கவிதைப் பூங்காடு
கவிதைகள் | பாடல் வரிகள்
கவிதைப் பூங்காடு பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் கவிதைகள், கவிதை மொழியாக்கம், உலகக் கவிதை, பாடல் வரிகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் கவிதைகள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனைய கவிதைகள் தரமான கவிதைகளை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
5128 topics in this forum
-
பத்து மாதம் சுமந்தவளே எனை பாலூட்டி வளர்த்தவளே கண்ணின் இமையாய் காத்தவளே கற்றவனாக்க பெரிதும் முயன்றவளே நோயின்றி வளர்ப்பதற்காய் நோயாளி ஆனவளே அம்மா ஆனாலும் உனை வெறுக்கின்றேன். பாசத்தையும் நேசத்தையும் ஊட்டியவளே தவறுசெய்துவிட்டாய் என்னம்மா வீரம்மில்லாத கோழையாய் நான் நண்பர்கள் மாவீரர்களாய் போராளிகளாய். நான் மட்டும் முகமிழந்து அந்நிய நாட்டில் ஆனாலும் சற்று ஆறுதல் அதற்காக போற்றுகின்றேன். தாய்பாலுடன் துரோகத்தையும் ஊட்டவில்லை. என் கருத்துக்களாவது விடுதலைக்காய் தாயே அதற்காக போற்றுகின்றேன் நன்றியம்மா
-
- 9 replies
- 1.8k views
-
-
நினவுகளில்... என் அன்பே ஏனோ நான் இன்னமும் உன் நினைவுடனே நீ தான் சொல்லி விட்டாயே நாம் இனிமேல் நண்பர்கள் என்று என்னால் ஏனோ இதனை ஜீரணிக்க முடியவில்லை என்ன நான் செய்வேன் உந்தனை மறக்க நீயே எனக்கு ஏதும் வழி சொல் உன்னில் நான் நிஜமான உள்ளம் இழந்தேன்...இதை நான் திருப்பி பெற்றுகொள்ள விரும்பவில்லை நீயோ எடுத்து செல் என்று கூறி பல காலம் ஆகி விட்டது முடியாது அன்பே என்னால் அது என்றுமே முடியாது அன்பே எப்படி நான் வாழ்வேன் உந்தன் அன்பு அது என்னில் இல்லை என்றால் பதில் ஏதும் கூறு அன்பே என்னவனாய் நீ வர மாட்டாயா...???
-
- 7 replies
- 1.2k views
-
-
அம்மா அம்மா நீதான் எந்தன் உயிரம்மா..... கருவை உயிராக்கி சுமையை இதமாக்கி வலியை சுகமாக்கி உதிரத்தைப் பாலாக்கி அன்பை உணர்வாக்கி மொழியைத் தமிழ்ழாக்கி என்னை உருவாக்கி உன்னை மெழுகாக்கி என்னை ஒளியாக்கிய என் அன்புத்தாயே_________________
-
- 18 replies
- 2.3k views
-
-
-
- 1 reply
- 1.4k views
-
-
காதலே நீ எனக்கு... காதலே எனக்கு நீ முதலாவது இறைவன்.. இரண்டாவது சுூரியன்... மூன்றாவது பால்... நான்காவது மூர்த்தி.. ஐந்தாவது முத்தி... ஆறாவது புலன்.. ஏழாவது தரிசனம்.. எட்டாவது கிழமை... ஒன்பதாவது நமஸ்காரம்.. பத்தாவது கிரகம்.. பதினோரவது அவதாரம்.. பதின்மூன்றாவது மாதம்.. பதினேழாவது பேறு.. இருபத்திஐந்தாhவது மணி.. அறுபத்தியோராம் நிமிடம்.. அறுபத்தியேழாம் கலை.. ஆயிரத்தோராங்காலத்துப்பயிர்..
