ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142986 topics in this forum
-
ஜனாதிபதி தேர்தல்; டில்ஷான் பெட்டிங்: சங்கா அவுட் 25-12-2014 12:57 PM இலங்கை கிரிக்கெட் அணியின் வீரர் திலகரத்ன டில்ஷான், எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவை வழங்கவுள்ளதாக நுகேகொடை, தெல்கந்தை பிரதேசத்தில் இடம்பெற்ற கூட்டமொன்றின் போது கூறினார். இவ்வாறானதொரு நிலையில், அணியின் மூத்த வீரர்களாக குமார் சங்கக்கார மற்றும் மஹேல ஜனவர்தன ஆகியோருக்கும் ஜனாதிபதி தரப்பிலிருந்து அழைப்பு வந்துள்ள போதிலும் அவ்விருவரும் அதனை மறுத்ததாக வெளியான செய்திகளில் உண்மையில்லை என குமார் சங்கக்கார தனது முகப்புத்தகக் கணக்கில் தகவலொன்றை பதிவு செய்துள்ளார். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், கிரிக்கெட் வீரர் திலகரத்ன தில்ஷானினால் ஏற்பாடு செய்யப்பட்ட கூட்ட…
-
- 0 replies
- 814 views
-
-
முன்னாள் பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரனின் ஆதரவு தமிழ்த்; தேசியக் கூட்டமைப்புக்கு தேவையில்லை என்று கூட்டமைப்பின் சார்பில் போட்டியிடும் மட்டக்களப்பு மாவட்ட வேட்பாளர் பி.அரியநேத்திரன் தெரிவித்தார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு முன்னாள் பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் ஆதரவு வழங்குவதாக ஊடகங்களில் செய்தி வெளியாகியமை தொடர்பில் அவரிடம் நேற்று கேட்டபோதே, அவர் மேற்கண்டவாறு கூறினார். இங்கு மேலும் தெரிவித்த அவர், 'முரளிதரன் மக்கள் செல்வாக்கு இல்லாதவர். தமிழ் மக்கள் அவரை கண்டுகொள்ளவில்லை. அதேபோல், எந்தக் கட்சியும் அவரை சேர்த்துக்கொள்ளவும் இல்லை. இதனாலேயே, தமிழ்த்; தேசியக் கூட்டமைப்புக்கு ஆதரவு வழங்குவதாக அவர் அறிவித்துள்ளார்' என்றார். 'இவரின் ஆதரவு இன்றி பல தேர்தல…
-
- 0 replies
- 623 views
-
-
9ஆம் திகதி விசேட அறிவிப்பு 23-12-2015 03:45 AM ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பதவிப்பிரமாணம் செய்து, ஒருவருட நிறைவைக் கொண்டாடும், 2016ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 9ஆம் திகதியன்று, விசேட அறிவிப்பொன்று விடப்படவுள்ளது. நல்லாட்சி அரசாங்கத்தின் 2016 ஆம் ஆண்டுக்கான வரவு-செலவுத்திட்டம் நிறைவேற்றப்பட்டதன் பின்னர், நாடாளுமன்றம் 2016ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 8ஆம் திகதி வெள்ளிக்கிழமைக்கு ஒத்திவைக்கப்பட்டது. புத்தாண்டின் கன்னியமர்வு 8ஆம் திகதி ஆரம்பமாவதுடன், மறுநாள் சனிக்கிழமையும் நாடாளுமன்றத்தை கூட்டுவது தொடர்பில் அரசாங்கத்தினால் யோசனையொன்று முன்வைக்கப்படவுள்ளது. அந்தயோசனை தொடர்பில் கட்சித்தலைவர்கள் கூட்டத்தில் கலந்துரையாடப்பட்டதன் பின்னரே முடிவெடுக்கப்படவுள்ளதாக அறியம…
-
- 0 replies
- 782 views
-
-
தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள் பிளவு ஏற்பட்டாலும் அரசியலுக்குள் பலியாக நாங்கள் விரும்பவில்லை. இதனால், பிரதமர் கலந்துகொள்ளும் நிகழ்வுகளின் என்னையும் கலந்துகொள்ளுமாறு விடுக்கப்பட்ட அழைப்பை நிராகரிக்கிறேன் என்று கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் வெள்ளிக்கிழமை (27) தெரிவித்தார். யாழ். மாவட்டத்துக்கு விஜயம் செய்துள்ள பிரதமர், பல்வேறு நிகழ்வுகளில் கலந்துகொள்கின்றார். அந்நிகழ்வுகளில் கலந்துகொள்ளுமாறு யாழ். மாவட்டச் செயலகம் ஊடாக சிறிதரன் எம்.பி.க்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. யாழ். வீரசிங்கம் மண்டபத்தில் கர்ப்பிணிகளுக்கு தலா 2,000 ரூபாய் பெறுமதியான போஷாக்குப் பொதிகளை வழங்கும் நிகழ்வு, பிரதமர் தலைமையில் சற்றுமுன்னர் நடைபெற்றது. கூட்டமைப்பின் நா…
-
- 13 replies
- 1.2k views
-
-
உயர் பாதுகாப்பு வலயத்துக்குள் அமைந்துள்ள காங்கேசன்துறை, தல்செவன சுற்றுலா விடுதி அமைந்துள்ள கடற்கரைக்கு அதிகளவான சுற்றுலாப் பயணிகள் சென்று வருகின்றனர். யாழ்ப்பாணத்தில் முக்கிய இரண்டு கடற்கரைகளாக விளங்கும் கசூரினா மற்றும் சாட்டி ஆகியன காணப்படுகின்ற போதிலும், காங்கேசன்துறைக் கடற்கரையின் அழகு மற்றும் கடலின் தெளிவு ஆகியவை சுற்றுலாப் பயணிகளை அதிகளவில் கவர்ந்துள்ளமையால் அங்கு சுற்றுலாப் பயணிகள் அதிகமாகச் செல்கின்றனர். வெளிநாடுகளிலிருந்து விடுமுறைக்காக யாழ்ப்பாணம் வருகை தந்துள்ள சுற்றுலாப் பயணிகள் அங்கு செல்வதை அவதானிக்க முடிகின்றது. குடும்பமாகச் சென்று கடற்கரையில் பொழுதைக் கழிப்பதையும் விருந்தினர் விடுதியில் உணவருந்துவதையும் காணக்கூடியதாக இருக்கின்றது. http://www.t…
-
- 0 replies
- 695 views
-
-
பல்கலை, உயர்தர மாணவர்களுக்கு எச்.ஐ.வி.பரிசோதனை 08-12-2015 08:29 AM பல்கலைக்கழக மற்றும் கல்விப் பொதுத் தராதர உயர்தர மாணவர்களுக்கு, எச்.ஐ.வி மற்றும் ஏனைய தொற்று நோய்களுக்கான பரிசோதனைகள், எதிர்காலத்தில் மேற்கொள்ளப்படும் என சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன நேற்றுத் தெரிவித்தார். நாடாளுமன்றத்தில், மாத்தறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் டலஸ் அலகப்பெரும எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். ஒக்டோபர் மாதம் வரையான காலப்பகுதியில் எச்.ஐ.வி தொற்றுக்குள்ளாகிய 191பேர் இனங்காணப்பட்டுள்ளதாகத் தெரிவித்த அவர், ஒக்டோபர் மாதம் 30ஆம் திகதி வரையான காலப்பகுதியில் எச்.ஐ.வி தொற்றுக்குள்ளாகிய 6,300 பேர் இனங்காணப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். அத்துடன், உயர்தரம்…
-
- 0 replies
- 1k views
-
-
