Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. மடு திருவிழாவில் 1000 பக்தர்களே கலந்து கொள்ள முடியும்! மன்னார் மடுமாதாவின் ஆடிமாத திருவிழாவில் ஆயிரம் பக்தர்கள் கலந்து கொள்ள முடியும் என மன்னார் மறைமாவட்ட ஆயர் மேதகு இம்மானுவேல் பெர்னாண்டோ ஆண்டகை தெரிவித்துள்ளார். மன்னார் மறைமாவட்ட ஆயரின் தலைமையில், வருடந்தோறும் அரச அனுசரனையுடன் நடைபெறும் பெருவிழா ஆயத்தம் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் நேற்று மாவட்ட அரச அதிபர் சி.ஏ.மோகன்றாஸ் தலைமையில் நடைபெற்றது. கலந்துரையாடலை தொடர்ந்து மன்னார் மறைமாவட்ட ஆயர் மேதகு இம்மானுவேல் பெர்னாண்டோ ஆண்டகை, ஊடகங்களுக்கு தெரிவிக்கையில், மன்னார் மறைமாவட்ட யாத்திரிகர் ஸ்தலமான மருதமடு மாதாவின் ஆடிமாத திருவிழா திருப்பலி ஆடி மாதம் இரண்டாம் திகதி காலை 6.15 மணிக்கு நடைபெறும். த…

  2. கடந்த காலத்தில் இராணுவத்தை கொன்றதற்காக தற்போது நடவடிக்கை எடுப்பது என்பது பிழையான ஒன்று – அனந்தி சசிதரன் மக்களை பாதுகாக்கவே புலிகள் ஆயுதங்களை ஏந்தினார்கள் பாதுகாப்பு படைக்கு எதிராக யுத்தத்தை நடத்தினார்கள். கடந்த காலத்தில் இராணுவத்தை கொன்றதற்காக தற்போது நடவடிக்கை எடுப்பது என்பது பிழையான ஒன்று எனவும் கருணாவுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கக் கோருவது தமிழ் இனம் தன்னை பாதுகாப்பதற்காக நடத்திய ஆயுதப்போராட்டத்தை பிழையாக காட்டுவதாகும் என அனந்தி சசிதரன் தெரிவித்தார்.கருணாவுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பது என்பது புனர்வாழ்வு பெற்ற, பெறாத அல்லது ஆயுதப்போராட்டத்துக்கு ஆதரவளித்த எல்லோருடைய மனங்களையும் கலங்கடிக்கும் நிலையை ஏற்படுத்தியதாகவும் குறிப்பிட்டுள்ளார். கருணா கடந்த காலங்க…

    • 14 replies
    • 1.3k views
  3. யாழ் ஆயரை சந்தித்த த.தே.ம முன்னணியினர் யாழ்ப்பாணம் மறைமாவட்ட ஆயர் ஜஸ்டின் ஞானப்பிரகாசம் மற்றும் தமிழ் தேசிய மக்கள் முன்னணியினருக்கும் இடையில் இன்று (26) காலை ஆயர் இல்லத்தில் சந்திப்பொன்று இடம்பெற்றது. இதன்போது நாடாளுமன்ற தேர்தல் தொடர்பில் பல விடயங்களை பேசிய முன்னணியினர், ஆயரின் ஆசியையும் பெற்றனர். இச்சந்திப்பில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், செயலாளர் செல்வராஜா கஜேந்திரன் மற்றும் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் உள்ளிட்ட குழுவினர் பங்குபற்றியிருந்தனர். https://newuthayan.com/யாழ்-ஆயரை-சந்தித்த-த-தே-ம-ம/

