வண்ணத் திரை
சினிமா விமர்சனம் | சினிமாச் செய்திகள் | கருத்துகள்
வண்ணத் திரை பகுதியில் சினிமா விமர்சனம், சினிமாச் செய்திகள், உலக சினிமா சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் சினிமா விமர்சனங்களுக்கும் தரமான சினிமா சம்பந்தமான கட்டுரைகளுக்கும் முன்னுரிமை கொடுத்தல் வேண்டும். அளவுக்கதிகமான சினிமாச் செய்திகளையும், கிசுகிசு செய்திகளையும் தவிர்க்கவேண்டும்.
5547 topics in this forum
-
காக்கக் காக்கவுக்குப் பின் ஜீவனுக்குக் கிடைத்திருக்கும் அதிரடிப் பாத்திரம். படத்தின் முற்பகுதி முழுவதும் தன்னை ரவுடியாகவளர்த்த போலீஷ் காரனுக்காக கொலை செய்யும் கதாநாயகன் படத்தின் இறுதிப் பகுதியில் அந்தப் போலீஷ் காரனையே எதிர்த்து தனது காதலிக்காக உயிரை விடுவதுதான் கதை. இதில் பரிதாபம் என்னவென்றால் காதலியின் கைய்யாலேயே அவர் உயிரை விடுவதுதான். ஜீவனின் அலட்டிக் கொள்ளாத நடிப்பும், போலீசு ரவுடியாக வரும் வில்லனின் நடிப்பும் அபாரம். பல படங்களில் பார்த்த கதைதான். ஆயுதம் எடுத்தவன் அதனாலேயே சாவான் என்று மீண்டுமொருமுறை சொல்லியிருக்கிறார்கள். பரவாயில்லை !
-
- 0 replies
- 851 views
-
-
http://m.youtube.com/watch?v=PbTGR8o7NA4
-
- 0 replies
- 430 views
-
-
திரை விமர்சனம்: அப்பா சமுதாயம், அரசாங்கம், கல்விமுறை எனப் பல சிக்கல்களைத் தன் படங்களில் பேசிவரும் சமுத்திரக்கனி, அப்பா படத்தில் எடுத்துக்கொண்ட விஷயம் ‘குழந்தை வளர்ப்பு’. நெய்வேலியில் வசிக்கும் ஒரு நடுத்தரக் குடும்பத்தைச் சேர்ந்தவர் தயாளன் (சமுத்திரக்கனி). தன் மகனை இயல்பாக வளர்க்க வேண்டும் என்று அவர் நினைக்கிறார். ஆனால் அவர் மனைவி அதற்கு முட்டுக்கட்டை போடுகிறார். எப்போது, எந்தப் பள்ளியில் சேர்ப்பது என்பது முதல் எல்லா விஷயங்களும் அவர்களுக்குள் மோதலை உருவாக்குகின்றன. ஒரு கட்டத்தில் சமுத்திரக்கனி தன் மகனைத் தனியே வளர்க்க வேண்டிய நிலை உருவாகிறது. பக்கத்து வீட்டுக்காரர் தம்பி ராமையாவோ தன் மகன் மீது தன் ஆசைகளையும்…
-
- 0 replies
- 435 views
-
-