-
- 13 replies
- 2.2k views
-
-
நிலாமுற்றம் பால்பொங்கும் மணலின் மேல் நம் நீண்ட இரவுகள்.. மாமரக்கிளையின் காற்றும்.. வேப்பிலை சலசலப்புக்களும்..... பாட்டி கதையும்... அம்மாவின் குழையல் சோறும்... நிலாவை முகில் மறைக்கும் நேரம்.. தங்கையை.. நான்.. வெருட்ட அவள் அழுவதும்... மீண்டும் நிலாக் கண்டு எல்லோரும் சிரிப்பதும்.. சுருட்டோடு கடக்கும்.. அப்பாவுக்காக மட்டும்.. ஒலி தாழ்ந்து இறங்கும் அரட்டையும்.... பாட்டி மடியில் தலையும்.. அம்மா மடியில் கால்களும்.. ஜொலிக்கும் மின்மினிகள்.... வியந்த வியந்து எண்ணுவதும்.... எல்லோரும் ஒன்றாய் மீண்டும் அந்த நிலாமுற்றம் என் வாழ்வில் வருமா..... எப்படி வரும்....? மெய் தொலைத்த அப்பா பாட்டி... மணமாகி... …
-
- 32 replies
- 5k views
-
-
கிடைக்குமா உன் நிஜங்கள் உதிராது என்றுமே மலர்ந்திருக்கும் அழகிய ரோஜாக்கள் போல் என்றுமேயான உன் நினைவுகள் மீண்டும் மீண்டும் நான் தான் உணர்கிறேன் உன் பிரசன்னத்தை என் உள்ளத்திலே இன்று நீ என்னிடம் இல்லாதிருப்பினும் உன் காதலில் எச்சசொச்சங்கள் என்னில்... என் உள்ளத்தைக் கொத்திக்காயப்படுத்தி கடித்து முறித்துச் சுவைத்து பார்த்த நீ பறந்து சென்றுவிட்டாய்... உன் எண்ணங்களின் நிழல்கள் தாங்கி நான் இன்று உன் நிஜத்தினை தேடிக்கொண்டிருக்கின்றேன் கிடைக்குமா எனக்கான உன் நிஜங்கள்....
-
- 5 replies
- 1.2k views
-
-
இது துக்கமான விடயமல்ல என்றாலும் அறிந்திடுங்கள்... செம்மனி சுடலை என்றால் பேய்களும் வெருண்டிடும்... பக்கதிலேயே ஒட்டிக்கொண்டு சித்துபாத்தி சுடலை வேறு... யாழ்வரவில் பங்கர் வெட்டி தூங்குவதெல்லாம் செம்மனிக்குள்ளதான்... பார்சலில சோறு வரும் சாப்பிடுவதும் செம்மனிக்குள்ளதான்... பாடசாலை விட்ட பிறகு விளையாடுவதும் செம்மனிக்குள்ளதான்... காணாமல் போன எனது நண்பன் சேரன் உறங்குவதும் செம்மனிக்குள்ளதான்... நான் இந்திய ஆமியிடம் வாங்கிய அடி அதுவும் இந்த செம்மனிக்குள்ளதான்... நண்பா நீ உறங்கும் சுடுகாடு இப்போ சுடுகாடு இல்லையடா... ஈழமே சுடுகாடாகி நாள் ரொம்ப ஆச்சுதுடா... விடுதலைக்கான தேதி இன்னமும் கிடைக்கவில்லை... வீண்கதை பேசும் கூட்டமு…
-
- 11 replies
- 1.9k views
-
-
வானை தொட்டு விடத் துடிக்கும் தென்னை மரங்கள் தென்னையுடன் போட்டியாக பனைமரங்கள் குச்சொழுங்கையை எட்டிப் பார்க்கும் வேப்ப மரங்கள் குச்சொழுங்கையின் இரு மருங்கும் கோலம் இடும் அறுகம் புற்கள் மெல்லத் தடவி வரும் இளம் தென்றலுக்கு நாணி அசைந்தாடும் கோரைப் புற்கள் மொத்ததில் பச்சை சேலை உடுத்த அழகு தேவதை எமது ஈழம் இன்று மெல்ல மெல்ல வனப்பு.. இழந்து சுடுகாடு ஆகிறது! துளசி
-
- 12 replies
- 2.1k views
-
-
ஜீவனே வா..! உயிரதில் ஒளிந்து கிடக்கிறான்.. எந்தன் உறக்கத்தை கொன்று தொலைக்கிறான்... எனை கைப்பிடிக்க பிறந்த கண்ணன்-அவன் கமலம் போல் நிறம் கொண்ட கள்ளன்! என் மனசின் ஓசை அறிவானோ? தன் மனசில் சிறை ஒன்று தருவானோ? உதிரமாய் என்னுள் வருவானோ? தன் உயிரினில் பாதி தருவானோ? தவமிருக்கும் நந்தவனமென்றானேன் நீ தந்துவிடு உன்னை.... மழை சலவை செய்த மல்லிகை மொட்டு என்றாவேன்... ஜீவனே வா.... என் உயிரை முழுதாய் எனக்கு திருப்பி தா...!
