Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வண்ணத் திரை

சினிமா விமர்சனம் | சினிமாச் செய்திகள் | கருத்துகள்

பதிவாளர் கவனத்திற்கு!

வண்ணத் திரை பகுதியில் சினிமா விமர்சனம், சினிமாச் செய்திகள், உலக சினிமா சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் சினிமா விமர்சனங்களுக்கும் தரமான சினிமா சம்பந்தமான கட்டுரைகளுக்கும் முன்னுரிமை கொடுத்தல் வேண்டும். அளவுக்கதிகமான சினிமாச் செய்திகளையும், கிசுகிசு செய்திகளையும் தவிர்க்கவேண்டும்.

  1. சில ஆச்சரியங்கள்,சில அதிர்வுகளைக் கொடுத்துவிட்டு தமிழ் சினிமாவிற்கு ‘குட் பை’ சொல்லியிருக்கிறது 2010. இந்த வருடம் மட்டும் நூற்றிமுப்பத்தியாறு படங்கள் வெளி வந்திருக்கின்றன.அதில் டாப் 10 படங்கள் எவை? சினிமா விமர்சகர்கள், சினிமா துறைகளில் அனுபவம் அதிகமுள்ளவர்களிடம் கேட்டுத் தயாரித்த, பட்டியல் இது. 2010-இல் ரஜினி, கமல், அஜீத், விஜய், விக்ரம், சூர்யா, சிம்பு, தனுஷ், ஆர்யா, விஷால், ஜெயம் ரவி, கார்த்தி, பரத் என தமிழ் சினிமாவின் ‘ஆல் ஏஜ் குரூப்’ முன்னணி ஹீரோக்கள் அனைவரது படங்களும் வெளிவந்தது ஒரு கலர்ஃபுல் கமர்ஷியல் கலாட்டா.இதில் கதையை நம்பிய நாயகர்களே கமர்ஷியல் கதாநாயகர்களாக பந்தயத்தில் முந்தியிருக்கிறார்கள். இயல்பான வாழ்க்கையைப் பிரதிபலிக்கும் கதை, கதாபாத்திரங்களுக்கு பொ…

    • 0 replies
    • 939 views
  2. மைக்கேல் டக்ளஸ்... இரண்டு முறை ஆஸ்கர் வென்ற இந்த நடிகர் கேன்சர் நோயையும் வென்றிருக்கிறார். மைக்கேல் டக்ளசுக்கு தொண்டையில் புற்று நோ‌ய் இருப்பது மிக தாமதமாகதான் கண்டுபிடிக்கப்பட்டது. நோய் அப்போது இருந்தது நான்காவது நிலையில். ரேடியோதெரபி மற்றும் கீமோதெரபி சிகி‌ச்சை மைக்கேலுக்கு அளிக்கப்பட்டது. இந்த சிகி‌ச்சைக்குப் பின் சமீபத்தில் அவர் ஊடகம் ஒன்றுக்கு பேட்டியளித்தார். அதில் புற்று நோயிலிருந்து தான் பூரணமாக குணமடைந்துவிட்டதாகவும், நோயை வென்றுவிட்டதாகவும் தெ‌ரிவித்தார். மைக்கேலின் மூத்த மகன் போதைப் பொருள் வைத்திருந்ததாக ஜெயிலுக்கு அனுப்பப்பட்ட நேரத்தில்தான் மைக்கேலுக்கு கேன்சர் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. ட்ராஃபிக், வால் ஸ்ட்‌ரீட், பேசிக் இன்ஸ்டிங்க்ட் போன்ற …

