வண்ணத் திரை
சினிமா விமர்சனம் | சினிமாச் செய்திகள் | கருத்துகள்
வண்ணத் திரை பகுதியில் சினிமா விமர்சனம், சினிமாச் செய்திகள், உலக சினிமா சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் சினிமா விமர்சனங்களுக்கும் தரமான சினிமா சம்பந்தமான கட்டுரைகளுக்கும் முன்னுரிமை கொடுத்தல் வேண்டும். அளவுக்கதிகமான சினிமாச் செய்திகளையும், கிசுகிசு செய்திகளையும் தவிர்க்கவேண்டும்.
5547 topics in this forum
-
படிப்பை நிறுத்தியதே பாட்டுதான்! - மாலதி லஷ்மண் நான் மாலதி... மன்மதராசா பாடின மாலதின்னா உங்களுக்கு பளிச்சுன்னு தெரியும். இசைப் பாரம்பரியம், கலைப்பாரம்பரியம்னு எங்க குடும்பத்தைப் பற்றி பெரிசா சொல்றதுக்கு ஒண்ணுமில்லைங்க. அப்பா பாஸ்கர் எலக்ட்ரீஷியன். அம்மா லலிதா இல்லத்தரசி. மூணு அண்ணன்கள். வீட்டுக்கு ஒரே செல்லப்பொண்ணு இந்த மாலதி. அப்பாவுக்கு பூர்வீகம் காஞ்சிபுரம். ஆனா நான் பிறந்தது வளர்ந்தது எல்லாம் நம்ம சென்னையில தான். எந்த லட்சியமோ பெரிய கனவுகளோ இல்லாத ஒரு சராசரிப் பெண்ணாதான் வளர்ந்தேன். ஆனால் நான் குட்டிப்பொண்ணா இருக்கும்போதே என்னைச் சுத்தி ஒரு ரசிகர் கூட்டம் இருந்துகிட்டே இருக்கும். அக்கம் பக்கத்து வீட்டுக்காரங்கதான் என்னோட ரசிகர்கள். நேரங்கிடைக்கிறப்பல்லாம் …
-
- 0 replies
- 1.1k views
-
-
சினிமா செய்திகள்: கலகலப்பை இழந்த சுந்தர், இந்தி மொழியாக்கத்தில் ஜோதிகா பகிர்க கோலிவுட்டில் இந்த வார சினிமா நிகழ்வுகளைத் தொகுத்து வழங்குகிறோம். படத்தின் காப்புரிமைTWITTER/GVPRAKASH நாச்சியார் படத்தை தொடர்ந்து ஹிந்தியில் வெளியாகி வெற்றியடைந்த தும்ஹாரி சூலு (Tumhari Sulu) படத்தின் தமிழ் ரீமேக்கில் நடிக்க ஜோதிகா ஒப்பந்தமாகியுள்ளார். அழகியதீயே, மொழி, அபியும் நானும், பயணம் போன்ற படங்களை இயக்கிய ராதா மோகன் ஜோதிகாவின் புதிய திரைப்படத்தை இயக்குகிறார். இந்த படத்திற்கான முதல்கட்ட வேலைகள் தற்போது வேகமாக நடைபெற்றுகொண்டிருக்கின்றன. அதிலும் நடிகர்கள் தேர்வில் இயக்குனர் மும்முரமாக இருக்கிறார். இந்த நிலையில் ஜோதிகாவின் …
-
- 0 replies
- 451 views
-
-
'' ‘கில்லி’ல நல்லா நடிச்சேன்... இப்போ பிசினஸ் பண்றேன்!'' - ஜெனிஃபர் கில்லி’ படத்தில் ‘புவி’ கதாபாத்திரம் மூலம் நம்மைக் கவர்ந்தவர் ஜெனிஃபர். தற்போது சன் டி.வி-யில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் ‘ஸ்டார் வார்’ நிகழ்ச்சியில் சக போட்டியாளர்களுக்கு நிகராக போட்டி போட்டு விளையாடி வருகிறார். அவரோடு ஒரு ஜாலி கேலி இன்டர்வியூ. ``ஒரு கல்யாண வீட்டுக்குப் போயிருந்தப்போ என்னை பார்த்துட்டு பி.