வண்ணத் திரை
சினிமா விமர்சனம் | சினிமாச் செய்திகள் | கருத்துகள்
வண்ணத் திரை பகுதியில் சினிமா விமர்சனம், சினிமாச் செய்திகள், உலக சினிமா சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் சினிமா விமர்சனங்களுக்கும் தரமான சினிமா சம்பந்தமான கட்டுரைகளுக்கும் முன்னுரிமை கொடுத்தல் வேண்டும். அளவுக்கதிகமான சினிமாச் செய்திகளையும், கிசுகிசு செய்திகளையும் தவிர்க்கவேண்டும்.
5548 topics in this forum
-
அரக்கோணம்: சன் பிக்சர்ஸ் தயாரித்த எந்திரன் படம் மாபெரும் வெற்றியடைய வேண்டி சோளிங்கரில் நேற்று காலை ரசிகர்கள் பால்குடத்துடன் ஊர்வலம் சென்றனர். பின்னர் 1,305 படிக்கட்டுகள் உள்ள மலைக்கோயிலுக்கு ரசிகர்கள் முட்டிப்போட்டு படியேறினர்.சன் பிக்சர்ஸ் கலாநிதி மாறன் மிக பிரமாண்டமான தயாரிப்பில் ரஜினிகாந்த் நடித்துள்ள ‘எந்திரன்‘ படம் வரும் 1ம்தேதி உலகெங்கும் திரையிடப்படுகிறது. இது குறித்து செய்தி நேற்று காலை தினகரன் நாளிதழில் வெளியானது. இதை பார்த்த ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்து பட்டாசு வெடித்து கொண்டாடினர்.இந்நிலையில் வேலூர் மாவட்ட ரஜினி ரசிகர் மன்ற பொருளாளர் சோளிங்கர் என்.ரவி தலைமையில் 500க்கும் அதிகமான ரசிகர்கள் நேற்று காலை சோளிங்கர் பஸ் நிலையம் அருகே வைக்கப்பட்டுள்ள பிரமாண்டமான ரஜினி …
-
- 4 replies
- 2.1k views
-
-
-
-
- 1 reply
- 914 views
-
-
இளையராஜாவின் தமிழ் கோபம் தேசிய விருது கிடைத்ததையொட்டி பத்திரிகையாளர்களை சந்தித்தார் இளையராஜா. பேச்சில் வழக்கம் போல சுவாரஸியமும், கோபமும் சரிவிகிதத்தில் கலந்திருந்தது. இளையராஜாவுக்கு கிடைத்திருக்கும் 4வது தேசிய விருது இது. பின்னணி இசைக்காக அவருக்கு கிடைத்த முதல் விருது இது. இதனை அவரே ஆச்சரியத்துடன் குறிப்பிட்டார். இளையராஜா அதிகமான மலையாளப் படங்களுக்கு இசையமைத்திருக்கிறார். ஆனால் இதுவரை மலையாளப் படத்திற்கு இசையமைத்ததற்காக அவருக்கு விருது எதுவும் கிடைத்ததில்லை. உங்களுக்கு விருது கிடைத்த பிறகுதான் எனக்கு கிடைக்கும் விருதை ஏற்றுக் கொள்வேன், அதற்குமுன் எனக்கு விருது கிடைத்தால் அதை ஏற்றக்கொள்ள மாட்டேன் என்று பழஸிராஜா இயக்குனர் ஹரிஹரன் கூறியிருந்ததை நி…
-
- 0 replies
- 677 views
-
-