வடமாகாணத்தில் மரநடுகை மாதத்தை முன்னிட்டு மர நடுகை தொடக்க நிகழ்வு, யாழ்ப்பாணம் செம்மணி உப்பாற்றங்கரையில் ஞாயிற்றுக்கிழமை (01) இடம்பெற்றது. வடமாகாண முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன் இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டு மரக்கன்றுகளை நாட்டி வைத்ததோடு, மர நடுகைப் பாடல் இறுவட்டையும் வெளியிட்டு வைத்தார். இந்நிகழ்வில், வடக்கு விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன், கல்வி அமைச்சர் த.குருகுலராஜா, நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஈ.சரவணபவன், சி.சிறீதரன், த.சித்தார்த்தன்; மற்றும் மாகாணசபை உறுப்பினர்கள், யாழ் மாவட்ட செயலர் நாகலிங்கன் வேதநாயகன், மற்றும் திணைக்கள அதிகாரிகள், மாணவர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர். 'ஆளுக்கொரு மரம் நடுவோம் நாளுக்கொரு வரம் பெறுவோம்' என்ற தொனிப்பொருளில் வடமாகாண சுற்றாடல் அமைச்சால் கா…
-
- 0 replies
- 878 views
-
-
உயிர் அச்சுறுத்தல் இருப்பதாக கூறி நாட்டைவிட்டு வெளியேறி அவுஸ்திரேலியாவில் வாழ்ந்துவந்த முன்னாள் பொலிஸ் ஊடகப்பேச்சாளர் நிஷாந்த ஜயக்கொடி, கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் ஊடாக நாடுதிரும்பினார். கடந்த அரசாங்கத்தின் போது உரிய முறையில் தன்னால் கடமையாற்ற முடியவில்லை என்றும் தனக்கு மரண அச்சுறுத்தல் இருந்ததையடுத்தே அவுஸ்திரேலியாவுக்கு சென்றதாக அவர் தெரிவித்தார். புதிய அரசாங்கத்தின் அரசியல் நிலைமை நன்றாக இருப்பதனால் இந்த நாட்டுக்கு மீண்டும் திருப்பியதுடன் கடமைகளை மீண்டும் பொறுப்பேற்பதற்கு எண்ணியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். http://www.tamilmirror.lk/140623
-
- 1 reply
- 596 views
-
-
யாழ்ப்பாணத்திலுள்ள முக்கிய சந்தைகளில் நண்டு, இறால் மற்றும் கணவாய் என்பவற்றுக்கு தட்டுப்பாடு நிலவுவதால் அவற்றின் விலைகள் உயர்வடைந்துள்ளதாக மீன் ஏலம் கூறுபவர்கள் தெரிவித்துள்ளனர். ஒரு கிலோ சிவப்பு இறால் 800 ரூபாய் தொடக்கம் 900 ரூபாய் வரையிலும் ஒரு கிலோ கறுப்பு இறால் 1000 ரூபாய் முதல் 1100 ரூபாய் வரையிலும், நண்டு கிலோ 550 ரூபாய் முதல் 600 ரூபாய் வரையிலும், கணவாய் கிலோ 500 ரூபாய் முதல் 600 ரூபாய் வரையிலும் விற்பனை செய்யப்படுகின்றது. கடந்த காலங்களைவிட சுமார் கிலோவுக்கு 100 முதல் 300 ரூபாய் வரையில் இவற்றின் விலைகள் அதிகரித்துள்ளதாக ஏலம் கூறுபவர்கள் கூறினர். விடுமுறையில் வெளிநாடுகள் மற்றும் வெளிமாவட்டங்களில் இருந்து வருபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதுடன் அவர்களில் பெரும்பா…
-
- 0 replies
- 627 views
-
-
ஊழல்களில் ஈடுபடும் தனிநபர்களிடமிருந்து எமது நாட்டை காப்பாற்றவேண்டும் என்றால், நடைபெறவுள்ள பொதுத்தேர்தலில் வெற்றிலை மற்றும் கை சின்னங்களைத் தவிர வேறெந்த விலங்குக்கு வேண்டுமென்றாலும் வாக்கயுங்கள் என்று முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்கா குமாரதுங்கா தெரிவித்துள்ளார். ஒரு தேசிய அரசாங்கத்தை உருவாக்குவதற்காகவே கடந்த ஜனவரி மாதம் 8ஆம் திகதியன்று, ஐ.தே.க, ஹெல உறுமய, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் ஒரு பிரிவினர் மற்றும் இடதுசாரி கட்சிகள் அனைத்தும் கைக்கோர்த்தன என்றும் அவர் குறிப்பிட்டார். எம்பிலிபிட்டிய மற்றும் எஹெலியகொட ஆகிய பகுதிகளலுள்ள பல இடங்களில் நடைபெற்ற பிரசார கூட்டங்களில் உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். http://www.tamilmirror.lk/151969#s…