வாசு சார் அவருடைய படத்துல நடிக்கக் கேட்டார். வீட்டிலேயும் ஒத்துக்கிட்டு என்னை நடிக்க வைச்சாங்க. என்னுடைய முதல் படம் ‘கிழக்கு கடற்கரை’. அப்ப ஆரம்பிச்ச பயணம் இப்பவரைக்கும் தொடருது’’ என்றவர் சீரியல் பயணம் பற்றிப் பேசினார். ``சின்ன வயசுல பட…
-
- 0 replies
- 592 views
-
-
கிட்டத்தட்ட 30 ஆண்டுகளுக்கு முன்பு கமல்ஹாசனின் லீலாகரமான நடிப்பில் வெளியாகி பெரும் வெற்றி பெற்ற கே.பாலச்சந்தரின் மன்மத லீலை ரீமேக் ஆகிறது. அதே பாலச்சந்தரே ரீமேக் படத்தையும் இயக்குகிறார். இளைய மன்மதனாக சிம்பு நடிக்கவுள்ளார். பாலச்சந்தரின் முத்திரைப் படைப்புகளில் மன்மத லீலையும் ஒன்று. கமல்ஹாசனுக்கு காதல் இளவரசன் என்ற பட்டம் கிடைக்க உதவிய படங்களில் இதுவும் முக்கியமான ஒன்று. சேலையைக் கண்டாலே போதும், மோகம் கொண்டு அவர்களை தனது மாய வலையில் சிக்க வைக்கும் காதல் நாயகனாக கமல்ஹாசன் அப்படத்தில் கலக்கியிருப்பார். படம் முழுக்க இளமைக் கொண்டாட்டமாக இருக்கும். பாலச்சந்தர் இயக்கத்தில் வெளியாகி பெரும் வெற்றியைப் பெற்ற இப்படத்தை மீண்டும் பாலச்சந்தரே தமிழில் ரீமேக் செய்ய…
-
- 0 replies
- 1.1k views
-
-
இந்தியாவில் திரைப்படங்கள் ஆதிக்கம் செலுத்துவதற்கு முற்பட்ட காலத்தில் மக்களுக்கு முதன்மையான பொழுது போக்கு ஊடகமாக விளங்கிய, தற்காலத்தில் புறக்கணிக்கப்படும் நாடகக் கலையை சீதக்காதி கௌரவப்படுத்தி இருக்கிறது எனக் கூறலாம். அத்துடன் ஒரு மகா நடிகரான விஜய் சேதுபதி ஓர் முதிர்ந்த நாடகக் கலைஞராக நடித்திருப்பது பொருத்தமானதாக உள்ளது. முக்கியமாக ஔரங்கசீப் மன்னன் கதாபாத்திரத்தில் அவரது கம்பீரமான ஆனால் முதுமையில் தளர்ந்த குரலும், உணர்வுகளைப் பேசும் விழிகளும் சிறப்பு. இத்திரைப்படத்தின் ஆரம்பக் காட்சிகளை விஜய் சேதுபதியின் நாடகக் காட்சிகள் நிறைப்பது நாடக ரசிகர்கள் அல்லாதோருக்கு சலிப்புணர்வைக் கொடுத்தாலும், இயக்குநரின் துணிச்சல் பாராட்டத்தக்கது. இருப்பினும் இக் காட்சிகளைப் படத்தின் இடைய…
-
- 0 replies
- 757 views
-
-
அக்ஷய் குமார், எமி ஜாக்சன் நடித்து, தான் இயக்கிய ‘சிங் ஈஸ் ப்லிங்’ இந்தி படத்தின் டிரெய்லர் வெளியீட்டு வேலைகளில் மூழ்கியிருக்கிறார் பிரபுதேவா. இதற்கிடையே சமீபத்தில் அவர் தொடங்கியுள்ள தயாரிப்பு நிறுவனத்தின் அறிவிப்பு மற்றும் அதுதொடர்பான பணிகளுக்காக மும்பையில் இருந்து சென்னைக்கு வந்து சில நாட்கள் வட்டமடித்துக்கொண்டிருந்தார். அப்போது