    • 4 replies
    • 1k views
  4. "ஈழத்தில் நடந்தது தமிழினப் படுகொலை தான் என நிரூபிப்பதற்கு ஆதாரங்கள் போதவில்லை" இப்படிக் கூறப்படும் சூழலில், அதை மறுதலித்து "நடந்தது இனப்படுகொலை" தான் என்று நிரூபிப்பதற்கு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி செய்தது என்ன? என்ற கேள்வியை அதன் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவர்களிடமும் அமைப்பாளர் விஸ்வலிங்கம் மணிவண்ணன் அவர்களிடமும் முன்வைத்தோம். ஐநா மனித உரிமை ஆணையாளர் அலுவலகம் முன்னெடுத்த விசாரணைகளுக்கு இலங்கைத்தீவில் இருந்து பாதிக்கப்பட்ட மக்களிடம் சாட்சியங்களை திரட்டி அதனை சத்தியக் கடதாசிகளாக மாற்றி அனுப்பி வைத்திருக்கின்றோம். அந்த செயல்திட்டத்தை செய்த ஒரேயொரு கட்சி நாங்கள் மட்டும் தான். தமிழ் மக்கள் சார்பில் பேசுகின்ற உத்தியோகபூர்வமாக அங்கீகரிக்கப்பட்ட தரப்பு…

    • 4 replies
    • 857 views
  5. எந்தக் காலத்திலும் கண்டிராத ஒரு இராணுவ ஆட்சி ஏற்பட போகிறது என தமிழ் தேசிய கூட்டமைப்பு பேச்சாளரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான சுமந்திரன் அவர்கள் இன்று வடமராட்சியில் இடம்பெற்ற தமிழரசுக்கட்சியின் வேட்பாளர் அறிமுக நிகழ்வில் உரையாற்றினார்.

    • 3 replies
    • 975 views
  6. In இலங்கை June 25, 2020 2:03 pm GMT 0 Comments 1489 by : Vithushagan தேர்தல் பிரசாரத்திற்காக நான் தெரிவித்த கருத்துக்களை பூதாகரமாக்குவதில் எந்த அர்த்தமும் இல்லை என கருணா அம்மான் எனப்படும் முன்னாள் பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்துள்ளார். அண்மையில் தெரிவித்திருந்த சர்ச்சைக்குரிய கருத்து தொடர்பாக இன்று (வியாழக்கிழமை) காலை குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையாகிய அவர் 7 மணிநேர நீண்ட வாக்குமூலம் அளித்ததன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும்போதே இவ்வாறு குறிப்பிட்டார். அங்கு தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர், “நான் நடந்த உண்மையைக் கூறியிருக்கிறேன். எதுவித தவறான கண்ணோட்டத்திலும் எதுவும் நான் சொல்லவில்லை. …

    • 3 replies
    • 712 views
  7. மாற்றுத் தலைமைகளைத் தோற்கடிக்க வேண்டும் என்ற பரப்புரையின் பின்னணியில் பாரிய சதி ; அருந்தவபாலன் June 26, 2020 “தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் உட்பட அதன் தலைவர்கள் மாற்று அணியினரைத் தோற்கடிக்க வேண்டும் என்று செய்துவரும் பரப்புரையின் பின்னால் எம்மக்களுக்கெதிரான பாரிய சதித்திட்டம் ஒன்று பின்னிக் காணப்படுகின்றது” எனக் கூறியிருக்கின்றார் தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் இணைப் பேச்சாளரும், அதன் யாழ். மாவட்ட வேட்பாளருமான க.அருந்தவபாலன். கிளிநொச்சி விவேகானந்த நகர் மக்களுடனான சந்திப்பின் போதே அவர் இதனைக் கூறினார். இங்கு கருத்துத் தெரிவித்த அவர் மேலும் தெரிவித்தாவது: “இவர்களின் இவ்வாறான கருத்துக்கள மூலம் தாம் வெற்றி பெற்று தமது பாராளுமன்ற…