ஹாலிவூட் அதிரடி ஆக்சன் திரைப்பட விமர்சனம்! ஒரு தாக்குதலை வெற்றிகரமாக நடாத்தி முடிக்க வேண்டுமாயின் சிறந்த திட்டமிடல் அவசியம். திட்டமிடலுக்கு அடுத்த கட்டமாக ஆயுத வளம், மனித வலு,மற்றும் தாக்குதலுக்கான இலகு வழிகளைக் கண்டறிவது அவசியமாகின்றது. குறுகிய வளங்களுடன், பெருமளவான சேதத்தினை ஏற்படுத்தக் கூடிய தாக்குதலை செய்வதற்கு பல குறுக்கு வழிகளைக் கையாள வேண்டியிருக்கலாம். அதே வேளை, ஆயுத வளம் இல்லாத சந்தர்ப்பத்தில் சுயமாக தமக்கு உள்ள அறிவின் அடிப்படையில் ஆயுதங்களையும் வடிவமைக்க வேண்டிய சாத்தியம் ஏற்படலாம். அமெரிக்க உளவுத்துறையினைச் சேர்ந்த ஐந்து பேர் கொண்ட கும்பலானது, CIA நிறுவனத்தின் நடவடிக்கைகள் பிடிக்காததன் காரணத்தினால் CIA நிறுவனத்தினை அழிக்க முயற்சிக்கின்றார்கள். இது சாத்தியமா…
-
- 0 replies
- 530 views
-
-
திரை விமர்சனம்: பழைய வண்ணாரப்பேட்டை இடைத்தேர்தல் பரபரப்பில் இருக்கும் பழைய வண் ணாரப்பேட்டையில் பொது வுடைமைக் கட்சித் தொண்டர் ஒருவர் கொல்லப்படுகிறார். கொலையாளியைத் தேடும் காவல் துறை, பொறியியல் கல்லூரி மாணவர் கார்த்தியையும் (பிரஜன்) அவரது நண்பர்கள் 5 பேரையும் சந்தேகத்தின் அடிப்படையில் அள்ளிக்கொண்டு செல்கிறது. அவர்களில் ஒருவர்தான் கொலை யாளி என்ற முடிவுக்கு காவல் துறை வருகிறது. ஆனால், இதில் உதவி ஆணையர் மூர்த்திக்கு (ரிச்சர்ட்) நம்பிக்கை இல்லை. அரசியல் கொலையின் சூத்திரதாரி யைத் தேடி அவர் புறப்படுகிறார். இன்னொரு பக்கம், தனது நண் பனை மீட்க உண்மையான குற்ற வாளியைக் கண்டுபிடித்தாக வேண் டும் என்று கார்த்தியும் புறப்படு கிற…
-
- 0 replies
- 291 views
-
-
வித்தகன், துரோகி உள்ளிட்ட படங்களில் நடித்திருப்பவர் நடிகை பூர்ணா. தற்போது ‘படம் பேசும்‘ என்ற படத்தில் சக்தி ஜோடியாக நடிக்கிறார். ராகவா இயக்குகிறார். இதனை நாராயணபாபு, பூர்ணிமா, வாசன் எஸ்.எஸ். தயாரிக்கின்றனர். இதில் நடிப்பது பற்றி பிரஸ் மீட்டில் பூர்ணா கூறியதாவது: இதுவரைக்கும் ஆறு படங்களில் நடிச்சுட்டேன். எதுவுமே ஓடல. ஆனால் இந்த படம் எனக்கு தமிழ்சினிமாவில் பெரிய இடத்தை கொடுக்கும். இப்படத்தின் கதையை இயக்குனர் ராகவா எனக்கு மெயிலில் அனுப்பி 2வது ஹீரோயினாக நடிக்க கேட்டிருந்தார். அந்த கேரக்டரை படித்ததும் வித்தியாசமாக இருந்தது. 2வது ஹீரோயின் பாத்திரமாக இருந்தாலும் நடிக்க சம்மதித்தேன். இதைவிட ஹீரோயின் வேடம் நன்றாக இருந்தது. அந்த கதா பாத்திரம் கிடைத்தால் நன்றாக இருக்கும் என்று மனது…
-
- 0 replies
- 542 views
-
-
