கவிதைப் பூங்காடு
கவிதைகள் | பாடல் வரிகள்
கவிதைப் பூங்காடு பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் கவிதைகள், கவிதை மொழியாக்கம், உலகக் கவிதை, பாடல் வரிகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் கவிதைகள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனைய கவிதைகள் தரமான கவிதைகளை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
5128 topics in this forum
-
மகிந்தா ஆட்சிக்கு மரணம்... அழிவின் நிலையில் படைகளே அதனால் உதட்டில் பொய்களே எத்தனை காலம் பொளிந்திடுவீர்-உமை எள்ளி நகை தமிழ் ஆடிடுவார்... காலம் இன்னும் கடக்கவில்லை கரிகாலன் படைகள் தோற்கவில்லை பொறியினுள் வீழந்தார் பகையினரே- இனி பொறிதட்டி நீரும் கொளுத்திடுவீர்... இல்லை புலியென்றா முழங்குகின்றீர் இன்னலில் வீழந்தே கசங்கிடுவீர் காட்சிக்கு வந்த கந்தகங்கள் கரிகாலன் படையது தந்ததுவோ...?? கோமாளி கூட்டத்து கோதபாயா- நீ கொளுத்தியெறிந்த பொய்யிதுவோ...? எம்தமிழ் இதையின்று நம்பவன்றோ..? எம்மிடை பந்தாய் எறிந்தாயின்றோ..? ஆணையிறவினில் தந்ததுவை ஜயா நீரும் மறந்தீரோ...?? அலரிமாளிகை அலருமினி அடியதை கண்டுனி பதறுமினி குந்திட பங்கரை தேடுவாரே…
-
- 7 replies
- 1.3k views
-
-
உரிமைக்குரல் பாடல் ஒளி வடிவில் Click http://www.alaikal.com/video
-
- 4 replies
- 1.9k views
-
-
ஏழையவன் பசியால் துடிக்க சீபோவென துறத்தி விட்டு துடிக்கம் ஏழை தனை ரசித்துக்கொண்டு கற்பனையுருவத்திற்கு பக்தியென்னும் உயிர் கொடுத்து தன் மனக்கல்லில் பதித்தான் மூடநம்பிக்கை பயத்தை பக்தியென்று.. புரணங்கள் புதைத்து அன்பை சிதைத்து ஆடம்பர வாழ்வை கடவுளுக்காய் கொடுத்து பக்தியென்னும் உச்சம் சொல்ல ஏழையவன் சிரிந்தான் படைத்தவன் தத்துவம் என்னிடத்தில் தீண்டாத ஜென்மங்களாய் நானிருக்க எத்தனை எத்தனை கற்பனைகள் இவ்வுலகில் கடவுளக்காய்....
-
- 11 replies
- 1.9k views
-
-
இது எங்கள் தாயகத்தைவிட்டு வெளிநாடு செல்ல ஏஐன்சிக்காரரிடம் காத்திருந்து, பின் ஏமாந்து போனவர்களுக்காகவும், இன்னும் வெளிநாடு வரமுடியாது. இலங்கை முழுவதும் அலைந்து, மனம் உடைந்து திரியும் உறவுகளுக்காக... என்ன? யாழ்கள உறவுகளே உங்களில்கூட எத்தனை பேர் இப்படிக் கஸ்டப்பட்டு வெளிநாடு வந்திருப்பீர்கள். அந்தக் காலத்தை கொஞ்சம் எண்ணிப் பாருங்கள் கண்களில் கண்ணீர் வழியலாம்.. உங்கள் மனதை தலாட்ட இப்பாடல் காதல் மொழி இறுவட்டில் இருந்து வரும் ஐந்தாவது பாடல்...கேட்டு மகிழுங்கள். http://vaseeharan.blogspot.com/ -please click here to listen... கருத்தைச் சொல்லுங்கள். பல்லவி ஏஐன்சிக்காரன் ஏமாத்திட்டான்- என் கதிர்காம முருகன் காப்பாத்திட்டான் அப்பாவின் காசு காற்றோடு போச்சு …
-
- 24 replies
- 3.5k views
-
-
-