அவரை சந்தித்துப் பேசியதில் இருந்து.. நீங்கள் புதிதாக தொடங்கியிருக்கும் ‘பிரபுதேவா ஸ்டுடியோஸ்’ பற்றி.. தயாரிப்பு நிறுவனம் தொடங்க வேண்டும் என்று நீண்ட நாள் திட்டம் எதுவும் இல்லை. திடீரென யோசனை வந்தது. நினைத்தபடி சரியாக செயல்படுத்தவும் முடிந்திருக்கிறது. கடவுளுக்கு நன்றி. எனக்கு பிடித்த மாதிரியான கதைகள், பொழுதுபோக்கு விஷயங்கள், ஒவ்வொரு கதையிலு…
-
- 0 replies
- 1.3k views
-
-
நட்சத்திர நாயகர்கள் பெயரில் வீடியோ, மொபைல் கேம்கள் வருவது உலகளவில் இன்று ஒரு சகஜமான போக்காக இருக்கின்றது. இவை இரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றும் வருகின்றன. இதற்கு ஹாலிவுட், பாலிவுட், கோலிவுட் என எந்தத் திரையுலகும் விதிவிலக்கில்லை. சில நாயகர்களின் பெயரில் இப்படி கேம்கள் வந்துள்ளன. இளைய தளபதி விஜய் நடித்த 'கத்தி' யைத் தொடர்ந்து அண்மையில் இந்த புதிய மொபைல் கேம் வெளியாகிவுள்ளது. இதன் பெயர் ' எபிக் க்ளாஷ்' (EPIC CLASH) என்பதாகும். இந்த 3D மொபைல் கேமை பதிவிறக்கம் செய்து இப்போதே விளையாடலாம். விஜய்க்காக பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்டிருக்கும் இந்த மொபைல் கேம் பற்றி அறிந்து வியந்த நடிகர் விஜய், இதை வெளியிட அனுமதி வழங்கி இருக்கிறார். இது விஜய் இரசிகர்களுக்கு மட்டுமல்ல அனைத்து மொ…
-
- 0 replies
- 330 views
-
-
தேசிய விருது வழங்குவதில் தமிழ் திரைப்படங்களும், தமிழ் கலைஞர்களும் ஒட்டுமொத்தமாக புறக்கணிக்கப்பட்டுள்ளதாக இயக்குநர் வசந்த பாலன் குற்றஞ்சாட்டியுள்ளார். கீர்த்தி சுரேஷுக்கு தேசிய விருது கடந்த 66வது திரைப்படத்துறைக்கான தேசிய விருதுகள் தலைநகர் டெல்லியில் அறிவிக்கப்பட்டன. பிரசாந்த் நீல் இயக்கத்தில் யாஷ், ஸ்ரீநிதி ஷெட்டி ஆகியோர் நடித்த கன்னடப் படமான கே.ஜி.எஃப் படத்திற்கு சிறந்த சண்டை திரைப்படத்திற்கான தேசிய விருதும், மகாநதி (தெலுங்கு) படத்தில் நடித்த கீர்த்தி சுரேஷுக்கு சிறந்த நடிகைக்கான தேசிய விருதும் அறிவிக்கப்பட்டது. விக்கி கௌஷல் நடிப்பில் வெளியான உரி திரைப்படத்தை இயக்கிய ஆதித்யா தர் என்பவருக்கு சிறந்த இயக்குநர் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. சிறந்த …
-
- 0 replies
- 926 views
-
-
