வண்ணத் திரை
சினிமா விமர்சனம் | சினிமாச் செய்திகள் | கருத்துகள்
வண்ணத் திரை பகுதியில் சினிமா விமர்சனம், சினிமாச் செய்திகள், உலக சினிமா சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் சினிமா விமர்சனங்களுக்கும் தரமான சினிமா சம்பந்தமான கட்டுரைகளுக்கும் முன்னுரிமை கொடுத்தல் வேண்டும். அளவுக்கதிகமான சினிமாச் செய்திகளையும், கிசுகிசு செய்திகளையும் தவிர்க்கவேண்டும்.
5557 topics in this forum
-
2016 - ல் கவனம் ஈர்த்த துணைக் கதாபாத்திரங்கள்! 2016-ம் ஆண்டு, ரசிகர்களுக்கு வெள்ளித்திரை அளித்தது வகைவகையான விருந்து. குறிப்பாக, கதாநாயகிகளுக்கு இணையாக துணைக் கதாபாத்திரங்கள் ஏற்ற நடிகைகள் ஸ்கோர் செய்யும் வாய்ப்பு, பல திரைக்கதைகளில் வழங்கப்பட்டன. அப்படி ரசிகர்களால் பெரிதும் பேசப்பட்டவர்களில் சிலர்... மியா ஜார்ஜ் தொடரும் பெண் பார்க்கும் படலம், ஏதோ ஒரு காரணத்தால் கைநழுவிச் சென்றுகொண்டே இருக்கும் திருமண யோகம்... இந்தச் சூழல் ஒரு கிராமத்து அப்பாவிப் பெண்ணின் மனதை எப்படியெல்லாம் பாதிக்கிறது என்பதை அழுத்தமாகச் சொன்ன படம் 'ஒருநாள் கூத்து'. 'லட்சுமி' கேரக்டரில், கிராமப்புற இளம் பெண்களின் நிலையையும், உணர்வுகளையும் மியா ஜார்ஜ் தன் கண்களாலும், ஆர…
-
- 0 replies
- 785 views
-
-
கடற்கரையில் நீச்சல் உடையில் சமந்தா! (படங்கள்) நடிகைமார் நீச்சல் உடையில் அலையும் புகைப்படங்கள் இணையதளங்களில் அவ்வப்போது பிரபலமாக உலா வரும். அந்த வகையில் வெளிநாட்டு கடற்கரையில் நீச்சல் உடையில் நடிகை சமந்தாவின் படங்கள் தற்போது உலா வருகின்றன. http://tamil.adaderana.lk/kisukisu/?p=17190
-
- 0 replies
- 958 views
-
-
திரை விமர்சனம்: பலே வெள்ளையத் தேவா மதுரையில் பசுமையும் தொழில் நுட்பமும் நிறைந்த ஒரு கிராமம். பணிமாற்றல் காரணமாக அந்த ஊருக்கு வரும் தபால் நிலையப் பணியாளர் தமயந்தி (ரோகிணி), தனது மகன் சக்திவேலுடன் (சசிகுமார்) அங்கே குடியேறுகிறார். படித்து முடித்து அரசு வேலைக்காகக் காத்திருக்கும் சக்திவேலுக்கும் அந்தக் கிராமத்தில் கேபிள் டிவி நடத்திவரும் ராதுவுக் கும் (பாலா சிங்) ஏற்படும் உரசல் ஒரு கட்டத்தில் மோதலாக முற்றுகிறது. ராதுவின் சூழ்ச்சியால் சக்திவேல் சிறைக்குச் செல்ல, அவர் அரசு வேலைக் குச் செல்வது கேள்விக்குறியாகி விடுகிறது. அதன் பிறகு ராதுவை சக்திவேல் எப்படி வீழ்த்துகிறார் என்பது தான் கதை. கிராமத்தைக் களமாகக் …
-
- 0 replies
- 313 views
-
-
எம்.ஜி.ஆர் 29வது நினைவு தினம் எம்.ஜி.ஆர். மறைவுக்கு அனுதாபம் தெரிவித்து, யாழ்ப்பாணத்தில் இருந்து விடுதலைப்புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன் அனுதாப செய்தி அனுப்பினார். அதில், "தமிழக முதல்வர் எம்.ஜி.ஆரின் மறைவு அறிந்து நாம் அதிர்ச்சியும், வேதனையும் அடைகின்றோம். தமிழீழப் போராட்டத்தில் அவர் காட்டிய அக்கறையும், குறிப்பாக அவர் என் மீது கொண்டிருந்த அன்பையும், எமது இயக்கத்தின் மீது கொண்டிருந்த ஈடுபாட்டையும் எம்மால் மறக்க முடியாது. தமிழீழப் போராட்டத்தின் வெற்றிக்காக எம்.ஜி.ஆர். செய்த உதவிகள் தமிழீழ மக்கள் மனதில் என்றும் நிலைத்திருக்கும்," என பிரபாகரன் தனது அறிக்கையில் கூறி இருந்தார்.
