வண்ணத் திரை
சினிமா விமர்சனம் | சினிமாச் செய்திகள் | கருத்துகள்
வண்ணத் திரை பகுதியில் சினிமா விமர்சனம், சினிமாச் செய்திகள், உலக சினிமா சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் சினிமா விமர்சனங்களுக்கும் தரமான சினிமா சம்பந்தமான கட்டுரைகளுக்கும் முன்னுரிமை கொடுத்தல் வேண்டும். அளவுக்கதிகமான சினிமாச் செய்திகளையும், கிசுகிசு செய்திகளையும் தவிர்க்கவேண்டும்.
5557 topics in this forum
-
கோடாம்பாக்கத்தில் இது காதல் கல்யாண சீசன். ஜி.வி.பிரகாஷ் - சைந்தவி திருமணத்தை தொடர்ந்து சிம்பு -ஹன்ஷிகா காதலைஅறிவித்தார்கள். அடுத்து சாந்தணுவின் காதலும் அரசல் புரசலாக வெளியானலும் அவரே அதை மறுத்தார். இந்நிலையில் கோடாம்பாக்கத்தில் தீவிரமாக பெண்பார்த்து வரும் பெரிய ஹீரோக்களில் விஷாலும் பரத்தும் இருந்து வந்தார்கள். இந்நிலையில் ‘பட்டத்து யானை’ படத்தில் நடித்தபோது அர்ஜுன் மகள் ஐஸ்வர்யாவும் -விஷாலும் காதலித்ததாக செய்திகள் பரபரத்தன. ஆனால் அதை விஷால் மறுத்தார். ஆனால் பரத் எனக்கு விரைவில் திருமணம் என்பது உண்மைதான் என்று அறிவித்திருக்கிறார். See more at: http://vuin.com/news/tamil/wedding-bells-for-bharath
-
- 0 replies
- 474 views
-
-
இந்தியாவே கொண்டாடும் ஒளிப்பதிவு இயக்குனர் சந்தோஷ் சிவன். மிகச்சிறந்த ஒளிப்பதிவாளராக இருந்து இயக்குனராக அறிமுகமாகி ஹிட் படங்களை கொடுத்தவர். ரோஜா, இருவர், ராவணன், துப்பாக்கி போன்ற புகழ் பெற்ற தமிழ் படங்களிற்கும், அசோகா, டில்சே போன்ற புகழ் பெற்ற ஹிந்தி திரைப்படங்களிற்கும் ஒளிப்பதிவு இயக்குனராக தனது முத்திரையைப் பதித்தவர். இவர் தனியே ஒளிப்பதிவு இயக்குனர் மாத்திரம் அல்ல மல்லி, உறுமி, அசோகா போன்ற புகழ் பெற்ற படங்களின் இயக்குனரும் ஆவார். இவர் ஈழப் பிரச்சனையை, ஈழ மக்களின் அவலத்தை “இனம்” என்ற தலைப்பில் படமாக்கியுள்ளார். அரவிந்தசாமி, சரிகா, கருணாஸ் நடித்த இத் திரைப்படம் மிக விரைவில் திரைக்கு வர இருக்கிறது. ஈழப் போரால் அநாதையான சிறுவர்களைப் பற்றிய இந்த திரைப்படத்தில் யாழ்ப்பாணம…
-
- 0 replies
- 501 views
-
-
ஒளிக்குத் தப்பிய வாழ்க்கை செல்லப்பா தமிழின் முதல் பேசும்படமான காளிதாஸ் (31.10.1931) வெளியாகி 82 ஆண்டுகளாகிவிட்டன. தமிழகத்தில் ஆண்டுதோறும் நூற்றுக்கும் மேற்பட்ட திரைப்படங்கள் தயாரிக்கப்படுகின்றன. தீபாவளி, பொங்கல் போன்ற பண்டிகை நாட்களில் திரைப்படம் பார்க்கும் அனுபவம் விழாக் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாகவே விளங்குகிறது. திரைப்படமோ அதுசார்ந்த மனிதர்களோ இல்லாவிட்டால் பெரும்பாலான தொலைக்காட்சி அலைவரிசைகள் தங்கள் நிகழ்ச்சிகளைக் குறிப்பாகச் சிறப்பு நிகழ்ச்சிகளைத் தயாரிக்கச் சிரமப்படும் என்பதே எதார்த்தம். ஒவ்வொரு வருடமும் சுதந்திரத் தினத்தன்றும் குடியரசு தினத்தன்றும் வசீகரமான திரைத்துறை ஆளுமைகள் தம் அனுபவங்களை விவரித்து உரையாடும் காட்சிகள் பெரும்பாலான தொலைக்காட்சிகளில் காணக்கூடி…
-
- 0 replies
- 668 views
-
-
விஜய் - அசின் நடித்த காவலன் திட்டமிட்டபடி வருமா? விஜய் - அசின் நடித்த காவலன் திரைப்படத்தை வரும் டிசம்பரில் வெளியிட முடிவு செய்துள்ளனர். ஆனால் இந்தப் படம் திட்டமிட்டபடி வெளியாகுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. தமிழினப் படுகொலையை அரங்கேற்றிய ராஜபக்சே அரசுக்கு ஆதரவாக இலங்கையில் அசின் கிட்டத்தட்ட கொள்கைப் பிரச்சாரம் நடத்தாத குறையாக செயல்பட்டார். இதனால் அவருக்கு தடை விதித்த தென்னிந்திய திரைப்பட கூட்டமைப்பு முடிவு செய்தது. ஆனால் திடீரென்று சரத்குமார் [^] அசினுக்கு ஆதரவு தெரிவிக்க, சூழ்நிலையே மாறிப்போனது. அதுவரை அசினுக்கு தடை விதிக்க வேண்டும் என்று சினிமா அமைப்புகள், அவர் மன்னிப்புக் கேட்டால் போதும் என்று கூறத் தொடங்கின. அதே நேரம் இந்து மக்கள் கட்சி உள…
-
- 0 replies
- 1.2k views
-
-
சன் டிவி நிஜம் 10-11-2010 நடப்பதில் விண்ணன் பாருங்கள் வீடியோhttp://www.kadukathi.com/?p=1244
-
- 0 replies
- 1.1k views
-
-
என் அம்மாவை சப்போர்ட் பண்ண தமிழ் சினிமா, எனக்கும் சப்போர்ட் பண்ணும்னு நம்புறேன். 'கோ’ படத்தில் அதுக்காக நான் நிறையக் கஷ்டப்பட்டு இருக்கேன். தமிழ் சினிமா என்னை அக்செப்ட் பண்ணிக்கிட்டா, அதைவிடப் பெரிய ஹாப்பி எதுவும் இல்லை!''- விவரம் தெரியாத வயதிலேயே விவரமாகப் பேச முயற்சிக்கிறார் கார்த்திகா. நடிகை ராதாவின் வாரிசு. மலையாளம் கலந்த தமிழில் கார்த்திகா கதைப்பது, கவிதை பாடுவதைப் போல் இருக்கிறது. ''அம்மா என்ன அட்வைஸ் கொடுத்தாங்க?'' ''ஷூட்டிங் ஸ்பாட்டில் சரியான நேரத்துக்கு இருக்கணும். யார் மனசும் நோகாமல் பேசணும். நீ பேசுற ஒவ்வொரு வார்த்தைக்கும் நீதான் பொறுப்புன்னு நிறையச் சொல்லி அனுப்புனாங்க. இங்கே வந்து பார்க்கும்போதுதான், அம்மாவுக்கு இருக்கிற மரியாதை தெரியுது. அம்மா ஷூட…
-
- 0 replies
- 644 views
-
-
