Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. அரசியல் காரணங்களுக்காக சிபிஐ அமைப்பை மத்திய அரசு தவறாகப் பயன்படுத்துகிறது என்று பாரதிய ஜனதா குற்றம்சாட்டி உள்ளது. சிபிஐ புலனாய்வு அமைப்பை தவறாகப் பயன்படுத்துவதற்கு எத்தனையோ உதாரணங்களைச் சொல்லலாம். ஆனால் சமீபத்தில் குஜராத் முன்னாள் அமைச்சர் அமித் ஷாவுக்கு நீதிமன்றம் ஜாமீன் அளித்தது. ஆனால் அந்த ஜாமீனை ரத்து செய்யக் கோரி சிபிஐ அமைப்பு அவசரம், அவசரமாக உச்ச நீதிமன்றத்தை அணுகி உள்ளது. இதிலிருந்து சிபி.ஐ. அமைப்பை காங்கிரஸ் எந்தளவுக்கு அரசியல் காரணங்களுக்காகப் பயன்படுத்தி வருகிறது என்பது புரியும். ஷா வழக்கில் சிபிஐ வழக்கத்தைவிட வேகம் காட்டி வருகிறது. ஆனால் நீண்டகாலமாக கிடப்பில் போடப்பட்டுள்ள போஃபர் பீரங்கி ஊழல் வழக்கு, 1984 கலவரம் சஜ்ஜன் குமார் மீதான வழக்கு ஆகியவற்றில் …

    • 0 replies
    • 444 views
  2. இலங்கைத் தமிழின அழித்தொழிப்பு என்பது… இன்னமும் தமிழ்நாட்டில் ஆறாத ரணமே! கடந்த வாரம் சென்னையில், உணர்ச்சிக் கவிஞர் காசி ஆனந் தனின் ‘தமிழ் எங்கள் உயிரினும் மேலானது’ என்ற குறுந்தகடு வெளி யீட்டு விழாவில்… ஈழத் தமிழ் அனல் வீசியது! ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ முதல் பிரதியை வெளியிட, ம.நடராசன் பெற்றுக்கொள்வார் என அறிவிக்கப்பட்டுஇருந்தது. ஆனால், அவருக்கு பதிலாக அவரின் அண்ணன் ம.சாமி நாதன் குறுந்தகட்டைப்பெற்றுக் கொண்டார். கல்யாணவீடுகளில் கட்டாயம் இடம் பிடிக்கும் ‘வாராய், நீ வாராய்’ பாடலைத் தந்த திருச்சி லோகநாதனின் மகன் டி.எல்.மகராசன் இசைய மைத்து, மேடையிலேயே இரண்டு பாடல்களையும்பாடி, தமிழ் உணர்வாளர்களை உற்சாகப் படுத்தினார். நிகழ்ச்சிக்குத் தலைமை வகித்த உலகத் தமிழர் பேரமை…

    • 0 replies
    • 518 views
  3. ஒரு கறுப்பனிடமிருந்து அமெரிக்காவை காப்பாற்றும்படி கோஷம் .. கேள்வி – பதில் வடிவில் அமெரிக்கத் தேர்தல் விபரம் பாராக் ஓபாமா குடும்பம் மாக்ஸ்டிக் பின்னியைச் சேர்ந்தவர்கள், இவர் தீவிரத்துக்கு ஆதரவு தெரிவிப்பார், அமெரிக்காவே விழித்தெழு, விழித்தெழு, இந்த மனிதனிடம் இருந்து அமெரிக்காவைக் காப்பாற்று என ஒரு பெண்மணி வெள்ளை மாளிகைக்கு முன்னால் நின்று கூச்சல் போடுகின்றார், இவர் ஒரு கையில் அமெரிக்காவின் தேசிய கொடியையும் மறு கையில் இஸ்ரேல் கொடியுடன் வெள்ளை மாளிகைக்கு முன்னர் வலம் வருகின்றார். வருகின்ற செவ்வாய்க்கிழமை வரும் இடைத்தேர்தலில் மக்களே விழித்தெழுங்கள், விழித்தெழுங்கள் எனவும் இவ் பெண்மணி கோஷம் போடுகின்றார். கேள்வி : இது என்ன மீண்டும் அமெரிக்காவில் தேர்தலா? பதில்…

