வண்ணத் திரை
சினிமா விமர்சனம் | சினிமாச் செய்திகள் | கருத்துகள்
வண்ணத் திரை பகுதியில் சினிமா விமர்சனம், சினிமாச் செய்திகள், உலக சினிமா சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் சினிமா விமர்சனங்களுக்கும் தரமான சினிமா சம்பந்தமான கட்டுரைகளுக்கும் முன்னுரிமை கொடுத்தல் வேண்டும். அளவுக்கதிகமான சினிமாச் செய்திகளையும், கிசுகிசு செய்திகளையும் தவிர்க்கவேண்டும்.
5554 topics in this forum
-
‘அர்விந்த் சுவாமிக்கும் 'ஜெயம்' ரவிக்கும் இதான் வித்தியாசம்!' - ஜாலி கேடி ஹன்சிகா #VikatanExclusive ஹன்சிகா... முதல் படத்தில் குஷ்பு. இப்போது சிம்ரன் என தமிழ் ரசிகனுக்காக இளைத்தவர். க்யூட், பப்லி, ரொமாண்ட்டிக் என ஆல் ஏரியாவிலும் ஹிட்டடித்துவிட்டு பேயாகவும் மாறி பதற வைத்துவிட்டார். இந்த ஜூலியட் தான் இப்போதும் தென்னிந்திய படங்களில் மோஸ்ட் வாண்ட்டட் டூயட் பொண்ணு. பார்த்து நாளானதே என மெசெஜ் தட்டினோம். ஒகே என அழைத்தார். அடுத்து தமிழில் “போகன்” தானே? ஆமாம். படம் நல்லா வந்திருக்கு. ரஷஸ் பாத்தேன். ரொம்ப கிளாஸா வந்திருக்கு. ஃபர்ஸ்ட் லுக் போஸ்டருக்கு செம வரவேற்பு. நான், ஜெயம் ரவியும் செம கலாட்டா ஆட்கள். எங்க கூட அர்விந்த்சுவாமி சாரும். ரோமியோ ஜூலி…
-
- 0 replies
- 423 views
-
-
கோவா IFFI 2016- மெல்லோ மட்: சிறுமியின் அசாத்திய பயணம் கோவா - சர்வதேச பட விழாவில் கவனம் ஈர்த்த படங்கள் குறித்த சிறப்புப் பார்வை Mellow Mud | 2016 | Renars Vimba | Latvia பெற்றோர்களால் தனித்து விடப்படும் குழந்தைகள் தங்களைத் தாங்களே பார்த்துக்கொள்ளும் நிலை வரும்போது என்ன செய்வார்கள்? இந்த உலகத்தை எவ்வாறு எதிர்கொள்கிறார்கள்? விவாகரத்து வாங்கும் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளைப் பற்றி கவலைகொள்ளாமல் தங்களுக்கென தனி வாழ்க்கையை நாடுகிறார்கள். அவர்களால் கைவிடப்பட்ட குழந்தைகளை காப்பகங்கள் கவனித்துக் கொள்கின்றன. இதுதான் ஐரோப்பாவின் நிலை. லடிவாவில் தனது பாட்டி, தம்பியுடன் வாழ்ந்து வருகிறாள் …
-
- 0 replies
- 240 views
-
-
பாலிவுட்டில் கங்கனா ரணாவத் நடிப்பில் கடந்த 2014-ஆம் ஆண்டு வெளிவந்து மாபெரும் வெற்றி பெற்ற படம் ‘குயின்’. இப்படத்தை தமிழில் ரீமேக் செய்யும் உரிமையை பிரபல இயக்குனரும், தயாரிப்பாளரும், நடிகருமான தியாகராஜன் வாங்கியிருந்தார். இந்நிலையில், இப்படத்தை ரேவதி இயக்குவதாக அறிவிக்கப்பட்டது. சுஹாசினி மணிரத்னம் வசனம் எழுதவுள்ளார். இந்நிலையில், இப்படத்தில் கங்கணா ரணாவத் நடித்த கதாபாத்திரத்தில் யார் நடிப்பார்? என்ற பெரிய கேள்வி எழுந்து வந்தது. அந்த கேள்விக்கு தற்போது விடை கிடைத்துள்ளது. அதன்படி, இப்படத்தில் நாயகியாக தமன்னா நடிக்கவிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இப்படம் ரீமேக்காக இல்லாமல் தமிழுக்கு ஏற்ற வகையில் சில மாற்றங்களையும் செய்யவிருக்கிறார்களாம். …
