வண்ணத் திரை
சினிமா விமர்சனம் | சினிமாச் செய்திகள் | கருத்துகள்
வண்ணத் திரை பகுதியில் சினிமா விமர்சனம், சினிமாச் செய்திகள், உலக சினிமா சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் சினிமா விமர்சனங்களுக்கும் தரமான சினிமா சம்பந்தமான கட்டுரைகளுக்கும் முன்னுரிமை கொடுத்தல் வேண்டும். அளவுக்கதிகமான சினிமாச் செய்திகளையும், கிசுகிசு செய்திகளையும் தவிர்க்கவேண்டும்.
5547 topics in this forum
-
லாஸ் ஏஞ்செல்ஸ்: ஸ்லம்டாக் மில்லியனர் படம் சிறந்த படத்துக்கான ஆஸ்ரையும், அதன் இயக்குனர் டேனி போயலுக்கு சிறந்த இயக்குனருக்கான விருதும் கிடைத்துள்ளது. இதன்மூலம் இந்தப் படம் மொதமதம் 8 விருதுகளை வென்றுள்ளது. இதில் பணியாற்றிய இந்தியர்களான ரஹ்மான் 2 விருதுகளையும், சவுண்ட் மிக்சிங்குக்கு பூக்குட்டி ஒரு விருதையும் வென்றுள்ளனர். இந்தப் படத்துக்கான மற்ற ஆஸ்கர் மற்ற விருதுகளை வென்றவர்கள் இங்கிலாந்தைச் சேர்ந்தவர்கள் ஆவர். சிறந்த திரைக்கதை தழுவல் (Bஎச்ட் ஆடப்டெட் ஸ்cரேன்ப்லய்) விருது இந்தப் படத்தின் கதாசிரியர் சிமேன் பியேபோய்க்கும், சிறந்த சினிமாட்டோகிராபிக்கான விருது ஆண்டனி டாட் மாண்டலுக்கும் வழங்கப்பட்டுள்ளது. இந்தப் படம் மொத்தம் 10 பிரிவுகளின் கீழ் ஆஸ்கர் விருதுக…
-
- 0 replies
- 985 views
-
-
மேலாடை... இல்லாமல், போட்டோ எடுத்து வெளியிட்ட அஜீத் பட நடிகை. பிரேசிலை சேர்ந்த மாடலும், நடிகையுமான ப்ரூனா அப்துல்லா மேலாடை இல்லாமல் எடுத்த புகைப்படத்தை ட்விட்டரில் வெளியிட்டுள்ளார். பிரேசிலை சேர்ந்த மாடல் அழகி ப்ரூனா அப்துல்லா. மும்பைக்கு வந்தபோது பாலிவுட் படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. இதையடுத்து அவர் மும்பையில் தங்கி இந்தி படங்களில் நடித்து வருகிறார்.அஜீத்தின் பில்லா 2 படம் மூலம் கோலிவுட் வந்தார். அண்மையில் அவர் வெளிநாட்டில் கடற்கரையோரம் பிகினியில் எடுத்த புகைப்படங்களை சமூக வலைதளத்தில் வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார். இந்நிலையில் அவர் டாப்லெஸ்ஸாக ஒரு புகைப்படத்திற்க்கு போஸ் கொடுத்தார். அந்த புகைப்படத்தை அவர் ட்விட்டரில் வெளியிட்டுள்ளார…
-
- 0 replies
- 292 views
-
-
