உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26640 topics in this forum
-
காசா விடயத்தில் இஸ்ரேலுக்கு இங்கிலாந்து, பிரான்ஸ் கனடா எச்சரிக்கை! காசாவில் இஸ்ரேல் தனது இராணுவ நடவடிக்கைகளை மிகவும் மோசமாக விரிவுபடுத்தினால், “உறுதியான நடவடிக்கைகளை” எடுப்போம் என்று இங்கிலாந்து, பிரான்ஸ் மற்றும் கனடா ஆகியவை எச்சரித்துள்ளன. மேலும், இங்கிலாந்து பிரதமர் சர் கெய்ர் ஸ்டார்மர், பிரெஞ்சு மற்றும் கனேடிய தலைவர்களுடன் சேர்ந்து இஸ்ரேலிய அரசாங்கத்தை “அதன் இராணுவ நடவடிக்கைகளை நிறுத்த” மற்றும் “உடனடியாக மனிதாபிமான உதவிகளை காசாவிற்குள் நுழைய அனுமதிக்கவும்” அழைப்பு விடுத்தார். கடந்த மார்ச் 2 முதல் காசாவிற்குள் உணவு, எரிபொருள் அல்லது மருந்து எதுவும் அனுமதிக்கப்படவில்லை. இந்த நிலைமை பாலஸ்தீன மக்களுக்கு “பேரழிவை” ஏற்படுத்துவதாக ஐக்கிய நாடுகள் சபை முன்னர் விவரித்தது. அதேநேர…
-
- 0 replies
- 242 views
-
-
ஜப்பானின் மிகப்பெரிய கப்பல் ஒன்றில் தீ விபத்து ஜப்பான் தலைநகர் டோக்கியோவிற்கு அருகிலுள்ள துறைமுகத்தில் நிறுத்திவைக்கப்பட்ட பயணிகள் கப்பலில் ஒன்றில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. குறித்த தீ பல மணிநேர போராட்டத்தின் பின்னர் கப்பலில் பணிபுரிந்தவர்கள், தீயணைப்பு மற்றும் கடற்படைவீரர்கள் ஆகியோரினால் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. தீ விபத்துக்கான காரணம் இதுவரை வெளியாகவில்லை என்பதோடு தீ விபத்தில் பயணிகள் எவருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை என்றும் சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. ஜப்பானின் மிகப்பெரிய கப்பல்களில் ஒன்றான அசுகா II என்ற கப்பலின் மேல் தளத்தில் உள்ள ஒரு களஞ்சியசாலையில் தீப்பற்ற தொடங்கியதாக உள்ளூர் கடலோர காவல்படை தெரிவித்துள்ளது. இதன்போது கப்பலில் அத…
-
- 0 replies
- 242 views
-
-
டோக்கியோ ஒலிம்பிக்கில், கொவிட் பாதிப்பை தவிர்க்க முடியாது: உலக சுகாதார அமைப்பு! டோக்கியோ ஒலிம்பிக் தொடரில், கொரோனா வைரஸ் பாதிப்பை தவிர்க்க முடியாது என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. இதுகுறித்து உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ராஸ் அதனோம் கூறுகையில், ‘கொரோனா பாதிப்பு புள்ளிவிபரத்தின் மூலம், ஒலிம்பிக் தொடரில் வைரஸ் பாதிப்பை குறைத்து மதிப்பிட முடியாது. வைரஸ் பிரச்சினையை முற்றிலும் ஒழிப்பதென்பது முடியாத காரியம். விளையாட்டு வீரர்களில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரை விரைவாக அடையாளம் கண்டு, தனிமைப்படுத்த வேண்டும். இதன்மூலம் நோய் பரவலை கட்டுப்படுத்தலாம். ஆனால், உலகில் வழங்கப்பட்ட தடுப்பூசியில், 75 சதவீதத்தை, 10 நாடுகள் மட்டுமே பங்கு போட்டுக் கொண்டுள்ளன. உலகின் ப…