-
- 3 replies
- 513 views
- 1 follower
-
-
நடிகர் ஆர்யா ‘ஜல்லிக்கட்டு என்றால் என்ன?’ என்ற தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதற்கு தமிழ் ரசிகர்கள் ஆத்திரமடைந்துள்ளனர். ஜல்லிக்கட்டு குறித்த உணர்வுப் பூர்வமான நிலையில், தமிழக மக்கள் இருக்கும் பட்சத்தில் அவர்களது உணர்வுகளை இழிவுப்படுத்தும் விதமாக நடிகர் ஆர்யா தனது ட்விட்டர் பக்கத்தில் ’ஜல்லிக்கட்டு என்றால் என்ன?’ கேள்வி எழுப்பியுள்ளார். இது குறித்து பலரும் காட்டமாக பதில் அளிக்க அந்த பதிவை உடனடியாக நடிகர் ஆர்யா நீக்கிவிட்டார். ஆனாலும், தமிழ் படங்களில் அதிகம் நடித்துவரும் நடிகர் ஆர்யா, தமிழர்களின் உணர்வுப் பூர்வமான விஷயங்களில் தலையிடுவது முறையானது அல்ல என்று சமூக வலைத்தளங்களில் கண்டங்கள் எழுந்து வருகிறது. நன்றி வெப்துனியா டிஸ்கி கூத்தடிகளின் …
-
- 1 reply
- 294 views
-
-
காக்கா கலருக்கு எதுக்கு வோட்கா? - ’கத்தி சண்டை’ விமர்சனம் ’நாய்’ சேகர், ‘ஏட்டு’ ஏகாம்பரம் என வடிவேலுவின் ஹிட் வெர்ஷன் கொடுத்த இயக்குநர் சுராஜுடன் வடிவேலு ‘கம்-பேக்’ கூட்டணி வைத்திருக்கும் படம், வடிவேலு - சூரி ஒரே படத்தில் காமெடி செய்திருக்கும் படம் என்று எதிர்பார்ப்புகள் சிலவற்றோடு வெளியாகியிருக்கிறது கத்தி சண்டை. காது கிழிந்ததா.. இல்லை கைதட்டலால் அரங்கம் அதிர்ந்ததா? ’6 மாதங்களுக்கு முன்’ என்றொரு ஃப்ளாஷ்பேக்கில் ஆரம்பிக்கிறது படம். கண்டெய்னர் லாரி, கோடி கோடியாய்ப் பணம், மடக்கிப்பிடிக்கும் ஏ.சி. ஜெகபதி பாபு என்று டைட்டில் கார்டு வரும் வரை கொஞ்சம் விறுவிறுப்பு காட்டிவிட்டு, டைட்டிலுக்குப் பிறகு புளித்துப்போன பூர்வஜென்ம புரூடா விட்டு தமன்னாவை கரெக…
-
- 3 replies
- 1.1k views
-
-
தமிழ் சினிமா 2016: யார் நாயகி? சினிமாவில் நாயகனுக்கு ஈடாக நாயகிக்கு முக்கியத்துவம் அளிக்கும் பொறுப்பு இயக்குநர்களின் கைகளில் மட்டுமே உள்ளது என்பது ஏற்றுக்கொள்ளக்கூடிய உண்மைதான். அதேசமயம் கொடுக்கப்பட்ட பாத்திரத்தில் பொருந்தி, திறமையை நிரூபித்து முதன்மையாக இருக்கும் வெற்றி நாயகிகள் யார்? 2016-ம் ஆண்டு தமிழ் சினிமா நாயகிகளில் யாருக்கு முதலிடம்? # சமந்தா ‘24', ‘தெறி' என இரு படங்கள் மூலம் முன்னணி நடிகர்களுடன் நடித்த வாய்ப்பு சமந்தாவுக்கு. வழக்கமும் பழக்கமுமான நாயகி வேடத்தை மிகச் சரியாகச் செய்திருக்கிறார். சவாலான பாத்திரம் இல்லாததும், குணச்சித்ர நடிப்புக்கான களமாக அமைந்து…