-
- 42 replies
- 6k views
-
-
கண்ணீர் அஞ்சலி.....( எண்ணமதில் கற்பனைகள் எத்தனையோ தான் சுமந்து... பள்ளியறை மீதினிலே வெண் புறவாய் பறந்தவளை.... வானேறி வந்து ஏனோ மா பாவிகளை ஏன் வதைத்தீர்;....??? என் செய்தாள் என்றென்னி அவள் உடலை நீர் கிழித்தீர்....??? உணர்விழந்து உடல் நலிந்து உணர்வற்று கிடைக்கையிலே.... உயிர்காக்க வேண்டியவள் இடமாறி வருகையிலே... இரக்கம் இன்றி ஏன் வதை;து ஏனோ பகையே நீ கொன்றாய்....??? உயிர் குடிக்க அலைகின்ற இன வெறி மகிந்தாவே ஏனோ அவளை நீ கொன்றாய்....??? என் தீங்கு அவள் இழைத்தாள்....??? தீண்டாமை கிடந்தவளை திருகியே ஏன் கொன்றாய்....??? வலியோடு வடு இணைத்து துடி துடி…
-
- 5 replies
- 1.2k views
-
-
தமிழீழம் மலர்ந்து விடும்......!!! கோட்டை பகை கோட்டைக்குள்ளே கொடியேறும்..... புலி கொடியேற்றி ஆளும் ஒரு காலம் வரும்.... பலம் கொண்ட படையாகி பாய்ந்து வரும்.... பாரெல்லாம் மக்கள் ஆடி பாடும் காலம் வரும்.... பகை பிச்சை கேட்டு உலகெல்லாம் ஏறி ஓடும்.... பிணமாகி பகை உடல்கள் அங்கு விழும்... ஜந்தாண்டு முடிவிற்குள்ளே அவை நடக்கும்..... ஜந்தாயிரம் படைகள் அங்கு அழிநதொழியும்..;... அவலத்திலே தென்னிலங்கை மூழ்கியெழும்... ஆத்திரத்தில் அந்த மக்கள் பொங்கியெழும்... அதை ஆக்கிவித்த ஆட்சிகளை கலைத்தெறியும்... வேண்டமது யுத்தமென்று வேண்டியழும்.... தானக வந்துயதே தானே த…
-
- 11 replies
- 1.7k views
-
-
அம்மாவைத் தேடி.. அம்மா...அம்மா...அம்மா -உன் பிள்ளை அழைக்கிறேனம்மா.... கண்ணீர்ச்சுூட்டில் கரைந்து இமை கனக்குதே அம்மா... மடி தேடும் நான் அன்பு மகனல்லவோ... தலைமுடி கோதும் விரலெங்கு தூரத்திலோ.. தாயே நான் செய்த தவறென்ன சொல்லு.. ஜீவனிரண்டை சுமந்த தாயே எந்தன் நெஞ்சும் ஈரம்தானே.. அன்பு என்பது ஆதாரம் தாயினன்போ பெரிதாகும்.. கண்கள் கருணைக்கடலல்லவோ.. எந்தன் உருவம் தந்ததுன்னுடல்லவோ... கருவறை ஒளியும் தாய்நெஞ்சு வலியும் மனதுக்குத்தானே தெரியும் அன்னையினன்பைப் பிரித்திட நினைத்தால் புூலோகம் தீயினில் எரியும்... இடிஇடியென பல இன்னல்கள் நேரிலும் தாயின்நிழலின் கீழ் மனம் தாங்கும்.. வேரின்றி மரமில்லை தாயின்றி வாழ்வில்லை நீய…
-
- 26 replies
- 8.2k views
-
-
