கவிதைப் பூங்காடு
கவிதைகள் | பாடல் வரிகள்
கவிதைப் பூங்காடு பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் கவிதைகள், கவிதை மொழியாக்கம், உலகக் கவிதை, பாடல் வரிகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் கவிதைகள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனைய கவிதைகள் தரமான கவிதைகளை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
5128 topics in this forum
-
எனக்கு மின்னஞ்சலில் வந்தது ஈழத்துப் பாப்பா பாடல் ஓடி மறைந்துகொள் பாப்பா - நீ ஒளிந்து வாழப்பழகிக்கொள் பாப்பா பங்கருக்குள் முடங்கிக்கொள் பாப்பா - நீ பதுங்கி வாழப்பழகிக்கொள் பாப்பா சிங்களப் படைகள்வரும் பாப்பா - வானில் சீறும் விமானம்வரும் பாப்பா எங்களுக்கெனக் குரல்கொடுக்க உலகில் - மனிதர் எவரும் இல்லையடி பாப்பா சினத்தோடு வந்தான் எதிரி பாப்பா - எம்மை இனத்தோடு அழிக்க நினைத்தான் பாப்பா வனத்தில் விலங்குகளாய் ஆனோம் பாப்பா -எம் மனத்தில் சோகங்கள் ஆயிரம் பாப்பா பகைவனுக்கு வேண்டியது சண்டை - அவன் வகைவகையாய் வீசினான் குண்டை புகைமண்டலமாய் ஆனதெம்தேசம் - பார்த்து நகைக்கிறான் எதிரி பாப்பா தெய்வமும் மறந்ததடி பாப்பா - வெறி நாய்கள் சூழ்ந்த…
-
- 2 replies
- 1.1k views
-
-
கோத்தபாயா..! காலக்கெ(கே)டு உனக்கு நாங்கள் வைப்போம்... கவிதை - -இளங்கவி உன் காலத்தின் கெடு கட்டுப்படுத்தா வீரர்கள் காலவதியான உன் வீரத்துக்கு கட்டுப்படா வேங்கைகள்.... எத்தனை காலக்கெடு உனக்கு எத்தனை தோல்விகள் இருந்துமா புரியவில்லை; புலிகள் உன் சொல்லெல்லாம் சுட்டெரிக்கும் தமிழீழச் சூரியன்கள் கோழையின் சொல்லுக்கு ஓர் துளியளவும் மதிப்பில்லை எம் வீரர் சொல்லமாட்டார் சொன்னால் உன்னுயிர் உனக்கிலை... அப்பாவி உயிர்களை கொன்றொளிக்கும் ஆசாமி அதன் பின்னர் சொல்லிடுவாய் புத்தம்..! சராணம்..! கச்சாமி..! தமிழீழ போர்களத்தில் எங்கள் பூக்கூட நெருப்பாகும் புரிய மறுத்துவிட்டால்; உங்கள் பிணங்களைக்கேள் பதில்சொல்லும் புலிகளை நினைத்தாயோ; உ…
-
- 12 replies
- 5.3k views
-
-
மரணம் இப்பொழுதெல்லாம் எந்த சந்தடியுமில்லாமல் வருவது இது ஒன்றுதான் ஊமத்தங்கூவை,நாய்,ஆந்தை,பிராந
-
- 0 replies
- 968 views
-
-
மின்னஞ்சல் பெட்டியில் மிதக்கின்றன ஓலைகள் அவலங்களாகவும் வாக்குகளிற்காகவும்..! என்னுணர்வுகளிற்கு அழக்கூட ஆசையில்லை அழுதழுது மரத்துப்போனதால்..! யாராவது ஒருவர் மனமிரங்காராவென வாக்குப்போடுகிறேன் இணையத்தளங்களை நாடி.. வருகிறார்களில்லையே!! கண்டிப்பும் எச்சரிக்கையும் வெறும் சேதிகளாகவல்லவா வருகின்றன கைகட்டிக் கொண்டு!! அவரை நம்பி இவரை நம்பி ஆறுதல் தேடலாமென்றால் ஆறுதலுக்கான அன்பளிப்புகள் வேகும் புண்ணில் பாயும் வேல்களாகின்றனவே!! மனிதாபிமான முகமூடிகளுள் முகத்தைத் தேடித்தேடியே என் மின்னஞ்சல்பெட்டியுள் நேரத்தைத் தொலைக்கிறேன்.