-
- 0 replies
- 324 views
-
-
2016-ல் தப்பிப் பிழைத்த 10 தமிழ்ப்படங்கள் #2016Rewind எதிர்பார்க்க வைத்து மொக்கை வாங்கிய படங்கள், ரிலிஸுக்கு முன் ஓவர் பில்ட் அப் கொடுத்தாலும் வெளியான பின்னும் சொல்லி வைத்ததுபோல் செம ஹிட் அடித்த தமிழ்ப்படங்கள் என பல டாப் 10 லிஸ்டுகள் வெளியாகி வருகிறது. அந்த வரிசையில் யாரும் பெரிய அளவில் எதிர்பாராமல் அதே வேளை மரியாதையான வெற்றி பெற்ற படங்களின் டாப் 10 லிஸ்ட் இது. இறுதிச்சுற்று - குத்துச்சண்டையில் விழும் குத்துகளில் பிரபலமானது அப்பர் கட் மற்றும் ஹூக் பஞ்ச். ஆனால் இவற்றுக்கு எல்லாம் பெரியது எதிரியை நிலைகுலையச்செய்ய குத்து என்பது ஜேப் என்கிற டைனமைட் பஞ்ச். இறுதிச்சுற்று அப்படி ஒரு 'டைனமைட் பஞ்ச்' வீசி எதிர்பாராத வெற்றியை அடைந்தது. 'மஸ்தி' மாதவன்…
-
- 0 replies
- 1k views
-
-
2016 முடிவதற்குள் வரவிருக்கும் ஒன்பது தமிழ்ப்படங்கள்..! 2017 பிறக்க இன்னும் 10 நாட்களே உள்ள நிலையில், தமிழில் ஒன்பது படங்கள் வரவிருக்கிறது. வருகிற வெள்ளிக்கிழமை, விஷால் நடித்திருக்கும் ‘கத்தி சண்டை’, சசிகுமார் நடித்துள்ள ‘பலே வெள்ளையத் தேவா’, எஸ்.வி.சேகரின் ‘மணல் கயிறு-2’ மற்றும் அமீர்கான் நடித்துள்ள ‘தங்கல்’ ஹிந்தி படத்தின் தமிழாக்கம் ‘யுத்தம்’ என நான்கு படங்கள் வரவிருக்கின்றன. அடுத்த வாரம் வெள்ளிக்கிழமை, நட்டி என்கிற நட்ராஜ் நடித்துள்ள ‘போங்கு’, ரகுமான் மற்றும் புதுமுகங்கள் நடித்துள்ள ‘துருவங்கள் பதினாறு’ மற்றும் ‘ஏகனாபரம்’, சிபிராஜின் ‘கட்டப்பாவ காணோம்’ மற்றும் ‘மோ’ என ஐந்து படங்கள் வரவிருக்கின்றன. டிசம்பர் 23-ம் தேதி வெளியிடப்படும் என அறிவி…
-
- 0 replies
- 424 views
-
-
என் படத்தை யாரும் பாா்க்காதீா்கள் - சன்னி லியோன் 2016-12-21 21:18:28 ஆபாச படங்களில் நடித்து வந்த சன்னி லியோன் இந்தியில் கவர்ச்சி படங்களில் நடிக்கிறார். தமிழிலும் ‘வடகறி’ படத்தில் குத்து பாடலுக்கு நடனம் ஆடினார். சன்னி லியோனால் இந்திய கலாச்சாரம் பாதிக்கப்படுகிறது என்று அவர் மீது பொலிவூட் ஹீரோயின்கள் பலர் தொடக்க நாட்களில் விமர்சித்தனர். தற்போது இணைய தளங்களில் பலர் சன்னியை விமர்சித்து கருத்து வெளியிட்டு வருகின்றனர். இதில் கோபம் அடைந்த சன்னி லியோன் திடீரென்று விமர்சகர்கள் மீது பாய்ந்திருக்கிறார். ‘நான் நடிக்கும் படத்தையோ, அல்லது எனது புகைப்ப…