-
- 1 reply
- 242 views
-
-
அமெரிக்காவில் உயர்நிலைப் பாடசாலையில் துப்பாக்கிச் சூடு: சந்தேக நபர் உட்பட மூவர் உயிரிழப்பு: 7பேர் காயம்! அமெரிக்காவின் மிசோரியில் உள்ள செயின்ட் லூயிஸில் உள்ள உயர்நிலைப் பாடசாலையில் நடந்த துப்பாக்கிச் சூட்டில், சந்தேக நபர் உட்பட மூன்று பேர் உயிரிழந்தனர் மற்றும் ஏழு பேர் காயமடைந்தனர். நேற்று (திங்கட்கிழமை) உள்ளூர் நேரப்படி 09:00 மணிக்கு சென்ட்ரல் விஷுவல் அண்ட் பெர்ஃபார்மிங் ஆர்ட்ஸ் உயர்நிலைப் பாடசாலையில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டது. பாடசாலைக் கட்டடத்தின் கதவுகள் பூட்டப்பட்டிருந்த நிலையில், சந்தேக நபர் எப்படி உள்ளே நுழைந்தார் என்பது உடனடியாகத் தெரியவில்லை. துப்பாக்கிதாரியின் ஆயுதம், தாக்குதலின் இடைநடுவே செயலிழந்ததால், பல உயிர்கள் …
-
- 0 replies
- 242 views
-
-
18 மாதங்களின் பின் கொவிட்-19 பயண ஆலோசனைகளை எளிதாக்கிய அவுஸ்திரேலியா 18 மாதங்களுக்குப் பிறகு முதல் முறையாக அடுத்த வாரம் முதல் தனது எல்லைகளை மீண்டும் திறக்க அவுஸ்திரேலியா தயாராகி வருகிறது. இந் நிலையில் அமெரிக்கா, பிரிட்டன் மற்றும் கனடா உள்ளிட்ட பல நாடுகளுக்கான கொவிட்-19 தொடர்பான பயண ஆலோசனையையும் அவுஸ்திரேலியா வியாழக்கிழமை தளர்த்தியுள்ளது. கொவிட்-19 தடுப்பூசி திட்டங்கள் வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டதை தொடர்ந்து, நவம்பர் 1-ஆம் திகதி முதல் முழுத் தடுப்பூசி போடப்பட்ட குடியிருப்பாளர்களுக்கான வெளியூர் பயணத் தடையை அவுஸ்திரேலியா நீக்குகிறது. ஏனெனில் அதன் பெரிய நகரங்களான சிட்னி மற்றும் மெல்போர்ன் ஆகியவை தனிமைப்படுத்தலின்றி வெளிநாட்டுப் பயணிகளின் உள் நுழைவ…
-
- 0 replies
- 242 views
-
-
உக்ரைன் போரில், தலையிட முயற்சிக்கும் எந்தவொரு நாடும்... மின்னல் வேக பதிலடியை, எதிர்கொள்ளும்: ரஷ்யா எச்சரிக்கை! உக்ரைன் போரில் தலையிட முயற்சிக்கும் எந்தவொரு நாடும் மின்னல் வேகமான பதிலடியை எதிர்கொள்ள நேரிடும் என்று ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் எச்சரித்துள்ளார். ‘யாரும் பெருமை கொள்ள முடியாத அனைத்து ஆயுதங்களும் எங்களிடம் உள்ளன. தேவைப்பட்டால் நாங்கள் அவற்றைப் பயன்படுத்துவோம்’ என புடின் மேலும் கூறினார். இது பாலிஸ்டிக் ஏவுகணைகள் மற்றும் அணு ஆயுதங்களைக் குறிப்பதாகக் கருதப்படுகிறது. உக்ரைனின் நட்பு நாடுகள் ஆயுத விநியோகத்தை முடுக்கிவிட்டுள்ளனர். உக்ரைன் ரஷ்யாவை தோற்கடிப்பதை உறுதி செய்வதாக அமெரிக்கா உறுதியளித்துள்ளது. ஆனால், கிழக்கில் ரஷ்யா தனது முயற…