நடிகர் சிம்பு இயக்கியதாக கூறப்படும் மன்மதன் படத்தை உண்மையிலேயே சிம்பு இயக்கவில்லை வெறொருவர் இயக்கியதை தன்னுடைய பெயரை இயக்குனராக போட்டுக்கொண்டார் என்ற குற்றச்சாட்டு எழுந்து சில மாதங்களுக்கு முன் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. தற்போது மன்மதன் 2 படத்தை தானே தயாரித்து இயக்கவும் முடிவு செய்திருக்கிறாராம் சிம்பு. தனுஷ் எதை செய்தாலும் உடனே அதற்கு போட்டியாக செய்யும் குணம் படைத்த சிம்பு, தனுஷ் ஒரு வெற்றிகரமான தயாரிப்பாளராக வலம் வருவதை கண்டு பொறுக்காமல் தான் உடனே தயாரிப்பில் இறங்குவதாக கோலிவுட்டில் கிசுகிசுக்கப்படுகிறது. ‘மன்மதன்’.படத்தில் சிம்பு இரட்டை வேடத்தில் நடித்திருந்தார். குறிப்பாக, மொட்டை கேரக்டரில் இவர் நடித்திருந்தது ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. இந்த படத்தில் சிம்புவுக்கு …
-
- 0 replies
- 496 views
-
-
முதல்முறையாக விஜய் மூன்று வேடங்களில் நடிக்கிறார்!? #Vijay61 எம்.ஜி.ஆர்., சிவாஜி, ரஜினி, கமல் என எல்லோரும் இரட்டை வேடங்களில் நடித்த நிறைய படங்கள் சூப்பர், டூப்பர் ஹிட். விஜய்க்கும் இரட்டை வேடங்களில் நடிப்பதற்கு ஆசைதான். முதன்முதலாக ஹீரோ ப்ளஸ் வில்லன் என இரண்டு வேடங்களில் நடித்து வெளிவந்த `அழகிய தமிழ்மகன்' திரைப்படம் சரியாகப் போகவில்லை. 'என் மகன் வில்லனாக நடிப்பதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை' என விஜய்யின் அம்மா ஷோபா கூறியிருந்தார். அதன் பிறகு `இனிமேல் இரட்டை வேடங்களில் நடிப்பதில்லை. குறிப்பாக, வில்லன் போன்ற நெகட்டிவ் கேரக்டரில் நடிப்பதில்லை' என முடிவெடுத்தார். தாணு தயாரிப்பில் 'துப்பாக்கி' என்ற வெற்றிப் படத்தைக் கொடுத்து, விஜய்ய…
-
- 0 replies
- 423 views
-
-
ரீராம் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் பட நிறுவனம் சார்பாக அர்ஜுன் எழுதி ,இயக்கி, தயாரித்து நடிக்கும் படம் ஜெய்ஹிந்த் -2 கதாநாயகியாக சுர்வீன் சாவ்லா நடிக்கிறார் . புதுமுகமாக சிம்ரன் கபூர் என்ற முன்பை நடிகை ஒருவரும் அறிமுகமாகிறார். மற்றும் ராகுல்தேவ் , பிரம்மானந்தம், ரவிகாளே, அதுல் மாதூர், மயில்சாமி ,மனோபாலா, வினய்பிரசாத், நரசிம்ம ராஜு, கெளதம் சுந்தர்ராஜன், பரத்குமார், அமீத்திவாரி, பேபி யுனிதா ஆகியோர் நடிக்கிறார்கள். ஒளிப்பதிவு - H.C. வேணுகோபால் இசை - அர்ஜுன் ஜெனியா பாடல்கள் - வைரமுத்து கலை - சசிதர் அடாபா வசனம் - ஜி.கே. கோபிநாத் எடிட்டிங் - கே.கே நடனம் - ராஜு சுந்தரம், தினேஷ் ஸ்டன்ட் - பவர்பாஸ்ட் பாபு – கஜு நகைச்சுவை பகுதி - ராஜகோபால்.A தயாரிப்பு …
-
- 0 replies
- 463 views
-
-