-
- 2 replies
- 494 views
-
-
அவ்வை சண்முகியில் நடித்த குட்டிப்பாப்பா இப்போ என்ன செய்கிறார் தெரியுமா? . அவ்வை சண்முகியில் நடித்த அழகு குட்டிச் செல்லத்தை ஞாபகமிருக்கிறதா? அவர் பெயர் ஆன். இப்போது என்ன செய்கிறார்? எங்கே இருக்கிறார்? இதே சென்னையில்... தான் உண்டு... நாய்க்குட்டிகள் சூழ்ந்த தன் தனிமை வாழ்க்கை உண்டு என ஆரவாரமின்றி இருக்கிறார் ஆன். ஆனைப் பார்க்கிறவர்களுக்கு அவரை நிச்சயம் அடையாளம் தெரிய வாய்ப்பில்லை. அவ்வை சண்முகியில் கொழுக் மொழுக் பார்பி பொம்மையாக அட்டகாசம் செய்தவர், இன்று சைஸ் ஸீரோ ஸ்மைலி. ஹாலிவுட் ஹீரோயின் மாதிரி இருக்கிறார். தேடிக் கண்டுபிடித்து 'ஹாய்... ஹலோ' சொன்னால், படத்தில் பார்த்த அதே உற்சாகத்துடன் வரவேற்கிறார் ஆன். ''20 வரு…
-
- 2 replies
- 689 views
-
-
2017 பொங்கல் ரிலீஸ் படங்களில் கவனிக்க வேண்டியவை..! பொங்கலுக்கு ரிலீஸாகும் படங்கள் என்று தினம் ஒரு படம் அப்பேட் ஆகிக்கொண்டே இருக்கிறது. இதுவரை எட்டு படங்கள் பொங்கல் ரிலீஸ் என்று அறிவித்திருக்கும் நிலையில், அந்த படங்கள் எது..? அந்த படங்களில் என்ன ஸ்பெஷல் என்று கொஞ்சம் தெரிந்து கொள்வோமா... ‘பைரவா’ பொங்கல் ரேஸில் முதலில் பெயர் கொடுத்தது, விஜய்யின் ‘பைரவா’ படம் தான். இந்த படத்தில் முதன் முதலாக விஜய்க்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார். சந்தோஷ் நாராயணன் விஜய் படத்திற்கு இசையமைத்துள்ளார். இந்த இரண்டு செய்திகள் தான் விஜய் ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியது. ஏனென்றால், ‘ரஜினி முருகன்’ படத்தில் கீர்த்தியின் அழகும், ‘கபாலி’ படத்தில் …
-
- 0 replies
- 997 views
-
-
‘பைரவா’ படத்தின் ட்ராக் லிஸ்ட்..! (வீடியோ) டிசம்பர் 23 ம் தேதி ‘பைரவா’ படத்தின் பாடல்கள் ரிலீஸாகவுள்ளது. அதன் முன்னோட்டமாக ‘பைரவா’ படத்தின் ட்ராக் லிஸ்ட் இன்று வீடியோவாக வெளியிடப்பட்டுள்ளது. படத்தில் மொத்தம் எத்தனை பாடல்கள், பாடல்களை எழுதியது, பாடியது யார் என்று பல தகவல்கள் அந்த வீடியோவில் இருக்கின்றன. மேலும் படத்தின் புகைப்படங்களும் பின்னணியில் வருகின்றன. http://www.vikatan.com/news/cinema/75380-bairavaa-movie-track-list-released.art
-
- 3 replies