சினிமா ரசனை வகுப்புகளின் இன்றைய தேவை என்ன? யாருக்காக நடத்தப்பட வேண்டுமென நினைக்கிறீர்கள்? சினிமா ரசனை வகுப்புகள் மிகமிக அவசியம். முதலில் இது படம் எடுப்பவர்களுக்கு மிக முக்கியம். இரண்டாவதுதான் படைப்பை நுகர்பவர்களுக்கு. ஆனால், இங்கு சினிமாவை உருவாக்குபவர்களுக்கு சினிமா ரசனையை யார்கற்றுக்கொடுப்பது.? என்ற கேள்வியும் இருக்கிறது. மேலை நாடுகளில் சினிமா ரசனை வகுப்புகளை பள்ளிகளிலேயே ஆரம்பித்துவிடுகிறார்கள். ஆகையால் அங்கு படம் பார்ப்பவர்களுக்கு சினிமா ரசனை பற்றி போதிய புரிதல் இருக்கிறது. அங்கு வாழ்கிற படைப்பாளிகளுக்கு சினிமா ரசனை வகுப்பு கட்டாயமாக்கப்படுகிறது. ஆனால், நமக்கு பாலியல் பற்றிய கல்வி அவசியமா? இல்லையா? என்பது போலவேதான், ரசனை பற்றிய கல்வியும் அவசியமா? இல்லையா? என்ற…
-
- 0 replies
- 2.3k views
-
-
புலிக்குப் பிறந்தது பூனையாகுமா.... என்ற பழமொழிக்கேற்ப தனது திறமையை சினிமாவில் வெளிப்படுத்தி வருகின்றார் நடிகர் கமல் ஹாசனின் மகள் சுருதி ஹாசன். தமிழ், ஹிந்தி, தெலுங்கு என்று பல மொழிகளிலும் நடித்து வருகின்றார். தற்போது தெலுங்கில் இவர் நடித்த "கபார் சிங்" என்ற படம் வசூலில் சாதனை படைத்துள்ளது. இது ஹிந்தியில் வெற்றி பெற்ற "தபாங்" திரைப்படத்தின் ரீமேக். தமிழில் "ஒஸ்தி" என்று வெளிவந்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது. வீடியோ செய்திகளைக் காண இங்கே சொடுக்கவும்
-
- 0 replies
- 1.1k views
-
-
உலகின் தலைச்சிறந்த 25 இசையமைப்பாளர்கள் பட்டியலில் இந்தியாவிலிருந்து இசைஞானி இளையராஜா மட்டுமே 9ம் இடத்தில் இடம்பெற்றுள்ளார் என்பது பெருமைக்குரிய விசயம். இது இந்திய மக்கள் தொகையின் 120 கோடி மக்களில் ஒருவர் என்ற மிகப்பெரிய பிரதிநிதித்துவத்தை காட்டுகிறது. இந்த தரவரிசை கணிப்பீடை நடத்திய 'டேஸ்ட் ஆஃப் சினிமா' என்ற இணையதளம், இசைக்கோர்ப்பு, இசை ஒருங்கிணைப்பு, பாடல் இயற்றும் தன்மை, பாடகராகவே உருவாகிய விதம், இசைக்கருவிகள் கையாளும் வல்லமையென எல்லாதுறைகளிலும் இளையராஜாவின் பெரும்பங்கை சுட்டிக்காட்டிருக்கின்றது. சக தமிழனாக, இசைரசிகனாக இசைஞானி இளையராஜாவை நினைத்து பெருமைப்படுகிறேன். அவரின் சமகாலத்தில் வாழும் மனிதன் என்பதும் கூடுதல் சிறப்பே. …
-
- 0 replies
- 342 views
-
-
ரெண்டு சூட்கேசுக்குள் அடங்கியாக வேண்டுமே, இல்லாவிட்டால் 'ஒன்றரை லட்சம் கோடி' என்று கூட டைட்டில் வைத்திருப்பார்கள். தங்கம் வைரம் கரன்ஸி இம்மூன்றும் நிறைந்த சூட்கேஸ் இரண்டை நீரா ராடியா மாதிரி ஒரு ஜில் ஜில் லேடியிடமிருந்து அடித்துக் கொண்டும் கிளம்பும் கல்லு£ரி நண்பர்கள் நான்கு பேர் அதை 'அனுபவித்தார்களா' என்பதுதான் படம். ஆரம்பத்திலேயே நடக்கும் கல்லு£ரி கலாட்டாக்கள், முதல் இரண்டு ரீல்களை சர்வ நாசம் செய்வதால் மேலும் ஒரு ஐயாயிரம் கோடிக்கு கள்ள ஜாமீன் போட்டுவிட்டாவது வெளியேறி விடலாம் என்ற நினைப்பு வந்துவிடுகிறது நமக்கு. நல்லவேளை... அதற்கப்புறம் கெமிக்கல். லேப் பரிசோதனை. ஆளே மறைந்துவிடுகிற விட்டலாச்சார்யா விஷுவல் என்று நம்மை கதைக்குள் இழுத்துக் கொள்கிறார்கள். கூடவே படிக்கி…
