வண்ணத் திரை
சினிமா விமர்சனம் | சினிமாச் செய்திகள் | கருத்துகள்
வண்ணத் திரை பகுதியில் சினிமா விமர்சனம், சினிமாச் செய்திகள், உலக சினிமா சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் சினிமா விமர்சனங்களுக்கும் தரமான சினிமா சம்பந்தமான கட்டுரைகளுக்கும் முன்னுரிமை கொடுத்தல் வேண்டும். அளவுக்கதிகமான சினிமாச் செய்திகளையும், கிசுகிசு செய்திகளையும் தவிர்க்கவேண்டும்.
5562 topics in this forum
-
30 படங்கள் வரை நடித்து முடித்து விட்ட பாலிவுட் ஸ்டார் தியா மிர்ஸா, இன்னும் தனக்குப் பிடித்த, தனது கனவு ரோல் வரவில்லை என்று ஏக்கம் தெரிவிக்கிறார். பாலிவுட்டின் கனவுக் கன்னிகளில் ஒருவரான தியா மிர்ஸா நடித்துள்ள கிரேஸி 4 பெரும் எதிர்பார்ப்பை பாலிவுட்டில் ஏற்படுத்தியுள்ளது. ராகேஷ் ரோஷனின் இயக்கத்தில் உருவாகியுள்ள கிரேஸி 4 படத்தில் ரித்திக் ரோஷன் கெட்ட ஆட்டம் போட்டுள்ளார். படத்தில் தியாவுக்கும் சூப்பர் ரோல். கிரேஸி 4 படத்தில் தியா இருப்பது பற்றி முதலில் படு ரகசியமாக வைத்திருந்தாராம் ராகேஷ் ரோஷன். இதுகுறித்து தியா கூறுகையில், நான் படத்தில் நடித்திருக்கிறேன் என்பதை சர்ப்ரைஸ் ஆக வைத்திருந்தார் ராகேஷ் ரோஷன். படம் பார்க்க வருபவர்கள் திடீரென என்னைப் பார்த்து ஆச்சரியமடைய வேண…
-
- 0 replies
- 784 views
-
-
கேரள அரசின் சிறந்த நடிகை விருது பெற்றுள்ள மீரா ஜாஸ்மின், தமிழில் பரத்துடன் நடித்துள்ள நேபாளியிலும், மலையாளத்தில் மோகன்லாலுடன் நடித்துள்ள ஒரு படத்திலும் நெருக்கமான முத்தக் காட்சிகளில் நடித்து ரசிகர்களுக்கு விருந்து படைத்துள்ளாராம். இந்தக் கோடை காலம் நிச்சயம் மீராவுக்கு எப்படி இருக்குமோ, ஆனால் அவரது ரசிகர்களுக்கு ஜில் ஜில் கோடையாக இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. தமிழில் பரத்துடன் இணைந்து நடித்த நேபாளி படமும், மலையாளத்தில் மோகன்லாலுடன் இணைந்து நடித்துள்ள இனதே சிந்தாவிஷ்யாயம் என்ற படமும் ஒரே நேரத்தில் திரைக்கு வருகின்றன. இதில் விசேஷம், இரு ஹீரோக்களுடன் மீரா படு நெருக்கமாக நடித்துள்ளதுதான். குறிப்பாக முத்தக் காட்சிகளில் படு நெருக்கம் காட்டி கிறுகிறுக்க வைத்துள்ளார…
-
- 1 reply
- 994 views
-
-
இந்திர விழா படத்தில் சூடான ஆட்டம் போடுவதாக இருந்த மாளவிகாவுக்குப் பதில், சொர்ணமால்யா அந்த கேரக்டரில் நடிக்கவுள்ளார். கே.ராஜேஷ்வர் நீண்ட இடைவெளிக்குப் பின்னர் இயக்கும் படம் இந்திர விழா. ஸ்ரீகாந்த் நாயகனாக நடிக்கிறார். ஹாட் ஸ்டார் நமீதா படு கிளாமராக நாயகியாக வலம் வருகிறார். கூடவே மாளவிகாவையும் புக் செய்திருந்தார் ராஜேஷ்வர். படத்தில் மாளவிகாவுக்கு முக்கியமான கேரக்டர். கிளாமரான பாடலும் இருந்தது. இந்த நிலையில் திடீரென மாளவிகா கர்ப்பமாகி விட்டதால் படத்திலிருந்து விலகிக் கொள்வதாக தகவல்கள் வெளியாகின. ஆனால் தான் விலகவில்லை என்றும், 3 மாதங்களுக்கு ஆடக் கூடாது என்று டாக்டர்கள் சொல்லியுள்ளதால் அதன் பின்னர் வந்து நடித்துக் கொடுப்பேன் என்று மாளவிகா விளக்கியிருந்தார். இரு…