- 1.3k views
-
-
‘தியாகராஜ பாகவதருக்கே அந்த நிலைமைன்னா...?!’ - ஒரு நடிகரின் கவலை 'மற்ற நடிகர்களிடம் இருந்து மாறுபட்டவராக வாழ்ந்து வருகிறார் நடிகர் லிவிங்ஸ்டன். அப்போது முன்னணி கதாநாயகிகளாக வலம் வந்த குஷ்பு, தேவயாணி, கெளசல்யா என பலருடன் ஜோடி சேர்ந்து நடித்து வந்தார். காமெடி, வில்லன், ஹீரோ என அனைத்து கதாப்பாத்திரத்திற்கு பொருத்தமாக இருப்பவர் அவர். இதுவரை 280 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். தற்போதும் தொய்வில்லாமல் நடிப்புப் பணியில் தீவிரத்தை காட்டி வருகிறார். பொது இடங்களில் சாதாரணமாக ஆட்டோக்களிலும், அரசு பேருந்துகளிலும் பயணிக்கிறார். பொதுமக்கள் அடையாளம் காணும் போது புன்முறுவலோடு கடந்து செல்கிறார் லிவிங்ஸ்டன்... அவரிடம் பேசினோம். ''எதற்காக இந்த சிம்பிளிசிட்…
-
- 0 replies
- 423 views
-
-
வன்முறைக் காதலுக்கு வழிகாட்டுகிறதா திரைப்படங்கள்? சிவக்குமார் உலகநாதன் பிபிசி தமிழ் பெண்களுக்கு எதிராக சமூகத்தில் நடைபெறும் பல குற்றங்களுக்கு சில சமயங்களில் திரைப்படங்கள் காரணமாக அமைந்து விடுகின்றன. தன் மீது விருப்பமில்லாத பெண்ணை காதலிக்க வைக்க 'ஹீரோயிசம்' என்ற பெயரில் திரையில் நடக்கும் கேலி, கிண்டல்கள் சாதாரண இளைஞர்களையும் அவ்வாறு நடக்க தூண்டுவதுடன், பெண்களுக்கு எதிராக நடக்கும் அத்துமீறல்களுக்கு முக்கிய காரணமாக உள்ளன. கடந்த சில மாதங்களுக்கு முன்னர், சென்னையில் உள்ள ஒரு புறநகர் ரயில்நிலையத்தில் சுவாதி என்ற இளம்பெண் வெட்டிக் கொலை செய்யப்பபட்ட சம்பவம், காரைக்காலில் வினோதினி என்ற பெண்ணின் மீது நடந்த அமில வீச்சு, சென்னையில் இணையதள …
-
- 0 replies
- 445 views
-
-
நடிகை பூஜாவுக்கு, தொழில் அதிபருடன் ரகசிய திருமணம். சென்னை: நடிகை பூஜாவுக்கு ரகசியமாக திருமணம் நடந்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. ஜே ஜே படம் மூலம் கோலிவுட் வந்தவர் இலங்கையை சேர்ந்த நடிகை பூஜா. அவரது தாய் இலங்கையை சேர்ந்தவர், தந்தை கர்நாடகாவை சேர்ந்தவர். பெங்களூரில் படித்த பூஜா தமிழ் தவிர மலையாளம், தெலுங்கு, சிங்கள மொழிப் படங்களில் நடித்து வந்தார்.அவருக்கும் இலங்கையை சேர்ந்த தொழில் அதிபர் தீபக் சண்முகநாதனுக்கும் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நிச்சயிக்கப்பட்டது. ஆனால் தங்களுக்குள் ஒத்துப் போகாது என்று கூறி பிரிந்துவிட்டனர். இந்நிலைில் பூஜாவுக்கும், தீபக்கிற்கும் கொழும்புவில் ரகசியமாக திருமணம் நடந்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. பூஜா தமிழில…