  8. புகைப்படம் எடுத்த யாழ் ஊடகவியலாளர் மீது பொலிஸ் வழக்கு! யாழ்ப்பாணம் – வடமராட்சி, மாலுசந்திப் பகுதியில் நடந்த தமிழரசு கட்சியின் தேர்தல் பிரச்சார கூட்டத்தில் செய்தி கேகரிக்கச் சென்ற ஊடகவியலாளருக்கு எதிராக பொலிஸாரால் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. குறித்த பிரச்சார கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள் மற்றும் செய்தி சேகரிக்க சென்ற ஊடகவியலாளர்களிடமும் பொலிஸார் கடுமையான சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்டதை புகைப்படம் எடுத்தமை தொடர்பில் தமது கடமைக்கு இடையூறு விளைவித்தார் என்று குற்றச்சாட்டியே ஊடவியலாளர் மீது பொலிஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர். இவ்விடயம் குறித்து சம்மந்தப்பட்ட ஊடகவியலாளர் கருத்து தெரிவிக்கையில், ‘மாலுசந்தி பிள்ளையார் ஆலய மண்டபத்தில் தமிழரசு கட்சி சார்…

  9. மட்டக்களப்பு வரலாறுகள் ஆவணப்படுத்தப்படுகின்றன எம்.எஸ்.எம்.நூர்தீன், ஏ.எச்.ஏ. ஹுஸைன், ரீ.எல்.ஜவ்பர்கான், வ.சக்தி மட்டக்களப்பு மாவட்டத்தில், எதிர்கால சந்ததியினரின் நன்மை கருதி, மரபுரிமை ஆவணங்களை டிஜிட்டல் நவீன தொழில்நுட்ப முறையில் ஆவணப்படுத்தும் நடவடிக்கையை, மட்டக்களப்பு மாவட்டச் செயலக நூலகம் பௌண்டேஷன் மட்டக்களப்பு கிளையின் அனுசரணையில் மேற்கொண்டு வருவதாக, அதிகாரிகள் தெரிவித்தனர். இதன்படி, மட்டக்களப்பு மாவட்ட கலாசாரக் கூடத்தில், கொலனித்துவ ஆட்சியாளர் காலத்திலிருந்து சேகரிக்கப்பட்ட மரபுரிமை ஆவணங்களான வரலாற்றுச் சாதனங்கள், ஏடுகள், பண்டைய தொன்மை ஆவணங்கள், மென் பிரதியில் பதிவேற்றம் செய்யும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இவ்விதம் ஆவணம் செய்யப்பட…

    • 3 replies
    • 823 views
  10. நாங்கள் ஒருபோதும் மண்டியிடப்போவதில்லை- சம்பிக்க by : Yuganthini எங்களை அரசியல் ரீதியாக அநாதையாக மாற்றுவதற்காக பல்வேறு நடவடிக்கைகள் இந்த அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படுகின்றது. இதற்காக நாங்கள் ஒருபோதும் மண்டியிடப்போவதில்லை என முன்னாள் அமைச்சர் பாட்டாலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார். பொதுத்தேர்தல் பிரசாரமொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். குறித்த பிரசார கூட்டத்தில் அவர் மேலும் கூறியுள்ளதாவது, “எங்களை அரசியல் ரீதியாக அநாதையாக மாற்றுவதற்காக ஊடகங்களில் பிரச்சாரப் போரைத் தொடங்கியுள்ளனர். மேலும் எங்களை எந்ததொரு நடவடிக்கைகளாலும் தடுக்க முடியாது என்பதை ஜனாதிபதி க…

    • 0 replies
    • 721 views
  11. வெலிக்கடை சிறை வளாகத்தை பரபரப்பாக்கிய மர்மப் பொதி! கொழும்பு – வெலிக்கடை சிறைச்சாலை வளாகத்துக்குள் இன்று (26) வீசப்பட்ட பொதியை குண்டு என்ற சந்தேகத்தில் பரிசோதித்த போது அதிலிருந்து, ஹெரோயின், ஐஸ் போதைப் பொருளும், கைபேசி ஒன்றும், அதற்கான சார்ச்சரும் மீட்கப்பட்டுள்ளது. சிறைச்சாலை சுவர் வழியாக சிறை வளாகத்துக்குள் வீசப்பட்ட குறித்த பொதியை வெடி குண்டு என்ற சந்தேகத்தில் குண்டு செயலிழப்பு பிரிவை வரவழைத்து ஆராயப்பட்டது. இதன்போதே குறித்த பொதியில் மேற்கூறப்பட்ட பொருட்கள் மீட்கப்பட்டுள்ளது. https://newuthayan.com/வெலிக்கடை-சிறை-வளாகத்தை/