-
- 0 replies
- 269 views
-
-
சமூக சேவையில்தான் மன அமைதி கிடைக்கிறது: சமந்தா சொல்கிறார் “சமூக சேவையில்தான் மன அமைதி கிடைக்கிறது. சம்பாதிக்கும் பணத்தில் ஏழைகளுக்கு உதவ வேண்டும் என ஆசைப்படுகிறேன்” என்று நடிகை சமந்தா கூறினார். ஐதராபாத்: “சமூக சேவையில்தான் மன அமைதி கிடைக்கிறது. சம்பாதிக்கும் பணத்தில் ஏழைகளுக்கு உதவ வேண்டும் என ஆசைப்படுகிறேன்” என்று நடிகை சமந்தா கூறினார். நடிகை சமந்தா இதுகுறித்து அளித்த பேட்டி வருமாறு:- “ஒவ்வொருவரும் சம்பாதிக்கும…
-
- 0 replies
- 260 views
-
-
தமிழ்சினிமா ரசிகர்கள் தவறவிட்ட படங்கள் கோலிவுட்டில் சில படங்கள் தியேட்டருக்கு வந்ததும் தெரியாமல் போனதும் தெரியாமல் காணாமல் போய் இருக்கும். ஆனால் அதே படங்களை சில காலம் கழித்து டி.வி-யிலோ, லோக்கல் சேனலிலோ பார்க்கும்போது `ச்சே இப்படி ஒரு படத்தை எப்படி மிஸ் பண்ணோம்?' என்று யோசிக்க வைக்கும். தமிழ் சினிமா ரசிகர்கள் தியேட்டரில் பார்க்கத் தவறிய நல்ல படங்களின் தொகுப்புதான் இது. விடியும் முன் : நான்கு ஆண்கள், மூன்று காரணங்கள், இரண்டு பெண்கள், இவர்களுக்கு இடையில் ஒரே இரவில் நடக்கும் கதைதான் 'விடியும் முன்'. படத்தின் தலைப்புதான் மொத்தக் கதையே. ஒரே நாளில் நடக்கும் சம்பவங்களின் தொகுப்பை இதைவிட சுவாரஸ்யமாகச் சொல்வது கடினம். இந்தப் படத்தின்…
-
- 0 replies
- 1.1k views
-
-
"எனக்கு பிடித்த அனிமல்... கெஸ் பண்ணுங்களேன்!' - காஜல் அகர்வால் சவால் #VikatanExclusive கால்கள் ஒரு இடத்தில் நிற்க மறுக்கின்றன. கைகளின் அசைவுகள் ஒரு நொடி கூட அடங்கவில்லை. பரபரப்பாகவே இருக்கிறார்... படபடவென பேசுகிறார். ""எல்லோருக்கும் வணக்கம்... நான் காஜல் அகர்வால்..." என்பதைத் தாண்டி தமிழ் வரவில்லை. ஆனால், தமிழ் சாகவில்லை. சிரித்துக் கொண்டே இருக்கிறார்... "உங்களின் சிரிப்பு ரொம்ப இயல்பா,அழகா இருக்கே ??" என்று கேட்டால்... அதற்கும் நீண்ட நேரம் சிரிக்கிறார். சினிமாவில் அல்ல, காஜல் நிஜத்திலேயே வெட்கப்படுகிறார்.... " நன்றி... கண்டிப்பாக இது நடிப்பு இல்லை. நான் நானாகவே இருக்கிறேன். வாழ்வில் நான் எப்போதுமே நடிப்பதில்லை. மனதில் நினைப்பதை முகத்தில் அப்பட…
-
- 0 replies
- 493 views
-
-