-
- 0 replies
- 1.1k views
-
-
புலம்பெயர் தமிழ்த் திரைப்பட வரலாற்றில் ஒரு மைல்கல்: துப்பாக்கியும் கணையாழியும் கருணா வின்சென்ற் அறுபதுகளின் பிற்பகுதி. இலங்கையின் கரையோரக் கிராமம் ஒன்றில் ‘ஆழிக்கரையின் அன்புக் காணிக்கை’ என்ற திரைப்படத்தின் படப்பிடிப்பு நடந்துகொண்டிருக்கிறது. திரைப்படத்தில் அனாதை இளைஞன் சங்கராகவும், சி.ஐ.டி. சிவராமாகவும் எம்.எல். ஜெயகாந்த் நடித்துக்கொண்டிருக்கிறார். கிராமத்தை ஆட்டிப்படைக்கும் பணக்காரர் ராஜப்பன் இரகசியமாகக் கடத்தல் தொழிலும் செய்கிறான். ராஜப்பனால் கொல்லப்பட்ட சங்கர், சிவராமாகத் திரும்பி வந்து கிராமத்தையும் காதலி மஞ்சுளாவையும் மீட்கிறான். இந்தத் திரைப்படத்துக்கு அப்போது தோன்றியிருந்த ‘இலங்கைத் திரைப்படக் கூட்டுத்தாபனத்தின்’ உதவி கிடைக்கவில்லை. பத்து ஆண்டுகளாகத் தயாரிப…
-
- 0 replies
- 589 views
-
-
கிங் ஆப் கிங்ஸ் என்ற இசை நிகழ்ச்சி ,மலேசியாவில் 27ம் தேதி இளையராஜா தலைமையில் நடைபெறுவதாக இருந்தது , ராஜாவுக்கு உடல் நல குறைவால் அவரால் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள முடியவில்லை, அதனால் கார்த்திக் ராஜா ஷோவை நடத்தினார் , மலேசியாவில் இருந்து , நமது நிருபர் தரும் சிறப்பு செய்திகள் இதோ: யுவன் ஒரு வார காலமாக மலேசியாவில் இசை நிகழ்ச்சிக்காக பயிற்சி கொடுத்து வருகிறார், இளையராஜாவுடன் மருத்துவமனையில் இருந்த கார்த்திக்ராஜா , சில தினங்களாக இசை பயிற்சி கொடுத்து வருகிறார். காலையில் தொடங்கி, மலேசிய நேரப்படி மாலை நிகழ்ச்சி நடக்கும் 30 நிமிடங்கள் வரை, இசை அமைப்பாளர்களுக்கும், பாடகர்களுக்கும் பயிற்சி கொடுத்தார். மேரடிகா ஸ்டேடியத்தில் மலேசிய நேரப்படி சரியாக இரவு 7.20 மணிக்கு மின்னல் எப் எம…
-
- 0 replies
- 703 views
-
-
நயன்தராபிரபுதேவா கள்ளத்தொடர்பை எதிர்த்தும் இருவரும் ஒன்றாக சுற்றக்கூடாது என்று கோரியும் பிரபுதேவா மனைவி ரம்லத் குடும்ப நல நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். பிரபுதேவாவின் சொத்துகள் அனைத்தையும் முடக்க வேண்டும் என்றும் அவர் கூடுதலாக மனு சமர்ப்பித்துள்ளார். இவ்வழக்கில் நேரில் ஆஜராகுமாறு பிரபுதேவா, நயன்தாராவுக்கு நீதிமன்றம் அழைப்பாணை அனுப்பியது. ஆனால் இருவரும் அதனை வாங்கவில்லை. பிரபுதேவா மும்பையில் படப்பிடிப்பில் உள்ளார். நயன்தாராவும் சென்னையில் இல்லை எனக் கூறப்பட்டது. இதனால் மீண்டும் அவர்களுக்கு அழைப்பாணை அனுப்ப வேண்டும் என ரம்லத்தின் சட்டத்தரணி ஆனந்தன் வலியுறுத்தினார். அதன்படி 2 ஆவது அழைப்பாணை அனுப்ப நீதிபதி உத்தரவிட்டார். பிரபுதேவாவும் நயன்தாராவும் சமீபத…
