Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கவிதைப் பூங்காடு

கவிதைகள் | பாடல் வரிகள்

பதிவாளர் கவனத்திற்கு!

கவிதைப் பூங்காடு பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் கவிதைகள், கவிதை மொழியாக்கம், உலகக் கவிதை, பாடல் வரிகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் கவிதைகள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனைய கவிதைகள் தரமான கவிதைகளை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. எமது தாயகப்பாடலான 'ஒர் இரண்டு பேருக்குள்ளே உறங்கும் உண்மைகள்" பாடலினுடைய வரிகள் யாருக்காவது தெரியுமா? அந்த பாடலை இணையத்தில் எங்கு கேட்கலாம் என்று கூறமுடியுமா?

    • 9 replies
    • 1.7k views
  2. தமிழீழம் ஓர் தனியரசு இதைத் தடுப்பவன் தலைதெறிக்கும் இதைத்தாண்ட முனைந்தவை புலிகளின் குண்டுக்கு மண்ணாய் மாறிவிடும்,,,,,,,,,,,,,,,, போராளி ந. சுதன் 1994 பின்குறிப்பு:நன்றி இக்கவிதையை எனக்கு அனுப்பியவருக்கு :P

    • 2 replies
    • 1.4k views
  3. மொட்டென முகம் மூடியிருந்தேன்............. கிளி - கொத்தாதவொரு கொவ்வை பழமாய்......... என் பாட்டில் நானிருந்தேன்! சட்டென்று கடந்தது ஒரு -மைனா..... பட்டென்று முழைத்தது - காதல்! எழுத்துகூட்டி தமிழ் படித்தவன் ஒரே இரவில் கவிஞன் என்றானேன்! இதயத்தின் அடியிலொரு நீர் வீழ்ச்சி..... இனி என் இயங்கு திசை எங்கும் .......... அவள் ஆட்சி! ஆயுள் ரேகை உண்டென்று.......... உலகம் ஆயிரம் சொல்லும்...... ஆளவந்தாள் என்னை - இனி அவளே என் ஆயுளுக்கு நீதிபதி! பாடல் கேட்க பிடிக்குது...... சித்ரா பாடியது அதுவென்று தெரிந்தும்........ என் சித்திரம் பாடுதென்று ........ திருட்டு கனவு வருது! போச்சு போச்சு................ இனி என்ன செய்ய நான்? ஊர் உறங்கும…

    • 17 replies
    • 3.1k views
  4. நான் தேடும் ........... போதும் நான் வெச்ச பாசம் இரு கண்கள் போதாது… சோகம் கரைக்க கண்ணீர் கரக்கிறது காதல் பயணத்தில் நானே ஒரு பாவம் இதயத்தின் நிம்மதியைத் தேடி துறந்த ஜன்மம் போல் கனத்தபடி நித்திரை அடைத்து இன்று வாழ்கிறேன்........ விழிகளில் கரைந்து மடலில் வரைந்தது _சுவிற்மிச்சி(MCgaL

    • 5 replies
    • 1.6k views
  5. என்னைத் தாலாட்டும் சங்கீதம் நீ அல்லவா.... புலர்ந்த பின் உன்னை கண்டு பசுமையை சுவாசித்து உயிர் வந்தது... வந்த உயிர் மூச்சு மெல்ல அடங்க, விடியல் காற்று அறைந்தது... மேலும் வாழ ஓர் ஆசை, -பிரபஞ்சம்- ஓசை அழகைக் காண-- நித்தம் தேடி வருந்துதல் இலாமே விலையிலா ---- .. நீ எனக்கு மட்டும் சொந்தம் .... .உன் பெயர் நெஞ்ஜி குழியோரம் குறித்து செல்லமே! ... "உயிரே, அன்பே பொங்கிப் பாயும் நதியே, நீ கரைந்து-மோதி நாடி நரம்புகள் எல்லாம் ஓடி நிறைந்திருக்க வண்ண ஓவியமாய்,வந்து......... என்னை தாலாட்டும் சங்கீதம் நீ அல்லவா..... இந்த கவிதை MCgaL(சுவிற்மிச்சி) எழுதியது

