வண்ணத் திரை
சினிமா விமர்சனம் | சினிமாச் செய்திகள் | கருத்துகள்
வண்ணத் திரை பகுதியில் சினிமா விமர்சனம், சினிமாச் செய்திகள், உலக சினிமா சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் சினிமா விமர்சனங்களுக்கும் தரமான சினிமா சம்பந்தமான கட்டுரைகளுக்கும் முன்னுரிமை கொடுத்தல் வேண்டும். அளவுக்கதிகமான சினிமாச் செய்திகளையும், கிசுகிசு செய்திகளையும் தவிர்க்கவேண்டும்.
5547 topics in this forum
-
முழு நேர நடிகராக அவதாரம் எடுக்கிறார் விடுதலைச் சிறுத்தைகள் பொதுச் செயலாளர் தொல்.திருமாவளவன். புதிதாக கலகம் என்ற படத்தில் நாயகனாக நடிக்கிறார் திருமாவளவன். இதில் அவருக்கு டூயட் பாட்டெல்லாம் உண்டாம். முழு வீச்சில் அரசியலில் ஈடுபட்டுக் கொண்டிருந்த, தமிழ் சினிமாவின் போக்கைக் கண்டித்து குரல் கொடுத்துக் கொண்டிருந்த, போராட்டங்கள் நடத்திக் கொண்டிருந்த திருமா, நடிகர் ஆவார் என யாரும் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். ஆனால் திருமா ஒரு நாள் நடிகரானார். அவரை வைத்து அன்புத்தோழி என்ற படம் பஜை போடப்பட்டது. இதில் புரட்சிக்காரராக நடித்துள்ளார் திருமா. பலவித தடைகளுக்குப் பின்னர் படம் முடிந்து சென்சார் போர்டுக்குப் போனது. ஆனால் விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான கேரக்டரா…
-
- 7 replies
- 1.6k views
-
-
உரு பட்டேல் என்ற பெயரை இதுவரை கேள்விப்பட்டிருக்க மாட்டீர்கள். இவர் வெளிநாட்டு வாழ் இந்தியர். டாலர்களில் புரளும் மில்லினர். குஜராத்தில் பிறந்த உரு பட்டேலுக்கு ஓர் ஆசை. ராமாயணம் கதையை படமாக்க வேண்டும்! இதே ஆசையுடன் திரிந்த இயக்குனர் ராஜ்குமார் சந்தோஷி 'ராமாயணம்' என்ற பெயரில் ஸ்கிரிப்ட் தயார் செய்து, அஜய்தேவ்கானை ராமனாகவும் அவரது மனைவி கஜோலை சீதையாகவும ஆக்கி விட்டார். இந்தப் படத்தின் பட்ஜெட் நூற்றைம்பது கோடி! ராஜ்குமார் சந்தோஷியின் இந்த அட்டாக்கால் சற்றும் மனம் தளராத விக்கிரமாத்தியன் உரு பட்டேல், 'அனுமான்' என்ற பெயரில் அதே ராமாயண கதையை தயாரிக்கிறார். இதுவொரு சர்வேதச புராஜெக்ட். பட்ஜெட் ராஜ்குமார் சந்தோஷியின் ராமாயணத்தைவிட அதிகம். இதனை புரிந்து கொள்ள ஒரு சின்ன சாம்…
-
- 0 replies
- 994 views
-
-
