ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142986 topics in this forum
-
பிராஜா சக்தி திட்டம் தமிழ் தேசிய அரசியலை வேரிலேயே அழிக்க கூடிய ஆபத்தானது - அரசியல் ஆய்வாளர் சி. அ. யோதிலிங்கம் Published By: Vishnu 30 Jan, 2026 | 07:51 PM பிராஜா சக்தி எனும் திட்டம் தமிழ் தேசிய அரசியலை வேரிலேயே அழிக்க கூடிய ஆபத்தானது என அரசியல் ஆய்வாளரும், சட்டதரணியும், சமூக விஞ்ஞான ஆய்வு மைய்ய இயக்குனருமான சி. அ. யோதிலிங்கம் தெரிவித்துள்ளார். வெள்ளிக்கிழமை (30) நடாத்திய ஊடக சந்திப்பிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் தெரிவித்ததாவது, தேசிய மக்கள் சக்தியின் ஆட்சியாளர்கள் அடிமட்ட மக்கள் மத்தியில் பணியாற்றுவதற்காக பிரஷா சக்தி என்கின்ற அமைப்பை உருவாக்கியுள்ளது அந்த அமைப்பின் ஊடாக வறுமை ஒழிப்புத் திட்டத்தை தாம் மேற்கொள்வதாக கூறி வருகிறார்கள். தங்களினுடைய உள்ள…
-
- 2 replies
- 169 views
- 1 follower
-
-
30 Jan, 2026 | 04:46 PM யாழில் நடைபெறவுள்ள நிகழ்வு ஒன்றில் கலந்து கொள்வதற்காக தென்னிந்திய பிரபல பாடகர்களான உன்னி கிருஷ்ணன் மற்றும் அனுராதா ஶ்ரீராம் ஆகியோர் இன்றையதினம் வெள்ளிக்கிழமை (30) யாழ்ப்பாணத்தை வந்தடைந்தனர். பலாலி விமான நிலையம் ஊடாக அவர்கள் யாழ்ப்பாணத்தை வந்தடைந்தனர். இவ்வாறு வருகை தந்தவர்களுக்கு மலர்மாலை அணிவித்து, பொன்னாடை போர்த்தி கௌரவமளிக்கப்பட்டது. யாழ். வந்த தென்னிந்திய பிரபல பாடகர்கள்! | Virakesari.lk
-
-
- 5 replies
- 321 views
-
-
இராணுவ முகாமை அகற்றுமாறு பவானந்தாஜா எம்.பி கோரிக்கை! Jan 30, 2026 - 05:40 PM சங்கானையில் அமைந்துள்ள இராணுவ முகாமினை அகற்றிவிட்டு அந்த காணியை மக்களிடம் கையளிக்குமாறு இராணுவத்தினரிடம் கோரிக்கை முன்வைத்ததாக பாராளுமன்ற உறுப்பினரும், வலி. மேற்கு அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு தலைவருமான ஸ்ரீ பவானந்தராஜா தெரிவித்துள்ளார். ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார். இது குறித்து மேலும் தெரியவருகையில், சுழிபுரத்தில் 30 வருடமாக நிலை கொண்டிருந்த இராணுவ முகாம் அகற்றப்பட்டு அந்த காணியின் உரியவர்களான பனை தென்னை வள அபிவிருத்தி கூட்டுறவு சங்கத்தினரிடம் ஒப்படைத்து இருக்கின்றோம். சங்கனை கிழக்கு பகுதியிலும் ஒரு இராணுவ முகாம்…
-
-
- 2 replies
- 162 views
- 1 follower
-
-
வவுனியா மாவட்டத்தில் அரசு முன்னெடுக்கவுள்ள கிவுல் ஓயா திட்டம் தமிழருக்கு ஆபத்து; பல்லாயிரம் ஏக்கர் காணிகளைப் பறித்து சிங்களக் குடியேற்றத்துக்கு முயற்சி SONY DSC வவுனியா மாவட்டத்தில் அரசாங்கத்தினால் முன்னெடுக்க திட்டமிடப்பட்டுள்ள கிவுல்ஓயா திட்டத்தால் பூர்விகமாக வாழும் எமது மக்களே அதிகளவில் பாதிக்கப்படுவார்கள் என்றும், இந்த நடவடிக்கை அரசாங்கத்தின் மீதான எமது மக்களின் நம்பிக்கையும் இல்லாமல் போகச் செய்யும் என்றும் இலங்கை தமிழரசுக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர் ப.சத்தியலிங்கம் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் நேற்று புதன்கிழமை நடைபெற்ற டித்வா புயலின் பின்னரான நாட்டில் தற்போதைய நிலவரம் தொடர்பான சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணை மீதான விவாதத்தில் உரையாற்றுகையிலேயே கோடீஸ்வரன் எம்.பி இவ்…
