கவிதைப் பூங்காடு
கவிதைகள் | பாடல் வரிகள்
கவிதைப் பூங்காடு பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் கவிதைகள், கவிதை மொழியாக்கம், உலகக் கவிதை, பாடல் வரிகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் கவிதைகள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனைய கவிதைகள் தரமான கவிதைகளை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
5128 topics in this forum
-
ஜூலை மாதம் வந்தால் . . . . . ஆடிமாதம் எம்தமிழர் ஆடிப்போன மாதம் கூடிவாழ்ந்த வீட்டைவிட்டு ஓடிப்போன மாதம் மாடிவீடும் குடிசைவீடும் வீதிவந்த மாதம் கோடிகோடி யாகச்சொத்தை தாரைவார்த்த மாதம் இறையும்கூடத் தேரிலேறி தெருவில்நின்ற மாதம் சிறையில்கூடச் சிங்களவன் பலியெடுத்த மாதம் மறையின்வழி நின்றவர்கள் பதைபதைத்த மாதம் குறைவிலாமல் தமிழன்நிலை உலகறிந்த மாதம் ஆண்டுபல போனபோதும் மறந்திடாத மாதம் மாண்டுபோன உறவினைநாம் நினைத்துநிற்கும் மாதம் கூண்டுவிட்டு அகதியாகப் பெயரவைத்த மாதம் சீண்டிவிட்ட சிங்களத்தின் அமைதிசெத்த மாதம் புத்தன்சொல்லே வேதமென்றோர் புலையரான மாதம் சித்தம்தன்னில் ஈரமிலார் கொடுமைசெய்த மாதம் சொத்துசுகம் பேணநாட்டின் தேவைகண்ட மாதம் சத்தமின்றித் …
-
- 19 replies
- 3k views
-
-
அந்த நாட்கள் அதிகாலைச் சூரியனும் அழகுநிலவும் அணைத்துக் கொண்ட நாட்கள் பசுமை தேடிய புற்களுக்கு பால் வடித்த கண்ணீர் மழையாகி உயிர் நனைத்த நாட்கள் வழி தொலைத்த பறவைகள் கூடிக்களிப்படைந்து வெறுமையான நாட்களுக்கு இதயப் பூக்களால் அர்ச்சனை புரிந்த நாட்கள் சிதறி உடைந்த கண்ணாடித் துண்டுகளிலே சிக்கிய விம்பங்கள் போலே அவன் வடித்த புன்னகைகளில் என் முகம் புதைந்துபோன நாட்கள் அவை சந்தித்தபோதேல்லாம் பேசமொழி மறந்து விழிமொழி பேசியதுண்டு அவ்வப்போது மெளனம் துணைக்கு வந்துபோனதுண்டு.. ஏழு ஜென்ம வாழ்க்கை அந்த நாட்களுடன் ஐக்கியமானதுண்டு.. திசைமாறும் பறவைகள்தான் எனினும் இதயத்தின் பரிபாசைகளில் இணைந்து…
-
- 1 reply
- 858 views
-
-
தீபம் பத்தும் அறியாத பருவகாலவயது அது.. கார்மேகம் கண்ட மயிலாய் காதல்தீபம் ஏற்றினாள் அவள் கயல்விழிகளால் காலம் கடந்தபின்னும் பிரகாசமான ஒளியுடன் சுடர்விடுவது - என் இதயத்தில் மட்டும் அல்ல எங்கே.. நெஞ்சில் கைவைத்துக் கூறுங்கள் அந்தப் பருவகாலம் மயிலிறகாய் வருடிய நினைவுகளாக உங்கள் இதயத்தில் இல்லை என்று ??? நேசமுடன்.. -நித்தியா ஒலிவடிவில்..