மதுரை மண் கொடுத்த மக்கா பாலாவும், அமீரும் தங்களுக்குள் நிலவிய பூசல்களை மறந்து விட்டு கை கோர்த்து மீண்டும் நட்பாகியுள்ளனர். கோலிவுட்டையும், மதுரையையும் பிரித்துப் பார்க்க முடியாது. பாலும், தண்ணீரும் மாதிரி இரண்டையும் பிரித்துப் பார்க்கவே முடியாது. அப்படிப்பட்ட மதுரை மண்ணிலிருந்து வந்தவர்கள்தான் பாலாவும்,அமீரும். எப்படி பாரதிராஜாவும், இளையராஜாவும் டிரவுசர் போட்ட காலத்திலிருந்து நட்பு பாராட்டி வருகிறார்களோ,அதேபோலத்தான் பாலாவும்,அமீரும் சிறு வயது முதல் தோழர்கள். பள்ளிப் படிப்பிலிருந்தே பின்னி் பிணைந்து திரிந்த இருவரும் தொழிலிலும் சேர்ந்தே ஜொலிக்கத் தொடங்கினர். சேது, நந்தா ஆகிய இரு படங்களிலும் பாலாவுடன் இணைந்திருந்தார் அமீர். ஆனால் அதன் பின்னர் நட்ப…
-
- 1 reply
- 1.1k views
-
-
'ஃபர்ஸ்ட் டைம்' என்ற பெயரில், அட்டகாசமான ஒரு 'அப்பர் கிளாஸ்' படம் தமிழில் வருகிறது. தமிழ்ப் படங்களுக்கு ஆங்கில டைட்டில் கூடாது என்ற குரல்களுக்குப் பின்னர் தமிழக அரசு தமிழில் பெயர் வைத்தால் சலுகை என்று உத்தரவு போட்டது. இதைத் தொடர்ந்து ஆய், ஊய் என்ற ரீதியில் வந்து கொண்டிருந்த படங்கள் எல்லாம் தமிழுக்கு மாறத் தொடங்கின. இந்த உத்தரவு அமலுக்கு வந்த பின்னர் ஆங்கில டைட்டிலில் ஒரு படமும் வரவில்லை. இந்தநிலையில் ஃபர்ஸ்ட் டைம் என்ற சுத்தமான ஆங்கிலப் பெயரில் ஒரு தமிழ்ப் படம் உருவாகியுள்ளது. மணிரத்தினம், பி.சி.ஸ்ரீராம் ஆகியோரிடம் பணியாற்றிய அனுபவம் கொண்ட கிருஷ்ணன் சேஷாத்ரி கோமதம் இப்படத்தை இயக்கியுள்ளார். இதற்கு முன்பு பல விளம்பரப் படங்களை இயக்கிய அனுபவமு…
-
- 0 replies
- 925 views
-
-
விஷால் நடிக்க, பூபதி பாண்டியன் இயக்கத்தி்ல மலைக்கோட்டை படு விறுவிறுப்பாக கட்டப்பட்டுக் கொண்டிருக்கிறது. தனுஷை வைத்து தேவதையைக் கண்டேன், திருவிளையாடல் ஆரம்பம் என இரு வெற்றிப் படங்களைக் கொடுத்த பூபதி பாண்டியன் முதல் முறையாக விஷாலுடன் இணைந்துள்ள படம்தான் மலைக்கோட்டை. முதலில் திரிஷா நடிப்பதாக இரு்நதது. ஆனால் எநத நேரத்திலும் சூப்பர்ஸ்டாரின் அடுத்த படத்திறகு அழைப்பு வரலாம் என எதி்ர்ப்பார்ப்பதால் மலைக்கோட்டையிலிருந்து பாதியிலேயே இறங்கி விட்டார் திரிஷா. இதையடுத்து முத்தழகி பிரியாமணியை ஜோடியாக்கி விட்டனர். பருத்தி வீரனைத் தொடர்ந்து மலைக்கோட்டை மூலம் தனது வெற்றி பவனியை தொடர தீர்மானித்துள்ள பிரியா மணி அதற்கேற்ப இப்படத்தில் திறமை காட்டவுள்ளார். படப்பிடிப…
-
- 0 replies
- 849 views
-
-