-
- 1 reply
- 481 views
-
-
'223 பேர் வாங்கிவிட்டனர்' -ஜே.ஏ.ஜோர்ஜ். 'நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு தீர்வையற்ற வாகன இறக்குமதி அனுமதிப்பத்திரத்தை நாடாளுமன்ற உறுப்பினர்கள் 223 பேர் பெற்றுவிட்டார்கள். இன்னும் இருவர் மாத்திரமே எஞ்சியுள்ளனர்' என ஊடகத்துறை அமைச்சர் கயந்த கருணாதிலக்க தெரிவித்தார். நாடாளுமன்ற கட்டடத் தொகுதியில் புதன்கிழமை இடம்பெற்ற, அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைக் கூறினார். 'தீர்வையற்ற வாகன இறக்குமதி அனுமதிப்பத்திரத்தை வேண்டாம் என்று சொல்லியவர்கள் அனைவரும் அந்த அனுமதிப்பத்திரத்தைப் பெற்றுக்கொண்டுவிட்டனர். இன்னும் இருவர் மாத்திரமே அதனைப் பெற்றுக்கொ…
-
- 2 replies
- 1.1k views
-
-
'ஆசியாவின் போதைப்பொருள் கேந்திரம் இலங்கையாகும்' -அழகன் கனகராஜ் 'இறக்குமதி செய்யப்படும் போதைப்பொருட்கள் கைப்பற்றப்படுமாயின், அவ்வாறான வர்த்தர்கள், அதை மீண்டும் இறக்குமதி செய்வார்கள் என்று கருத முடியாது. சக்திமிக்க அரசியல் தொடர்புகளைக் கொண்ட பாதுகாப்பு வலயமொன்று இல்லாமல், இவ்வாறான வர்த்தகங்கள் தனித்து நடக்கின்றன என்றும் கருத முடியாது என்பதுடன், ஆசியாவின் போதைப்பொருள் கேந்திரமாக இலங்கை மாறியுள்ளது' என்று, எதிர்க் கட்சிகளின் பிரதம கொறடாவும் ஜே.வி.பியின் எம்.பியுமான அநுர குமார திஸாநாயக்க, நாடாளுமன்றத்தில் இன்று தெரிவித்தார். - See more at: http://www.tamilmirror.lk/187068/-ஆச-ய-வ-ன-ப-த-ப-ப-ர-ள-க-ந-த-ரம-இலங…
-
- 0 replies
- 584 views
-
-
'இலங்கை ஸ்தம்பித்துள்ளது' இலங்கைக்கு நிகரான பல நாடுகள், தற்காலத்தில் பாரிய வளர்ச்சி கண்டுள்ளன. இருப்பினும், இலங்கை மாத்திரம், ஓரிடத்தில் ஸ்தம்பித்துள்ளது என, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். தேசிய ஒற்றுமை இல்லாமல் போயிருத்தல் மற்றும் கிராமியப் பொருளாதாரம் வளர்ச்சியடையாமை போன்ற சில காரணங்களாலேயே, இலங்கையின் பொருளாதாரம் பின்தங்கிய நிலையில் காணப்படுகின்றது என்றும், தெரிவித்த பிரதமர், தேசிய ஒற்றுமையை பலப்படுத்திக்கொண்டு, கிராமிய பொருளாதாரம் மற்றும் விவசாயத்துறையை அபிவிருத்தி செய்வதன் ஊடாக, நாட்டை அபிவிருத்தி நோக்கிக் கொண்டுசெல்லலாம் என்றும் கூறினார். கிராமியப் பொருளாதார அமைச்சில், நேற்று (27) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்ட…
-
- 0 replies
- 547 views
-
-
'கடலலை 2 மீற்றருக்கு மேலெழுகிறது' மன்னார் கடற்பரப்பிலும், மன்னாரியிலிருந்து காங்கேசன்துறை உள்ளிட்ட திருகோணமலை வரையிலான கடற்பரப்பிலும் கடலலையின் தாக்கம் அதிகரித்துள்ளது. கடலலையானது சுமார் 1 மீற்றருக்கும் இரண்டு மீற்றருக்கும் இடைப்பட்ட உயரத்துக்கு மேலெழுகிறது என்றும் எமது செய்தியாளர்கள் தெரிவித்தனர். - See more at: http://www.tamilmirror.lk/187870/-கடலல-ம-ற-றர-க-க-ம-ல-ழ-க-றத-#sthash.MLqMCTlA.dpuf