-
- 4 replies
- 1.1k views
-
-
கரை தேடும் அலை மீண்டு(ம்) கடல் சேர்கிறது இலைஉ திரும் மரம் மீண்டும் துளிர் விடுகிறது மண் வீழும் நீரும் ஆவியாய் விண் மீள்கிறது என்ன தான் விசித்திரமோ? பிரிந்து போன நம் காதல் மட்டும் இன்னும் உயிர்ப்படைய வில்லை தரித்து நிற்கும் புகைவண்டி மீண்டும் பயணிக்கிறது இடைவேளைக்குப் பின்னரும் திரைப்படம் தொடர்கிறது நின்று போன யுத்தம் மீண்டும் நிகழ்கிறது என்ன தான் விசித்திரமோ? நின்று போன நம் காதல் மட்டும் மறுபடி தொடரவே யில்லை :wink:
-
- 41 replies
- 4.5k views
-
-
புரிந்து கொள்ளவில்லையே மழையே ஏன் உன்னைக் கண்டால் சில பெண்கள் தலை தெறிக்க பீதியுடன் ஓடுகின்றனர்....?????? ஏன் தானோ வெளியே வர மறுத்து விட்டு வீட்டிற்குள்ளேயே ஒதுங்குகின்றனர்???? ஏன் தானோ உன்னைத் தாண்டிப் போவதற்கு தம் முகங்களிற்கு நீ தொடா வண்ணம் உனைத் தடுக்கும் அணியை அணிந்து செல்கின்றனர்...?????? நீ என்ன எதிரியா அவர்களுக்கு??????? அல்லது உன்னிடம் எதாவது கடன் வாங்கி விட்டார்களா...???? புரிந்துவிட்டது..புரிந்துவிட
-
- 4 replies
- 1.3k views
-
-
என்ன தான் என்னவோ....??? குரங்குகளின் கைகளில் அகப்பட்ட பூமாலைகளைப் போல் எம் மண்ணில் பூக்கப்பட்ட எம் இன இளஞ்சிட்டுக்கள் முதல் தள்ளாடும் முதியோர்கள் வரை இவ் விசர் பிடித்த சிங்கள மடையர்களின் அடாவடித் தனங்களால் நித்தம் நித்தம் தம்மைக் காப்பாற்று என்று மரணதேவதையிடம் இரங்கல் பிரார்த்தனை செய்து கொண்டும் அல்லல்பட்டும் அவஷ்த்தைப் பட்டுக் கொண்டும் இருக்கின்றார்களே.... இதற்கு முற்றுப் புள்ளி என்ன தான் என்னவோ...????
-
- 1 reply
- 807 views
-
-
யார் இவர்கள்??[/b] உடம்பில் தென்பிருந்தும் மனதில் உறுதியில்லாத சிலர் பிழைக்கத் தெரிந்த நாட்டில் அரசாங்கத்தை நம்பி வாழ்க்கை நடத்தும் இவர்கள் சோம்பேறிகள் பெற்றோறை முதியோர் இல்லத்திற்கு அனுப்பிவிட்டு மனைவியுடன் சுகபோகம் அனுபவிக்கும் இவர்கள் மன்னிக்கப்படாத பாவிகள் தமிழ் நாட்டை கேவலமாக எண்ணி இந்த நாடு தான் சொர்க்கம் என்று வாழ்பர்கள் அயோக்கியர்கள் குடும்பத்தில் நுழைந்து வீண்பேச்சுக்கள் பேசி வதந்திகளைப் பரப்பி ஒர் அழகிய கூட்டை சிதறடித்துப் பிரிக்கும் இவர்கள் மகா பாவிகள் கஷ்ரம் என்று அலறித்துடித்து பணத்தைப் பெற்றுவிட்டு திருப்பிக் கொடுக்காமல் பூச்சாண்டி காட்டும் இவர்கள் துரோகிகள் சீதணக் க…
-
- 7 replies
- 1.5k views
-
-
-
புதிதாக மாறிக்கொண்டிருக்க...... ஆண்டுகள் ஒவ்வொன்றும் புதிதாய்ப் பிறந்து கொண்டிருக்க..... வசந்தகாலம் இலையுதிர்காலம் என காலங்கள் மாறிக் கொண்டிருக்க.... பிரம்மன் தன்னிடம் இருப்பதை படைப்பதும் படைத்ததை திருப்பி பறிப்பதுமாக தனது வேலையை மாற்றி மாற்றி செய்து கொண்டிருக்க.... மனிதர்களின் குண இயல்புகள் கூட தாழ்ந்தும் மேலோங்கியும் மாறிக் கொண்டிருக்க...... ஏன் ...ஏன்.. ஈழம் மட்டும் மாறாமல் இன்னும் யுத்த பூமியாக....... நம் ஈழத் தமிழர்களின் கண்ணீர்களை மட்டும் தாங்கிக் கொண்டிருக்கிறது.... ஏன் இன்னும் மாறாமல் கவலைகளை மட்டும் சுமந்து கொண்டிருக்க…