பில்லாவில் அஜீத்துடன் ஜோடியாக நடிப்பது பெருமையாகவும், மகிழ்ச்சியாகவும் உள்ளதாக நமீதா கூறியுள்ளார் ரஜினிகாந்த்தின் பில்லா அஜீத் நடிக்க ரீமேக் ஆகிறது. மலேசியாவில் கேம்ப் போட்டு பில்லா படத்தி்ன் ஷூட்டிங் நடந்து வந்தது. மலேசிய ஷூட்டிங் முடிந்து அஜீத், நமீதா உள்ளிடடோர் சென்னை வந்து சேர்ந்தனர். பில்லாவில் பிரவீணா நடித்த கேரக்டரில் நமீதா நடிக்கிறார். பில்லாவை ஒரு தலையாக காதலித்து அவர் கையாலேயே உயிரிழக்கும் கேரக்டர் அது. மலேசிய ஷூட்டிங் குறித்து நமீதாவிடம் கேட்டபோது, ஒரே நேரத்தில் விஜய்யுடனும், அஜீத்துடனும் நடிக்கும் நடிகை நானாகத்தான் இருப்பேன். அது எனக்குப் பெருமையாக உள்ளது. முன்பு ஒரே நேரத்தில் ரஜினி, கமல்ஹாசனுடன் இதுபோல ஸ்ரீபிரியாவும், ஸ்ரீதேவியும்…
-
- 10 replies
- 2k views
-
-
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தின் சிவாஜியை வாங்கிய சூடு கூட குறையாத நிலையில் இன்னும் எடுத்தே முடிக்கப்படாத தசாவதாரம் படத்தையும் திமுகவின் கலைஞர் டிவி பெரும் தொகை கொடுத்து வாங்கி விட்டதாம். சன் டிவிக்கும், திமுகவுக்கும் ஏடாகூடமாகி விட்ட நிலையில்,புதிதாகப் பிறக்கப் போகிறது கலைஞர் டிவி.பெயர் வைத்துவிட்ட நிலையில் குழந்தை எப்போது பிறக்கும் என்பது இன்னும் உறுதியாகத் தெரியவில்லை. ஆனால் குழந்தை ஊட்டமாக வளரத் தேவையான வேலைகளில் கலைஞர் டிவி நிர்வாகம் படு தீவிரமாக இறங்கி விட்டது. சாட்டிலைட் சேனல்கள் நிலைத்து நீடிக்க வேண்டுமானால் சினிமாதான் முதல் பலம் என்பதை உணர்ந்த கலைஞர் டிவி முதல் வேலையாக சிவாஜி படத்தை பெரும் தொகை கொடுத்த விலைக்கு வாங்கியது. இந்த நிலையில், கமல்…
-
- 0 replies
- 860 views
-
-
பில்லாவைத் தொடர்ந்து அஜீத் நடிக்கவுள்ள புதிய படத்தில் அவரது ஜோடியாக ஷ்ரியா நடிக்கவுள்ளார். கிரீடம் படத்தை முடித்து விட்ட அஜீத், அடுத்து பில்லா ரீமேக்கில் நடித்து வருகிறார். பில்லாவுக்குப் பிறகு நடிக்கவுள்ள படம் குறித்தும் அவ்வப்போது டிஸ்கஷனில் ஈடுபட்டு வந்தார்.அதில் ஒரு கதையை முடிவு செய்து விட்டார். ஆனால் தயாரிப்பாளர் யார் என்பது இன்னும் முடிவாகவில்லை. ஆனால் நாயகி முடிவாகி விட்டாராம். அதாவது அஜீத்தே ஹீரோயினை பிக்ஸ் செய்து விட்டார். அது ஷ்ரியா என்கிறார்கள். ரஜினியுடன் சிவாஜியி்ல நடித்ததால் பிரபலமாகி விட்ட ஷ்ரியாவைத் தேடி பல வாய்ப்புகள் வந்தவண்ணம் உள்ளன. தற்போது விஜய்யுடன் அழகிய தமிழ் மகன் நடித்து வரும் ஷ்ரியா, ஜெயம் ரவியுடனும் ஒரு படத்தில் இணைகிறார்.…
-
- 0 replies
- 842 views
-
-