  4. அமெரிக்க விமானங்களில் பார்சல் வெடிகுண்டுகள்-அமெரிக்காவில் பரபரப்பு ஞாயிற்றுக்கிழமை, அக்டோபர் 31, 2010, 11:56[iST] அமெரிக்கா: அமெரிக்காவுக்கு இரண்டு விமானங்களில் பார்சல் மூலம் அனுப்பப்பட்ட சக்தி வாய்ந்த வெடிகுண்டுகளை துபாயும், இங்கிலாந்து அரசும் உரிய நேரத்தில் கண்டுபிடித்ததால் மிகப் பெரிய நாசவேலை தவிர்க்கப்பட்டுள்ளது. இந்த நாசவேலை சதிக்கு அல் கொய்தா தீவிரவாத அமைப்பே காரணம் என்று சந்தேகிக்கப்படுகிறது. இந்த சதி குறித்து மூன்று கண்டங்களையும் சேர்ந்த பாதுகாப்பு அதிகாரிகள் தீவிர விசாரணையில் இறங்கியுள்ளனர். ஒரு பெண் சந்தேகத்தின் பேரில் பிடிக்கப்பட்டு விசாரணைக்குட்படுத்தப்பட்டுள்ளார். அக்டோபர் 28ம் தேதி ஏமனில் உள்ள இங்கிலாந்து உளவு அமைப்பான எம்ஐ6ஐச் சேர்ந்த உ…

  5. அமெரிக்கர் அலெக்சாண்ரியா மில்ஸ் உலக அழகியாக தெரிவு http://www.youtube.com/watch?v=2_hX8b0-MwE

  6. உலக அரங்கில் இந்தியா ஐ நா சபையின் நூற்றாண்டு வளர்ச்சி இலக்குகள் பற்றி உலகமெங்கும் விவாதங்கள் நடைபெற்று வருகின்றன, 2015ம் ஆண்டுக்குள் உலகில் வறுமையை ஒழிக்கவேண்டும், சிசுமரணம், கல்லாமை, எய்ட்ஸ், மலேரியா மற்றும் காசநோயை ஒழிப்பது, அனைவருக்கும் உணவுபாதுகாப்பு அளிப்பது, அடிப்படை கல்வியை உரிமையாக்குவது என பல அம்சங்கள் இடம்பெற்றுள்ளன. ஆனால் இது ஒவ்வொரு ஆண்டும் பிரதமர் சுதந்திரதின உரையில் வாசிப்பது போன்று தான் இருக்கிறது, ஏனென்றால் இந்த வாசிக்கவேண்டிய உரையை 1947 லிருந்து இன்னமும் மாற்றவில்லை, பிரதமர்கள், கட்சிகள் மாறியிருக்கலாம், ஆனால் வறுமையை ஒழிப்பது நாடு சுதந்திரம் பெற்று 63 ஆண்டுகளாகியும் முற்றுப்பெறவில்லை மாறாக பட்டினி பட்டாளங்களின் எண்ணிக்கை அதிகமாகிக் கொண்டேயிருக்கிறத…