ராஜ் குந்த்ராவுக்கு எதிராக திரும்புகிறாரா ஷில்பா ஷெட்டி? ஆபாச பட தயாரிப்பு சர்ச்சை 24 ஜூலை 2021 பட மூலாதாரம், GETTY IMAGES படக்குறிப்பு, கணவர் ராஜ் குந்த்ராவுடன் ஷில்பா ஷெட்டி ஆபாச படங்களில் மாடல்களை நடிக்க வைத்து, அதை ஆபாச இணையதளங்களில் பதிவேற்றி பணம் சம்பாதித்ததாக தனது கணவர் ராஜ் குந்த்ரா மீது காவல்துறையினர் குற்றம்சாட்டிய விவகாரத்தில் அவர் என்ன செய்தார் என்ற தகவலை வெளியிட்டிருக்கிறார், அவரது மனைவியும் பிரபல பாலிவுட் நடிகையுமான ஷில்பா ஷெட்டி. திரைப்படத்தில் நடிக்க வாய்ப்பு கேட்டு வரும் மாடல்கள் மற்றும் பிரபலங்களை ஆபாச படங்களில் நடிக்க வைத்து, அதை ஹாட்ஷாட்ஸ் எனப்படும் செல்பேசி செயலியில…
-
- 0 replies
- 600 views
-
-
ராமராஜன் தவிர வேறு எந்த நடிகரும் செய்யாத சாதனை! ராமராஜன் வாழ்க்கை ஒரு பாடம்... ராமராஜனுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது! வேறு எந்த நடிகரும் செய்யாத சாதனை என்ன தெரியுமா? ராமராஜன் வாழ்க்கை ஒரு பாடம்... புதுவையைச் சேர்ந்த அஸிஸ்ட் வேர்ல்ட் ரெக்கார்ட் பவுண்டேஷன் என்ற அமைப்பு ராமராஜன் உள்பட 80 சாதனையாளர்களைத் தேர்ந்தெடுத்து வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கியது. சினிமாவிலும் வாழ்க்கையிலும் பெரு வாழ்வு வாழ்ந்து வீழ்ந்த ஒருவருக்கு எடுத்துக்காட்டு நடிகர் ராமராஜன். சினிமாவில் புகழின் உச்சியில் இருந்தவர், அவரின் அனைத்து படங்களும் சிறப்பாக ஓடி வசூலை குவித்தன, ராமராஜன் திருமணத்திற்கு கலையுலகமே திரண்டது, அப்போதைய முதல்வர் எம்.ஜி.ஆர் நேரில் வந்து வாழ்த்தினார். தற்போது திமு…
-
- 0 replies
- 2.1k views
-
-
முரளிதரன் காசி விஸ்வநாதன் பிபிசி தமிழ் நடிகர்கள்: சூர்யா, பிரியங்கா மோகன், சத்யராஜ், சூரி, சரண்யா பொன்வண்ணன், வினய், இளவரசு, தேவதர்ஷினி, புகழ்; இசை: டி. இமான்; ஒளிப்பதிவு: ஆர். ரத்னவேலு; இயக்கம்: பாண்டிராஜ். 'சூரரைப் போற்று', 'ஜெய் பீம்' ஆகிய படங்கள் ஓடிடியிலேயே வெளியாகிவிட்டவிட்ட நிலையில், 'காப்பான்' படத்திற்குப் பிறகு சூர்யா நடித்து திரையரங்கில் வெளியாகும் படமாக அமைந்திருக்கிறது இந்த 'எதற்கும் துணிந்தவன்'. படத்தின் துவக்கத்தில் பல கொலைகளைச் செய்கிறார் கதாநாயகன் கண்ணபிரான் (சூர்யா). பிறகு கதை பின்நோக்கி நகர்கிறது. தமிழ்நாட்டின் தென்கிழக்கு மாவட்டங்களில் ஒன்று. அங்கே தமிழ் சினிமாவுக்கே உரிய ஊர். அந்த ஊரின் பெரிய மனிதரின் (சத்யராஜ்) மகன் …
-
- 0 replies
- 281 views
-
-