-
- 0 replies
- 242 views
-
-
சுதந்திரமான, இறையாண்மை கொண்ட... சொந்த நாட்டில் வசிக்க, பாலஸ்தீன மக்கள் தகுதியானவர்கள்: பைடன்! மத்திய கிழக்கு நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டுள்ள பைடன், இஸ்ரேல் ஆக்கிரமிப்பில் உள்ள மேற்குக் கரையில் பாலஸ்தீன ஜனாதிபதி முகமது அப்பாஸை நேற்று (வெள்ளிக்கிழமை) சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். பெத்லஹேமில் இடம்பெற்ற இந்த சந்திப்பின் பின்னர், இஸ்ரேல்-பாலஸ்தீனம் இடையே அமைதி ஏற்படுவதற்கான நடவடிக்கையை அமெரிக்கா கைவிடப் போவதில்லை என பைடன் தெரிவித்தார். இதனைத்தொடர்ந்து, இஸ்ரேலிலிருந்து சவுதி அரேபியாவுக்கு பயணம் செய்த ஜோ பைடனுக்கு ஜெட்டா நகரில் சவூதி பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான், உற்சாக வரவேற்பளித்தார். ஜனாதிபதியாக பொறுப்பேற்ற பின் சவுதிக்கு ஜோ பைடன் பயணம் மேற்க…
-
- 0 replies
- 242 views
-
-
வடகொரியாவுடன் சுமூகமான உறவைப் பேண விரும்புவதாக சீனா அறிவிப்பு வடகொரியாவுடன் சுமூகமான உறவுகளைப் பேண விரும்புவதாக சீனா தெரிவித்துள்ளது. அண்டை நாடான வடகொரியாவுடன் நட்புறவை பேண விரும்புவதாகவும் சீனாவின் நிலைப்பாடு தெளிவானதும் தொடர்ச்சியானதுமாகும் எனவும் அந்நாட்டு வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் Geng Shuang தெரிவித்துள்ளார். கொரிய பகுதியில் சமாதானத்தையும் அமைதியையும் நிலைநாட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென கோரியுள்ள அவர் வடகொரியாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையில் பேச்சுவார்த்தைகளை ஏற்பாடு செய்ய சீனா விரும்புவதாகவும் தெரிவித்துள்ளார். வடகொரியா மீது பொருளாதாரத் தடை விதிக்கப்பட வேண்டுமெனவும் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமெனவும் அமெரிக்கா வலியுறுத்தி வரு…
-
- 0 replies
- 242 views
-
-
சிரியாவில் ஐ.எஸ். குழுவின் கடைசி கட்டுப்பாட்டுப் பகுதியாக கருதப்பட்ட எல்லை நகரம் மீட்பு - ஆனால், ஷியா போராளிகளின் ஆதிக்கத்துக்கு இது வழியமைக்குமா? களத்தில் இருந்து பிபிசி தரும் பிரத்யேகத் தகவல்கள். பிளாஸ்டிக் மாசுபாட்டால் பெருங்கடல்களுக்கும் அச்சுறுத்தல் - அரிய வகை உயிரினங்களுக்கு ஆபத்து ஏற்படுவதாக விஞ்ஞானிகள் கவலை ஐரோப்பா செல்லும் கனவுகளுடன் செர்பியாவில் காத்திருக்கும் பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் அகதிகளை இணைக்கும் கிரிக்கெட் போட்டிகள். ஆகியவை இன்றைய பிபிசி தமிழ் சர்வதேச தொலைக்காட்சி செய்தியறிக்கையில் இடம்பெறுகின்றன.