’நியூ ஜென் காமெடி’ நம் கவலையை தீர்த்ததா? கவலை வேண்டாம் விமர்சனம் "வாழ்க்கை வாழுறதுக்கு இல்லை, கொண்டாடுவதற்கு... தினம் தினம் கொண்டாடு" மயில்சாமி சொல்லும் இந்த பஞ்ச் தான் இந்தப் படத்தின் டேக் லைன். “யாமிருக்க பயமே” படத்திற்கு பிறகு, டிகே இயக்கி, ஜீவா காஜல் அகர்வால் நடித்திருக்கும் படம் “கவலை வேண்டாம்”. படம் பார்த்தவர்களின் கவலை தீர்ந்ததா? ஜீவாவும் காஜலும் பள்ளிக்கால நண்பர்கள். வயது ஏற ஏற, நட்பு காதலாகி அதுவே கல்யாணத்தில் முடிகிறது. ஜீவாவின் சேட்டைகளால் இரண்டே நாட்களில் இருவரும் பிரிந்துவிடுகிறார்கள். சில வருடங்களுக்குப் பிறகு காஜலுக்கு, பாபிசிம்ஹாவை திருமணம் செய்ய வேண்டிய சூழல். விவாகரத்து பெறுவதற்காக ஜீவாவைத் தேடி வருகிறார் காஜல் அகர்வால். வ…
-
- 0 replies
- 414 views
-
-
‘ரஜினி கூட நடிக்கணும்...ஆனா ஒரு கண்டிஷன்!’ - பிஸி கேர்ள் தமன்னா #VikatanExclusive தமிழ் சினிமாவில் இது தமன்னா சீசன். 'தர்மதுரை'க்குப் பிறகு 'தேவி', 'கத்திச்சண்டை', 'அன்பானவன் அசராதவன் அடங்காதவன்', 'பாகுபலி 2' என திரும்பின பக்கமெல்லாம் தமன்னா! கிளாமர் டாலாக மட்டுமே அறியப்பட்ட தமன்னா, சமீப காலமாக 'எனக்கு இன்னொரு முகம் இருக்கு' என்கிற ரேஞ்சில் நடிப்பிலும் மிரட்ட ஆரம்பித்திருக்கிறார். தமன்னாவுக்குள் இருந்த நடிகையை வெளிச்சத்துக்குக் கொண்டு வந்ததில் லேட்டஸ்ட் ரிலீஸ் 'தேவி'க்கு முக்கிய பங்குண்டு. ''என் கேரியர்ல முக்கியமான, மறக்க முடியாத படம் 'தேவி'. ஒரு நடிகையா எனக்கு கிரியேட்டிவ் ஸ்பேஸ் கொடுத்த படம். கமர்ஷியலாகவும் சக்சஸ். மறுபடி இப்படியொரு மூணு மொழ…
-
- 1 reply
- 437 views
-
-
வெளியானது எந்திரன் 2.0 ஃபர்ஸ்ட் லுக் ரஜினிகாந்த், எமி ஜாக்சன் மற்றும் அக்ஷய் குமார் நடிப்பில், சங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் படம் 2.0. இது முன்னர் வெளியான எந்திரன் படத்தின் இரண்டாம் பாகம் ஆகும். இதுவும் வெகு பிரம்மாண்ட பட்ஜெட்டில் எடுத்து வரப்படுகிறது. இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை இன்று வெளியிட உள்ளனர் படக்குழுவினர். அதற்காக தனியே யூடியுப் பக்கத்தையும் ஆரம்பித்துள்ளனர். அதற்குள் 10000க்கும் அதிகமானோர் லைக் செய்து இருக்கிறார்கள். சில நிமிடங்கள் முன்னர் அக்ஷய் குமார் மையப்படுத்திய ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி இருக்கிறது. படத்தைப் பற்றிய சில குறிப்புகள்: பியர்ல் ஹார்பர், டை ஹார்டு, ட்ரான்ஸ்ஃபார்மர்ஸ் போன்ற படங்களின் சண்டைப்…
-
- 1 reply
- 687 views
-
-