கனவும் நினைவும் உன்னால் கனத்து காலமும் நேரமும் போகிறதே உணவும் ஊனும் உந்தன் போக்கை தினமும் நினைத்து வேகிறதே! அடுத்து உன்னில் என்ன மாற்றம் என்ற எண்ணம் என்னுள்ளே தடுக்க முடியாப் பெரும் புயலாக இறுக்கி இழுக்குது தன்னுள்ளே! பொய்கையும் நீயாய் புழுக்கமும் நீயாய் வண்ணம் மாற்றி விரிந்தாயே - என் பொழுதும் நீயாய் கொள்கையும் நீயாய் எண்ணம் முழுதும் பரந்தாயே! செய்தியும் அறியேன் முயற்சியும் நாடேன் மெய்யாய் உன்னில் விழுந்தேனே கைதியும் ஆனேன்நீ சிறையும் ஆனாய் மெய்யும் உருக அமிழ்ந்தேனே! நாளை எப்படி நீவருவாய் என நினைத்து நினைத்து பதைத்தேனே காலை மாலை என வந்தாலும் காலம் நீயென துடித்தேனே! வாரா வாரம் தொடர்ந்து என்னை …
-
- 16 replies
- 2.4k views
-
-
கூந்தல் நீளம் கொண்டமங்கை - என்னை கா(த்)தல் செய்ய வைத்தாள். காத்து காத்து நின்ற எந்தன் காலம் திருடிக் கொண்டாள் . தொலைவில் இல்லை வானம் என்றே தூரம் நடக்க வைத்தாள். தூரம் நடந்து முடித்த பின்னால் - துன்பப் பாரம் சுமக்க வைத்தாள் . வாழும் வாழ்வில் இனிமையேது வாதம் முடியவில்லை . வாதம் முடிவை அடையும்போது வாழ்வு இருப்பதில்லை. கனவில் தோன்றும் முகங்கள் பழைய நினைவை எனக்குள் தேடும். எனக்குள் தோன்றும் நினைவி லென்ன சுவைகள் இருக்கக் கூடும். பாலை நிலத்து நீரிலெங்கே பாசி முளைக்கக் கூடும். - நான் பார்த்த பெண்ணின் மனதிலென்று பாசம் தோன்றக் கூடும். பள்ளி வாழ்வில் நடந்ததெல்லாம் பழைய கதைகள் ஆச்சு. புதிய வாழ்வை தேட நானும் பாதை தேடல் ஆச…
-
- 2 replies
- 1.2k views
-
-
உதிக்கையிலே மெல்லெனச்சிரித்தது உச்சியிலே சுள்ளென முறைக்கும் சாய்ந்தாடும் மரஞ்செடியும் சலனமின்றி விறைக்கும். ஊரெல்லாம் புழுங்கும் உடல்களெல்லாம் வியர்வை வெள்ளம்விழுங்கும். அடர்மர முற்றமதில் சுற்றமொன்றாய்க்கூடும் சிறுசுகளும் பெருசுகளும் விசிறிகொண்டு வீசும் நாசியிலே புழுதிமணம் புதுச்சேதி ஒன்றுபேசும். காய்ந்த புல்லை மேய்ந்தபசு தாகசாந்தி தேடும் நட்டுவைத்த பயிர்களெல்லாம் தலைகுனிந்தே வாடும். வாய்பிளந்த பூமியது நீலவானை நோக்கும் பொறுமையன்றோ உனது பண்பு என்று வானம் கேட்கும். தூரவான இடியோசை காற்றின் சிறை உடைக்கும் சில்லென்றதென்றல் வந்து புதிய யுகம்…
-
- 3 replies
- 1.2k views
-
-
கடவுள்மார் எல்லோரும் பம்மல் கே சம்பந்தம் படம் பார்த்த பின் ஒன்றுகூடி பதிலாக இதை மணிவாசகனிடம் கொடுக்கும் படி என்னிடம் அனுப்பி வைத்தார்கள்........ எல்லாம் தெரிந்தவன் வல்லவன் செய்பவன் என்றது நானா அல்லது நீயா :?: அநியாயகாரனை உருவாக்கியது நானா அல்லது நீயா :?: என்னை பாரென்று சொன்னது நானா அல்லது நீயா :?: என்னுடன் பிரியமா இரு என்றது நானா அல்லது நீயா :?: மனிதராக பக்குவபடாதற்கு காரணம் நானா அல்லது நீயா :?: நடுநிலை தவறியதற்கு காரணம் நானா அல்லது நீயா :?: எல்லாம் கொடுத்தது பறித்தெடுத்தது நானா அல்லது நீயா :?: மனசடங்கை பணசடங்காக்கியது நானா அல்லது நீயா :?: எனக்கு கோபுரம் கட்டி குண்டு போட சொன்னது நானா அல்லது நீயா :?: தர்மாகர்த்தாவை உண்டாக்…
