Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வண்ணத் திரை

சினிமா விமர்சனம் | சினிமாச் செய்திகள் | கருத்துகள்

பதிவாளர் கவனத்திற்கு!

வண்ணத் திரை பகுதியில் சினிமா விமர்சனம், சினிமாச் செய்திகள், உலக சினிமா சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் சினிமா விமர்சனங்களுக்கும் தரமான சினிமா சம்பந்தமான கட்டுரைகளுக்கும் முன்னுரிமை கொடுத்தல் வேண்டும். அளவுக்கதிகமான சினிமாச் செய்திகளையும், கிசுகிசு செய்திகளையும் தவிர்க்கவேண்டும்.

  1. ஷ்ரியாவின் அம்மா ஸ்னேகா! இளையவர்களுடன் மட்டுமே நடிப்பது என்ற கொள்கையை ரஜினிக்காக முன்பு தளர்த்திய ஷ்ரியா, அடுத்து சரத்குமாருக்காகவும் தனது கொள்கையை தியாகம் செய்துள்ளார். ராதிகாவின் தயாரிப்பில் உருவாகவுள்ள புதிய படத்தில் சரத்குமாருடன் இணைகிறார் ஷ்ரியா. இளம் தலைமுறையினருடன் மட்டுமே நடிப்பது என்ற கொள்கையுடன் பல நடிகைகள் உள்ளனர். அவர்களில் ஷ்ரியாவும் ஒருவர். இந்த நிலையில் ரஜினியின் சிவாஜி பட வாய்ப்பு அவரைத் தேடி வந்தபோது தனது கொள்கையைத் தளர்த்தி சிவாஜியில் நடித்தார். இப்போது தனது கொள்கையை மீண்டும் தளர்த்தி சரத்குமாருடன் இணையவுள்ளார். ராதிகாவின் ராடான் மீடியா ஒர்க்ஸ் தயாரிக்கவுள்ள புதிய படத்தில் சரத்குமாருடன் இணைந்து நடிக்கவுள்ளார் ஷ்ரியா. இதற்காக அவருக்கு…

  2. Started by ரஞ்சித்,

    காக்கக் காக்கவுக்குப் பின் ஜீவனுக்குக் கிடைத்திருக்கும் அதிரடிப் பாத்திரம். படத்தின் முற்பகுதி முழுவதும் தன்னை ரவுடியாகவளர்த்த போலீஷ் காரனுக்காக கொலை செய்யும் கதாநாயகன் படத்தின் இறுதிப் பகுதியில் அந்தப் போலீஷ் காரனையே எதிர்த்து தனது காதலிக்காக உயிரை விடுவதுதான் கதை. இதில் பரிதாபம் என்னவென்றால் காதலியின் கைய்யாலேயே அவர் உயிரை விடுவதுதான். ஜீவனின் அலட்டிக் கொள்ளாத நடிப்பும், போலீசு ரவுடியாக வரும் வில்லனின் நடிப்பும் அபாரம். பல படங்களில் பார்த்த கதைதான். ஆயுதம் எடுத்தவன் அதனாலேயே சாவான் என்று மீண்டுமொருமுறை சொல்லியிருக்கிறார்கள். பரவாயில்லை !

  3. 30 படங்கள் வரை நடித்து முடித்து விட்ட பாலிவுட் ஸ்டார் தியா மிர்ஸா, இன்னும் தனக்குப் பிடித்த, தனது கனவு ரோல் வரவில்லை என்று ஏக்கம் தெரிவிக்கிறார். பாலிவுட்டின் கனவுக் கன்னிகளில் ஒருவரான தியா மிர்ஸா நடித்துள்ள கிரேஸி 4 பெரும் எதிர்பார்ப்பை பாலிவுட்டில் ஏற்படுத்தியுள்ளது. ராகேஷ் ரோஷனின் இயக்கத்தில் உருவாகியுள்ள கிரேஸி 4 படத்தில் ரித்திக் ரோஷன் கெட்ட ஆட்டம் போட்டுள்ளார். படத்தில் தியாவுக்கும் சூப்பர் ரோல். கிரேஸி 4 படத்தில் தியா இருப்பது பற்றி முதலில் படு ரகசியமாக வைத்திருந்தாராம் ராகேஷ் ரோஷன். இதுகுறித்து தியா கூறுகையில், நான் படத்தில் நடித்திருக்கிறேன் என்பதை சர்ப்ரைஸ் ஆக வைத்திருந்தார் ராகேஷ் ரோஷன். படம் பார்க்க வருபவர்கள் திடீரென என்னைப் பார்த்து ஆச்சரியமடைய வேண…