முதல் படத்திலேயே பரபரப்பு ஏற்படுத்திவிட்டார் அனகா.(ஒரிஜினல் பெயர் அமலா பால்).மாமனாரை மயக்கும் மருமகளாக‘சிந்து சமவெளி’யில் சிக்கலான கதாபாத்திரத்தில் எல்லோரையும் திரும்பிப் பார்க்க வைத்துவிட்டார். ‘‘எனக்கு எப்பவுமே துணிச்சல் ஜாஸ்தி. எல்லாம் என் அம்மாவும் அண்ணனும் கொடுக்கும் தைரியம்.சின்ன வயசிலேயே நிறைய ரிஸ்க் எடுப்பேன். அப்படி ஒரு ரிஸ்க்தான் இந்த கதாபாத்திரம்’’ என்று கண்களைச் சிமிட்டி சிரிக்கிறார். துணிச்சலான கதாபாத்திரம் மட்டுமல்ல, தப்பான கதாபாத்திரமும் கூட. அதைப்பற்றி கவலைப்பட வில்லையா? ‘‘யோசித்துப் பாருங்கள் அந்த வேடத்தில் நான் நடிக்கவில்லை என்றால் கண்டிப்பாக வேறு ஒருவர் நடித்திருப்பார்.எனக்கு கிடைத்த கைதட்டல்களை அவர் பெற்றிருப்பார்.ஒரு நடிகையாக அந்த கத…
-
- 2 replies
- 3.2k views
-
-
விஜய் படத் துக்கு ஒரு வழியாக பெயரை முடிவு செய்துவிட்டார்கள். ‘‘காவலன்’ என்ற பெயர் எல்லோருக்கும் பிடித்திருக்கிறது. படம் பிரமாதமாய் வந்திருக்கிறது’ என்று திருப்தியாக சொல்கிறார் இயக்கு நர் சித்திக். ‘ஃப்ரெண்ட்ஸ்’ விஜய்க்கும் ‘காவலன்’ விஜய்க்கும் என்ன வித்தியாசம் காண்பிச்சிருக்கீங்க? ‘‘இதுல விஜய்க்கு வழக்கமான கேரக்டர் இல்ல. படம் முழுக்க அப்பாவியா வருவார்.அந்த அப்பாவித்தனம் தான் ரசிகர்களுக்கு செம காமெடி விருந்தாகப் போகிறது.தன்னை நம்பினவங்களை சந்தேகப்படமாட்டார். சந்தேகப்படுறவங்களை நம்பமாட்டார். இதுதான் விஜய் கேரக்டரின் ஒன் லைன்.’’ இப்போதைக்கு விஜய் ஒரு சூப்பர் ஹிட் தரவேண்டிய கட்டாயம் இருக்கு. இந்த சவாலை எப்படி எதிர் கொள்ளப் போறீங்க? ‘‘இதற்கு முந்தை…
-
- 0 replies
- 581 views
-
-
இன்று தமிழ் சினிமாவின் பெருமிதமான தந்தை சிவ குமார்.இரண்டு மகன்களும் தமிழ் சினிமாவின் ஹாட் நட்சத்திரங்கள்.மகன்களுக்கு போட்டியாக இன்றும் இளமையுடன் இருக்கும் சிவக்குமாரிடம் சூர்யா, கார்த்தி பற்றி பேசினோம். ஓவியக் கலைஞனாக புகழ்பெற சென்னை வந்தீர்கள்.அக்கலையில் தேர்ச்சி பெற்ற பின் அதைவிட்டு,நடிக்கப் போனீர்கள்.இப்போது அங்கிருந்து மேடைப் பேச்சுக்குத் தாவி விட்டீர்கள். மீண்டும் நடிப்புக்கு வர வாய்ப்பிருக்கிறதா? ‘‘100 வயது தொட்ட மொரார்ஜி தேசாயிடம், இவ்வுலகில் நிலையானது எது என்று கேட்டார்கள்.மாறுதல்கள் என்றார் அவர்.மாறுதல்கள்தான் நிலையானது.நதியிலே ஓடும் வெள்ளத்தில் ஒரு விநாடியில் நீங்கள் பார்த்த நீர், அடுத்த வினாடி அங்கில்லை, முன்னால் போய்விடுகிறது. 40 ஆண்டு…
-
- 0 replies
- 1.6k views
-
-