-
-
- 14 replies
- 639 views
- 2 followers
-
-
இலங்கை - அமெரிக்க பாதுகாப்பு ஒத்துழைப்பு: பேரனர்த்த மீட்சித் திட்டத்தில் புதிய முன்னெடுப்பு 30 Jan, 2026 | 12:19 PM டிட்வா சூறாவளியினைத் தொடர்ந்து சுகாதார வசதிகள் மற்றும் முக்கியமான உட்கட்டமைப்புகளுக்கு ஏற்பட்ட சேதத்தை மதிப்பிடுவதற்காக இலங்கையின் அனர்த்த முகாமைத்துவ நிலையம் (DMC) மற்றும் பிற அரச நிறுவனங்களைச் சேர்ந்த தமது எதிரிணைகளுடன் இணைந்து பணியாற்றிக் கொண்டிருக்கும் மொன்டானா தேசிய காவல் படையினைச் சேர்ந்த பொறியியலாளர்கள் மற்றும் மருத்துவ நிபுணர்களின் குழுவொன்றை இலங்கையிலுள்ள அமெரிக்கத் தூதரகம் இவ்வாரம் வரவேற்றது. பேரனர்த்தத்திற்குப் பின்னரான மீட்சியினை நீண்டகால மீண்டெழும் தன்மை மற்றும் நிறுவன ரீதியிலான திறனுடன் இணைத்து, மனிதாபிமான உதவிகளுக்கான அமெரிக்காவின் பங்காண்…
-
- 0 replies
- 79 views
- 1 follower
-
-
மார்ச் மாதத்தில் மின் துண்டிப்பு ஏற்படக் கூடிய வாய்ப்புள்ளது - பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.மரிக்கார் எச்சரிக்கை 29 Jan, 2026 | 04:50 PM (எம்.மனோசித்ரா) அரசாங்கத்தால் திட்டமிட்டு தரக்குறைவான நிலக்கரி இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. இந்த நிலக்கரி தொகையைக் கொண்டு பயன்பாட்டுக்கு தேவையானளவு மின்சாரத்தை உற்பத்தி செய்ய முடியாது. எனவே மார்ச் மாதத்தில் பெரும்பாலும் மின் துண்டிப்பு ஏற்படக் கூடிய வாய்ப்புள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.மரிக்கார் தெரிவித்தார். கொழும்பிலுள்ள ஐக்கிய மக்கள் சக்தி அலுவலகத்தில் வியாழக்கிழமை (29) இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில், முறைமையில் மாற்றத்தை ஏற்படுத்துவதாகக் கூறி ஆட்சியை ப…
-
- 0 replies
- 81 views
- 1 follower
-
-
பொலிஸ் அதிகாரிகளுக்கு வழங்கப்படும் சம்பளம் போதுமானதல்ல Jan 30, 2026 - 01:00 PM பொலிஸ் அதிகாரிகளுக்கு வழங்கப்படும் சம்பளம், அவர்கள் வழங்கும் அர்ப்பணிப்புக்கு போதுமானதாக அமையவில்லை என பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய தெரிவித்துள்ளார். பொலிஸ் குற்ற அறிக்கை பிரிவில் இன்று (30) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு, அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். பொலிஸ் அதிகாரிகளுக்கு வழங்கப்படும் சம்பளம், அவர்கள் வழங்கும் அர்ப்பணிப்புக்கு போதுமானதாக அமையவில்லை என்பதை நாம் அறிந்துள்ளோம். இது தொடர்பில் அரசாங்கத்திற்கு தௌிவுப்படுத்திய நிலையில், அது குறித்து ஆராய அமைச்சரவை உப குழு ஒன்று நியமிக்கப்பட்டது. அந்த குழுவுக்கு தேவையான அளவு எமது யோசனைகளை நாம் முன்வைத்துள்ளோம். இது தொடர…
-
- 0 replies
- 90 views
- 1 follower
-
-