-
- 10 replies
- 1.6k views
-
-
உறவு உணர்வுகளை புரிந்துகொள்ளும் உன்னதமான மொழி இது பிறப்பு முதலாக நட்பு முடிவாக பல பரிமாணம் கொண்ட பன்முகக் கண்ணாடி இது தாயுடன் சேய் கொண்ட உறவும் உள்ளத்துடன் நீ கொண்ட உறவும் உயிருடன் உடல் கொண்ட உறவும் இயற்கையின் படைப்பினில் இமயமாய் நிற்பவை ஆனால் இன்று இயற்கையுடனான உறவு இயந்திரமானது இயந்திரதுடன் உறவு இயல்பானது மனிதனுடனான உறவு மறந்து போனது மனிதம் இங்கே மரத்துப்போனது உலகம் சுருங்கலாம் ஆனால் உறவுகள்??? உழைப்பின் உதவியை நாடினால் வாழ்வின் வாசல் வசப்படும் உறவுப் பூவை முகர்ந்தால் வாழ்வின் வாசம் புலப்படும் மானிடா..... உறவுகள் வாழ்வின் வேர்கள் உலகுடன் நீ கொண்ட உறவு முதல் மண்ணுடன் நீ கொண்ட உறவ…
-
- 3 replies
- 6.2k views
-
-
-
பதில் சொல்... காரணம் சொல்ல முடியவில்லையா உன்னால் என்ன இது புது புதிர் போடுகின்றாய்... வேணும் என்று நினைத்த உன் மனம் வேணாம் என்று நினைத்த உன் மனம் நாம் இனி நண்பர்களாய் இருப்போம் என்று நினைத்த உன் மனம் இதேல்லாம் செய்ததும் உன் மனம் ஆனால் இப்போது எதோ சிறுபிள்ளை போல் உனக்கு காரணம் தெரியவில்லை என்று சொல்கிறாயே இது நியாயமா??? உன்னை சொல்லடா என்று அதட்டவில்லை சொல்லாட்டி கதைக்க மாட்டன் என்று சாவால் விடவும் இல்லை சந்திப்புகள் தற்செயலானவை பிரிவுகள் தவிர்க்க முடியாதவை இவை எல்லாம் என் வாழ்வில் நான் அனுபவிக்கும் துன்பங்கள் இதை நான் அனுபவிக்கும் முதல் கட்டதையும் நெருங்கிவிட்டேன் இருந்தும் உன்னிடம் பிரியும் முன் வேண்டுகோள் …
-
- 6 replies
- 1.4k views
-
-
சில நேரம்... சில நேரங்களில் சில அழகான விசயங்கள் நம்மை கேக்காமலே நம் கண்முன் நிக்கலாம் மாலை நேர மழை துளிகள் ஏழை குழந்தையின் வெள்ளை சிரிப்பு அழகான நாய்க்குட்டி... இயற்கை எப்போதுமே அர்த்தம் நிறைந்தது சில சம்யங்களில் நண்பர்களும் அப்படியே அமையலாம்...
-
- 2 replies
- 1.1k views
-
-
மறக்க முயல்கிறேன் உன்னை மறக்க முயல்கிறேன் முடியவில்லை உன்னை வெறுக்க முயல்கிறேன் முடியவில்லை என்னை அறியாமலே உன்னை நான் விரும்புகிறேன் என்னை அறியாமலே நான் உன்னை காதலிகின்றேன் என் மந்தில் உன்னை கோவிலாக நினைத்து இருந்தேன் என் மனம் சில பொழுதுகளில் அழுகின்ற வேளையில் உள்ளிருக்கும் நீ நனைவாய் என்ற தயக்கம் வேறு அதனால் உள்ளத்தால் பொய் சிரிப்பு சிரிக்க முடியாத போதும் கற்றுக்கொண்டேன் இதற்க்கு மேல் என்னிடம் உனக்காக பொய்யாக்க என்னிடம் எதுவுமில்லையடா இதற்க்குமேல் நான் நானாக இல்லை இனியும் கொடுக்க இருப்பதெல்லாம் ஒன்றே ஒன்று தான்... என் உயிர் தான் அது கூட உனதாகி பலகாலாமே...