இயக்குநர் விஜய்யை இன்னமும் காதலிக்கிறேன்: விவாகரத்து குறித்து நடிகை அமலா பால் பேட்டி! இயக்குநர் விஜய் - நடிகை அமலா பால் ஆகிய இருவரும் 2014-ம் ஆண்டு சென்னையில் திருமணம் செய்துகொண்டார்கள். இது காதல் திருமணம் ஆகும். இந்நிலையில் இருவருக்கும் இடையே கருத்துவேறுபாடு ஏற்பட்டுள்ளதால் விவாகரத்து கோரி குடும்பநல நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளார்கள். விவாகரத்து குறித்து நடிகை அமலா பால், தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழுக்கு அளித்த பேட்டி: வாழ்க்கை புதிதாக ஆரம்பித்ததுபோல உணர்கிறேன். 18 வயதில் சினிமாவில் அறிமுகமானேன். 23 வயதில் திருமணம் செய்தேன். 24 வயதில் இருவரும் பிரிந்துள்ளோம். எனக்கு அறிவுரை …
-
- 1 reply
- 390 views
-
-
ஆரம்பித்த இடத்திலேயே முடியும் இந்த தமிழ் படங்களை உங்களுக்குத் தெரியுமா? திரைப்படங்கள் என்றால் எப்படி இருக்கும்? ஒரு தொடக்கம், படத்தின் இடையில் ஒரு பிரச்னை, இறுதியில் அப்பிரச்னையின் முடிவு. இதுதான் நாம் பார்க்கும் பெரும்பாலான படங்களின் அமைப்பு முறை. சில இயக்குனர்கள் அவற்றில் இருந்து வேறுபட்டு படம் எடுப்பார்கள். அவ்வகையில், சில படங்கள் மட்டும் ஆரம்பித்த இடத்திலேயே முடிவும் அமையும். எந்த புள்ளியில் கதை ஆரம்பித்ததோ அதே புள்ளியில் படத்தின் முடிவும் இருக்கும். அப்படிபட்ட சில தமிழ் படங்களின் தொகுப்பு இங்கே: ‘24’ சூர்யாவின் மூன்று கேரக்டர்களில் கலக்கியிருக்கும் இத்திரைப்படத்தின் கதையம்சமும் கிட்டத்தட்ட இந்த ரகம்தான். கடைசியில் அந்த 24 சிம்பல்…
-
- 0 replies
- 451 views
-
-
இந்திய சினிமா நடிகை மல்லிகா ஷெராவத், பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் மர்ம நபர்களால் தாக்கப்பட்டதாக, தகவல் வெளியாகியுள்ளது. சர்வதேச நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக, நடிகை மல்லிகா ஷெராவத், பாரீஸ் நகரில் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் வீடு எடுத்து தங்கியுள்ளார். அவருடன், சிரில் ஆக்ஸன்ஃபன்ஸ் என்ற ஆண் நண்பர் ஒருவரும் தங்கியுள்ளார். இந்நிலையில், இவர்கள் இருவரும் இன்று தனிமையில் இருந்தபோது, திடீரென மர்ம நபர்கள் சிலர் அந்த வீட்டுக்குள் நுழைந்துள்ளனர். அவர்கள் முகமூடி அணிந்திருந்ததாகவும், தன்னையும், தனது ஆண் நண்பரையும் தாக்கிவிட்டு, கண்ணீர் புகைக் குண்டுகளை வீசியபின், தப்பியோடி விட்டனர் என்று, மல்லிகா ஷெராவத் பாரீஸ் நகர போலீசில் புகார் செய்துள்ளார். சமீபத்தில் ஹாலிவுட் நடிகையான கிம் கார…
-
- 0 replies
- 262 views
-
-