  4. தெலு‌ங்‌கி‌ல் செ‌ல்வராகவ‌ன் இய‌க்‌கிய, ஆடவ‌ரி மா‌ட்லகு அ‌ர்‌த்தலே வேருலே பட‌‌த்‌தி‌ன் ‌‌ரீ-மே‌க், யாரடி ‌நீ மோ‌கி‌னி. அ‌ப்பா ரகுவர‌ன். மக‌ன் தனு‌ஷ். தறுதலையாக ‌தி‌ரியு‌ம் மகனை ‌தி‌ட்டு‌கிறா‌ர் ரகுவர‌ன். அவ‌ன் பொறு‌ப்பானவனாக மா‌றி, இ‌னி ‌நீ வேலை‌க்கு‌ப் போக வே‌ண்டா‌ம் எ‌‌ன்று கூறு‌ம்போது, க‌ல்லா‌ல் அடி‌க்‌கிறா‌ர். மகனு‌க்கு காத‌ல் தோ‌ல்‌வி ஏ‌ற்படு‌ம்போது, சே‌ர்‌ந்து த‌ண்‌ணி அடி‌த்து சோக‌த்தை ப‌‌கி‌‌ர்‌ந்து கொ‌ள்‌கிறா‌ர். கூடவே அடி‌க‌ட் ஆகாதே என அ‌‌ட்சைஸு‌ம் செ‌ய்‌கிறா‌ர். எ‌ந்த ‌வி‌திமுறை‌க்கு‌ள்ளு‌ம் அட‌ங்க மறு‌க்கு‌ம் இ‌ந்த உறவு ‌சி‌றிய பு‌ன்னகையுட‌ன் ந‌ம்மை ஈ‌ர்‌க்‌கிறது. ரகுவர‌னி‌ன் வசன உ‌ச்ச‌ரி‌ப்பு ச‌ர்‌க்க‌ஸ் ‌சி‌ங்க‌ம் மா‌தி‌ரி. ரகுவர‌னி‌‌ன் சா‌ட்…

  5. கேரள அரசின் சிறந்த நடிகை விருது பெற்றுள்ள மீரா ஜாஸ்மின், தமிழில் பரத்துடன் நடித்துள்ள நேபாளியிலும், மலையாளத்தில் மோகன்லாலுடன் நடித்துள்ள ஒரு படத்திலும் நெருக்கமான முத்தக் காட்சிகளில் நடித்து ரசிகர்களுக்கு விருந்து படைத்துள்ளாராம். இந்தக் கோடை காலம் நிச்சயம் மீராவுக்கு எப்படி இருக்குமோ, ஆனால் அவரது ரசிகர்களுக்கு ஜில் ஜில் கோடையாக இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. தமிழில் பரத்துடன் இணைந்து நடித்த நேபாளி படமும், மலையாளத்தில் மோகன்லாலுடன் இணைந்து நடித்துள்ள இனதே சிந்தாவிஷ்யாயம் என்ற படமும் ஒரே நேரத்தில் திரைக்கு வருகின்றன. இதில் விசேஷம், இரு ஹீரோக்களுடன் மீரா படு நெருக்கமாக நடித்துள்ளதுதான். குறிப்பாக முத்தக் காட்சிகளில் படு நெருக்கம் காட்டி கிறுகிறுக்க வைத்துள்ளார…

  6. இந்திர விழா படத்தில் சூடான ஆட்டம் போடுவதாக இருந்த மாளவிகாவுக்குப் பதில், சொர்ணமால்யா அந்த கேரக்டரில் நடிக்கவுள்ளார். கே.ராஜேஷ்வர் நீண்ட இடைவெளிக்குப் பின்னர் இயக்கும் படம் இந்திர விழா. ஸ்ரீகாந்த் நாயகனாக நடிக்கிறார். ஹாட் ஸ்டார் நமீதா படு கிளாமராக நாயகியாக வலம் வருகிறார். கூடவே மாளவிகாவையும் புக் செய்திருந்தார் ராஜேஷ்வர். படத்தில் மாளவிகாவுக்கு முக்கியமான கேரக்டர். கிளாமரான பாடலும் இருந்தது. இந்த நிலையில் திடீரென மாளவிகா கர்ப்பமாகி விட்டதால் படத்திலிருந்து விலகிக் கொள்வதாக தகவல்கள் வெளியாகின. ஆனால் தான் விலகவில்லை என்றும், 3 மாதங்களுக்கு ஆடக் கூடாது என்று டாக்டர்கள் சொல்லியுள்ளதால் அதன் பின்னர் வந்து நடித்துக் கொடுப்பேன் என்று மாளவிகா விளக்கியிருந்தார். இரு…