தனது தாயாரே தன்னை விபச்சாரத்தில் ஈடுபடுத்தியதாக குற்றம் சாட்டியுள்ள நடிகை ப்ரீத்தி வர்மாவை அவரது குடும்பம் தலைமுழுகியுள்ளது. ப்ரீத்தி படத்துக்கு மாலை போட்டு, விளக்கேற்றியுள்ள அவரது குடும்பத்தினர் ப்ரீத்தி செத்துப் போய்விட்டதாக கருதுவதாக கூறியுள்ளனர். விந்தியாவின் மேனேஜர் கம் முன்னாள் காதலன் அருணுடன் ஓடிப் போன ப்ரீத்தி இப்போது எங்கே இருக்கிறார் என்று தெரியவில்லை. அருணை மும்பையில் வெட்டிவிட்டு எஸ்கேப் ஆகிவிட்ட ப்ரீத்தி தனது காதலன் விஜய்யுடன் எங்கேயோ போய்விட்டதாகக் கருதப்படுகிறது. இந் நிலையில் பணத்துக்காக தன்னை பணக்காரர்களுக்கு தனது தாய் ரம்யாவே தாரை வார்த்ததாகக் கூறியும், என்னைத் தேட வேண்டாம், நான் என் வாழ்க்கையை பார்த்துக் கொள்வேன் என்று சொல…
-
- 0 replies
- 875 views
-
-
உலகம் சுற்றும் நமிதா! பொறாமையில் பொசுங்கிக் கொண்டிருக்கிறார்கள் சக நடிகைகள். பத்து படம் நடித்தும் பொள்ளாச்சியை தாண்டாத நடிகைகளுக்கு மத்தியில் படத்துக்குப் படம் வெளிநாடு பறந்தால் பொறாமை புகையத்தானே செய்யும். நாம் சொல்வது நமிதாவை. அழகிய தமிழ் மகனில் நமிதாவுக்கு இரண்டே வசனம். ஆயினும் ஒரு முழு பாடல் காட்சிக்காக வெளிநாடு அழைத்துச் சென்றனர். பில்லாவில் நாலு வசனம். நாற்பது நாள் மலேசியாவில் தங்க வைத்தனர். வரப்போகும் பெருமாளிலும் இதே கதைதான். ஆனாலும் மொரீஷியஸ் அழைத்துச் சென்று ஆட வைத்தனர். இப்போது இந்திர விழாவில் நடித்துக் கொண்டிருக்கிறார். இந்தப்…
-
- 0 replies
- 1.4k views
-
-
ஈழத்தில் நடந்த உண்மையை எடுத்து சொல்லும் யாழ் படம்: - பிப்ரவரி மாதம் 26ம் தேதி வெளியீடு! [Saturday 2016-01-23 21:00] புதுமுக இயக்குனர் ஆனந்த் இயக்கத்தில் ஈழத்தில் நடந்த உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்ட உருவாகியுள்ள திரைப்படம் யாழ்.பல தமிழ் அமைப்புகள் மற்றும் ஈழம் சார்ந்த மக்களால் பெரிதும் பாராட்டப்பட்டு எதிர்ப்பார்ப்புக்குள்ளாக்கிய படம். நீண்ட போராட்டத்துக்கு பிறகு வருகிற பிப்ரவரி மாதம் 26ம் தேதி உலகம் முழுவதும் வெளியாகவுள்ளது.மேலும் இப்படத்தில் நடிகர் வினோத் கிஷ்ணன், மிஷா மற்றும் பாலுமகேந்திராவால் பெரிதும் பாராட்டப்பட்ட சஷி நடித்துள்ளார். ஒவ்வொரு தமிழனும் பார்க்க வேண்டிய திரைப்படமாக வந்துள்ளது, இதில் இடம் பெற்றுள்ள சிவாய நம பாடல் நல்ல வரவேற்பை பெற்றது குறிப…
-
- 0 replies
- 319 views
-
-
அங்கிங்கெனாதபடி எங்கெங்கும் விரிந்து கிடக்கும் சாமியார்களின் சாம்ராஜ்ஜியத்தில் வெளியே தெரியாத மர்மங்கள் பல பல! வீட்டுக்கு வீடு வாசற்படி என்பது மாதிரி எல்லா மாநிலங்களிலும் சாமியார்களை நம்பி மோசம் போன வி.ஐ.பி கள் நிறைய! இந்த வலையில் பெரும்பாலும் நடிகைகள் விழுந்து கிடப்பது மீடியாவுக்கும் பெருந்தீனியாக இருக்கிறது. சமீபத்தில் கேரள சாமியார் ஒருவர் போலீஸ் ஸ்டேஷனில் நிருபர் ஒருவரை சுட்டுத் தொலைக்க ஏக களேபரம். இவரை தோண்டி துருவி விசாரித்தபோதுதான் 'அந்த' தகவலை கக்கியிருக்கிறது சாமி. பிரபல மலையாள நடிகை காவ்யா மாதவன் சாமியார் நடத்திய நிர்வாண பூஜையில் கலந்து கொண்டாராம். முதலில் தயங்கிய இவரை முன்னணி நடிகையாக வேண்டாமா? என்று ஆசைகாட்டி அரை நிர்வாணமாக்கியதாக செய்தி சொல்கின்றன …