-
- 3 replies
- 1.2k views
-
-
நம்பிக்கைகள் உனக்காய் துளிர்விடுகிறது... நம்பிக்கைகள் அறுபட்டு நீ இருப்பாயின்னும் என்ற நினைப்பும் விடுபட்டுப் போன ஒரு அந்திப் பொழுதில் அழைத்தாய்.... "அக்கோய் சுகமோ" ? நினைக்காத பொழுதொன்றின் நினைவுகளில் வந்து நிரம்பினாய்.... "எப்படியிருக்கிறாய்" ? எப்போதும் போலான கேள்வியில் அப்போதும் சிரித்தாய்.... "அக்கா இருக்கிறேன்" அதிஸ்டமோ இல்லை ஆயுள் நீளமோ ? அறியேன் என்றாய்.... ஐந்து நிமிடமோ அதற்கும் சில நொடியோ " அக்கா போகிறேன்" தொடர்பறுத்து விடைபெற்றாய்.... கடைசிச் சிரிப்பும் கலகலத்த பேச்சும் கனவிலும் மாறாமல் நீ.... வீரச்செய்திகளுக்குள் நீயும் வித்தாய்ப் போனாயோ ? காலம் அள்ளி வரும் களச் செய்திகளில் காவ…
-
- 5 replies
- 1.5k views
-
-
இறைவா இது நியாயம் தானா? தமிழினம் இனி அடிமை தானா? டிக் டிக் டிக்கென நொடிகள் நகருது திக் திக் திக்கென இதயம் துடிக்குது பக் பக் பக்கென பயமாய் உள்ளது இத்தனை காலம் நாம் போராடியது வீண்தானா? நாம் தோற்கப்போகிறோமா? இன்பமான நாட்கள் இனி எம் வாழ்வில் இல்லையா? உலகையே திரும்பி பார்த்து திகைக்க வைத்த தானைத்தலைவனை இழந்து விடுவோமா? அடிமைவிலங்கு உடையாதா? தலைகுனிந்து நாமினி வாழவேண்டுமா? அடுத்தவர் இகழ்ச்சிக்கு நாமினி இலக்கா? தமிழினத்தைக் காக்க யாருமில்லையா? கயவர்களிடமும் எடடப்பர்களிடமும் துரோகிகளிடமும் தமிழர்கள் சிக்கி சின்னாபின்னமாக வேண்டியது தானா? இனி தமிழினம் ஆண்டாண்டு காலத்திற்கும் அடிமைகள் தானா? இறைவா இது நியாயம் தானா?
-
- 2 replies
- 1.1k views
-
-
சிங்களமே உனக்கு சொல்கிறேன் நீ எங்கள் சொந்தமில்லை வன்னி முற்றமும் உன் சொந்தமில்லை விட்டு போய்விடு உன் வீட்டுக்கு வைப்போம் உன் தலைகனத்திற்கு வேட்டு குடும்ப அரசியலுக்கு குத்து விளக்கு ஏற்றாதே சிங்களமே பின்பு உன் குடும்பம் அகதியாகிவிடும் ராஜபக்ச குடும்பம் தலைதெறிக்க ஓடும் பொன்சேக பொடியாகிவிடுவான் கோத்தபாய உன் வீரம் நிலத்தடி சுரங்கத்திலா பொன்சேகா வீட்டு கோடிபுரத்திலா மகிந்தவின் வாடகை வீட்டிலா உன் வீரம் காட்ட வாங்கய்யா பிரபு வன்னிக்கு தமிழச்சி உனக்கு சீதனமா .. நாயே எண்ணாதே பேய்த்தனமய்..வெறீ நாயே தருகிறோம் உனக்கு காலக்கெடு எண்ணி எண்ணி சாவையெடு
-
- 0 replies
- 931 views
-
-
கொத்துக்கொத்தாய் கொன்றொழித்தாயே... கொடுமைப்பசியில் வாட்டி வதைத்தாயே... முட்ட ஏதும் இன்றி முனுகவில்லை நாம்... முக்காளமிடுகின்றோம் கேட்கவில்லையா? வெட்டி எம்மைச் சாய்க்கும்போதும் வேலைப்பழுவிலா நீ இருகின்றாய்... சட்டங்களெல்லாம் செத்த போதிலும் சட்டைகள் மாட்டி ஏன் இருக்கின்றாய்?... ஐ.நா வே... உன் நாவை நம்பினோம்... நீயும் காறித்துப்புவாய் என்று எண்ணவே இல்லை நாம்... காத்திருக்கின்றோம்... மீண்டும் வருவாய்... எம் உறவுகளின் உயிரதனை காப்பாய் என்று... இனியும் வரத்தாமதித்தால்... எம்மை அல்ல எம் எலும்புகளை மட்டும் எடுத்துச்செல்... படிந்திருக்கும் படிமங்களை எடுத்துச்செல்... வாழும்போதே மடிந்த, மடியும்போதே படிமங்களான எம் வரலாற்றுச் சுவடுகளை எடுத்…