நான் கடவுள் நாயகி யார் என்பது அந்தக் கடவுளுக்குத்தான் கரெக்டாக தெரியும் போல.அந்த அளவுக்கு பெரும் குழப்பமாக இருக்கிறது. நான் கடவுள் படத்தின் ஆரம்பத்திலிருந்தே பல பஞ்சாயத்துக்கள் தொடர்ந்தபடி உள்ளன.முதலில் அஜீத் நடிப்பதாக இருந்தது. பின்னர் என்ன நடந்ததோ, அஜீத் தூக்கப்பட்டார். ஆர்யா கடவுளாக்கப்பட்டார். பாவனா நாயகியாக நடிப்பதாக இருந்தது. அவரை வைத்து சில காட்சிகளைக் கூட படமாக்கி விட்டார் பாவனா. இந்த நிலையில் பாவனா சரியில்லை என்று கூறி அவரைத் தூக்கி விட்டார். இடையில் படமே கை மாறி விட்டது. முதலி்ல் தயாரிப்பாளராகஇருந்த தேனப்பன் சமீபத்தில் அதிலிருந்து விலகிக் கொண்டு விட்டார். இப்படிஅடுத்தடுத்து குழப்பத்தில் சிக்கித் தவிக்கும் நான் கடவுள் படத்தின் நாயகி யா…
-
- 0 replies
- 892 views
-
-
சிலருக்கு மட்டுமே உருமாற்றம் சாத்தியம். பிரகாஷ்ராஜ் இதில் டாக்டரேட்! புரியவில்லை? ஒரு படத்தில் துரத்தி துரத்தி காதலித்து விட்டு அடுத்தப் படத்தில் அதே நடிகைக்கு அப்பாவாக நடிப்பது சாதாரணமா? எஸ்., பிரகாஷ்ராஜுக்கு இது சாதாரணம் மனிதர் ஐ லவ் யூடா செல்லம் என ஒரு படத்தில் மிரட்டுவார். அடுத்தப் படத்தில் சிரிப்பு வைத்தியம் என்று கிச்சு கிச்சு மூட்டுவார். இன்னொன்றில் பீத்தேவன் பிறந்த நாளுக்கு பீர் குடித்து நம் வயிற்றை புண்ணாக்குவார். பீடிகை போதும். விஷயத்துக்கு வருவோம். ராதாமோகனின் புதிய படத்தை அதே பழைய பிரகாஷ்ராஜின் டூயட் மூவிஸ் தயாரிக்கிறது. பிரகாஷ்ராஜ் படத்தின் பிரதான கேரக்டர். இன்னொருவர் த்ரிஷா. 'கில்லி' படத்தில் ஐ லவ் யூடா செல்லம் என த்ரிஷாவை துரத்தி துரத்தி ஸாரி,…
-
- 0 replies
- 927 views
-
-
விடுதலை சிறுத்தைகள் அமைப்பின் தலைவர் தொ. திருமாவளவன் நடித்த முதல் படமான அன்புத் தோழியில் விடுதலை வேட்கை கொண்ட இளைஞராகவும் நடித்திருந்தார். முழுவதும் முடிந்த நிலையில் இப்படம் தணிப்புக் குழுவுக்கு அனுப்பப்பட்டது. படத்தைப் பார்த்த அதிகாரிகள் இந்த படம் விடுதலைப் புலிகளுக்கு ஆதரவு தெரிவிப்பது போன்று இருப்பதாக கருதினார்கள். படத்திற்கு அனுமதி சான்றிதழ் வழங்க இயலாது என்று கூறிவிட்டார்கள். இதையடுத்து அன்புத்தோழி மேன்முறையீட்டுக்காக டெல்லி சென்றுள்ளது. அன்கேயும் தடை விதிக்கப்பட்டால் நீதிமன்றத்தில்தான் முறையிடவேண்டும்.
-
- 1 reply
- 1.3k views
-
-
மீண்டும் கோபிகாவை நாடியுள்ளாராம் சேரன். சேரன், சமீபத்தில் மாயக்கண்ணாடி மூலம் பெரும் சரிவைச் சந்தித்தார். இதையடுத்து தனது திறமையை மீண்டும் நிரூபிக்க ஆட்டோகிராப் படத்தின் 2ம் பாகத்தை எடுக்க முடிவு செய்துள்ளார். முதல் பாகத்தில் மொத்தம் நான்கு நாயகிகள் இருந்தனர். மல்லிகா, கோபிகா, சினேகா, கெஸ்ட் ரோலில் கனிகா என நான்கு பேருடன் நடித்திருந்தார் சேரன். ஆனால் 2ம் பாகத்தில் 2 பேர் மட்டுமே இருப்பார்களாம். கோபிகாவும், கனிகாவும் வருவது போல கதையை உருவாக்கியுள்ளாராம் சேரன். 2ம் பாகத்தில் நடிக்க வேண்டும் என கோபிகாவை அணுகியுள்ளாராம். ஆனால் கோபிகா தரப்பிலிருந்து இன்னும் பதில் வரவில்லையாம். வரும் என்ற நம்பிக்கை சேரனுக்கு உள்ளதாம். கோபிகா இப்போது வீராப்பு படத…