பிரச்சினைகளில் சிக்கிய விஜய்யின் 7 படங்கள்: ஓர் அலசல் பார்வை 2011-ம் ஆண்டிலிருந்து வெளியான விஜய் படங்கள் யாவுமே பல்வேறு பிரச்சினைகளில் சிக்கியே வெளியாகியிருக்கிறது. இதற்கு காரணம் விஜய்யாக இல்லாவிட்டாலும், கதைக்களம், பணப்பிரச்சினை என பல காரணங்கள் அடங்கியிருக்கிறது. அவ்வாறு பிரச்சினைகளில் சிக்கிய விஜய் படங்கள் என்ன? ஏன் என்று பார்க்கலாம் காவலன் (2011) : 'சுறா' படத்தின் பெரும் தோல்வியால் ஏற்பட்ட நஷ்டத்தை விஜய் கொடுக்க வேண்டும் என்று விநியோகஸ்தர்கள் மற்றும் திரையரங்க உரிமையாளர்கள் போராட்டத்தில் இறங்கினார்கள். இறுதியில் விஜய்யுடன் பேசி பணத்தை திரும்ப அளிக்க ஒப்புதல் அளித்தவுடனே 'காவலன்' வெளியானது…
-
- 0 replies
- 424 views
-
-
``நானும் அவரும் இப்பவும் குட் ஃப்ரெண்ட்ஸ்!” - ராமராஜன் பற்றி நளினி ‘சின்ன பாப்பா பெரிய பாப்பா' சீரியலின் மூலம் நகைச்சுவை கதாபாத்திரத்தில் தன்னை முழுவதுமாக அர்ப்பணித்துகொண்டவர் நடிகை நளினி. அனைவரிடமும் அன்பாகப் பழகும் குணம் இவருடைய ப்ளஸ். தனக்கேயான பாசப் புன்னகையுடன் பேசத் தொடங்கினார். “ 'வாணி ராணி' சீரியலில் வில்லியாக களம் இறங்கியிருக்கிறீங்களே...'' “நான் சின்னத்திரையில் நுழைந்தபோது, மோசமான மாமியாரா நடிச்சேன். வீட்டுக்குப் போனாலும் அந்தக் கேரக்டரைப் பழக்கப்படுத்த, அப்படியே இருப்பேன். கொஞ்ச நாளில் என் பிள்ளைகள் 'அம்மா நீங்க இப்படி இருக்கிறதே எங்களுக்குப் பிடிக்கலை. தயவுசெய்து இனிமே நெகட்டிவ் ரோல் நடிக்காதீங்க'னு சொன்னாங்க. பசங்க…
-
- 0 replies
- 1.9k views
-
-
சிம்பு-ஓவியா திருமணம் முடிந்துவிட்டதா?- அவர்களே வெளியிட்ட தகவல் நடிகர்களில் பலர் திருமண வயதில் இருக்கின்றனர். அவர்களுக்கு எப்போது திருமணம் நடக்கும், யாருடன் செய்து கொள்வார்கள் என்பதையெல்லாம் அரிய ரசிகர்கள் அதிகம் ஆர்வம் காட்டுவார்கள். அந்த லிஸ்டில் இருப்பது சிம்பு தான், இவருக்கு எப்போது திருமணம் என்று நிறைய கேள்விகள் வந்துவிட்டது. இதற்கு நடுவில் ஓவியா-சிம்பு காதல் என்றும் வதந்திகள் வந்தன. இந்த நிலையில் ஓவியா பொங்கல் ஸ்பெஷலாக கலந்துகொண்ட நிகழ்ச்சியில் போன் செய்த சிம்பு, நிச்சயதார்த்தம் முடிந்து, திருமணமே முடிந்துவிட்டது என்று கூறியுள்ளார். ஆனால் நிகழ்ச்சியில் ஓவியாவுடன் இணைத்து வந்த தகவலுக்கு ஜாலியாக ச…
-
- 0 replies
- 507 views
-
-