-
- 0 replies
- 545 views
-
-
'காதல் பிரிவினாலேயே நாமல் குற்றஞ்சாட்டுகிறார்' - மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜுன மகேந்திரனின் மருமகனான அர்ஜுன அலோசியஸுக்கு, அரசாங்கத்தின் முக்கியஸ்தர் ஒருவருடன் நேரடித் தொடர்புள்ளது என்று சுகாதார அமைச்சரும் அமைச்சரவை பேச்சாளருமான ராஜித சேனாரட்ன, தெரிவித்தார். அமைச்சரவை முடிவுகளை வெளியிடும் ஊடகவியலாளர் சந்திப்பு, அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் நேற்று இடம்பெற்ற போது, ஊடகவியலாளர்களின் கேள்விக்கு பதிலளிக்கையில் அவர் இதனைக் கூறினார். அவர், தொடர்ந்து கூறுகையில், நல்லாட்சி அரசாங்கம், கடந்த காலத்தில் இடம்பெற்ற மோசடிகள் தொடர்பில் அதிக கவனம் செலுத்தியுள்ளது. மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கத்தைப் போல நாம் எதனையும் மறைக்கவில்லை…
-
- 0 replies
- 447 views
-
-
'கூட்டமைப்பிலிருந்து தமிழரசுக் கட்சி தான் வெளியேற வேண்டும்' எஸ்.நிதர்ஸன் "தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலிருந்து தமிழரசுக் கட்சி தான் வெளியேற வேண்டும். அதிலிருக்கக் கூடிய ஏனைய கட்சிகளல்ல" எனத் தெரிவித்துள்ள கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முண்னணியின் தலைவருமான சுரேஸ் பிரேமச்சந்திரன், "தமிழரசுக்கட்சி அவ்வாறு வெளியேறி ஏனையோர் கூட்டமைப்பை கொண்டு நடத்துவதற்கு வழிசமைக்க வேண்டும்" என்றும் கேட்டுக்கொண்டார். நேற்று (24) இடம்பெற்ற ஊடகவியியலாளர் சந்திப்பின் போது, தமிழரசுக் கட்சியை தொடர்ச்சியாக விமர்சித்து வருகின்ற நிலையில், அதிலிருந்து வெளியேறுவீ…
-
- 0 replies
- 469 views
-
-
'கோல்பேசில் கோயில் கட்டலாமா?' இந்து கோயில்கள் மற்றும் விகாரைகள் தொடர்பில், ஜே.வி.பியின் எம்.பியான விஜித ஹேரத்துக்கும், தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு எம்.பியான ஸ்ரீதரனுக்கும் இடையில் கடும் வாக்குவாதம் இடம்பெற்றது. நாடாளுமன்றத்தில் தற்போது இடம்பெற்று கொண்டிருக்கின்ற புத்தசாசனம் அமைச்சின் மீதான விவாதம், இடம்பெற்று கொண்டிருக்கின்றது. இதன்போதே, இருவருக்கும் இடையில் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. வடக்கில் புதிதாக பௌத்த விகாரைகள் முளைக்கவில்லை என்றும் விஜித எம்.பி சுட்டிக்காட்டிபோது குறுகிட்ட ஸ்ரீதரன் எம்.பி, வாங்க, வாங்க லீவு போட்டுட்டு வாங்க, நாங்கள் கூட்டிக்கொண்டு போகிறேன் என்று தெரிவித்தார். …
-
- 1 reply
- 614 views
-
-
'சம்பந்தன் ஏமாற்றப்பட்டார்' -எஸ்.நிதர்ஸன் “எதிர்க்கட்சித் தலைவர் சம்பந்தன், அரசாங்கத்தால் ஏமாற்றப்பட்டிருக்கின்றார் அல்லது இராஐதந்திர ரீதியில் தோல்வியடைந்திருக்கிறார் ”என, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார். யாழ். ஊடக அமையத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், “ஐ.நா மனித உரிமைகள் ஆணையகத்தினுடைய 34 ஆவது கூட்டத்தொடர், எதிர்வரும் 27 ஆம் திகதி நடைபெறவிருக்கின்றது. அதில் இலங்கை தொடர்பான விடயங்கள் தொடர்பாக ஒன்றரை வருட கால அவகாசம் இலங்கை அரசால் கேட்கப்பட இருக்கின்றத…