-
- 1 reply
- 735 views
-
-
புலம் பெயர்ந்த என் ஈழத்து நண்பர்களை இப்போது நான் சந்திப்பதில்லை அவர்களது மின்னஞ்சல்களை நான் திறப்பதில்லை கணினியின் உரையாடல் அறையில் அவர்களது வணக்கங்களுக்கு இப்போது நான் பதில் வணக்கம் சொல்வதில்லை வரலாற்றில் இதற்கு முன்பும் இது போல்தான் இருந்ததா அழிவின் மௌனங்கள்? நிறைய பார்த்தாகிவிட்டது சிதைக்கப்பட்ட உடல்களின் புகைப்படங்களை நிறைய காண்பித்தாகிவிட்டது படுகொலைகளின் படச்சுருள்களை நிறைய படித்தாகிவிட்டது கொரில்லா போர் முறையின் யுத்த தந்திரங்களை வரலாற்றில் இதற்கு முன்பும் இப்படித்தான் சொல்லப்பட்டதா விடுதலையின் கதைகள்? முப்பதாண்டுகளின் குருதிவெள்ளம் ஒவ்வொரு சதுரமைலாகச் சுருங்கி இப்போது ஒரு கண்ணீர்த்துளியாக எஞ்…
-
- 0 replies
- 797 views
-
-
மெய்வலியும் செல்நிலையும் வாழ்நாளும் தூ ஓழுக்கும் மெய்யா யளிக்கும் வெறுக்கையிலார் வையத்து பல்கிளையும்வாட பணையணைதோள் சேய்ந்திரங்க நல்லறமும் பேணாது நின்றே யார்ப்பரிக்க திரைகடலும் ஓடியங்கே தம்முயிரைப் பேண விரண்டவர்க் கெல்லாம் எங்கனம் ஆவலுண்டு கருமையின் மேனியர் எனவசைமொழி கூற கருமயிர் தன்னை நரையிராக்கி கவலையுமறந்து மேற்றிசை வாழும் வெண்ணிற மக்களுள் பற்றிய செய்கையும் பரப்பிடு கொள்கையும் கற்றிட நம்மவர் காரணி யாதெனில் மற்றவர் புகழ்ந்திட முழுதுமே தழுவி தரணியில் தமிழினம் பொய்தழிவெய்தி காரணியின்றிக் கண்ணீர்க் கோலமாய் பூரணவாழ்வு புரிந்திட்ட வகையில் தாய்த்தமிழீழம் தறுகண் மிலேச்சரால் மாய்த்திடலறியா மாற்றலர் தொழும்பராய் தாய்பிறர் கைப்பட சகிப்பவனாகி…
-
- 0 replies
- 658 views
-
-
பெருவானில் புகழோடு உலாவரும் நிலவே பெருந்துயரில் மாய்கிறோம் காப்பாற்ற வாராயோ வெள்ளியும் விண்மீனும் உனக்கு வழித்துணை வெறியரும் கயவரும் எமக்குப் பெருவினை கதிரவன் வந்ததும் உனக்கு விடுமுறை கடைசி மூச்சுவரை எமக்குண்டோ விடுதலை இருண்ட வானுக்கு நீவந்து ஒளிதந்தாய் இருண்ட எம்வாழ்வுக்கும் சற்றேனும் வழிகாட்டு பிறநாடுகளைக் கெஞ்சினோம் புறமுதுகு காட்டினர் பிறைநிலவே நீயேனும் உதவிக்கு வாராயோ வேண்டினோம் தெய்வங்களை வெறுமனே இருந்தனர் வெண்ணிலவே நீயேனும் காப்பாற்ற வாராயோ http://gkanthan.wordpress.com/index/eelam/kaappaarru/
-
- 0 replies
- 598 views
-
-
நாங்கள் பயங்கரவாதிகளல்ல பாசமும் நேசமும் உள்ளவர்கள் நாங்கள் தீவிரவாதிகளல்ல தீரமுள்ள திராவிடர்கள் நாங்கள் நாடில்லா இனமல்ல இலங்கைத்தீவின் மூத்தகுடிகள் நாங்கள் இனத்துவேசம் உள்ளவர்களல்ல இனத்துவேசம் உள்ளவர்களால் இலிவாக நடத்தப்படுபவர்கள் நாங்கள் துஷ்டர்களல்ல துரத்தித் துரத்திக் கொல்லப்படுபவர்கள் நாங்கள் பேடிகளல்ல பெண்கள் மானம் காப்பவர்கள் நாங்கள் கொலைகாரர்களல்ல கடத்திக் கொலை செய்யப்படுபவர்கள் நாங்கள் சகோதரக்கொலை செய்பவர்களல்ல களை எடுப்பவர்கள் நாங்கள் பயந்து ஓடுபவர்களல்ல பதுங்கிப் பின் பாய்பவர்கள் நாங்கள் விடுதலைப்புலிகள்.