    • 0 replies
    • 475 views
  3. ஆஸ்கர் விருது பெற்ற இந்திய இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான், இம்முறை கோல்டன் குளோப் விருதை வெல்லும் வாய்ப்பை இழந்தார். டானி பாயிலின் இயக்கத்தில் உருவான '127 ஹவர்ஸ்' படத்துக்காக சிறந்த பின்னணி இசைக்கான பிரிவில் கோல்டன் குளோப் விருதுக்கு ரஹ்மான் பரிந்துரைக்கப்பட்டிருந்தார். இந்நிலையில், இப்பிரிவுக்கான விருதை 'தி சோஷியல் நெட்வொர்க்' படத்துக்காக இசையமைப்பாளர்கள் டிரெண்ட் ரெஸ்னர் - ஆட்டிகஸ் ரோஸ் வென்றனர். இதனால், ரஹ்மானுக்கு கோல்டன் குளோப் விருது கிடைக்கும் என்ற இந்திய ரசிகர்களின் எதிர்ப்பார்ப்பு இம்முறை நிறைவேறவில்லை. முன்னதாக, டானி பாய்லின் 'ஸ்லம்டாக் மில்லியனர்' படத்துக்காக 2009-க்கான கோல்டன் குளோப் விருதை ரஹ்மான் பெற்றார். அதே படத்துக்காக அவர் இரண்டு ஆஸ்கர்களை அள…

    • 0 replies
    • 340 views
  4. அறிவு' படத்தை அடுத்து கே.வி.ஆனந்த இயக்கும் 'மாற்றான் உருவாகிறான்' படத்தில் நடிக்க இருக்கிறார் சூர்யா. தற்போது ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ஏழாம் அறிவு படத்தில் நடித்து வரும் அவர், அதையடுத்து கே.வி.ஆனந்த் இயக்கத்தில் 'மாற்றான் உருவாகிறான்' எனும் படத்தில் நடிக்க இருக்கிறார். அயன் படத்தை போலவே இப்படத்துக்கும் சுபா கதை எழுத, ஹாரிஸ் ஜெயராஜ் இசை அமைக்கவிருக்கிறார். கதாநாயகி யார் என்பது இன்னும் முடிவாகவில்லை. எனிடும் அஞ்சலி அல்லது அமலா பால் நடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு ஏப்ரல் மாதம் முதல் தொடங்க உள்ளது. இதனிடையே தமிழ் '3 இடியட்ஸ்' படத்திலும் சூர்யா நடிப்பது உறுதி செய்யப்பட்டாலும், அப்படத்தின் படப்பிடிப்பு வரும் ஜனவரி 23ம் தேதி முத…

    • 0 replies
    • 434 views
  5. இதில் மூன்று கோடியை தருவதாக ஒப்புக் கொண்டாராம் விஜய். ஆனால் கடைசி நேரத்தில் அதற்கும் பிரச்சனை. சொந்த வீட்டிலிருந்தே அதற்கும் எதிர்ப்பு எழுந்ததாக கூறப்படுகிறது. விஜய்யின் தனிக்கட்சி மூட், எஸ்.ஏ.சியின் ஜெயலலிதா சந்திப்பு இவ்விரண்டும்தான் அவரது படத்திற்கு சிக்கலை ஏற்படுத்தியிருக்கிறதோ என்ற எண்ணம் அழுத்தமாக விதைக்கப்பட்டிருக்கிறது சினிமா வட்டாரத்தில். “இந்த பிரச்சனையில் நான் உதவட்டுமா?” என்று, தானே முன்வந்து விஜய்யிடம் பேசினாராம் கேப்டன் விஜயகாந்த். அது மேலும் பல அரசியல் சிக்கல்களை ஏற்படுத்தக் கூடும் என்பதால் இப்போதைக்கு அதை நிறுத்தி வைத்திருக்கிறார் விஜய் என்றும் கிசுகிசுக்கிறார்கள் கோடம்பாக்கத்தில். இறுதி நேரம் வரைக்கும் நம்பிக்கையை விடாமல் போராடிக் கொண்டிருக்கிறா…