நாய்கள் கடி படுது தமிழுக்கு...நல்ல காலம் பிறக்குது.....!!! கூட்டணிகள் போட்டு வைச்சு கூட்டினைஞ்சாங்க... இப்போ குத்து வெட்டு என்றதுமோ தாம் பிரிஞ்சாங்க...??? ஆதி அந்த காலம் எண்ணா அவங்க நினைச்சாங்க...??? அதை எண்ணி புட்டா புலியழிக்க இவங்க முனைச்சாங்க...?? சங்க காலம் தொட்டிவிங்க சதிகள் செய்தாங்க... எம் தமிழை அழித்தவங்க பழிகள் ஏற்றாங்க... அவங்கள் இட்ட சாபமதால் இன்றழிந்தாங்க... தேடி ஓடி எம் தமிழை தேடி அழித்தாங்க... தெரு நாய்கள் போல தெருவில் சுட்டெறிந்தாங்க.... புலிகள் என்று முத்திரைகள் வேறு பதித்தாங்க..... கொலைகள் எண்ணு கொள்ளை எண்ணு எத்தனை தாங்க.... …
-
- 7 replies
- 1.9k views
-
-
மனிதனாய் வாழ பழகு.....!!! சொல் கொண்டு பிழைகளை நீ பிடிக்கிறாய்....?? சொந்தமாக நீ படைக்க ஏன் மறுக்கிறாய்...??? வேதனையால் எம் தமிழர் அங்கு தவிக்கிறார்... அட.. வேற்று மண்ணில் இருந்து கொண்டு என்ன அளக்கிறாய்...??? கண்ணீரின் கடலிலே அவர் தவிக்கிறார்..... அவர் இன்னல் காண ஏன்டா நீயும் இன்று மறக்கிறாய்...??? சொந்த மண்ணை மறந்து நீயும் இங்கு வாழ்கிறாய்... அதற்குள் சொறி கதைகள் வேறு இன்று நீயும் விடுகிறாய்... எங்கள் மண்ணில் குந்தி நின்று ஏற்றம் உரையடா... உந்தன் ஏற்ற மொழி வார்த்தகைளிற்கு தலை வணங்கி போவேண்டா... திட்டமிட்டு பிழைகளை நானும் விடுவதில்…
-
- 11 replies
- 2k views
-
-
தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நீ நில்லடா..... தமிழா தமிழா நில்லடா.... உன் தலை விதி கோலம் என்னடா....?? அன்னியர் அரனில் ஏனடா அடிமையாய் வாழ்வது நீயடா...??? அவன் காலனி உன்னில் பதிவதா...?? அவன் காறியே உன்னில் உமிழ்வதா....??? இத்தனை சகிப்பு எதற்கடா...?? இன்னும் மௌனமாய் நீ ஏனடா...?? தீயாய் உணர்வதை மூட்டடா... பகையை தீயினில் போட்டு பொசுக்கடா... பொறுத்தது போதும் பொங்கடா... அடிமை விலங்கதை உடையடா... அகிலத்தில் தமிழனை நிமிர்தடா... ஆண்டுகள் ஆண்டுகள் அடிமையா...?? அட தமிழா நீ என்ன கோழையா...??? அவன் வன்முறை நீ இன்று அடக்கடா.…
-
- 7 replies
- 3.3k views
-
-
பூப் பூவாய் பூப்பூவாய் பூத்துவிட்ட ஆசைகள் பூப்பூவாய் என் மனதிலும் பூத்தது வெள்ளையாய் சிரிக்கின்றதே மனது பூத்த பூவுக்குள் புகுந்ததோ நிறம் என்ற கருமைத்துளிகள் பூபடைத்தான் பூவைக்குள் பெண் பூவாய் பெண்ணை படைத்தான் பூவுக்குள்ளும் பனித்துளிகள் நித்தம் விழியினை மறைக்கும் உப்புநீராய் இதயத்துக்குள்ளும் சிந்துவதோ ரத்தத்துளிகள்