'பாலக்காட்டுக்கு போங்க... அதான் சேஃப்!' - அசின் அடம் 'காவலன் படத்தின் மிச்சப் பகுதியை கேரளாவிலே வச்சிக்கலாம். பாலக்காட்டுக்குப் போயிடலாம் அதான் சேஃப் சேட்டா!' -மேட்டுப் பாளையத்தில் பெரியார் திகவினர் மேற்கொண்ட கறுப்புக் கொடி போராட்டத்தைப் பார்த்து மிரண்டுபோன அசின் சொன்னது இது. ஹீரோயினாச்சே... அதிலும் விஜய்யின் பேவரிட் ஹீரோயின் சொன்ன பிறகு அப்பீலேது? அடுத்த நாளே பாலக்காடு பறந்தது காவலன் படக்குழு, ஹீரோ விஜய்யுடன். மேட்டுப் பாளையத்தில் எடுக்க வேண்டிய பல காட்சிகளை ஒத்தப்பாலம் மற்றும் பாலக்காடு பகுதியிலேயே வைத்து எடுத்துக் கொண்டார்களாம். மூன்று தினங்கள் நடந்த இந்தப் படப்பிடிப்பில் வடிவேலுவும் பங்கேற்றார். "இப்போதான் எனிக்கு ரிலீஃப்" என்று அசின் கூ…
-
- 0 replies
- 813 views
-
-
சமீபகாலமாக பத்திரிகை செய்திகளில் அடிப்பட்டுக்கொண்டிருக்கும
-
- 0 replies
- 861 views
-
-
ஆசியாவின் டாப் 10 அழகிகள் இவர்கள்தான் . அழகு இருக்கும் இடத்தில் புகழும், பாராட்டும் தானே வந்து சேரும் என்பதை மூன்றாவது முறையாக நிரூபித்துவிட்டார் பிரியங்கா சோப்ரா. இவர் ஆசியாவின் செக்ஸியான பெண்கள் பட்டியலில் இந்த வருடம் முதலிடத்தைப் பிடித்திருக்கிறார். ஒவ்வொரு வருட இறுதியிலும் ஈஸ்டன் ஐ என்ற பத்திரிக்கை ஆசியாவின் செக்ஸியான ஐம்பது பிரபலங்களின் பட்டியலை வெளியிடும். இதில் டாப் 10 பிரபலங்களில் 10வது இடத்தை பாகிஸ்தானின் மஹிரா கான் பிடித்துள்ளார், மற்ற 9 இடங்களை இந்தியர்களே பெற்றுள்ளனர். அவர்களின் விவரங்கள் பின்வருமாறு,01. பிரியங்கா சோப்ரா: தற்போது முதல் இடத்தை பிடித்துள்ள பிரியங்கா சோப்ரா தொடர்ந்து மூன்றாவது முறையாக டாப் 10 வரிசையில் தொடர்ந்து வருகிறார்…
-
- 0 replies
- 588 views
-
-
ரஜினி படத்துக்கு 330 கோடி ரூபாய் காப்புறுதி பிரபல தமிழ் நடிகர் ரஜினிகாந்த் நடிக்கும் திரைப்படம் ஒன்று சுமார் 330 கோடி ரூபாய்க்கு காப்புறுதி செய்யப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த அளவுக்கு இதுவரை எந்தத் திரைப்படமும் இந்தியாவில் காப்புறுதி செய்யப்பட்டத்தில்லை எனவும் காப்புறுதி வல்லுநர்கள் கூறுகின்றனர். எந்திரன் 2 எனப் பெயரிடப்பட்டு சங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் அந்தப் படம் தற்போது தயாராகி வருகிறது. மிகப் பெரும் பொருட்செலவில் தயாரிக்கப்படும் இந்தப் படம், இந்தியப் பொதுத்துறை நிறுவனங்களால் காப்பீடு செய்யப்பட்டுள்ளன. இந்தியத் திரைபடத்துறையில் அண்மைக் காலமாக பல படங்கள் காப்புறுதி செய்யப்பட்டு வருகின்றன. படப்படி…