-
- 0 replies
- 962 views
-
-
தனுஷின் காட்டில் இனி ஹிட் மழைதான் போலிருக்கிறது. பில்லா படத்திற்கே என்.எஸ்.சி என்று சொல்லப்படுகிற பரந்த ஏரியாவில் 72 தியேட்டர்கள்தான் போடப்பட்டதாம். ஆனால், யாரடி நீ மோகினி படத்திற்காக அதைவிட அதிக தியேட்டர்கள் போடப்பட்டுள்ளது. மேற்படி ஏரியாவில் தினமும் 400 காட்சிகள் வீதம் ஓடிக் கொண்டிருக்கிற இந்த படத்தை குருவி வெளியாகவிருக்கும் தியேட்டர்களில் ரிலீஸ் செய்திருக்கிறார்கள். விநியோகஸ்தர்கள் வட்டாரத்தில் 'அப் டு க்ளாஸ்' என்று சொல்லப்படுகிற ஒப்பந்தத்தில் திரையிட்டிருக்கிறார்கள். அதாவது படத்திற்கு வரவேற்பு இல்லையென்றாலும், குருவி வெளியாகிற வரை யாரடி நீ மோகினியை தியேட்டரிலிருந்து எடுக்கக் கூடாது என்ற நிபந்தனையுடன். ஆனால் இவர்கள் யோசித்தது போல் இல்லாமல் படத்திற்கு பெரும் வரவேற்பு கி…
-
- 0 replies
- 898 views
-
-
கவர்ச்சியில் ரசிகர்களை கிறங்கடித்த யானா குப்தா இந்தியில் பாடியுள்ள முதல் இசை ஆல்பம் வெளியாகியுள்ளது. செக் நாட்டைச் சேர்ந்த யானாவி்ன் இந்த ஆல்பத்தை இங்கிலாந்தை சேர்ந்த பஞ்சாபி பாடகர் டாக்டர் ஜீயஸ் தயாரித்து வெளியிட்டுள்ளார். 'பேக் அண்ட தி இன்ஃபிளூயன்ஸ்' என்ற இந்த ஆல்பத்தில் 2 பாடல்களை யானா குப்தா பாடியுள்ளார். தமிழில் அந்நியன் திரைப்படத்தில் விக்ரமுடன் 'காதல் யானை', மன்மதன் படத்தில் சிம்புவுடன் 'தத்தை தத்தை' பாடல்களுக்கு படுகவர்ச்சியாக விறுவிறுப்பு டான்ஸ் ஆடி ரசிகர்களை சுண்டி இழுத்தவர் யானா குப்தா. இந்திப் படங்களிலும் பல பாடல்களுக்கு டான்ஸ் ஆடி கலக்கியுள்ளார். இந்த புதிய இசை ஆல்பத்தில் 2 பாடல்களையும் யானா குப்தாவே எழுதியது குறிப்பிடத்தக்கது. கோமாளித்தனமான ச…
-
- 0 replies
- 841 views
-
-
உலகம் சுற்றும் நமிதா! பொறாமையில் பொசுங்கிக் கொண்டிருக்கிறார்கள் சக நடிகைகள். பத்து படம் நடித்தும் பொள்ளாச்சியை தாண்டாத நடிகைகளுக்கு மத்தியில் படத்துக்குப் படம் வெளிநாடு பறந்தால் பொறாமை புகையத்தானே செய்யும். நாம் சொல்வது நமிதாவை. அழகிய தமிழ் மகனில் நமிதாவுக்கு இரண்டே வசனம். ஆயினும் ஒரு முழு பாடல் காட்சிக்காக வெளிநாடு அழைத்துச் சென்றனர். பில்லாவில் நாலு வசனம். நாற்பது நாள் மலேசியாவில் தங்க வைத்தனர். வரப்போகும் பெருமாளிலும் இதே கதைதான். ஆனாலும் மொரீஷியஸ் அழைத்துச் சென்று ஆட வைத்தனர். இப்போது இந்திர விழாவில் நடித்துக் கொண்டிருக்கிறார். இந்தப்…