  12. வெள்ளை வான் சாரதிகளுக்கு பிடியாணை! நீதிமன்றில் ஆஜராகத் தவறிய வெள்ளை வான் மனிதக் கடத்தல் சாரதிகள் என அறியப்படும் இருவருக்கு பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. குறித்த இருவரும் கடந்த ஆட்சியில் முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்னவினால் நடத்தப்பட்ட வெள்ளை வான் மனிதக் கடத்தல் தொடர்பான ஊடக சந்திப்பில் தம்மை வெள்ளை வான் சாரதிகளாக அறிமுகப்படுத்தியதுடன், கோத்தாபய ராஜபக்ச ஜனாதிபதியான பின்னர் தாம் நாடகமாடியதாக தெரிவித்திருந்தனர். குறித்த வழக்கிலேயே இவர்களுக்கு பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. https://newuthayan.com/வெள்ளை-வான்-சாரதிகளுக்கு/

    • 1 reply
    • 665 views
  13. ஐக்கிய தேசியக்கட்சியின் குழந்தையே ஐக்கிய மக்கள் சக்தி – இம்தியாஸ் பாக்கிர் மாக்கார் by : Vithushagan கறைபடியாத கரங்கள் கொண்ட அரசியல் தலைவரே சஜித் பிரேமதாச. அவருக்கு எதிராக எவரும் விரல்நீட்டி குற்றஞ்சாட்டமுடியாது என முன்னாள் அமைச்சர் இம்தியாஸ் பாக்கிர் மாக்கார் தெரிவித்தார். நுவரெலியாவில் இன்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். அங்கு தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர் “ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியை கொன்றுவிட்டே ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன உருவானது. ஆனால், எமது ஐக்கிய மக்கள் சக்தி அவ்வாறு அல்ல.அக்கட்சியானது ஐக்கிய தேசியக…

    • 1 reply
    • 419 views
  14. இந்த ஆட்சியை எதிர்க்க முதுகெலும்புள்ள எம்பிகள் தேவை – சந்திரசேகர் “இனங்களுக்கும் மதங்களுக்கும் இடையில் முரண்பாடுகளை தோற்றுவிக்கும் ஆட்சியே தற்போது நடைபெற்று வருகின்றது. நாளைய ஆட்சி இதைவிட மிகக் கொடூரமானதாக இருக்கும். அராஜகத்தில் பயணிக்கும் அரசாங்கத்தை எதிர்க்க வலுவான எதிர்க்கட்சி தேவை” இவ்வாறு யாழ் ஊடக அமையத்தில் இன்று (26) இடம்பெற்ற சந்திப்பில் தேசிய மக்கள் சக்தியின் யாழ். மாவட்ட வேட்பாளர் இ.சந்திரசேகர் தெரிவித்தார். மேலும், ‘பொதுத் தேர்தலில் தேசிய மக்கள் சக்தி தீர்மானிக்கும் சக்தியாக உருவாகும். அதற்கு யாழ்ப்பாண மக்களும் எமக்கு உறுதுணையாக இருப்பார்கள் என நம்புகின்றோம். யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த எமது வேட்பாளர்கள் யாழ் மக்களுக்காக குரல் கொடுக்கக்கூடியவர்கள…