    • 1 reply
    • 1.4k views
  6. ஒரு கவியை கவி கொண்டு பாட........ மனசு வரிகளுக்காய் .......... வரண்ட வயலாய் ...இன்னும் சிந்தனைக்கு ஏதும் வராது சிறு மெளனம்.....கொள்கிறது! ஐயா........எல்லா கவிஞனும்......... எழுது கோலுக்கு நிறநீர் மட்டுமே......... நிரப்புவான்........நீரோ......... உயிர் உம்மோடு இருந்தவரை......... கண்ணீர் பாதி செந்நீர் பாதி கொண்டே...... இந்த கைவிடபட்ட இனத்துக்காய்.......... எழுத்தால் போர் செய்து காலமானீர்! என்ன சொல்லி உம்மை பாட? நரைத்த தலை தாடி உம்முருவம்........ அதனுள் நரை விழாத விடுதலை உணர்வு....... இது-இளமை கொண்டவர்கூட ........ எட்டப்பராய் திரியும் காலம்........ முதுமையின் சாயல் முகத்தில் விழுந்தும்..... கடைசிவரை எம் தேச தாகம் தீர்க்க.......…

  7. Started by N.SENTHIL,

    எதிரலை எங்கோ ஒர் கரையின் மடியில் - நமக்கான நாற்காலிகள் காத்திருக்கின்றன எதோ ஒர் கடலின் அலைகள் - நம் வருகை எதிர் நோக்கி நிலம் தொடுகிறது தனக்கான வேக விளிம்பைத்தாண்டி- நம் சந்திப்பின் காலம் நோக்கி - விரைகின்றன கடிகார முட்கள் இனி எப்போதுமே நாம் சந்திக்க - போவதில்லையெனும் உண்மையறியாமல்

    • 7 replies
    • 1.7k views
  8. தலைப்பை சீர்செய்துள்ளேன் - யாழினி

  9. Started by Vishnu,

    காதல் நினைவினிலே காதலி உன்னை பிரிகையிலே கவிதை ஒன்று எழுதிவிட்டு கன்னி உன் கண்படவே காகிதத்தில் மறைத்துவிட்டு காத்திருந்தேன் உன் பதில்க்காய் :? கண்டு விட்ட கவிதையினை கடைசிவரை படிக்கு முன்னே கன்னியவள் என்னிடத்தில் கேள்வி ஒன்றை கேட்டு விட்டாள் "கவி படைத்தாய் நம் காதலுக்கா?? - ஏன் காட்டவில்லை என்னிடத்தில்??" :oops: உயிர் கலந்த காதலியே உண்மையினை உரைத்திடுவேன் உனக்காய் இக்கவி படைத்தேன் - நம் உறவில் உறுதி ஊட்டுதற்காய் படித்து அவள் முடிக்கும்வரை பார்த்திருந்தேன் பாவி இவன் :? பாவை என்ன பறைவாளென்று ! ! ! பார்வை ஒன்று பார்த்துவிட்டு பிடித்திருக்கு என்று சொன்னாள் பாதியிலே முடித்துவிட்டாள் பகல் பொழு…

    • 18 replies
    • 3.2k views
  10. புத்தொளி வீசும் தமிழ்ப்புத்தாண்டு சித்திரை மாதத் தமிழ்ப்புத்தாண்டு சிந்தைக்கு இனிய தமிழ்ப்புத்தாண்டு பழையன மறந்து மன்னித்து மகிழ ஒரு தமிழ்ப்புத்தாண்டு இனிய இப்புத்தாண்டில் புதிய நற்கனவுகளுடன் புதிய நற்கொள்கையுடன் பிறக்கும் இத்தமிழ் ஆண்டாவது இனிய தமிழ் உள்ளங்களுக்கும் எமது தேச உறவுகளுக்கும் நற் செய்தி கிடைக்கும் என்ற நம்பிக்கையுடன் ........ இனிய தமிழ்ப்புத்தாண்டு வாழ்த்தைத் தெரிவிக்கிறேன்.

    • 2 replies
    • 1.3k views
  11. Started by தாரணி,

    இனியவனே! சிரிப்பை சிக்கனப்படுத்தாதே! நீ இதழ்களால் சிரிக்கும் போது நான் இதயத்தால் சிரிக்கிறேன்! நீ சிரிக்காத நாள் எனக்கு துக்க நாள்! அன்றைக்கெல்லாம் என் இதயம் கறுப்பு சட்டை அணிந்து கண்ணீரில் மிதக்கிறது.