படக்குறிப்பு, இந்தியத் திரைப்படங்களில் ஈழத்தமிழர்கள் குறித்த சித்தரிப்புகள் அவ்வபோது சர்ச்சையாகி வருகின்றன. கட்டுரை தகவல் சிராஜ் பிபிசி தமிழ் ரஞ்சன் அருண் பிரசாத் பிபிசி தமிழுக்காக 16 ஆகஸ்ட் 2025, 08:00 GMT புதுப்பிக்கப்பட்டது 6 மணி நேரங்களுக்கு முன்னர் விஜய் தேவரகொண்டா நடிப்பில் கடந்த மாதம் வெளியான 'கிங்டம்' எனும் தெலுங்கு திரைப்படத்தில், இலங்கை தமிழர்கள் குறித்து தவறாக சித்தரிக்கப்பட்டிருப்பதாக தமிழ்நாட்டில் சர்ச்சை எழுந்தது. 'கிங்டம்' திரைப்படத்தின் பிரதான வில்லன் கதாபாத்திரத்தின் பெயர் 'முருகன்'. இலங்கையின் ஒரு தீவையும் அதில் வாழும் பழங்குடி மக்களையும் கட்டுப்படுத்தும் ஒரு தமிழ் குடும்பத்தின் வாரிசாக இந்த 'முருகன்' கதாபாத்திரம் இருக்கும். இந்த பழங்குடி மக்கள் 1920இல் …
-
- 0 replies
- 100 views
- 1 follower
-
-
2282 கோடி ரூபா செலவில் மகாபாரத கதை..! இந்திய சினிமாத்துறை வரலாற்றில் சுமார் 2282 கோடி ரூபா (150 மில்லியன் அமெரிக்க டொலர்கள்) செலவில் மகாபாரத கதையை, படமாக 5 மொழிகளில் உருவாக்கவுள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பொன்று வெளியாகியுள்ளது. குறித்த படமானது மலையாள நடிகர் மோகன்லால் நடிப்பில், மலையாளத்தின் மூத்த எழுத்தாளரும், கதாசிரியருமான எம்.டி.வாசுதேவநாயரின் ‘இரண்டாம் ஊழம்’ என்ற நாவலை மையப்படுத்தி படம் எடுக்கப்போவதாக அறிவித்திருந்தனர். தற்போது அந்த செய்தியை உறுதிப்படுத்தும்விதமாக அதிகாரப்பூர்வ அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளனர். மேலும் குறித்த படத்தை ஐக்கிய அரபு இராச்சியத்தில் வசிக்கும் இந்திய கோடீஸ்வரரான பி.ஆர்.ஷெட்டி என்ற தயாரிப்பாள…
-
- 0 replies
- 319 views
-
-
-
திரைப் பார்வை: அவன் வீட்டில் கல்லெறியுங்கள்! - ராமலீலா (மலையாளம்) ‘ராமலீலா’ படத்தில் தீலிப், ப்ரயாகா மார்டின் பி ரபல நடிகை மீதான பாலியல் துன்புறுத்தல் வழக்கில் கைதுசெய்யப்பட்டு, தற்போது பிணையில் வெளியே வந்திருக்கும் மலையாள நடிகர் திலீப். சிறைக்குச் செல்வதற்கு முன் இவர் நடித்த படம் ‘ராமலீலா’. அக்டோபர் 13 அன்று வெளியான ‘ராமலீலா’, நல்ல விமர்சனங்களைப் பெற்று சிறப்பான வசூலையும் குவித்து வருகிறது. அருண் கோபி இயக்கியிருக்கும் இந்தப் படத்துக்குக் கதை, திரைக்கதை, வசனம் எழுதியிருப்பவர் சச்சி. கம்யூனிஸ்ட் கட்சியிலிருந்து விலக்கப்பட்டதால், காங்கிரஸ் கட்சியில் சேரும் ராமன் உண்ணி (திலீப்) …
-
- 0 replies
- 355 views
-
-