-
- 7 replies
- 1.7k views
-
-
03.04.2002 அன்று யாழ் இணையத்தின் முன்னைய களத்தில் எழுதிய கவிதை காலத்தின் தேவை கருதி இங்கு இன்று அடக்கியாண்ட சிங்களமே அடங்கிப் போய்விடு பதுங்கியிருந்த புலி இப்ப பாயத் தொடங்கி விட்டது... இருண்டுகிடந்த எம்மண்ணில் வெளிச்சம் வந்துவிட்டது.. மறைத்துவைத்த சூரியனை வெளிக் கொணர்ந்து விட்டோம்.. கருவறைக்குள் வஞ்சம் கொண்டு எம்மை கல்லறைவரை சென்று அழித்தாய்... எம்மினம் கல்லறையென்ன உன்தன் கருவறை புகுந்தே அழித்துவிடும்.. படித்துவிட்டான் தமிழன் உன்தன் நாசகார பாச வேலைகளை... கூலிப்படை கொண்டே எம்மை கொடூரமாக கொண்றாய்.. தன் மூளையை கொண்டே உன்னை இன்று புலி அடிபணிய வைத்துவிட்டது.. தலைவன் பிறந்த மண் இது... இங்கு ஒரு தளிர் வாட விட…
-
- 1 reply
- 749 views
-
-
தமிழா தமிழா திருந்திக் கொள்ளடா... உன்னைத் திருத்திக் கொள்ளடா.. அடுத்தவனை அழித்து வாழ்ந்த உன்தன் இரக்கமற்ற பேய்க்குணத்தினை நீயும் மாற்றிக் கொள்ளடா... விடிந்திடும் பொழுதினில் மலர்ந்திடும் ஈழத்தில் நீயம் மனிதனாகடா... உன் இனத்தையே அழிக்கும் உன் குதர்க்க குணத்தினை நீயும் விலக்கிக் கொள்ளடா... உன் முதுகினில் தேக்கிடும் அழுக்கினை நீயும் கழுவிக்; கொள்ளடா.. உலகம் விழித்துக் கொள்ளுமடா... இல்லையேல் இப்பூமி கருகிப் போகுமடா... தமிழா திருந்தப் பார்.....
-
- 1 reply
- 920 views
-
-
என் நிலை... ஆயிரம் கனவுகள் என்னுள் ஆயிரம் ஆசைகள் என்னுள் ஆயிரம் எதிர்பார்ப்புகள் என்னுள் ஆயிரம் வேதனைகள் இவைகளால் கனவுகள் பல கண்டேன் என்னவனை அடைவதற்கு கனவுகள் நிஜங்களாகமலே போய்விட்டன...கனவாகவே என்னவனுடன் வாழ ஆசை அதுவும் நிராசையாகவே போய்விட்டது....ஆசைகள் என்னவனுடனான எதிர்காலம் பற்றி எதிர்பார்ப்புகள் வைத்திருந்தேன் அவையும்...எதிர்பார்ப்புகள் ஏமாற்றத்தை தருமாயின் அந்த ஏமாற்றத்தை எதிர்பார்க்க கூடாது என்று அவையும் ஏமாற்றங்களாகின இவை அனைத்துக்கும் பதிலாக என்னவன் எனக்கு வேதனை துன்பம்....தூக்கமின்மை... உண்விருந்தும் உண்ணா நிலை இப்படி பலதை பரிசாக தந்து சென்று விட்டான் பல தூரம்...
