உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26647 topics in this forum
-
போயிங் விமான விபத்து: 10 ஆண்டுகளில் 320 விபத்துகளை சந்தித்த நூற்றாண்டு கால நிறுவனத்தின் விமானங்கள் ஒரு மணி நேரத்துக்கு முன்னர் பட மூலாதாரம்,AIRTEAMIMAGES.COM 132 பேருடன் பயணித்த சீனாவின் ஈஸ்டர்ன் ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்குச் சொந்தமான MU5735 விமானம் குவாங்சி மாகாணத்தில் மார்ச் 21 திங்கள்கிழமை விபத்துக்குள்ளானது. தொடர்ந்து மீட்புப்பணிகள் நடைபெற்று வருகின்றன. விமானத்தில் பயணித்தோரின் உறவினர்கள், அதிகாரப்பூர்வ அறிவிப்புக்காக காத்திருக்கின்றனர். இதுவரை விமானத்தின் பாகங்கள் மட்டுமே சில கிடைத்துள்ளன. மேலும், பயணிகளின் சேதமடைந்த உடைமைகள், அடையாள அட்டைகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக, அரசு ஊடகங்கள் தெரிவித்துள்ளன. …
-
- 0 replies
- 241 views
- 1 follower
-
-
விந்தணுவில் புற்றுநோய்; ஒரே குடும்பத்தில் 10 குழந்தைகள் பாதிப்பு;ஆய்வில் வெளிவந்த அதிர்ச்சி ஐரோப்பாவில் ஒரே நபரின் விந்தணுவில் கருத்தரித்த 67 குழந்தைகளில் 10 பேருக்கு புற்றுநோய் அபாயம் இருப்பது ஆய்வில் கண்டறியப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஐரோப்பாவில் செய்யப்பட்ட ஒரு பரிசோதனையில் மிகப்பெரிய அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. அதாவது இந்த பரிசோதனையில் 8 ஐரோப்பிய நாடுகளைச் சேர்ந்த 46 குடும்பங்களைச் சேர்ந்த 67 குழந்தைகள் பரிசோதிக்கப்பட்டனர். அதில் ஒரே நபரின் விந்தணு மூலம் 67 பேர் கருத்தரித்துள்ளனர். அவர்களை பரிசோதனை செய்ததில் அந்த நபரின் விந்தணுவில் கருத்தரித்த குழந்தைகளில் 10 பேருக்கு புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டது. இதில் கேன்சர் செல்களான ”லுகேமியா மற்…
-
- 0 replies
- 241 views
- 1 follower
-
-
கொரோனா நோயாளிகளின் மாதிரிகளை சோதனைகளுக்காக கொண்டு சென்ற சாரதி சுட்டுக்கொலை கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் மாதிரிகளை பரிசோதனைக்காக கொண்டு சென்ற உலக சுகாதார ஸ்தாபனத்தின் வாகன சாரதி சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளார். மியன்மாரின் மேற்கு ராஹின் மாகாணத்தில் குறித்த சம்பவம் நடைபெற்றுள்ளதாக ஐக்கிய நாடுகள் அமைப்பு தெரிவித்துள்ளது. மியன்மாரில் இதுவரையான காலப்பகுதியில் கொரோனா வைரஸ் பெருந்தொற்றுக்கு இலக்காகி ஐவர் உயிரிழந்துள்ளதுடன், 119 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் நோய்த்தொற்றுக்கு இலக்கானவர்களின் மாதிரிகளுடன் வைத்திய சாலைக்கு சென்றுகொண்டிருந்த வாகனத்தின் மீது துப்பாக்கி சூடு நடத்தப்பட்டுள்ளது. குறித்த துப்பாக்கி சூட்டிலேயே வாகன சாரதி உயிரிழந்துள்ளார் …
-
- 0 replies
- 241 views
-
-
தென்கொரியாவுடன் அடுத்த வாரம் உயர்நிலைக் கூட்டத்தில் பங்கேற்க வடகொரியா ஒப்புதல், எண்ணூறு மீட்டர் உயர மலையில் வாழ ஆபத்தான ஏணிப் பயணம் - சீனாவில் வறுமையை ஒழிக்க அதிபரின் திட்டங்கள் உதவுமா? பிபிசியின் சிறப்புத் தொகுப்பு உள்ளிட்டவற்றை இந்த செய்தியறிக்கையில் காணலாம்.