-
- 6 replies
- 1.2k views
-
-
உனக்குப் பிடித்த பாடல்களாலும் உன்னை படித்த நாட்களாலும் உன்னை வடித்த வரிகளாலும் திமிருற்ற எந்தன் ஏட்டை அழித்து விட்டு எனக்கு நானே சொல்லிக்கொண்டேன நம் காதல் கலைந்து விட்டதென்று காலையில் தினமும் கண்சிமிட்டும் பகலவனால் உன் துளிர்ப்புன்னகைச் சேமிப்பெடுத்து இன்னமும் ரசிக்கிறேன் சிலிர்க்கிறேன் இருந்தும் உன்னை விட்டு விலகி விட்டேன் சில்லென்று மெய் நனைக்கும் ஒவ்வொரு நீர்த்துளியும் உன் ஸ்பரிசயமாய் படர்ந்தன ஆனாலும் உன்னை மறந்து விட்டேன் உட்கொள்ளுமோர் பருக்கையிலும் நிராசையாகிப்போன நம் ஆசைகள் நளினத்தோடு எள்ளி நகையாடின என்றாலும் நாம் பிரிந்து விட்டோம் பார்வையில் பாசையில் தூண்டலில் துலங்கலில் நிறத்தில் மணத்தில் சுவையில் தூக்கத்த…
-
- 21 replies
- 3.4k views
-
-
தமிழர் பிரிவுகளால்...!!! தமிழர்களுக்கும் சிங்களவார்களுக்கும் போராட்டங்கள் ஆரம்பித்தோ பல வருடங்களைத் தாண்டியும் தமிழனும் வெற்றி பெறவில்லை சிங்களவனும் வெற்றி பெறவில்லை.... தமிழர்களுக்குள்ளே பல பல விஷக் கிருமிகள் இன்றைய துரோகி கருணா(கம்) உட்பட பிரிந்து சென்று கூட்டணி வைத்து தமிழர் போராட்டத்திற்கு எதிராக இயங்கும் போது இந்த சிங்கள அரக்கர்களுக்கு எப்படித்தெரியப் போகின்றது நம் இன உயிர்கள் படும் அவஷ்த்தை எப்படித் தெரியப் போகின்றது???? ஒன்றாய் சேர்ந்து சாப்பிடுவார்கள் ஒன்றாய் சேர்ந்து கதைப்பார்கள் ஒன்றாய் சேர்ந்து தூங்குவார்கள் ஒன்றாய் பயிற்சிகளும் பெறுவார்கள் எல்லாம் முடிந்ததும் இந்தப் பச்சோந்திகள் எ…
-
- 6 replies
- 1.3k views
-
-
வெள்ளைக்கொடியெடுத்து விலங்கிடு மறவர் படை வீரத்தை குலுக்க நீழும் கரங்களை குதறி எறி-உன் கொடூரத்தின் பாரம்பரியம் காத்து தமிழச்சி கர்ப்பம்கிழித்து சிசுவினை உருவு-அதன் செந்தளிர் மேனியெங்கும் வாலும் வரிகளும் தேடு-களைத்தபின் கொடுந்தீயின் வாயினில் போடு. வெள்ளைக்கொடி எடுத்து விரலிடுக்கின் குருதி துடை உன்.... விந்தொழுகும் வக்கிரக்கண்கொண்டு வேட்டையாடு குமரியென்ன கிழவியென்ன கிளித்துக்கிளித்து கிணறுகளில் வீசியெறி உலகின் ஊனச்செவிகளில் ஓலம் விழுந்தால் வெள்ளைக்கொடியெடுத்து-அதன் விழிகளில் விட்டு ஆட்டு-பின்னர் தம்மபதம் ஓதி பஞ்சசீலம் பழகு. உன்..... உறக்கம் பறித்தவர் உறங்கும் இடமெங்கும்-அவர் வீ…
-
- 15 replies
- 2k views
-
-