-
- 4 replies
- 1.2k views
-
-
மறக்க முடியவில்லை என்பது தான் மறுக்க முடியாத உண்மை... காற்றிலும் கண்ணீரிலும் தேடுகிறேன் உன்னை உன் நினைவுகள் கொல்கின்றன... உன்னுடன் கழித்த அந்த நாட்கள் நகைக்கின்றன மறக்க மறுகிறது மனம் உறங்க மறுக்கிறது விழிகள் சிரிப்பென்பது என்னவென்றே தெரியாமல் போய்விட்டது... இப்போதெல்லாம் என் இரவுகள் கனவுகளில் அல்ல கண்ணீரில் நிறைகின்றன... நினைத்த போதெல்லாம் வந்தாய் அன்று நினைத்துக்கொண்டே இருக்கிறேன் என்றாவது ஒரு நாள் வருவாய் என்று நிச்சயம் நீ வருவாய் என் இதயம் கலங்குவது தாங்காமால் நீ வருவாய் எல்லா நிராசைகள் போலவே இதுவும் ஒரு நிராசை இருந்தும் நினைத்திருபேன் நீ வருவாய் என இவையனைத்தும் நடக்காவிடின் நான் இறைவனிடம்…
-
- 16 replies
- 2.4k views
-
-
ஏமாற மாட்டேன் வேணாண்டா...வேணாண்டா.... உன்தன் ..ஆசை வார்த்தை......வேணாண்டா...... பாச...மொழி பேசி வந்து எனை பாவியாக்க..வேணாண்டா.... காதல் மொழி பேசி வந்து என்தன் கற்பை பறிக்க வேணாண்டா... உன்தன ஆசை கிளி என்று எனை அசிங்க படுத்த வேணாண்டா.... நல்ல மனம் நீங்க என்று நாடகம் ஆட வேணாண்டா..... இரவல் போகும் இதயம் உந்தன் இழிவுக் காதல் வேணாண்டா.......... பாசம் வைச்சு உன்னில் நானும் பைத்தியமாய் அலைய மாட்டேண்டா.... ஜய்யோ ராசா வேணாண்டா...... உந்தன் மோக காதல் வேணாண்டா..... சத்தியமாய் நீ வேணாண்டா......உந்தன் சாக்கடை காதல் வேணாண்டா..... உந்தன் போலி வாக்குறதியில் மயங்கி நானும்..... எந்தன் வாழ்வை தொலைக்க மாட்டேண்டா....... மொ…
-
- 8 replies
- 1.5k views
-
-
விடைபெறும்வேளை விடைபெறும்வேளை நெருங்கிவிட்டதா எமக்கு என் கண்ணீர் உன் கண்களில் உன் கண்ணீர் என் கண்களில் இடம் மாறப்போகின்றோம் இதயங்கள் பரிமாறாமலே இப்படி இதய தேசத்தில் உன் நினைவுகள் நிறைய இருந்தாலும் எல்லாம் சொல்லபோவதில்லை உனக்கு இக் கவிதை இதுபோல இக் கவிதை சுமக்காத பல நிகழ்வுகள் உன்னுள்ளும்.......... என்னுள்ளும்........... என்ன தான் நான் எழுத உனக்கு என்னையே எழுதி கொடுக்க நினைத்த பின் எனக்கு உன்னிடம் இருந்து நினைவு பரிசு எதற்கு உன் நினவுகளே நீ எனக்கு தந்திருக்கும் பரிசு தானே பிரிவதற்கு துடிக்கும் உன்னை விட எனகென்றும் நிரந்தரம் பிரியமான உன் பிரியாத நினைவுகளே அன்பே சேர்ந்திருந்த பல பொழுதுகளில் ந…
-
- 48 replies
- 6.4k views
-
-
நிரந்தரமற்ற கனவுகளை நினைவில் சுமந்து வாழ்ந்தேன் இன்று என் விழிகளில் நீ சுமக்க வைத்தது கண்ணீரைத் தானே... பசுமையான என் வாழ்வில் வந்து பாசத்தைக் காட்டி வேசம் போட்டாய்.. என் பாசங்களை வெறுத்தேன் பொங்கி வந்த ஆசைகளைப் பொசுக்கிப் போட்டாய்.. சில நாட்களில் பழகி தொடர் நாட்களில் விலகி விட்டாய்.. உன் வரவுக்காய் ஏங்கிய என் விழிகள்-இன்று உன் கனவுக்காய் ஏங்குகின்றன... காவியத்தின் நாயகனாய் உனைக் கண்டேன் காதல் காவியத்தைத் தேர்ந்தெடுத்தேன் கற்பதற்கு.. ஆரம்பம் சுவையாய் இனித்ததால் காவியத்தக்காய் என்னை அற்பணித்தேன்.. இந்த உலகத்தையே காவிய நாயகனாய் நினைத்தேன்.. பசியை மறந்தேன்.. படுக்கையை இழந்தேன் கண் உறங்காமல் …
-
- 6 replies