-
- 0 replies
- 241 views
-
-
துருக்கி கப்பலை கடத்த முயன்ற கும்பல்: இத்தாலி வீரர்கள் திறம்பட செயற்பட்டு முறியடிப்பு துருக்கி சரக்கு கப்பல் ஒன்று பிரான்ஸ்க்கு சென்று கொண்டிருந்தது. அப்போது திடீரென ஒரு கும்பல் ஆயுதங்களுடன் கப்பலுக்குள் நுழைந்தனர். கப்பலில் இருந்த மாலுமி உட்பட 22 பேரை மிரட்டி தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர முயற்சி மேற்கொண்டனர். அப்போது சம்பவ இடத்திற்கு விரைந்த இத்தாலி சிறப்புப்படையினர் ஆயுதக் கும்பலின் தாக்குதலை முறியடித்து, கப்பலை தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர். தற்போது கப்பல் நப்லேஸ் துறைமுகத்திற்கு வெளியே நங்கூரம் பாய்ச்சி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. அந்த இடத்த…
-
- 0 replies
- 241 views
-
-
கொலம்பியாவில்... ரோந்து பணிக்காக பயணித்த, பொலிஸ் வாகனம் மீது... குண்டுத்தாக்குதல்: 8 பொலிஸ் அதிகாரிகள் உயிரிழப்பு! மேற்கு கொலம்பியாவில் நடந்த வெடிகுண்டு தாக்குதலில் 8 பொலிஸ் அதிகாரிகள் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஹூய்லாவின் சான் லூயிஸ் நகரில் நேற்று (வெள்ளிக்கிழமை) ரோந்து பணிக்காக பயணித்த பொலிஸ் வாகனம் மீது இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. நாட்டின் கிட்டத்தட்ட 60 ஆண்டுகால மோதலை முடிவுக்கு கொண்டுவருவதாக உறுதியளித்து, தான் பதவியேற்ற பிறகு, பாதுகாப்புப் படையினர் மீது நடத்தப்பட்ட மிக மோசமான தாக்குதல் இது என்று ஜனாதிபதி குஸ்டாவோ பெட்ரோ வருத்தம் தெரிவித்துள்ளார். ‘இந்த செயல்கள் முழு அமைதிக்கு ஒரு தெளிவான நாசவேலை. விசாரணைய…
-
- 0 replies
- 241 views
-
-
பாகிஸ்தானில் 8 வயது சிறுமி பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டு கொலை பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் 8 வயது சிறுமி பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார். இதனைக் கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது பொலிஸார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் இருவர் உயிரிழந்துள்ளனர். பஞ்சாப் மாகாணம் கசூர் மாவட்டத்தைச் சேர்ந்த 8 வயது சிறுமி கடந்த வாரம் மர்ம நபர்களால் கடத்தப்பட்டிருந்தார். வீட்டிற்கு வெளியே விளையாடிக்கொண்டிருந்த சிறுமி கடத்தப்பட்டது CCTV கெமராவில் பதிவாகியிருந்தது. இந்நிலையில், சிறுமியின் உடல் நேற்றிரவு சாதார் பகுதியில் உள்ள குப்பைத்தொட்டியில் இருந்து …
-
- 2 replies
- 241 views
-
-