-
- 0 replies
- 1.4k views
-
-
'ஜெயம்', 'எம்,குமரன் சன் ஆஃப் மகாலட்சுமி', 'உனக்கும் எனக்கும்' படங்களுக்குப் பிறகு ஜெயம் ரவியை வைத்து அவரது அண்ணன் ராஜா இயக்கியிருக்கும் படம், 'சந்தோஷ் சுப்பிரமணியம்'. தெலுங்கு 'பொம்மரிலு' படத்தின் ரீ-மேக்கான இதில் ஜெயம் ரவியின் அப்பாவாக பிரகாஷ்ராஜ் நடித்துள்ளார். அம்மா கீதா. இவர்களுடன் கவுசல்யா, சந்தானம், பிரேம்ஜி அமரன் ஆகியோரும் நடித்துள்ளனர். தேவிஸ்ரீ பிரசாதிதின் இசையில் பாடல்கள் ஏற்கனவே ஹிட்டாகி உள்ளன. வரும் பன்னிரெண்டாம் தேதி படம் வெளியாகிறது. அதற்குமுன் தணிக்கைச் சான்றிதழுக்காக சென்சார் உறுப்பினர்களுக்குப் படம் போட்டுக் காண்பிக்கப்பட்டது. படத்தைப் பார்த்தவர்கள் டீசன்டான பேமிலி என்டர்டெயின்மெண்ட் என இயக்குனர் ராஜாவை பாராட்டியதோடு படத்துக்கு அனைவரும் பா…
-
- 0 replies
- 786 views
-
-
இன்னும் எத்தனை நூற்றாண்டுகள் கடந்தாலும் தமிழ்சினிமாவில் பாரதிராஜா விதைத்த மண்வாசனை கமழ்ந்து கொண்டே இருக்கும். சினிமாவில் மட்டுமன்றி சீரியலிலும் இதனை சாத்தியப்படுத்த களமிறங்கிவிட்டார் இயக்குனர் இமயம். தெக்கித்திப்பொண்ணு பாரதிராஜா இயக்கும் நெடுந்தொடர் இது. கலைஞர் தொலைக்காட்சியில், வரும் தமிழ் புத்தாண்டு முதல் ஒளிபரபாகவுள்ள இத்தொடருக்கு இளையராஜா இசையமைத்துள்ளார். ரத்னகுமார் கதைக்கு தேன்மொழி, சிவாஜி, ரோஸ்முகிலன் ஆகியோர் வசனம் எழுதுகின்றனர். நெப்போலியன், வாகை சந்திரசேகர், ரஞ்சிதா, சொர்ணமால்யா உள்ளிட்ட பலர் நடித்துள்ள இத்தொடர் குறித்து இன்று நிருபர்களிடம் பகிர்ந்து கொண்டார் பாரதிராஜா :- மூணு கிராமத்தைச் சேர்ந்த, மூன்று குடும்பங்களில் நடக்கும் கதைதான் இது. தலைமுற…
-
- 0 replies
- 761 views
-
-
மெல்போர்ன்: சென்னையைச் சேர்ந்த பிரபல தமிழ் நாடக நடிகர் பிரகாஷ், சிட்னியில் தான் தங்கியிருந்த ஹோட்டலில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். அதீத குடிபோதையில் அவர் இறந்ததாக போலீஸார் தெரிவிக்கின்றனர். ஆனால் அவர் அப்படிக் குடிப்பவரல்ல என்று சக நடிகர்ள் தெரிவித்துள்ளனர். இந்தியாவைச் சேர்ந்த ஒரு நாடகக் குழு 'ஷேக்ஸ்பியரின் ஏ மிட்சம்மர் நைட்ஸ் ட்ரீம்' என்ற நாடகத்தை பல்வேறு நாடுகளில் நடத்தி வருகிறது. அதன் ஒரு பகுதியாக, ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் மார்ச் 11ம் தேதி முதல் 22ம் தேதி வரை சிட்னி தியேட்டரில் நடத்தப்பட்டது. இந்தக் குழுவில் பிரகாஷும் இடம் பெற்றிருந்தார். இவர் சென்னையைச் சேர்ந்தவர். பிரபல நாடக நடிகர். மார்ச் 23ம் தேதி நாடகக் குழுவினர் நாடு திரும்ப சிட்னி விமான ந…
-
- 1 reply
- 1.2k views
-
-