  7. தனுஷின் காட்டில் இனி ஹிட் மழைதான் போலிருக்கிறது. பில்லா படத்திற்கே என்.எஸ்.சி என்று சொல்லப்படுகிற பரந்த ஏரியாவில் 72 தியேட்டர்கள்தான் போடப்பட்டதாம். ஆனால், யாரடி நீ மோகினி படத்திற்காக அதைவிட அதிக தியேட்டர்கள் போடப்பட்டுள்ளது. மேற்படி ஏரியாவில் தினமும் 400 காட்சிகள் வீதம் ஓடிக் கொண்டிருக்கிற இந்த படத்தை குருவி வெளியாகவிருக்கும் தியேட்டர்களில் ரிலீஸ் செய்திருக்கிறார்கள். விநியோகஸ்தர்கள் வட்டாரத்தில் 'அப் டு க்ளாஸ்' என்று சொல்லப்படுகிற ஒப்பந்தத்தில் திரையிட்டிருக்கிறார்கள். அதாவது படத்திற்கு வரவேற்பு இல்லையென்றாலும், குருவி வெளியாகிற வரை யாரடி நீ மோகினியை தியேட்டரிலிருந்து எடுக்கக் கூடாது என்ற நிபந்தனையுடன். ஆனால் இவர்கள் யோசித்தது போல் இல்லாமல் படத்திற்கு பெரும் வரவேற்பு கி…

  8. சினிமாவுக்காக எனது வாழ்க்கையை தியாகம் செய்யப் போகிறேன். இதனால் கல்யாணமே பண்ணிக் கொள்ள மாட்டேன் என்று இயக்குநர், நடிகர் எஸ்.ஜே.சூர்யா அதிரடியாக அறிவித்துள்ளார். வாலி படம் மூலம் சினிமாவுக்கு வந்தவர் சூர்யா. முதல் படத்திலேயே முத்திரை பதித்த எஸ்.ஜே.சூர்யா, குஷி, நியூ, அன்பே ஆருயிரே என தனது முத்திரையைப் பதித்தார். தொடர்ந்து நடிகராகவும் கலக்கினார். அவர் ஹீரோவாக நடித்த முதல் படம் நியூ. தொடர்ந்து கள்வனின் காதலி, அன்பே ஆருயிரே உள்ளிட்ட படங்களில் நடித்தார். முதலில் நிலாவுடனும் பின்னர் மீரா ஜாஸ்மினுடனும் இணைத்து பலமாக கிசுகிசுக்கப்பட்டவர் சூர்யா. மீராவும் இவரும் ரகசியக் கல்யாணம் செய்து கொண்டதாகவும் கூட கூறப்பட்டது. ஆனால் இதை சூர்யாவே மறுத்து விட்டார். இந்த நிலையி…

    • 2 replies
    • 1.4k views
  9. கவர்ச்சியில் ரசிகர்களை கிறங்கடித்த யானா குப்தா இந்தியில் பாடியுள்ள முதல் இசை ஆல்பம் வெளியாகியுள்ளது. செக் நாட்டைச் சேர்ந்த யானாவி்ன் இந்த ஆல்பத்தை இங்கிலாந்தை சேர்ந்த பஞ்சாபி பாடகர் டாக்டர் ஜீயஸ் தயாரித்து வெளியிட்டுள்ளார். 'பேக் அண்ட தி இன்ஃபிளூயன்ஸ்' என்ற இந்த ஆல்பத்தில் 2 பாடல்களை யானா குப்தா பாடியுள்ளார். தமிழில் அந்நியன் திரைப்படத்தில் விக்ரமுடன் 'காதல் யானை', மன்மதன் படத்தில் சிம்புவுடன் 'தத்தை தத்தை' பாடல்களுக்கு படுகவர்ச்சியாக விறுவிறுப்பு டான்ஸ் ஆடி ரசிகர்களை சுண்டி இழுத்தவர் யானா குப்தா. இந்திப் படங்களிலும் பல பாடல்களுக்கு டான்ஸ் ஆடி கலக்கியுள்ளார். இந்த புதிய இசை ஆல்பத்தில் 2 பாடல்களையும் யானா குப்தாவே எழுதியது குறிப்பிடத்தக்கது. கோமாளித்தனமான ச…