-
- 2 replies
- 1.5k views
-
-
அங்கோ உண்ண உணவில்லை உடுக்க துணியில்லை குடிக்க நீரில்லை உறங்க வழியில்லை சுகாதார வசதியில்லை மருந்தோ மருந்துக்குமில்லை உயிருக்கோ உத்தரவாதமில்லை உதவிடவோ யாரும் முன்வரவில்லை இங்கோ அமைதியில்லை மனம் நலமாயில்லை உறக்கமில்லை உடல்நலமில்லை உலகநாடுகளிடமோ இரக்கமில்லை ஏரெடுத்துப் எம்மை பார்ப்பாரில்லை தமிழர்கள் இப்போது சுவற்றில் பந்தாக அடிக்கப்படுகிறோம் நாம் திருப்பித் தாக்கும்போது கேள்வி கேட்க இங்கே யாருக்கும் அதிகாரமில்லை எந்த அருகதையுமில்லை
-
- 4 replies
- 1.4k views
-
-
கருணை இல்லாதவனுக்குப் பெயர் கருணாநிதி பச்சைத்துரோகி கபட நாடகதாரி திராவிட முன்னேற்றக்கழகத் தலைவனில்லை அவன் திராவிட துரோகிகளின் தலைவன் இராமாயணம் தந்த நாட்டில் இராவணர்கள் மகாத்மா வாழ்ந்த நாட்டில் மாபாவிகள் பெரியார் வாழ்ந்த நாட்டில் பெரும் பூதங்கள் அண்ணா பிறந்த மண்ணில் அயோக்கியர்கள் புத்தர் பிறந்த மண்ணில் அற்பப்புளுக்கள் சேடம் இழுக்கும் வரை பதவியில் இருக்க உனக்கேன் இத்தனை ஆசை? பொய்யனே.....உன் பொய்கள் இலங்கை அரசின் பொய்களை மிஞ்சிவிட்டனவே தமிழர்கள் தினமும் சாகையிலே அங்கே போர்நிருத்தம் அமுலில் உள்ளதென்று அறிக்கை விடுகிறாய் எந்த உலகத்தில் உள்ளாய் நீ? உன் போக்கு எம் நெஞ்சில் தைக்கும் முள்ளு கண்ணை மூடிக்கொண்டு பால்குடிக்கும் க…
-
- 1 reply
- 1.3k views
-
-
சுட்டெரிக்கும் சூரியனையும் சுட்டெரித்துவிடும் எம் அடிவயிற்றுத் தீ புயற்காற்றையும் விடப் பெரியது உஷ்ணமான எம் பெருமூச்சு சமுத்திரங்களையும் சிறிதாக்கும் எம் கண்ணீரும் செந்நீரும் எம் நெஞ்சின் கொதிப்பு பூகம்பத்தின் நெருப்புக்குழம்பு கடவுளே கடவுளே என்ற எம் கதறல் மரண ஓலங்கள் நாம் விடும் சாபங்கள் இத்தனையும் காத்திருக்கு இனவெறி பிடித்தாடும் இலங்கை கொடுங்கோல் ஆட்சியாளரை தண்டிக்க; ஆனால்.......... அதற்கு எத்தனை காலமெடுக்குமோ கடவுள் நின்று கொல்லட்டும் நான் காத்திருக்கின்றேன் என் தலைவனின் பதிலுக்காய் உயிர்போன குழந்தைக்கு பாலூட்டும் ஒரு அன்னை உயிரற்ற குழந்தையை உயிருள்ள பிள்ளை போல் தோலில்போடும் ஒரு தந்தை உணவின்றி தூக்கமின்றி பதுங்குகுழிய…
-
- 1 reply
- 1.4k views
-
-