ஊழல் மற்றும் மோசடிக்கு எதிரான பொதுமக்களின் எதிர்பார்ப்புகளை அரச அதிகாரிகள் புரிந்து கொள்ள வேண்டும் - ஜனாதிபதியின் செயலாளர் Published By: Vishnu 30 Jan, 2026 | 04:29 AM இலஞ்சம் மற்றும் ஊழல் அற்ற நேர்மையான அரச சேவையை கட்டியெழுப்புவதற்கான அரசாங்கம் முன்னெடுக்கும் வேலைத்திட்டத்திற்கு இணங்க, உள்ளக விவகாரப் பிரிவுகளை நிறுவ அறிவுறுத்தப்பட்டுள்ள 250 அரச நிறுவனங்களின் தலைவர்களுக்கு தெளிவூட்டும் செயலமர்வு, ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க தலைமையில் வியாழக்கிழமை (29) இலங்கை மன்றக் கல்லூரி கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. இந்த வேலைத்திட்டத்தின் முதல் கட்டமாக, 106 அரச நிறுவனங்களில் உள்ளக விவகாரப் பிரிவுகள் நிறுவப்பட்டு, இதற்கு முன்னர் பயிற்சிகள் நடைபெற்றதுடன், இரண்…
-
- 0 replies
- 82 views
- 1 follower
-
-
30 Jan, 2026 | 11:52 AM யாழில் மகள் குப்பைக்கு மூட்டிய தீயில் அரியாலையை சேர்ந்த 81 வயதுடைய வயோதிப தாயொருவர் உயிரிழந்துள்ளார். இது குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த தாய் தனது மகளுடன் வசித்து வந்த நிலையில் கடந்த 17ஆம் திகதி இவரது மகள் வீட்டுக்கு அருகே குப்பைக்கு தீ வைத்துள்ளார். பின்னர் வீட்டை பூட்டிவிட்டு வெளியே கடைக்கு சென்றுள்ளார். இதன்போது தாயார் வீட்டு அறையில் உறங்கிக்கொண்டு இருந்துள்ளார். இதன்போது ஜன்னல் வழியாக தீயானது உள்ளே சென்று கொடியில் இருந்த ஆடைகளில் பற்றி, வீட்டு கூரை மரங்களிலும் பற்றியது. இதன்போது குறித்த வயோதிப பெண் படுக்கையில் இருந்த நிலையில் அவர்மீதும் தீ பற்றியுள்ளது. அவர் அவலக்குரல் எழுப்பிய நிலையில் அருகில் உள்ள வீட்டில் வசித்த மற்றைய மகள் ஓடிவந்த…
-
- 0 replies
- 74 views
-
-
30 Jan, 2026 | 05:03 PM (செ.சுபதர்ஷனி) வங்கி அதிகாரிகள் மற்றும் பொலிஸ் உத்தியோகத்தர்கள் என நாடகமாடி இணையவழி ஊடாகப் பொதுமக்களை அச்சுறுத்தி பணமோசடியில் ஈடுபடும் குழுவினர் தொடர்பில் பொதுமக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு இலங்கை கணினி அவசர தயார்நிலை குழு எச்சரித்துள்ளது. இலங்கையில் அண்மைக்காலமாக குறுஞ்செய்திகள் (SMS) மற்றும் இணையவழி ஊடாகத் திட்டமிட்ட முறையில் முன்னெடுக்கப்படும் நிதி மோசடிகள் தொடர்பில் அவதானமாக இருக்குமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இது தொடர்பில் சமீபநாட்களாகப் பல முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக அந்நிறுவனம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மோசடிக்காரர்கள் பிரபல வங்கிகளின் பெயர்களைப் பயன்படுத்தி வாடிக்கையாளர்களுக்குப் போலி குறுஞ்செய…
-
- 0 replies
- 48 views
-
-
சுமார் 60 சதவீதமான சாரதிகள் போதைப்பொருள் பாவனைக்கு அடிமை. கொழும்பு மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் பயணிகள் போக்குவரத்துச் சேவையில் ஈடுபடும் சாரதிகளில் சுமார் 60 சதவீதமானோர் கடுமையான போதைப்பொருள் பாவனைக்கு அடிமையாகியுள்ளதாக நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார். கண்டி மாவட்டத்தில் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி தொடர்பான விசேட அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார். 2025 ஆம் ஆண்டில் 2,700 வீதி விபத்துக்கள் இடம்பெற்றுள்ளதுடன், அதில் 2,700 பேர் உயிரிழந்துள்ளதாக அவர் கூறினார். அவர்களில் 2,000 பேர் பாதசாரிகள், மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்கள் மற்றும் பின்னால் அமர்ந்த…
