Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. குற்றச் செயற்பாடுகளின் ஊடாக ஈட்டப்பட்ட சொத்துக்கள் குறித்து விசாரிக்க புதிய பொலிஸ் பிரிவு அறிமுகம்! குற்றச் செயற்பாடுகளின் ஊடாக ஈட்டப்பட்ட சொத்துக்கள் குறித்து விசாரணை செய்வதற்காக இலங்கை பொலிஸ் புதிய விசாரணைப் பிரிவொன்றை ஆரம்பிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக மேல் மாகாண வடக்கிற்கு பொறுப்பான பிரதி பொலிஸ்மா அதிபர் நிஷாந்த சொய்சா தெரிவித்துள்ளார். நேற்றையதினம் (23) நடைபெற்ற விசேட பொலிஸ் ஊடக சந்திப்பில் பங்கேற்ற போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட, குற்றச் செயல்கள் ஊடாக ஈட்டப்பட்ட சொத்துச் சட்டத்தின்படி இந்த விசாரணை பிரிவு ஆரம்பிக்கப்படவுள்ளதாக அவர் கூறியுள்ளார். இதேவேளை, குற்றச் செயற்பாடுகளின் ஊடாக ஈட்டப்பட்ட சொத்துக்கள் தொடர்பான விசாரணைப் பிரிவு (PC…

  2. 23 AUG, 2025 | 03:34 PM (எம்.நியூட்டன்) உற்பத்திப் பொருட்களை பெறுமதிசேர் உற்பத்திப் பொருட்களாக மாற்றுவதில் சிறப்பாகச் செயற்படும் தாய்லாந்து அது தொடர்பான அனுபவங்களைப் பகிர்ந்து கொள்வதுடன், முதலீட்டாளர்களை இங்கு முதலீடு செய்வதற்கு ஊக்குவிக்கவேண்டும் என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் கேட்டுக்கொண்டார். இலங்கைக்கான தாய்லாந்து தூதுவர் பெய்ரூன் தலைமையிலான குழுவினர், ஆளுநரை ஆளுநர் செயலகத்தில் வெள்ளிக்கிழமை (22) மாலை சந்தித்துக் கலந்துரையாடினர். தூதுக்குழுவினரை வரவேற்ற ஆளுநர், பொருட்களை பெறுமதிசேர் உற்பத்திப் பொருட்களாக மாற்றுவதில் தாய்லாந்து முன்னணியில் உள்ளமையை சுட்டிக்காட்டினார். மிக நீண்டகால அனுபவம் உள்ள தாய்லாந்து இது தொடர்பில் அனுபவங்களை பகிர்ந்து கொள்ளவேண்டும் எனவும…

  3. 23 AUG, 2025 | 02:16 PM (எம்.நியூட்டன்) ஒன்பது கோரிக்கைகளை முன்வைத்து "நீதியின் ஓலம்" கையொப்பப் போராட்டம் சனிக்கிழமை (23) யாழ் செம்மணியில் முன்னெடுக்கப்பட்டது. தாயகச் செயலணி அமைப்பினரால் தமிழினப் படுகொலைக்கு சர்வதேச நீதி கோரலை வலியுறுத்தி "நீதியின் ஓலம்" எனும், கையொப்பப் போராட்டம் முன்னெடுக்கப்படுகின்றது. குறித்த போராட்டம் காலை 10.00 மணியளவில் மாணவி கிருசாந்தி கொலை சம்பவத்துடன் தொடர்புடைய செம்மணி பகுதியில் பிரத்தியேகமாக ஒழுங்கு செய்யப்பட இடத்தில் முன்னெடுக்கப்பட்டது. மரணித்த உறவுகளை நினைவுகூர்ந்து மௌன வணக்கம் செலுத்தப்பட்டு நினைவுச் சுடர் ஏற்றி மலரஞ்சலி செலுத்தி ஆரம்பமான குறித்த நிகழ்வில் நிகழ்வின் வடக்கின் ஏற்பாடுக்குழு இணைபாளர் ஜெயசித்திரா போராட்டத்தின் நோக்கம் …