-
- 0 replies
- 911 views
-
-
ரஜினிகாந்த் நடித்த சந்திரமுகியின் 800வது நாள் விழா முதல்வர் கருணாநிதி தலைமையில் சென்னையில் நடக்கிறது. தமிழ்த் திரையுலகில் இதுவரை தியாகராஜ பாகவதர் நடித்த ஹரிதாஸ் படம்தான் அதிக நாட்கள் ஓடி சாதனை படைத்திருந்தது. அந்தப் படம் 770 நாட்கள் ஓடியது. அந்தக் காலத்தில் அது பெரும் சாதனை. அச்சாதனையை தற்போது சந்திரமுகி முறியடித்துள்ளது. இப்படம் 800 நாட்களைத் தொட்டுள்ளது. இது தமிழில் மட்டுமல்லாது தென்னிந்தியாவிலும் புதிய சாதனை ஆகும். இதையடுத்து சென்னையில் பிரமாண்ட விழா எடுக்க முடிவாகியுள்ளது. சிவாஜி புரடக்ஷன்ஸ் நிறுவனமும், தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கமும் இணைந்து இந்த விழாவை வருகிற 25ம் தேதி நடத்தவுள்ளன. இந்த விழாவுக்கு முதல்வர் கருணாநிதி தலைமை தாங்குகிறார். இ…
-
- 4 replies
- 1.5k views
-
-
இமயமலையில் 38 நாள் ஆன்மீக பயணம் மேற்கொண்டிருந்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், சென்னை திரும்பி விட்டார். ஆண்டுதோறும் இமயமலைக்குச் சென்று குறைந்தது ஒரு மாதம் ஆன்மீக பயணம் மேற்கொள்வது ரஜினியின் வழக்கம். இமயத்தில் உள்ள பாபாஜி குகைக்குச் செல்வதும் இந்த பயணத்தின் முக்கிய நோக்கம். இமயத்திற்குச் செல்வதன் மூலம் மனதுக்கும், உடலுக்கும் புத்துயிர் கிடைக்கிறது, மறு பிறவி எடுப்பது போல உள்ளது என்று பலமுறை ரஜினி கூறியுள்ளார். அது அவரது அனுபவ வார்த்தைகள். இமயத்திற்குப் போனவுடன், ரஜினி என்ற அந்தஸ்திலிருந்து சிவாஜி ராவாக மாறி, சாதாரண மனிதனாக மாறி விடுவது ரஜினியின் வழக்கம். இமயத்தின் ஒவ்வொரு மலைப் பகுதியையும் தனது பாதத்தால் அளவிட்டு மனதுக்குள் ஆன்மீக அலைகளை உலவ விட்டு உற்ச…
-
- 18 replies
- 3.3k views
-
-
சர்வதேச திரைப்பட விழா: சிறந்த நடிகை ராணி முகர்ஜி- நடிகர் ஹிருத்திக்ரோஷன் புதுடெல்லி, ஜுன். 