-
- 0 replies
- 231 views
-
-
ரஜினி நடிக்கும் எந்திரன் படத்தின் ஷூட்டிங் 3 நாட்களாக மீஞ்சூரில் நடந்தது. ரஜினிகாந்த்-ஐஸ்வர்யாராய் சம்பந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்பட்டன. தினமும் இரவு 7 மணிக்கு படப்பிடிப்பு தொடங்கி, மறுநாள் அதிகாலை 3 மணி வரை படப்பிடிப்பு நடந்து வந்தது. இதையொட்டி அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டது. படப்பிடிப்பில் கலந்து கொள்வதற்காக, ரஜினி தனது போயஸ் கார்டன் வீட்டிலிருந்து மாலை 4.30 மணிக்கு புறப்பட்டார். கோயம்பேடு 100 அடி ரோடு வழியாக மீஞ்சூருக்கு போய்க் கொண்டிருந்தபோது மணலி அருகே போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. பல கிலோ மீட்டர் தூரத்துக்கு பஸ், கார், வேன் மற்றும் கண்டெய்னர் லாரிகள் நின்றிருந்தன. இதனால் போக்குவரத்து நெரிசலில் சிக்கியவர் இரவு 7 மணி வரை மீஞ்சூரை அடை…
-
- 0 replies
- 2k views
-
-
விஜய்யுடன் ஒரு பாட்டுக்கு ஆட மறுத்தது ஏன் என்பதற்கு திவ்யா பதிலளித்தார். இதுகுறித்து திவ்யா கூற¤யதாவது:வாரணம் ஆயிரம் படத்தில் குடும்பப் பாங்கான வேடத்தில் நடித்ததாக பலரும் பாராட்டினார்கள். தொடர்ந்து வித்தியாசமான வேடங்களை ஏற்கவே விரும்புகிறேன். அடுத்ததாக காதல் டூ கல்யாணம் படத்தில் நடிக்கிறேன். மணிரத்னத்தின் உதவியாளர் மிலின்த் ராவ் இயக்குகிறார். ஆர்யாவின் தம்பி சத்யாவுக்கு ஜோடியாக நடிக்கிறேன். இது முழுக்க காமெடியான குடும்ப கதை. கார்ப்பரேட் நிறுவனத்தில் பணிபுரியும் பெண் வேடம். சிறிதும் கலாசார சம்பந்தமே இல்லாத இரு குடும்பத்தை சேர்ந்தவர்கள், காதலிக்கிறார்கள். இதன் விளைவுகளை யூமர் கலந்து இப்படம் சொல்கிறது. நீண்ட இடைவெளிக்கு பிறகு ஜெயஸ்ரீ நடிக்கிறார். மவுலி முக்கிய வேடம் …
-
- 0 replies
- 2.7k views
-
-
டேஷா... டேஷ் டேஷா... டேஷ் டேஷ் டேஷா...?! - ரிச்சி விமர்சனம் உலகில் இருக்கும் ஒவ்வொருவரும் யாரோ ஒருவருக்காகக் காத்திருக்கிறார்கள், அந்தக் காத்திருத்தல்தான் உலகை இயக்குகிறது. ரிச்சியில் யார் யாருக்காகக் காத்திருக்கிறார்கள், யாருடைய காத்திருப்பிற்குப் பலன் கிடைத்தது, யாருக்குப் பொய்த்துப்போகிறது என்பதை ஃபிளாஷ்பேக் பீரியட் திரைப்படமாகச் சொல்ல முயன்றிருக்கிறது ரிச்சி. ஒரிஜினல் படமான ’உளிடவரு கண்டன்டே’ படத்தின் கதையையும் கதாபாத்திரங்களையும் இசையையும் மட்டும் எடுத்துக்கொண்டு புதிதாக திரைக்கதை அமைத்திருக்கிறார்கள். ஆனால், அதுதான் படத்தின் பலவீனமாகவே மாறிவிட்டது. கதையை ஏகப்பட்ட பேர் சொல்வதால், நாம் பார்த்துக்கொண்டிருக்கிற கதை…