‘எங்களோட ஸ்கூல் லைஃப்ல அப்பா ரொம்ப பிஸியா இருந்தாரு. நான், என்னோட அக்கா காவ்யா, தம்பி ஆகாஷ் மூணு பேருமே அப்பா எப்போ ஷூட்டிங் முடிஞ்சு வருவார்னு பார்த்துக்கிட்டேயிருப்போம். ஆனா அவர் வரும்போது தூங்கிடுவோம்.இதனால அப்பாவுக்கு பிள்ளைங்கள பக்கத்துலருந்து பார்க்க முடியலியேன்னு வருத்தம். நான் காலேஜ் போற டைம்ல அப்பா படங்கள் குறைஞ்சு ஃப்ரீயா இருந்தாரு.அதனால எங்க மேல ரொம்ப அக்கறை எடுத்துகிட்டார். அதுவும் நான் நடிக்கிறேன்னு சொன்னதும் ரொம்ப சந்தோஷம் அப்பாவுக்கு.‘நீ ஒரு நடிகன் மகனா நினைச்சு எல்லார்கிட்டயும் பழகக்கூடாது. சாதாரணமா இருக்கணும்’னு சொல்லுவார். என் படம் ரிலீஸான ஒரு வாரம் சரியாகூட தூங்கல. ஒவ்வொரு தியேட்டருக்கும் அவரே விசிட் போயி ரசிகர்கள் என் நடிப்புக்கு கொடுத்த ரெஸ்பான்…
-
- 0 replies
- 893 views
-
-
இலங்கை விவகாரம் பற்றி என்னிடம் கேட்காதீர்கள்: விஜய் பங்சனில் அசின் கன்டிஷன் தமிழர்களை கொன்றுகுவித்த சிங்கள பூமிக்கு நடிகர்,நடிகைகள் செல்லக்கூடாது என்று தமிழ்த்திரையுலகம் உத்தரவு போட்டிருந்தது. இலங்கை செல்லக்கூடாது தமிழ்த்திரையுலகம் உத்தரவு போட்டிருந்தும் நடிகை அசின் இலங்கை சென்றார். இதனால் விஜய் - அசின் நடித்த காவலன் திரைப்படத்தை வரும் டிசம்பரில் வெளியிடுவதி சிக்கல் ஏற்படும் என்ற நிலை இருந்தது. என்ன நடந்ததோ தெரியவில்லை. திடீரென்று சரத்குமார் அசினுக்கு ஆதரவு தெரிவிக்க, சூழ்நிலையே மாறிப்போனது. அதுவரை அசினுக்கு தடை விதிக்க வேண்டும் என்று சினிமா அமைப்புகள், அவர் மன்னிப்புக் கேட்டால் போதும் என்று கூறத் தொடங்கின. தமிழகத்திலும், தமிழ்த்திரைய…
-
- 0 replies
- 658 views
-
-
வினுசக்கரவர்த்தியின் வேலிக்காத்தான் வினுசக்கரவர்த்தியை அனைவருக்கும் நடிகராகத் தெரியும். ஒரு சிலருக்கு மட்டுமே அவர் ஒரு கதாசிரியர் என்பது தெரியும். 24 வயதில் இயக்குனராகும் வேட்கையில் சென்னை வந்தவர் அவர் என்பது பெரும்பாலானவருக்குத் தெரியாது. ஆனால் அவரது வேட்கை 64வது வயதில்தான் செயல்வடிவம் பெற்றிருக்கிறது என்றால் நம்ப முடிகிறதா? ஆம், வினுசக்கரவர்த்தி படம் இயக்குகிறார். படத்தின் கதை, திரைக்கதை, வசனம், இயக்கத்துடன் அவரே படத்தையும் தயாரிக்கிறார். இசை இளையராஜா. வண்டிச்சக்கரம் மூலம் சினிமாவில் அறிமுகமானதால் தனது தயாரிப்பு நிறுவனத்துக்கு சக்கரா கிரியேஷன்ஸ் என்ற பெயரை சூட்டியிருக்கிறார் வினுசக்கரவர்த்தி. படப்பிடிப்பை ஆர்ப்பாட்டமில்லாமல் தொடங்கியிருப்பவ…
-
- 0 replies
- 857 views
-
-