எனக்கு மறுக்கப்பட்ட சுதந்திரம்..... கவிதை - இளங்கவி...... பிறந்ததும் இருளில் சிறிதாய் வளர்ந்ததும் இருளில் கொஞ்சம் வாழ்ந்ததும் இருளில் அது அடிமை வாழ்வெனும் சிறையில்..... சின்னஞ்சிறு வயதினிலே அண்ணாந்து பார்த்திடுவேன் அழகான விமானமல்ல எமை அழிக்கவரும் விமானத்தை..... அனைவரும் பதுங்கு குளி நான் மட்டும் அதன்வெளியில் அது நான்மட்டும் அனுபவித்த சிறிதாய் நடமாடும் சுகந்திரம்.... தென்னை ஓலைமட்டை வெட்டி தெருக்களிலே பந்துகொண்டு துடுப்பாட்டம் ஆடிடுவேன் சந்தோசத்தில் மனமகிழ்வேன் ஆமியின் கெலி வருவான் கிட்டவந்து சுட்டுடுவான் ஏனென்று தெரியாது; உயிர்காக்க வீதியிலே படுத்திடுவேன் விளையாட்டு ஒத்திவைப்பு என் ரன்களெல்லாம் வீனடிப்பு; அது என…
-
- 6 replies
- 1.2k views
-
-
-
-
பாவி.................மாபாவி.........நீ மனிதனா இல்லை இராட்சதனா சூரனா இல்லை இராவணனா இடும்பனா இல்லை பெரும் பூதமா காடையனா இல்லை காட்டேரியா யாரடா நீ.......... கிராதகா........ கொலைகாரா........ இரக்கமில்லா பாதகா........... இலிவான சிறுமனத்துக்காரா இலங்கைத்தீவே கடலில் மூழ்கிவிடும் போல் உள்ளதே..... மூர்க்கனே நீ செய்யும் பாவங்களால். மகிந்த எனும் பேயே.... கிட்லரே மடிந்து போ.........நீ..... மடிந்து போ...................
-
- 0 replies
- 826 views
-
-
வீட்டுக்கு மேல் போர் விமானங்கள் பறக்க குழந்தைகளை இழுத்துக்கொண்டு நீங்கள் ஓடி ஒளியும்போது... கண்ணெதிரில் உங்கள் வீட்டுப் பெண்கள் கற்பழிக்கப்படும்போது... உங்கள் சகோதரன் சுட்டுக் கொல்லப்படும்போது... பட்டினியால் உங்கள் பெற்றோர் இறக்கும்போது... அப்போதுதான் போர் என்பது புரியும் எனில், அதுவரைக்கும் தமிழர்களே கிரிக்கெட் பாருங்கள். அடுத்த தேர்தல் வந்துவிட்டது வரிசையில் நின்று வாக்களியுங்கள். ---------------------------------------------- பயணத்தில் உங்கள் இருக்கையில் இன்னொருவர் அமர்ந்துகொண்டு எழ மறுத்தால் என்ன செய்வீர்கள்? சாலையில் உங்கள் வாகனத்தை இன்னொரு வாகனம் இடித்துவிட்டால் என்ன செய்வீர்கள்? உங்கள் குழந்தையைப் பள்ளி ஆசிரியர் காயம…
-
- 2 replies
- 1.3k views
-
-
தம்பி... சுத்தமானது என் சமாதி சத்தியமாய் சொல்கிறேன் ! ஆண்டுக்கு இரண்டு முறை தான் தம்பிகள் என் சமாதிக்கு வருவீர்கள் பிறந்த நாளில் ஒரு முறை மரித்த நாளில் மறு முறை அது என்ன ஏப்ரல் 27-ல் என் சமாதியில் இத்தனை கூட்டம் ! கடும் கூச்சல் !! ஆழ்ந்த நித்திரையில் இருந்த என்னை ' ஏன் எழுப்பினார்கள் என்பது புரியாமல் தவித்தேன். சூரிய உதயத்தை என் வாழ்வில் கண்டதில்லை ஆனால்இ அதிகாலையில் தம்பி வந்ததுமே தூக்கம் கலைந்திற்று! துக்கம் கவ்விற்று !! வந்தது என் தம்பி கருணாநிதியல்லவா? அதிகாலை என் இருப்பிடத்தைத் தேடி வந்த காரணத்தை கருணாநிதி சொன்னதும் தான் தெரிந்துகொண்டேன். இலங்கைத் தமிழர்களுக்காக என் சமாதியில் உண்ணாவிரதமாம் ! அருமை தம்பி கருணா…