டெல்லி: ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை ஒதுகீட்டு ஊழல் வழக்கில் உண்மை கண்டறியும் சோதனைக்கு முன்னாள் தொலைத் தொடர்புத் துறை அமைச்சர் ஆ. ராசா மறுத்துவிட்டதாக அவரிடம் விசாரணை நடத்திய சிபிஐ அதிகாரி டெல்லி நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார். ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் ஆ. ராசா, 2011ஆம் ஆண்டு பிப்ரவரி 2-ந் தேதி கைது செய்யப்பட்டார். அவரிடம் 2011 பிப்ரவரி 17-ந் தேதி வரை சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தினர். கடந்த ஆண்டு மே மாதம் 15-ந் தேதி ஆ.ராசாவுக்கு ஜாமீன் வழங்கப்பட்டது. இந்த வழக்கின் விசாரணை டெல்லி சிபிஐ நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. சிபிஐ துணை கண்காணிப்பாளரான ராஜேஸ் சஹால் இன்று சாட்சியமளித்தார். அப்போது 2011ஆம் ஆண்டு பிப்ரவரி 9-ந் தேதியன்று ஆ. ராசாவிடம் உண்மை கண்டறியும் சோதனை நடத்துவ…
-
- 1 reply
- 241 views
-
-
பிரான்சில் மீண்டும் தாக்குதல் நடத்தப்படும் என்று அல்கொய்தா மிரட்டல் விடுத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. பாரீஸ் நகரில் கடந்த புதன்கிழமை 'சார்லி ஹெப்டோ' பத்திரிகை அலுவலகத்தில் 2 தீவிரவாதிகள் புகுந்து நவீன துப்பாக்கிகள், ராக்கெட் லாஞ்சர்களை கொண்டு தாக்குதல் நடத்தி 12 பேரை கொன்றனர். இந்த தாக்குதலில் ஈடுபட்ட தீவிரவாதிகளில் ஒருவன் ஏமனில் கல்வி பயின்றதாகவும் அங்கு அல்கொய்தா பயிற்சி முகாம்களில் கலந்து கொண்டதாகவும் ஏமன் பாதுகாப்பு படை கூறியது. இந்நிலையில், அரேபியன் தீபகற்பத்தில் உள்ள அல்கொய்தா தீவிரவாத அமைப்பின் முக்கிய தலைவர்கள், பிரான்சில் பத்திரிகை அலுவலகம் மற்றும் ஜெவிஸ் பல்பொருள் விற்பனை அங்காடி மீது நடத்தப்பட்ட தாக்குதல் போல் மீண்டும் பிரான்சில் தாக்குதல் ந…
-
- 0 replies
- 241 views
-
-
ரஷ்யாவின் நிக்கோல்ஸ்கோய் பகுதியில் நிலநடுக்கம்: ரிக்டரில் 5.2 ஆக பதிவு ரஷ்யா நாட்டின் நிக்கோல்ஸ்கோய் பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்டரில் 5.2 ஆக பதிவு செய்யப்பட்டுள்ளது. மாஸ்கோ: ரஷ்யா நாட்டின் நிக்கோல்ஸ்கோய் பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. நிக்கோல்ஸ்கோயில் இருந்து சுமார் 79 கிலோமீட்டர் தொலைவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்டரில் 5.2 ஆக பதிவு செய்யப்பட்டுள்ளதாக, அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்திய நேரப்படி 10.30 மணியளவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. கடந்த 24 மணி …
-
- 0 replies
- 241 views
-
-