  12. Started by தாரணி,

    கனவுகள் காவியமாகலாம் காவியங்கள் கனவுகள் ஆகலாம் நினைவுகள் கனவுகள் ஆகலாம் கனவுகள் நினைவுகள் ஆகலாம் நினைவுகள் நிஜங்கள் ஆகலாம்-ஆனால் நிஜங்கள் நினைவுகள் ஆவதில்லையே! நன்றி

  13. செடிவாழ நீர் தேவை... நான் வாழ-நீதேவை.. நீ வாழ வாழ்த்தி-இங்கு நான் வாழப் பார்க்கிறேனோ...? இல்லை..இல்லை... நீ வாழ நான் தேவை நான் வாழ நீ தேவை அதனால்.... "வாழ்த்துக்கள்" உனக்கு...அதனால்... எனக்கும்.....நானே... அத்துடன் ..அனைவரிற்கும்-தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

    • 7 replies
    • 1.6k views
  14. Started by Vishnu,

    மலர் இது உனக்காக மலர் உன்முகம் எனக்காக பலர் இருப்பார் உனக்காக எவர் இருக்கார் எனக்காக உயிர் துடிப்பது இன்றும் உனக்காக - என் துயர் துடைப்பாய் என்றும் எனக்காக :cry: :cry:

    • 6 replies
    • 1.9k views
  15. விடிவு தோன்றுமா? சண்டைகள் சாய்ந்து சச்சர வோய்ந்து சமத்துவம் என்றுவரும் - வெடிக் குண்டுகள் ஓசை, கொலை வெறிப் பேச்சு கேளா நாள்வருமா? சிரிப்பினை மறந்து இருந்திடும் சனங்கள் சிரித்திட வழிவருமா - உடல் தெருநடு வீதி தனில்விழும் அந்த ஓருநிலை மாறிடுமா? மக்களை மக்கள் மதித்திடும் நிலைதான் மண்ணில் வந்திடுமா? - மொழிச் சிக்கல்கள் ஓய்ந்து செம்மைகள் காணச் செகத்தில் நாள் வருமா? அடக்கு முறையும் அசுரத் தனமும் அடியோடு ஓடிடுமா? - இனி நடக்கும் காலம் தனிலே தானும் நன்மை கூடிடுமா? அடிமை விலங்கு அனைத்தும் தகர்ந்து அகிம்சை நிலை பெறுமா? - புவி விடிவு என்று புலரும் பொழுதை விரைவில் ஏற்றிடுமா?

    • 2 replies
    • 1.2k views
  16. நான் இரசித்த கவிதை இது. உங்களுக்காக இங்கு இணைக்கிறேன். எழுதியவரின் பெயர் சிந்து. அடிமைச்சிறை தகர்... பிறப்பிலிருந்து மரணம் வரை அறியாமை உனது வாழ்வானதோ? மழைக்குத் தோன்றி மாண்டு போகும் மண்புழுவா நீ? மலர்களும் காயப்படுத்தாத தென்றல் தான் பெண்கள் புயலாய் மாற்றம் கொண்டால் மலைகளையும் சாய்த்திடுவர் இடுப்பொடிந்து நீயும் தலைவணங்கியது போதும் கொஞ்சம் நிமிர்ந்து நீயும் வாழும் உலகைப் பார் எல்லாமே உனக்குள் அடங்குமடி பெண்ணே பெண்கள் மீது திணிக்கப்படும் பாலியல் வன்முறை ஆண்கள் இச்சை தீர்ந்தபின் சுருக்குக் கயிற்றில் இறுகிச் சாகும் விலங்கினமா பெண்கள்? அடிமை சிறை தகர்த்து சிறகுகள் முளைத்து சுதந்திர வானில் நீயும் பறந்திட வேண்டா…

  17. ஊமையாய்..... அன்பே உன் காந்தக் கதிர்கள் வீசும் கண்களால் தள்ளாடும் என் எண்ணங்கள் நித்தம் ஒரு புதிதாய் இன்ப சஞ்சாரங்கள் காட்டிய உன் கனவுகளால் நித்தம் வலம் வரும் இரவுகளில் சுகமான தொல்லை உன் நினைவு எனும் ஊற்று எந்நேரமும் புூத்த மலர் நறுமணமாய் என்னில் என் இதயத்தில் இன்றும் என்றும் மறக்காது உன் முகம் தினம் சொல்லுது என் யுகம் உன்னை தினம் நினைத்து நசசரிக்கும் என் எண்ணங்களால் எச்சரிக்கின்றேன் உன் மௌனத்தை தினம் ஊமையாய்

    • 14 replies
    • 2.1k views
  18. Started by gowrybalan,

    நிலவதனை தழுவிநின்ற முகிலவன் -ஏன் கண்ணீரைச் சொரிகின்றான்....? இன்று.... மதியதனைக் காணாது அவனும் -(நிம்)மதி இழந்து போனானா..