-
- 15 replies
- 2.3k views
-
-
அழகாயிருப்பேனா..? காயாத ரணங்கள் கொண்ட மனது கஷ்டங்கள் மேல் எழுந்து அமுத்துவதால் கவலைகள் அடிக்கடி தற்கொலைசெய்யும் அழகில் நான் கறுப்பி ஆகிவிட்டதால் நிலைக்கண்ணாடியும் என் நிறத்தின் நிஜமாய் நிதர்சனமாய் சொல்கிறதே அழகின் வரைவிலக்கணம் எது என்று அறியவில்லை இதுவரை சிலந்திவலையை கொண்டு விண்மினை பிடிப்பது போல் இருக்கின்றது வாழ்க்கை இறந்த பிறகாவது நான் அழகாயிருப்பேனா..?
-
- 35 replies
- 6.1k views
-
-
போராட ஆசை போர்களம் செல்லாமல் ஆயுதம் ஏந்த ஆசை-எதிரியிடம் ஆயுதம் இல்லாத பொழுது களத்தில் வீரநடை போட ஆசை கன்னிவெடி அகற்றப்பட்டபின்பு உண்மையை சொன்னா என்ன உயிருக்கு ஆசை புலத்துக்கு பறந்தோடினேன் புலத்திலும் புதிய ஆசைகள் புகை பிடித்து புனிதனாய் வாழ ஆசை நவ நாகரிகமாக வாழ்ந்து நமது கலாச்சாரம் பேணிட ஆசை மாற்றான் குழந்தை தமிழ் பேச மம்மி என்று என் குழந்தை அழைத்திட ஆசை தமிழ் பேசாமல் தமிழ் வளர்த்திட ஆசை அணு அளவும் உண்மை பேசாமல் அரிச்சந்திரனாக வாழ்ந்திட ஆசை களத்தில் தமிழர் படையின் வெற்றியை கேட்க ஆசை புலத்தில் சிங்கள கிரிக்கட் அணி வெற்றி செய்தியை கொண்டாட ஆசை சிறிலங்கன் என்ற பெருமையை சிரிப்புடன் சொல்லவும் ஆசை முதல் நாள் …
-
- 27 replies
- 3.7k views
-
-
:P :wink: பிற்குறிப்பு:- சத்தியமா அவளுக்கு சர்க்கரை வியாதி இல்லை
-
- 26 replies
- 4.1k views
-
-
"சோ"வென்ற மழையில் கூந்தலிலிருந்து நீர் சொட்டச் சொட்ட.... அந்த நிலாவை என் வீட்டுத்தாழ்வாரத்தில் பார்த்தேன்... முதன்முதலில் பார்த்தேன்... அவளோடு அவளின் குட்டி;த்தங்கை...சுட்டித்தங்க
-
- 28 replies
- 3.8k views
-
-
நிறைவேறா ஆசைகள் ஆயிரம் கோடி ஆசைகள் என் நெஞ்சினில்...இருக்கிறது அன்னை கனவு நிறைவேறனும் அண்ணன் பொறுபானவன் ஆகனும் அக்கா என்றும் ஆனந்தமாய் இருக்கனும் தம்பி அவன் சுமைகள் குறையனும் தங்கை அவள் எதிர்காலம் சிறக்கனும் என்னவன் என்னக்கானவனாய் ஆகனும் என்னை நம்பி நட்பு வைக்கும் உறவுகள் வாழ் நாளில் என்றும் பிரியாது இருக்கனும் அலைகடல் கடந்து சென்றாலும் உறவுகளுடன் என்றும் குறையாமல் அன்பாய் இருக்கனும் கையில் இருக்கும் அன்பான நட்புகள் என்றுமே சுயநலமில்லாது இருக்கனும் எந்த எதிர்பார்புகளும் இல்லாது என் துன்பங்களில் என்னவர்கள் பங்கு கொள்ளனும் இப்படி எத்தினை எத்தினையோ ஆசைகள் எல்லாமே என்றும் நிறைவேறா ஆசைகள்