-
- 0 replies
- 47 views
-
-
யாழ். சர்வதேச விமான நிலையத்தின் அபிவிருத்திகள் விரிவுபடுத்தப்படும் - அமைச்சர் சந்திரசேகரன் தெரிவிப்பு! 30 Jan, 2026 | 11:53 AM யாழ். சர்வதேச விமான நிலையத்தின் அபிவிருத்தி பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற அதே நிலையில் புதிய விமான சேவைகள் தொடர்பில் ஆராய்ந்து வருகிறோம் என கடற்தொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்தார். தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு இது குறித்து வினவியவேளை அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், அரசாங்கம் என்ற வகையில் நாட்டினுடைய அபிவிருத்தியை எந்த தடைகளும் இல்லாமல் மேற்கொண்டு வருகிறோம். அந்த வகையில் யாழ்ப்பாண சர்வதேச விமான நிலையத்தின் பொதுமக்கள் காத்திருப்பு பகுதி வேலைகள் முடிவுறும் தருவாயில் உள்ள நிலையில் அடுத்த கட்ட செ…
-
-
- 2 replies
- 136 views
-
-
📢 அரச செலவில் வந்து தேசிய மக்கள் சக்தி எங்களுக்கு சோ காட்டக்கூடாது – சீ.வி.கே – adminJanuary 20, 2026 தைப்பொங்கலையொட்டி யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்த ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்க பங்கேற்ற நிகழ்வுகளில், தமிழ்க் கட்சிகள் குறிப்பாக இலங்கை தமிழ் அரசுக் கட்சி ஓரங்கட்டப்பட்டதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பில், இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் தலைவரும் வடமாகாண அவைத்தலைவருமான சி.வி.கே. சிவஞானம் இக்கருத்தை முன்வைத்தார். வடக்கு கிழக்கில் பெரும்பான்மையான நாடாளுமன்ற உறுப்பினர்களையும் உள்ளூராட்சி சபைகளையும் கொண்டுள்ள தமிழ் அரசுக் கட்சியோ அல்லது ஏனைய தமிழ்த் தேசியக் கட்சிகளின் பிரதிநிதிகளோ ஜனாதிபதி நிகழ்வுகளில் மேடைகளில் காணப்படவில்லை. அரசாங்கத்தின…
-
-
- 35 replies
- 1.7k views
-
-
கட்டுநாயக்க விமான நிலையத்தில் 'ஈ-கேட்' இன்று திறப்பு Jan 28, 2026 - 09:39 AM கட்டுநாயக்க விமான நிலையத்தின் வருகை முனையத்திலுள்ள இலத்திரனியல் நுழைவாயில்கள் இன்று (28) முதல் உத்தியோகபூர்வமாகத் திறக்கப்படுவதாகக் குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதற்கமைய நான்கு இலத்திரனியல் நுழைவாயில்கள் இவ்வாறு திறக்கப்படுவதாகத் திணைக்களத்தின் பிரதம குடிவரவு அதிகாரி ஜூட் பெர்னாண்டோ தெரிவித்தார். ஜப்பானிய அரசாங்கத்தின் உதவியுடனேயே இந்த 'ஈ-கேட்' திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது. இதன் ஊடாக விமான நிலையத்தின் வினைத்திறனை அதிகரிக்க முடியும் எனவும் பிரதம குடிவரவு அதிகாரி ஜூட் பெர்னாண்டோ சுட்டிக்காட்டினார். https://adaderanatamil.lk/news/cmkx…
-
-
- 5 replies
- 375 views
- 1 follower
-
-