-
- 6 replies
- 1.1k views
- 1 follower
-
-
'சி.வி சொன்னது உண்மைக்கு புறம்பானது' “வடமாகாண முதலமைச்சர் முஸ்லீம்களின் மீள்குடியேற்றம் தொடர்பில் வெளியிட்ட கருத்து உண்மைக்கு புறம்பானது" என வடமாகாண சபை உறுப்பினர் அ.அஸ்மின் தெரிவித்துள்ளார் “வடக்கு முஸ்லிம்களின் மீள்குடியேற்றம் தொடர்பில் முதல்வர் முன்வைக்கும் கருத்துக்கள் தரவுகள் அனைத்துமே மீள்பரிசீலனைக்கு உட்படுத்தப்படல் அவசியமாகும். வடக்கு மாகாணசபையில் முழுநாள் விவாதமொன்று நடாத்தப்பட்டு வடக்கு முஸ்லிம்களின் மீள்குடியேற்றம் தொடர்பிலான நிலைப்பாடுகளும் கருத்துக்களும் தெளிவுபடுத்தப்படல் அவசியமாகும் என்று நான் வலியுறுத்துகின்றேன்” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். வடக்கில் முஸ்லிம்களுக்…
-
- 0 replies
- 749 views
-
-
'சி.வி தொடர்பான முடிவு சரியானது' வடக்கு மாகாண முதலமைச்சர் தெரிவில், நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரனை நாம் அன்று தெரிவு செய்தது சரி என நான் நினைக்கிறேன'; என்று எதிர்க்கட்சி தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்தார். நாளிதழ் ஒன்றின் சிறப்பு இதழ் வெளியீடு, யாழ். இலங்கை வேந்தன் கலைக்கல்லூரி மண்டபத்தில் சனிக்கிழமை (05) இடம்பெற்றது. இங்கு பிரதம விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றும் போது இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், 'வடக்கு மாகாண தேர்தல் நடாத்துவதற்கு முடிவு வந்த போது முதலமைச்சர் தெரிவு என்பது ஒரு முக்கிய விடயமாக இருந்தது. இது தொடர்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஒன்று கூடி ஆராய்ந்தது. அதற்கு முன்பே, சி.வி.விக்னே…
-
- 0 replies
- 550 views
-
-
'சிவி பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும்' கத்தோலிக்க மக்களின் இறை தந்தையாம் இயேசு கிறிஸ்துவை, 9 சிறுமிகளை கற்பழித்த குற்றச்சாட்டில் பாலியல் வழக்கு தொடரப்பட்ட பிறேமானந்த சுவாமியுடன் ஒப்பிட்டு, ஊடகம் ஒன்றுக்கு வட மாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் தெரிவித்த கருத்துக்கு மன்னார் மறைமாவட்ட கத்தோலிக்க ஒன்றியம் தனது கண்டனத்தை தெரிவித்துள்ளது. இது தொடர்பில், மன்னார் மறைமாவட்ட கத்தோலிக்க ஒன்றியத்தின் தலைவர் சிரேஷ்ட சட்டத்தரணி ப. அன்டன் புனிதநாயகம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, “2000 வருடங்களுக்கு முன் ஒரு குற்றவாளி என்றும் அவர் ஒரு பாவி என்றும் இதற்காகவே அவருக்கு மரணத்தண்டனை வழங்க…
-
- 24 replies
- 3.2k views
-
-