-
- 0 replies
- 1.9k views
-
-
[size=3]கலகலப்பு' படத்தில் 'இவளுக இம்சை தாங்க முடியல' பாட்டில் அஞ்சலியின் கவர்ச்சி குத்தாட்டத்தை பார்த்து ரசித்தவர்களுக்கு ஒரு 'சேட்டை' படம் ஒரு படி மேலேயே உற்சாகப்படுத்த இருக்கிறது. 'சேட்டை' படத்தில் அஞ்சலி ஒரு கவர்ச்சியான முத்தக் காட்சியிலும், ஹன்சிகா ஒரு கிளுகிளுப்பான படுக்கையறை காட்சியிலும் ரசிகர்களை சூடாக்க இருக்கிறார்கள். முத்தக் காட்சியில் நடிக்கிறது எல்லாம் ஒரு தப்பா... அது பாச முத்தமா கூட இருக்கலாம் என்று தன் கருத்தை கூறி இருக்கிறார் அஞ்சலி. " படம் ரிலீஸ் ஆகும்வரை இந்த ரகசியத்தை வெளியே சொல்லாதீர்கள் என்று இயக்குனரிடம் சொல்லியிருந்தும் ரகசியத்தை வெளியே சொல்லிவிட்டார். இந்தக் கதையை இயக்குனர் எனக்கு சொல்லும்போதே ஒரு டெஸ்ட் வெச்சார். ப…
-
- 0 replies
- 585 views
-
-
திரை விமர்சனம்: ஜீரோ அஸ்வினும் ஷிவதாவும் காதல் திருமணம் செய்துகொள் கின்றனர். ஷிவதாவுக்குப் பெற்றோர் இல்லை. அஸ்வினின் அப்பாவுக்கு இந்தத் திருமணத்தில் விருப்பம் இல்லை. அப்பா வின் எதிர்ப்பை மீறிக் காதல் தம்பதி யர் வாழ்கையைத் தொடங்கு கின்றனர். இனிய கனவுபோலத் தொடங்கும் அவர்களது வாழ்க்கை விரைவிலேயே பயங்கரக் கனவாக மாறுகிறது. கார ணம், ஷிவதாவுக்கு வரும் கனவுகள். ஷிவதாவின் கனவில் வரும் அவரு டைய அம்மா, தான் வசிக்கும் மாய உலகத்துக்கு மகளை அழைத்துச் செல்கிறார். இரு உலகங்களுக்கிடை யில் ஊசலாடும் ஷிவதாவுக்கு, காது களில் இரைச்சல் கேட்கும் ஆடிட்டரி ஹாலுசினேஷன், கண் எதிரே பாம்பு வருவதுபோன்ற விஷுவல் ஹாலு சினேஷன் என்று உளவியல் கோளாறு களும…
-
- 0 replies
- 400 views
-
-
ஜேம்ஸ் கேமரூன் என்றாலே பிரம்மாண்டம் தான் நம் நினைவுக்கு வரும். 2009-ம் ஆண்டு உலகையே திரும்பிப் பார்க்க வைத்த ‘அவதார்’ படம் வெளியாகி கிட்டத்தட்ட பல ஆண்டுகளுக்குப் பிறகு அதன் அடுத்தடுத்த பாகங்கள் குறித்த அறிவிப்பை கேமரூன் வெளியிட்டிருந்தார். அதன்படி கடந்த ’அவதார் 2’ கடந்த 2022-ல் வெளியானது. தற்போது அதன் மூன்றாம் பாகம் பெரும் எதிர்பார்ப்புடன் திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. முதல் இரண்டு பாகங்களில் காடு மற்றும் கடலை மையக் கருவாகக் கொண்டு பண்டோரா உலகத்தை வடிவமைத்த கேமரூன், மூன்றாவது பாகத்தில் நெருப்பை மையப்படுத்தி திரைக்கதையை எழுதியுள்ளார். ஜேக் சல்லி (சாம் வொர்திங்டன்) மற்றும் நெய்த்திரி (ஜோ சால்டனா) தங்களின் குடும்பத்தையும், பண்டோராவையும் பாதுகாக்கப் போராடும் அதே பழைய கதைதா…