கருணைக் கொலை தொடர்பான சட்டமூலத்திற்கு போர்த்துக்கல் நாடாளுமன்றம் அனுமதி கருணைக் கொலை தொடர்பான சட்டமூலத்திற்கு போர்த்துக்கல் நாடாளுமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. போர்த்துக்கலில் ஆளும் சோசலிசக் கட்சி உட்பட 5 அரசியல் கட்சிகளினால் கருணைக்கொலை குறித்த சட்டமூலம் முன்மொழியப்பட்டுள்ளது. 230 நாடாளுமன்ற உறுப்பினர்களில் 127 உறுப்பினர்கள் குறித்த சட்டமுலத்திற்கு ஆதரவாகவும் ,124 உறுப்பினர்கள் எதிராகவும் வாக்களித்த நிலையில், சட்டமூலம் 3 மேலதிக வாக்குகளினால் நிறைவேற்றப்பட்டுள்ளது. 2 வருடங்களுக்கு முன்னர் நிராகரிக்கப்பட்ட குறித்த சட்டமூலம் நிலுவையிலிருந்த நிலையில் தற்போது அங்கீகாரமம் வழங்கப்பட்டுள்ளது. இதனிடையே குறித்த சட்டமூலத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து நாடாளுமன…
-
- 0 replies
- 241 views
-
-
சிட்னி விமானங்கள் தாக்குதல் குறித்து கைது செய்யப்பட்டு விடுவிக்கப்பட்டவர்; தீவிரவிசாரணை காரணமாக மன உளைச்சலிற்குள்ளாகியுள்ளார் சிட்னியில் பயணிகள் விமானங்கள் மீது தாக்குதலை மேற்கொள்ள முயன்றனர் என்ற சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டவர்களில் ஓருவரை காவல்துறையினர் விடுதலை செய்துள்ள அதேவேளை குறித்த குற்றச்சாட்டு தொடர்பில் இடம்பெற்ற விசாரணைகள் குறித்து அந்த நபர் அதிர்ச்சியடைந்துள்ளார் என அவரது சட்டத்தரணி தெரிவித்துள்ளார் கைதுசெய்யப்பட்டுள்ள நால்வரில் அப்துல் மெர்கி என்ற 50 வயது நபரை காவல்துறையினர் செவ்வாய்கிழமை இரவு விடுதலை செய்துள்ளனர். விசாரணைகள் தொடர்கின்றன எனவும் உரிய தருணத்தில் தகவல்களை வ…
-
- 0 replies
- 241 views
-
-
காய்ச்சல், சளி, இருமல்: பாதுகாப்பு குறித்து கவலை உண்டாக்கும் இந்தியாவில் தயாரிக்கப்படும் மருந்துகள் சௌதிக் பிஸ்வாஸ் இந்திய செய்தியாளர் ஒரு மணி நேரத்துக்கு முன்னர் பட மூலாதாரம்,AFP படக்குறிப்பு, 42 பில்லியன் டாலர் வருவாயில் பகுதி அளவு ஏற்றுமதியில் இருந்து கிடைக்கும் மருந்துகள் தயாரிப்பு தொழில் துறை, தரக்குறைவான மருந்துகள், குழந்தைகளின் துயர மரணங்கள் ஆகியவற்றின் மூலம் மீண்டும் கவனம் பெற்றிருக்கிறது. 2019ம் ஆண்டின் குளிர்காலத்தில் இந்தியாவின் ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் சில குழந்தைகள் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டனர். இது ஒரு மர்மமான உடல்நலக்கோளாறு என்று பலரும் …
-
- 0 replies
- 241 views
- 1 follower
-
-
பிரிட்டன் கன்சர்வேட்டிவ் கட்சியின் மைக்கேல் கோவின் தேர்தல் கொள்கை வெளியீடு பிரிட்டன் ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு விலக வேண்டுமென்று பரப்புரை செய்த தலைவர்களில் ஒருவரான மைக்கேல் கோவ், கன்சர்வேட்டிவ் கட்சியின் அடுத்தத் தலைவராகவும், பிரதமராகவும் வருவதற்கு போட்டியிடப் போகும் நிலையில், தனது தேர்தலுக்கான தனது கொள்கைத் திட்டத்தை வெளியிட்டுள்ளார். இதுவே சரியான செயல்பாடு என்பதால் போட்டியிடப் போவதாக கூறியுள்ள மைக்கேல் கோவ், இதே காரணத்திற்காக தான் பிரிட்டன் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேற வேண்டுமென வலியுறுத்தியதாகத் தெரிவித்துள்ளார். ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வருகின்ற கட்டுப்பாடற்ற குடியேற்றத்தை முடிவுக்கு கொண்டுவர அவர் உறுதியளித்துள்ளார். பெரி…