  15. 30 மாடுகள் மீட்பு! 8 பேர் கைது! வவுனியா புளியங்குளம் காவல்துறை பிரிவிற்குட்பட்ட நொச்சிகுளம் பகுதியில் அனுமதிப்பத்திரம் இன்றி கொண்டு செல்லபட்ட 30 மாடுகளை பொலிசார் இன்று (26) மீட்டுள்ளனர். நொச்சிகுளம் பகுதியில் இன்று காலை 5 மணியளவில் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டிருந்த பொலிசார் அவ்வீதியால் வருகைதந்த நான்கு வாகனங்களை வழி மறித்து சோதனை செய்தனர். இதன்போது குறித்த வாகனங்களில் 30 மாடுகள் அனுமதிப்பத்திரம் இன்றி கொண்டு செல்லப்பட்டமை கண்டுபிடிக்கப்பட்டது. வாகனத்தில் பயணித்த அனுராதபுரத்தை சேர்ந்த 8 பேரை கைது செய்த பொலிசார் வாகனங்களையும், மாடுகளையும் புளியங்குளம் பொலிஸ் நிலையத்திற்கு எடுத்துச் சென்றனர். கைப்பற்றப்பட்ட மாடுகள் மருதோடை பகுதியிலிருந்து அனுராதப…

  16. கொரோனாவல் பாதிப்படைந்த சமையல்காரர்களுக்கு பயிற்சி நாட்டில் ஏற்பட்ட கொரோனா (கொவிட்-19) நெருக்கடியின் காரணமாக தொழில்ரீதியாக பாதிக்கப்பட்ட சமையல்காரர்களுக்கு அவர்களது தொழிலை அபிவிருத்தி செய்யும் நோக்கிலும் உல்லாச பிரயாணிகளை கவரும் வகையில் உணவுகளை தயாரிப்பது தொடர்பான பயிற்சி நெறி திட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. இதன்படி மட்டக்களப்பு மாவட்டத்தின் கிரான், கும்புறுமூலையிலுள்ள கிழக்கு மாகாணத்திற்கான நிலையான அபிவிருத்தி மற்றும் கண்ணியமான அதிகாரமளிப்பதற்கான எம்.ஜே.எஃப் மையத்தில் செஃப் கில்ட் லங்காவுடன் ஒன்றிணைந்து ஐந்து நாட்கள் கொண்ட பயிற்சி நெறியின் இறுதி நாள் சான்றிதழ் மற்றும் சின்னம் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது. இலங்கையை உள்ளடக்கிய வளர்ச்சிக்கான த…

  17. சிறுவர் போராளிகள் குறித்து கருணாவிடம் விசாரிக்க வேண்டும் – ஐநா! சிறுவர் போராளிகளை இணைத்துக் கொண்டமை தொடர்பிலும் கருணா எனும் வி.முரளிதரனிடம் விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என்று ஐநா மனித உரிமைகள் பேரவை தமது டுவிட்டரில் தெரிவித்துள்ளது. அத்துடன் இலங்கையில் பொறுப்புக்கூறல் என்பது அனைவருக்கும் ஒரேவிதமாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளனர். https://newuthayan.com/சிறுவர்-போராளிகள்-குறித்/

  18. தமிழனே வெளியேறென கவலரத்தை ஏற்படுத்தியதேன் – மஹிந்தவிடம் கேட்டார் விக்னேஸ்வரன் தாயகம் எங்களுடையது எனக் கூறி யாரும் நாட்டை மீண்டும் துண்டு போடமுடியாது என்ற பிரதமர் மஹிந்தா ராஜபக்சவின் கூற்றுப் பற்றிய செய்தியைப் பத்திரிகைகளில் வாசித்தேன். முழு நாடும் எல்லோருக்கும் சொந்தம் என்ற பாணியில் அவர் பேசினார் போல் தெரிகின்றது. இந்த நாடு எல்லோர்க்கும் உரியது என்று தானே தமிழர்கள் நாடு பூராகவும் வாழ்ந்து கொண்டிருந்தார்கள்;? பின் எதற்காக தெற்கு சிங்களவருக்கு உரியது “‘தமிழனே வெளியேறு”‘ என்று கூறி 1958ம் ஆண்டின் கலவரத்தை உண்டு பண்ணினீர்கள்? நாடு முழுவதும் எல்லோர்க்கும் சொந்தமென்றால் எல்லோர்க்கும் சம உரிமை இந்த நாட்டில் இருப்பது உண்மையானால் எதற்காக எம்மவரை பல கலவரங்கள் மூலம் வட…