  10. உலக‌ம் சு‌ற்று‌ம் ந‌மிதா! பொறாமை‌யி‌ல் பொசுங்‌கி‌க் கொ‌ண்டிரு‌க்‌கிறா‌ர்க‌ள் சக நடிகைக‌ள். ப‌த்து பட‌ம் நடி‌த்து‌ம் பொ‌ள்ளா‌ச்‌சியை தா‌ண்டாத நடிகைகளு‌க்கு ம‌‌த்‌தி‌யி‌ல் பட‌த்து‌க்கு‌ப் பட‌ம் வெ‌ளிநாடு பற‌ந்தா‌ல் பொறாமை புகைய‌த்தானே செ‌ய்யு‌ம். நா‌ம் சொ‌ல்வது ந‌மிதாவை. அழ‌கிய த‌மி‌ழ் மக‌னி‌ல் ந‌மிதாவு‌க்கு இர‌ண்டே வசன‌ம். ஆ‌யினு‌ம் ஒரு முழு பாட‌ல் கா‌ட்‌சி‌க்காக வெ‌ளிநாடு அழை‌த்து‌ச் செ‌ன்றன‌ர். ‌பி‌ல்லா‌வி‌ல் நாலு வசன‌ம். நா‌‌ற்பது நா‌ள் மலே‌சியா‌வி‌ல் த‌ங்க வை‌த்தன‌ர். வர‌ப்போகு‌ம் பெருமா‌ளிலு‌ம் இதே கதைதா‌ன். ஆனாலு‌ம் மொ‌ரீ‌ஷிய‌ஸ் அழை‌த்து‌‌ச் செ‌ன்று ஆட வை‌த்தன‌ர். இ‌ப்போது இ‌ந்‌திர ‌விழா‌வி‌ல் நடி‌த்து‌க் கொ‌ண்டிரு‌க்‌கிறா‌ர். இ‌ந்த‌ப்…

    • 0 replies
    • 1.4k views
  11. 'ஜெயம்', 'எம்,குமரன் சன் ஆஃப் மகாலட்சுமி', 'உனக்கும் எனக்கும்' படங்களுக்குப் பிறகு ஜெயம் ரவியை வைத்து அவரது அண்ணன் ராஜா இயக்கியிருக்கும் படம், 'சந்தோஷ் சுப்பிரமணியம்'. தெலுங்கு 'பொம்மரிலு' படத்தின் ரீ-மேக்கான இதில் ஜெயம் ரவியின் அப்பாவாக பிரகாஷ்ராஜ் நடித்துள்ளார். அம்மா கீதா. இவர்களுடன் கவுசல்யா, சந்தானம், பிரேம்ஜி அமரன் ஆகியோரும் நடித்துள்ளனர். தேவிஸ்ரீ பிரசாதிதின் இசையில் பாடல்கள் ஏற்கனவே ஹிட்டாகி உள்ளன. வரும் பன்னிரெண்டாம் தேதி படம் வெளியாகிறது. அதற்குமுன் தணிக்கைச் சான்றிதழுக்காக சென்சார் உறுப்பினர்களுக்குப் படம் போட்டுக் காண்பிக்கப்பட்டது. படத்தைப் பார்த்தவர்கள் டீசன்டான பேமிலி என்டர்டெயின்மெண்ட் என இயக்குனர் ராஜாவை பாராட்டியதோடு படத்துக்கு அனைவரும் பா…

    • 0 replies
    • 781 views
  12. இன்னும் எத்தனை நூற்றாண்டுகள் கடந்தாலும் தமிழ்சினிமாவில் பாரதிராஜா விதைத்த மண்வாசனை கமழ்ந்து கொண்டே இருக்கும். சினிமாவில் மட்டுமன்றி சீரியலிலும் இதனை சாத்தியப்படுத்த களமிறங்கிவிட்டார் இயக்குனர் இமயம். தெக்கித்திப்பொண்ணு பாரதிராஜா இயக்கும் நெடுந்தொடர் இது. கலைஞர் தொலைக்காட்சியில், வரும் தமிழ் புத்தாண்டு முதல் ஒளிபரபாகவுள்ள இத்தொடருக்கு இளையராஜா இசையமைத்துள்ளார். ரத்னகுமார் கதைக்கு தேன்மொழி, சிவாஜி, ரோஸ்முகிலன் ஆகியோர் வசனம் எழுதுகின்றனர். நெப்போலியன், வாகை சந்திரசேகர், ரஞ்சிதா, சொர்ணமால்யா உள்ளிட்ட பலர் நடித்துள்ள இத்தொடர் குறித்து இன்று நிருபர்களிடம் பகிர்ந்து கொண்டார் பாரதிராஜா :- மூணு கிராமத்தைச் சேர்ந்த, மூன்று குடும்பங்களில் நடக்கும் கதைதான் இது. தலைமுற…