-
- 0 replies
- 241 views
-
-
மனிதர்களிடமிருந்து விலங்குகளுக்கும், விலங்குகளிலிருந்து மீண்டும் மனிதர்களுக்கு கொரோனா பரவுகிறதா? நவீன்சிங் கட்கா சுற்றுச்சூழல் செய்தியாளர் ஒரு மணி நேரத்துக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, பூங்காக்களில் இருக்கும் கொரில்லாக்களிடம் கொரோனா தொற்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது ஹாங்காங்கில் ஒரு செல்லப் பிராணிக்கடை தொழிலாளி வைரசால் பாதிக்கப்பட்டிருக்கலாம் என்ற ஐயத்தைத் தொடர்ந்து, ஆயிரக்கணக்கான வெள்ளை எலிகளை அழிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட வெள்ளை எலியிடமிருந்து கடையில் வேலை பார்த்த நபருக்கு வைரஸ் பரவி இருக்கலாம் என ஹாங்காங் அதிகாரிக…
-
- 0 replies
- 241 views
- 1 follower
-
-
தீவிரவாத தாக்குதல் நடத்த முயற்சித்த குற்றச்சாட்டில் 2 பேரை ஜெர்மன் காவல்துறையினர் கைது செய்துள்ளனர் தீவிரவாத தாக்குதல் நடத்த முயற்சித்த குற்றச்சாட்டின் பேரில் இரண்டு பேரை ஜெர்மன் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். ஜெர்மனியில் பாரியளவில் தேடுதல் வேட்டையொன்று நடத்தப்பட்டுள்ளது. சுமார் 450 ஜெர்மனிய விசேட காவல்துறை உத்தியோகத்தர்கள் இந்த தேடுதல் வேட்டையில் பங்கேற்றிருந்த நிலையில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். தீவிரவாத தாக்குதல் ஒன்றை நடத்த இவர்கள் திட்டமிட்டிருந்தார்கள் என குற்றம் சுமத்தப்பட்டுள்ள போதும் எந்தவொரு இடத்தை தாக்குவதற்கு திட்டமிட்டமை பற்றிய விபரங்கள் வெளியாகவில்லை. 27 வயதான அல்ஜீரிய பிரஜை ஒருவரும், 23 வயதான நைஜீ…
-
- 0 replies
- 241 views
-
-
பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், நாடின் யூசிப் பதவி, பிபிசி நியூஸ் 9 அக்டோபர் 2024 அமெரிக்காவின் மூத்த மற்றும் பிரபல நிருபர் பாப் உட்வர்டின் புதிய புத்தகம் ஒன்று, ‘டொனால்ட் டிரம்ப், அமெரிக்காவில் கோவிட்-19 சோதனை இயந்திரங்கள் பற்றாக்குறையாக இருந்தபோது, அவற்றை ரஷ்ய அதிபர் புதினின் தனிப்பட்ட பயன்பாட்டிற்காக ரகசியமாக அனுப்பி வைத்தார்’ என்று கூறுகிறது. ஆனால் இந்தக் கூற்றை டிரம்பின் பிரச்சாரக் குழு நிராகரித்துள்ளது. 'வார்' (War) என்று பெயரிடப்பட்ட அந்த புத்தகத்தில், டிரம்ப் அதிபர் பதவியை விட்டு வெளியேறிய பிறகும் கூட ரகசியமாக புதினுடன் தொடர்பில் இருந்தார் என, அமெரிக்க ஊடகங்கள் மேற்கோ…
-
- 0 replies
- 241 views