வெள்ளித் திரையில் அழகு தேவதையாய் மின்னியவர். எம்.ஜி.ஆர், சிவாஜி, எம்.ஆர்.ராதா, சந்திரபாபு, நாகேஷ், ஜெய்சங்கர், தேங்காய் சீனிவாசன், சிவகுமார் என்று பலருடன் 400 படங்களுக்கு மேல் நடித்து ஏராளமான சொத்துக்களைச் சம்பாதித்தவர். அந்தக் காலத்திலேயே மூன்று இம்பாலா கார்களில் பவனி வந்தவர். ஆனால் இன்று சொத்துக்கள் பறிபோய், சொகுசு வாழ்வு கைநழுவிப் போய் சாப்பாட்டுக்குக்கூட வழி யில்லாத நிலையில் இருக்கிறார் நடிகை புஷ்பமாலா. பெரியார் மாவட்டம், பெருந்துறை, வண்ணாம்பாறையில் நெடிய சந்திலுள்ள ஒரு சிறு அறை கொண்ட வீட்டில்தான் புஷ்பமாலாவின் வாழ்வு கடந்து கொண் டிருக்கிறது. அவரைச் சந்தித்துப் பேசினோம். ‘‘1958ல் ‘இரும்புத்திரை’ படத்தில் சிவாஜி யின் அண்ணன் மகளாக அறிமுகமானேன். முதல் படத்திலே…
-
- 8 replies
- 3.1k views
-
-
கோவிலுக்கு வந்த இடத்தில் இடுப்பைப் பிடித்துக் கிள்ளிய ரசிகரின் கன்னத்தை பதம் பார்த்தார் நடிகை ஷ்ரியா. சிவாஜி நாயகி ஷ்ரியா, உகாதியையொட்டி திருப்பதி வெங்கடாசலபதி கோவிலுக்கு சாமி கும்பிட சென்றார். சுப்ரபாத தரிசன நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பய பக்தியுடன் சாமி கும்பிட்டார். அவருடன் திருப்பதி எம்.எல்.ஏ வெங்கட்ரமணா என்பவரின் உதவியாளர் கோட்டி என்பவர் துணைக்கு வந்திருந்தார். தரிசனத்தை முடித்துக் கொண்டு கிளம்பினார் ஷ்ரியா. அதுவரை எல்லாம் நல்லபடியாகத்தான் போய்க் கொண்டிருந்தது. திடீரென ஷ்ரியாவை பார்த்த ரசிகர்கள் ஷ்ரியாவை சுற்றிச் சூழ்ந்தனர். ஆளுக்கு ஒரு பக்கமாக பாய்ந்து ஷ்ரியாவைத் தொட்டும், தடவியும் பரபரப்பை ஏற்படுத்தினர். அதில் ஹரி என்பவர் சற்று அத்துமீறி, ஷ்ரியாவின் …
-
- 0 replies
- 1.3k views
-
-
ஆந்திர மாநிலம் கேசம்பேட்டை என்ற இடத்தில் நடந்த படப்பிடிப்பின்போது தேனீக்கள் கொட்டியதில் நடிகை மீராஜாஸ்மின் உள்ளிட்ட படக்குழுவினர் காயமடைந்தனர். அனைவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தமிழ், மலையாளத்தில் பிரபலமாக உள்ள மீரா ஜாஸ்மின் தெலுங்கிலும் தீவிரமாக நடித்து வருகிறார். தற்போது கோரிண்டகு என்ற தெலுங்குப் படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார் மீரா. இப்படத்தின் படப்பிடிப்பு ஆந்திர மாநிலம் மெகபூப் நகர் மாவட்டம் கேசம்பேட்டை என்ற கிராமத்திற்கு அருகே இன்று காலை நடந்தது. அப்போது படப்பிடிப்பு நடந்த இடத்திற்கு அருகே உள்ள மரத்தில் கூடு கட்டியிருந்த தேனீக்கள் திடீரென கூட்டமாக படையெடுத்து வந்தன. பின்னர் மீரா ஜாஸ்மினையும், படக்குழுவனரையும் தாக்கி கொட்டத் தொடங்கி…
-
- 12 replies
- 2.1k views
-
-