-
- 1 reply
- 1k views
-
-
தியாக தீபமே தாயகம் தந்தநற் புதல்வர்கள் வரிசையில் தனக்கென இடத்தினைப் பிடித்தஎம் திலீபனே அவனியில் தமிழினம் வாழ்ந்திடும் வரையினில் அடிக்கடி உன்பெயர் நினைவினில் வந்திடும் ஊரே எழுந்திடில் உரிமைகள் கிடைத்திடும் ஊரெழு மண்ணினில் பிறந்தவன் நம்பினான் ஊரினை எழுப்பிட உண்மையாய் உழைத்தவன் கூரிய நாவினைக் கருவியாய் ஆக்கினான் தனித்துவம் இழந்ததோர் இனமதாய் வாழ்ந்ததால் மருத்துவம் மனதினில் படிந்திட மறுத்தது இனத்துவம் காத்திடும் பணியினில் இணைந்தவன் இளைத்துமே சாய்ந்தனன் நல்லையுூர் மண்ணிலே சுந்தரப் பெண்களைச் சதந்திரப் பெண்களாய் கண்டிடும் பணியிலே முன்னிலை நின்றவன் தந்திர இந்தியச் சதியினால் நொந்துமே தந்தனன் உயிரினை காந்தியும் நாணவே அண்ணலின் வழியினில…
-
- 28 replies
- 3.9k views
-
-
தூங்காதே கண்மணியே-நீயும் தூங்காதே..... தூக்கம் வந்தாலும்-நீயும் தூங்காதே..... தமிழுக்கு நாடுவரும்-வரை தூங்காதே..... பகைவனும் வந்திடுவான்-அன்பே தூங்காதே..... பச்சைப்பிள்ளை என்றும்-பாரான் தூங்காதே..... உறவுகள் இழப்புக் கண்டும்-நீயும் வெதும்பாதே..... அவர்கள் உதிரம் எழுதும்-எம் தாய் நாடே..... பெற்ற அன்னை அவளும்-அன்பே நான்தானே..... என்காயங்கள் மாறுது-கண்ணே உன்வரவாலே..... களம் சென்ற தந்தைவரும்-வரை தூங்காதே..... வீரனின் புதல்வனும்-அன்பே நீதானே..... விரைவில் வளர்ந்துவா-காப்போம் நம்நாடே.....
-
- 11 replies
- 1.7k views
-
-
கடவுளின் பெயரினால் கட்சிகள் கூட்டுகின்றார் சாமியாரின் வேடத்தில் காம லீலை புரிகின்றார் கடவுள் என்று போற்றியவர் இன்று கம்பி எண்ணுகின்றார் நடமாடும் தெய்வம் என்று நல்லா நாடகம் ஆடுகின்றார் மூடநம்பிக்கையில் எம்மவர் மூழ்கிப்போய் இருக்கின்றார் கற்கள் பால் குடிப்பதாக பாலும் ஊத்துகின்றார் உலகில் சைவத்தை கேவலப் படுத்துகின்றார் இறைவனைத் தேடுவதாய் தாவிக் குதிக்கின்றார் அறியாமையினால் தம்மைத் தாமே ஏமாற்றுகின்றார் உனக்குள் இறைவன் உண்டு அதை ஏன் ஏற்க மறுக்கின்றாய்???
-
- 18 replies
- 2.8k views
-