- 1 follower
-
-
வான் தாக்குதல்களால் மருத்துவமனைகள் மூடல்: சிரியாவில் தொடரும் நெருக்கடி இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க கிளர்ச்சியாளர்கள் கட்டுப்பாட்டில் உள்ள சிரியாவின் தென்மேற்குப் பகுதியில், அரசு ஆதரவுப் படைகளால் நடத்தப்பட்ட வான் வழித் தாக்குதல்களில் சேதமடைந்த மூன்று மருத்துவமனைகள் செயல்பட முடியாத நிலையை அடைந்துள்ளன. படத்தின் காப்புரிமைAFP நள்ளிரவுக்குப் பின் நடத்தப்பட்ட வான…
-
- 0 replies
- 241 views
-
-
விஸ்கான்சின் சம்பவம் ; உயிரிழந்தோர் எண்ணிக்கை ஐந்தாக உயர்வு, 40 க்கும் மேற்பட்டோர் காயம் அமெரிக்காவின், விஸ்கொன்சினில் ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற கிறிஸ்மஸ் அணிவகுப்பில் இடம்பெற்ற விபத்துச் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 05 ஆக உயர்வடைந்துள்ளது. அதேநேரம் 40 க்கும் மேற்பட்டோர் சம்பவத்தில் காயமடைந்தாக நகர காவல்துறை அதிகாரிகள் உறுதிபடுத்தியுள்ளனர். விஸ்கொன்சினில் ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற கிறிஸ்மஸ் அணிவகுப்பில், அணிவகுத்துச் சென்ற குழுவினர் மீது வாகன சாரதியொருவர் தனது காரை வேகமாக செலுத்தி மோதி விபத்துக்குள்ளாக்கியுள்ளார். விஸ்கான்சின் வௌகேஷாவில் உள்ளூர் நேரப்படி மாலை 4:40 மணிக்குப் பிறகு நடந்த வருடாந்திர அணிவகுப்பின் போதே இந்த சம்பவம் நடந்த…
-
- 0 replies
- 241 views
-
-
ஸ்பெயினில் நடந்த இரட்டை பயங்கரவாத தாக்குதலில் பதின்னான்கு பேர் பலியானது குறித்த செய்திகள், போதைமருந்துக்கு எதிரான தனது போரை பிலிப்பைன்ஸ் அதிபர் தீவிரப்படுத்தியுள்ளது குறித்த செய்தித் தொகுப்பு மற்றும் முதலாம் வகை நீரிழிவு நோய்க்கான புதிய சிகிச்சை முறை ஒன்று குறித்த சிறப்புச் செய்தித் தொகுப்பு ஆகியவை இன்றைய பிபிசி தமிழ் சர்வதேச தொலைக்காட்சி செய்தியறிக்கையில் இடம்பெறுகின்றன.
-
- 0 replies
- 241 views
-
-
உக்ரைன் ஆயுதக்கிடங்கில் மாபெரும் வெடிவிபத்து (காணொளி) மத்திய உக்ரைனில், 188 ஆயிரம் டன் வெடிபொருட்கள் சேமித்துவைக்கப்பட்டிருந்த ஒரு ராணுவ வெடிமருந்து கிடங்கு வெடித்து சிதறிய காட்சிகள். BBC
-
- 0 replies
- 241 views
-
-
யுக்ரேன் - ரஷ்யா போர்: அணுக்கழிவு வெடிகுண்டு எனப்படும் 'டர்ட்டி பாம்' என்றால் என்ன? 5 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES பொதுவாக பயன்படுத்தப்படும் வெடிபொருட்கள் அதே போல ரேடியோ கதிர்வீச்சு பொருட்கள் அடங்கிய கருவியை கொண்டு உருவாக்கப்படும் 'டர்ட்டி பாம்' எனப்படும் அணுக்கழிவு வெடிகுண்டை யுக்ரேன் பயன்படுத்த உள்ளதாக ரஷ்யாவின் பாதுகாப்புத்துறை அமைச்சர் அதிரடி தகவலை வெளியிட்டார். அதே நேரத்தில் அவர் அதற்கான ஆதாரம் எதையும் கொடுக்கவில்லை. இந்த நிலையில் யுக்ரேன், பிரான்ஸ், பிரிட்டன் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகள் இந்த குற்றச்சாட்டை மறுத்திருக்கின்றன. ரஷ்யா என்ன சொல்கிறது? ரஷ்யா…