தேவதாசி பாரம்பரியமும் ஆரம்பக்கால தமிழ் சினிமாவும் தியடோர் பாஸ்கரன் தென்னிந்தியாவின் முதல் திரைப்படமான ‘கீசகவதம்’ (1916) தொடங்கி ஏறக்குறைய பதினாறு ஆண்டுகாலம் நீடித்த மௌனப்படக் காலத்தில் (1916 - 1931) சென்னையில் மட்டும் 120க்கும் மேற்பட்ட முழுநீளப் படங்கள் தயாரிக்கப்பட்டன. இவை தவிர மைசூர், நாகர்கோவில், வேலூர் போன்ற இடங்களிலிருந்தும் சில படங்கள் வெளிவந்தன. ஆனால் எஞ்சியிருப்பது ஒரே ஒரு படம்தான். நிலைப்படங்கள்கூட இல்லை. அந்தச் சலனப்படங்களைப் பற்றி அச்சில் வந்த, செய்திகள், விமர்சனம் போன்றவையும் அரிதாயிருக்கின்றன. சலனப்படத் தயாரிப்பில் பங்கெடுத்த சிலரையும் நடிகர்களில் சிலரையும் 1970களில் என்னால் சந்திக்க முடிந்தது. எனினும் இந்தப் பொருள்பற்றி நம்மிடம் இருக்கும் மு…
-
- 0 replies
- 585 views
-
-
கடவுள் காப்பாற்றினாரா குமாரை? - 'கடவுள் இருக்கான் குமாரு' விமர்சனம் “வாழ்க்கையில நாம என்னவேணாலும் ப்ளான் பண்ணலாம், ஆனா அத விட பயங்கரமா எதாவது நடக்கும்” போன வாரம் பார்த்த படத்தோட டயலாக், இந்த வாரமும் உங்களுக்கு ஃபீல்லாகுதுன்னா, நீங்க கடவுள் இருக்கான் குமாரு படத்தில் இருக்கீங்கனு அர்த்தம். ஜி.வி.பிரகாஷ் குமாருக்கும், நிக்கி கல்ராணிக்கும் நிச்சயதார்த்தம். இரண்டு நாட்களில் திருமணம். அதற்கு நடுவே பேச்சிலர் பார்ட்டிக்காக பாண்டிச்சேரி செல்கிறார்கள் ஜி.வியும், ஆர்.ஜே.பாலாஜியும். பார்ட்டியை முடித்துவிட்டு, திரும்பும் போது, எல்லை தாண்டும் பியர் பாட்டில்களால் இன்ஸ்பெக்டர் பிரகாஷ்ராஜிடம் சிக்கிக்கொள்கிறார்கள். அடுத்த நாள் திருமணம் என தெரிந்துக் கொண்டு ஜிவ…
-
- 0 replies
- 320 views
-
-
ஆஸ்கர் பேசும் "கறுப்பு" அரசியல் ! ஆஸ்கர் நெருங்கிக் கொண்டிருக்கிறது. எதிர்பார்ப்புகள் எகிறிக் கொண்டிருக்கிறது. இந்த வருடத்தின் சிறந்த நடிகருக்கான ஆஸ்கர் இவருக்குத் தான் என்ற ஹாலிவுட் கணிப்பில் முன்னணியில் இருப்பது " கறுப்புச் சிங்கம் " டென்சல் வாஷிங்டன் ( Denzel Washington) . இவர் நடித்து இயக்கியிருக்கும் " ஃபென்சஸ் " ( Fences ) படத்தின் சிறப்புக் காட்சியை, சமீபத்தில் ஆஸ்கர் கமிட்டி மற்றும் ஹாலிவுட்டின் முக்கிய பிரமுகர்கள் பார்த்தனர். இதில் டென்சலுடன் நடித்திருக்கும் வயோலா டேவிஸ் ( Viola Davis ) யின் நடிப்பும் பெரியளவில் பாராட்டுகளைப் பெற்றுள்ளது. நிச்சயம் இவர்கள் இருவருக்கும் ஆஸ்கர் கிடைக்கும் என்று பேசப்பட்டு வருகிறது. அதே சமயத்தில் ஆஸ்கரின…
-
- 0 replies
- 378 views
-
-
பிறந்தநாள் பரிசு கோலிவூட்டின் ‘லேடி சூப்பர் ஸ்டார்’ நயன்தாராவின் திரைப்படங்கள், மாஸ் நடிகர்களின் திரைப்படங்களுக்கு இணையாக எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வரும் நிலையில், அவருடைய அடுத்த திரைப்படத் திரையிடல் திகதியை ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர். இந்நிலையில், நயன்தாரா, நாளைய தினம் தனது