-
- 0 replies
- 678 views
-
-
தமிழ்த் திரையுலகம்: எங்கே செல்லும் இந்தப் பாதை? இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க தமிழ்நாட்டில் கடந்த சில வாரங்களில் வெளியான திரைப்படங்கள் எதுவும் ஹிட் ஆகாத நிலையில், பெரும் நெருக்கடியை எதிர்கொண்டிருக்கிறது தமிழ்த் திரையுலகம். மேலும் மிக அதிகமாக உள்ள டிஜிட்டல் ஒளிபரப்பு கட்டணத்தைக் குறைக்கக் கோரி மார்ச் ஒன்றாம் தேதி முதல் புதிய படங்கள் வெளியாகாது என்றும் அறிவிக்கப்பட்டி…
-
- 0 replies
- 335 views
-
-
கதையை சொல்வியா?: தியேட்டர் வாசலில் வாலிபரை அடித்து நொறுக்கிய அவெஞ்சர்ஸ் ரசிகர்கள். சீனாவில் அவெஞ்சர்ஸ் படம் பார்த்துவிட்டு வெளியே வந்து கதை சொன்ன நபரை தியேட்டரில் வரிசையில் நின்ற மக்கள் அடித்து நொறுக்கியுள்ளனர். அவெஞ்சர்ஸ்: என்ட் கேம் படம் ஓடும் தியேட்டர்கள் எல்லாம் ஹவுஸ்ஃபுல்லாக உள்ளது. இந்நிலையில் ஒருவர் ஹாங்காங்கின் காஸ்வே பேயில் உள்ள தியேட்டரில் அவெஞ்சர்ஸ் படம் பார்த்துள்ளார்.படம் பார்த்துவிட்டு வெளியே வந்த அவர் கிளைமாக்ஸ் காட்சி என்ன என்பதை சத்தமாக கூறியுள்ளார். படம் பார்க்கும் ஆவலில் தியேட்டரில் வரிசையில் நின்றவர்கள் அந்த நபர் சத்தமாக கதையை சொன்னதை கேட்டு ஆத்திரம் அடைந்தனர். இதையடுத்து அங்கிருந்தவர்கள் சேர்ந்து அவரை அடித்து நொறுக்கியுள்ளனர். அவருக்க…
-
- 0 replies
- 543 views
-
-
[size=4]மும்பை: கார் விபத்தில் அமிதாப்பச்சன் இறந்துவிட்டார் என இன்டர்நெட்டில் வதந்தி பரவியதால் அமிதாப் குடும்பத்தினரும் ரசிகர்களும் பெரும் அதிர்ச்சியடைந்தனர்.[/size] [size=3][size=4]ஆனால் இந்த தகவலை யாரும் நம்ப வேண்டாம். அவர் நலமோடு உள்ளார் என அவநரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.[/size][/size] [size=3][size=4]அமிதாப் இப்போது அமெரிக்காவில் உள்ளார்.[/size][/size] [size=3][size=4]அங்குள்ள மோரிஸ் டவுனுக்கும் ரோஸ் வெல்லுக்கும் இடையே நண்பரின் காரில் சென்று கொண்டிருந்த போது, திடீரென நிலை தடுமாறி ரோட்டின் நடுவே உள்ள சென்டர் மீடியனில் மோதி கவிழ்ந்ததாம். பல தடவை கார் உருண்டதாம். இந்த விபத்தில் காரில் இருந்த அமிதாப்பச்சன் அந்த இடத்திலேயே பலியாகிவி…
-
- 0 replies