    • 0 replies
    • 756 views
  13. கோவிலுக்கு வந்த இடத்தில் இடுப்பைப் பிடித்துக் கிள்ளிய ரசிகரின் கன்னத்தை பதம் பார்த்தார் நடிகை ஷ்ரியா. சிவாஜி நாயகி ஷ்ரியா, உகாதியையொட்டி திருப்பதி வெங்கடாசலபதி கோவிலுக்கு சாமி கும்பிட சென்றார். சுப்ரபாத தரிசன நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பய பக்தியுடன் சாமி கும்பிட்டார். அவருடன் திருப்பதி எம்.எல்.ஏ வெங்கட்ரமணா என்பவரின் உதவியாளர் கோட்டி என்பவர் துணைக்கு வந்திருந்தார். தரிசனத்தை முடித்துக் கொண்டு கிளம்பினார் ஷ்ரியா. அதுவரை எல்லாம் நல்லபடியாகத்தான் போய்க் கொண்டிருந்தது. திடீரென ஷ்ரியாவை பார்த்த ரசிகர்கள் ஷ்ரியாவை சுற்றிச் சூழ்ந்தனர். ஆளுக்கு ஒரு பக்கமாக பாய்ந்து ஷ்ரியாவைத் தொட்டும், தடவியும் பரபரப்பை ஏற்படுத்தினர். அதில் ஹரி என்பவர் சற்று அத்துமீறி, ஷ்ரியாவின் …

  14. மெல்போர்ன்: சென்னையைச் சேர்ந்த பிரபல தமிழ் நாடக நடிகர் பிரகாஷ், சிட்னியில் தான் தங்கியிருந்த ஹோட்டலில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். அதீத குடிபோதையில் அவர் இறந்ததாக போலீஸார் தெரிவிக்கின்றனர். ஆனால் அவர் அப்படிக் குடிப்பவரல்ல என்று சக நடிகர்ள் தெரிவித்துள்ளனர். இந்தியாவைச் சேர்ந்த ஒரு நாடகக் குழு 'ஷேக்ஸ்பியரின் ஏ மிட்சம்மர் நைட்ஸ் ட்ரீம்' என்ற நாடகத்தை பல்வேறு நாடுகளில் நடத்தி வருகிறது. அதன் ஒரு பகுதியாக, ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் மார்ச் 11ம் தேதி முதல் 22ம் தேதி வரை சிட்னி தியேட்டரில் நடத்தப்பட்டது. இந்தக் குழுவில் பிரகாஷும் இடம் பெற்றிருந்தார். இவர் சென்னையைச் சேர்ந்தவர். பிரபல நாடக நடிகர். மார்ச் 23ம் தேதி நாடகக் குழுவினர் நாடு திரும்ப சிட்னி விமான ந…

    • 1 reply
    • 1.2k views
  15. பெங்களூர் கோவிலுக்கு பிச்சைக்காரன் வேடத்தில் சென்ற சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தை, நிஜமான பிச்சைக்காரன் என நினைத்து, மார்வாடிப் பெண் ஒருவர் 10 ரூபாய் பிச்சை போட்டாராம். அதை ரஜினி சந்தோஷமாக ஏற்றுக் கொண்டாராம். டாக்டர் காயத்ரி ஸ்ரீகாந்த் எழுதியுள்ள தி நேம் இஸ் ரஜினிகாந்த் நூலில்தான் இந்த சுவாரஸ்யத் தகவல் பதிவாகியுள்ளது. ஆசியாவின் நம்பர் 2 சூப்பர் ஸ்டாராக திகழ்பவர் ரஜினி. ஜாக்கி சானுக்கு அடுத்து அதிகம் சம்பாதிப்பவர் ரஜினி. ஆனால் அவருக்கு பத்து ரூபாய் பிச்சையாக வந்தபோது, அவர் அதைத் தவறாக எடுத்துக் கொள்ளவில்லை. மாறாக மனதுக்குள் மாபெரும் தத்துவம் உதித்துள்ளது. அந்த சுவாரஸ்ய அனுபவத்தை காயத்ரியின் வார்த்தைகளிலேயே காண்போம் .. பணத்திற்குக் கணக்கே இல்லை என்ற போதிலு…