இலங்கையில் நாள் ஒன்றுக்கு 40 பேர் புற்றுநோயால் மரணம்! Mano ShangarJanuary 30, 2026 1:15 pm 0 இலங்கையில் ஒவ்வொரு நாளும் சுமார் 100 புதிய புற்றுநோயாளர்கள் பதிவு செய்யப்படுதாகவும், நாள் ஒன்றுக்கு 40 பேர் புற்றுநோயால் உயிரிழப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தேசிய புற்றுநோய் கட்டுப்பாட்டு திட்டத்தின் தரவுகள் இதனை தெரிவித்துள்ளன. பெப்ரவரி நான்காம் திகதி உலக புற்றுநோய் தினத்தைக் குறிக்கும் வகையில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் பேசிய சமூக வைத்திய நிபுணர் வைத்தியர் ஹசரேலி பெர்னாண்டோ இவ்வாறு தெரிவித்துள்ளார். இந்த புள்ளிவிவரங்கள் 2022 தேசிய புற்றுநோய் பதிவேட்டை அடிப்படையாகக் கொண்டவை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். 2022 ஆம் ஆண்டில் 35,855 புதிய புற்றுநோயாளர்கள் பதிவாகியிருந்தன…
-
- 0 replies
- 97 views
-
-
முறையற்ற வகையில் வெளிநாடுகளுக்குச் சென்றவர்களை இடையூறுகளின்றி, நாட்டுக்குள் அனுமதிக்க நடவடிக்கை January 30, 2026 நாட்டில் நிலவிய உள்நாட்டு யுத்தத்தின் காரணமாக, முறையற்ற வகையில் வெளிநாடுகளுக்குச் சென்றவர்கள் மீண்டும் தாயகம் திரும்பும் போது, எவ்வித இடையூறுகளுமின்றி, நாட்டுக்குள் அனுமதிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, தற்போதுள்ள குடிவரவு, குடியகல்வு சட்டத்தின் சில நிபந்தனைகளை மாற்றுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக, பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார். அச்சட்டத்தில் உள்ள நிபந்தனைகளில் திருத்தம் மேற்கொள்வது தொடர்பில் சட்ட மாஅதிபரின் பரிந்துரைகள் கோரப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். சட்ட மாஅதிபரின் பரிந்துரைகளுக்கு அமைய, உரிய சட்ட நடவடிக்கைகள…
-
- 0 replies
- 99 views
-
-
திருகோணமலை புத்தர் சிலை விவகாரம் : தேரர்களின் ரிட் மனு மீதான தீர்ப்பு அடுத்த மாதம் வரை ஒத்திவைப்பு 30 January 2026 திருகோணமலை புத்தர் சிலை விவகாரம் தொடர்பாக விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பலங்கொட கஸ்ஸப தேரர் மற்றும் கல்யாணவங்ச திஸ்ஸ தேரர் ஆகியோரை விளக்கமறியலில் வைக்க பிறப்பிக்கப்பட்ட உத்தரவை ரத்து செய்யக்கோரி தாக்கல் செய்யப்பட்ட ரிட் மனு மீதான தீர்ப்பு எதிர்வரும் பெப்ரவரி 03 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. மேன்முறையீட்டு நீதிமன்றத் தலைவர் நீதியரசர் ரோஹந்த அபேசூரிய மற்றும் பிரியந்த பெர்ணான்டோ ஆகியோரைக் கொண்ட நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் இந்த மனு இன்று (30) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இன்றைய தினம் குறித்த தீர்ப்பு அறிவிக்கப்படவிருந்த போதிலும், தீர்ப்புர…
-
- 0 replies
- 62 views
-
-
⚖️ கெஹெலிய பணமோசடி வழக்கு – தொழிலதிபருக்கு விளக்கமறியல்! adminJanuary 30, 2026 இலங்கையின் முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவுக்குத் தொடர்புடைய 30 மில்லியன் ரூபாய் பணமோசடி வழக்கில், பிரபல தொழிலதிபர் ஒருவர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். லஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவின் (CIABOC) அதிரடி விசாரணையைத் தொடர்ந்து இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்டவர் ஜி.எம். நிஹால் சிசிர குமார எனப்படும் தொழிலதிபர் ஆவாா். பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ், சட்டவிரோதமான முறையில் ஈட்டப்பட்ட 30 மில்லியன் ரூபாயை மறைமுகமாகவோ அல்லது நேரடியாகவோ கையாண்டு, முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவுக்கு மாற்றியதாக பணமோசடி தடுப…