    • 12 replies
    • 2.7k views
  19. Started by வர்ணன்,

    தமிழன் !! ஒருவன் உழைப்பில் ஒன்பது பேர் உண்பான் தள்ளாடி அவர் விழும்வரை தந்தை உழைப்பில் வாழ்வான்! காதோரம் நரைமுடி தெரிகையில்தான் வேலை செய்ய நினைப்பான் ! காதலித்த பெண்ணை கூட கைபிடிக்க சீதனம் கேட்பான்! வெற்றிலை கடை யாரும் யாரும் திறந்தால் - தானும் அதையே செய்வான் - ! பாக்கு விற்க நினைக்கான் - ! செய்தால் இருவருக்கும் நன்மை .. என்று எண்ணான் - அவன் அழிந்தால் மட்டும் போதுமென்றே அசிங்கமாய் ஒரு சிந்தனை கொள்வான்! வீதி போட குவித்த - கல்லை அள்ளி தன் வீட்டுக்கு -வெள்ளம் வராமல் செய்வான் ! பள்ளம் வருமே - விழுவானே யாரும் என்றால் ....... எவனாவது செத்து போகட்டும் எனக்கென்ன என்பான்! பச்சை குழந்த…

  20. ஒரு நாளில் நாலில் ஒரு பங்கை நான் ஒவ்வொரு நாளும் கணணிக்கு படையல் செய்கிறேன் பதிலுக்கு கணணி பாடல்களையும் பல்சுவைத்தகவல்களையும் பரந்துபட்ட செய்திகளையும் பரிசளிக்கின்றது. என்னவென்று சொல்ல ஜங்கரனின் அருளை! பாலும் தெளிதேனும் பாகும் பருப்பும் அளித்த ஒளவையாருக்கு ஆனை வடிவில்! எனக்கு எலி உருவில்.!!

    • 4 replies
    • 1.6k views
  21. நிழல் சொல்லும் நிஜங்கள்!! கண்ணுக்குள் இமையாக காதல் உணர்வையே இசையாக நெஞ்சுக்குள் முள்ளாய்......... காற்றே நீ மூசு, பின்.......கண்களாய் மோதிப் பார்க்க வந்தாயா--!! வெளிச்சத்தைக் கொண்டு ....... விழிகளில் கரைந்து மடலில் வரைந்தது _சுவிற்மிச்சி(MCgaL)

    • 2 replies
    • 1.2k views
  22. அன்றொருநாள் அழுது கொண்டிருந்தேன்..... அம்மா மடியில்-முகம் புதைத்து விக்கி.....விக்கி......... அழுது கொண்டிருந்தேன்....... ஏன் அழுதேன்...? தெரியவில்லை-ஆனால் அழுது கொண்டிருந்தேன்....... தாயோ தலை வருடி தாலாட்டு பாடினாள்.... ''ஆராரோ...ஆரிவரோ.......'' அறியவில்லை.... அப்போதோ-அறியும் பருவம் இல்லை.... அழுது கொண்டேன் ''ஆராரோ....ஆரிவரோ.....'' புரிய வில்லை.. பருவம் வந்த பின்பும்... இன்றும் அழுகின்றேன் எதற்காக அழுகின்றேன்...? எனக்குப் புரியவில்லை ஆனால்-அழுகின்றேன்...... பாடம்மா- ஓர் தாலாட்டு இன்றவளைக் கேட்டுவிட்டால்... தாயவளும் அழுதிடுவாள்... அப்போ... யாரிடம் கேட்பேன் எனக்கோர் தாலாட்டு....?? ஏன்....? …

  23. Started by gowrybalan,

    பயணம் தொடங்கினேன்... தூறலும் தொடங்கியது அம்மா சொன்னவ ''மழையில நனையாதை'' எண்டு! ஒதுங்க இடம் தேடி...ஓடி... கடைசியில் - ஒரு தாவாரம்.. ஒதுங்கினேன்........ தாவாரம் வழியே தூவானம் வர உடல் நனைந்தது.... மனம் அடித்துக் கொண்டது... அம்மா சொன்னவ... ''மழையில நனையாதை'' எண்டு! தலைப்பில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது

    • 15 replies
    • 2.4k views
  24. விலகி விலகிப் போனாலும்...... அழகாய் இருக்கிறாய் ... பயமாய் இருக்கிறது!! காதல் இது தானா? விலகி விலகிப் போனாலும்...... மனசுக்கு பிடிததால் சந்தோசம் என்கிற தீபம் திறந்து விழிகள் இருண்டும் வியக்கிறது... ஆனால்.... இன்னும் ஒரு பயம்.. ஒரு வார்த்தை போதுமே சொல்லிவிட்டு தொடர்ந்து........., கடந்துப் போனது ....தடம்!! மனதுக்குள் மறைந்திருக்கிறதோ என் காதல்? இந்த கவிதை MCgaL(சுவிற்மிச்சி) எழுதியது

    • 2 replies
    • 1.3k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.