பிறந்தநாளைக் கொண்டாடுகின்றார். மிஞ்சூர் கோபி இயக்கத்தில் நயன்தாரா கலெக்டராக நடித்துள்ள திரைப்படத்தின் தலைப்புடன் கூடிய முதற்பார்வையை, அவரது பிறந்தநாள் பரிசாக வௌியிடவுள்ளனர். இன்று 17ஆம் திகதி நயன்தாராவின் பிறந்த நாள் தொடங்கும் நள்ளிரவு 12 மணிக்கு இந்தத் திரைப்படத்தின் ஃபெர்ஸ்ட்லுக் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்…
-
- 3 replies
- 746 views
-
-
மார்பளவை.... கேட்ட ரசிகரை, கெட்ட வார்த்தையால் திட்டிய நடிகை.ஹைதராபாத்: ஃபேஸ்புக்கில் தனது மார்பளவை கேட்ட ரசிகரை தெலுங்கு நடிகை ஷ்ராவ்யா ரெட்டி கெட்ட வார்த்தையால் திட்டியுள்ளார். ஒரு சில தெலுங்கு படங்களில் நடித்துள்ளவர் ஷ்ராவ்யா ரெட்டி. அவர் ஃபேஸ்புக் லைவ் மூலம் கறுப்பு பணத்தை ஒழிக்க பிரதமர் நரேந்திர மோடி எடுத்துள்ள அதிரடி நடவடிக்கை குறித்து தனது ரசிகர்களிடம் பேசினார். அப்போது ரசிகர் ஒருவர் ஷ்ராவ்யாவின் மார்பளவை கேட்டு ஃபேஸ்புக்கில் கமெண்ட் போட்டார். இதை பார்த்து கடுப்பான ஷ்ராவ்யா கூறுகையில்,எனது மார்பளவை கேட்கும் உங்களுக்கு என்ன பைத்தியமா? நான் முக்கியமான ஒரு விஷயத்தை பற்றி பேசும்போது ஏன் என் உடம்பை பார்க்கிறீர்கள்? (ஆங்கிலத்தில் வரும் எஃப் வார்த்தையை பயன்படு…
-
- 0 replies
- 298 views
-
-
ஸ்வர்ணலதா, நா.முத்துக்குமார், ஷோபா...இன்னும் யாரை எல்லாம் மிஸ் பண்றோம் தெரியுமா? நட்சத்திரங்கள் மட்டும் இல்லை, பார்த்தவுடன் சட்டென தங்கள் திறமையால் கவர்ந்திழுத்து, வந்த வேகத்திலேயே மறைந்துபோன மின்மினிகளும் தமிழ் சினிமாவில் இருக்கத்தான் செய்கின்றன. அப்படித் தங்களின் தனித்திறமையால் எல்லோரையும் திரும்பிப் பார்க்கவைத்து, கண் மூடித் திறக்கும் இடைவெளியில் நிரந்தரமாய் மறைந்துபோய், நம்மை மிஸ் யூ சொல்ல வைத்த சில கலைஞர்களைப் பற்றிய தொகுப்பு இது. ஸ்வர்ணலதா : கேட்கும் அனைவரையும் மயக்கும் காந்தக் குரலழகி. எம்.எஸ் விஸ்வநாதனின் ஆர்மோனிய இசையில் அறிமுகமானவர். பின் ராஜாவும் ரஹ்மானும் இவரைத் தத்தெடுத்துக் கொண்டார்கள். 'போவாமா ஊர்கோலம்' என டூயட்டாக இருக்…
-
- 0 replies
- 603 views
-
-
சென்னை: பிரபல பின்னணி பாடகி ஜானகி கடைசியாக ஒரு மலையாள தாலாட்டுப் பாடலுடன் தனது சுமார் 60 ஆண்டு காலை இசைப்பயணத்தை முடித்துக் கொள்வதாக அறிவித்துள்ளார். பிரபல பின்னணி பாடகி ஜானகிக்கு 78 வயதானாலும் அவரது குரல் இன்னும் இளமையாக உள்ளது. அவரது தாலாட்டுப் பாடல்களை கேட்டால் தூக்கம் வராமல் தவிப்பவர்களுக்கு கூட தூக்கம் வரும். அப்படிப்பட்ட தேன் குரல் அவருடையது. விதியின் விளையாட்டு 1957ம் ஆண்டு வெளியான விதியின் விளையாட்டு படம் மூலம் பாடகியானவர் எஸ். ஜானகி. சுமார் 60 ஆண்டுகளாக பாடி வரும் அவர் 10 கல்பனகல் என்ற மலையாளப் படத்திற்காக ஒரு தாலாட்டுப் பாடலை பாடியுள்ளார். நிறைவு மலையாள தாலாட்டுப் பாடல் தான் நான் பாடிய கடைசி பாட்டு. அதன் பிறகு நான் படங்களிலோ, நிகழ்ச…