  16. வெள்ளித் திரையில் அழகு தேவதையாய் மின்னியவர். எம்.ஜி.ஆர், சிவாஜி, எம்.ஆர்.ராதா, சந்திரபாபு, நாகேஷ், ஜெய்சங்கர், தேங்காய் சீனிவாசன், சிவகுமார் என்று பலருடன் 400 படங்களுக்கு மேல் நடித்து ஏராளமான சொத்துக்களைச் சம்பாதித்தவர். அந்தக் காலத்திலேயே மூன்று இம்பாலா கார்களில் பவனி வந்தவர். ஆனால் இன்று சொத்துக்கள் பறிபோய், சொகுசு வாழ்வு கைநழுவிப் போய் சாப்பாட்டுக்குக்கூட வழி யில்லாத நிலையில் இருக்கிறார் நடிகை புஷ்பமாலா. பெரியார் மாவட்டம், பெருந்துறை, வண்ணாம்பாறையில் நெடிய சந்திலுள்ள ஒரு சிறு அறை கொண்ட வீட்டில்தான் புஷ்பமாலாவின் வாழ்வு கடந்து கொண் டிருக்கிறது. அவரைச் சந்தித்துப் பேசினோம். ‘‘1958ல் ‘இரும்புத்திரை’ படத்தில் சிவாஜி யின் அண்ணன் மகளாக அறிமுகமானேன். முதல் படத்திலே…

    • 8 replies
    • 3.1k views
  17. Vantage Point - ஆரம்பம் புள்ளியில் இருந்து ஒரு பார்வை என்னும் படம் இந்த வருடம் மாசியில் வெளியாகியிருக்கிறது. இது நிகழ்கால உலக சூழ்நிலையைக் மய்யமாக கொண்டு எடுக்கப்பட்ட படம். பயங்கரவாதத்திற்கு எதிரான போர் பற்றி வரலாற்று மாநாடு ஒன்று ஸ்பெயின் நகரான சலமன்கா இல் நடக்கிறது. அதற்கு வந்த அமெரிக்க சனாதிபதியை கொலைசெய்யத முயற்சிக்கப்படுகிறது. இந்தக் கொலை முயற்சிக்கு கிட்டத்தட்ட 23 நிமிடங்களிற்கு முன்னர் நடந்த சம்பவங்களை இதில் சம்பந்தப்பட்ட பலதரப்பினரது பார்வை கண்ணோட்டம் அவதானிப்புகள் மூலம் பல கோணங்களில் காட்டுவது தான் படத்தின் முக்கிய பாகம். இதில் சம்பந்தப்பட்ட தரப்புகளாக 1) ஒரு தொலைக்காட்சி செய்திச் சேவையின் தயாரிப்பாளர் எவ்வாறு தனது களத்தில் உள்ள ஒளிப்…

  18. இந்திர விழா படத்திலிருந்து நான் விலகவில்லை. தற்போது கர்ப்பமாக இருப்பதால் 3 மாதம் கழித்து அப்படத்திற்காக ஒரு பாடலுக்கு ஆடிக் கொடுக்கவுள்ளேன் என்று கூறியுள்ளார் மாளவிகா. திருமணத்திற்கு முன்பு நடித்ததைப் போலவே திருமணத்திற்குப் பிறகும் கிளாமராக நடித்து வருகிறார் மாளவிகா. அவர் சமீபத்தில் ஒப்பந்தமாகியிருந்த படம் ஸ்ரீகாந்த் நடிக்க, ராஜேஷ்வர் இயக்கத்தில் உருவாகும் இந்திர விழா. இப்படத்தின் நாயகி நமீதா. இருந்தாலும் மாளவிகாவையும் கூடுதல் கிளாமருக்காக படத்தில் சேர்த்திருந்தார் ராஜேஷ்வர். ஒரு பாடலில் படு கிளாமராகவும் ஆடுகிறார் மாளவிகா. இந்த நிலையில் கர்ப்பம் தரித்து விட்டதால் படத்திலிருந்து மாளவிகா விலகிக் கொண்டதாக கூறப்பட்டது. ஆனால் அப்படியெல்லாம் இல்லை என்கிறார் மாளவி…