10- வெளிநாட்டில் வாழும் இந்தியர்கள் சேர்ந்து `சர்வதேச இந்திய திரைப்பட அகாடமி' என்ற அமைப்பை ஏற்படுத்தி உள்ளனர். இதன் மூலம் ஒவ்வொரு ஆண்டும் இந்திய திரைப்பட விழா நடத்தி விருது வழங்குகிறார்கள். இதன் 8-வது திரைப்பட விழா இங்கிலாந்தில் உள்ள யார்க்ஷயர் நகரில் நடந்தது. இதில் சிறந்த படம், டைரக்டர், நடிகர், நடிகை தேர்ந்தெடுக்கப்பட்டு விருது வழங்கப்பட்டது. இந்த ஆண்டு சிறந்த படமாக ராங்தே பசந்தி தேர்வு செய்யப்பட்டது. லேகேராகோ முன்னாபாய் படத்தை இயக்கிய ராஜ்குமார் ஹீரானி சிறந்த டைரக்டராக தேர்வு செய்யப்பட்டார். சிறந்த நடிகராக `கிரிஸ்' படத்தில் நடித்ததற்காக ஹிருத்திக்ரோஷன் தேர்வு…
-
- 7 replies
- 1.6k views
-
-
கதாநாயகி ஆசை காட்டி துணை நடிகைகள் இலங்கைக்கு கடத்தல்: இளம்பெண் புகார் சென்னை, மே. 30- சென்னை வியாசர் பாடி சர்மா நகரைச் சேர்ந்தவர் டி.வி. நடிகை தீபா. `வம்பு சண்டை', `வசந்தம் வந்தாச்சு' உள்ளிட்ட படங்களிலும் கதாநாயகி ஆக நடித்துள்ளார். இவரை துணை நடிகர்கள் ஏஜெண்ட் தனநாயகம் என்பவர் கடத்திச் சென்று விட்டதாக தீபாவின் பெற்றோர் போலீசில் புகார் செய்தனர்.மகாகவி பாரதியார் நகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்தனர். நடிகை தீபா கடத்தலில் தனநாயகத்தின் நண்பர்கள் பாலா, சலீம் ஆகியோருக்கும் தொடர்பு இருப்பது தெரிய வந்தது. அவர்களிடம் போலீசார் விசாரித்து வருகின்றனர். "தானாக விரும்பி வந்ததாக'' நடிகை தீபா போலீசாருக்கு ஒரு கடிதம் எழுதினார். அந்த கடிதம் உண்மையானதா என்பதையும…
-
- 2 replies
- 4.6k views
-
-
குடும்ப நல நீதிமன்றத்தில் தனது வழக்கில் வக்கீல் வைத்து வாதாட அனுமதி தர வேண்டும் என செனனை குடும்ப நல நீதிமன்றத்தில் நடிகர் பிரஷாந்த்தின் மனைவி கிரகலட்சுமி கோரிக்கை விடுத்துள்ளார். கடந்த 2004ம் ஆண்டு பிரஷாந்திற்கும், கிரகலட்சுமிக்கும் திருமணம் நடந்தது. குழந்தை பெற்றுக் கொள்ள தாய் வீட்டுக்குச் சென்ற கிரகலட்சுமி மீண்டும் பிரஷாந்த் வீடு திரும்பவில்லை. இந்த நிலையில் தனது மனைவியை தன்னுடன் சேர்த்து வைக்குமாறு கோரி குடும்ப நல நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார் பிரஷாந்த். இதுதொடர்பான விசாரணை நடந்து வருகிறது. இந்த நிலையில் சமீபத்தில் பிரஷாந்த் மற்றும் அவரது குடும்பத்தினர் தன்னை வரதட்சணை கொடுமை செய்வதாக கிரகலட்சுமி திடீரென போலீஸில் புகார் கொடுத்தார். அதன…
-
- 1 reply
- 1.1k views
-
-
விஜயின் திருவிளையாடல்கள் இளம் உள்ளங்களை கொள்ளை கொண்ட விஜய் இளம் நடிகைகளையும் கொள்ளை கொண்டு வருகின்றார் திரிஷாவின் குளியலறை காட்சிகளை தத்ரூபமாக படம்பிடித்து வெளியிட்டவர் நடிகர் விஜய் தற்போது அசினுடன் காதல் லீலைகளில் இதனால் மனமுடைந்த மனைவி லண்டனிற்கு பயணம். சென்னை வெயிலிலும் இந்த குளிரான செய்தி கொஞ்சம் இதமாக இருந்தது.