Robot திரைப்பட பாடல்கள் ஓர் சிறிய விமர்சனம் அண்மையில் சில நாட்களாக நான் உடல்நலம் குறைவாக இருந்தேன், ஒழுங்கான தூக்கமும் இல்லை. இன்று அதிகாலை தூக்கம் கலையவே மின்னஞ்சலை பார்த்தபோது, அதில் ஒன்றில் என்னை புதிய ஒருவர் Twitterஇல் பின் தொடர்வதாக காணப்பட்டது. யார் அவர் என்று பார்ப்பதற்காக Twitterஇனுள் உள்நுழைந்து நானும் அவரை பின்தொடர்வதற்கான பொத்தானை அழுத்தியபின் அவர் வலைத்தளத்தை நோட்டமிட்டேன். அங்கு புதிய தமிழ்த் திரைப்படப்பாடல்கள் ஒலிவடிவில் காணப்பட்டன. அங்கு Robot பாடல்களை கண்ணுற்றேன். நீண்டகாலமாக Robot / எந்திரன் பற்றி பரபரப்பாக பேசப்பட்டதனால் சரி கேட்டுப்பார்ப்போம் என்று நினைத்துவிட்டு play பொத்தானை அழுத்திவிட்டு மீண்டும் தூக்கத்திற்கு சென்றேன். கந்தசஷ்டி கவசம்…
-
- 0 replies
- 832 views
-
-
விஜய் - அசின் நடித்த காவலன் திட்டமிட்டபடி வருமா? விஜய் - அசின் நடித்த காவலன் திரைப்படத்தை வரும் டிசம்பரில் வெளியிட முடிவு செய்துள்ளனர். ஆனால் இந்தப் படம் திட்டமிட்டபடி வெளியாகுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. தமிழினப் படுகொலையை அரங்கேற்றிய ராஜபக்சே அரசுக்கு ஆதரவாக இலங்கையில் அசின் கிட்டத்தட்ட கொள்கைப் பிரச்சாரம் நடத்தாத குறையாக செயல்பட்டார். இதனால் அவருக்கு தடை விதித்த தென்னிந்திய திரைப்பட கூட்டமைப்பு முடிவு செய்தது. ஆனால் திடீரென்று சரத்குமார் [^] அசினுக்கு ஆதரவு தெரிவிக்க, சூழ்நிலையே மாறிப்போனது. அதுவரை அசினுக்கு தடை விதிக்க வேண்டும் என்று சினிமா அமைப்புகள், அவர் மன்னிப்புக் கேட்டால் போதும் என்று கூறத் தொடங்கின. அதே நேரம் இந்து மக்கள் கட்சி உள…
-
- 0 replies
- 1.2k views
-
-
கமலும் தமிழ் சினிமா இயக்குனர்களும் காப்பி அடிப்பவர்கள்தானா ? முதலில் ஒருவிளக்கம் இது கமலுக்கு துதிபாடும் கட்டுரை அல்ல... கமலின் பல கொள்கைகளுக்கு நமக்கு உடன்பாடு இல்லை...அதே போல் இந்த கட்டுரையில் சாதி சாயத்தை தொடபோவதில்லை.... வேறு எந்த கலைவடிவத்தில் எது நடந்தாலும்... நாம் ஆராதிக்கின்றோம்.. ஆனால் சினிமாவில் புரட்டி எடுக்கின்றோம்... காரணம் சினிமாவை எல்லோரும் விரும்பி பார்க்கின்றோம்.... நம்மைப் பொறுத்தவரை எல்லோரும் காப்பி அடிக்கும் போது கமலை மட்டும் குற்றாவளி கூண்டில் நிறுத்தி யூவர் ஆனர் என்று ஆரம்பிப்பதில் உடன்பாடு இல்லை.... அப்படி ஆரம்பித்தால் இந்தியாவில் 90 சதம் பேர் குற்றாவரிளிக் கூண்டில் இருப்பார்கள்... உலகத்தில் கணக்கு எடுத்துக்கொண்டால்... அதன் சதவிகிதம் மி…
-
- 3 replies
- 1.8k views
-
-