நடிப்பு - விஜய், ஸ்ரேயா இயக்கம் - பரதன் (அறிமுகம்) இசை - ஏ.ஆர். ரஹ்மான் (கதை ) எதிர்காலத்தை முன்கூட்டியே அறிந்து கொள்ளும் ஓர் இளைஞனின் கதை. ( நடிப்பு) விஜய், ஸ்ரேயா, நமிதா மற்றும் பலர். (சிறுதுளிகள் ) * அப்பச்சன் படத்தை தயாரித்துள்ளார். * தரணியின் உதவியாளரும் 'கில்லி' வசனகர்த்தாவுமான பரதனுக்கு இது முதல்படம். * முதன்முறையாக விஜய்யுடன் ஸ்ரேயா, நமிதா ஜோடி சேர்நதுள்ளனர். * ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்துள்ளார். * நமிதாவுடன் விஜய் ஆடும் பாடலொன்றை வெளிநாட்டில் படமாக்கியுள்ளனர். * 'சொர்க்கம்' படத்தில் இடம…
-
- 0 replies
- 1.3k views
-
-
பாகுபலிக்கு 6 விருதுகள்; சிறந்த வில்லன் அரவிந்சாமி Published by Rasmila on 2016-01-27 09:16:18 சர்வதேச இந்திய திரைப்பட அகாடமி நடத்திய' ஐபா உற்சவம்’ விழாவில் பாகுபலி திரைப்படத்துக்கு 6 விருதுகள் கிடைத்துள்ளதோடு கடந்த வருடத்தின் சிறந்த வில்லன் நடிகராக அரவிந்சாமி தெரிவு செய்யப்பட்டுள்ளார். இவ் விழா நேற்றுமுன்தினம் ஹைதராபாத்தில் ஆரம்பமாகியது. இதில் தமிழ், தெலுங்கு, மலையாளத்தில் வெளியான ‘பாகுபலி’ சிறந்த திரைப்படமாக தெரிவுசெய்யப்பட்டுள்ளது. இத்திரைப்படத்தில் நடித்த சத்யராஜ், ரம்யாகிருஷ்ணன் ஆகியோரும் விருது பெற்றனர். ‘தனி ஒருவன்’ திரைப்படத்தில் நடித்த ஜெயம் ரவிக்கு சிறந்த நடிகருக்கான விரு…
-
- 0 replies
- 375 views
-
-
"ஆல்பம் ஒண்ணு கொடுக்கணும்.. அது உணர்வுகளின் ஆழத்தைத் தொடணும்" - ஜி.வி.பிரகாஷ் 'ஜில்' பேட்டி - சுகிதா குருநாதர் அப்படினு சொன்னா ஏ.ஆர்.ரஹ்மான். அவர்கிட்ட ஒன்றரை வருஷம் வேலை பார்த்திருக்கேன். இசைக்காக வாழ்பவர்னு சொல்லலாம். "மின்னல்கள் கூத்தாடும் மழைக் காலம்" என்று இந்த மழைக் காலத்துக்கு ஏற்ப ஜில்லுனு ஒரு பாட்டாகட்டும்; "வெயிலோடு உறவாடி"ன்னு வெயில் காலத்தை உருக வைப்பதாகட்டும்; இந்த ஐஸ்கிரீம் பாய்க்கு அல்வா சாப்பிடுவது மாதிரி. சினிமா துறைக்கு நிறைய கனவுகளை சுமந்துக் கொண்டு வந்த யூத் லிஸ்ட்டில், யாருப்பா இந்த சின்னப் பையன் பாட்டுல வெளுத்துக் கட்டுறான் என்று தனது முதல் படமான 'வெயில்' படத்தில் இசை பிதாமகர்கள் மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த இசை ரசிகர்களிடம் ஸ்கோர் பண்ணி…
-
- 0 replies
- 1.1k views
-
-
‘அர்விந்த் சுவாமிக்கும் 'ஜெயம்' ரவிக்கும் இதான் வித்தியாசம்!' - ஜாலி கேடி ஹன்சிகா #VikatanExclusive ஹன்சிகா... முதல் படத்தில் குஷ்பு. இப்போது சிம்ரன் என தமிழ் ரசிகனுக்காக இளைத்தவர். க்யூட், பப்லி, ரொமாண்ட்டிக் என ஆல் ஏரியாவிலும் ஹிட்டடித்துவிட்டு பேயாகவும் மாறி பதற வைத்துவிட்டார். இந்த ஜூலியட் தான் இப்போதும் தென்னிந்திய படங்களில் மோஸ்ட் வாண்ட்டட் டூயட் பொண்ணு. பார்த்து நாளானதே என மெசெஜ் தட்டினோம். ஒகே என அழைத்தார். அடுத்து தமிழில் “போகன்” தானே? ஆமாம். படம் நல்லா வந்திருக்கு. ரஷஸ் பாத்தேன். ரொம்ப கிளாஸா வந்திருக்கு. ஃபர்ஸ்ட் லுக் போஸ்டருக்கு செம வரவேற்பு. நான், ஜெயம் ரவியும் செம கலாட்டா ஆட்கள். எங்க கூட அர்விந்த்சுவாமி சாரும். ரோமியோ ஜூலி…