-
- 42 replies
- 9.9k views
-
-
'வல்லவன்' சிம்புவின் காளை படம் முடிவுரும் தருவாயை நெருங்கியுள்ளது. வல்லவன் படத்தை முடித்த பின்னர் கொஞ்சம் கேப் விட்ட சிம்பு, அடுத்து காளை படத்தில் இறங்கினார். சிம்புவே நேரடியாக தனது ஜோடி மற்றும் பிற கலைஞர்களைத் தேர்வு செய்தார். சிம்புவுக்கு ஜோடியாக வேதிகாவும், ஒத்தப் பாட்டுக்கு குத்தாட்டம் போடும் நாயகியாக நிலாவும் இப்படத்தில் நடித்துள்ளனர். உயிர் படத்தில் கொழுந்தன் மீது ஆசைப்படும் அண்ணி வேடத்தில் நடித்து அசத்திய சங்கீதாவும் படத்தில் இருக்கிறார். பழைய ஹீரோயின் சீமாவுக்கு படத்தில் வில்லி வேடம். கடந்த மாதம் படப்பிடிப்பு ஆரம்பித்தது. அனைத்துக் கலைஞர்களும் நல்ல ஒத்துழைப்பு கொடுத்ததால் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து இப்போது படம் முடியும் நிலைக்கு …
-
- 0 replies
- 905 views
-
-
கடந்த ஒருமாத காலமாக இரவுபகலாக உழைத்துக் கொண்டிருக்கிறார் கலை இயக்குனர் தோட்டா தரணி. இன்னும் சில நாள்களில் அவரது வேலை முடிவடைந்தால் செயற்கை கடல் தயாராகிவிடும்! 'தசாவதாரம்' படத்தை உண்மையிலேயே பிரமாண்டமாகதான் எடுக்கிறார்கள். பல நூற்றாண்டுகள் பாய்ந்து செல்லும் கதை, பத்து கெட்டப்புகள், C.I.A ஏஜெண்ட், உலகம் முழுக்க படப்பிடிப்பு, ஹெலிகாப்டர் சண்டை... படத்தில் இப்படி பிரமிப்புகள் ஏராளம். அதில் உச்சபட்சமாக வருகிறது சுனாமி காட்சிகள். கடல் கொந்தளித்து கடலோர கிராமங்களை அழிக்கும் காட்சிகள் இப்படத்தில் இடம் பெறுகிறது. இதற்காக செயற்கை கடலை உருவாக்கி வருகிறார்கள். இதுவரை ஹாலிவுட் படங்களில்தான் செயற்கை கடலை உருவாக்கினார்கள். 'வாட்டர் வேர்ல்டு', 'டைட்டானிக்' போன்ற படங்களுக்கு மி…
-
- 0 replies
- 878 views
-
-
கோடம்பாக்க கூடாரம் விரைவாக காலியாகிறது. இங்கே கோலோச்சிக் கொண்டிருந்த நடிகைகள் மும்பை நோக்கி நகரத் தொடங்கியிருக்கிறார்கள். தமிழின் முன்னணி நடிகைகள் என்று இப்போது மூன்று பேரை கூற முடியும். அசின், த்ரிஷா, ஸ்ரேயா. இதில் அசின் 'கஜினி' இந்தி ரீ-மேக்கில் அமீர்கானுடன் நடிக்கிறார். இந்தப் படத்துக்காக தமிழில் வந்த பல வாய்ப்புகளை உதறியிருக்கிறார். அசின் நடிக்கும் 'தசாவதாரம்' இந்தி மொழியிலும் வெளியாகிறது. இத்துடன் அமீர்கான் படமும் வெளியாகும்போது பாலிவுட்டில் கௌரவமான இடம் கிடைக்கும் என நினைக்கிறார். இதனால் தமிழ் படங்களை இப்போதே தவிர்க்க ஆரம்பித்துள்ளார். 'வேல்' படத்தின் ஷுட்டிங் எந்த வகையிலும் இந்தி 'கஜினி' யை தொந்தரவு செய்யக் கூடாது என்ற நிபந்தனையுடனே ஹரிக்கு கால்ஷீட் கொடுத்து…
-
- 0 replies
- 838 views
-
-