  19. வீரகேசரி: நமீதாவை வைத்து அடுத்து படத்திற்கு ரெடியாகி விட்டார் ஷக்தி சிதம்பரம். ஷக்தியின் சினிமா 'சக்தியாக' நமீதா விளங்குகிறார். அவர் இயக்கும், தயாரிக்கும் படங்களில் நமீதா 'டிபால்ட் பிராப்பர்டி' ஆகி விட்டார். கதை இருக்கிறதோ இல்லையோ, கண்டிப்பாக நமீதா இருப்பார் என்ற அளவுக்கு நமீதாவுக்கும், ஷக்திக்கும் இடையிலான நட்பு ஆழமாக உள்ளது. சமீபத்தில் வெளியான சண்டை படத்திலும் நமீதா நீக்கமற நிறைந்திருந்தார். கரகாட்டக்காரியாக ஆடி, ரசிகர்களின் நெஞ்சங்களில் அவர் ஏற்படுத்திய பதைபதைப்பு இன்னும் கூட போயிருக்காது. இந்த நிலையில் அடுத்த படத்திற்கு ரெடியாகி விட்டார் ஷக்தி. இதில் நமீதாதான் நாயகி. அதேபோல ஹீரோவாக சுந்தர்.சியையே புக் செய்து விட்டார். இப்படத்திற்கு சுந்தர்.சிக்கு பெரும்…

  20. ஆந்திர மாநிலம் கேசம்பேட்டை என்ற இடத்தில் நடந்த படப்பிடிப்பின்போது தேனீக்கள் கொட்டியதில் நடிகை மீராஜாஸ்மின் உள்ளிட்ட படக்குழுவினர் காயமடைந்தனர். அனைவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தமிழ், மலையாளத்தில் பிரபலமாக உள்ள மீரா ஜாஸ்மின் தெலுங்கிலும் தீவிரமாக நடித்து வருகிறார். தற்போது கோரிண்டகு என்ற தெலுங்குப் படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார் மீரா. இப்படத்தின் படப்பிடிப்பு ஆந்திர மாநிலம் மெகபூப் நகர் மாவட்டம் கேசம்பேட்டை என்ற கிராமத்திற்கு அருகே இன்று காலை நடந்தது. அப்போது படப்பிடிப்பு நடந்த இடத்திற்கு அருகே உள்ள மரத்தில் கூடு கட்டியிருந்த தேனீக்கள் திடீரென கூட்டமாக படையெடுத்து வந்தன. பின்னர் மீரா ஜாஸ்மினையும், படக்குழுவனரையும் தாக்கி கொட்டத் தொடங்கி…

    • 12 replies
    • 2.1k views
  21. செக் நாட்டுக்குச் சென்ற பாரீஸ் ஹில்டன், புகைப்படக்காரர்களின் கண்களில் படாமல் தப்பி ஓட முயன்றபோது கீழே விழுந்து காயமடைந்துள்ளார். சர்ச்சை நாயகியாக அறியப்பட்டவர் பாரீஸ் ஹில்டன். காலாவதி ஆன டிரைவிங் லைசென்சுடன் காரை படு வேகமாக ஓட்டி பிடிபட்டு, சமூக சேவை செய்ய வேண்டும் என்று கோர்ட்டால் முன்பு உத்தரவிடப்பட்டார். இந்த நிலையில், செக் நாட்டில் பாப்பராஸி புகைப்படக்காரர்களிடம் சிக்கி காயமடைந்துள்ளாராம் ஹில்டன். செக் தலைநகர் பிராக் நகருக்கு வந்துள்ளார் பாரீஸ் ஹில்டன். அப்போது அவரது வருகையை அறிந்து ஏராளமான புகைப்படக்காரர்கள் அங்கு வ்து குவிந்தனர். அதை சற்றும் எதிர்பாராத பாரீஸ் ஹில்டன் வேகமாக ஓட முயன்றார். அப்போது தடுமாறி கீழே விழுந்து விட்டார். இதில் அவரது அழகிய க…

    • 0 replies
    • 834 views
  22. தசாவதாரம்' ஆடியோ 25-ல் ரிலீஸ் அப்படி, இப்படியென்று ஒரு வழியாய் `தசாவதாரம்' ஆடியோ வெளியீட்டு விழா ஏப்ரல் 25-ம் தேதி என்பது முடிவாகி விட்டது. நேரு உள்விளையாட்டரங்கில், இந்த விழாவிற்காக முழு வீச்சில் புதுப்பிப்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. ஆஸ்கர் விருது வழங்கும் லாஸ் ஏஞ்சல்ஸ் 'கோடாக்' அரங்கம் போன்ற செட், முதல் அமைச்சர் கருணாநிதி தலைமையில், ஜாக்கிசான் சிறப்பு விருந்தினராக வருகை, கோலிவுட், பாலிவுட் பிரபல நட்சத்திரங்களின் பங்களிப்பு என்று ஏகத்துக்கும் எதிர்பார்ப்பை கிளப்பியுள்ளது இந்த விழா. இந்நிகழ்ச்சியில் கமல் செய்த பத்து வேடங்களின் வித்தைகளையும் ரசிகர்களின் கண்ணுக்கு விருந்தாக்கப் போகிறார்களாம். தனது படங்களில் அவ்வப்போது தலைகாட்டுவதை வழக்கமா…