-
- 0 replies
- 242 views
-
-
ஓரிரு வரிகளில் உலகச் செய்திகள் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க கடந்த சில மணி நேரங்களில் நடந்துள்ள முக்கிய உலக நிகழ்வுகளை ஓரிரு வரிகளில் தொகுத்தளிக்கிறோம். பிரிவினைவாதிகளின் பிடியில் படத்தின் காப்புரிமைEPA பிரிவினைவாதிகளின் கட்டுபாட்டுக்குள், ஏமனின் தெற்கு துறைமுக நகரமான ஏடன் முழுக்க சென்றதாக ஏமன் மக்கள் கூறுகின்றனர். தெற்கு ஏமனை தனி நாடாக அறிவிக்கக்கோரு…
-
- 0 replies
- 242 views
-
-
கிழக்கு லண்டனில் கத்திக்குத்து – ஒருவர் உயிரிழப்பு! கிழக்கு லண்டனில் மேற்கொள்ளப்பட்ட கத்திக்குத்து தாக்குதலில் ஒருவர் உயிரிழந்துள்ளார். நியூஹாமின் ஈஸ்ட் ஹாமிலுள்ள ரொன் லெய்டன் வே மற்றும் வேக்ஃபீல்ட் வீதி பகுதியில் நேற்று(சனிக்கிழமை) இந்த கத்திக்குத்து தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன்போது காயமடைந்த நபர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சந்தேக நபர் இதுவரையில் அடையாளம் காணப்படாத நிலையில், பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். இதேவேளை, அண்மைக்காலமாக பிரித்தானியாவில் இவ்வாறான கத்திக்குத்து தாக்குதல்கள் அதிகரித்துள்ளமைக் குறிப்பிடத்தக்கது. http://athavannews.com/கிழக்கு-லண்டனில்-கத்திக-2/
-
- 0 replies
- 242 views
-
-
பட மூலாதாரம்,AFP கட்டுரை தகவல் எழுதியவர், ஜோ இன்வுட் & ஜேக் டாச்சி பதவி, பிபிசி நியூஸ்நைட் & பிபிசி ஐ இன்வெஸ்டிகேஷன்ஸ் 5 மணி நேரங்களுக்கு முன்னர் தங்கம், யுரேனியம் போன்ற மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்த இயற்கை வளங்களை பயன்படுத்திக் கொண்டு, அதற்கு ஈடாக ஆப்பிரிக்காவில் உள்ள அரசாங்கங்களின் "ஆட்சி தொடர்வதற்கான" வழிவகையை ரஷ்யா மேற்கொள்வதாக, சமீபத்தில் வெளியான முக்கிய அறிக்கையின் வாயிலாக தெரியவந்துள்ளது. மேற்கத்திய நிறுவனங்களை மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்த பகுதியிலிருந்து வெளியேற்றும் இலக்குடன், மேற்கு ஆப்பிரிக்காவில் சுரங்கச் சட்டங்களை மாற்றுவதற்கு ரஷ்யா எவ்வாறு செயல்படுகிறது என்பதையும் பிபிசிக்குக் கிட…
-
- 0 replies
- 242 views
- 1 follower
-
-
வெள்ளையர்களின் நிலம் வெள்ளையருக்கே - உறுதியளித்த அதிபர் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க கடந்த சில மணி நேரங்களில் நடந்த முக்கிய உலக நிகழ்வுகளை தொகுத்து வழங்குகிறோம். வெள்ளையர்களின் நிலம் வெள்ளையருக்கே - உறுதி அளித்த அதிபர் படத்தின் காப்புரிமைREUTERS வெள்ளையர்களின் நிலம் கையகப்படுத்தப்பட மாட்டாது என்று ஜிம்பாப்வே அதிபர் எமர்சன் உறுதி அளித்துள்ளார். இன ஒற்…