-
- 0 replies
- 69 views
-
-
யாழ்ப்பாண கோட்டை மீளமைப்பு தொடர்பில் சுமந்திரன் நேரில் ஆய்வு! இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் M. A. சுமந்திரன், முன்னாள் யாழ்ப்பாண மாநகர சபை உறுப்பினரும் சட்டத்தரணியுமான செலஸ்ரின் அவர்களின் வேண்டுகோளின் பேரில் நேற்று (26) யாழ்ப்பாணக் கோட்டையைப் பார்வையிட்டார். 16 ஆம் நூற்றாண்டில் போர்த்துகீசியர்கள் கட்டிய இந்தக் கோட்டை, பின்னர் டச்சு மற்றும் பிரித்தானியர் காலனிய ஆட்சியில் விரிவுபடுத்தப்பட்டது. பல போர்களும், நீண்டகால அலட்சியமும் காரணமாக கோட்டை பெருமளவில் சேதமடைந்துள்ளது. கோட்டையின் உள்ளே அமைந்துள்ள Our Lady of Miracles (அற்புத மாதா) ஆலயம் காலப்போக்கில் ஏற்பட்ட சேதத்திலிருந்து இதுவரை சரியான முறையில் புதுப்பிக்கப்படவில்லை. ஆலயத்தின் சிதிலமடைந்த பகுதிகள் இன…
-
-
- 13 replies
- 743 views
-
-
உண்ணாவிரதம் இருந்த, மட்டக்களப்பை சேர்ந்த குகதாசன் வைத்தியசாலையில் அனுமதி. மட்டக்களப்பை சேர்ந்த குகதாசன் உடல்நிலை ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் நிரந்த ஆசிரியர் நியமனம் வேண்டி பாடசாலைகளில் கற்பித்தல் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ள அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் கொழும்பு ஜனாதிபதி செயலகத்தின் முன்னால் இன்று நான்காவது நாளாக உண்ணாவிரதப் போராட்டத்தில் இருந்து வருகின்றனர். உண்ணாவிரதம் இருந்த குகதாசன் என்பவரே இன்று நான்காவது நாள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். https://athavannews.com/2026/1462120
-
- 2 replies
- 195 views
-
-
தமிழரசுக் கட்சியின் அரசியல் குழுவில் திட்டமிட்ட நிகழ்ச்சி நிரலில் உளவாளிகள் ஊடுருவல். தமிழரசுக் கட்சியின் இறுதிப் பொதுக்குழு கூட்டப்பட்ட போது சாணக்கியன் எம்.பி எமது கட்சியிலேயே இல்லை. தற்போது திட்டமிட்ட நிகழ்ச்சி நிரலின் கீழ் உளவாளிகள் கூட்டம் தமிழரசுக் கட்சியின் அரசியல் குழுவுக்குள் உள் நுழைக்கப்பட்டுள்ளார்கள் என தமிழரசுக் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிவமோகன் தெரிவித்துள்ளார். வவுனியாவில் உள்ள அவரது அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், தமிழரசுக் கட்சியின் அரசியல் குழுவில் சுமந்திரன் ஆதரவாளர்கள் தான் அதிகம் உள்ளனர். அவர்களால் புகுத்தப்பட்டவர்கள் தான் அங்கே அதிகம் உள்ளனர். பதில் செயலாளராக இருந்தவர்…
-
- 2 replies
- 183 views
-
-