    • 0 replies
    • 5.6k views
  7. ஓமார் காடரைக் கனடாவுக்குத் திருப்பி அனுப்பவேண்டுமென போரில் பாதிக்கப்பட்ட சிறுவர்கள் தொடர்பான ஐக்கிய நாடுகள் சிறப்புப் பிரதிநிதி ராதிகா குமாரசாமி தெரிவித்தார். [ யார் இந்த ஓமார் காடர் : இவர் ஒரு கனேடியர். சிறு வயதில் ஆப்கானிஸ்தான் சென்றார். இவரின் தந்தையர் ஒரு அல்-கைய்டா தலைவர். பின்னர் இவர் கிரனைட் வீசி ஒரு அமெரிக்க இராணுவ வீரரை கொலை செய்தவர் என குற்றம் சாட்டப்பட்டு கியூபாவில் உள்ள சிறையில் ஏழு வருடங்களுக்கு மேலாக சிறை வைக்கப்பட்டுள்ளார். ஒபாமா இந்த சிறையை மூட வேண்டும் என்பதால் இவர் மீது வழக்கு நடக்கின்றது. இவர் வழக்கின் தீர்ப்பின் படி கனடா வரலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. இதனால் இங்கு ஒருவித எதிர்ப்பு இதற்கு உள்ளது. ] குவன்ரானமோ பேயில் உள்ள இராணுவ நீதிம…

    • 0 replies
    • 627 views
  8. காங்கிரஸ் தலைவராக சோனியா காந்தி 4-வது முறை தேர்ந்தெடுக்கப்பட்ட பின்னர், முதல் முதலாக அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி கூட்டம் (ஏஐசிசி) தில்லியில் நவம்பர் 2-ம் தேதி நடைபெறுகிறது. கட்சியின் அதிகாரமிக்க காரிய கமிட்டி உறுப்பினர்கள் இந்தக் கூட்டத்தில் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர். ÷ஆனால், இந்தக் கூட்டத்தில் தமிழகத்தில் இருந்து ஏஐசிசி உறுப்பினர்கள் யாரும் கலந்து கொள்ள முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. அகில இந்திய காங்கிரஸ் கமிட்டிக்கு தமிழகத்திலிருந்து புதிய உறுப்பினர்கள் அறிவிக்கப்படாததே இதற்கு காரணம். இருப்பினும் இப்போதுள்ள உறுப்பினர்கள் "சிறப்பு அழைப்பாளர்களாக' கலந்து கொள்ள கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. ஆனால் அவர்களுக்கு காரிய கமிட்டி உறுப்பினர் தேர்தலில் போட்டியிடவோ அல்லது வா…

  9. ஈழப் பிரச்னையை நீர்த்துப் போகச் செய்தவர் கருணாநிதி என்கிற குற்றச்சாட்டை தொடர்ச்சியாக கூறி வருகிறார்கள் தமிழீழ ஆதரவாளர்கள். பதிலுக்கு ‘‘சகோதர யுத்தம்தான் விடுதலைப் புலிகளின் வீழ்ச்சிக்குக் காரணம்’’ என்கிறார் கருணாநிதி. இந்நிலையில், ‘‘ஈழப்போராளி குட்டிமணியை காட்டிக் கொடுத்தவர் கருணாநிதி’’ என்று பழ.நெடுமாறன் பேசியிருப்பது அரசியல் அரங்கில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. கடந்த 25-ம் தேதி ராணி சீதை மன்றத்தில் நடந்த கவிஞர் காசி ஆனந்தனின் பாடல்கள் வெளியீட்டு விழாவில் பழ.நெடுமாறன், வைகோ, அ.தி.மு.க இலக்கிய அணி மாநில துணைச் செயலாளர் பழ.கருப்பையா என பல முக்கியப் பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.பேச்சில் ஹைலைட்டாக இருந்தது பழ.நெடுமாறனின் பேச்சுத்தான். கருணாநிதி …

  10. காங்கிரஸார் குரல் கொடுக்கிறார்களே என்பதற்காக எனது எம்.பி பதவியை நான் ராஜினாமா செய்ய மாட்டேன் என்று கூறியுள்ளார் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன். திருமாவளவன் டெல்லி வந்துள்ளார். இதையடுத்து அவர் ராஜினாமா செய்யப் போவதாக வதந்திகளை கிளப்பி விட்டுள்ளனர். இதுகுறித்து திருமாவளவன் டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசுகையில், நான் எம்.பி. பதவியை ராஜினாமா செய்ய டெல்லி வந்திருப்பதாக அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக வதந்திகள் பரப்பப்பட்டுள்ளது. டெல்லியில் சுதர்சன் நாச்சியப்பன் தலைமையில் நடைபெற்ற நாடாளுமன்ற நிலைக்குழு கூட்டத்தில் கலந்து கொள்வதற்காகவே நான் டெல்லி வந்தேன். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட நான் எம்.பி.பதவியை ராஜினாமா செய்ய அவசியம் எழவில்லை. சென்னைய…