மன்னிப்பு கேட்கவில்லை... அசின் மீது நடவடிக்கை [^] நிச்சயம்! - ராதாரவி சென்னை: நடிகர் சங்கம் மற்றும் திரையுலக அமைப்புகளின் எதிர்ப்பு [^]களையும் மீறி இலங்கைக்குப் போன நடிகை அசின் மீது நடவடிக்கை நிச்சயம் என்று நடிகர் சங்கப் பொதுச் செயலாளர் ராதாரவி கூறினார். தமிழர்களை கொன்று குவித்த சிங்கள அரசுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இலங்கைக்கு நடிகர், நடிகைகள் செல்லக் கூடாது என திரைப்பட கூட்டமைப்பு தடை விதித்தது. ஆனால் இதனை மீறி இலங்கையில் நடந்த ரெடி என்ற இந்தி படப்பிடிப்புக்கு அசின் சென்றார். படப்பிடிப்போடு நிற்கவில்லை அவர். அங்குள்ள தமிழர் பகுதிகளில் அதிபர் ராஜபக்சே மனைவியுடன் இணைந்து சுற்றுப்பயணமும் செய்தார். இலங்கை அரசு தமிழர்களைச் சிறப்பாகப் பராமரிப்பதாக…
-
- 3 replies
- 1.2k views
-
-
தெற்காசிய திரைப்பட விழாவில் தமிழ்ப் படம் திரைப்பட விழாக்களில் தமிழ்ப் படங்கள் பங்கு பெறுவது அதிகரித்து வருகிறது. சமீபத்தில் நடந்த வெனிஸ் திரைப்பட விழாவில் மணிரத்னம் கௌரவப்படுத்தப்பட்டார். பருத்திவீரன், சுப்பிரமணியபுரம், பசங்க போன்ற படங்கள் பல்வேறு திரைப்பட விழாக்களில் கலந்து கொண்டு பார்வையாளர்களின் பாராட்டுகளைப் பெற்றன. வரும் அக்டோபர் மாதம் தெற்காசிய திரைப்பட விழா நடக்கிறது. இத்திரைப்பட விழாவில் பங்கு பெறுவது மரியாதைக்குரியதாக கருதப்படுகிறது. இந்தத் திரைப்பட விழாவில் திரையிட எஸ்.பி.பி.சரண் தயாரித்திருக்கும் ஆரண்ய காண்டம் திரைப்படம் தேர்வாகியிருப்பது தமிழ்த் திரையுலகுக்கு மகிழ்ச்சி தரும் செய்தி. ஆரண்ய காண்டத்தைத் தொடர்ந்து மேலும் சில த…
-
- 0 replies
- 658 views
-
-
நித்தியானந்தா-ரஞ்சிதா செக்ஸ் லீலை குறித்து தெலுங்கில் சினிமாப் படம் எடுக்கவுள்ளனராம். நிஜக் கதைகளை சூட்டோடு சூடாக படமாக எடுத்து விடுவது இந்தியத் திரையுலகினரின் வழக்கம். அதுவும் செக்ஸ் சம்பந்தப்பட்ட சர்ச்சைகள் என்றால் சட்டுப் புட்டென்று படமாக்கி விடுவார்கள். அந்தவகையில் தற்போது நித்தியானந்தா-ரஞ்சிதா விவகாரத்தையும் படமாக்க கிளம்பியுள்ளனர்-தெலுங்கில். நித்தியானந்தாவுக்கு படுக்கை அறையில் பலவிதமான சேவைகளை நடிகை ரஞ்சிதா செய்வது போன்ற வீடியோ காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின. ஆனால் சினிமா பாணியில் நான் அவன் இல்லை என்று கூறி விட்டார் நித்தியானந்தா. ரஞ்சிதாவும், நான் செய்தது சேவை, வீடியோவை மார்பிங் செய்து விட்டனர் என்று கூறி விட்டார். தற்போது இந்த வழக்கு என்ன ஆனது …
-
- 7 replies
- 5.3k views
-
-