    • 0 replies
    • 603 views
  6. நடிகை ரம்பாவுக்கு பெண் குழந்தை கனடாவில் பிறந்தது புதன், 19 ஜனவரி 2011 10:40 நடிகை ரம்பாவுக்கும், கனடாவை சேர்ந்த தொழில் அதிபர் இந்திரகுமாருக்கும் கடந்த ஒரு வருடத்துக்கு முன்பு திருமணம் நடந்தது. ரம்பா கர்ப்பம் ஆனார். நிறைமாத கர்ப்பமாக இருந்த அவருக்கு பிரசவ வேதனை ஏற்பட்டது. உடனடியாக டொரான்டோ நகரில் உள்ள மவுன்ட் சினை ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது. தாயும், குழந்தையும் நலமாக இருப்பதாக, ரம்பாவின் கணவர் இந்திரகுமார் தெரிவித்தார். tamilcnn.com

  7. Started by வீணா,

    நேற்று தான் மகிழ்ச்சி திரைப்படம் காண வாய்ப்பு கிடைத்தது. நீண்ட நாட்களுக்கு பின்னர் ஒரு நல்ல திரைப்படம் பார்த்த நிறைவை அது அளித்தது, இதை ஏன் சினிமா ஆர்வலர்கள் அதிக அளவில் மக்களிடம் கொண்டு சேர்க்க தவறிவிட்டார்கள்? என்னும் கேள்வியும் தொக்கி நின்றது.தலைமுறைகள் என்னும் எழுத்தாளர் நீல.பதமநாபனின் நாவலை நண்பர் செ.சரவணகுமாரின் அறிமுகம் மூலமே அறிவேன், அதன் கதையையும் அவரின் பதிவின் மூலமே அறிந்திருந்த எனக்கு அதை உடனே பார்க்க ஆவல் எழுந்தது. சென்னையில் எங்கு தேடியும் இந்த படத்தை பற்றிய தகவலே இல்லை.யாரும் இவ்வளவு நல்ல படத்தை வாங்கி திரையிடுவதில் ஆர்வம் காட்டாதது வியப்பையும் வேதனையையுமே தந்தது. மக்கள் ஆர்வம் டிவி சீரியல்கள் மீது அதீதமாக பாய்ந்துவிட்டதால் இன்றைய இயக்குனர்கள் யாரும் …

  8. ஐஃபாவில் இருந்து அமிதாப் பச்சன் விலகினார் இந்தியா சர்வதேச திரைப்பட விழாவின் (ஐஃபா) தூதராக கடந்த 10 ஆண்டுகளாக இருந்த இந்தி நடிகர் அமிதாப் பச்சன், அப்பொறுப்பில் இருந்து விலகியுள்ளதாக அறவித்துள்ளார். இலங்கை தலைநகர் கொழும்புவில் நடைபெற்ற ஐஃபா விழாவினை தமிழர்கள் கடுமையாக எதிர்த்ததையடுத்து, அவ்விழாவில் கலந்து கொள்ளாமல் அமிதாப் பச்சன் புறக்கணித்தார். அவருக்கு பதிலாக இந்தி நடிகர் சல்மான் கான் ஐஃபா தூதராக பொறுப்பேற்றார். ஆயினும் கொழும்பு ஐஃபா விழா படுதோல்வியில் முடிந்தது. இந்த நிலையில், டிவிட்டர் இணையத் தளத்தில், “ஐஃபாவிற்கு நாங்கள் வரவில்லை. எங்களுடைய சேவை ஐஃபாவிற்குத் தேவைப்படவில்லை” என்று அமிதாப் கூறியுள்ளார். “இந்த முடிவை நான் எடுக்கவில்லை... ஐஃபாவின் அடு…