முறுக்கிய மீசை, இராணுவ உடை, கையில் ஏ.கே. 47 துப்பாக்கி... படம் தொடங்கும்போதே திருமாவளவனின் கெட்டப் சிறிது பயமுறுத்தியது. 'அன்பு தோழி' படத்தில் தமிழர்களுக்காக போராடும் இனப் போராளியாக நடித்திருக்கிறார் திருமாவளவன். நிஜத்தில் ஆயுதப்போராட்டம் செய்ய வாய்ப்பில்லை, சினிமாவில் அப்படியொரு வாய்ப்பு கிடைத்ததால் உடனே ஒப்புக் கொண்டேன் என்றார் திருமா, படத்தில் நடிப்பதற்கு முன் சென்ற வாரம் 'அன்பு தோழி' படத்தை சென்ஸார் உறுப்பினர்கள் பார்த்தனர். கரண்டை கட்கத்தில் விட்டதுபோல் அனைவருக்கும் அனைவருக்கும் அதிர்ச்சி. திருமாவளவனின் இனப் போராளி கேரக்டர் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனை நினைவுப்படுத்துகிறதாம். அவரது வாழ்க்கை சம்பவங்கள் சில படத்தில் இடம் பெற்றிருக்கிறதாம். விடுதலைப்புலிகள்…
-
- 0 replies
- 821 views
-
-
மதுரை வந்த விமானத்தில் விஜயகாந்துக்கு லேசான காயம் மதுரை : சென்னையிலிருந்து மதுரைக்கு நேற்றிரவு தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் வந்த விமானம் பலத்த காற்று காரணமாக நடுவானில் குலுங்கியது. இதில், அவருக்கு நெற்றியில் காயம் ஏற்பட்டது. பைலட்டின் சமயோஜித புத்தியால், விமானம் பத்திரமாக தரையிறங்கியது. மதுரை மேற்கு தொகுதி இடைத் தேர்தலை முன்னிட்டு வேட்பாளர்களை தேர்வு செய்வதற்காக தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த், சென்னையில் இருந்து ஜெட் ஏர்வேஸ் விமானம் மூலம் நேற்றிரவு மதுரை வந்தார். இதில், விஜயகாந்த் உட்பட 49 பயணிகள் பயணித்தனர். பலத்த காற்று காரணமாக நடுவானில் விமானம் குலுங்கி நிலை தடுமாறியதால், பயணிகள் ஒருவருக்கொருவர் மோதினர். இதில், விஜயகாந்துக்கு நெற்றியில் காயம் ஏற்பட்டு புடைத்தது.…
-
- 8 replies
- 2.5k views
-
-
சுகமான சுமைகள் நடிகர் பார்த்திபன் வசமாக மாட்டிக்கொண்டு ஏமாந்த கதை ``சார், சென்னைப் புறநகர்ல தெரிஞ்ச ஒரு சாமியார் இருக் கார். நீங்க ஒரு தடவை போய்ப் பார்த்தீங்கன்னா எல்லாப் பிரச்சினையும் தீர்ந்துடும். நிறைய மினி°ட்டருங்க அவ ரைப் பார்த்துட்டுப் போறாங்க. ரொம்ப பவர்ஃபுல்.’’ ``ஏற்கெனவே பவர்ல இருக் கிற மினி°ட்டருங்க எதுக்கு அவரைப் போய் பார்க் கணும்?’’ நான் கிண்டலடிக்க, ``இப்படியெல்லாம் கேட்டீங்கன்னா எனக்குப் பதில் சொல்லத் தெரியாது. ஒரே ஒரு தடவை நீங்களும், அண்ணியும் வந்து பாருங்களேன்.’’ சம்மதிப்பதற்கான சமாதானங்கள் தொலைக்காட்சி சீரியலாக நீள, அந்தப் புறநகர் சாமியார் இடத்தில் `ஸாரி’ மடத்தில் நாங்கள் பணிவாய்க் காத்திருந்தோம். வரும்முன் பார்ப்போம் என அந்த அறைய…
-
- 1 reply
- 1.3k views
-
-
காதல் தம்பதிகளான அஜீத், ஷாலினி ஜோடி மிக சந்தோசமாக இருக்கிறார்கள். அதற்கு காரணம் துள்ளி விளையாடுவதற்கு அவர்கள் வீட்டிற்கு ஒரு குழந்தை வரப்போகிறது. ஏழு வருடங்களுக்கு முன்னால் அஜீத், ஷாலினி இருவருக்கும் திருமணம் நடந்தது. இந்நிலையில் ஏழு வருடங்களுக்கு பிறகு இப்போது குழந்தைக்கு தயாகப் போகிறார் ஷாலினி. அஜீத் பில்லா படத்தின் படப்பிடிப்பிற்காக மலேசியாவில் இருந்தார். மூன்று நாள்களுக்கு முன் சென்னை வந்து ஷாலினியை மருத்துவரிடம் காட்டிவிட்டு மீண்டும் மலேசியா சென்றுவிட்டார். அங்கிருந்தபடி தினமும் ஷாலினிடம் உடம்பை பார்த்துக் கொள்ளுமாறு ஃபோனில் சொல்கிறார். மூலம் : தமிழ்.வெப்துனியா.காம்
-
- 20 replies
- 3.3k views
-