லை, இதனால் வெறுப்பும் வியர்த்தமுமே எஞ்சிய நிலையில் தேடுதல் பணி அதிகாரபூர்வமாக முடிவுக்கு வந்துள்ளது. இந்தியப் பெருங்கடலில் சுமார் 1,20,000 சதுரகிலோம…

  23. புதிய தலைமைச் செயலகத்தை மருத்துவமனையாக்கியது சரிதான்- பசுமை தீர்ப்பாயம் Read more at: http://tamil.oneindia.in/news/2013/02/20/tamilnadu-green-tribunal-gives-green-signal-tn-govt-170158.html டெல்லி: தமிழக அரசின் புதிய தலைமைச் செயலகத்தை பன்னோக்கு மருத்துவமனையாக மாற்றியது செல்லும் என்று பசுமைத் தீர்ப்பாயம் தீர்ப்பளித்துள்ளது.இந்தத் தீர்ப்பை முதல்வர் ஜெயலலிதா வரவேற்றுள்ளார். சென்னை, ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் உள்ள, புதிய தலைமை செயலக கட்டடத்தை, பல்நோக்கு மருத்துவ மனையாக மாற்ற, மாநில அரசு முடிவு செய்தது. இதை எதிர்த்து, டெல்லி தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் வழக்கு தொடரப்பட்டது.அந்த வழக்கு நிலுவையில் இருந்த நிலையில், புதிய தலைமை செயலக கட்டடத்தில், கடந்த, 30ம் தேதி…

  24. 81 படகுகளை தீ வைத்து எரித்துள்ள இந்தோனேசிய கடற்படை ..! எல்லை தாண்டி வந்து மீன் பிடியில் ஈடுபட்ட 81 படகுகளை இந்தோனேசிய கடற்படை தீ வைத்து எரித்துள்ளது. இந்தோனேசியா கடல் பகுதியில் மலேசியா, வியட்நாம், பிலிப்பைன்ஸ், தாய்லாந்து ஆகிய நாடுகளை சேர்ந்த மீனவர்கள் எல்லை மீறி வந்து மீன்பிடித்த குற்றத்திற்காக அந்நாட்டு கடற்படையினர் 81 படகுகளை சிறைப்படுத்தியிருந்தனர். மேலும் இந்தோனேசியாவின் கடல் எல்லையில் அத்துமீறி வந்து மீன்பிடிக்கும் வெளிநாட்டு மீனவர்கள் மீது அந்நாடு கடும் நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்நிலையில் கைப்பற்றிய 81 படகுகளை அந்நாட்டு கடற்டபடையினர் தீ வைத்து எரித்து அளித்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தகவல் பகி…

  25. எஃகு, அலுமினியம் மீதான அமெரிக்காவின் இறக்குமதி வரிகள் நடவடிக்கை அமலுக்கு வந்தது - ஐரோப்பா, கனடா, மெக்சிகோ கடும் எதிர்ப்பு, இந்தியாவில் இருந்து இறக்குமதியாகும் வலிநிவாரணி மருந்துகளின் போதைக்கு அடிமையாகும் ஆஃப்பிரிக்க இளைஞர்கள், பாகிஸ்தானில் மறக்கடிக்கப்பட்டு வரும் மகாத்மா காந்தியின் நினைவுகள் உள்ளிட்ட செய்திகளை இங்கே காணலாம்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.