ஏன் ஏன் இந்த மாற்றம் நம் இன சில பெண்களுக்குள் ஏன் இந்த மாற்றம்???? பரந்து வாழும் நம் இன மக்கள் கடல் கடந்து வந்து அன்னிய நாட்டினிலே... இங்கே கொள்கைகள் உண்டு உதவிகள் பல உண்டு சுதந்திரங்கள் பல பல வகை உண்டு.. போக போக ஆடைக்குறைப்புகள் குறைகின்றதே அத்துமீறிய நம் இன சில பெண்டிர்களால் ஆடைக்குறைப்புகள் குறைந்து போகின்றதே... தினம் தினம் ஆடவரை மாற்றி சேர்ந்து ஊர் சுற்றும் அடக்கமில்லாத நம் இன சில மங்கைகள் உருவாகின்றனரே நாளுக்கு நாள் உருவாகின்றார்களே... ஒரு கையில் ஆறாவது விரலாக சிகரெட்டை புகைவிட்டு கற்புள்ள காற்றை மாசுபடுத்தியும் நம் இன இழ சமுதாயத்தை வீதிக்கு அழைக்கும் தான்தோன்றித்தனமான நம் இன சில பெண்கள் பற்றி வி…
-
- 10 replies
- 1.4k views
-
-
என்?????? புலம்பெயர் நாட்டினிலே தமிழர்கள் ஒன்றினைந்து கேட்கும் உரிமைக்குரல்.... நமக்காக நம் இனத்திற்ககாக நம் ஈழத்தமிழர்களுக்காக.. செவிடன் காதில் ஊதிய சங்காக இருக்கும் இவர்களெல்லாம் தமிழர்களை பயங்கரவாதிகளாம் என்னடா உலகம் இது?????? நாடு விட்டு நாடு போய் சமாதான பேச்சுவார்த்தைகள் நடத்துவார்கள் ஆனால் தொடருவதோ.... நம் இனங்களின் அவல நிலைகள் தான் சமாதானத்தை தரும்படி உங்களிடம் கேட்டால் நீங்கள் ஆயுதக்கருவிகளையல்லவா தர முயல்கிறீர்கள் நம் ஈழத்தை நமக்கே திருப்பித்தர என் இந்த சுணக்கம்???? எங்களது இழப்பில் நீர் என்ன சுகம் கண்டீர்????? எதிர்பார்கிறோம் …
-
- 6 replies
- 1.3k views
-
-
உனை வர்ணிக்க....... கண்மணி உனை வர்ணிக்க என்னிடம் வார்த்தைகள் போதவில்லை என்று வானவில்லை நாட்டினேன் வானவில்லின் நிறங்கள் கூட உனை வர்ணனை செய்ய மறுத்துவிட்டதால் தென்றலிடம் நாடினேன் தென்றல் கூட தான் அடிக்கடி சூறாவளியாக மாறுவதால் மறுத்துவிட கடலிடம் சரணடந்தேன் கடல் கூட தான் பல பேரின் உயிரைக் குடித்துவிட்டேன் என்று கவலையோடு உரைத்துவிட நிலவை நாட்டினேன் நிலவு கூட உன் அழகிய வதனம் கண்டு பொறாமையோடு மறைந்து சென்றுவிட அன்பே...அன்பே நான் எதைக்கொண்டு உன்னை வர்ணிக்க..???? ஒன்றே ஒன்று மட்டும் என் மனதில் பிரசவித்த வார்த்தை அம்மணி..... நீ.... என் உயிரினில் பூத்துவிட்ட அ…
-
- 10 replies
- 1.9k views
-
-
கொடுமை வெடிக்கிறதே வெடிக்கிறதே கண்ட இடமெல்லாம் துப்பாக்கி குண்டுகள் வெடிக்கின்றதே மாறிக்கொண்டிருக்கிறதே மாறிக்கொண்டிருக்கிறதே தமிழ் ஈழம் இரத்த பூமியாக மாறிக்கொண்டிருக்கிறதே தொலைகிறதே தொலைகிறதே தமிழர்கள் காணாமல் தொலைந்து போய்க்கொண்டிருக்கிறார்களே வதைகிறார்களே வதைப்படுகிறார்களே உன் இனத்தால் நம் அப்பாவித் தமிழர்கள் சித்திரைவதைப் பட்டுக்கொண்டிருக்கிறார்களே சிந்தித்துப்பாரேன் சிந்தித்துப்பாரேன் நீ அரசமரத்திற்கு கொடுக்கும் மரியாதையைக்கூட நம் இன உயிர்களுக்கு கொடுக்கத் தவறிவிட்டாயே என்று கொஞ்சம் சிந்தித்துப்பாரேன் வேண்டாமே வேண்டாமே இந்த மனித வேட்டை இனியும் வேண்டாமே
-
- 4 replies
- 1.2k views
-
-
கனவினிலே நீ ஏன் வந்தாய் கன்னி இளம் புள்ளிமானே என் நெஞ்சினிலே குடிகொண்ட பூங்கோதை எனும் பெண் பூவே தேடிவந்த என்னை நீயும் கவிபாடவைத்தாய் உன் அன்பு என்னும் மதுக்கிண்னத்தில் என்னை நியும் விழ வைத்தாய் தாயைப்போல என்னை அன்பு செய்து என்னை வென்று போட்டாய் உன் பார்வையாலே என்னை நீயும் சிறைப்படுத்திவிட்டாய்