    • 0 replies
    • 899 views
  9. Started by வீணா,

    இந்தாண்டின் துவக்கமே தனுஷுக்கு மட்டுமல்ல நமக்கும் ஒரு நல்லதொரு சினிமாவைக் கொடுத்திருக்கிறது சேவற்கட்டு என்னும் சேவற்சண்டை தென் மாவட்டங்களில் காளை பிடிக்கும் வீர விளையாட்டைப் போலவே பன்னெடுங்காலமாக நடைபெற்று வருவதுதான்.. எப்போது ஆரம்பித்தது என்று தெரியவில்லை. ஆனால் சண்டைகளுக்காகவே சேவல்கள் வளர்க்கப்படுவதும், அந்தச் சண்டைக் காட்சிகள் ஆங்காங்கே நடப்பதும் நினைவு தெரிந்த நாளில் இருந்து பார்த்து வந்ததுதான். ஆனால் அதனையே ஒரு கதைக்களமாக்கி நான் பார்க்கும் முதல் திரைப்படம் இதுதான். சேவற்சண்டை பற்றிய ஒரு ஆவணப் படம் என்று சொல்லுகின்ற அளவுக்கு படத்தின் முற்பாதி முழுக்க சேவல்களின் ஆக்கிரமிப்பு அதிகம். எந்த அளவுக்கு சேவலுக்கு முக்கியத்துவம் கொடுத்து வளர்க்க வேண்டும்..? த…

    • 1 reply
    • 1k views
  10. “127 அவர்ஸ்” ஆங்கில படத்துக்கு இசை அமைத்த ஏ.ஆர்.ரகுமானுக்கு அமெரிக்க திரைப்பட விருது ஞாயிற்றுக்கிழமை, 16 ஜனவரி 2011 16:45 இசை அமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானுக்கு அமெரிக்க திரைப்பட விருது கிடைத்துள்ளது. தமிழகத்தைச் சேர்ந்த இசை அமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான். இவர், “27 அவர்ஸ்” என்ற ஆங்கிலப்படத்துக்கு இசை அமைத்து இருந்தார். இந்தப் படத்தில் ”இப் ஐ ரைஸ் என்ற பாடலை ரகுமான் இசையில் பாப் பாடகர் டிடோ பாடியிருந்தார். இந்த பாடலுக்கு இசை அமைத்ததற்காக ரகுமானுக்கு அமெரிக்காவின் திரைப்பட விருது கிடைத்துள்ளது. அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள பிலிம் கிரிடிக்ஸ் அசோசியேசன் சார்பில் “சாய்ஸ் மூவி” என்ற விருது வழங்கப்பட்டுள்ளது. தி சோசியல் நெட் ஒர்க் என்ற படத்துக்கு சிறந்த படத்துக்கான வ…

    • 2 replies
    • 1k views
  11. Started by வீணா,

    தைபொங்கல் வெளியீடாக நடிகர் கார்த்தி,தமனா மற்றும் சந்தானம் நடிப்பில் வெளியாகி இருக்கிறது சிறுத்தை.சிவா இயக்கி உள்ளார்.இவரின் முதல் தமிழ் படம் இதுவாகும் தெலுங்கில் இவர் souryam , sankham.ஆகிய படங்களை இயக்கி உள்ளார்,இசை வித்தியாசாகர் ,stunt கணேஷ்,art ரஜீவன் ,எடிட்டிங் v .t விஜயன் ,ஒளிப்பதிவு r .வேல்ராஜ் கார்த்திக் இன் உறவினர் ஞானவேல் ராஜா தயாரித்துள்ளார்...... தெலுங்கில் வெளியான vikramarkudu ன் ரீ மேக் தான் சிறுத்தை...கதை பின்னணியும் அந்த வில்லதனம்களும் முற்றுமுழுதாக ஆந்திராவுக்கே உரியது... இந்தியாவுக்கே உரித்தான அரசியல்வாதிகள் தாதாக்கள் போலீஸ் இது தான் கதை... சந்தானமும் கார்த்திக்கும் பக்கா திருடர்கள் அதும் பிளான் பண்ணி திருடுவதில் கில்லாடிகள்.ஒரு மார்க…