    • 2 replies
    • 764 views
  11. 16 கோடி மதிப்புள்ள உலகின் மிக விலையுயர்ந்த கார் இனி இந்தியாவில்.உலகிலேயே அதிக விலை கொண்ட சொகுசு கார் இந்தியாவுக்கு வருகிறது. காரின் பெயர் புகட்டி வேரோன் (Bugatti Veyron). விலை ரூ.16 கோடி… மணிக்கு 407 கி.மீ வேகத்தில் பறக்கும் இந்த கார், 2.7 வினாடிகளில் 100 கி.மீ வேகத்துக்கு தாவிவிடும் சக்தி கொண்டது. அதிக விலை கொண்ட சொகுசு கார்கள் இந்தியாவுக்கு புதிதல்ல. ஏற்கெனவே இங்கு ரோல்ஸ் ராய்ஸ், பென்ட்லே மற்றும் மேபேக் போன்ற, கோடிகளில் விலை கொண்ட சொகுசு கார்கள் புழக்கத்தில் உள்ளன. அப்படியென்ன புகட்டியின் விசேஷம் ? 16 கோடி மதிப்புள்ள உலகின் மிக விலையுயர்ந்த கார் இனி இந்தியாவில்.“புகட்டி வெறும் கார் மட்டுமல்ல… அது கார் வடிவமைப்பின் உச்சம். இந்தக் காரின் பெருமையை காப்பாற்ற மிகக்…

    • 0 replies
    • 675 views
  12. சொரணைக் கெட்ட தமிழன்... - தங்கர் பச்சான் தாக்கு தமிழனின் பிரச்சனைகளில் அக்கறை கொள்ளும் படைப்புகளாகவே இயக்குனர் தங்கர்பச்சானின் படைப்புகள் அமையும். மீண்டும் காவிரி பிரச்சனையில் தன்னுடைய கருத்தை ரொம்பவும் வலியோடு வெளிப்படுத்தி இருக்கிறார் தங்கர் பச்சான். இவர் இப்போது பிரபு தேவா, பூமிகா, பிரகாஷ் ராஜ் நடிப்பில் இயக்கி முடித்திருக்கும் 'களவாடிய பொழுதுகள்' திரைப்படம் விரைவில் வெளிவர இருக்கிறது. தமிழகத்திற்கு காவிரியிலிருந்து தண்ணீர் விடமாட்டோம் என்று கர்நாடக அரசு கூறியுள்ளது. உச்சநீதிமன்ற தீர்ப்பையும் மதிக்காமல் கர்நாடக அரசு இப்படி கூறியிருப்பது கண்டனத்திற்குரியது. இதுபற்றி இன்னும் தமிழகத்தில் எந்த தலைவரும், வாய் திறக்காமல் இருப்பது வியப்பாகவே இருக்கிறது …