-
- 0 replies
- 422 views
-
-
ரிலீஸுக்கு முன் 85 கோடி வசூலித்த பைரவா விஜய் நடித்துள்ள பைரவா படம் இன்னும் இரண்டு தினங்களில் உலகம் முழுவதும் பிரம்மாண்டமாக வெளிவரவுள்ளது. டிக்கெட் ரிசர்வேஷன் தொடங்கி ஏற்கனவே முதல் வாரத்திற்கான டிக்கெட்டுகள் பெரும்பாலான திரையரங்குகளில் விற்று தீர்ந்துவிட்டது. இந்நிலையில் படம் வெளியாவதற்கு முன்பே பைரவா 85 கோடி ருபாய் அளவிற்கு வசூலித்துவிட்டதாக நம்பத்தகுந்த தகவல் வந்துள்ளது. தமிழ்நாட்டில் மட்டும் 55 கோடி, மற்ற மாநிலங்களில் 30 கோடி ஆகமொத்தம் 85 வசூலிட்டியுள்ளது பைரவா. http://tamil.adaderana.lk/kisukisu/?p=17604 SHARE OR SAVE THIS POST FOR LATER USAGE
-
- 0 replies
- 285 views
-
-
சனிக்கிழமை, 11, ஜூலை 2009 (12:31 IST) ஈழத்துக் கலைஞர்களால் எடுக்கப்பட்ட விடியல், நிலா திரைப்படம் ஆகஸ்ட்டில் வெளியீடு ஜூலை மாதம் 5ஆம் தேதி கனடா ஈழத் தமிழ் கலைஞர்களின் தமிழ்நாட்டில் தயாரிக்கப்பட்ட விடியல் திரைப்படமும், கனடாவில் தயாரிக்கப்பட்ட நிலா திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா கனடாவில் உள்ள கந்தசாமி இசையரங்க மண்டபத்தில் நடைபெற்றது. இந்த இசை குறுந்தகட்டை கடனாவில் உள்ள முக்கிய தொழில் அதிபர்கள் மற்றும் கனடா திரைப்படக் கலைஞர்களும் வெளியிட்டனர். விடியல் திரைப்படத்தின் பாடல்கள் பற்றி கனடா தமிழ் எழுத்தாளர் த.சிவபாலுவும், நிலா திரைப்படப் பாடல்கள் பற்றி கனடா தமிழ் திரைப்படக் கலைஞர் கலைவேந்தன் கணபதி ரவீந்திரனும் உரையாற்றினார்கள். இந்த வெளியீட்டு விழாக்கு வர…
-
- 0 replies
- 1.1k views
-
-
சென்னை: "பத்மபூஷண் விருதைப்போல் பாரத ரத்னா விருதுக்கும் மக்கள் என்னை தகுதி பெற வைப்பார்கள்" என்று நடிகர் கமல்ஹாசன் தெரிவித்தார். நடிகர் கமல்ஹாசனுக்கு மத்திய அரசு பத்மபூஷண் விருது அறிவித்துள்ளது. இதைத்தொடர்ந்து சென்னை ஆழ்வார்பேட்டையில் அலுவலகத்தில் இன்று கமல்ஹாசன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, அவரிடம் கேட்கப்பட்ட கேள்விகளும், அதற்கு அவர் அளித்த பதில்களும் வருமாறு: பத்மபூஷண் விருது பெற்றதை எப்படி உணர்கிறீர்கள்? பத்மபூஷண் விருதுக்கு தகுதியானவர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள். எனக்கு கற்றுக் கொடுத்தவர்கள் கூட இந்த விருதை வாங்காமலேயே போய் உள்ளனர். எனக்கு இந்த விருது கிடைத்துள்ளது. செய்ததற்காக மட்டும் இது கிடைக்கவில்லை. செய்யப் போவதற்காக கிடைத்துள்ள விருதாக கருதுகி…