  12. திங்கட்கிழமை, 10, ஜனவரி 2011 (18:47 IST) பிரபல நகைச்சுவை நடிகை தற்கொலை பிரபல தமிழ் திரைப்பட நகைச்சுவை நடிகை ஷோபனா சென்னையில் தற்கொலை செய்து கொண்டார். இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 32 வயதான சோபனா, தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும், சில்லுன்னு ஒரு காதல், சிறுத்தை உள்ளிட்ட ஏராளமான தமிழ் திரைப்படங்களில் நகைச்சுவை வேடங்களில் நடத்துள்ளார். 15 வயதில் நடிக்க தொடங்கிய சோபனா, இதுவரை ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொலைக்காட்சி மற்றும் திரைப்பட நிகழ்ச்சிகளில் நடித்துள்ளார். சோபனாவின் தாயார் ராணியும் திரைப்படங்களில் துணை நடிகையாக நடித்தவர். வைரம் உள்பட பல படங்களில் துணை நடிகையாக நடித்துள்ளார். சென்னை கோட்டூர்புரம் வீட்டு வசதி க…

  13. http://www.youtube.com/watch?v=DHHRsjjE810&feature=player_embedded

    • 2 replies
    • 1.7k views
  14. 150 கோடியில் எந்திரன் எடுத்த பிறகு, 200 கோடி வரை ஒரு படத்துக்கு செலவழித்தாலும் லாபம் பார்க்க முடியும் என்ற நம்பிக்கையை சன் பிக்சர்ஸ் ஏற்படுத்தியிருக்கிறது. இந்த நம்பிக்கையை முதலில் அறுவடை செய்யப் போகிறவர் மணிரத்னம் என்கின்றன தகவல்கள். கல்கியின் பொன்னியின் செல்வன் நாவலை படமாக்குகிறார் மணிரத்னம். இதற்கு பெரும் தொகை தேவை. அதாவது 200 கோடிக்கும் மேல். இந்த‌ப் பெரும் தொகை இப்போதைக்கு சன் பிக்சர்ஸிடம் மட்டுமே உள்ளது. மணிரத்னத்தின் படம் என்றால் வடக்கேயும் வெளியிட்டு கல்லாகட்ட முடியும். சுமாரான ராவணனே இரண்டு வாரங்களில் இருபது கோடிக்குமேல் வடக்கே வசூல் செய்தது. இதையெல்லாம் கூட்டிக் கழித்த சன் பிக்சர்ஸ் முதலீடு செய்ய முடிவு செய்திருப்பதாக கூறுகிறார்கள். விரைவில…

    • 0 replies
    • 1.3k views
  15. இந்திய இறையாண்மைக்கு எதிரான படமென லீனா மணிமேகலையின் செங்கடல் படத்துக்கு தடை! தமிழ் இலக்கிய பரப்பில் நன்கு பரிச்சயமான, பெண்கவிஞர் லீனா. மணிமேகலையின் செங்கடல் படத்துக்கு தமிழக திரைப்படத் தணிக்கைக்குழு தடை விதித்திருப்பதாகத் தெரியவருகிறது. இந்திய இறையாண்மைக்கு எதிரான படம் என்ற காரணத்தினாலேயே இதற்குத் தடைவிதிக்கப்பட்டிருப்பதாகவும் மேலும் அறியப்படுகிறது. இலக்கிய வட்டம், ஆவணப்பட வட்டாரம், ஆகியவற்றில் பிரபலமான பெண் கவிஞர் லீனா. மணிமேகலை. பறை உட்பட்ட இவர் இயக்கிய பல ஆவணப் படங்கள், சர்வதேச அளவில் விருதுகளை அள்ளியிருக்கின்றன. ஒற்றை இலையென, உலகின் அழகிய இளம்பெண் போன்ற இவரது கவிதைத் தொகுப்புக்களும் நவீன தமிழ் கவிதைப் பரப்பில் நவீன பெண்மொழிக்காக பாராட்டப் பட்டு வருபவை. ஈ…