-
- 9 replies
- 785 views
-
-
சமந்தாவுக்கு ஆகஸ்டு மாதம் திருமணம் நடிகை சமந்தா திருமணத்தை ஆகஸ்டு மாதத்தில் நடத்த திட்டமிட்டு உள்ளதாகவும் இதற்காக படங்களில் நடிப்பதை அவர் குறைப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. நடிகை சமந்தாவுக்கும் தெலுங்கு நடிகர் நாகார்ஜுனாவின் மகன் நாகசைதன்யாவுக்கும் காதல் மலர்ந்து திருமணத்துக்கு தயாராகிறார்கள். இவர்கள் திருமணத்துக்கு இரு வீட்டு பெற்றோர்களும் சம்மதம் தெரிவித்து விட்டனர். நாகசைதன்யாவின் தம்பியும் நடிகருமான அகில் ஆந்திராவில் ஆடை வடிவமைப்பாளராக இருக்கும் ஸ்ரேயா என்பவரை காதலிக்கிறார். இவர்கள் திருமணம் மே மாதம் நடக்க உள்ளது. இந்த திருமண…
-
- 0 replies
- 354 views
-
-
ஈழத்தமிழர் சினிமா வரலாற்றில் மற்றுமொரு பெருமைமிகு படைப்பு, இயக்குநர் சுஜித் ஜீ அவர்களின் 'கடைசி தரிப்பிடம்' ( The Last Halt) எமது வாழ்வை எமது மொழியில் பதிவு செய்யும் எமது சினிமாவாக பலரது பாராட்டையும் பெற்ற இத்திரைப்படத்தை, ஈழத்தமிழர் திரைப்படச்சங்கம் எதிர்வரும் நவம்பர் 13 நாள் சிறப்புத் திரையிடலாக காண்பிக்கின்றது. பிரித்தானியாவிலிருந்து வருகைதரும் படக்குழுவினரும் கலந்து சிறப்பிக்கும் இவ்விழாவுக்கு பிரான்ஸ் வாழ் மக்கள் அனைவரும் வருகை தந்து பேராதரவுதர வேண்டுகிறோம். நன்றி. Lift
-
- 1 reply
- 423 views
-
-
சின்னத்திரையில் தொகுப்பாளினியாக அறிமுகமாகி, பின்னர் டி.வி. தொடர்களில் நடித்த நடிகை சபர்ணா தற்கொலை செய்து கொண்டுள்ளார். சின்னத்திரையில் தொகுப்பாளினியாக இருந்தவர் சபர்ணா. பின்னர் டி.வி. தொடர்களில் நடிக்க ஆரம்பித்தார். அதன்பின் சில சினிமா பட வாய்ப்புகள் கிடைத்தன. அவர் மதுரவாயலில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் தங்கியிருந்தார். இந்நிலையில் இன்று அவரது உடல் அழுகிய நிலையில் அவரது வீட்டில் கண்டெடுக்கப்பட்டுள்ளது. அவர் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது. தற்கொலைக்கான முழுக்காரணம் என்னவென்று தெரியவில்லை. கோவையைச் சேர்ந்த சபர்ணா படிக்காதவன், காளை, பூஜை போன்ற படங்களில் கதாநாயகிக்கு தோழியாக நடித்துள்ளார். http://thuliyam.com/?p=47822
-
- 4 replies
- 690 views
-
-
டிக், டிக் டிக்... காதல் அகதிகள் போன்ற படங்களில் நடித்த நிஷா என்னும் தமிழ் நடிகையின் துயர் முடிவு...