- 797 views
-
-
சென்னை: 'துப்பாக்கி’ படத்தில் இஸ்லாமியர்களுக்கு எதிரான காட்சிகளை நீக்க நடவடிக்கை எடுத்ததற்காக முதலமைச்சர் ஜெயலலிதாவை, தமிழ்நாடு இஸ்லாமிய இயக்கங்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் கூட்டமைப்பினர் இன்று நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தனர். இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்,"மதச்சார்பற்ற கொள்கைகளை தொடர்ந்து பின்பற்றுவதோடு மட்டுமல்லாமல், சிறுபான்மையினரின் நலன் காத்திடும் வகையிலும் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா தலைமையிலான அரசு செயல்பட்டு வருகிறது. சமீபத்தில் தீபாவளித் திருநாளில், நடிகர் விஜய் நடிப்பில் தமிழகத்தில் வெளியான ‘துப்பாக்கி’ என்னும் திரைப்படத்தில் இஸ்லாமிய சமுதாய மக்களுக்கு எதிரான காட்சிகள் இடம் பெற்றுள்ளதாகவும், இக்காட்சிகள் உடனடியாக நீ…
-
- 0 replies
- 622 views
-
-
திரை விமர்சனம்: அழகென்ற சொல்லுக்கு அமுதா படிப்பு ஏறாமல் பிரபல ஹீரோவின் ரசிகர் மன்றத் தலைவராக வலம் வருகிறார் முருகன் (ராஜன் சுரேஷ்). அப்பாவின் உழைப்பில் வயிறு முட்ட வசைகளையும் சேர்த்துச் சாப்பிடும் தண்டச்சோறாக இருக்கும் அவருக்குள் புகுந்துவிடுகிறது காதல். அதற்குக் காரணம் அதே பகுதியில் வசிக்கும் அமுதா (அர்ஷிதா). தன்னைப் பாதித்த திரைப்படங்களின் தாக்கத்திலிருந்து தன் ஒருதலைக் காதல் உல கத்துக்கான முஸ்தீபுகளை உருவாக்கிக் கூச்சமே இல்லாமல் அவற்றைப் பிரயோகிக் கிறார் ராஜன். இதில் அவரைச் சார்ந்தவர்களும் அர்ஷிதாவும் படாதபாடு படுகிறார்கள். முருகனைத் துரத்தி அடிக்க அர்ஷிதா எல்லா உத்திகளையும் கையாள்கிறார். எதற…
-
- 0 replies
- 507 views
-
-
2017 பொங்கல் ரிலீஸ் படங்களில் கவனிக்க வேண்டியவை..! பொங்கலுக்கு ரிலீஸாகும் படங்கள் என்று தினம் ஒரு படம் அப்பேட் ஆகிக்கொண்டே இருக்கிறது. இதுவரை எட்டு படங்கள் பொங்கல் ரிலீஸ் என்று அறிவித்திருக்கும் நிலையில், அந்த படங்கள் எது..? அந்த படங்களில் என்ன ஸ்பெஷல் என்று கொஞ்சம் தெரிந்து கொள்வோமா... ‘பைரவா’ பொங்கல் ரேஸில் முதலில் பெயர் கொடுத்தது, விஜய்யின் ‘பைரவா’ படம் தான். இந்த படத்தில் முதன் முதலாக விஜய்க்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார். சந்தோஷ் நாராயணன் விஜய் படத்திற்கு இசையமைத்துள்ளார். இந்த இரண்டு செய்திகள் தான் விஜய் ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியது. ஏனென்றால், ‘ரஜினி முருகன்’ படத்தில் கீர்த்தியின் அழகும், ‘கபாலி’ படத்தில் …
-
- 0 replies