  19. 32 வருடங்களுக்குப் பின் சொந்த இடத்தில் வாக்களிக்கவுள்ள மக்கள் (எம்.நியூட்டன்) 32 வருடகளுக்குப் பிறகு சொந்த இடத்தல் சொந்த மக்கள் வாக்களிப்பதற்கான நிலை இந்தப் பாராளுமன்றத் தேர்தலில் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்தத் தேர்தலில் மக்கள் நேரகாலத்துடன் சென்று வாக்களிக்கவேண்டும் என வலிகாமம் வடக்கின் பிரதேச சபை தவிசாளர் சுகிர்தன் தெரிவித்தார். இலங்கை தமிழரசுக் கட்சியின் காங்கேசன்துறை தொகுதி உறுப்பினர்களுடனான சந்திப்பிப்பின்போதே அவர் இதனைத் தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், வலிகாமம் வடக்குப் பகுதி நீண்டகாலமாகாக உயர் பாதுகாப்பு வலையமாக இருந்து பல்வேறு போராட்டங்கள் பேச்சுவார்த்தைகள் நல்லிணக்கங்கள் என பலவற்றை மேற்கொண்டு பல காணிகள் விடுவிக்கப்பட…

  20. சர்வதேச நியமங்களின்படியே புலிகளின் போர் இருந்தது- கருணாவின் கருத்து சாதாரணமானதே- சிவமோகன் யுத்த காலத்தில் போராளிகள், படையினர் மரணிப்பது சாதாரண விடயமே எனவும், அதனைத்தான் கருணா கூறியுள்ளார் என்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் வைத்தியர் எஸ்.சிவமோகன் தெரிவித்துள்ளார். மன்னாரில் உள்ள அவரது அலுவலகத்தில் இன்று (வியாழக்கிழமை) மாலை இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் அவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில், “யுத்தத்தின் போது நேரடியாக மரணிப்பதை ஒரு விடயமாக எடுத்துக்கொள்ள முடியாது. ஒரு யுத்த காலத்தில் நேரடியாக சர்வதேச நியமங்களை ஏற்றுக்கொள்ளாமல் அதனை மீறி ஒரு நடவடிக்கை இடம்பெற்றிருந்தால் மட்டுமே அது ஒரு போர்க் குற்றமாக அல்…

  21. விடுதலைப்புலிகளிற்கு இலஞ்சம் வழங்கியவர் எனது தந்தை மீது குற்றச்சாட்டுகளை சுமத்துகின்றார்- சஜித் சீற்றம் June 25, 2020 கருணா என அழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளீதரனிற்கு ஆதரவாகயிருப்பதற்காகவும் யுத்தவீரர்களிற்கு உரிய வெகுமதியை வழங்க தவறுவதற்காகவும் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச பிரதமர் மகிந்த ராஜபக்சவை சாடியுள்ளார். பிரதமர் மகிந்த ராஜபக்சவே கருணா அம்மானின் பிரதம மெய்ப்பாதுகாவலர் என தெரிவித்துள்ள சஜித் பிரேமதாச கருணாவிற்கு பிரதியமைச்சர் பதவியையும் சுதந்திரக்கட்சியின் பிரதிதலைவர் பதவியையும் வழங்கியவர் மகிந்த ராஜபக்ச என தெரிவித்துள்ளார். கருணாவை தூய்மைப்படுத்தும் பிரதமர் மகிந்த ராஜபக்ச எனது தந்தைக்கு எதிராக குற்றச்சாட்டு…