பெங்களூர் கோவிலுக்கு பிச்சைக்காரன் வேடத்தில் சென்ற சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தை, நிஜமான பிச்சைக்காரன் என நினைத்து, மார்வாடிப் பெண் ஒருவர் 10 ரூபாய் பிச்சை போட்டாராம். அதை ரஜினி சந்தோஷமாக ஏற்றுக் கொண்டாராம். டாக்டர் காயத்ரி ஸ்ரீகாந்த் எழுதியுள்ள தி நேம் இஸ் ரஜினிகாந்த் நூலில்தான் இந்த சுவாரஸ்யத் தகவல் பதிவாகியுள்ளது. ஆசியாவின் நம்பர் 2 சூப்பர் ஸ்டாராக திகழ்பவர் ரஜினி. ஜாக்கி சானுக்கு அடுத்து அதிகம் சம்பாதிப்பவர் ரஜினி. ஆனால் அவருக்கு பத்து ரூபாய் பிச்சையாக வந்தபோது, அவர் அதைத் தவறாக எடுத்துக் கொள்ளவில்லை. மாறாக மனதுக்குள் மாபெரும் தத்துவம் உதித்துள்ளது. அந்த சுவாரஸ்ய அனுபவத்தை காயத்ரியின் வார்த்தைகளிலேயே காண்போம் .. பணத்திற்குக் கணக்கே இல்லை என்ற போதிலு…
-
- 0 replies
- 858 views
-
-
இந்திர விழா படத்திலிருந்து நான் விலகவில்லை. தற்போது கர்ப்பமாக இருப்பதால் 3 மாதம் கழித்து அப்படத்திற்காக ஒரு பாடலுக்கு ஆடிக் கொடுக்கவுள்ளேன் என்று கூறியுள்ளார் மாளவிகா. திருமணத்திற்கு முன்பு நடித்ததைப் போலவே திருமணத்திற்குப் பிறகும் கிளாமராக நடித்து வருகிறார் மாளவிகா. அவர் சமீபத்தில் ஒப்பந்தமாகியிருந்த படம் ஸ்ரீகாந்த் நடிக்க, ராஜேஷ்வர் இயக்கத்தில் உருவாகும் இந்திர விழா. இப்படத்தின் நாயகி நமீதா. இருந்தாலும் மாளவிகாவையும் கூடுதல் கிளாமருக்காக படத்தில் சேர்த்திருந்தார் ராஜேஷ்வர். ஒரு பாடலில் படு கிளாமராகவும் ஆடுகிறார் மாளவிகா. இந்த நிலையில் கர்ப்பம் தரித்து விட்டதால் படத்திலிருந்து மாளவிகா விலகிக் கொண்டதாக கூறப்பட்டது. ஆனால் அப்படியெல்லாம் இல்லை என்கிறார் மாளவி…
-
- 0 replies
- 958 views
-
-
வீரகேசரி: நமீதாவை வைத்து அடுத்து படத்திற்கு ரெடியாகி விட்டார் ஷக்தி சிதம்பரம். ஷக்தியின் சினிமா 'சக்தியாக' நமீதா விளங்குகிறார். அவர் இயக்கும், தயாரிக்கும் படங்களில் நமீதா 'டிபால்ட் பிராப்பர்டி' ஆகி விட்டார். கதை இருக்கிறதோ இல்லையோ, கண்டிப்பாக நமீதா இருப்பார் என்ற அளவுக்கு நமீதாவுக்கும், ஷக்திக்கும் இடையிலான நட்பு ஆழமாக உள்ளது. சமீபத்தில் வெளியான சண்டை படத்திலும் நமீதா நீக்கமற நிறைந்திருந்தார். கரகாட்டக்காரியாக ஆடி, ரசிகர்களின் நெஞ்சங்களில் அவர் ஏற்படுத்திய பதைபதைப்பு இன்னும் கூட போயிருக்காது. இந்த நிலையில் அடுத்த படத்திற்கு ரெடியாகி விட்டார் ஷக்தி. இதில் நமீதாதான் நாயகி. அதேபோல ஹீரோவாக சுந்தர்.சியையே புக் செய்து விட்டார். இப்படத்திற்கு சுந்தர்.சிக்கு பெரும்…
-
- 0 replies
- 1.1k views
-
-