-
- 0 replies
- 578 views
-
-
ஹாலிவுட் ஜன்னல்: உலகை உலுக்கிய விமானக் கடத்தல் ஒ ரே உண்மைச் சம்பவம் வெவ்வேறு கோணங்களில் திரைப்படங்களாகும் வரிசையில் சேர்ந்திருக்கிறது ‘7 டேஸ் இன் என்டபி’. 1976-ல் இஸ்ரேலில் இருந்து பிரான்சு கிளம்பிய ‘ஏர் பிரான்ஸ்’ பயணிகள் விமானத்தை பாலஸ்தீனத் தீவிரவாதிகள் கடத்தினர். உகாண்டாவின் அப்போதைய அதிபர் இடி அமீன் ஆசிர்வாதத்துடன் அந்நாட்டு விமான நிலையமான ‘என்டபி’யில் 200 பயணிகள் அடங்கிய கடத்தல் விமானம் அடைக்கலமானது. உலகை உலுக்கிய இக்கடத்தல் சம்பவத்தில், இஸ்ரேல் சிறைகளில் இருக்கும் பாலஸ்தீனப் போராளிகளை விடுவிப்பது உள்ளிட்ட பல நிபந்தனைகள் விடுக்கப்பட்டன. பேச்சுவார்த்த…
-
- 0 replies
- 343 views
-
-
ரஜினிக்கு மற்றவர்களை பாராட்டுவது என்பது ஒரு வீக்னஸ். விக்ரம், சூர்யா, தனுஷ், விஜய், த்ரிஷா ஹரி, தரணி, ஏ.ஆர். முருகதாஸ்... என பாதி இன்டஸ்ட்ரி இவரது பாராட்டுக்கு பாத்திரமாகியிருக்கிறது. இரண்டு நாள் முன்பு தனது பிரதான ரசிகர் விஜய்யின் 'போக்கிரி' படத்தை பார்த்தார் ரஜினி. தனது ஸ்டைலில் விஜய் பன்ச் டயலாக் பேசி எதிரிகளை பந்தாடுவது ரஜினியை ரொம்பவே கவர்ந்திருக்கிறது. படம் முடிந்த உடனே 'போக்கிரி'யின் இயக்குனர் பிரபுதேவாவை தொடர்பு கொண்டிருக்கிறார். அவரிடம் தனக்கு படம் ரொம்பப் பிடித்திருப்பதாக கூறியிருக்கிறார். "படம் தொடங்கியதும் தெரியலை முடிஞ்சதும் தெரியலை, வெரிபாஸ்ட்" என பிரபுதேவாவின் டைரக்ஷ்னை புகழ்ந்து பாராட்டியிருக்கிறார். மைசூரில் சந்தோஷ்சிவன் இயக்கத்தில் குறும்படத்தில்…
-
- 0 replies
- 2.5k views
-
-
பொருத்தமான மாப்பிள்ளை கிடைத்தால் திருமணத்துக்கு ரெடி! - காஜல் பொருத்தமான மாப்பிள்ளை கிடைத்தால் விரைவில் திருமணம் செய்து கொள்ளவும் தயார், என்கிறார் நடிகை காஜல் அகர்வால். இந்தியிலும் அங்கீகாரம் கிடைத்துவிட்ட சந்தோஷத்தில் மிதக்கும் காஜல் அகர்வால் சமீபத்தில் ஹைதராபாதில் அளித்த பேட்டி: சிங்கம் படம் இந்தியில் நன்றாகப் போவது மகிழ்ச்சி. இப்போது நல்ல கேரக்டர்களை தேர்வு செய்து நடிக்கிறேன். படம் வென்றதா, தோற்றதா என்பது பற்றி எனக்கு கவலை இல்லை. காதல் என்பது முதல் பார்வையிலேயே வரும் என்கின்றனர். இதை நான் நம்பவில்லை. இருவருக்கிடையில் காதல் மலர்வதற்கு பல்வேறு காரணங்கள் உள்ளன. ஒருவரையொருவர் நன்றாக புரிந்து கொள்ள வேண்டும். இருவரின் எண்ணங்கள், ஆசைகள் பற்…