  4. சிறுவர் உரிமைகளை பாதுகாக்கக் கோரி முல்லைத்தீவில் விழிப்புணர்வு நடைபவனி 23 AUG, 2025 | 11:18 AM முல்லைத்தீவு முத்தையன்கட்டு - ஜீவநகர் கிராமத்தில் பொது நோக்கு மண்டபத்திற்கு முன்பாக வெள்ளிக்கிழமை (22) சிறுவர் உரிமைகளை பாதுகாக்க கோரி விழிப்புணர்வு நடைபவனி நடைபெற்றது. சிறுவர் பாதுகாப்பு வாரத்தை முன்னிட்டு "நாம் சிறுவர் எம்மை காப்பீர்" எனும் தொனிப்பொருளிலான விழிப்புணர்வு பேரணியினை முத்தையன்கட்டுகுளம் கிராம சேவையாளர் பவிதா ஆரம்பித்து வைத்திருந்தார். முத்தையன்கட்டு ஜீவநகர் பொதுநோக்கு மண்டபத்திற்கு முன்பாக ஆரம்பித்த குறித்த பேரணியானது நடைபவனியாக சென்று ஜீவநகர் சமாதான சுவிஷேச தேவாலயத்தில் நிறைவு பெற்றிருந்தது. ஜெபஆலயமிஷன் திருச்சபையின் கீழ் இயங்கும் பெத்தேல் சிறுவர் அபிவிருத…

  5. தமிழ் மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகள் நிறைவேற்றப்படும் - அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் Published By: Vishnu 23 Aug, 2025 | 12:52 AM (எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்) காணிகள் விடுவிப்பு,காணாமல் போனவர்களுக்கு நீதி, தையிட்டி விகாரை பிரச்சினை உள்ளிட்ட அரசாங்கம் தமிழ் மக்களுக்கு வழங்கியுள்ள வாக்குறுதிகளை நிறைவேற்றுவது உறுதியாகும் என அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர்தெரிவித்தார். வடக்கு, கிழக்கு மற்றும் மலையக பகுதிகளில் வாழும் தமிழ் மக்கள் எதிர்கொள்ளும் மனித உரிமைப் பிரச்சினைகள் தொடர்பாக தமிழரசுக் கட்சி எம்.பி சிவஞானம் ஸ்ரீதரன் வெள்ளிக்கிழமை (22) சபையில் முன்வைத்த சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணை மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார். அவர் அ…

  6. செப்டம்பர் மாதம் முதலாம் திகதி முதல் யாழ்ப்பாணத்தில் கடவுச்சீட்டு வழங்கும் பணி ஆரம்பமாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. யாழ்பப்பாண மாவட்ட செயலகத்தின் கச்சேரி - நல்லூர் வீதியின் பக்கமாக கடவுச்சீட்டு அலுவலகத்திற்கென பிரத்தியேகமான கட்டிடம் ஒன்று ஒதுக்கப்பட்டுள்ளது. குறித்த கட்டிடத்தின் நிர்மாண வேலைகள் நிறைவடைந்துள்ள நிலையில் அடுத்த மாதத்தில் இருந்து கடவுச்சீட்டு வழங்கும் பணிகள் ஆரம்பமாகவுள்ளன. வாக்குறுதியளித்த ஜனாதிபதி உள்ளூராட்சித் தேர்தல் பரப்புரைக்காக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க (Anura Kumara Dissanayake) யாழ்ப்பாணத்திற்கு வந்தபோது யாழ்ப்பாணத்தில் கடவுச்சீட்டு அலுவலகம் ஒன்று நிறுவப்படும் என வாக்குறுதியளித்திருந்தார். இதேவேளை குடிவரவு குடியகல்வுத் திணைக்களத்தின் (Depa…

  7. 22 AUG, 2025 | 04:17 PM (எம்.ஆர்.எம் வசீம், இராஜதுரை ஹஷான்) “மலையக தமிழ் மக்கள்” என்ற சொற்பதத்தை சட்ட ஆவணங்களில் உள்ளடக்க தேவையான சட்டத்திருத்தங்கள் மேற்கொள்ளப்படும். சனத்தொகை கணக்கெடுப்பின் போதும், பிறப்புச் சான்றிதழ் மற்றும் மரண சான்றிதழ்கள் உள்ளிட்ட ஏனைய சான்றிதழ்களிலும் மலையக தமிழ் மக்கள் என்ற சொற்பதம் பயன்படுத்தப்படும். சகலரின் ஒத்துழைப்புடன் எதிர்காலத்தில் இதனை செய்வோம் என வெளிவிவகாரத்துறை அமைச்சர் விஜித்த ஹேரத் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை (22) நடைபெற்ற அமர்வின்போது வடக்கு, கிழக்கு மற்றும் மலையக வாழ் தமிழ் மக்கள் எதிர்கொள்ளும் மனித உரிமைகள் பிரச்சினைகள் தொடர்பான விசேட சபை ஒத்திவைப்பு பிரேரணை மீதான விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்…