செக் நாட்டுக்குச் சென்ற பாரீஸ் ஹில்டன், புகைப்படக்காரர்களின் கண்களில் படாமல் தப்பி ஓட முயன்றபோது கீழே விழுந்து காயமடைந்துள்ளார். சர்ச்சை நாயகியாக அறியப்பட்டவர் பாரீஸ் ஹில்டன். காலாவதி ஆன டிரைவிங் லைசென்சுடன் காரை படு வேகமாக ஓட்டி பிடிபட்டு, சமூக சேவை செய்ய வேண்டும் என்று கோர்ட்டால் முன்பு உத்தரவிடப்பட்டார். இந்த நிலையில், செக் நாட்டில் பாப்பராஸி புகைப்படக்காரர்களிடம் சிக்கி காயமடைந்துள்ளாராம் ஹில்டன். செக் தலைநகர் பிராக் நகருக்கு வந்துள்ளார் பாரீஸ் ஹில்டன். அப்போது அவரது வருகையை அறிந்து ஏராளமான புகைப்படக்காரர்கள் அங்கு வ்து குவிந்தனர். அதை சற்றும் எதிர்பாராத பாரீஸ் ஹில்டன் வேகமாக ஓட முயன்றார். அப்போது தடுமாறி கீழே விழுந்து விட்டார். இதில் அவரது அழகிய க…
-
- 0 replies
- 839 views
-
-
தசாவதாரம்' ஆடியோ 25-ல் ரிலீஸ் அப்படி, இப்படியென்று ஒரு வழியாய் `தசாவதாரம்' ஆடியோ வெளியீட்டு விழா ஏப்ரல் 25-ம் தேதி என்பது முடிவாகி விட்டது. நேரு உள்விளையாட்டரங்கில், இந்த விழாவிற்காக முழு வீச்சில் புதுப்பிப்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. ஆஸ்கர் விருது வழங்கும் லாஸ் ஏஞ்சல்ஸ் 'கோடாக்' அரங்கம் போன்ற செட், முதல் அமைச்சர் கருணாநிதி தலைமையில், ஜாக்கிசான் சிறப்பு விருந்தினராக வருகை, கோலிவுட், பாலிவுட் பிரபல நட்சத்திரங்களின் பங்களிப்பு என்று ஏகத்துக்கும் எதிர்பார்ப்பை கிளப்பியுள்ளது இந்த விழா. இந்நிகழ்ச்சியில் கமல் செய்த பத்து வேடங்களின் வித்தைகளையும் ரசிகர்களின் கண்ணுக்கு விருந்தாக்கப் போகிறார்களாம். தனது படங்களில் அவ்வப்போது தலைகாட்டுவதை வழக்கமா…
-
- 0 replies
- 788 views
-
-
தனது காதலனுடன் இன்று காலை வீட்டைவிட்டு ப்ரியாமணி ஓடி விட்டதாக வந்த செய்தியால் கோடம்பாக்கமே பரபரப்பாகிவிட்டது. ப்ரியாமணியும் கிரிக்கெட் வீரரும் தெலுங்கு நடிகருமான ராஜாவும் நீண்ட நாட்களாக காதலித்து வந்ததாகவும், காதலுக்கு ப்ரியாமணியின் அம்மா கடும் எதிர்ப்பு தெரிவித்ததால், இன்று அதிகாலை இருவரும் எஸ்கேப் ஆகிவிட்டதாகவும் தகவல்கள் கசிந்தன. இதைத் தொடர்ந்து சில எப்.எம்களிலும் இந்த செய்தி ஒலிபரப்பானது. இதுகுறித்து ப்ரியாமணியின் அம்மாவிடம் கேட்டபோது, "நெனச்சேன்... இந்த வருஷம் ஏப்ரல் முதல் தேதி யார் மாட்டப் போறாங்களோன்னு யோசிச்சப்பவே, ப்ரியாமணி பத்திதான் ஏதாவது பரபரப்பு கிளம்பும்னு எதிர்பார்த்தேன். அது இப்ப நடந்துடுச்சு. என் பொண்ணு யாரையும் லவ்வும் பண்ணல... இ…
-
- 4 replies
- 1.8k views
-
-
எலிசபெத் ரெய்லர் Elizabeth Taylor with Richard Burton in Cleopatra மரம் பழுத்தால் வெளவாலை வாவென்று கூவி இரந்தழைக்க வேண்டிய அவசியம் இல்லை. ஒரு பெண்ணிடம் அழகும் இளமையும் இருக்கும் போது அவள் காலடியில் கூட விழத் தயாராக இருப்பார்கள் ஆண்கள். திரையுலக தேவதை எலிசபெத் ரெய்லர் இன்று தனிமையில் வாடுகிறார். அன்புக்காக ஏங்குகிறார். அவரது தோலில் சுருக்கங்கள் விழ ஆண்களும் அவரை விட்டுப் போய் விட்டார்கள். தற்போது 72வயதுகளைத் தொட்டிருக்கும் எலிசபெத் ரெய்லர், சமையற்கலைஞர், நடிகர், தயாரிப்பாளர், பாடகர், அரசியல்வாதி, கட்டிடத் தொழிலாளர் என சமூகத்தின் பல மட்டங்களிலும் இருந்தும் எட்டுத் தடவைகள், ஏழு ஆண்களைத் திருமணம் செய்து கொண்டார். எட்டுத் தடவைகள் விவாகரத்தும் செய்து …