-
- 0 replies
- 882 views
-
-
10 மணித்தியாலம் தண்ணீாில் மிதந்தபடியே நடித்த ஹரிப்பிரியா கன்னட படவுலகில் 30-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்த விஜய ராகவேந்திரா தமிழுக்கு அறிமுகமாகும் படம் ‘அதர்வனம்’. இப்படத்தை ‘சிலந்தி’ படத்தை இயக்கிய ஆதிராஜன் இயக்கி வருகிறார். விஜயராகவேந்திரா, கன்னட சூப்பர் ஸ்டார்களான சிவராஜ் குமார், புனித் ராஜ்குமார் ஆகியோரின் மைத்துனன் ஆவார். விஜயராகவேந்திரா அறிமுகமாகும் இந்த படத்தில் இவருக்கு ஜோடியாக ஹரிப்பிரியா நடிக்கிறார். இந்த படத்தில் மாறுபட்ட வேடத்திலும், கவர்ச்சியிலும், நடிப்பிலும் ஹரிப்பிரியா வெளுத்து வாங்கியுள்ளாராம். குறிப்பாக…
-
- 0 replies
- 316 views
-
-
சிலம்பாட்டம் கிளைமாக்ஸ் காட்சிக்காக பில்லா அஜீத் கெட்டப்பில் நடிக்க வேண்டும் என இயக்குனர் சரவணன் கூறியுள்ளார். உடனே ஓகே சொன்னதுடன் பில்லாவில் அஜீத் பயன்படுத்திய உடையை அணிந்து அதே கெட் அப்பில் நடித்திருக்கிறார் சிம்பு. அஜீத்தோட ரசிகன் நான். டைரக்டர் இப்படியரு சீனை சொன்னதும் உடனே சரின்னுட்டேன். அதுமட்டுமில்ல. பில்லா படத்துல வந்த பின்னணி இசையையும் இந்த படத்துல பயன்படுத்தியிருக்கோம் என்கிறார் சிம்பு. http://kisukisucinema.net/index.php?mod=ar...amp;article=265
-
- 0 replies
- 805 views
-
-
திரை விமர்சனம்: கிடாரி துரோகம் ஒருவனது ரத்தத்தில் கலந்து ஓடினால் அதன் விளைவு என்னவாக மாறும்? அதுதான் இந்த ‘கிடாரி’. கவுரவத்துக்காகப் பஞ்சாயத்து, மிரட்டல் என்று திரிகிறார் பெரியவர் கொம்பையா பாண்டியன் (வேல.ராமமூர்த்தி). அவருக்கு வலது கையாக, கிட்டத்தட்ட ஒரு மகனாகவும் இருக்கிறார் கிடாரி (சசிகுமார்). ஆட்டுச் சந்தை, ரைஸ் மில் என்று தன் கவுரவத்துக்காகப் பஞ்சாயத்து, அடிதடியில் இறங்கி ரத்தம் பார்த்து ஊரில் பெரும் பகையைச் சேர்த்து வைத்திருக்கிறார் கொம்பையா பாண்டியன். இந்நிலையில், வேல.ராமமூர்த் தியை, அடையாளம் தெரியாதவர்கள் கழுத்தில் வெட்டிவிடுகிறார்கள். ஊரில் பதற்றம் பீறிட, அவரை வெட்டியது யார் என்பதை ந…
-
- 0 replies
- 346 views
-