  8. இலங்கையில் கோட்டாபய ராஜபக்ஷ காலத்தில்தான் அதிகமாக மனித உரிமைகள் மீறப்பட்டதாக பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாத் பதியுதீன் தெரிவித்தார். பாராளுமன்றில் இன்று (22) உரையாற்றிய போது அவர் இதனை தெரிவித்தார். தொடர்ந்து உரையாற்றிய அவர், https://adaderanatamil.lk/news/cmemsee2i0015qpu7mprjjq6q

  9. சத்துருக்கொண்டான் படுகொலை : மட்டக்களப்பு மாநகர சபை அமர்வில் மௌன அஞ்சலி ; புதைகுழி தோண்டக் கோரி பிரேரணை நிறைவேற்றம் 22 AUG, 2025 | 03:37 PM மட்டக்களப்பு மாநகர சபை அமர்வில் சத்துருக்கொண்டான் தமிழினப் படுகொலை புதைகுழி தோண்டப்பட வேண்டும் என பிரேரணை கொண்டுவரப்பட்டு, தீர்மானம் நிறைவேற்றப்பட்டதுடன் இந்த படுகொலையின் 35வது ஆண்டு நினைவேந்தலை முன்னிட்டு படுகொலை செய்யப்பட்டவர்களின் ஆத்மசாந்தி வேண்டி சபையில் இரண்டு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. மட்டக்களப்பு மாநகர சபையின் 3வது மாதாந்த அமர்வு நேற்று வியாழக்கிழமை (21) மாநகர சபை முதல்வர் சிவம் பாக்கியநாதன் தலைமையில் நடைபெற்றது. இதன்போது இலங்கை தமிழ் அரசு கட்சி உறுப்பினர் தயாளன் கௌரி, சத்துருக்கொண்டான் படுகொலைக்கு நீதி கோரி, புதைகுழ…

  10. பாதுகாப்புப்படையினரின் அத்துமீறல்: மனித உரிமைகள் கண்காணிப்பகம் அறிக்கை. ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான அரசாங்கத்திலும், வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் குடும்பங்கள் மீது தொடர்ச்சியான அத்துமீறல்கள் பாதுகாப்புப்படையினரால் மேற்கொள்ளப்படுவதாக மனித உரிமைகள் கண்காணிப்பகம் சுட்டிக்காட்டியுள்ளது. குறிப்பாக வடக்கில் இனங்காணப்பட்டுள்ள, மனிதப்புதைகுழிகள் தொடர்பாக, நம்பத்தகுந்த விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு, மிகமோசமான குற்றங்களைப் புரிந்தவர்கள் நீதியின்முன் நிறுத்தப்படுவதற்கு அவசியமான அழுத்தத்தை இலங்கைக்கு வழங்கவேண்டுமென சர்வதேச நாடுகளிடம் மனித உரிமைகள் கண்காணிப்பகம் கோரிக்கை விடுத்துள்ளது. மனித உரிமைகள் கண்காணிப்பகத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் சுட்டிக்க…

  11. நாட்டில் சட்டம் அனைவருக்கும் சமமானது!- ஆனந்த விஜேபால சபையில் தெரிவிப்பு! நாட்டில் நாடாளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள் மற்றும் முன்னாள் ஜனாதிபதிகள் என அனைவருக்கும் சட்டம் சமமானது என பொதுப் பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற விவகார அமைச்சர் ஆனந்த விஜேபால இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். குற்றப் புலனாய்வுத் துறை அதிகாரிகளால் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று கைது செய்யப்பட்டுள்ள நிலையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்”” குற்றம் செய்திருந்தால், அவர்களை நீதியின் முன் நிறுத்த நாங்கள் ஒருபோதும் தயங்க மாட்டோம். சட்டத்தை அமல்படுத்துவது அந்தஸ்தை அடிப்படையாகக் கொண்ட ஒன்றல்ல. குற்றம் நிகழும்போது, பாதிக்கப்பட்டவர்கள் மீது சட்டம் அ…