  13. கும்பகோணம் அருகில் உள்ள பந்தநல்லூரில்27-10-10 புதன் அன்று மாலை 6.00 மணியிலிருந்து இரவு 10 மணி வரை நாம்தமிழர் கட்சியின் சார்பாக கடந்த 100 நாட்களாக பொய் வழக்கின் காரணமாகதேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் செந்தமிழன் சீமான்சிறையிலடைக்கப்பட்டுள்ளதை கண்டித்தும், விலைவாசி உயர்வைக் கண்டித்தும் ,கட்டுமானப்பொருட்கள் விலை உயர்வினை கண்டித்தும், அதிகரித்து வரும்மின்வெட்டினால் தமிழகம் இருண்டு கிடப்பதை கண்டித்தும் மாபெரும்பொதுக்கூட்டம் நடைப்பெற்றது. காவல்துறை அனுமதி மறுப்பினால்தடைப்பட்டிருந்த இக்கூட்டம் மதுரை உயர்நீதிமன்றத்தில் கும்பகோணம் நாம்தமிழர் கட்சியினர் வழக்கு தொடர்ந்த காரணத்தினால் அனுமதி வழங்கப்பட்டுவெகு உணர்வெழுச்சியாகவும், சிறப்பாக நடந்தேறியது. இக்கூட்டத்திற்கு தஞ்சைமாவட்ட …

  14. "தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விட முடியாது' என, கர்நாடக அனைத்து கட்சிக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. அனைத்து கட்சிக் கூட்டத்தில் நடந்த காரசார விவாதத்துக்குப் பின், இம்முடிவு எடுக்கப் பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. "தமிழக விவசாயத்திற்கு, மேட்டூர் அணைக்கு தண்ணீர் திறந்து விட வேண்டும்' என, தமிழக முதல்வர் கருணாநிதி, கர்நாடக முதல்வர் எடியூரப்பாவிடம் கேட்டுக்கொண்டார். இதைத் தொடர்ந்து, முதல்வர் எடியூரப்பா, சட்டசபை மற்றும் மேலவை அனைத்து கட்சிக் கூட்டத்தை அவரது அலுவலக இல்லமான கிருஷ்ணாவில் நேற்று மாலை கூட்டியிருந்தார். கர்நாடக அரசியலில், எதிர்க்கட்சிகளான காங்கிரஸ், ம.ஜ.த., கட்சிகள், ஒரு மாதமாக, எடியூரப்பாவின் பா.ஜ., ஆட்சியை ஒழித்து கட்ட வேண்டும் என, கடும் முயற்சி ம…

    • 0 replies
    • 625 views
  15. . இந்தோனேசியாவில் சுனாமியும், எரிமலையும் பீறிட்டு கிளம்பியது 7.7 ரிக்டர் நில அதிர்வு ஏற்பட்ட 24 மணித்தியாலத்துக்குள் இந்தோனேசிய தீவுப் பகுதிகளை மூன்றடி உயரமான அலைகள் 600 மீற்றர் வரை ஊருக்குள் ஊடுருவியது. இதுவரை 150 பேர் வரை மரணம். 500 பேரை காணவில்லை. தகவல் மூலம்; http://www.general-anzeiger-bonn.de/index.php?k=news&itemid=10007&detailid=803921 http://www.bbc.co.uk/news/world/ .

  16. ஈராக்கின் முன்னாள் பிரதிப் பிரதமரும் வெளிவிவகார அமைச்சருமான தாரிக் அஸீஸுக்கு அந்நாட்டு உயர் நீதிமன்றம் இன்று மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. மாற்று மத கட்சிகளை அழிக்க முயன்ற குற்றச்சாட்டு தொடர்பான வழக்கில் அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 74 வயதான தாரிக் அஸீஸ், முன்னாள் ஜனாதிபதி சதாம் ஹுஸைனின் ஆட்சிக்காலத்தில் பிரதிப் பிரதமராகவும் வெளிவிவகார அமைச்சராகவும் பதவி வகித்தார். சதாமின் நெருங்கிய ஆலோசகராகவும் அவர் விளங்கினார். அவர் ஒரு கிறிஸ்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. மேற்படி வழக்கில் ஏனைய இரு பிரதிவாதிகளான; முன்னாள் உள்துறை அமைச்சர் சதோவுன் ஷாகிர், சதாம் ஹுஸைனின் முன்னாள் பிரத்தியேக செயலாளர் அபேத் ஹமோட் ஆகியோருக்கும் மரண தண்டனை விதிக்கப்பட்டுள…