-
- 1 reply
- 991 views
-
-
என் மகனுக்கு அரசியல் விஷயங்களை தெரிந்து கொள்வதில் ஆர்வம் அதிகமாக இருக்கிறது என்று ஒரு முறை தெரிவித்திருந்தார் சுஹாசினி மணிரத்னம். அவர் சொன்னதை போலவே இயக்குனர் மணிரத்னத்தின் மகன், நந்தன் மணிரத்னம் ஒரு புத்தகத்தை வெளியிட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறார். கான்டர்ஸ் ஆஃப் லெனினிசம் என்று பெயரிடப்பட்டிருக்கும் இப்புத்தகம் கோவையில் நடந்த மார்க்சி்ஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 19-வது தேசிய மாநாட்டில் வெளியிடப்பட்டிருக்கிறது. எதிர்பாராமல் நடந்த சம்பவம் அது. மற்ற தொண்டர்கள் போலவே மாநாட்டில் வளைய வந்தார் நந்தன். பின்பு இவர் எழுதிய கம்யூனிசம் தொடர்பான புத்தகம் அந்த மேடையில் வெளியிடப்பட்டது. அப்போது இவர் மணிரத்னத்தின் மகன் மாநாட்டு மேடையில் குறிப்பிட, அடுத்த வினாடியே…
-
- 0 replies
- 1.5k views
-
-
எத்தனை உணர்வுகள் தொலைத்தோம்? எதற்கு நாங்கள் பிழைத்தோம்? நடந்த தெல்லாம் கனவைப் போல கரைந்து போகாதா? நாளைக்காவது எங்கள் குழந்தைகள் நலமாய் வாழாதா?’’ அகதிகளாய் வாழ்வதன் ‘வலியை அழுத்தமாகச் சொல்கிறது’ ‘ராமேஸ்வரம்’ பாடல். இந்தப் படத்தின் இசையமைப்பாளர் நிருவும் ஒரு இலங்கை அகதிதான். சிறு வயதிலேயே ஈழத்திலிருந்து பிரான்சுக்குப் புலம்பெயர்ந்துவிட்ட நிரு வெளிநாட்டில் வாழ்ந்தாலும், தமிழ் சினிமாவின் இசை நுட்பங்களைத் தேடித் தேடித் தெரிந்து கொண்டு, குறுகிய காலத்தில் இசையமைப்பாளர் ஆனவர். இயற்பெயர் நிர்மலன். ‘‘யாழ்ப்பாணம் பக்கத்துல இருக்குற அளவெட்டிதான் என் சொந்த ஊர். இசைக்கலைஞர்களுக்கும் கவிஞர்களுக்கும் பஞ்சமில்லாத ஊர். ஆடியோ கேசட் கடை, போட்டோ ஸ்டூடியோனு அப்பா மாறி மாறிப் பல தொழில்கள் …
-
- 2 replies
- 1.6k views
-
-
மலையாள சினிமாவில் தமிழர் சித்தரிப்புகள்! செவ்வாய், 1 ஏப்ரல் 2008( 14:17 IST ) தமிழ் சினிமாவில் மாறாதவை என்று சில உண்டு. சேட்டுகள் சரளமாக தமிழ் பேசக் கற்று பல காலம் ஆகிறது. ஆனால் இந்த சேதி இன்னும் தமிழ் சினிமாவைப் போய்ச் சேரவில்லை. தலையில் குல்லா மாட்டி, கையில் கோலுடன் நம்பள், நிம்பள் என்று தமிழை மென்று துப்பினால் மட்டுமே தமிழ் சினிமாவில் அவர் சேட். மலையாளிகள் குறித்த சித்திரம் இன்னும் விசேஷம். ஒரு டீக்கடை, அதில் வத்தலாக ஒரு நாயர், சாயா எடுத்துக் கொடுக்க ஷகிலா சைஸில் நாயரின் மனைவி! திருமதி நாயர் உதட்டை அழுத்தி, புட்டு வேணுமா என்று கேட்க…