  12. பயங்கரவாதத் தடைச் சட்டம் செப்டெம்பரில் இரத்து செய்யப்படும் – அமைச்சர் விஜித ஹேரத். பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் (PTA) இந்த ஆண்டு செப்டம்பர் மாதத்திற்குள் இரத்து செய்யப்படும் என்று வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். இன்று நாடாளுமன்றத்தில் உரையாற்றிய அமைச்சர் விஜித ஹேரத், இது தொடர்பான வர்த்தமானி அறிவிப்பு செப்டம்பர் மாத தொடக்கத்தில் வெளியிடப்படும் என்றும் கூறினார். இது குறித்து மேலும் உரையாற்றிய அவர், அதிகாரத்தை ஏற்றுக்கொண்ட குறுகிய காலத்திற்குள், பயங்கரவாத தடுப்புச் சட்டத்தை ஆய்வு செய்து பரிந்துரைகளை வழங்க ஒரு குழுவை நாங்கள் நியமித்தோம். இந்தக் குழு பலமுறை கூடி, பயங்கரவாத தடுப்புச் சட்டத்தில் பொருத்தமான திருத்தங்களைச் மேற்கொள்ளத் தொடங்கியுள்ளது. ஆகஸ்ட் மாத …

  13. யாழ்ப்பாணம் கொட்டடி பகுதியில் ரி 56 ரக, 30 துப்பாக்கிகள் மீட்பு! யாழ்ப்பாணம் கொட்டடி பகுதியில் ரி 56 ரக 30 துப்பாக்கிகள் மீட்கப்பட்டுள்ளன. யாழ்ப்பாணம் கொட்டடி பகுதியில் உள்ள அருள்ராஜசிங்கம் அங்கஜன் என்பவரின் வீட்டில் மலசல குழி வெட்டுவதற்காக முற்பட்ட வேளை சந்தேகத்துக்கிடமான பொருள் காணப்படுவதை அடுத்து பொலிசார் ஊடாக நீதிமன்றில் முறைப்பாடு செய்யப்பட்டது. இதனை அடுத்து இன்றைய தினம் யாழ்ப்பாண நீதிமன்ற நீதிவான் ஏ ஏ ஆனந்தராஜ் தலைமையில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வு பணியின்போது 30 ரி 56 ரக துப்பாக்கிகளும் அதற்கு பயன்படுத்தும் ஐயாயிரம் தோட்டாக்களும் மீட்கப்பட்டுள்ளன. குறித்த ஆயுத மீட்பு தொடர்பில் யாழ்ப்பாண பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். https://athavannews.com/2…

  14. நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த மகோற்சவ தீர்த்தத் திருவிழா! வரலாற்று பிரசித்தி பெற்ற நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த மகோற்சவ தீர்த்தத் திருவிழா இன்றைய தினம் வெள்ளிக்கிழமை காலை நடைபெற்றது. காலை வசந்த மண்டப பூஜை வழிபாடுகளை தொடர்ந்து வேல் பெருமான், வள்ளி, தெய்வானை, பிள்ளையார், மற்றும் சண்டேஸ்வரர் ஆகியோர் ஆலய தீர்த்தக்கேணிக்கு எழுந்தருளியதை தொடர்ந்து தீர்த்தோற்சவம் இடம்பெற்றது. தீர்த்த திருவிழாவுக்கு நாட்டின் பல பாகங்களில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் பல்லாயிரக்கணக்கான அடியார்கள் கலந்து கொண்டிருந்தனர். அதனை தொடர்ந்து, இன்றைய தினம் வெள்ளிக்கிழமை மாலை கொடியிறக்கம் நடைபெறவுள்ளது. அத்தோடு நல்லூர் கந்தசுவாமி ஆலய மகோற்சவ திருவிழாக்கள் நிறைவடைகின்றன. நாளைய தினம் சனிக்கிழமை…