-
- 0 replies
- 241 views
- 1 follower
-
-
கருங்கடல் தானிய ஏற்றுமதி ஒப்பந்தத்திலிருந்து தற்காலிகமாக விலகுவதாக புடின் அறிவிப்பு! உக்ரைனிய தானிய ஏற்றுமதிகளை ஏற்றிச் செல்லும் கப்பல்களை பாதுகாப்பான பாதையில் செல்ல அனுமதிக்கும் ஒப்பந்தத்தில் தற்காலிகமாக விலகுவதாக ரஷ்ய ஜனாதிபதி விளாடிமீர் புடின் அறிவித்துள்ளார். எனினும், இந்த ஒப்பந்தத்திலிருந்து முழுமையாக விலகவில்லை என்று அவர் இதன்போது சுட்டிக்காட்டினார். உக்ரைன் தனது கடற்படையைத் தாக்க கருங்கடலில் ஒரு பாதுகாப்பு வழித்தடத்தை பயன்படுத்தியதாக குற்றம் சாட்டி, ஐ.நா-வின் தரகு ஒப்பந்தத்தில் இருந்து ரஷ்யா சனிக்கிழமை வெளியேறியது. ஆனால், இந்த தாக்குதலுக்கு உக்ரைன் பொறுப்பேற்கவில்லை. உக்ரைனிய ஜனாதிபதி வோலோடிமிர் ஸெலென்ஸ்கி, இந்த ஒப்பந்தம்…
-
- 0 replies
- 241 views
-
-
சீன ஜனாதிபதியை மீண்டும் வலுப்படுத்தும் விதத்தில் சீனாவின் கம்யுனிஸ்ட் கட்சி தனது யாப்பை வலுப்படுத்தலாம் By RAJEEBAN 26 SEP, 2022 | 03:56 PM சீன ஜனாதிபதியை மீண்டும் வலுப்படுத்தும் விதத்தில் சீனாவின் கம்யுனிஸ்ட் கட்சி தனது யாப்பை வலுப்படுத்தலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன. மூன்றாவது தடவையாக அதிகாரத்தில் நீடிப்பார் என எதிர்பார்க்கப்படும் சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங்கின் விருப்பத்திற்கு ஏற்ப நாடு கட்சி சமூகம் மற்றும் பொருளாதாரம் தொடர்பான விதிமுறைகள் மாற்றப்படுவதை உறுதி செய்வதற்காக தனது 20வது மாநாட்டின் போது சீன கம்யுனிஸ்ட் கட்சி தனது யாப்பில் மாற்றங்களை மேற்கொள்ளக்கூடும். ஒக்டோபர் மாதம் 9 ம் திகதி இடம்பெறவுள்ள சீன கம்ய…
-
- 0 replies
- 241 views
- 1 follower
-
-
ஓரிரு வரிகளில் உலகச் செய்திகள் கடந்த சில மணி நேரங்களில் நடந்துள்ள முக்கிய உலக நிகழ்வுகளை ஓரிரு வரிகளில் தொகுத்தளிக்கிறோம். நூற்றாண்டு அடி அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், மத்திய கிழக்கில் அமைதியை கொண்டு வர எடுக்கும் முயற்சிகள் அனைத்தும், `இந்த நூற்றாண்டு மீதான அடி` என்று பாலஸ்தீனிய அதிபர் மக்மூத் அப்பாஸ் விவரித்துள்ளார். பாலஸ்தீனிய தலைவர்கள் சந்திப்பில் பேசிய அவர், ஜெருசேலத்தை இஸ்ரேலின் தலைநகராக அங்கீகரித்த அமெரிக்காவின் எந்த அமைதி திட்டத்தையும் தாம் ஏற்றுக் கொள்ளப் போவதில்லை என்றார். ஓஸ்லோ அமைதி ஒப்பந்தத்தை முறித்துக் கொண்ட இஸ்ரேலையும் அப்பாஸ் குற்றஞ்சாட்டினார். ஓடு தளத்திலிருந்து விலகிய விமானம் து…
-
- 0 replies
- 241 views
-