    • 0 replies
    • 563 views
  17. ஐக்கிய அமெரிக்கா, மேற்கு பசுபிக் பெருங்கடலில் அமைந்துள்ள குவாம் (Guam) தீவுகளில் சுமார் 12.8 பில்லியன் அமெரிக்க டொலர் செலவில் மிகப் பிரமாண்ட இராணுவ தளமொன்றினை அமைத்து வருவதாக ஊடகங்கள் தெரிவிக்கின்றன. மேற்படி தளமானது ஏவுகணை எதிர்ப்புக் கட்டமைப்பு , அணுச்சக்தி விமான தாங்கிகளுக்கான கப்பற்துறை உட்பட அதிநவீன கட்டமைப்புக்களை உள்ளடக்கவுள்ளது. இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் மேற்கு பசுபிக் பிராந்தியத்தில் இராணுவத் தளமொன்றுக்காக மேற்கொள்ளப்படும் மிகப்பாரிய முதலீடு இதுவாகும். அது மட்டுமல்ல, கடந்த காலங்களில் கடற்படை கட்டுமானங்களுக்கென செலவிடப்படவுள்ள மிகப்பெரிய தொகையும் இதுவாகும். எனினும் இந்நடவடிக்கை தமது சாதாரண வாழ்வினை பாதிக்கும் என குவாம் தீவு மக்கள் அச்…

  18. இந்தோனேசியா: சுனாமிக்கு 40 பேர் பலி இந்தோனேசியாவின் மேற்கு பகுதியில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால், கடலில் 10 அடி உயரத்துக்கு சுனாமி உருவானது. இதில் 40 பேர் பலியாயினர்; பெண்கள், குழந்தைகள் என 380 பேர் காணாமல் போய்விட்டனர். இந்தோனேசியாவின், மேற்கு பகுதியில், சுமத்ரா தீவின் அருகிலுள்ள மென்டாவாய் தீவுக்கருகில் கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 7.7 ஆக பதிவான இந்த நிலநடுக்கம், மேற்கு சுமத்ரா தீவிலுள்ள பல்வேறு மாகாணங்களில் உணரப்பட்டது. நிலநடுக்கத்தால், கடலில் 10 அடி உயரத்துக்கு சிறிய அளவில் சுனாமி ஏற்பட்டது.மென்டாவாய் தீவுகளில் 20 கி.மீ., தூரத்துக்கு சுனாமியால் ஏற்பட்ட அலைகள் புகுந்தன. இந்தச் சுனாமியில் சிக்கி மென்டாவாய் தீவுகளில் …

  19. இவருக்கு வாக்களியுங்கள்: 2010 – உலகின் தலை சிறந்த ஹீரோ ஒரு தமிழன் தமிழ் ஊடகங்களும் இணைய இதழ்களும் இச்செய்தியை பிரசுரம் செய்யவேண்டும் திரைப்படங்களை ரசியுங்கள் ரசிகர்களே. அதில் உங்கள் ஹீரோ செய்வதெல்லாம் நிஜம் என்று மட்டும் நம்பி விடவேண்டாம். உண்மையான ஹீரோ உங்கள் பகுதியில் நேர்மையாகவும், தியாக உணர்வோடும் , சேவை மனப்பான்யுடனும் , துணிவுடனும் உழைத்துகொண்டிருப்பார்கள் ஒரு ராணுவ வீரராக , தீயணைப்பு வீரராக, காவல் துறை அதிகாரியாக, ஆசிரியாராக, சமுக சேவகராக, துப்புரவு தொழிலாளியாக மற்றும் நேர்மையாக உழைத்து சம்பாதிக்கும் எவருமாக இருக்கலாம். அவர்களை சந்திக்கும் சமயத்தில் ஒரு நன்றி சொல்வோம் , பாராட்டுவோம். அவர்களில் யாரேனும் கவுன்சிலர் தேர்தலில் நிற்கக்கூடும். நின்றால் க…