-
- 0 replies
- 367 views
-
-
இசையமைப்பாளர் இளையராஜா பிறந்தநாள்: பண்ணைப்புரத்து ராசய்யா மாஸ்ட்ரோ ஆன கதை ச. ஆனந்தப்பிரியா பிபிசி தமிழுக்காக 2 ஜூன் 2022, 04:17 GMT புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES தமிழ் சினிமாவில் எழுபதுகளில் ஆரம்பித்து, தலைமுறைகள் கடந்து பலராலும் நேசிக்கப்படும், கொண்டாடப்படும் இசையமைப்பாளராக இருக்கிறார் இளையராஜா. இசையமைப்பாளராக, பாடகராக தமிழ் திரையுலகில் நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாக கோலோச்சி கொண்டிருப்பவர் இன்று தன்னுடைய எண்பதாவது வயதில் அடியெடுத்து வைக்கிறார். அவரை பற்றிய சுவாரஸ்ய தகவல்களை இந்த கட்டுரையில் பார்க்கலாம். *…
-
- 0 replies
- 270 views
- 1 follower
-
-
************************************************************************************************************ *** இந்த திரைப்படம் கனடாவில் கார்த்திகை 6, 7 திகதிகளில் தாயக மாணவர்கள் *** **** கல்வி மேம்பாட்டுக்காக திரையிடப்படுகின்றது. *** ***** Dates: November 06 & 07 and 13 &14 (Sat and Sun) *** ****** Time: 1:30 PM Place: Woodside Cinema. Tickets: $10 *** ************************************************************************************************************* இந்தப் ப…
-
- 0 replies
- 1.8k views
-
-
தென்னிந்திய தாரகை சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கை வரலாற்றை 'தி டர்ட்டி பிக்சர்' Silk Smithaஎன்ற பெயரில் இந்தியில் படமாக எடுத்து வருகிறார்கள். சில்க் கேரக்டரில் பிரபல பாலிவுட் நடிகை வித்யா பாலன் நடித்து வருகிறார். வேக வேகமாக வளர்ந்து வருகிற இந்த படம் குறித்த தகவல்கள் மீடியாவில் வெளியாகிக் கொண்டிருக்க, தனது முரட்டு மீசையை முறுக்கிக் கொண்டு படத்திற்கு தடை கோர தயாராகிக் கொண்டிருக்கிறார் பிரபல நடிகர் வினு சக்கரவர்த்தி. சில்க் கதையை யார் படமாக்கினால் இவருக்கென்ன என்ற கேள்வி ரசிகர்களுக்கு எழுந்தாலும், இவர் இல்லையென்றால் சில்க் என்ற நடிகையே இல்லை என்பது கோடம்பாக்கத்திற்கு நன்றாகவே தெரியும். அவரது கோபத்தை கேள்விப்பட்ட நாம் தமிழ்சினிமா.காம் சார்பாக அவரை சந்தித்தோம். துக்கமும் ஆத…