-
- 4 replies
- 1.7k views
-
-
மேலும் புதிய படங்கள்ஸ்ரீகாந்த்துடன் நடிக்க ஒப்பந்தமாகியிருந்த இந்திரவிழா படத்திலிருந்து மாளவிகா விலகி விட்டாராம். அவர் கர்ப்பமாகியுள்ளதே இதற்குக் காரணம் என்று கூறப்படுகிறது. திருமணத்திற்குப் பிறகும் தொடர்ந்து நடித்து வருகிறார் மாளவிகா. திரைப்படங்கள் தவிர சன் டிவியில் சூப்பர் டான்ஸர் நிகழ்ச்சியில் நடுவராகவும் அசத்தி வருகிறார். இந்த நிலையில் ஸ்ரீகாந்த்துடன் நடிக்க ஒப்பந்தமாகியிருந்த இந்திர விழா படத்திலிருந்து மாளவிகா திடீரென விலகியுள்ளார். ராஜேஷ்வர் இயக்கத்தில், ஸ்ரீகாந்த் நாயகனாக நடிக்கும் இந்திர விழாவில் நமீதா நாயகியாக நடிக்கிறார். முழு நீள கவர்ச்சியில் நமீதா நடித்தபோதிலும், மாளவிகாவுக்கும் படத்தில் ஒரு ரோல் கொடுத்து அவரையும் புக் செய்திருந்தனர். மாளவி…
-
- 8 replies
- 2.6k views
-
-
தொலைக்காட்சி நாடகம் ஏற்படுத்திய விபரீதம் வீரகேசரி நாளேடு 3/30/2008 7:12:42 PM - தொலைக்காட்சி நாடகத்தில் இடம்பெற்ற தற்கொலைக்காட்சியை பார்த்துவிட்டு அதேபோன்று கழுத்தில் துப்பாட்டாவைக்கட்டி சுருக்கிட முயற்சித்ததாகக் கூறப்படும் 12 வயது சிறுமியொருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் நேற்றுமுன்தினம் சனிக்கிழமை கொழும்பு பாலத்துறை பகுதியிலுள்ள 12 ஆம் இலக்கத் தோட்டத்தில் இடம்பெற்றுள்ளது. ரிகாசா (வயது 12) என்ற முஸ்லிம் சிறுமியே இச்சம்பவத்தில் இறந்தவராவார். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது சம்பவ தினமான சனிக்கிழமை மேற்படி சிறுமியின் பெற்றோர் தொழில் நிமித்தம் வெளியில் சென்றுள்ளனர். தனது பாட்டியுடன் வீட்டிலிருந்த சிறுமி வீட்டின் மேல்மாடியி…
-
- 2 replies
- 1.9k views
-
-
வாழ்த்துகள் - விமர்சனம் மாதவன், பாவனா, கூத்தப்பட்டறை முத்துசாமி, இளவரசு, மல்லிகா சுகுமாரன் நடிப்பில், பி.எல். சஞ்சய் ஒளிப்பதிவில், யுவன் சங்கர்ராஜா இசையில், சீமான் இயக்கியுள்ள படம். தயாரிப்பு பிரமிட் சாய்மீரா அண்ட் அம்மா கிரியேஷன்ஸ். மாதவன் நண்பன் திருமணமானவன். அவன் மனைவி சண்டைபோட்டதன் விளைவாக நண்பனின் பெற்றோர் வீட்டை விட்டு வெளியேறி முதியோர் இல்லம் சென்று விடுகிறார்கள். நண்பனின் மனைவியே இதற்குக் காரணம். திருமணமானால் தன் பெற்றோருக்கும் இந்த நிலை வந்துவிடுமோ என பயன்படும் மாதவன், தன் பெற்றோரை மதிக்கிற மாதிரி ஒரு பெண் கிடைக்கமாட்டாள் என்று நினைக்கிறார். அப்போது மாமியாரையும் தாயைப் போல நினைப்பதாகக் கூறும் ஒருவளின் பேட்டி டிவியில் வருகிறது. அது பாவனா. …
-
- 3 replies
- 2.1k views
-