    • 5 replies
    • 2.7k views
  20. முதலை வடிக்கும் கண்ணீர். போலியாக கண்ணீர் வடிப்பதற்கு முதலைக் கண்ணீர் என்று உதாரணம் கூறுவார்கள். அப்படிப்பட்ட முதலைக் கண்ணீரை இன்று வடிப்பது யார் ? வேறு யார், தமிழ்நாட்டின் மூத்த முதலையான கருணாநிதியைத் தவிர வேறு யார் ? நேற்று உடன்பிறப்புகளுக்கு அவர் எழுதியிள்ள கடிதத்தில் ஈழத் தமிழரின் அவல நிலைப் பற்றி கண்ணீர் உகுத்துள்ளார். இது என்ன மாதிரி கண்ணீர் என்பதை உங்களுக்கு சொல்லி உணர்த்த வேண்டியதில்லை. இந்தக் கண்ணீரையும் இப்போது உகுக்க வேண்டிய தேவை என்னவென்றால், காங்கிரஸ் கட்சியும், சோனியா காந்தியும், பழைய திமுக மீதான பழைய கரிசனத்தை காட்டாததும், வேண்டாத மருகளைப் போல திமுகவை நடத்துவதுமே ஆகும். 2004ல், டெல்லியில் உள்ள தமிழ்நாடு இல்லத்தி…

  21. காஷ்மீர் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதியாக இருக்கவில்லை: அருந்ததி ரா‌ய் 'ஜம்மு காஷ்மீர் மாநிலம் ஒருபோதும் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதியாக இருக்கவில்லை'' எ‌ன்று பிரபல எழுத்தாளரும், சமூக ஆர்வலருமான அருந்ததி ராய் தெரிவித்து‌ள்ளா‌ர். காஷ்மீரை இந்தியாவுடன் இணைத்தது குறித்து அரு‌ந்த‌தி ரா‌ய் பே‌சிய பே‌ச்சு சர்ச்சையானதை‌த் தொட‌‌ர்‌ந்து, தற்போது இவ்வாறு கருத்து தெரிவித்துள்ளார். ஸ்ரீநகரில் சமூக அமைப்புகளின் கூட்டமைப்பு நடத்திய கருத்தரங்கு ஒன்றில் அருந்ததி ராய் உரையாற்றினார். காஷ்மீர் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதியாக ஒருபோதும் இருக்கவில்லை. இது வரலாற்று உண்மை. இந்திய அரசும் இதை ஏற்றுக்கொண்டுள்ளதாக அருந்ததி ராய் அப்போது குறிப்பி‌ட்டு‌ள்ளா‌‌ர். http://…

    • 4 replies
    • 742 views
  22. ஈராக் போரில் அமெரிக்காவின் அத்துமீறல்கள்: ரகசிய ஆவணங்கள் வெளியானதால் பரபரப்பு!! ஈராக் மீது அமெரிக்கா நடத்திய போர் தொடர்பான ரகசிய ஆவணங்கள் லீக் ஆன விவகாரம் அமெரிக்காவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது. 2004 ம் ஆண்டு முதல் 2009 வரை ஈராக் மீது அமெரிக்கா போர் தொடுத்து அதிபர் சதாம் உசேன் வரை சிறையில் தள்ளப்பட்டு அவரும் தூக்கிலிடப்பட்டார். இந்த போருக்கு பின் ஈராக்கில் ஜனநாயக தேர்தல் நடத்தப்பட்டு அங்கு புதிய ஆட்சி கொண்டு வரப்பட்டது. இந்நிலையில் விக்கிலீக் இணையதளத்தில் ஈராக் போர் ஆவணங்கள் லீக் ஆகி இருக்கிறது. 4 லட்சம் ரகசியம் கொண்ட ஆவணங்களில் அமெரிக்காகவின் அத்துமீறல்கள், அட்டூழியங்கள், மற்றும் போர் வீரர்கள், பொதுமக்கள் துன்புறுத்திய சம்பவம் கொண்ட புகைப்படங்களு…