  15. Published By: DIGITAL DESK 3 22 AUG, 2025 | 02:19 PM முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 22) கைது செய்யப்பட்டுள்ளார். ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதியாக இருந்தபோது, அவரது மனைவி பேராசிரியர் மைத்ரி விக்ரமசிங்கவின் பட்டமளிப்பு விழாவில் கலந்துகொள்வதற்காக லண்டனுக்கு தனிப்பட்ட விஜயம் செய்வதற்காக அரச நிதியை தவறாகப் பயன்படுத்திய குற்றச்சாட்டிலேயே குற்றப்புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட ரணில் விக்ரமசிங்கவை கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/223100

  16. குடும்பங்கள் மீதான ஒடுக்குமுறைகள் தொடர்கின்றன; பொறுப்புக்கூறலுக்கான அழுத்தத்தை சர்வதேசம் பிரயோகிக்க வேண்டும் - மனித உரிமைகள் கண்காணிப்பகம் 21 AUG, 2025 | 06:01 PM (நா.தனுஜா) ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவின் நிர்வாகத்தின் கீழும் பாதுகாப்புப் படையினரால் வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் குடும்பங்கள் மீது இன்னமும் அத்துமீறல்கள் பிரயோகிக்கப்பட்டு வருவதாகச் சுட்டிக்காட்டியுள்ள மனித உரிமைகள் கண்காணிப்பகம், மனிதப்புதைகுழிகள் தொடர்பில் நம்பத்தகுந்த விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு, மிகமோசமான குற்றங்களைப் புரிந்தவர்கள் நீதியின் முன் நிறுத்தப்படுவதற்கு அவசியமான அழுத்தத்தை சர்வதேச நாடுகளின் அரசாங்கங்கள் பிரயோகிக்கவேண்டும் என வலியுறுத்தியுள்ளது. இது குறித்து மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின…

  17. யாழில் இராணுவ முகாமுக்கு எதிராக கவனயீர்ப்பு போராட்டம் 22 Aug, 2025 | 11:10 AM பருத்தித்துறையில் அமைந்துள்ள சில இராணுவ முகாம்களை அகற்ற வலியுறுத்தி பருத்தித்துறை நகர சபை தவிசாளர் தலைமையில் வர்த்தகர்கள் பொதுமக்களை ஒன்றிணைத்து வருமாறு தெரிவித்து எதிர்வரும் திங்கட்கிழமை (25) கவனயீர்ப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. பருத்தித்துறை நகர சபை மண்டபத்தில் வெள்ளிக்கிழமை (22) நகர சபை தவிசாளர் டக்ளஸ் போல் தலைமையில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் இக்கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பருத்தித்துறை நகரை பாதுகாப்போம் என்ற தொனிப்பொருளில் எதிர்வரும் திங்கட்கிழமை (25) காலை 8 மணிக்கு பருத்தித்துறை துறைமுகப்பகுதியில் இருந்து ஆரம்பித்து பருத்தித்துறை பிரதேச செயலகம் வரை சென்று மகஜர் வழங்…

  18. நல்லூர் தேர்திருவிழாவின் போது நகைகளை திருடிய இளம் யுவதி கைது! adminAugust 22, 2025 நல்லூர் தேர்திருவிழாவின் போது நகைகளை திருடிய இளம் யுவதி ஒருவரை ஆலய சூழலில் கடமையில் சாரணர்கள் பிடித்து காவற்துறையினரிடம் ஒப்படைத்துள்ளனர். நல்லூர் ஆலய தேர் திருவிழா நேற்றைய தினம் (21.08.25) வியாழக்கிழமை இடம்பெற்றது. அதன் போது இளம் யுவதி ஒருவர் , பக்தர்களுக்கு இடையில் சந்தேகத்திற்கு இடமான முறையில் நடமாடிய வேளை, அதனை அப்பகுதியில் இருந்த சாரணர்கள் அவதானித்து யுவதியை தொடர்ந்து அவதானித்துள்ளனர். அதன் போது குறித்த யுவதி ஒரு பெண்ணிடம் சங்கிலி அறுக்க முற்பட்ட வேளை சாரணர்கள் மடக்கி பிடித்துள்ளனர். பின்னர் அப்பகுதியில் இருந்த காவற்துறையினரிடம் யுவதி ஒப்படைக்கப்பட்ட நிலையில், காவற்துறையினர் யுவதியை…