-
- 0 replies
- 602 views
-
-
வீரசிவாஜியை சொப்பன சுந்தரியாவது காப்பாற்றினாரா? - வீரசிவாஜி விமர்சனம் சில படங்களின் கதைக்களமும், அதை எடுத்திருக்கும் விதமும் வேறு வேறு எக்ஸ்ட்ரீமில் இருக்கும். "ச்ச்சே! எப்பிடி எடுத்திருக்க வேண்டிய படம்!" என யோசிக்க வைக்கும். அல்லது சாதாரண கதையை வைத்து, செமத்தியான மேக்கிங்கில் பின்னிப் பெடலெடுத்த படங்களும் உண்டு. தகராறு படம் இயக்கிய கணேஷ் விநாயக் இயக்கி, விக்ரம் பிரபு நடித்திருக்கும் 'வீரசிவாஜி' படம் இதில் எந்த வகை? கதை நாயகன் ஒரு நேர்மையான டாக்ஸி ஓட்டுநர். கூடவே வீரமான ஆளும் கூட. அவரின் பெயர் சிவாஜி என்பதால் வீரசிவாஜி என்கிற தலைப்பு வைத்திருப்பதாக நமக்கு நாமே நம்பிக்கொள்ளலாம். டாக்ஸி …
-
- 0 replies
- 441 views
-
-
சர்வதேச சினிமா: தப்பித்துச் செல்லும் வரலாற்றுக் கிழவர்! யாரையும் புண்படுத்தாத நகைச்சுவைக்கு உத்தரவாதமான படம் The Hundred-Year-Old Man Who Climbed Out the Window and Disappeared (ஜன்னல் வழியே எகிறிக் குதித்து காணாமல் போன நூறு வயது மனிதர்). இப்படத்தில் உலக வரலாற்றின் சீரிய காட்சிகளையும் போகிற போக்கில் காண முடிவது இன்னொரு ஆச்சரியம். தப்பிக்கும் தாத்தா ஆலனுக்கு 100-வது பிறந்தநாள் விழா. அவர் வசிப்பது ஸ்வீடன் நாட்டின் மாம்கோப்பிங் நகரில். அகன்ற தோட்டமும் காற்றோட்டமும் மிக்க அவரது ஓய்வில்லத்திலேயே கொண்டாட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பத்திரிகையாளர்கள், உள்ளூர் பெரிய மனிதர்கள் என அவருக்கு வாழ்த்து …
-
- 0 replies
- 316 views
-
-
டோன்ட் மிஸ் 2016 சினிமாஸ்! - மலையாளம் 2016-ன் க்ளைமாக்ஸில் இருக்கிறோம். இன்னும் சில நாட்களில் `விஷ் யூ எ ஹேப்பி நியூ இயர்' என கமல் ஓடிவந்து வாழ்த்து சொல்வார். நாமும் பார்ட்டி, சபதம் என கொண்டாட்டமாக வரவேற்போம். அதெல்லாம் இருக்கட்டும். இன்னும் இந்த வருஷம் செய்ய வேண்டியவையே நிறைய பாக்கி இருக்கிறது. அதில் ஒன்று சினிமா. இந்த ஆண்டு வெளியான படங்களில் மிஸ் பண்ணக் கூடாத படங்கள் பற்றிய லிஸ்ட்டை ரகம் வாரியாக பிரித்துக் கொடுத்திருக்கிறோம். மறக்காம பார்த்துடுங்க மக்களே! இது மலையாளப் படங்களுக்கான லிஸ்ட். கவுன்ட்டவுன் ஸ்டார்ட்ஸ்! மகேஷின்டே பிரதிகாரம் மலையாள உலகின் விஜய் சேதுபதி, ஃபஹத் ஃபாசிலின் யதார்த்த நடிப்பில் வெளிவந்து சூப்பர்ஹிட்டான படம். பசுமை போர்…