விஜய் நடித்த கடைசி சூப்பர் டூப்பர் ஹிட் போக்கிரி தெலுங்கு மொழியில் சுப்பர் ஹிட் ஆனா படத்தை டைரக்டர் கம் நடிகர் பிரபு தேவா இயக்கத்தில் தமிழ் மொழியில் ரீமேக் செய்யப்பட்டது. அதன் பின் வந்த விஜய் நடித்த படங்கள் சொல்லும்படியான முறையில் இல்லை.விஜய் படம் என்றால் சரியான அளவில் காமெடி அதே அளவில் ஆக்சன் இருக்கும் என்ற பார்முலாவை பின்பற்றாமல் போனது கூட அவரின் சூப்பர் ஹிட் படம் என்ற எல்லையை கடைசியாக வந்த படங்கள் தொடவில்லை. அதிகப்படியான் ஹீரோயிசம் கூட அவரின் வெற்றி படம் என்ற எல்லை தொடாமல் போனதற்கு காரணம்.அதிகப்படியான ரசிகர்கள் சிறப்பான ஆக்சன் காட்சிகள் இயற்கையாக அவரிடம் இருக்கும் நகைச்சுவை போன்றவை ரஜினி படத்திற்கு ஈடாக அவரின் படங்களும் பேசப்பட்டது ஆனால் ஆனால் அவர் படங்களில் அதிகப்படிய…
-
- 2 replies
- 898 views
-
-
மர்மதேசமாகவே இருக்கும். ஆனால் அவன் இவன் படம் தொடங்கியதில் இருந்தே படம் குறித்த ஏதாவது ஒரு தகவல் வெளியாகிக்கொண்டே இருக்கின்றன. விஷால் இதில் திருநங்கையாக நடிக்கிறார்... கிராமத்தில் முன்பு, வட்டமாக ஒட்ட முடிவெட்டிக்கொள்வார்கள். ஆர்யாவுக்கு இதேபோன்ற ஒரு வித்தியாசமான கெட்டப்... இப்படி அடிக்கடி சில தகவல்கள் வெளியாகின்றன. இதேமாதிரி அண்மையில் வெளியான ஒருசில விஷயங்கள் அவன் இவன் எப்படிப்பட்ட படம் என்பதை சொல்லாமல் சொல்லிப் போகுது. நான்கடவுள் படத்திற்கான தேசிய விருதினை பெற்ற மகிழ்ச்சியோடு அவன் இவன் படத்தை தொடங்கினார் பாலா. விஷால், ஆர்யா கதைநாயகர்கள். நாயகி ஜனனி ஐயர். நந்தா படத்திற்கு பிறகு யுவன் ஷங்கர் ராஜா இந்தப் படத்திற்கு இசையமைக்கிறார். பாலாவுக்கு பிடித்தமான இசை…
-
- 1 reply
- 1.4k views
-
-
துடிக்க மறந்த இதயத்தின் ஒரு சில நினைவுகள். இதயத்தின் வலியை தமிழ்த் திரை ரசிகர்களுக்கு மீண்டும் ஒரு முறை உணர்த்தியிருக்கிறார் முரளி! 1991ம் ஆண்டு வெளியான இதயம் திரைப்படத்தின் மூலம் காதலால் துடிக்கும் இதயத்தின் வலியை தன் நடிப்பால் நமக்குள் ஏற்படுத்திய முரளி... இம்முறை தானே அந்த வலிக்கு உட்பட்டு பழகியவர்கள் அத்தனை பேருக்கும் மீண்டும் இதய வலியை உணர்த்தியிருக்கிறார். இது நிஜம் என்பதால் இந்த முறை அந்த வலியின் தாக்கம் மிகப்பெரிதாக இருக்கிறது. முரளியின் இந்தத் திடீர் மரணம் திரைத்துறையினர் மட்டுமல்லாது, பத்திரிகையாளர்கள், உறவினர் மற்றும் நண்பர்கள் என அனைவருக்கும் பேரதிர்ச்சியை தந்து, சொல்லொன்னாத் துயரத்தில் ஆழ்த்தியுள்ளது. 46 வயதில் முரளியின் இதயம் துடிக்க மறுத்திர…
-
- 0 replies
- 1.3k views
-
-