  19. தேசிக்காய் பாணம் என சிற்றிக் அமிலத்தை விற்பனை செய்தவருக்கு தண்டம்! adminAugust 22, 2025 சிற்றிக் அமிலம் கரைசலை தேசிக்காய் கரைசல் என விற்பனை செய்த நிறுவனத்திற்கு 90 ஆயிரம் ரூபாய் தண்டம் விதிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம், சண்டிலிப்பாய் பகுதிகளில் உள்ள உணவகங்கள் பழக்கடைகள் என்பவற்றுக்கு , தேசிக்காய் கரைசல் என கூறி , அதற்கான துண்டு சீட்டுக்களும் ஒட்டப்பட்டு , சிற்றிக் அமிலம் கரைசலை 4 லீற்றர் கொள்கலன்களில் நிறுவனம் ஒன்று விற்பனை செய்து வந்துள்ளது. குறித்த நிறுவனத்தின் விற்பனை வாகனத்தை வழிமறித்து சோதனையிட்ட சண்டிலிப்பாய் பொது சுகாதார பரிசோதகர் செபமாலை பிறின்சன் அவற்றில் இருந்து தேசிக்காய் கரைசல் என விற்பனை செய்யப்பட்டு வந்த சிற்றிக் அமிலம் கொள்கலன்களை மீட்டு , நிறுவனத்திற…

  20. மயிலிட்டி துறைமுகத்தை நவீனமயப்படுத்த நடவடிக்கை! யாழ். மயிலிட்டி துறைமுகத்தை நவீன துறைமுகமாக மாற்றியமைப்பதற்குரிய நடவடிக்கை வெகுவிரைவில் ஆரம்பிக்கப்படவுள்ளதோடு, கிழக்கில் வாழைச்சேனை துறைமுகத்தை விஸ்தரிக்கத் தீர்மானித்துள்ளதாகவும் கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார். கொழும்பில் கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சில் இன்று (21) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு உரையாறறும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,” எமது அமைச்சின் கீழ் பல்வேறு வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. யாழ். மாவட்டத்துக்கென ஒரு துறைமுகமொன்று இருக்கவில்லை. எனவே, மயிலிட்டி துறை…

  21. 21 AUG, 2025 | 06:08 PM சர்வதேச தரத்தில் துடுப்பாட்ட மைதானம் மண்டைத்தீவில் அமைக்கப்படவுள்ளது. அதற்கான பூர்வாங்க வேலைகள் நடைபெற்று வருகிறது. மைதானத்திற்கு மேலதிக காணிகள் தேவைப்படுவதால் அதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது என யாழ். மாவட்ட செயலர் ம. பிரதீபன் தெரிவித்துள்ளார். தேசிய ரீதியான துடுப்பாட்ட உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு யாழ்ப்பாண மாவட்ட துடுப்பாட்டச் சங்கத்தின் தலைவர் ஏ.எஸ். நிசாந்தன் தலைமையில் நேற்றைய தினம் புதன்கிழமை (20) மாவட்டச் செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக யாழ்ப்பாண மாவட்ட செயலர் மருதலிங்கம் பிரதீபன் கலந்துகொண்டு உரையாற்றியபோதே மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில், விளையாட்டுத்துறை அபிவிருத்திக்கு அதுவும…

  22. 21 AUG, 2025 | 03:50 PM யாழ்ப்பாணம் - செம்மணி சிந்துபாத்தி மனிதப் புதைகுழி விவகாரத்திற்கு பன்னாட்டு நீதி விசாரணை தேவை என வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் வலியுறுத்தியுள்ளார். அதேவேளை கிருஷாந்தி குமாரசுவாமி படுகொலையுடன் தொடர்புடைய குற்றவாளியான சோமரத்ன ராஜபக்ஷ என்னும் முன்னாள் இராணுவ லான்ஸ் கோப்ரல், இராணுவத்தின் படுகொலைச் செயற்பாடுகள் தொடர்பில் ஏற்கனவே நீதிமன்றுக்கு சாட்சியமளித்த பி2899 என்னும் வழக்கினை தற்போதைய செம்மணி மனிதப் புதைகுழி வழக்குடன் தொடர்புபடுத்துவதுடன், பன்னாட்டு நீதி விசாரணைகளில் சோமரத்ன ராஜபக்ச இணைத்துக்கொள்ளப்படவேண்டும் எனவும் ரவிகரன் கேட்டுக்கொண்டார். அத்தோடு செம்மணியில் மீட்கப்பட்ட எலும்புக்கூடுகளை அடையாளம் காண்பது தொடர்பான விசாரணைகளில…