-
- 0 replies
- 1.2k views
-
-
’பொண்ணு மாதிரி இருக்கணும்னு நினைக்கிறேன்’ - ரித்திகா சிங் #VikatanExclusive பாக்ஸராக பயிற்சி பெற்று, நடிகையாகப் பிரபலமான ரித்திகா சிங்கின் வாழ்க்கையே திடீர் திருப்பங்கள் நிறைந்த ஒரு சினிமா போலவே இருக்கிறது. ''எங்கப்பா மோகன் சிங் ஒரு பாக்ஸர். என்னோட மூணு வயசுலேருந்தே அவர் பிராக்டிஸ் பண்றதைப் பார்ப்பேன். நானும் அப்பா மாதிரியே பண்ணிப் பார்ப்பேன். பாக்சிங் பிடிச்சிருந்தது. ஆனா பிராக்டிஸுக்காக காலையில சீக்கிரமே எழுந்திருக்கிறது, டயட் பண்றதெல்லாம் கஷ்டமா இருந்தது. எங்கப்பா ரொம்ப ஸ்ட்ரிக்ட். " உனக்குள்ள ஒரு திறமை இருக்கு... நீ ஜெயிக்கப் பிறந்திருக்கே... சோம்பேறித்தனத்தை ஓரங்கட்டி வச்சிட்டு, பாக்சிங்ல கவனம் செலுத்தினா எங்கேயோ போயிடுவே.னு" சொல்லிட்டே இ…
-
- 0 replies
- 403 views
-
-
தமிழ் சினிமா 2016: கவனம் ஈர்த்த இயக்குநர்கள் ஒவ்வோர் ஆண்டும் நூற்றுக்கணக் கான திரைப்படங்கள் தமிழில் தயாரிக்கப்படுகின்றன. அவற்றில் பெரும்பாலானவை முழுமையான பொழுதுபோக்குப் படங்களே. திரைப்படம் பார்க்க வரும் ரசிகர்கள் பொழுதைப் பயனுள்ள வகையில் கழிக்க வேண்டும் என்னும் உந்துதலில் மாறுபட்ட முயற்சிகளை மேற்கொள்ளும் ஓரிரண்டு படங்களே ஒவ்வோர் ஆண்டும் தேறுகின்றன. இந்த ஆண்டும் இந்தப் போக்கிலிருந்து தமிழ்ப் படங்கள் வேறுபடவில்ல…
-
- 0 replies
- 492 views
-
-
நடிகை சன்னி லியோனின் இளைய சகோதரரின் திருமண வைபவத்தில்... 2016-12-15 14:48:20 பொலிவூட் நடிகை சன்னி லியோனின் சகோதரரின் திருமண வைபவம் அமெரிக்காவில் அண்மையில் நடைபெற்றது. சகோதரனுடன் சன்னி லியோன் சீக்கிய பாரம்பரிய முறையில் நடைபெற்ற இத் திருமண வைபவத்தில் பஞ்சாபி கலாசாரத்தை பிரதிபலிக்கும் வகையிலான ஆடை அலங்காரங்களுடன் பங்குபற்றினார் சன்னி லியோன். சீக்கிய பெற்றோரின் மகளாக கனடாவில் பிறந்தவர் சன்னி லியோன். இவரின் உண்மையான பெயர் கரன்ஜித் கவுர் வோரா. இவரின் இளைய சகோதரரான சந்தீப் வோரா சமையல் கலை நிபுணர். …
-
- 0 replies
- 576 views
-
-