-
- 3 replies
- 512 views
-
-
50 ஆண்டுகள், 200 திரைப்படங்களுக்குப் பிறகு ஜாக்கி சான் ‘ஒருவழியாக’ ஆஸ்கர் வென்றார் ஜாக்கிசான் 23 ஆண்டுகளுக்கு முன்னால் ஹாலிவுட் புகழ் சில்வஸ்டர் ஸ்டாலோன் வீட்டில் ஜாக்கி சான் ஆஸ்கர் விருதை பார்த்த போது தானும் ஆஸ்கர் பெற முடிவு செய்ததாக ஜாக்கி சான் தெரிவித்தார். கடைசியாக ஜாக்கி சானின் விருப்பம் சனிக்கிழமையன்று நிறைவேறியது. ஆம்! அவர் கைகளில் அந்த சிறிய ஆஸ்கர் விருது பொற்சிலை! ஆஸ்கர் பொற்சிலையைப் பெற்ற ஜாக்கி சான் கூறும்போது, “திரைத்துறையில் 56 ஆண்டுகள், 200 படங்களுக்கு மேல் பணியாற்றியுள்ளேன், கடுமையான உழைப்புக்குப் பிறகு ஒருவழியாக இப்போது என் கையில் ஆஸ்கர்” என்று நட்சத்திரங்கள் நிரம்பிய இரவு விருந்தில் ஜாக்கி சான் கூறினார்…
-
- 0 replies
- 325 views
-
-
'பிளான் பண்ணதைவிட பயங்கரமா இருக்கா வாழ்க்கை?' - அச்சம் என்பது மடமையடா விமர்சனம் வாழ்க்கையில் நாமப்ளான் பண்ண எதுவும் நடக்காது, ஆனா அதைவிட பயங்கரமா நடக்கும். அந்த பயங்கரம்தான் அச்சம் என்பது மடமையடா! வழக்கம் போல ஹீரோ (சிம்பு) இன்ஜினியரிங் முடித்து, வழக்கத்துக்கு மாறாக ஒரு எம்.பி.ஏ-வும் சேர்த்து படித்திருக்கிறார். சின்னதாக ஒரு பயணம் முடித்துவிட்டு, வாழ்க்கையில் அடுத்து என்ன செய்யலாம் என பிளான்போடும்போது, தங்கையுடைய தோழி மஞ்சிமா மோகன் சிம்பு வீட்டில் வந்து சில நாட்கள் தங்குகிறார். வழக்கம்போல அவரைப் பார்த்ததுமே சிம்புவுக்கு காதல். ஒரே வீடு என்பதால் பேசிப் பழகுகிறார்கள். சிம்புவின் ரோட் ட்ரிப்பில் சர்ப்ரைஸ் பார்ட்னராக மஞ்சிவாவும் இணைய "பறக்கும் ராசாளி…
-
- 1 reply
- 677 views
-