மாதம்தோறும் 50 ஆயிரத்துக்குக் குறையாமல் ஒரு லட்சத்துக்கு மிகாமல் கொடுத்து விடுகிறார். 3 கார், 3 வேலையாட்கள்! சென்னையில் ஷூட்டிங் என்றால் ராத்தங்கல் வெளியில் இல்லை! வெளியூர் போயிருந்தால் ஷூட்டிங் முடிந்ததும் சென்னைக்கு வந்து பிள்ளைகளைப் பார்க்கிறார். மனைவியுடன் தாம்பத்யம் இல்லை. இதுதான் டான்ஸ் மாஸ்டரின் தற்போதைய வாழ்க்கை. ‘இது நல்லாயிருக்கா தம்பி? அந்த நடிகையுடன் சுற்றுவதை நிறுத்திட்டு மனைவிக்கு நல்ல புருஷனா, பிள்ளைகளுக்கு நல்ல அப்பாவா இருக்கக் கூடாதா?’ என்று பிரபல தயாரிப்பாளரின் மனைவி கேட்க, அவர் சொன்ன பதில் ‘என்னால அவளை மறக்கமுடியலே ஆன்ட்டி!’ என்கிறாராம் நடிகர் மாஸ்டர் டைரக்டர். படங்களைப் பார்வையிட.... http://www.thedipaar.com/cinema/cinema.php?id=4…
-
- 1 reply
- 980 views
-
-
கவிஞர் கொடுக்கல் வாங்கலில் கறாரானவர்.கொடுக்கல் வாங்கல் என்றதும் தவறாக நினைக்க வேண்டாம்.அன்பைக் கொடுத்து அந்த அன்பை இரண்டு மடங்காக வாங்கிவிடுவார்’’ என்று கமல் சொன்னார். கமல் குறிப்பிட்டது கவிப்பேரரசு வைரமுத்துவை, அவரது மகன் கபிலன் திருமண விழாவில். கமல் சொன்னது உண்மைதான்.கவிஞர் அத்தனை அன்பைக் கொடுத்திருந்த தால்தான் காலையிலேயே கலைஞர் அரங்கம் அன்பு உள்ளங்களால் நிறைந்திருந்தது. அரங்கில் முதலில் வந்த பிரபலம் ரஜினி.வெள்ளை நிற வேட்டி சட்டையில் எளிமையாக இருந்தார்.மகள் திருமணத்தை திருப்தியாக முடித்த நிம்மதி தெரிந்தது. அவரைத் தொடர்ந்து பிரபலங்கள் வரிசையாய் வரத் துவங்கினர்.உள்நாடு மட்டுமில்லாமல் வெளிநாடுகளிலிருந்தும் கவிஞரின் நண்பர்கள். இங்கே…
-
- 0 replies
- 1.4k views
-
-
சூப்பர் ஸ்டார் சூப்பர் ஸ்டார்தான்’&இளையமகள் சௌந்தர்யா& அஸ்வின் திருமணத்தை கோலாகலமாக நடத்தி முடித்திருக்கும் ரஜினியை இப்படித்தான் வாழ்த் திக்கொண்டிருந்தார்கள், வந்திருந்த வி.ஐ.பி.க்கள். இடம் சென்னை ராணி மெய்யம்மை ஹால்.கல்யாண வீட்டில் இருந்து அட்சதை தூவலாக சில வரிகள் : காலை 5.30மணிக்கு மண்டபத்திற்கு வந்த மணமக்கள் ஊஞ்சல் சடங்கில் கலந்துகொண்டனர். அப்போது மணமகன் அஸ்வினின் பஞ்ச கச்சத்தைச் சரி செய்துவிட் டபடி, ‘சூப்பர்’ என்பதுபோல கையைக் காட்டி சிரித்தார் ரஜினி. சடங்கு நடந்து கொண்டிருந்தபோதே பரபரப்புடன் ‘தனுஷ் வந்தாச்சா’ என்று கேட்டுக்கொண்டே இருந்தார், பாசமுள்ள மாமனாராக ரஜினி. சௌந்தர்யாவை ரஜினி மடியில் உட்கார வைத்து நடந்த சடங்கில் புர…
-
- 0 replies
- 923 views
-
-