-
- 0 replies
- 149 views
-
-
பதிவு செய்த நாள் : Dec 31 | 12:14 pm சென்னை, ‘‘சூர்யா, கார்த்தி இரண்டு பேரில் யார் சிறந்த அழகன், யாரை உங்களுக்கு பிடிக்கும்?’’ என்ற கேள்விக்கு அனுஷ்கா பதில் அளித்தார். இசை விழா கார்த்தி–அனுஷ்கா ஜோடியாக நடித்து, சுராஜ் டைரக்டு செய்துள்ள ‘அலெக்ஸ் பாண்டியன்’ படத்தின் இசை விழா, சென்னை ராயப்பேட்டையில் உள்ள ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் நடந்தது. அதில், திரளான ரசிகர்கள் கலந்து கொண்டார்கள். படத்தின் பாடல் காட்சிகள், ரசிகர்களுக்கு திரையிட்டு காண்பிக்கப்பட்டது. பாடல்களுக்கு கார்த்தி, நடிகைகள் நீது சந்திரா, தன்ஷிகா, இசையமைப்பாளர் தேவிஸ்ரீபிரசாத் ஆகியோர் நடனம் ஆடினார்கள். டைரக்டர் சுராஜ் எழுதி, மனோபாலா, மனோகர் நடித்த நகைச்சுவை நாடகமும் நடந்தது. அனுஷ்காவிடம் பேட்டி விழாவில் நடிக…
-
- 0 replies
- 455 views
-
-
இணையத்தில் வெளியான படத்தால் நடிகை அதிர்ச்சி பிரபல கன்னட நடிகை சோனு கௌடா, தமிழில் ஆண்மை தவறேல் திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். அதன் பிறகு அமரா, 144, நாரதன் திரைப்படங்களில் நடித்தார். தற்போது கவலை வேண்டாம் திரைப்படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்துள்ளார். இதுதவிர நாய்குட்டி படம், ஆளுக்கு பாதி, எங்க காட்டுல மழை படங்களில் நடித்து வருகிறார். சோனு கௌடா ஒரு ஆணுடன் மிகவும் நெருக்கமாக இருக்கும் படங்கள் தற்போது இணையதளத்தில் வைரலாக பரவி வருகிறது. அதோடு சோனு கௌடா பற்றிய தவறான தகவலும் அந்த படத்துடன் வெளிவந்துள்ளது. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த சோனு கௌடா, "படத்தில் இருப்பது என் கணவர். எங்களது அந்தரங்க படத்தை யாரோ விஷமிகள் வ…
-
- 0 replies
- 405 views
-
-
இலங்கையில் விஸ்வரூபத்தை திரையிட அரசாங்கம் அனுமதி By Nirshan Ramanujam 2013-02-10 11:50:20 விஸ்வரூபம் திரைப்படத்தை இலங்கையில் திரையிடுவதற்கு அரசாங்கம் அனுமதி வழங்கியுள்ளதாக கலாசார அமைச்சர் டி.பி. ஏக்கநாயக்க சற்றுமுன் வீரகேசரி இணையத்தளத்துக்குத் தெரிவித்தார். விஸ்வரூபம் படத்தில் ஒரு சில காட்சிகள் நீக்கப்பட்டுள்ள நிலையில் இத் திரைப்படத்தை திரையிட தீர்மானித்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார். http://www.virakesari.lk/article/local.php?vid=2958