    • 2 replies
    • 705 views
  23. . பெங்களூரில் கழுதைப் பாலுக்கு கிராக்கி - 1 லிட்டர் 200 முதல் 400 ரூபாய். பெங்களூர்: பெங்களூரில் கழுதைப் பாலுக்கு செம கிராக்கி ஏற்பட்டுள்ளது. ஒரு லிட்டர் பால் ரூ. 200 முதல் 400 வரை விற்கப்படுகிறதாம். கழுதைப் பால் குழந்தைகளுக்கு நல்லது என்ற எண்பது மக்களின் பொதுவான எண்ணம். குறிப்பாக குழந்தைகளுக்கு வரும் நோய்களை கழுதைப் பால் குணப்படுத்துகிறது என்றுமக்கள் நம்புகிறார்கள். இதில் பாதியை டாக்டர்கள் ஒப்புக் கொள்கிறார்கள். அதாவது கழுதைப் பாலில் புரதச் சத்து அதிகம் உள்ளது என்பதை டாக்டர்கள் ஒப்புக் கொள்கிறார்கள். அதேசமயம், அதன் மருத்துவப் பயன் குறித்து டாக்டர்கள் இதுவரை முழு அளவில் ஒப்புக்கொள்ளவில்லை. இப்படி இருவேறு கருத்துக்கள் இருந்தாலும் கழுதைப் பா…

  24. சீன அரசு இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள வரைபடத்தில், இந்தியாவின் அருணாச்சல பிரதேச மாநிலத்தை, தனக்கு சொந்தமான பகுதியாகக் குறிப்பிட்டு, விஷமம் செய்துள்ளது. இந்தியாவுக்கும், சீனாவுக்கும் இடையே நீண்ட காலமாக எல்லை பிரச்னை இருந்து வருகிறது. குறிப்பாக, இந்தியாவின் அருணாச்சல பிரதேச மாநிலத்துக்கு, சீனா உரிமை கொண்டாடி வருகிறது. இது தொடர்பாக, இரு நாடுகளுக்கு இடையே வார்த்தை போரும் நடந்து வருகிறது. இந்த விவகாரத்தில், நேரம் கிடைக்கும்போதெல்லாம், தன்னால் முடிந்த அளவுக்கு சீன அரசு விஷமத்தில் ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில், சீன அரசு சார்பில், "மேப் வேர்ல்டு' என்ற வரைபடம் (மேப்) சமீபத்தில் வெளியிடப்பட்டது. இதில், சீனாவின் நிலப்பரப்பு தொடர்பான விவரங்களும் இடம் பெற்றுள்ளன. சீன மொழி…

    • 3 replies
    • 693 views
  25. சென்னை, அக்.24 : சென்னை அசோக்நகர் போலீஸ் நிலையம் அருகே உள்ள புதூரில் ராஜீவ் காந்தியின் மார்பளவு சிலையின் கழுத்தில் நேற்று (அக்.23) காலை செருப்பு மாலை அணிவிக்கப்பட்டிருந்தது. 2 செருப்புகளை துணியால் கட்டி யாரோ தொங்கவிட்டுச் சென்றுள்ளனர். இதுகுறித்து தகவல் கிடைத்ததும் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் மற்றும் நூற்றுக்கணக்கான தொண்டர்கள் அங்கு திரண்டு சாலை மறியலில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் கிடைத்ததும் போலீசார் அங்கு விரைந்து சென்று மறியலில் ஈடுபட்டவர்களுடன் சமாதான பேச்சு நடத்தினர். செருப்புமாலை உடனடியாக அகற்றப்பட்டு மலர்மாலை அணிவிக்கப்பட்டது. மாயகிருஷ்ணன், யுவராஜ், தனசேகரன் ஆகிய 3 காங்கிரஸ் தொண்டர்கள் திடீரென ஆவேசத்துடன் கோஷமிட்டபடி மண் எண்ணையை ஊற்றி தீக்கு…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.