- 997 views
-
-
தமிழ் திரைப்பட இயக்குனர் தருண்கோபி இலங்கையை சேர்ந்த தமிழ் பெண்ணை திருமணம் செய்கிறார். திமிரு படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு இயக்குநராக அறிமுகமானவர் தருண்கோபி. அதனைத் தொடர்ந்து சிம்புவை வைத்து காளை என்ற படத்தை இயக்கினார். மாயாண்டி குடும்பத்தார் படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமான தருண்கோபி, தற்போது ஜீவா பூங்கா, என்னை ஏதோ செய்துவிட்டாய், காட்டுப்பய ஆகிய படங்களில் கதாநாயகனாக நடித்து வருகிறார். இந்நிலையில் தருண்கோபிக்கும், இலங்கை தமிழ் பெண் ஜானு லிங்கேஸ்வரிக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது. மணமகள் ஜானு இலங்கையை சேர்ந்தவராக இருந்தாலும் தற்போது மதுரையில் வசித்து வருகிறார். இவர்களது திருமணம் வருகிற ஜனவரி மாதம் 15ம்தேதி மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் நடைபெறுகிறது. …
-
- 0 replies
- 2.9k views
-
-
படப்பிடிப்பில் இருந்த சத்யராஜ் பெரியார் படம் பற்றி கூறியதாவது:- நடிகர் திலகம் சிவாஜிகணேசன் பெரியார் படத்தில் நடிக்க ஆசைப்பட்டார். அது நிறைவேறவில்லை. எனக்கு அந்த வாய்ப்பு கிடைத்துள்ளது. நான் நூற்றுக்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளேன். ஆனால் அவற்றில் சில படங்கள்தான் மனதில் நிற்கும். அந்த படங்களையும் தாண்டி பெரியார் படம் நிற்கும். பெரியார் வேஷத்தை நான் போடும்போது இன்னொரு முறை பிறப்பு எடுத்ததாகத்தான் உணர்ந்தேன். பெரியார் வேடம் என்னோட கனவு என்றும் அந்த படத்தை எடுத்தால் சம்பளம் வாங்காமல் நடிப்பேன் என்றும் ஏற்கனவே நான் கூறியிருந்தேன். இப்போது அது நடந்துள்ளது. பெரியாருடன் பழகியவர்களை தேடிப்பிடித்து பெரியாரின் பாடிலேங்க்வேஜ் மேனரிஷம் போன்றவற்றை கேட்டு தெரிந்து …
-
- 0 replies
- 1k views
-
-
திருப்பாச்சி, சிவகாசி, திருப்பதி, தர்மபுரி, பழனி, திருவண்ணா மலை என கமர்ஷியல் டூர் அடித்த இயக்குநர் பேரரசு இப்போது ‘திருத்தணி’யில் செட்டிலாகியிருக்கிறார். ‘‘உங்க டூர் இப்போ எப்படிப் போகுது?’’ “இன்னிக்கு மக்கள் மத்தியில் சுயநலம்தான் அதிகம் பரவியிருக்கு. அது மாறணும். நம்ம மனசுல பொது நலமும் இருக்கணும். இளைஞர்கள் ஜிம்முக்கு போய் உடற்கட்டை சூப்பராக்குற மாதிரி,அவங்க மனநலத்தையும் பத்திரமாக பார்த்துக்கணும்னு ஒரு விஷயத்தைச் சொல்லியிருக்கேன். பரத், சுனேனா, ராஜ் கிரண் என ‘திருத்தணி’ கொண்டாட்டமாக இருக்கும்.’’ இப்படியே ஊர்ப் பெயர்கள்ல படமெடுக்கிறீங்களே. உங்களுக்கே அது போரடிக்கலையா? “(சிரிக்கிறார்) இது என்னோட தனி அடையாளமாக மாறினதுல பல ப்ளஸும் இருக்கு. நமக்கு கிடைச்ச…