-
- 1 reply
- 1.4k views
-
-
ஏதாவது செய் ஏதாவது செய் உன் சகோதரன் பைத்தியமாக்கப்படுகின்றான் உன் சகோதரி நடுத்தெருவில் கற்பிழக்கிறாள் சக்தியற்று வேடிக்கை பார்க்கிறாய் நீ ஏதாவது செய் ஏதாவது செய் கண்டிக்க வேண்டாமா. அடி உதை விரட்டிச் செல் ஊர்வலம் போ பேரணி நடத்து ஏதாவது செய் ஏதாவது செய் கூட்டம் கூட்டலாம் மக்களிடம் விளக்கலாம் அவர்கள்…. கலையுமுன் வேசியின் மக்களே எனக் கூவலாம் ஏதாவது செய் ஏதாவது செய் சக்தியற்று செய்யத்தவறினால் உன் மனம் உன்னைச் சும்மா விடாது. சரித்திரம், இக்கணம் இரண்டும் உன்னை பேடி என்றும் வீர்யமிழந்தவன் என்றும் குத்திக் காட்டும். ஆத்திரப்படு கோபப்படு கையில் கிடைத்த புல்லை எடுத்து குண்டர்கள் வயிற்றைக் கிழி உன் சகவாசிகளின் க…
-
- 0 replies
- 848 views
-
-
அங்கே பிணங்கள் விழுந்துகொண்டிருக்கின்றன; 'எத்தனை விக்கெட்டுகள் விழுந்தன?" என்று விசாரித்துக்கொண்டிருக்கிறோ
-
- 0 replies
- 839 views
-
-
சர்வதேசமே தமிழினம் செய்த தவறு என்ன? உங்கள் தண்டனைக் கோவைகளையெல்லாம் தட்டிப்பார்த்து தமிழினத்தை தனிமைப்படுத்துவதற்கு தடயம் தேடிக்கொண்டிருப்பதற்கு. தமிழினம் அழியுதென்று தக்க இடம் கொடுத்து தமிழ் மண்ணின் கொடுமைகளை தாராளமாய் அறிந்துகொண்டும் தயங்குவதேனோ தடைகளை உடைப்பதற்கு. வெழிநாட்டார் எவரையும் வெறுப்பாகப் பார்க்கவில்லை உலக மக்களுக்கு ஊறேதும் செய்ததில்லை அயல் நாட்டவரை அச்சுறுத்தி நடக்கவில்லை அல் கைதாபோல் அடுக்குமாடி தகர்க்கல்லை விடுதலை என்று சொல்லி வெளி நாட்டார் விமானத்தை கடத்தவில்லை. வீணே எதற்கு இந்த விழியறியா விமர்சனங்கள். உண்மை நிலை அறிந்தும் ஊமையாய் இருப்பதேனோ மனித நேயத்தின் மாண்பர்கள் நீங்கள் மயங்…
-
- 0 replies
- 511 views
-
-
தமிழனாய் பிறந்ததனால் தவிக்கின்றோம் பாரினிலிலே தடைநீக்கித் தழிழனுக்கு தரணியிலே – ஒரு தனியரசு வேண்டும். கழிகின்ற ஒரு கணமும் அழிகின்றான் ஒரு தமிழன் இருக்கின்ற இனம் வாழ எமக்கு ஒரு அரசு வேண்டும் பிறக்கின்ற குழந்தைக்கு பெயர் சூட்டத் தந்தை இல்லை பெற்றெடுத்த தாயும் பிணமாகக் கிடக்கின்றாள் பிரசவ வலிதீர்க்க மருத்துவம் எமக்கில்லை துடிக்கின்ற குழந்தைக்கு துயர்; துடைக்கும் ஆச்சிரமம் ஆகாயத் தாக்குதலில் அழிவுற்றுக் கிடக்கிறது நலிவுற்ற எம் மக்கள் நல்வாழ்வுதனைக் காண நல்லரசு ஒன்று நமக்கு வேண்டும். பரம்பரை பரம்பரையாய் பண்டுதொட்டு வாழ்ந்த மண்ணை பாதகச் சிங்களவன் பறித்து எம்மை அகதியாக்கி புதைக்கின்றான் புத்தர் சிலை பூர்வீ…
-
- 0 replies
- 713 views
-