பண்டத்தரிப்பில் இருந்து வெளியேறிய இராணுவம்; பிரதேச சபை எடுத்துள்ள முக்கிய தீர்மானம் Published By: Vishnu 29 Jan, 2026 | 09:31 PM மானிப்பாய் பிரதேச சபைக்கு சொந்தமான பண்டத்தரிப்பில் உள்ள காணியில் நிலை கொண்டிருந்த இராணுவத்தினர் அக்காணியில் இருந்து புதன்கிழமை (28) முற்றாக வெளியேறியுள்ளனர். காணியில் இருந்து வெளியேறிய இராணுவத்தினர் காணியை சண்டிலிப்பாய் பிரதேச செயலரிடம் கையளித்த நிலையில் , பிரதேச செயலர் குமாரசாமி பிரபாகரமூர்த்தி , காணியை மானிப்பாய் பிரதேச சபை தவிசாளர் கந்தையா ஜெசிதனிடம் உத்தியோக பூர்வமாக கையளித்துள்ளார். மானிப்பாய் பிரதேச சபைக்கு சொந்தமான 31 பரப்புடைய காணியை யுத்தம் நிறைவுக்கு வந்த பின்னர் கடந்த 2012ஆம் ஆண்டளவில் இராணுவத்தினர் கையகப்படுத்தி இராணுவ முகாம் அ…
-
- 0 replies
- 157 views
- 1 follower
-
-
தாதியர் விடுதி Jan 27, 2026 - 06:13 PM முல்லைத்தீவு மாவட்டத்தின் பிரதான வைத்தியசாலைகளில் ஒன்றான மாங்குளம் ஆதாரவைத்திய சாலையில் புனரமைக்கப்பட்ட தாதியர் விடுதி மற்றும் நோயாளர் காவு வண்டி தரிப்பிடம் மற்றும் சாரதி ஓய்வு அறை என்பன வடமாகாண ஆளுநரால் இன்று (27) காலை திறந்து வைக்கப்பட்டது. முல்லைத்தீவு மாவட்டம், மாங்குளம் ஆதார வைத்தியசாலையில் புனரமைக்கப்பட்ட விடுதிகளைப் பாவனைக்குக் கையளிக்கும் நிகழ்வு இன்று வைத்தியசாலை வளாகத்தில் நடைபெற்றது. வடக்கு மாகாண சபையின் நிதி ஒதுக்கீட்டின் கீழ், மாங்குளம் ஆதார வைத்தியசாலை வைத்தியர் விடுதி, தாதியர் விடுதி, துணை வைத்திய ஆளணியினர் விடுதி, சாரதி விடுதி மற்றும் நோயாளர் காவு வண்டித் தரிப்பிடம் என்பன புனரமைக்கப்பட்டு வருகின்றன. இதில் முத…
-
- 0 replies
- 98 views
- 1 follower
-
-
சிவில் பாதுகாப்பு படையின் 15,000 பேர் தொடர்பில் எடுக்கப்படும் தீர்மானம் Jan 29, 2026 - 08:31 PM சிவில் பாதுகாப்புப் படையின் சுமார் 5,000 பேரை வனஜீவராசிகள் திணைக்களத்திற்கு விடுவிக்க அரசாங்கம் எதிர்பார்த்துள்ளதாகப் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார். சிவில் பாதுகாப்புப் படை தலைமையகத்திற்கு கண்காணிப்பு விஜயம் ஒன்றை மேற்கொண்ட போதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார். பொலிஸ் துறைக்குச் சிவில் பாதுகாப்புப் படையிலிருந்து சுமார் 10,000 பேரை இணைத்துக்கொள்ளவும் எதிர்பார்த்துள்ளதாக அவர் கூறினார். இதன் மூலம் பொதுமக்கள் பாதுகாப்பை மேலும் உறுதிப்படுத்த எதிர்பார்ப்பதாகவும் ஆனந்த விஜேபால தெரிவித்தார். மேலும் சிவில் பாதுகாப்புப் படையின் வினைத்திறனை அதிகரிப்பதற்கு…
-
- 0 replies
- 89 views
- 1 follower
-
-
IMF குழு மீண்டும் இலங்கைக்கு! Jan 29, 2026 - 01:16 PM இலங்கைக்கு வழங்கப்படும் விரிவாக்கப்பட்ட நிதி வசதியின் ஐந்தாவது மீளாய்வுக்காக, பொருளாதாரக் கொள்கைகள் தொடர்பான கலந்துரையாடல்களை மீண்டும் ஆரம்பிக்க, கூடிய விரைவில் சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் குழுவொன்று மீண்டும் நாட்டிற்கு வருகை தரத் திட்டமிட்டுள்ளதாக இலங்கையிலுள்ள IMF தூதுக்குழுவின் தலைவர் எவன் பாபஜோர்ஜியோ தெரிவித்தார். 'டித்வா' புயலுக்குப் பின்னரும் IMF வேலைத்திட்டம் வலுவாக முன்னெடுக்கப்பட்டு வருவதாக அவர் மேலும் தெரிவித்தார். இதற்கிடையில், நெருக்கடி உச்சத்தில் இருந்த சந்தர்ப்பத்திலிருந்து இதுவரையில் வளர்ச்சிக்காகக் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை அடைந்துள்ளதாக சர்வதேச நாணய நிதியத்தின் ஆசிய பசுபிக் திணைக்களத…
-
- 0 replies
- 92 views
- 1 follower
-