-
- 0 replies
- 241 views
-
-
தேர்தலில் ரஷ்யத் தலையீடு: ஒபாமா மெத்தனமாக இருந்தார் என்கிறார் டிரம்ப் 2016-ஆம் ஆண்டு நடந்த அமெரிக்க அதிபர் தேர்தலில், ரஷ்யாவின் தலையீடு இருந்ததாக கூறப்படும் குற்றச்சாட்டு குறித்து முந்தைய அதிபர் பராக் ஒபாமா மெத்தனமாக இருந்தார் என்று ஒபாமா மீது அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் குற்றம்சாட்டியுள்ளார். படத்தின் காப்புரிமைGETTY IMAGES Image captionஒபாமா மீது டிரம்ப் குற்றச்சாட்டு கடந்த ஆண்டு நவம்பர் 8-ஆம் தேதியன்று நடந்த அதிபர் தேர்தலுக்கு முன்னரே தேர்தலில் ரஷ்ய தலையீடு இருந்ததாக தெரிவிக்கப்பட்ட குற்றச்சாட்டுக்கள் குறித்து நன்கு அறிந்த ஒபாமா, அது குறித்து எந்த நடவடிக்கையையும் எடுக்கவில்லை என்று டிரம்ப் தெரிவித்தார். அமெ…
-
- 0 replies
- 241 views
-
-
நாளிதழ்களில் இன்று: தமிழக சட்டமன்ற உறுப்பினரை தாக்கிய தொழிலாளி பலி முக்கிய இந்திய நாளிதழ்களில் இன்று வெளியான பிரதான செய்திகள், தலையங்க கட்டுரைகள் ஆகியவற்றில் சிலவற்றைத் தொகுத்து வழங்கியுள்ளோம். டைம்ஸ் ஆஃப் இந்தியா - `எம்.எல்.ஏ-வை தாக்கியவர் பலி` கலசப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் வி பன்னீர்செல்வத்தை தர குறைவாக பேசி, தாக்கியதாக கூறப்படும் ஒருவர் மருத்துவமனையில் இறந்துள்ளதாக செய்தி பிரசுரித்துள்ளது டைம்ஸ் ஆஃப் இந்தியா நாளிதழ் ."கலசப்பாக்கத்தில் நடந்த எம்.ஜி. ஆர் பிறந்த நாள் விழாவுக்கான, மேடை அலங்கார பணிகளை வசந்தமணி என்பவர் செய்துள்ளார். இந்தப் பணிக்கான கூலி தொகையை சட்டமன்ற உறுப்பினர் பன்னீர்செல்வம் தர வேண்டி இருந்துள்ளது. இதை கேட்டபோ…
-
- 0 replies
- 241 views
-
-
ஓரிரு வரிகளில் உலகச் செய்திகள் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க கடந்த சில மணி நேரங்களில் நடந்துள்ள உலகச் செய்திகளை ஓரிரு வரிகளில் தொகுத்தளிக்கிறோம். அதிபர் டிரம்ப் செய்தது தவறு : பிரிட்டன் பிரதமர் படத்தின் காப்புரிமைREUTERS Image captionஅதிபர் டிரம்ப் செய்தது தவறு : பிரிட்டன் பிரதமர் ட்விட்டரில் தீவிர வலதுசாரி காணொளிகளை அமெரிக்க அதிபர் டிரம்ப் பகிர்ந…
-
- 0 replies
- 241 views
-
-
தனது மகனை தேச துரோகி என குற்றம் சாட்டிய முன்னாள் உயரதிகாரி மீது சட்ட நடவடிக்கை பாயும் என்று அதிபர் டொனால்ட் டிரம்ப் எச்சரிக்கை, யேமெனை அச்சுறுத்தும் புதிய வகை தொற்று நோய் மற்றும் கடும் சூறாவளி, வறட்சி போன்ற பேரிடர்களை இந்த ஆண்டும் உலகம் சந்திக்குமா? உள்ளிட்டவற்றை இந்த செய்தியறிக்கையில் காணலாம்.