    • 0 replies
    • 782 views
  23. என் மகனுக்கு அரசியல் விஷயங்களை தெரிந்து கொள்வதில் ஆர்வம் அதிகமாக இருக்கிறது என்று ஒரு முறை தெரிவித்திருந்தார் சுஹாசினி மணிரத்னம். அவர் சொன்னதை போலவே இயக்குனர் மணிரத்னத்தின் மகன், நந்தன் மணிரத்னம் ஒரு புத்தகத்தை வெளியிட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறார். கான்டர்ஸ் ஆஃப் லெனினிசம் என்று பெயரிடப்பட்டிருக்கும் இப்புத்தகம் கோவையில் நடந்த மார்க்சி்ஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 19-வது தேசிய மாநாட்டில் வெளியிடப்பட்டிருக்கிறது. எதிர்பாராமல் நடந்த சம்பவம் அது. மற்ற தொண்டர்கள் போலவே மாநாட்டில் வளைய வந்தார் நந்தன். பின்பு இவர் எழுதிய கம்யூனிசம் தொடர்பான புத்தகம் அந்த மேடையில் வெளியிடப்பட்டது. அப்போது இவர் மணிரத்னத்தின் மகன் மாநாட்டு மேடையில் குறிப்பிட, அடுத்த வினாடியே…

  24. தனது காதலனுடன் இன்று காலை வீட்டைவிட்டு ப்ரியாமணி ஓடி விட்டதாக வந்த செய்தியால் கோடம்பாக்கமே பரபரப்பாகிவிட்டது. ப்ரியாமணியும் கிரிக்கெட் வீரரும் தெலுங்கு நடிகருமான ராஜாவும் நீண்ட நாட்களாக காதலித்து வந்ததாகவும், காதலுக்கு ப்ரியாமணியின் அம்மா கடும் எதிர்ப்பு தெரிவித்ததால், இன்று அதிகாலை இருவரும் எஸ்கேப் ஆகிவிட்டதாகவும் தகவல்கள் கசிந்தன. இதைத் தொடர்ந்து சில எப்.எம்களிலும் இந்த செய்தி ஒலிபரப்பானது. இதுகுறித்து ப்ரியாமணியின் அம்மாவிடம் கேட்டபோது, "நெனச்சேன்... இந்த வருஷம் ஏப்ரல் முதல் தேதி யார் மாட்டப் போறாங்களோன்னு யோசிச்சப்பவே, ப்ரியாமணி பத்திதான் ஏதாவது பரபரப்பு கிளம்பும்னு எதிர்பார்த்தேன். அது இப்ப நடந்துடுச்சு. என் பொண்ணு யாரையும் லவ்வும் பண்ணல... இ…

    • 4 replies
    • 1.8k views
  25. “உலகத்தை தமிழன் ஆளுவான்” -டென்மார்க் தமிழர் எடுக்கும் படம் “உலக நாடுகள் முழுவதும் ஈழத்தமிழர்கள் இருக்கிறோம். ஆனால் எங்களுக்கென்று சொல்லிக் கொள்ளதான் ஒரு நாடு இல்லை” கண்களில் கனவுகளும் ஏக்கங்களும் மின்ன பேச ஆரம்பிக்கிறார் கி.செ.துரை. ஆனால்இ உலகத்தையே ஒரு குடையின் கீழ் ஆளப்போகிறான் தமிழன். இது என் கனவு மட்டுமல்ல. திருமூலரும்இ திருவள்ளுவரும் கூட இதைதான் சொன்னார்கள் என்கிறார் துரை. டென்மார்க்கில் வசிக்கும் இந்த இலங்கை தமிழர்இ தனது கனவை திரைப்படமாக எடுத்துக் கொண்டிருக்கிறார். படத்தின் பெயர் இளம் புயல். உலகத்தை தமிழால் வாழ வைப்போம் என்பதுதான் படத்தின் மையக்கரு. இன்டர்நெட் மூலம் உலகத்தை ஒரு குடையின் கீழ் கொண்டு வர பாடுபடும் ஒரு இளைஞன் ஒரு தனி தீவில் தனது திட்டத்தை செய…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.