பெங்களூர் நாட்கள் முதல் தோழா வரை... 2016 ரீமேக்குகளின் ஹிட் அண்ட் மிஸ் கணக்கு! #2016RemakeMovies #2016Rewind இந்த வருடம் தமிழில் வெளியான படங்களில் ரீமேக்களும் பல உண்டு. எந்தெந்த மொழிகளிலிருந்து என்னென்ன படங்கள் தமிழில் ரீமேக் செய்யப்பட்டன, அதன் ரிசல்ட் என்ன தெரியுமா? பெங்களூர் நாட்கள்: 2014ல் மலையாளத்தின் செம ஹிட் படம் 'பெங்களூர் டேஸ்'. அஞ்சலி மேனன் இயக்கத்தில் நிவின் பாலி, துல்கர் சல்மான், ஃபகத் பாசில், நஸ்ரியா நசிம், பார்வதி, இஷா தல்வார் என மல்டி ஸ்டார் காஸ்ட், மிக அழகான கதை என அத்தனை பேரையும் ஈர்த்தது. கேரளம் தாண்டியும் நல்ல வரவேற்பு கிடைத்தது. உடனே படத்தின் தமிழ் மற்றும் தெலுங்கு ரீமேக் உரிமையை தில்ராஜுவும், பரம் வி.பொட்லுரியும் வாங…
-
- 0 replies
- 426 views
-
-
மிஸ் பண்ணக் கூடாத 2016-ன் டாப் 10 ஹாலிவுட் படங்கள்..! தமிழ் படங்களைப் போல, நாம் லைக்கிடும் பிற மொழிப்படங்களில் முதலிடம் பிடிப்பது ஹாலிவுட். இந்த வருடம் மட்டும் ஹாலிவுட்டில் 180க்கும் மேற்பட்ட படங்கள் ரிலீஸாகிவிட்டன. அதில் தோராயமாக 60 படங்கள் மட்டுமே இந்தியாவில் வெளியாகியிருக்கும். அனிமேஷன், ஆக்ஷன், த்ரில்லர், காமெடி, சூப்பர் மேன் கதைகள் என்று இந்தவருடம் வெளியான படங்களில் மிஸ் பண்ணக்கூடாத 10 படங்கள் இது. தி ரெவனன்ட் : கடந்த வருடமே அமெரிக்காவில் ரிலீஸாகிவிட்டாலும், இந்தியாவில் இந்த வருட ஜனவரியில் தான் வெளியானது. ரெவனன்ட் என்றால் மரணத்தில் விளிம்பிலிருந்து மீண்டு வந்தவன் என்பது பொருள். ஐந்துமுறை ஆஸ்கார் விருதுக்கு பரிந்துரைக்கப…
-
- 0 replies
- 1.5k views
-
-
பறந்து செல்ல வா - திரை விமர்சனம் காதலே கைகூடாத விளையாட்டுப் பையனை ஒருசேர இரு பெண்கள் காதலித்தால் என்ன ஆகும்? நாயகன் லூத்ஃபுதின் பாஷா விளை யாட்டுப் பிள்ளை. சிங்கப்பூரில் அவ ருக்கு வேலை கிடைக்கிறது. அங்கு நண் பர் அறையில் தங்குபவருக்குப் பார்க் கும் பெண்கள் மீதெல்லாம் காதல் பொங்குகிறது. தனது முயற்சிகளில் ‘பல்பு’ வாங்கும் அவரை, ‘உன் முகத் துக்கெல்லாம் காதலா’ என்று நண்பர் கள் கலாய்க்கிறார்கள். நண்பர்களை ஏமாற்ற, முகநூலில் கற்பனைக் காதலியை உருவாக்கி உலவவிடுகிறார். இடையே உண்மையிலேயே அவருக்கு ஒரு காதலி கிடைத்துவிடுகிறார். காதல் சுமுகமாகச் சென்றுகொண்டிருக்கும் போது கற்பனைக் காதலி நிஜமாகவே நேரில் வந்த…
-
- 0 replies
- 305 views
-