  16. ரஜினியின் எந்திரன்... 100 ஆவது நாள் சாதனை! ஞாயிற்றுக்கிழமை, 09 ஜனவரி 2011 10:17 சூப்பர் ஸ்டார் ரஜினி நடித்த எந்திரன் திரைப்படம் இன்று உலகம் முழுவதும் 100 வது நாளைத் தொட்டிருக்கிறது. இன்றைக்கு திரைப்பட உலகம் உள்ள சூழலில் 100 நாட்கள் ஒரு படம் ஓடுவதே பெரிய சாதனைதான். ஆனால் எந்திரன் படம் இதுவரை எந்த இந்தியப் படமும் வெளியாகாத அளவுக்கு 3000 திரையரங்குகளில் வெளியானது உலகம் முழுக்க. தமிழகத்தில் அதிகாரப்பூர்வமாக 600 திரையரங்குகள் என்று சொல்லப்பட்டாலும், முதல் வாரத்தில் மட்டும் கிட்டத்தட்ட 1100-க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியானது. ஒரு தியேட்டர் காம்ப்ளெக்ஸில் 6 திரையரங்குகள் இருந்தால், அதில் 5-ல் எந்திரனை வெளியிட்டனர். மாயாஜாலின் 10 திரையரங்குகளில் தொடர்…

  17. 1958 ம் ஆண்டு எம்ஜி.ராமச்சந்திரன் அவர்கள் இலங்கை வாணோலிக்கு வழங்கிய செவ்வி. http://www.archive.org/details/MgrInterviewInCeylonRadio1-3-1958.mp3

    • 0 replies
    • 1.2k views
  18. சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் படம் என்றாலே மற்ற பத்திரிகைகளுக்கு படங்கள் கொடுப்பதையோ, தனி ஷோ போடுவதையோ விரும்ப மாட்டார்கள். ஆனால் ரிலீசுக்கு சில தினங்களுக்கு முன்பு போனால் போகிறதென்று சில படங்களை அனுப்பி வைப்பார்கள். எந்திரன் படத்திற்கு இப்படி ஒரு இழுபறி ஏற்பட்டதால் தனது வெப்சைட்டில் படங்களை வெளியிட்டார் ஷங்கர். இந்த முறை ஆடுகளம் படத்திற்கு அதுவும் நடக்கவில்லை. ஷங்கருக்கு இருக்கிற தைரியம் வெற்றிமாறனுக்கு இல்லை என்பதும் ஒரு காரணம். பொங்கல் நெருங்கிக் கொண்டிருக்கிற இந்த நேரம் வரை வழக்கமாக அனுப்பி வைக்கிற ஸ்டில்களோ, ட்ரெய்லரோ கூட யாருக்கும் வழங்கப்படவில்லை. சன் பிக்சர்ஸ் கண்டு கொள்ளாவிட்டாலும் பரவாயில்லை. நாம் பத்திரிகைகளோடு நெருக்கமாக இருக்க வேண்டும் என்று நினைத்…

    • 0 replies
    • 1.2k views
  19. விஜயகாந்த், விஜய் இருவரையும் சுற்றிய அரசியல் இப்போது சத்யராஜ் பக்கம் வீசத் தொடங்கியிருக்கிறது. விஜயகாந்தோடு நெருக்கம்; விடுதலைச் சிறுத் தைகளோடு ஊர்வலம் என்று தென்பட்டவரை நேரில் சந்தித்தே கேட்டோம். ‘சட்டப்படி குற்றம்’ படத்துக்காக வயது குறைந்து தெரிந்தார். எப்படி போயிட்டிருக்கு உங்க சினிமா கேரியர்... எத்தனை படங்கள்ல டூயட் பாடுறீங்க...? ‘‘ஐயோ... அந்த தப்பை மட்டும் இனிமேல் செய்யமாட்டேன். டூயட் இல்லாத கேரக்டர் உள்ள படங்களை செலக்ட் பண்ணி நடிக்கிறேன். கலவரம், முறியடி, த்ரீ இடியட்ஸ், வெங்காயம், குலசேகரனும் கூலிப்படையும், சட்டப்படி குற்றம், சினம், ஆயிரம் விளக்கு இப்படி நான் நடிக்கிற எந்தப் படத்திலும் எனக்கு டூயட் கிடையாது. இனி நான் கதையின் நாயகனாதான் வருவேன்.’’ ‘எ…