-
- 9 replies
- 1.7k views
-
-
உன்னைக் கவிபாட எனக்கு வெக்கமடா உன்னைப்போல அழகன் யாரும் இல்லையடா கருமை நிற சுருள் முடியழகா உனக்கு நான் தான் பேரழகா அகன்ற தோழ்கள் வீர மார்பழகா அதில் என் முகத்தைப் புதைத்தேன் அது நாணமடா சிங்கம் போன்ற வீர நடையழகா உன் கருணையின் கண்கள் தானழகா என் கண்களின் ஒளி விம்பம் நீதானடா அன்புக்கு நீயும் என் தந்தையடா அரவணைப்பில் நீயும் என் தாய்தானடா உன்னைப்போல என்னைக் கவர்ந்தவர் இல்லையடா மொத்ததில் நீயும் என் இதயமடா
-
- 15 replies
- 1.9k views
-
-
நாம் என்ன ஊமையா? இந்த நிமிடம் இதே வருசம்.. இமைகளின் மீது....... இரும்பு பறவைகள் .... எரிதிராவகம் வீசி போன நாள்! இந்த நாள்..! சிலுவை சுமந்த ஜீவனின் மடியில்..... சிதைகளாய் எம்மை - ஆக்கிவிட்டுபோன பேரினவாதத்தின் ...... தமிழன் குடல் வெளி எடுத்து.. கும்மி அடித்த நாள்! விலா எலும்பு நோக பெற்றவள் வயிறும் வைரம் என்றும் அவள் கருதிய மகனும் ஒன்றாய் குடல் கிழிந்து செத்தாரே.. உலகமே உனக்கு அது தெரியுமா? நாம் என்ன செய்தோம் இறைவா? நாம் என்ன உனக்கு தீராத பகையா? நெஞ்சு மீது மூட்டிய தீ இன்னும் ஈரம் பாயாமல் ஊரெல்லாம் இருக்கிறதே கொல்லுங்களேன்- எம்மை தொலைந்தோம் நாம் என்று.. யாருக்கும் சொல்லியும் விடுங்களேன்! இருக்கும் ப…
-
- 27 replies
- 3.6k views
-
-
காற்று அலையில் நெருப்பான இரும்பு மனிதர்கள் தாய் மண் மீது மிகுந்த தாகம் கொண்ட தன் நலம் அற்றவர்கள் தமது சுக துக்கங்களை தமிழனுக்காக இழந்தவர்கள் தானைத்தலைவரின் சிந்தனையின் தலையாய உயிர் ஊற்றுக்கள் முகம் அறியாத உன்னத உயிர் சிற்பங்கள் தமிழனின் வாழ்வுக்காக தம் உயிரையே தந்த மாபெரும் முத்துக்கள் உரிய இலக்கினை உடைத்து எறியும் உயிர் ஆயுதங்கள் பகைவனின் மன பலத்தை உடைத்து எறியும் எரிமலைகள் தமிழனின் முதுகு எலும்பை நிமிரவைத்த சிற்பிகள் நாலடி மண் கூட தமக்காக வேண்டாத சுயநலம் அற்றவர்கள்
-
- 8 replies
- 1.4k views
-
-
நிகழ்காலமும் நிகழ்ந்த காலமும்... பெற்றவரை பிள்ளைகள் பேணிவந்த காலமது பிள்ளைகளால் பெற்றவர்கள் கூணுகின்ற காலமிது சொற்ப பணமிருந்தால் சொர்க்கம் தான் அந்தக்காலம் மெத்த பணமிருந்தால் நரகம் தான் இந்தக்காலம் அவதியுடன் வாழ்ந்தாலும் ஆண் உழைக்கும் காலமது சவுதிக்கும் சென்று பெண் உழைக்கும் காலமிது உயிர்காப்பான் தோழன் என்பர் உண்மைதான் அந்தகாலம் உயிர்கேப்பான் தோழன் இதை உணருகின்றோம் இந்தக்காலம் கட்டுப்பாட்டுடன் மனிதன் காதலித்த காலமது இஸ்டபடி இளைஞன் எதையும் செய்யும் காலமிது பூஞ்சோலைக்குள் மட்டும் புனித காதல் அந்தக்காலம் மிருகத்தின் சாலைக்குள்ளும் மீதமில்லை இந்தக்காலம் இன்றையதை விட நேற்றயது நல்ல காலம் நேற்றயதை விட நாளையது எப்படியோ???