-
- 0 replies
- 297 views
-
-
கட்டப்பா ஏன் பாகுபலியை கொன்றார்? ரகசியத்தை வெளியிட்ட சத்யராஜ் கட்டப்பா ஏன் பாகுபலியை கொன்றார்? என்ற ரகசியத்தை சத்யராஜ் போட்டு உடைத்துள்ளார். இதுகுறித்த செய்தியை கீழே விரிவாக பார்ப்போம். எஸ்.எஸ்.ராஜமௌலி இயக்கத்தில் வெளிவந்த ‘பாகுபலி’ படத்தை பார்த்தவர்கள் அனைவருக்கும் ஒரு பெரிய கேள்வி எழும். கட்டப்பா ஏன் பாகுபலியை கொன்றார்? என்பதுதான் அந்த மிகப்பெரிய கேள்வி. அந்த கேள்விக்கு தற்போது உருவாகிவரும் ‘பாகுபலி௨’ படத்தில் விடை கிடைக்கும் என்று அனைவரும்…
-
- 0 replies
- 329 views
-
-
தளபதி-65 படத்தின் தலைப்பு வெளியானது- மீண்டும் ஆங்கிலத்தில் பெயர்! நடிகர் விஜய்யின் தளபதி-65 படத்தின் தலைப்பும் முதல் பார்வையும் வெளியாகியுள்ளது. இந்த அறிவிப்பை சன் பிக்சர்ஸ் தயாரிப்பு நிறுவனம் இன்று (திங்கட்கிழமை) வெளியிட்டுள்ளதுடன் படத்துக்கு ‘பீஸ்ட் (Beast)’ என்று பெயரிடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே, இவ்வாண்டு விஜய் நடிப்பில் வெளியான ‘மாஸ்டர்’ படமும் ஆங்கிலப் பெயருடன் வெளியாகியிருந்தது. நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் ‘பீஸ்ட்’ படத்தில் நாயகியாக பூஜா ஹெக்டே நடிக்கின்றார். இந்தப் படத்தின் முதற்கட்டப் படப்பிடிப்பு ஜோர்ஜியாவில் நடைபெற்றுள்ள நிலையில் இரண்டாம் கட்டப் படப்பிடிப்பு சென்னையில் அரங்குகள் அமைக்கப…
-
- 0 replies
- 321 views
-
-
விக்னேஷ் சிவனுடன் காதலர் தினம் கொண்டாடிய புகைப்படத்தை ட்விட்டர் பக்கத்தில் பதிவேற்றிய நயன்தாரா! கோலிவுட்டின் பிரபல ஜோடி விக்னேஷ் சிவன் - நயன்தாரா. இருவரும் பிறந்த நாளாக இருந்தாலும் சரி, பண்டிகை தினங்களாக இருந்தாலும் சரி இணைந்து கொண்டாடுவார்கள். சமூக வலைத்தளங்களில் அவ்வப்போது புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை மகிழ்ச்சிக்கடலில் ஆழ்த்துவது நயன்தாராவின் வழக்கம். இந்நிலையில், அண்மையில் காதலர் தினம் முடிந்த நிலையில் தற்போது நயன்தாரா விக்னேஷ் சிவன் ஜோடி தங்களின் கொண்டாடத்தை ட்விட்டரில் பதிவு செய்துள்ளனர். http://www.dinamani.com/cinema/cinema-ne…
-
- 0 replies
- 398 views
-
-