- 1.6k views
-
-
இதயதின் வலிக்கு ஆறுதல் தருவது இணையத்தளம் சரிதானே??? நாம் சந்தித்ததும் அங்கு தானே என்றும் போல நீயும் உலவாவந்திருப்பாய் நானும் அதே வளமை போலவே வந்தேன் நினைத்திருப்போமா நீயும் நானும் இணையத்தினாலே இணைவோம் என்று எத்தனை சண்டைகள் சச்சரவுகள் வந்தாலும் இறக்கவில்லியேடா நம் உறவு வியக்கின்றேன் நீ பலமுறை எழுதி இருக்கின்றாயேயடா பிரிவு என்பது உறவுக்காகா தானே என்று சந்தித்தபோது சாதாரணமாய் தோன்றினாய் பத்தும் பலதும் பேசி மகிழ்ந்தோம் நண்பர்களாய் இன்று நீ இன்றி வேறில்லை என்று நினைக்கும் அளவுக்கு என்னில் நீ ஊறிவிட்டாயடா இதனால் நீ என்னவனும் ஆனாயடா... இன்று நமக்குள் இருக்கும் உறவுக்கு பெயர் என்ன என்று நீ சொல்லுவாயா சொல் என்னவனே காலம் தன் வேகத…
-
- 14 replies
- 1.7k views
-
-
உன்னை கேட்காமல் உன்னைபற்றி நிறையவே கனவுகள் கண்டுவிட்டேன் நீ எனக்காக படைக்க பட்டவன் என்று தப்பு கணக்கு போட்டுவிட்டேன் கடலென நினைத்தேன் நீயோ கானல் நீராய்.. சிரிப்பினில் இனிய சோகம் வைத்தாய் மறக்க முடியவில்லை அந்த நாட்களை மறக்க முடியுமா ? மறைக்க தான் முடியுமா? காலம் பதில் சொல்லும்... கனவுகள் வெறும் கனவுகளாகவே.. போதுமடா நம் உறவு.. வார்த்தையிலே தோழன் என்று கூறிவிட்டு உன்னுடன் பேசும்போதெல்லாம் உன்னை தொலைத்த வேதனையில் நான் வாட தயாராய் இல்லை.. சோகத்தை தணிக்க , எனக்கு ஏதும் வழி தெரியவில்லை கண்ணீரை தவிர... பாவியடா நான்... எப்படி தனிமையில் அவற்றை தணிப்பேன் உன்னை மறந்து விட்டதாக நண்பர்களிடம் கூறினாலும் உன்னை பிரி…
-
- 15 replies
- 8.1k views
-
-
யாழ் இணைய நண்பர்களுக்கு... கவலைகள் சுமக்கும் கவிகளே கண்ணீர் நிறைந்த கண்களை திறந்து கண்ணென்று தெரியும் உங்கள் உள்ளத்தை பாருங்கள் நீங்கள் சில நொடி வாழும் வீட்டில் பூச்சியும் வீறு கொண்டு வாழும் போது நல் வழி உண்டு நீங்களும் வாழ மனபலம் எனும் வாளை எடுங்கள் தடுக்கும் பாறைகளை வெட்டியெறியுங்கள் நடுக்கடலில் விழுந்தாலும் மூச்சுள்ள வரை நீந்தப் பழகுங்கள் இருட்டில் ஓவியம் வரைவதை நிறுத்துங்கள் வெளிச்சத்தில் கோடு போட பழகிக்கொள்ளுங்கள் கோடுகள் ஏணிகள் ஆகட்டும்... ஏணிகளில் உங்கள் பயணம் தொடங்கட்டும் மனதை விரிவாக்குங்கள் விண் மீனை தொட முயற்சி செய்யுங்கள் தோல்வி என்பதும் ஒருவகை பலம் தான் இறுதி வரை போராடுபவர்களுக்கு...
-
- 16 replies
- 2.2k views
-
-
இழந்தேன் என்னவனை என் நெஞ்சில் நிறைந்தவனே என்றோ ஒரு நாள் எனைத் தேடி வருவாயென ஏங்கியே காத்திருந்தேன் கண்ணில் நீருடன் கவிகள் பல வரைந்தேனடா உனக்காக. என் மனதை உன்னிடத்தில் பறி கொடுத்தேன் இரவு பகல் கண் விழித்துத் தவித்திருந்தேன் என்னவனே நீ வருவாயென ஆனால் காதில் வந்து கேட்டதடா ஒரு செய்தி உனக்கு கல்யாணம் என்று உடைந்ததடா என் இதயம் இருண்டதடா என் வாழ்வும் என் வாழ்வின் வெளிச்ச விளக்காய் உனை நினைத்தேன் இருண்ட வாழ்வை ஏனடா எனக்களித்தாய் என் இனியவனே ஏனோ உனக்கிந்த இரக்கமற்ற இதயமடா இனியவனே உனை இழக்க என் மனதில் சக்தியில்லை இருப்பாய் நீ என்றைக்குமே என் இதயமெனும் கோயிலிலே!!!
-
- 13 replies
- 2k views
-