'சேர்' விவகாரத்தில் ராஜித மழுப்பல் கவிதா சுப்ரமணியம் "கடந்த நவம்பர் மாதம் 30ஆம் திகதி, இரத்தினபுரியில் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டின் கலந்துகொண்ட பொலிஸ்மா அதிபருக்கு வந்த அலைபேசி அழைப்பானது, அவருக்கு அழுத்தம் கொடுப்பதற்காகவோ, யாரையும் கைது செய்ய வேண்டாம் என்று கூறுவதற்காகவோ அல்லது எவரையாவது கைது செய்யுமாறு கூறுவதற்காகவோ அல்ல. ஆனால், ஒரு விசாரணையொன்று எவ்வாறு நடைபெறுகின்றது என்பதை அறிவதற்காகவே ஆகும்" என்று, அமைச்சரவைப் பேச்சாளர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார். அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாடு, நாடாளுமன்றக் கட்டடத் தொகுதியில் நேற்று (07) இடம்பெற்றபோது, ஊடகவியலாள…
-
- 0 replies
- 562 views
-
-
'படம்பிடித்து அச்சுறுத்தவில்லை' மேனகா மூக்காண்டி போராட்டங்களில் ஈடுபட்டுள்ள மக்களைப் படம்பிடிக்கவோ அல்லது வீடியோப் பதிவு செய்யவோ, பாதுகாப்புத் தரப்பு உத்தரவிடவில்லை. அத்துடன், முகாம் தேவைக்காக, அங்கிருக்கும் படையினர் புகைப்படம் எடுத்திருக்கலாமே தவிர, அது பொதுமக்களை அச்சுறுத்தும் நோக்கில் எடுக்கப்பட்டதல்ல என்று, பாதுகாப்புத் தரப்பு, நேற்றுத் தெரிவித்தது. “படை முகாம் என்பது பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்காகவே அமைக்கப்பட்டுள்ளது. அதேவேளை, வெளியிலிருந்து படை முகாமுக்கு வரும் அச்சுறுத்தல்களை எதிர்கொள்ளும் தேவையும், அம்முகாமில் உள்ள அதிகாரிகள் வசம் உள்ளது. அதனால், தங்களது பாதுகாப்புக்காக அவர்கள் ப…
-
- 0 replies
- 472 views
-
-
'படுகொலைகளுக்கு தீர்வு; இலங்கையில் வரலாறு இல்லை' -எஸ்.நிதர்ஷன் “நீதி செத்துவிடவில்லை. நீதிக்கான கோரல் தொடரும்” என, வடமாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்தார். முள்ளிவாய்க்கால் நினைவு வாரத்தின் நான்காம் நாளான இன்று, நெடுந்தீவில் குமுதினி படகில் இடம்பெற்ற படுகொலைகளை நினைவு கூரும் அஞ்சலி நிகழ்வுகள் நெடுந்தீவில் உள்ள நினைவு தூபியில் இடம்பெற்றன. இந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், “ஒவ்வொரு படுகொலைகளுக்கும் ஒவ்வொரு வரலாறு உள்ளது. அவற்றில் சிலவற்றை மாத்திரமே நினைவு கூர்ந்து வருகின்றோம். அனைத்து படுகொலை…
-
- 0 replies
- 732 views
-
-
'பதவி விலகுவதாக மிரட்டிச் சாதிக்குக' காணாமல் போனோர் விவகாரத்தில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பால் போதிய நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை என்று குற்றஞ்சாட்டியுள்ள தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ. ஆனந்தசங்கரி, தமது நாடாளுமன்ற உறுப்பினர் பதவிகளைத் தூக்கி எறிவோம் என்றோ அல்லது அரசாங்கத்துக்கு எதிராக வாக்களிப்போம் என்றோ மிரட்டி, இவ்விடயத்தைச் சாதிக்க முடியும் எனவும் தெரிவித்துள்ளார். காணாமல் போனோர் விவகாரம் தொடர்பில், ஊடகங்களுக்கு இன்று அனுப்பிவைத்துள்ள அறிக்கையிலேயே, அவர் இதைக் குறிப்பிட்டுள்ளார். அந்த அறிக்கையில் அவர் மேலும் கூறியுள்ளதாவது: "காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள்,…
-
- 1 reply
- 711 views
-