-
- 0 replies
- 1.2k views
-
-
[size=5]மதுரையால் சீரழியும் திரையுலகம்[/size] [size=4]பாலா மதுரை, அமீர் மதுரை இன்னும் பல முன்னணி இயக்குனர்கள் மதுரையைச் சேர்ந்தவர்கள். குறிப்பாக மதுரையை வைத்து மட்டும் படம் பண்ணும் ராசு மதுரவன் என்று எக்கச்சக்க மதுரை இயக்குனர்கள் இருக்கிறார்கள். இன்று தமிழ் திரையுலகம் என்றாலே மதுரைதான் என் மேடையிலேயே இவர்களில் சிலர் தற்புகழ்ச்சி பாடியதுண்டு. ஆனால் தமிழனின் மானத்தை வாங்குகிறவர்களும் அங்குதான் இருக்கிறார்கள். அப்படி என்ன விசேஷம்? மதுரை உசிலம்பட்டியைச் சேர்ந்த சில திண்ணைவெட்டி ஆபிசர்கள் ஹன்சிகாவுக்கு கோயில் கட்டப் போகிறார்களாம். நடிப்பு பற்றியே நன்றாக தெரியாத கத்துக்குட்டி ஹன்சிகாவுக்கு கோயில் கட்ட வேண்டும் என்றால் இவர்கள் எத்தனை தூரம் மாங்கா மடையர்…
-
- 0 replies
- 746 views
-
-
குறை சொல்வதோ, குற்றம் சாட்டுவதோ என் நோக்கமல்ல – பிரசன்னா by : Benitlas நடிகர் பிரசன்னா சில தினங்களுக்கு முன்பு தனது ட்விட்டர் பக்கத்தில், கொரோனா ஊரடங்கு காலத்திலும் தமிழ்நாடு மின்சார வாரியம் கட்டண கொள்ளையில் ஈடுபட்டுள்ளதாக உங்களில் எத்தனை பேருக்கு தோன்றுகிறது என்று கேள்வி எழுப்பினார். பிரசன்னாவின் இந்த ட்வீட் பெரும் விவாதத்தை உண்டாக்கியது. இது தொடர்பாக மின்சார வாரியம் இன்று விளக்கமளித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டது. அதில் மார்ச் மாதத்துக்கான கட்டணத்தை பிரசன்னா கட்டவில்லை என்றும், மின் கட்டணம் அதிகமானதுக்குமான காரணத்தையும் அந்த அறிக்கையில் தெரிவித்திருந்தது. இந்த நிலையில், மின்சார வாரியத்தைக் குறை சொல்வதோ, குற்…
-
- 0 replies
- 537 views
-
-
திரை விமர்சனம்: இளமி தமிழர்களின் பண்பாட்டுக் கூறுகளில் ஒன்றான ஜல்லிக்கட்டு கடும் நெருக்கடியில் இருக்கும் நேரத்தில் அதன் பெருமையைப் பேச வந்திருக்கிறது இந்தப் படம். கி.பி. 1700-ஐ ஒட்டிய காலத்தில் கதை நடக் கிறது. யாராலும் வெல்ல முடியாத ஜல்லிக்கட்டுக் காளை ஒன்றை வளர்க்கிறார் சூழூர் என்ற கிரா மத்தின் தலைவர் வீரைய்யன் (ரவி மரியா). அவர் மகள் இளமியை (அனு) மாங்கனிபுரம் கிராமத்தைச் சேர்ந்த கருப்பு (யுவன்) காதலிக்கிறான். இரண்டு கிராமங்களுக்கிடையிலான வழிபாட்டுப் பிரச் சினை, ஜல்லிக்கட்டுப் போட்டியாக உருவெடுக் கிறது. போட்டியில் வென்றால் சமமான வழிபாட்டு உரிமை மாங்கனிபுரத்துக்கு கிடைக்கும்…
-
- 0 replies
- 393 views
-