    • 0 replies
    • 900 views
  20. ஒரு ரிலாக்ஸ் மூடில் விஜயைச் சந்தித்தோம். ‘வேலாயுதம்’ படத்தில் வரும் அதிரடி சூப்பர் ஹீரோ கெட்டப்பில் இருந்தவர் ஜாலியாக பேச ஆரம்பித்தார். இனி விஜயின் மினி பேட்டி... ‘வேலாயுதம்’ மூலமாக மீண்டும் பரபர ஆக்ஷன்ல இறங்கிட்டீங்க போல.. “விஜய் ஃபார்முலான்னு சொல்வாங்களே அதில் மறுபடியும் நான் நடிக்கிற ஒரு சூப்பர் கமர்ஷியல் படம். ஹீரோ இருப்பார். வில்லன் இருக்கார். ஒண்ணுக்கு ரெண்டு ஹீரோயின்கள். ஆனால், இதுல வில்லனை ஹீரோ அடிச்சு துவம்சம் பண்ணணும்னு படம் பார்க்கிற ஆடியன்ஸ் ஃபீல் பண்ணுவாங்க. அதற்கான காரணம் புதுசு. ஆஸ்கர் ரவிச்சந்திரன் சார், ‘ஜெயம்’ ராஜான்னு நல்ல டீம். ராஜாவுக்கும் எனக்கும் நல்லா செட்டாகியிருக்கு. இந்தப் படத்துக்குப் பிறகு ராஜா கூட சேர்ந்து படம் பண்ணணும்னு எல்லா ஹ…

    • 0 replies
    • 1.2k views
  21. உடல்நலமில்லாத தன்னை தாயைப் போல கவனித்துக் கொண்டார் சல்மான்கான் என்று உருக்கமாகக் குறிப்பிட்டுள்ளார் நடிகை அசின். ரெடி இந்திப் படத்தில் சல்மான்கான் அசின் ஜோடியாக நடிக்கின்றனர். படப்பிடிப்பு முடியும் கட்டத்தில் உள்ளது. இருவருக்கும் காதல் மலர்ந்து, கல்யாணம் வரை போய்விட்டதாக செய்திகள் வந்தவண்ணம் உள்ளன. சமீபத்தில், இருவரும் திருமணம் செய்து கொண்டுவிட்டதாக செய்திகள் வந்துள்ளதே என்று தொலைக்காட்சி பேட்டியொன்றில் கேட்கப்பட்டது. அதற்கு சல்மான்கான் பதில் அளிக்கையில் அப்படி நடந்து இருந்தால் மிகவும் சந்தோஷப்படுவேன் என்றார். அசின் குறுக்கிட்டு சல்மான்கான் ஜோக்கடிக்கிறார் என்று சொல்லி நழுவிவிட்டார்;. இதற்கிடையில் ரெடி படப்பிடிப்பில் சல்மான்கான் தாய் போல் தன்னை கவனித்துக் க…

  22. தள்ளாடும் காவலன் வெள்ளி, 31 டிசம்பர் 2010( 13:47 IST ) ஈழத் தமிழர்களின் எதிர்ப்பு, ஆளும் அதிகாரத்தின் ஓர வஞ்சனை, திரையரங்கு உ‌ரிமையாளர்களின் கோபம் என பல்முனை தாக்குதல்களு‌க்கு உள்ளாகியுள்ளது விஜய்யின் காவலன். பொங்கலுக்கு எப்படியும் படத்தை வெளியிடுவது என உறுதியாக உள்ளது தயா‌ரிப்பாளர் தரப்பு. அம்மாவின் ஆசிர்வாதத்தையும் விஜய்யின் தந்தை நே‌ரில் சென்று பெற்றிருக்கிறார். ஆனாலும் காவலனின் நிலை இன்னும் தள்ளாட்டத்தில்தான் உள்ளது. பொங்கலுக்கு வெளிவரும் ஆடுகளம், சிறுத்தைப் படங்களின் மீதுதான் திரையரங்கு உ‌ரிமையாளர்களின் கவனம் உள்ளது. இதன் காரணமாக விஜய் படங்களை விரும்பி திரையிடும் திரையரங்குகளும் காவலனுக்கு முகத்தை திருப்பிக் கொண்டுள்ளன. பொதுவாக விஜய் படங்கள் …