-
- 6 replies
- 1.4k views
-
-
அகதியாக வந்த பறவை ஏன்அங்கு துடிதுடித்தது கடல் கடந்து வந்த உள்ளம் ஏன் பதைபதைத்தது சிங்களத்து படைகளினால் அகதியாகி புலம்பெயர்ந்தது அமைதியாக வாழ என உங்கு வந்தது அகதியாக வந்தவனை தமிழகம் ஏன் மிதித்தது விழுந்தவனைத் தான் அங்கு மாடும் முட்டுது பச்சைபாலன் என்பது அறியாமலா நாய் கடிதது செய்தி படித்த என் மனமோ பதைபதைக்குது ஈனமான தமிழனாக இவனும் தன்னைக்காட்டுது
-
- 8 replies
- 1.7k views
-
-
கொள்ளிடம் கதி கலங்கும்! ஊற்றுவாய் பிளந்து பொங்கிப் பரவும் காட்டாறுகள். கூற்றுவனோடு கை குலுக்கி கலகலக்கும் ஞானிகள். ஈழம் காக்கும் கந்தகப் புயல்கள். எதிரியை ஒடுக்கும் எரிமலைகள். போரின் வெற்றியை நிர்ணயிக்கும் கூரிய முனைகள். பாரியைப் புறம் தள்ளி - ஈழத் தாயவள் வலிமைக்காய் தம்... உயிர்,மெய் உவந்து ஊட்டி - அவள் வீரியத் திசுக்களின் வேதியப் பொருளிவர். பற்றுகள் அற்றவரா?.... பற்றுகள் உற்றவர்! தமிழ் ஈழம் கசக்கும் வேற்றுவர் அகற்ற இகத்தைத் துறந்த இளைய துறவிகள். இறுதிப் பயணம் இன்றி உறுதி புூண்ட உன்னத வேங்கையர். உயிரைக் குடைந்து, உருக்கிப் பிழிந்து, உதிரத் துளியும் காற்றில் கரைய காவியம் படைக்கும் வீரியத் திரிகள…
-
- 6 replies
- 1.4k views
-
-
எச்சாதி சொல்வீரோ பத்தே வயதான பாலகனாய் இருக்கையிலே பதிலறியாக் கேள்வியொன்றைப் படித்தவரைக் கேட்டிருந்தேன் என்வயதை ஒத்துநிற்கும் எதிர்வீட்டுப் பையனுடன் ஏற்புடனே விளையாட எதற்காகத் தடுக்கின்றீர் முத்தமிழில் புலமைபெற்ற முன்வீட்டுத் தாயிடத்தில் தமிழ்ப்பாடம் படிப்பதற்குத் தடுப்பதுவும் எதற்காக? இத்தனையும் ஏன்என்று இதமாகக் கேட்டதற்கு இழிசாதி அவரென்று இரகசியமாய்ச் சொல்லிவைத்தார் சாதிகளில் பலசொன்னார் சமனுமில்லை எமக்குஎன்றார் சகபாடி எனச்சொன்னால் சண்டைவரும் இங்குஎன்றார் இச்சாதி கணிப்பதற்கு இருக்கிறதோ ஒருமார்க்கம் இடக்காகக் கேட்டதற்கு இலேசாகப் பதில்சொன்னார் பரம்பரையாய் வருகின்ற பழக்கமிது எனச்சொன்னார் செய்தொழிலை வை…
-
- 8 replies
- 1.5k views
-
-
நந்திக்கொடி தூக்கினேன் சைவக்காவலர் என்றனர் சிவப்புக்கொடி தூக்கினேன் புரட்சிவாதி என்றனர் கட்ச்சிக்கொடி தூக்கினேன் அரசியல்வாதி என்றனர் கண்டுகொள்ளவில்லை ஜன நாயக உரிமை என்றனர் தேசியக் கொடி தூக்கினேன் பயந்தனர் ஆட்சியாளர்கள் என்னை பயங்கரவாதி என்றனர் பயந்தனர் அயலவர் என்னை பிரிவினைவாதி என்றனர்
-
- 9 replies
- 1.7k views
-