சினிமா குப்பைக்குள் ஒரு மிளிரும் மாணிக்கமாய் இலக்கணம் திரைப்படம் வெளிவந்துள்ளது. துயதமிழில் கவிதையாய் இத் திரைப்படத்தை உருவாக்கியுள்ளார்கள். குடும்பத்தினருடன் அமர்ந்து இரசிக்கக் கூடிய திரைப்படம். குலுக்காட்டங்களும் நம்பமுடியாத அடிதடிகளும் அற்ற ஒரு அழகு காவியம். அனைவரும் பார்த்து ரசிக்க வேண்டியதோன்று. சுப.வீரபாண்டியன் அவர்கள் இதில் நடித்துள்ளார். ஜானா
-
- 0 replies
- 878 views
-
-
மேஜையில் தாளம்போட்டு வாய்ப்புகள் கேட்டேன்: இளையராஜா உருக்கம் சஞ்சய், நந்தினி ஜோடியாக சுப்புசுஜாதா இயக்கிய “தாண்டவக் கோனே படத்தின் பாடல் சி.டி. வெளியீட்டு விழா வடபழனியில் நடந்தது. நடிகர்கள் சம்பத், சுப்பு, தயாரிப்பாளர் பிரபாகர் சீனிவாசகம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இப்படத்துக்கு இளையராஜா இசை அமைத்துள்ளார். பாடல் சி.டி.யை வெளியிட்டு அவர் பேசியதாவது: புதுசா வருபவர்களை ஊக்குவிப்பது என் சுபாவம். ஆரம்ப காலங்களில் நானும் சிரமப்பட்டேன். எனக்காக என் அண்ணன் ஆர்.டி.பாஸ்கர் சினிமா கம்பெனிகள் படியேறி வாய்ப்பு கேட்டு அலைவார். எங்கேயாவது சிறிய சினிமா கம்பெனி போர்டு தொங்கினால் கூட அங்குபோய் என்தம்பி நல்ல மியூசிக் போடுவான். கேட்டுப் பாருங்க என்பார். பிறகு எஸ்.பி.பாலசுப…
-
- 0 replies
- 945 views
-
-
கல்யாணத்துக்கு அப்புறம்.. நஸ்ரியாவின் உடல் எடை அதிகரித்துள்ளது. நஸ்ரியா குண்டாக இருக்கும் புகைப்படங்கள் வெளியானதை பார்த்து பலரும் அவரை சமூக வலைதளங்களில் கிண்டல் செய்துள்ளனர். நஸ்ரியா குண்டானால் மற்றவர்களுக்கு என்ன? அது அவர்களுக்கு தேவையில்லாத விஷயம். பார்க்க எப்படி இருக்கிறோம் என்பதற்கு முக்கியத்துவம் அளிக்காதவர்கள் நானும், நஸ்ரியாவும் என்று பஹத் தெரிவித்துள்ளார். Read more at: http://tamil.filmibeat.com/heroines/nazriya-s-weight-gain-is-no-one-concern-fahad-038700.html#slide43141
-
- 0 replies
- 1.1k views
-
-
திரை விமர்சனம்: தோழா சர்வதேசத் திரைப்படங்களை அதிகார பூர்வமாகவே ரீமேக் செய்யும் போக்குக்கு கோலிவுட் மாறியிருக் கிறது. ‘தூங்காவனம்’, ‘காதலும் கடந்து போகும்’ படங்களைத் தொடர்ந்து ‘தோழா’. ‘தி இன்டச்சபிள்ஸ்’ என்னும் பிரஞ்சுத் திரைப்படத்தைத் தழுவி, ‘தோழா’வை இயக்கியிருக்கிறார் டோலிவுட் இயக்குநர் வம்சி பைடிபள்ளி. அக்கினேனி நாகார்ஜுனா குவாட்ரி பிளேஜியாவால் (கழுத்துக்குக் கீழே உடலியக்கம் இல்லா நிலை) பாதிக்கப் பட்ட கோடீஸ்வரத் தொழிலதிபர். அவரைக் கவனித்துக்கொள்ளும் காப் பாளர் பணி நேர்காணலுக்குச் செல்கிறார் சிறையிலிருந்து பரோ லில் வெளியே வரும் கார்த்தி. கார்த்தியின் இயல்பான, கலகலப்பான சுபாவம் பிடித்துப்போக அவரையே காப்பாளராக நியமிக்கிறார…
-
- 0 replies
- 546 views
-
-