-
- 0 replies
- 629 views
-
-
இரவுக்கு ஆயிரம் கண்கள் திரை விமர்சனம் இரவுக்கு ஆயிரம் கண்கள் திரை விமர்சனம் போட்டிக்கு நடுவிலும் குற்றங்களை மையப்படுத்தி வெளியாகும் சில படங்கள் ஈர்ப்பை பெறுகின்றன. சமூக வலைதள குற்றங்கள், இணையதள மோசடிகள் என எத்தனையோ நடப்பதை அணுதினமும் நாம் காண்கிறோம். அந்த வகையில் பல இடங்களில் நடந்த சம்பவத்தை அடிப்படையாக வைத்து வந்துள்ளது இரவுக்கு ஆயிரம் கண்கள். இந்த கண்களில் இருக்கும் கதை என்ன என பார்போம்... கதைக்களம் படத்தின் ஹீரோ அருள்நிதி ஒரு கால் டாக்சி டிரைவர். அன்றாடம் அவரின் பயணத்தில் பலரை சந்திப்பார். வழக்கம் போல ஒருநாள் சவாரியில் அவர் எதிர்பாராமல் ஹீரோயினை சந்திக்கிறார். …
-
- 0 replies
- 954 views
-
-
பிரபல பின்னணி பாடகி பி. சுசீலா அதிக பாடல்கள் பாடியவர் என்ற வகையில் கின்னஸ் சாதனைப் புத்தகத்தில் இடம்பிடித்தார். அதிக தனிப்பாடல்கள் பாடியவர் என்ற வகையில் அவரது சாதனை கின்னஸ் உலகச் சாதனை அமைப்பால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. அந்த அமைப்பின் புள்ளி விபரப்படி கடந்த 1960 முதல் தற்போது வரை 17, 695 பாடல்கள் பாடியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த கணக்கு 2016 ஜனவரி 28-ல் சரிபார்க்கப்பட்டதாகவும் அந்த அமைப்பு கூறியுள்ளது. கடந்த 1952-ல் திரைவாழ்வைத் தொடங்கிய பி.சுசீலா, தமிழ், தெலுங்கு உள்ளிட்ட 6 மொழிகளில் ஜோடிப் பாடல்கள் மற்றும் தனிப் பாடல்கள் பாடியுள்ளார். http://www.tamilwin.com/show-RUmuyDRdSXlp5E.html
-
- 0 replies
- 409 views
-
-
மலையாள திரையுலகில் இருந்து ஐயா படம் மூலம் தமிழில் அறிமுகமானவர் நடிகை நயன்தாரா. மலையாளத்தில் நடித்துக் கொண்டிருந்த போது அதிகம் பிரபலமாகாத இவர், தமிழில் நடிக்க தொடங்கிய சில வருடங்களில் நடிகர் ரஜினியுடன் ஜோடி சேர்ந்து நம்பர் ஒன் நடிகையானார்.தொடர்ந்து தமிழிலிலிருந்து தெலுங்கில் கால் பதித்த நயன்தாரா அங்கும் தனி முத்திரை பதித்தார். தெலுங்கு படஉலகில் அதிக சம்பளம் வாங்கும் முதல் நடிகை என்ற பெயரையும் பெற்றார். தெலுங்கில் டைரக்டர் லிங்குசாமி இயக்கும் பையா படத்திற்காக நயன்தாராவுக்கு ரூ.1.25 கோடி சம்பளம் பேசப்பட்டதாக கூறப்படுகிறது. திருவனந்தபுரத்தில் உள்ள பிரபல நகைக்கடை நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக நடிகை நயன்தாரா நேற்று திருவனந்தபுரம் வந்தார். அந்த நிகழ்ச்சியில் கலந்து க…
-
- 0 replies
- 1.4k views
-