    • 4 replies
    • 581 views
  22. ஹிஸ்புல்லா ஊடாக முஸ்லிம்களுக்கு வழங்கிய ஆயுதம் ஷஹ்ரானிடம் 2009ம் ஆண்டு பயங்கரவாதி ஷஹ்ரான் ஹஷிமை காத்தான்குடியில் சந்தித்த போது, அவரது அலுவலகத்தில் ரி-56 துப்பாக்கிகள் இருந்தது என்றும், அது தொடர்பில் சிலரிடம் விசாரித்த போது 1990ம் ஆண்டில் ஹிஸ்புல்லாக ஊடாக அரசால் முஸ்லிம்களுக்கு வழங்கப்பட்ட துப்பாக்கியே அவையென அறிந்தார் என்றும் ஊடகவியலாளர் கிரிஷ்தோபர் கமலேந்திரன் உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதல் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவில் நேற்று (24) சாட்சியமளித்துள்ளார். மேலும் கமலேந்திரன் சாட்சியமளிக்கையில், ‘ஷஹ்ரான் குழுவுக்கம் பாரம்பரிய முஸ்லிம்களுக்கம் இடையில் தொடர்ந்து மோதல்கள் இடம்பெற்று வந்தன. நான் முதலில் சூபி முஸ்லிம் தலைவர்களைச் சந்தித்தேன். ஷஹ்ரான் குழ…

  23. தமிழர்கள் கடத்தல் – 14 கடற்படை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க தடை! தமிழர்கள் உள்ளிட்ட 11 பேர் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டமை தொடர்பான வழக்கில் முன்னாள் கடற்படை தளபதி அட்மிரல் ஒப்த ப்ளீட் வசந்த கரன்னகொட உள்ளிட்ட 14 கடற்படை அதிகாரிகளுக்கு எதிராக அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்க மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று (25) சற்றுமுன் தடை விதித்தது உத்தரவிட்டுள்ளது. கரன்னகொட உட்பட முன்னாள் கடற்படை தளபதி டி.கே.பி.தஸாநாயக்க, கடற்படை அதிகாரிகள் சம்பத் முனசிங்க, சுமித் ரணசிங்க, திலங்க சேனாரத்ன, நலின் பிரசன்ன விக்ரமசூரிய, அன்ரன் பெர்னாண்டோ, ராஜபக்ச பத்திரன்னஹெலக கித்சிறி, அருன துஷார மொன்டிஸ், அம்பாறை காமினி எனும் கத்ரிராச்சிலகே காமினி, நேவி சம்பத் எனும் சந்தன பிரசாத் ஹ…

    • 3 replies
    • 543 views
  24. 4,000 கடற்படை சிப்பாய்கள் மற்றும் குடும்பத்தினர் சுய தனிமைப்படுத்தப்பட்டனர்! by : Benitlas வெலிசறை கடற்படை முகாமினைச் சேர்ந்த நான்காயிரம் கடற்படை வீரர்களும் அவர்களது குடும்பத்தினரும் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். அத்துடன் குறித்த அனைவருக்கும் பிசிஆர் பரிசோதனை செய்யப்படவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. வெலிசறை கடற்படை முகாமை சேர்ந்த கடற்படையினர் 29 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தநிலையிலேயே குறித்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. http://athavannews.com/4000-கடற்படை-சிப்பாய்கள்-மற்/

  25. புலிகளிடம் இருந்து கருணாவை பிரித்து உபாயமாக பயன்படுத்தினாேம் – ரணில் 2001ம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட சமாதான ஒப்பந்தத்தின் போது விடுதலைப் புலிகள் இயக்கத்திலிருந்து கருணாவை பிரித்தெடுத்ததாக ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். ஐக்கிய தேசிய கட்சி முக்கிய உறுப்பினர்கள் பலர் இன்று (25) ரணில் விக்ரமசிங்கவை அவரது இல்லத்தில் வைத்து சந்தித்திருந்தனர். இதன்போதே அவர் குறித்த விடயத்தை தெரிவித்துள்ளார். இது தொடர்பில் மேலும் கூறுகையில், ‘ஒரே இரவில் 3000 படையினரை கொன்று குவித்ததாக கருணா அம்மான் குறிப்பிட்டுள்ளார். அரசாங்கத்தை பாதுகாக்கவே இவ்வாறானதொரு கருத்தினை அவர் தெரிவித்துள்ளார். புலிகள் இயக்கத்திலிருந்து கருணா அம்மானை பிரித்…

    • 1 reply
    • 456 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.