கொஞ்சம் கூட பயமில்லாத பேச்சு, கொஞ்சம் கூட மக்களை பொய் சொல்லி ஏமாத்தாம உள்ளுக்குள்ள என்ன இருக்கோ ,அதை அப்படியே கொட்டிட்டு , அவ்வளவு தாண்டா நடிகன்னு' சாதரணமா சொல்லிட்டு போய்ட்டே இருக்கார் எம்.ஆர்.ராதா . வாழ்வுரீதியான அல்லது கலைரீதியான புனிதத்தன்மையை தன் மேல அள்ளி பூசிக்கிட்டு, தலைக்கு பின்னாடி ஒரு ஒளி-ஒலி வட்டத்தோட இருக்கிறா மாதிரி தன்னை தானே நினைச்சிட்டு , தன்னோட பேச்சை கேக்குற மக்களேயும் ஏமாத்தி, தானும் ஏமாந்து , உண்மையில் இருந்து ரொம்ப தூரம் வாழ்ந்துகிட்டு இருக்குற நடிகர்களும் அவர்களை இன்னும் மலை போல நம்பிட்டு இருக்கிற கோடானு கோடி ரசிகர்களும் நிறைஞ்ச பூமி நம்ம தமிழ்நாடு . இன்னைக்கு தேதில தமிழ்நாட்டு மக்களுக்கு சினிமா, டி.வி தான் உலகம். இதையே பார்த்து இதுல வேலை …
-
- 0 replies
- 2.4k views
-
-
குசேலன் படம் நஷ்டம் அடைந்துள்ளதால் ஐங்கரன் இன்டர்நேஷனல் நிறுவனத்துக்கு பெரும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.கவிதாலயா, செவன் ஆர்ட்ஸ் இணைந்து தயாரித்துள்ள படம் குசேலன். இதில் ரஜினி கவுரவ வேடத்தில் நடித்தார். இப்படம் ஆகஸ்ட் 1ம் தேதி திரைக்கு வந்தது. தமிழகத்தில் 375 தியேட்டர்களில் இப்படம் திரையிடப்பட்டது. எதிர்பார்த்த அளவு இப்படம் ஓடாததால் வினியோகஸ்தர்கள், தியேட்டர் அதிபர்கள் பெரும் நஷ்டத்தை கண்டுள்ளனர். இதையடுத்து தமிழ்நாடு தியேட்டர் அதிபர்கள் சங்கத்தினர் சென்னையில் ஆலோசனை நடத்தினர். இப்படத்தால் தங்களுக்கு ரூ. 40 கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளது. அதற்கு கவிதாலயா, செவன் ஆர்ட்ஸ் நிறுவனம் நஷ்ட ஈடு வழங்க வேண்டும். இந்த விவகாரத்தில் ரஜினி தலையிட வேண்டும் என கோரியுள்ளனர். குசேலன் படத்தை…
-
- 0 replies
- 1.4k views
-
-
திரை விமர்சனம்: இறைவி ஆண்களின் நிதானமின்மையாலும் பொருளற்ற ஆவேசத்தாலும் பாதிக்கப்படும் பெண்களின் கதைதான் ‘இறைவி’. அருள் (எஸ்.ஜே.சூர்யா) திரைப்பட இயக்குநர். தயாரிப்பாளருடன் ஏற்பட்ட மோதலால் இவரது படம் வெளியாகாமல் இருக்கிறது. இதனால் அவர் பெரும் குடிகாரராக மாறிவிடுகிறார். இவரது மனைவி யாழினி (கமலினி முகர்ஜி) துயரத்தில் மூழ்குகிறார். அருளின் தம்பி ஜெகன் (பாபி சிம்ஹா) அருளுக்கு உறுதுணையாக இருக்கிறார். இந்தக் குடும்பத்துக்கு நெருக்கமானவர் மைக்கேல் (விஜய் சேதுபதி). இவருக்கும் கணவனை இழந்த மலர்விழிக்கும் நெருங்கிய தொடர்பு இருக்கிறது. மலர்விழியை மைக்கேல் காதலிக்கிறார், ஆனால் மலர்விழிக்கு காதலில் நம்பிக்கை இல்லை.…
-
- 0 replies
- 408 views
-