மாரடைப்பு காரணமாக முரளியின் மூச்சு நின்று ஒரு நாள் கடந்து விட்டது. கிட்டத்தட்ட 25 ஆண்டுகாலத்துக்கும் மேல் தமிழ் சினிமாவில் நிலைத்திருந்த நடிகர் முரளி இதுவரை 99 படங்களில் நடித்திருக்கிறார்.கடைசியாக நடித்த பானா காத்தாடி படத்தில் கூட எம்.பி.பி.எஸ். மாணவராக நடித்து, காலேஜூக்கு போகணும் என்று சொல்லிவிட்டு தியேட்டரில் குபீர் சிரிப்பை வரவழைத்த முரளி தமிழ் சினிமா பிரபலங்களிலேயே முற்றிலும் வித்தியாசமான குணாதியங்களைக் கொண்டவர். முரளியின் மறைவுச் செய்தி கேட்டு அதிர்ச்சியடைந்த ரசிகர்கள் ஒருபுறமென்றால்… அவரது மறைவுச் செய்தியை நம்ப முடியவில்லை என்று சொல்பவர்கள் இன்னொருபுறம். அவர்களில் பெரும்பாலானவர்கள் சமீபத்தில் விஜய் டிவி காபி வித் அனு நிகழ்ச்சியில் நடிகர் முரளியும், அவரது மகன் அத…
-
- 0 replies
- 7.2k views
-
-
கமல்ஹாசனுடன் இணைந்து நடிக்கவுள்ளார் அனில்கபூர். இப்படம் ஒரே நேரத்தில் தமிழ் மற்றும் இந்தியில் உருவாகிறது.கமல்ஹாசனும், அனில் கபூரும் இணைவது இது முதல் முறை. அதேசமயம், இருவருக்கும் ஏற்கனவே ஒரு தொடர்பு உண்டு. கமல்ஹாசன் தமிழில் உருவாக்கிய பிரமாண்ட வெற்றிப் படமான தேவர் மகனை இந்தியில் ரீமேக் செய்து நடித்தார் அனில்கபூர். அப்படம் அங்கு விராசத் என்ற பெயரில் வெளியாகியது. அதேபோல சலங்கை ஒலி படத்தையும் ரீமேக் செய்து நடித்தார் அனில் கபூர். சமீபத்தில் சென்னை வந்திருந்த அனில் கபூர், கமல்ஹாசனை சந்தித்துப் பேசினார். உங்களுடன் சேர்ந்து நடிக்க வேண்டும், அதற்கு ஆர்வமாக இருப்பதாக கூறினார் அனில். அதைக் கேட்டு மகிழ்ச்சி அடைந்த கமல், சரி நடிக்கலாம், கதையை ரெடி செய்யுங்கள் என்றாராம். கமல் டக்கெ…
-
- 0 replies
- 928 views
-
-
கார்த்தி - வருங்கால மக்கள் திலகம் உணர்ச்சிவசப்படுவதில் பெப்சி தலைவர் வி.சி.குகநாதனுக்கு ஈடுஇணையில்லை. தா படத்தின் இசை வெளியீட்டு விழாவில் இது இன்னொருமுறை உறுதியானது. இந்தப் படத்துக்கு இசையமைத்திருக்கும் ஸ்ரீவிஜெய் ஈழத்தமிழ்ர். இதனால் விழாவில் ஈழம் பற்றிய அனல் அதிகமாகவே அடித்தது. ஆர்.கே.செல்வமணி பேசும் போது ஈழத்தில் ஒலித்த ஒரு குரல் நசுக்கப்பட்டது என்றார். பின்னாலேயே பேச வந்த குகநாதன், அந்தக் குரலை ஒருபோதும் நசுக்க முடியாது என்றார் ஆவேசமாக. இந்தப் படத்தை இயக்கியிருப்பவர் சூர்ய பிரபாகர் என அவர் சூசகமாக தமிழீழத் தலைவரை சொன்ன போது அரங்கில் அட்டகாசமான கைத்தட்டல். பாடல்களை வெளியிட வந்த கார்த்தியை அவர் வருங்கால மக்கள் திலகம் என வர்ணித்தது, ஆச்சரியம். …
-
- 0 replies
- 1.8k views
-