-
- 0 replies
- 241 views
-
-
ஜப்பான் நாடாளுமன்ற தேர்தலில் ஆளும் லிபரல் ஜனநாயக கட்சி பெரும்பான்மையை பெறதவறியுள்ளது. பெரும்பான்மையை பெறுவதற்கு 235 ஆசனங்களை கைப்பற்றவேண்டிய நிலையில் லிபரல் ஜனநாயக கட்சியும் அதன் கூட்டணிகளும் 215 ஆசனங்களை மாத்திரம் கைப்பற்றியுள்ளன. 2009ம் ஆண்டின் பின்னர் ஜப்பானில் லிபரல் ஜனநாயக கட்சி பெரும்பான்மையை பெற தவறியமை இதுவே முதல் தடவை. லிபரல் ஜனநாயக கட்சி 1955 முதல் ஜப்பானை பலதடவைகள் தொடர்ச்சியாக ஆட்சி புரிந்து வந்துள்ளது. கடந்த சில வருடங்களாக லிபரல் ஜனநாயக கட்சி ஊழல் குற்றச்சாட்டுகள் மக்கள் ஆதரவின்மை உட்பட பல குழப்பத்தில் சிக்குண்டுள்ள நிலையிலேயே இந்த தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன. கட்சி தேர்தலில் பின்னடைவை சந…
-
- 0 replies
- 241 views
- 1 follower
-
-
உக்ரைனின் புதிய பிரதமராக யூலியா நியமனம் ! 19 JUL, 2025 | 11:25 AM உக்ரைனின் புதிய பிரதமராக அந்நாட்டின் துணைப் பிரதமரும் பொருளாதார அமைச்சருமான யூலியா ஸ்விரிடென்கோ நியமிக்கப்பட்டுள்ளார். உக்ரைன் - ரஷ்வுக்கிடையிலான யுத்தம் தொடர்ந்து இடம்பெற்றுவரும் நிலையில், உக்ரைனின் பிரதமராக இருந்த டெனிஸ் ஷிம்ஹால் திடீரென தனது பதவியை ராஜினாமா செய்தார். கடந்த 2020 ஆம் ஆண்டு மார்ச் மாதம் முதல் டெனிஸ் ஷிம்ஹால் பிரதமராக உக்ரைன் வரலாற்றில் மிக நீண்ட காலம் பணியாற்றியவர் ஆவார். இந்நிலையில் உக்ரைனின் 19 ஆவது புதிய பிரதமராக, துணைப் பிரதமரும் பொருளாதார அமைச்சருமான யூலியா ஸ்விரிடென்கோ நியமிக்கப்பட்டுள்ளார். புதிய பிரதமர் யூலியா ஸ்விரிடென்கோ, உக்ரைனின் உயர்மட்ட பேச்சுவார்த்தைகளுக்கு தலைமை தாங்கி…
-
- 1 reply
- 241 views
-
-
போயிங் விமான விபத்து: 10 ஆண்டுகளில் 320 விபத்துகளை சந்தித்த நூற்றாண்டு கால நிறுவனத்தின் விமானங்கள் ஒரு மணி நேரத்துக்கு முன்னர் பட மூலாதாரம்,AIRTEAMIMAGES.COM 132 பேருடன் பயணித்த சீனாவின் ஈஸ்டர்ன் ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்குச் சொந்தமான MU5735 விமானம் குவாங்சி மாகாணத்தில் மார்ச் 21 திங்கள்கிழமை விபத்துக்குள்ளானது. தொடர்ந்து மீட்புப்பணிகள் நடைபெற்று வருகின்றன. விமானத்தில் பயணித்தோரின் உறவினர்கள், அதிகாரப்பூர்வ அறிவிப்புக்காக காத்திருக்கின்றனர். இதுவரை விமானத்தின் பாகங்கள் மட்டுமே சில கிடைத்துள்ளன. மேலும், பயணிகளின் சேதமடைந்த உடைமைகள், அடையாள அட்டைகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக, அரசு ஊடகங்கள் தெரிவித்துள்ளன. …
-
- 0 replies
- 241 views
- 1 follower
-
-
தென்கொரியாவுடன் அடுத்த வாரம் உயர்நிலைக் கூட்டத்தில் பங்கேற்க வடகொரியா ஒப்புதல், எண்ணூறு மீட்டர் உயர மலையில் வாழ ஆபத்தான ஏணிப் பயணம் - சீனாவில் வறுமையை ஒழிக்க அதிபரின் திட்டங்கள் உதவுமா? பிபிசியின் சிறப்புத் தொகுப்பு உள்ளிட்டவற்றை இந்த செய்தியறிக்கையில் காணலாம்.