  23. விசேட கல்வியில் காணப்படும் குறைபாடுகள் தீர்க்கப்படவேண்டும் - ரவிகரன் 21 AUG, 2025 | 02:40 PM வன்னி பிராந்தியத்தில் விசேட கல்விப் பரப்பில் காணப்படும் குறைபாடுகள் உடனடியாகத் தீர்க்கப்பட வேண்டுமென வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் வலியுறுத்தியுள்ளார். தற்போது விசேட கல்விப்பரப்பில் பல்வேறு குறைபாடுகள், பற்றாக்குறைகள் காணப்படுகின்ற நிலையிலும் முல்லைத்தீவு வள்ளிபுனம் இனியவாழ்வு இல்லத்தில் கல்வி கற்ற மாணவன் ஜெயபாலன் பூந்தமிழ் உயர்தரத்தில் கலைப்பிரிவில் தோற்றி பல்கலைக்கழகத்திற்கு தோற்றியுள்ளதை சுட்டிக்காட்டிய ரவிகரன், இவ்வாறு ஏனைய விசேட தேவையுள்ள மாணவர்களும் பல்கலைக்கழகம் செல்வதற்கான வழிவகைகள் ஏற்படுத்தப்படவேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார். இயலாமையுள்ள நபர்கள் ப…

  24. 21 AUG, 2025 | 12:40 PM (எம்.மனோசித்ரா) நாட்டில் பதிவாகும் மரணங்களில் 80 சதவீதமானவை தொற்றா நோய்களாலேயே இடம்பெறுபவையாகும் என இலங்கை மருத்துவ சங்கம் தெரிவித்துள்ளது. அத்தோடு நாட்டில் மூத்த பிரஜைகள் வருடத்துக்கு 25 – 30 கிலோ சீனி அடங்கிய உணவுகளை உட்கொள்வதாகவும் மருத்துவ சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது. உயர் இரத்த அழுத்தம், நீரிழிவு நோய் கொண்டவர்களின் முதல் ஆரம்பத்தை அவதானிக்கும்போது அவர்கள் எடை குறைந்தவர்களாக உள்ளனர். பெரும்பாலானவர்கள் வசதி குறைந்தவர்களாக உள்ளனர். இலங்கை மத்திய பொருளாதாரம் கொண்ட நாடாகும். இந்த நாட்டில் தான் இவ்வாறான நிலைமை காணப்படுகிறது. வறுமை நிலையிலுள்ள நாட்டு மக்கள் எவ்வாறான உணவுகளை உட்கொள்கின்றனர்? அவர்கள் அதிகளவு சீனி மற்றும் உப்பு கொண்ட உணவுகளையே உட்கொ…

  25. Published By: VISHNU 21 AUG, 2025 | 08:08 PM மாற்றுத்திறனாளி சமூகத்திற்கு நிவாரணம் வழங்குவதற்கான முறையான வழிமுறையை தயாரிப்பது தொடர்பில் ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய செயலக அதிகாரிகளுக்கு இடையே வியாழக்கிழமை (21) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் கலந்துரையாடல் நடைபெற்றது. மாற்றுத்திறனாளிகளுக்கான ஜனாதிபதி நிதியத்தால் வழங்கப்படும் சேவைகளை மேலும் விரிவுபடுத்துதல் மற்றும் முறையாக வழங்குதல் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய செயலகத்துடன் இணைந்து திட்டங்களை செயல்படுத்துதல் குறித்து இதன்போது கவனம் செலுத்தப்பட்டது. மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்படும் மருத்துவ உதவிகளை அதிகரிப்பது, அவர்களை வலுவூட்டுவதற்குத் தேவையான உபகர…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.