    • 1 reply
    • 1.3k views
  23. 2009 இல் வெளிவந்த இந்தப் படம்,இரு மனிதர்களின் போராட்டத்தைப் பற்றியது.The struggle of two men, to uplift a beaten up nation by uplifting a beaten up sports team.இது தான் கதை. 1990 வருடம் நெல்சன் மண்டேலா தன்னுடைய நீண்ட சிறைத் தண்டனையில் இருந்து விடுவிக்கப்படுவதை காட்டி ஆரம்பிக்கறது படம்.அவரை விடுவித்துச் செல்லுவதை பார்க்கும் ஆப்ரிக்க சிறுவர்கள் குதூகலப்படும் அதே நேரம்,ஒரு வெள்ளையன் இன்னொருவனிடம், “நம் நாடு நாய்களுக்கு போகும் காலம் இது!(This is the day our country(??) goes to the dogs)“ என்கிறான். எங்கே இவர் நிலைமையை சீர் செய்து விடுவாரோ என்று பயப்படும் ஆங்கில அரசாங்கம்,தீவிரவாத கும்பல்களுக்கு மறைமுகமாக ஆயுதம் கொடுத்து நாட்டில் வன்முறையை கட்டவிழ்த்து நிலைமையை மேலு…

  24. படித்த புத்தகம் : டான் பிரவுன் (Dan brown) எழுதிய தி லாஸ்ட் சிம்பல் (The lost symbol) நாவல். செம த்ரில்லிங்கான மறக்க முடியாத க்ரைம் கதை. மறக்க முடியாத பயணம் : ஜூலை,ஆகஸ்டில் அமெரிக்காவில் தங்கியிருந்த இருபது நாட்கள். அங்குள்ள தமிழர்களின் கவனிப்பும் உபசரிப்பும் ரொம்பவே பிரமிக்க வச்சது.ஊர் விட்டு ஊர் போய் வாழ்றவங்களோட உண்மையான ஏக்கத்தை உணர்ந்தேன். உங்களை ஆச்சரியப்பட வைத்த திரைப்படம்: இன்செப்ஷன் (Inception) ஹாலிவுட் படம். கிரிஸ்டோபர் நோலன் (Christopher Nolan) டைரக்ட் பண்ண படம். ரொம்பவே மனசை பாதிச்சதுன்னு சொல்லலாம்.ஒவ்வொரு காட்சியும் எதிர்பாராத ஆச்சரியங்களை தந்துச்சு. அறிமுகமான நண்பர்கள் : நாகார்ஜுனா, சூர்யா, தமன்னா, சுமந்த், சுதீப் எல்லோ ரு…

    • 0 replies
    • 1.1k views
  25. கவர்ச்சி நடிகையான சோனா ‘கனிமொழி’ படத்தைத் தொடர்ந்து ‘பாக்யராஜ்’ என்ற படத்தைத் தயாரிக்கிறார். இதற்குப் பிறகு ஒரு படத்தை இயக்கும் முடிவிலும் இருக்கிறார். இவரது சொந்த வாழ்க்கைதான் இவரது படக்கதையாம். கவர்ச்சியாக நடிக்கும் சோனாவிற்கு ஆண்கள் மீது வெறுப்பு உண்டாம். இதற்குக் காரணம் என்ன என்று சோனாவிடம் கேட்கிறார்கள். காரணத்தை இதுவரை எவரிடமும் சொல்லவில்லை. ‘எனக்குத் திருமணமே வேண்டாம்’ என்று மட்டும் சொல்கிறார். எனவேதான் தனது கதையையே படமாக்கி வருகிறார். உண்மையான காரணத்தை படத்தைப் பார்த்துத்தான் தெரிந்து கொள்ள வேண்டும் போல் தெரிகிறது. படங்கள் பார்க்க.... http://www.thedipaar.com/cinema/cinema.php?id=5823

    • 0 replies
    • 1.1k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.