-
- 0 replies
- 241 views
-
-
துருக்கி கப்பலை கடத்த முயன்ற கும்பல்: இத்தாலி வீரர்கள் திறம்பட செயற்பட்டு முறியடிப்பு துருக்கி சரக்கு கப்பல் ஒன்று பிரான்ஸ்க்கு சென்று கொண்டிருந்தது. அப்போது திடீரென ஒரு கும்பல் ஆயுதங்களுடன் கப்பலுக்குள் நுழைந்தனர். கப்பலில் இருந்த மாலுமி உட்பட 22 பேரை மிரட்டி தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர முயற்சி மேற்கொண்டனர். அப்போது சம்பவ இடத்திற்கு விரைந்த இத்தாலி சிறப்புப்படையினர் ஆயுதக் கும்பலின் தாக்குதலை முறியடித்து, கப்பலை தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர். தற்போது கப்பல் நப்லேஸ் துறைமுகத்திற்கு வெளியே நங்கூரம் பாய்ச்சி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. அந்த இடத்த…
-
- 0 replies
- 241 views
-
-
கொலம்பியாவில்... ரோந்து பணிக்காக பயணித்த, பொலிஸ் வாகனம் மீது... குண்டுத்தாக்குதல்: 8 பொலிஸ் அதிகாரிகள் உயிரிழப்பு! மேற்கு கொலம்பியாவில் நடந்த வெடிகுண்டு தாக்குதலில் 8 பொலிஸ் அதிகாரிகள் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஹூய்லாவின் சான் லூயிஸ் நகரில் நேற்று (வெள்ளிக்கிழமை) ரோந்து பணிக்காக பயணித்த பொலிஸ் வாகனம் மீது இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. நாட்டின் கிட்டத்தட்ட 60 ஆண்டுகால மோதலை முடிவுக்கு கொண்டுவருவதாக உறுதியளித்து, தான் பதவியேற்ற பிறகு, பாதுகாப்புப் படையினர் மீது நடத்தப்பட்ட மிக மோசமான தாக்குதல் இது என்று ஜனாதிபதி குஸ்டாவோ பெட்ரோ வருத்தம் தெரிவித்துள்ளார். ‘இந்த செயல்கள் முழு அமைதிக்கு ஒரு தெளிவான நாசவேலை. விசாரணைய…
-
- 0 replies
- 241 views
-
-
டெல்லி: ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை ஒதுகீட்டு ஊழல் வழக்கில் உண்மை கண்டறியும் சோதனைக்கு முன்னாள் தொலைத் தொடர்புத் துறை அமைச்சர் ஆ. ராசா மறுத்துவிட்டதாக அவரிடம் விசாரணை நடத்திய சிபிஐ அதிகாரி டெல்லி நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார். ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் ஆ. ராசா, 2011ஆம் ஆண்டு பிப்ரவரி 2-ந் தேதி கைது செய்யப்பட்டார். அவரிடம் 2011 பிப்ரவரி 17-ந் தேதி வரை சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தினர். கடந்த ஆண்டு மே மாதம் 15-ந் தேதி ஆ.ராசாவுக்கு ஜாமீன் வழங்கப்பட்டது. இந்த வழக்கின் விசாரணை டெல்லி சிபிஐ நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. சிபிஐ துணை கண்காணிப்பாளரான ராஜேஸ் சஹால் இன்று சாட்சியமளித்தார். அப்போது 2011ஆம் ஆண்டு பிப்ரவரி 9-ந் தேதியன்று ஆ. ராசாவிடம் உண்மை கண்டறியும் சோதனை நடத்துவ…
-
- 1 reply
- 241 views
-
-
ஆங் சாங் சூகிக்கு ஐந்தாண்டு சிறைத் தண்டனை இராணுவத்தால் ஆளப்படும் மியன்மார் நாட்டின் முன்னாள் தலைவர் ஆங் சாங் சூகி ஊழல் வழக்கில் குற்றவாளி என அந்நாட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. மியன்மாரில் கடந்த 2021ஆம் ஆண்டு பெப்ரவரியில் இராணுவத்தால் ஆட்சிக் கவிழ்ப்பு நடந்தப்பட்டதிலிருந்து மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆங் சாங் சூகி வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளார். 76 வயதான நோபல் பரிசு பெற்ற ஆங் சாங் சூகி மீது வாக்காளர் மோசடி உள்ளிட்ட குற்றவியல் குற்றங்கள் சுமத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், தன் மீதான அனைத்து குற்றச்சாட்டுகளையும் அவர் மறுத்துள்ளதோடு, மனித உரிமைக் குழுக்கள் நீதிமன்ற விசாரணைகளை போலித்தனமானது என கண்டித்துள்ளன. வழக்கு விசாரணை தலைநகர் Nay Pyi Taw…
-
- 0 replies
- 241 views
-